Tattvartha Sutra - chapter 2




தத்வார்த்த சூத்திரம்:


இரண்டாம் அத்தியாயம்


 உயிர் தத்துவம்.



உயிரின் இயல்பு (ஸ்வ) தத்துவம் என்ன?

 ------------------ 


ஒளபசமிக க்ஷாயிகெள பாவெள மிஸ்ரச்ச ஜீவஸ்ய ஸ்வதத்வ மெளதயிக பாரிணமிகெள ச  - (அ2 #1) =(34)


औपशमिकक्षायिकौ भावौ मिश्रश्च जीलस्य स्वतत्त्वमौदयिक पारिणामिको च


Aupashamikakshayikau bhavau mishrashcha jivasya swatattva-maudayika-arinamikau cha



ஒளபசமிகம், க்ஷாயிகம், மிஸ்ரம், ஒளதயிகம்,  பாரிணமிகம் இவ்வைந்தும் உயிரின் இயல்பு தத்துவங்கள் ஆகும். 

The distinctive characteristics of the soul are the dispositions (thought-activities) arising from subsidence, destruction, destruction-cum-subsidence of karmas, the rise of karmas and the inherent nature or capacity of the soul.

---------------
மேற்கூறிய ஐவகை எண்ணங்களை ஜீவன் தன்னுடையதாகக் கொண்டுள்ளன. இவை வேறு பொருட்களில் தோன்றுவதில்லை. ஆதலால் அதனை ஸ்வ தத்துவம் என்றும் கூறுவர்.

--------------
மண் நீருடன் சேர்ந்து சேறாகிறது. அந்த சேற்று நீரில் தேற்றங்கொட்டையை (cleaning nuts) போட்டால் நீர் தெளிந்து சேற்று மண் அடியில் தங்கி விடுகிறது. அது போல் கர்மங்களின் சக்தி வெளித்தோன்றாமல் தணிவு நிலையில் இருந்தால் உபசமம் (subsidence) எனப்படும்.

தெளிந்த நீரை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றினால் சுத்தமாவதைப்போல், அதாவது மண் முற்றிலும் நீங்கி யிருந்தால் சுத்த நீராவதைப்போல், கர்மங்கள் முற்றிலும் நீங்கிய நிலைக்கு கேடு/அழிந்த; க்ஷயம் (destruction) எனப்படும்.

அதே சேற்று நீரில் கனமான மண் கீழே படிந்தும், லேசான துகள்கள் நீருடன் கலந்துள்ள நீரைப்போல; அதே போல் கர்மங்கள் கொஞ்சம் அழிந்தும், தணிந்தும் இருக்கும் நிலைக்கு க்ஷயோபசமிகம் (destruction cum subsidence) அல்லது மிஸ்ரம் எனப்படும்.
--------------

ஒளபசமிக பாவம்: (subsidential) வினை தணிவு நிலையில் (உபசமம்) ஆன்மாவில் தோன்றும் எண்ணத்திற்கு ஒளபசமிக பாவம் (bhavam) என்று பெயர்.

க்ஷாயிக பாவம்: வினை முற்றிலும் நீங்கிய நிலையில் தோன்றும் எண்ணத்திற்கு க்ஷாயிக பாவம் எனப்படும். நான்கு காதி கர்மங்களை கேடு செய்யும் போது  ஏற்படும் எண்ணங்களும் ஆகும்.

மிஸ்ர பாவம்: (destructive cum subsidential) கர்மங்கள் கேடு மற்றும் தணிவு நிலையில் தோன்றும் எண்ணங்கள். அதாவது க்ஷயோபகசமிக பாவம். காதி கர்மங்கள் ஒரு பகுதி (பலனைக் கொடுத்துவிட்டு) அழிவதால் உண்டாகும் பாவம்.

ஒளதாயிக பாவம்: (operative)  வினையின் உதயத்தால் உண்டாகும் எண்ணங்கள் ஆகும்.

பரிணாமிக பாவம்: (Natural) வினை தணிவு நிலை, கேடு நிலை, கேடு தணிவு நிலை மற்றும்  உதயம்  இல்லாத போது ஏற்படும் எண்ணத்திற்கு பரிணாமிக பாவம் ஆகும்.

