நந்தீஸ்வரத்வீப பூஜை
ராஜஸ்தானிலுள்ள 7ம் நூற்றாண்டின் வரைபடம்.
நந்தீஸ்வர பூஜை
continent of rejoicing – மகிழ்ச்சிக் கண்டம் என்று சொல்லப்படும் நந்தீஸ்வர தீபத்தில் தேவ, தேவியர் அங்குள்ள அக்ருத்திம, சுயம்புவாக தோன்றிய, ஜிநாலயங்களை வழிபடும் பருவத்தில் ஆடிப்பாடி மகிழ்வுடன் நடத்தும் பூஜை முறையாகும்.
நாம் இருப்பது ஜம்பூத்வீபத்தில் (கண்டம்).
இங்கிருந்து எட்டாவதான த்வீபமே நந்தீஸ்வரத்வீபம் என்பது, நந்தீஸ்வர
சமுத்திரத்தினால் சூழப்பட்டுள்ளது.
இக்கண்டத்தில் பத்மாவர்
வேதிகா வனமும், பெரிய பள்ளத்தாக்குகளும்,
நதிகளும் நிரம்பிய அழகிய பிரதேசம் ஆகும்.
இத்வீபம் ஜைன
சாஸ்த்திரபடி 163 கோடியே 84 லட்ச யோஜன விஸ்தீரணமுடையது. (ஒரு யோசனை என்பது தற்காலத்தில்
6400 கி.மீ.கள்)
இக் கண்டத்தின் நடுவில்
ஒரு அஞ்சன (antimony) மலையும்,
ஒவ்வொரு திக்கிலும் அஞ்ஜன பர்வதம் ஒன்றுளது; கிழக்கில் உள்ளது
தேவராமன், தெற்கில் உள்ளது நித்யாத்யோதம், மேற்கே சுயம்பிரபு, வடக்கே அஞ்சன மலை எனவும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மலைஉச்சியின் நடுவே ஒரு ஸித்தாதன், ஜினபவனம் உள்ளது. அவை 100X50 யோசனை நீள, அகலத்தில்
70 யோசனை உயரம் உள்ளதாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு அஞ்சனமலை நீட்சியில்
திசைக்கொன்றாக நந்தா என்கிற நான்கு ஏரிகள்(குளங்கள்) உள்ளன.
கிழக்கில் உள்ள குளங்கள்
நந்தாவாபி, நந்தாவதி,
நந்தோத்ர, நந்திசேனா
மேற்கில் உள்ள வை விஜயா, வைஜயந்தா, ஜயந்தா,
அபராஜிதா
வடக்கு திசையில் ரம்யா, ரமணீயா, சுப்ரபா,
சர்வோபத்ரா
தெற்கு திக்கில் அரஜா, விரஜா, மகாசோகா,
வீதசோகா; அவற்றிற்கு நடுவே ஒவ்வொரு திக்கிலும், ததிமுக பர்வதம் நான்கும், ரதிகர பர்வதம் எட்டும் அவற்றின் மீதும் ஜினபவனம் உள்ளது. ஆக பதிமூன்று பர்வதங்கள் உள்ளன.
நான்கு அஞ்சனமலையும் நீலமணியைப் போன்ற நிறத்தில் 84 ஆயிரம் யோசனை உயரம் உள்ளவை. ததிமுகம் ஸ்படிக, வெண்மை நிறத்துடன் 10 ஆயிரம் யோசனை உயரம் கொண்டவை. ரதிகரம், கவர்ச்சியான, சிவப்புமணி நிறமும், 1000
யோசனை உயரமும் உடையவை.
மேலும் குளத்தின் திக்கிற்கு
ஒன்றாக அசோகம், சப்தசதம், சம்பகம், மா என நான்கு வனங்கள். ஆக 4x4 = 16 x 4 வனங்கள்,
மொத்தம் நடுமலையை சுற்றி 64 வனங்கள் உள்ளன. இவையனைத்தும் காண்பவர்
கண்பவர் உள்ளத்தை கவரக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு பர்வத
சிகரத்தில் ஒவ்வொரு ஜின சைத்தியாலயம் உள்ளது. இவைகள் தெற்கு வடக்காக 50 யோசனையும், கிழக்கு
மேற்காக 100 யோசனையும் உள்ள செவ்வக அமைப்பில், நாற்திசை வாயிலுடன் ராஜகோபுரம் 75 யோசனை உயரமும் உடையதாக
அமைந்துள்ளன.
