உப சர்கஹர பார்ஸ்வநாத தோத்திரம்


உப சர்கஹர பார்ஸ்வநாத தோத்திரம்





உவசக்கஹரம் பாஸம் பாஸம் வந்தாமி
கம்மகண முக்கம்
விஸஹர விஸநிந் நாஸம்
மங்களம் கல்லாண ஆவாஸம்



விஸஹா புலிங்க  மந்தம்
சண்டே தாரயி  ஜோ ஸயா மணுஓ
தஸ்ஸகஹ ரோக மாரி
துட்டு ஜரா  ஜந்தி உவஸாமம்



சிட்டஉ தூரே மந்தோ
துச்சபணா மோவி பஹுபலோ ஹோகி
நரதிரிஏ ஸுவி ஜீவா
பாவந்தி ந துக்கதோ கச்சம்



துஹ சம்மத்தே லத்தே
சிந்தாமணி கப்பயாய பப்பஹிஏ
பாவந்தி அவிக்கேணம் ஜீவா
அயரா மரம் ட்டாணம்



இஹ சந்த ஓ மஹாயஸ
பத்தி பரேண ஹியஏண
தா தேவ திஜ்ஜவோஹி பவேபவே
பாஸ ஜின சந்தம்

-----------


      விளக்கம்:


வினை என்னும் இருள் இல்லாதவரும் இல்லா வினைகளையும் போக்கி மங்களம் புண்ணியம் செல்வம் மோக்ஷம் ஆகியவைகளுக்கு இருப்பிடமாகி உள்ளவரும் எல்லா உபா சர்கத்தையும் போக்க வல்லவரும் ஆகிய பார்ஸ்வநாத பகவானை நான வணங்குகிறேன்.

எவர் விஷத்தை போக்க வல்ல பார்சுவநாத பகவான் யந்திரத்தை எப்பொழுதும் கழுத்தில் கழுத்தில் கட்டிக் கொண்டிருப்பரோ அவர்கள் கிருகரோகம் மாரி என்னும் பிணிகளிலிருந்து விடுபட்டவராக ஆகி அமைதியைப் பெறுவர்.


பகவன் மந்திரத்தினால் மட்டும் என்ன? உங்களை வணங்கினாலேயே பல நற்பலனைப் பெறும் வாய்ப்பு ஏற்படுத்திறது. உங்களை துதிக்கும் ஜீவன் மனிதப் பிறவியிலும், விலங்குப் பிறவியிலும் கூட துன்பங்களையும் துர்பாக்கியத்தையும் பெறுவதில்லை.


சிந்தாமணிக்கு ஒப்பான அழகுவாய்ந்த உங்கள் திருமேனியை பார்க்கும் உயிர்கள் எவ்வித துயரமும் இன்ரி மூப்பு பிணியும் இன்றி அமர பதவியைப் பெறுவர்.


அதிக பக்தி என்னும் பாரத்தினால் சுமத்தப்பட்ட நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு அதிக புகழைத் தரக்கூடிய இந்த தோத்திரத்தைப்  எவர் படிப்பாரோ அவர்களுக்கு பார்சுவநாத சுவாமி ஒவ்வொரு பிறவியிலும் இத்தகு புத்தியைத் தருவாராக.


----------------------- 

No comments:

Post a Comment