முதல் நான்கு எண்ணங்கள் (பாவங்கள்) ஆத்மாவுக்கு வினைகள் காரணமாக ஏற்பட்ட பாவங்கள் ஆகும். கர்மங்கள் சேர்க்கையில் இயல்பு திரிந்து ஏற்பட்ட பாவங்கள் ஆகும்.

ஐந்தாவது பாவம் ஆன்மாவின்  தூய்மையான இயல்பாகும்.

இவ்வைந்து எண்ணங்கள் ஜீவனில் தன் இயல்பான சுயதத்துவமாக இருக்கின்றன.

-------------
கர்மங்களின் சேர்க்கையின்றி ஆத்மஸ்வபாவத்தினால் உண்டாவது பரிணாமம் எனப்படும். அந்த எண்ணங்களுக்கு பரிணாமிக பாவம் என்பர்.

கர்மங்களோடு கூடிய மற்ற எண்ணங்களை;
உபஸமத்துடன் கூடிய ஒளபஸகிக பாவம் (எண்ணம்) என்பது மோகனீய கர்மத்துக்கு மட்டுமே பொருந்தும்.

க்ஷயத்துடன் கூடிய க்ஷாயிகபாவம் எட்டு கர்மங்களுக்கும் பொருந்தும்.

க்ஷயோபசமத்துடன் கூடிய மிஸ்ர பாவம் காதி கர்மங்கள் நான்கிற்கு பொருந்தும்.

ஒளதாயிக பாவம் எட்டு கர்மங்களுக்கு பொருந்தும்.
(எட்டு கர்மங்களை பின்னர் காணலாம்.)

------------ 

த்விநவாஷ்டா தசைக விம்சதி த்ரிபேதா யதாக்ரமம்  - (அ2 #2) =(35)*


द्विनवाष्टादशैकविंशातित्रिभेदा यथाक्रमम्


Dvi navashtadashaikavinshati-tribheda yathakramam


யதாக்ரமம் – முறையே அவை;  த்விநவாஷ்டா தசைக விம்சதி த்ரிபேதா – 2,9,18,21,3 பேதங்களை (பிரிவுகளை) உடையன.

These five types of disposition are of two, nine, eighteen, twenty-one and three kinds respectively.



இந்த எண்ணங்கள் உபசமம் முதலியனவற்றால் முறையே இரண்டு, ஒன்பது, பதினெட்டு, இருபத்தொன்று மற்றும் மூன்று வகைகளாகத் தோன்றுகின்றது.

இந்த எண்ணங்களின் மாறுகையானது  பொருளுக்கு (அர்த்தங்களுக்கு) ஏற்ப நிகழ்கின்றது.

அல்லது எவை முறையே இரண்டு, ஒன்பது, பதினெட்டு, இருபத்தொன்று மற்றும் மூன்று உட்பிரிவுகளை உடையதோ அவை ஐந்து எண்ணங்களாகும். (யாதக்ரமம் என்றால் முறையே)

ஒளபசமிக பாவம் 2 பிரிவுகளாகவும், க்ஷாயிகம் பாவம் 9 பிரிவுகளாகவும், மிஸ்ர பாவம் 18 பிரிவுகளாகவும், ஒளதயிக பாவம் 21 பிரிவுகளாகவும்பாரிணமிக 3 பிரிவுகளாகவும் தோன்றுகின்றன.  
------------
The characteristics of the soul arising from subsidence are of two kinds.

Those arising from destruction are of nine kinds. 

Those arising from destruction-cum-subsidence are of eighteen kinds. 

Those arising on the fruition of karmas are of twenty-one kinds. 

Those that are  inherent in the soul without the influence of Karmas are three.

----------------------- 



ஸம்யக்த்வ சாரித்ரே  -  - (அ2 #3) =(36)


सम्यक्त्व चारित्रे


Samyaktvacharitre 


The two kinds of disposition arising from subsidence are right belief and right conduct.


ஒளபசமிக சம்யக்த்வம், ஒளபசமிக சாரித்ரம் என ஒளசமிக பாவம் இரண்டு பிரிவுகளை உடையது.