பலிபீடம் (அர்க்யம் வைக்கும் மேடை) மானஸ்தம்பம், கொடிக் கம்பம் (சைத்ய
விருக்ஷம்) ஆகியவை 108 ஆகும். அஷ்ட மங்களப் பொருட்கள் வரிசையாக வீற்றிருக்கின்றன. மூன்று கட்டாக கிழக்கு முகமண்டபமும்,
அதில் மேற்புறமும், உட்புறமும் சித்திரங்கள் பல
தீட்டப்பட்டுள்ளன.
இதில் தெற்கு வடக்கான
வசத்தில் 36 எண்ணிக்கையில்
மூன்று வரிசையாக 108 கந்தகுடி மண்டபங்களும், அதில் 500 வில் உயரத்தில் பல்லியங்காசன நிலையில்
108 ஜினபிம்பங்களும் அமர்த்தப்பட்டுள்ளன. பல
இச்சைத்தியாலயங்கள்
அனைத்தும் ஆதி அந்தம் இல்லாதன. இவைகள் யாவராலும் தோற்றுவிக்கப்படாமல் இயற்கையாய்
இருப்பவைகள். இவ்வாறாக நான்கு திக்குகளில் 52 ஜின சைத்தியாலயங்கள் உள்ளன.
ஒவ்வொரு
சைத்தியாலயத்திலும் நிர்மலமும், தேஜோமயமும், அக்ருத்ரிமமுமான
ஸ்ரீ அரஹத் பரமேஸ்வரரின் 108
பிம்பங்கள் இருக்கின்றன. இந்த ஜின பிம்பங்களின் ஆராதனையே நந்தீஸ்வர பூஜை என்பது.
ஒவ்வொரு சைத்தியாலயத்தின் நான்கு வாயிலில் கிழக்கே கல்பவாசியும்,
தெற்கே பவணவாசி, மேற்கே வியந்தர், வடக்கே பல தேவர்கள், இந்திரர்கள் இந்த ஜினாலயங்களில்
உள்ள ஒவ்வொரு 108 கந்தகுடியிலுள்ள இணையற்ற ஜின பிம்பங்களுக்கு (ஆடி, கார்த்திகை, பங்குனி)
பிரதி ஆஷாட, கார்த்திக, பால்குண மாதங்களில் பூர்வபக்ஷமாகிய வளர்பிறையின் அஷ்டமி திதி முதற்கொண்டு பெளர்ணமி திதி முடிய எட்டு நாட்களில் தினமும் இடைவிடாமல்
சிறந்த நீர், செஞ்சந்தனம், வாலரிசி, நல்ல மலர்,
சரு, தீபங்கள், தூபம், கனிகள் ஆகிய பூசைப் பொருட்கலை சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்து
மிடச் சிறந்த மகிமையுள்ள பூஜையை பக்தியுடன் செய்கின்றனர்.
அந்நாட்களில் தேவேந்திரன் அபிஷேகம் செய்ய, ஏனைய இந்திரர்கள், தேவர்கள் செளதர்ம இந்திரன் வழிகாட்டுதல் படி பூஜை செய்கின்றனர். தேவ மாதர்கள் எட்டு மங்கலப் பொருட்களை ஏந்தி நிற்கின்றனர். சில தேவியர் துதிபாடி நடனம் செய்கின்றனர்.
எட்டு நாட்களிலும் பூஜையை முடித்த பிறகு இந்திரன் முதலானோர் நந்தீஸ்வரத்வீபத்து
ஜினாலயங்களை வலம் வருவர்.