ஒளபசமிக சம்யக்துவம்: (subsidence of right belief) சாரித்ர மோகனீய வினையில் (conduct deluding karma) கஷாய வேதனீயம் (passion) மற்றும் நோகஷாய வேதனீயம் (quasi passions) என இரு பிரிவுகள் இருக்கின்றன.

இவற்றின் கஷாய வேதனீயத்தின் வரம்பற்ற பிறவிகளை தோற்றுவிக்க கூடிய (அனந்தானுபந்தியின்) குரோதம் (சினம்), மானம் (செருக்கு), மாயை (deceitfulness), மற்றும் லோபம் (கடும்பற்று) ஆகிய இந்த நான்கு பிரிவுகளையும்;

மற்றும் தரிசன மோகனீய கருமத்தின் (faith-deluding karmas) சம்யக்த்வம், மித்யாத்வம் மற்றும் சம்யக்மித்யாத்வம் ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்த்து;

மொத்தம் ஏழு ப்ரக்ருதி(subtypes)  (வினை) களின் தணிவினால் (உபசமத்தினால்) ஒளபசமிக சம்யக்துவம் உண்டாகிறது.

ஒளபசமிக சாரித்ரம்: (subsidence of right conduct)  எல்லா மோகனீய  கர்மங்களும் தணிவு (உபசமம்) ஆவதால் ஏற்படுகிறது.

நன்நம்பிக்கையே நல்லொழுக்கத்திற்கு அடிப்படையாக இருப்பதால் அமைப்பு முறையில் இது முதலாவதாகக் கூறப்படுகிறது.


------------
உபசமம் -  கரணோபசமம் மற்றும் அகரணோபசமம் என இரு பிரிவுகளாக இருக்கின்றது. உபசமம் என்பது பொருள், இடம், காலம், பாவம் ஆகியவற்றைக் நிமித்தமாகக் கொண்டு வினைகளின் ஆற்றல்  வெளிப்படாமல் இருப்பது.

கரணம் என்ற சொல் வினைகளின் பல்வேறு நிலைப்பாடுகளைக் குறிக்கிறது. மேலும் உயிரினுடைய சுபம், அசுபம் முதலான உணர்வு நிகழ்வுகளைக் கூட கரணம் என்று அழைப்பர்.
அகரணோபசமம் – அல்லாத+வினைகளின் தணிவு நிலை+அதன் பல்வேறு நிலைப்பாடுகள்.
--------------
மோகனீய கர்மத்தில் இரண்டு வகையுள்ளன; தர்சன மற்றும் சாரித்ர.

தர்சன மோகனீயத்தில் மித்யாத்வம், ஸம்யக் மித்யாத்வம், ஸ்மயக்த்வ பிரகிருதி என மூன்று பேதம்.
வரம்பற்ற பிறவிகளை தோற்றுவிக்க கூடிய (அனந்தானுபந்தியின்) குரோதம் (சினம்), மானம் (செருக்கு), மாயை (deceitfulness), மற்றும் லோபம் (கடும்பற்று) ஆகிய இந்த நான்கு பிரிவுகளிலும் உபசமம் ஏற்படுவதில்லை.

அது போக மீதி 21 கஷாயங்களில் (மொத்தம் 25) மட்டும் உபசமம் ஏற்படுகிறது. ----------
அப்பிரத்யாக்யான குரோதம், மானம், மாயை, லோபம்;  பிரத்யாக்யான குரோதம், மானம், மாயை, லோபம்; ஸஞ்ஜ்வலன குரோதம், மானம், மாயை, லோபம் என்னும் 12ம்;
ஹாஸ்ய, ரதி, அரதி, சோக,பய,ஜூகுப்ஸா, பும் வேதம், ஸ்த்ரீ வேதம், நபும்சக வேதம் ஆக 9ம்;

சேர்ந்து 21 கஷாயங்கள்(passions) உபசமம் ஆகிறது.
--------------------

அப்போது ஒளபசமிக சாரித்ரம் ஏற்படுகிறது.

--------------- 



ஞான தர்சன தான லாப போகோபபோக வீர்யாணி ச - (அ2 #4) =(37)


ज्ञानदर्शन दानलाभभोगोप भोगवीर्याणि च


Gyana-darshana-dana-labha-bhogopabhoga-viryani cha



க்ஷாயிக ஞானம், க்ஷாயிக தர்சனம், க்ஷாயிக தானம், க்ஷாயிக லாபம், க்ஷாயிக போகம், க்ஷாயிக உபயோகம், க்ஷாயிக வீர்யம், க்ஷாயிக சம்யக்துவம், க்ஷாயிக சாரித்ரம் ஆக ஒன்பதும் க்ஷாயிக பாவத்தின்(bhava) ஒன்பது பிரிவுகளாகும். (இந்த ஒன்பது பிரிவு பாவங்களையும் நவகேவல லப்தி என்றும் கூறுவர்.

The nine kinds of disposition arising from destruction are the destruction of karmas affecting the knowledge, perception, charity, gain, enjoyment, re-enjoyment, prowess, right belief and conduct.



அறிவு மறைப்பு (ஞானவரண) வினை முற்றிலும் அழிந்த பிறகு கேவல ஞானம் (முழுதுணர் ஞானம்) அதாவது க்ஷாயிக ஞானம் ஆகும்.

காட்சி மறைப்பு (தர்சனாவரண வினை முற்றிலும் அழிந்த பிறகு கேவல தரிசனம் (கடையிலா காட்சி) அதாவது க்ஷாயிக தர்சனம் ஆகும்.

தானாந்தராய (gift-obstructive) வினை முற்றிலும் அழிந்த பிறகு க்ஷாயிக அபயதானம் வழங்கும் சக்தி அதாவது க்ஷாயிக தானம் ஆகும்.

லாபாந்தராய (gain-obsturctive) வினை முற்றிலும் அழிந்த பிறகு  பசி, தாகம் முதலியன இல்லாது போகிற லாபம் கிடைக்கிறது, அதாவது க்ஷாயிக லாபம் ஆகும்.

(But infinite particles of extremely pure and subtle matter, which give strength and which  are beyond the reach of ordinary human beings, are assimilated in his body every instant. This is the gain derived from destructive of karmas.)


எல்லா லோகாந்திராய (karmas which obstruct enjoyment) வினை அழிந்த பிறகு வரம்பற்ற அதிசயமான போகங்கள் கிடைக்கிறது,  அதாவது க்ஷாயிக போகம் ஆகும்.

(For instance the marvels of the showers of flowers etc. result from this)


எல்லா உபபோகந்திராய (obstructive karmas of  re-enjoyment) வினை அழிந்த பிறகு அதாவது போகப்பொருட்களை அனுபவிப்பதற்கான தடை அழிந்த பிறகு  க்ஷாயிக உபயோகம் ஆகும். (உ-ம்) சிம்மாசனம், சாமரை, முக்குடை போன்றவை.


விர்யாந்திராயம் அதாவது சக்தியினை அழிக்கும் எல்ல வினைகளும் அழிந்த பிறகு க்ஷாயிக வீர்யம் (கடையிலா சக்தி) கிடைக்கும்.

அந்த ஏழு பிரகிருதிகளின் வினைகள் முற்றிலும் அழிவதால் க்ஷாயிக சம்யக்துவமும் (perfect faith), க்ஷாயிக சாரித்ரமும் (perfect conduct) கிடைக்கும்.

காதி வினைகள் அறிவு மறைப்பு, காட்சி மறைப்பு, மயக்கு வினை (மோகனீயம்) மற்றும் அந்தராய வினைகள் என நான்கும் அழிவதால் க்ஷாயிக ஞானம், க்ஷாயிக தர்சனம், க்ஷாயிக சம்யக்துவம் மற்றும் க்ஷாயிக சாரித்ரம் கிடைக்கிறது.

மேற்கூறிய நான்கும் முற்றிலும் அழிக்கப் பட்டு விட்டதால் க்ஷாயிக: தானம், லாபம், போகம், உபபோகம், வீரியம் ஆகிய ஐந்து லப்திகள் கிடைக்கின்றன.