பிறகு அங்கிருந்து மேருமலைக்கு
வருவர். அதில் ஸுதர்சன, விஜய, அசல, மந்திர, வித்யுன்மாலினி என ஐந்து மேருமலைகளும்,
அந்த மலைகள் ஒவ்வொன்றிலும் பத்ராசலம், நந்தன, ஸெனமனஸ, பாண்டுக என நான்கு வனங்களும்
ஒன்றன் மீது ஒன்றாக (படிப்படியாக) அமைந்துள்ளன. அந்த வனம் ஒவ்வொன்றிலும் பக்கத்திற்கு
நான்கு ஜினாலயங்கள் உள்ளன. இந்த இயற்கை ஜிநாலயங்களை மும்முறை வலம் வந்து, ஜினபிம்பங்களுக்கு
பூஜை செய்வர்.
தம் உத்தம செய்லகளால் நற்கதிக்குக் காரணமான மதிப்பிட முடியாத நல்வினைகளை
சேகரித்துக் கொண்டு தங்கள் தங்கள் தேவவுலக இருப்பிடம் சென்றடைவர்.
அதன் நினைவு கூறும் முகமாக
ஒவ்வொரு பட்சத்திலும் அந்த திதி களில் ஜினாலயத்தில் இப்பூஜை
நடத்தப்படுகிறடு. அத்துசன் மேருமலையிலுள்ள ஜினபடிமைகளுக்கும் பூஜை செய்து வருகிறோம்.
இத்தகு
பூஜை நம் சமூகத்தில் காலம் காலமாக நடந்து வருகிறது. புண்ணிய வினைக்கட்டுக்கு காரணவாதால் சமண நெறியில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த பருவ
நாட்களில் நந்தீஸ்வர பூஜையை செய்ய வேண்டியது அவசியமாகும்.
அந்த இயற்கை
ஜினாலய படிமைகள் சித்தப் படிமைகள் என்பதால், அதை அடிப்படையாக
கொண்டு சித்த பிம்பம் என்று சொல்லித்தான் அர்ச்சனை
செய்யப்படுகிறது என்பதை அறியவும்.
·
இந்த விபரங்களில்
பெரும்பாலானவைகள் திரு. சிம்மச்சந்திர ஜைன்
சாஸ்திரியார் அவர்களில் வழிகாட்டுதலுடன் திருவறப்புலவர் தோ. ஜம்புகுமாரன்
அவர்கள் படைப்பிலிருந்தும், மேலும் சில திகம்பர இணைய தளத்திலிருந்தும் எடுக்கப் பட்டவை.
-----------------------
ஆஷ்டானிக பருவ தினத்தில்
ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய
ஜபத்திற்கான தனி மந்திரங்கள்.
அஷ்டமி திதி – ஓம் ஹ்ரீம் நந்தீஸ்வர ஸஞ்ஜ்ஞாயை நம:
நவமி திதி - ஓம் ஹ்ரீம் அஷ்டமஹா விபூதி ஸஞ்ஜ்ஞாயை நம:
தசமி திதி – ஓம் ஹ்ரீம் த்ரிலோக ஸாகர ஸஞ்ஜ்ஞாயை நம:
ஏகாதசி திதி – ஓம் ஹ்ரீம் சதுர்முக ஸஞ்ஜ்ஞாயை நம:
துவாதசி திதி – ஓம் ஹ்ரீம் மஹாலக்ஷண ஸஞ்ஜ்ஞாயை நம:
திரையோதசி திதி – ஓம் ஹ்ரீம் ஸ்வர்க்க ஸோபாந ஸஞ்ஜ்ஞாயை
நம:
சதுர்தசி திதி – ஓம் ஹ்ரீம் ஸித்தசக்ர ஸஞ்ஜ்ஞாயை நம:
பெளர்ணமி திதி – ஓம் ஹ்ரீம் இந்திரத்வஜ ஸஞ்ஜ்ஞாயை நம:
மந்திரங்கள் - பருவகால பூஜைகள், ஸ்ரீ பத்ரபாகு ஸ்வாமி சேவா தளம் விசாகாசாரியார் தபோநிலையத்தில்
வெளியிடப்பட்ட நூலிருந்து தருவிக்கப்பட்டது..
ராஜஸ்தானில் 52 கோபுர கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ரிஷபநாதர் ஜிநாலயம்.
மத்திய பிரதேசத்திலுள்ள நந்தீஸ்வர ஜிநாலயம்.
நந்தீஸ்வர ஜினாலயம் - பாபெளரொஜி, ம.பி.
No comments:
Post a Comment