ஆக இந்த க்ஷாயிக பாவத்தில் ஒன்பது பிரிவுகள் உள்ளன.

------------ 


In the absence of all karmas in the liberated pure souls, these do not apply to them.  How then do these exist in the liberated pure souls?  These exists in them only in the form of infinite bliss, pure unmixed,  as infinite energy exists  in the form of  infinite knowledge.

------------  



ஞானாஞானதர்சன லப்தயச் சதுஸ்த்ரிபஞ்ச பேதா: ஸம்யக்த்வ சாரித்ர ஸ்ம்யமாஸம்யமாச்ச  - (அ2 #5) =(38)


ज्ञानाज्ञान दर्शन लब्ध्यश्चतुस्त्रि त्रिपञ्चभेदाः सम्यक्त्व चारित्र संयमासंयमाश्च


Gyanagyana-darshana-labdhaya-shchatustritri-panchabhedah samyaktvacharitra-sanyama-sanyamashcha



ஞான-அஞ்ஞான-தர்சன-லப்தயெ -  ஞானம், அஞ்ஞானம், தர்சனம், லப்தி;
சதுஸ்-திரி-திரி-பஞ்ச-பேதா – நான்கு, மூன்று, மூன்று, ஐந்து, பேதம்;
ஸம்யக்த்வ-சாரித்ர-ஸம்ய+அஸம்யம் - ஸம்யக்த்வம், சாரித்ரம், விடுபட்ட நிலை+ முற்றிலும் விடுபடா நிலை.

The eighteen kinds of disposition arising from destruction-cum-subsidence are knowledge four (sensory, scriptural, clairvoyance and telepathy), three erroneous knowledge (erroneous sensory and scriptural knowledge and erroneous clairvoyance), three perception (ocular perception, non-ocular perception, clairvoyance perception and perfect perception), five attainment (gift, gain, enjoyment, re-enjoyment and energy), right faith, right conduct and mix of restraint and non-restraint.



முன் குறிப்பு: யாதாக்ரம – முறையே, respectively
லப்தி - பெற்றவை, attainment
ஸர்வகாதி ஸ்பர்தகங்கள் – ஆத்ம குணங்களை முற்றுலும் தடுக்கிற கார்மன வருக்கணைகள் -  (karmic particles)
தேசகாதி ஸ்பர்தகங்கள் – ஆத்ம குணங்களை ஒரு பகுதியினை அழிக்கும் வருக்கணைகள்
ப்ரக்ருதிகள் – சார்வகைகள், subtypes

க்ஷயோபசமிக பாவத்தின் (கர்மம் அழிந்த மற்றும் தணிவு நிலை எண்ணங்கள்) - 18 பிரிவுகள்:

நல்ஞானம் – 4 ;  குஞானம் {தவறான(மித்யாத்வ) ஞானம்} – 3; தரிசனம் – 3; லப்திகள் – 5; ஸம்யக்த்வம் – 1;  சாரித்ரம் – 1; ஸம்யமா ஸம்யம் – 1  =  18.
முழுவதுமாக மறைக்கும் கர்மங்களையும் (ஸர்வகாதி ஸ்பர்தகங்கள்), ஒரு பகுதி மட்டுமே மறைக்கும் கர்மங்களையும் (தேசகாதி ஸ்பர்தகங்கள்) செயல் படாமல் நிறுத்தி வைத்தலின் செயல்களின் சந்தர்ப்பங்கள் இவை:

மதி, சுருதி, அவதி, மனப்பர்யாய ஆகிய நான்கு நல்ஞானங்கள்;

கு-மதி, கு-சுருதி, கு-அவதி ஞானம் ஆகிய  மூன்று அஞ்ஞானங்கள்;

சக்ஷு தர்சனம், அசக்ஷு தர்சனம், அவதி தர்சனம் (புலன்களாலும் மனதாலும் அறியும் அவதி  தரிசனம்) எனும் மூன்று தரிசனங்கள்;

தானம், லாபம், போகம், உபபோகம், வீரியம் ஆக ஐந்து லப்திகள்;

க்ஷயோபஸமிக ஸம்யக்த்வம், க்ஷயோபஸமிக சாரித்திரம், ஸம்யாமா ஸம்யமம்; என மூன்றும் மொத்தம் பதினெட்டு பாவங்களாகும்.

இந்த பாவங்கள் தனக்கு விரோதமாக உள்ள வினைகள் கேடு தணிவு நிலை அடைந்த போது உண்டாகின்றன.
----------
Four kinds knowledge, three kinds of wrong knowledge, three kinds of perception (darsana) and five kinds of attainment. 

The disposition of destruction-cum-subsidence arises when there is destruction as well as subsidence of the rise of karmic matter which totally obscures and when there is rise of karmic matter which obscures only partially.

Herein, the operation of knowledge etc. must be explained with reference to destruction-cum-subsidence of its own covering and obstructive karmas.

------------- 



ஜீவபவ்யா பவ்யத்வானி ச  - (அ2 #7) =(40)


जीवभव्याभव्यत्वानि च


Jivabhavyabhavyatvani cha



ஜீவத்வம்; பவ்யத்வம்; அபவ்யத்வம் பரிணாமிக பாவங்கள் ஆகும்.


The three inherent nature of soul are the principle of life (consciousness), capacity for salvation and incapacity for salvation.


ஜீவத்வம் – consciousness / principle of life
பவ்யத்வம் – capacity for salvation
அபவ்யத்வம் - incapacity for salvation
பரிணாமிகம்  - இயல்பான/ இயற்கையான


இவை ஆத்மாவிற்கே உரியது. மற்ற திரவியங்களுக்கு இல்லை என்பதே சிறப்பு ஆகும்.

ஜீவத்வம்: ஆன்மாவின் சைதன்ய (ஞானதரிசன சுபாவம்) நிலை. அதுவே இயல்பு தன்மை.

ஜீவத்வத்தில் செயல்பாட்டு நோக்கு, சைதன்ய நோக்கு என இரு பிரிவுகள் உள்ளன.

செயல்பாடு பிராணனை அடிப்படையாக கொண்டிருப்பதால் சைதன்ய குணம் ஜீவத்தன்மையுடன் சேர்ந்தது.

இங்கு எல்லா ஜீவன்களையும் சமமாகவே பாவிக்கப்படுகிறது மற்றும் சைதன்ய குணம் ஈடுபாடு இல்லாததாக இருக்கிறது. ஆகவே பரிணாமிகம் என  அழைக்கப்படுகிறது.

பவ்யத்வம் மற்றும் அபவ்யத்யம் இரண்டும் ஈடுபாடற்ற  காரணமாக இருக்கிறது.

பொதுத்தன்மையில் எந்த ஜீவனில் மும்மணி குணத்தை வெளிப்படுத்தும் தகுதி யிருக்கிறதோ, அதனை பவ்ய ஜீவன் என்றும் அழைக்கப்படுகிறது. தகுதி யில்லையோ அவ்வுயிரை அபவ்ய ஜீவன் என்றும் அழைக்கப்படுகிறது.

(பவ்ய  ஜீவன் மும்மணி உள்ளதால் மோட்சம் போகலாம். அபவ்ய ஜீவன் மும்மணி இல்லாததால் மோட்சம் கிடைக்காது; வேகாத கள்ளப் பயிறு மாதிரி.)

ஜீவனிடம் இரு தகுதிகளும் இயல்பாகவே(சுபாவத்திலேயே) இருக்கின்றது.

ஆகவே பவ்யத்வம் மற்றும் அபவ்யத்வம் இரண்டுமே பரிணாமிக பாவங்கள் ஆகும்.

என்று குறிப்பிட்டிருப்பதால் அஜீவ தத்துவத்துக்கும் கீழ்க்கண்ட முறையில் பொருந்தும்.

அஸ்தித்வம் -  உண்டு என்னும் தன்மை.
திரவ்யத்வம் – பொருள் என்பதால் மாறுபடும் தன்மை.
பிரதேசத்துவம் – ஒரு பொருள் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் தன்மை ஆகிய பொதுவான (சாமான்ய) குணங்களையும் ஏற்கவேண்டும்.
--------------
ஜீவத்வம், பவ்யத்வம், அபவ்யத்வம் மூன்றும் பரிணாமிக பாவம்.
நிச்சயத்தில் உயிரின் இயல்பாகும்.
மற்ற மூன்றும் பொருள்களின் இயல்பாகும்.
----------------
Consciousness and being worthy or unworthy of liberation are three innate characteristics of soul. 

The knowing capability of soul; being worthy of or its eligibility for liberation is obvious.  It can, however, be unworthy or ineligible too. 

Jain tradition maintains that some souls are so addicted to wrong concepts that they cannot see the truth. 

As such, they cannot attain liberation. These three modes are thus innate to soul and are not related to any situation.

------------


உபயோகோ லக்ஷணம் ச  - (அ2 #8) =(41)*


उपयोगो लक्षणम्


Upayogo laksanam



உபயோகம் ஜீவனுடைய இலக்கணமாகும்.

Consciousness is the differentia (distinctive character-istic) of the soul..


ஆத்மனின் சிறப்பு – உபயோகம்.  அதாவது சைதன்ய குணத்துடன் சம்பந்தப்பட்ட பரிணாமம் இருப்பது உபயோகமாகும்.

சைதன்யம் - ஞானதரிசன சுபாவம்

எது சைதன்யத்தினை விட்டு விட்டு வேறிடத்தில் இல்லாமல் இருக்கிறதோ, அந்த பரிணாமம் உபயோகம் என அழைக்கப்படுகிறது.

ஆத்மா பந்த த்தின் நோக்கில் உடலோடு ஒன்றாக இருந்தாலும் கூட சைதன்யத் தன்மை உபயோகம் ஆகியவற்றால் ஆன்மனின் தனித்வம் அறியப்படுகிறது.

தங்கம், செம்பும் ஒன்றாக  கலந்திருப்பினும் நிறம் முதலிய பண்புகளால் அவை இரண்டும் தனித்தனியானவை என்பது போல் ஆன்மா தன் இயல்பில் தனியாக இருக்கின்றது.

---------
That, which arises from both internal and external causes and concomitant with consciousness, is *upayoga* (active or attentive consciousness)

------------ 



சத்விவிதோஷ்ட சதுர்பேத: - (அ2 #9) =(42)


स द्विविधोऽष्टचतुर्भेद


Sa dvividho (a)shtachaturbhedah


ஸ – இந்த உபயோகம்; த்விவித – இரண்டு விதம்; அஷ்ட சதுர் பேத – எட்டு மற்றும் நான்கு பிரிவுகளுடையது.

Consciousness is of two kinds i.e. knowledge and perception. And these in turn are of eight kinds the sensory, scriptural, clairvoyance, telepathy and omniscience, and erroneous sensory, scriptural and clairvoyance and four kinds (ocular, non-ocular, clairvoyance and perfect) respectively.



அந்த உபயோகம் இரண்டு விதமாகவும் உள்ளது. (ஞானோபயோகம் மற்றும் தர்சனோபயோகம்)

ஞான உபயோகம் எட்டு பிரிவுகளாகவும்; தர்சன உபயோகம் நான்கு பிரிவுகளாகவும் இருக்கின்றன.

ஞான உபயோகம்: (knowledge) மதி ஞானம்; சுருத ஞானம்; அவதி ஞானம்; மனபர்யய ஞானம்; கேவல ஞானம்; குமதி ஞானம்- மித்யா ஞானம் (wrong sensory knowledge) ; குசுருத ஞானம் (wrong scriptural knowledge) மற்றும் விபங்க ஞானம்-குஅவதி ஞானம் (wrong clairvoyance) என்பன.

தர்சன உபயோகம்: சக்ஷு தர்சனம் (கண்ணால் அறிவது, perception thro’ eyes); குசக்ஷு தர்சனம் (மற்ற நாங்கு புலன்களால், perception thro’ other four sensory organs ie except eye); அவதி தர்சனம் (clairvoyant perception); கேவல தர்சனம் (omniscient perception) என்பன.

தர்சனம் என்பதை சாமான்ய அவலோகனம் அல்லது  அவ்யபக்த ஞானம் (பொதுவாக அறிதல்) என்பர்.
----------
The knowledge is with details and the perception is without details.
Apprehension of the mere object (the universal) is perception, and awareness of the particulars is knowledge.

These occur in succession iin ordinary mortals (non-omniscient’s), but simultaneously in those who are annihilated karmas.


This section deals with five kinds of right knowledge which were explained formerly. But here wrong kinds knowledge also mentioned, as this is the section dealing with consciousness in general.

------------------- 

ஸம்ஸாரிணோ முக்தாச்ச - (அ2 #10) =(43)


संसारिणो मुक्ताश्च


Sansarino muktashcha


ஸம்ஸாரி- பிறவி உயிர்; முக்தா- முக்த உயிர்


The souls are of two types-the transmigrating and the emancipated souls.



சம்சாரி உயிர் (பிறவி உயிர்); முக்த உயிர் என இரண்டு வகை உள்ளது.

----------       
சம்சாரி உயிர்:

ஸம்ஸரணம் – பிறவியில்  சுழன்று கொண்டிருப்பது.
சம்சாரம் – பிறவி சுழற்சியில் உழன்று கொண்டிருப்பது.

இப்படி சுழன்று கொண்டிருப்பதை பரிவர்த்தனை (cycle of wandering) என்பர். அவ்வாறு உள்ள ஜீவனை சம்சாரி என்பர்.

பரிவர்த்தனையில் ஐந்து பிரிவுகள் உள்ளன.

திரவிய (The cycle of matter);  க்ஷேத்ர (The cycle of space); கால (the cycle of time);  பவ (The cycle of incarnation, state of existence); மற்றும் பாவ பரிவர்த்தனை (the cycle of thought or emotion) என ஐந்து பரிவர்த்தனைகள்.

திரவிய பரிவர்த்தனை:  இதில் இரண்டு

-------------
   நோகர்ம திரவிய பரிவர்த்தனை: (the cycle of quasi-karmic matter) மூன்று உடல்கள் (ஒளதாரிகம், வைக்ரீயகம், ஆஹாரகம்) ஆறு பர்யாப்திகள்(completion of development) தோன்றுவதற்குரிய புத்கல பரமாணுக்களை நோகர்ம வர்கணை என்பர்.
    ஒரு குறிப்பிட்ட உயிர் ஒரு சமயத்தில் எந்த நோகர்ம வர்கணைகளை  எந்த ஸ்பர்சம், ரசம் (சுவை), கந்தம் (வாசனை), நிறம் ஆகியவற்றைத் தீவிரம் (intense) , மத்தியமம் (intermediate), மந்த (feeble) நிலைகளில் ஏற்றது.

பிறகு முன்னர் குறிப்பிட்ட வர்கணைகள் நிர்ஜரையாகி விடுகின்றன.

இவ்வாறு வரம்பற்ற முறை இதற்கு முன் ஏற்காத (அக்ருஹீத); அதாவது முதல் முறையாக சம்ய பிரபந்தங்களை ஒற்று ஏற்று விட்டது. பின்னர் விட்டு விடுகின்றது.

இப்படிப்பட்ட சுழற்சியில்;  எப்போது அதே உயிர் முதலில் ஏற்கப்பட்ட நோகர்ம வர்கணைகளை அதே எண்ணிக்கையிலும்; ஸ்பரிச, ரச, கந்தம், நிறம் ஆகியவற்றுடன் எந்த தீவிர, மத்திம, மந்த நிலையில் ஏற்றதோ அதே நிலையில் எந்த மாற்றமும் இன்றி மீண்டும் ஏற்றது என்றால் இந்த ஒட்டு மொத்த காலம் நோகர்ம பரிவர்த்தனை என்பர்.

கர்ம திரவிய பரிவர்த்தனை: ஒரு உயிரானது எட்டு விதமான வினைகளாக மாறக் கூடிய புத்கலங்களை ஒரு கணம் (instant) ஏற்றுக் கொண்டு ஒரு சமயமும் ஒரு அவளி (அவலி; கண் சிமிட்டும் நேரம், சமயம் என்பது அதில் எண்ணற்ற பகுதிகளில் ஒன்று) கழிந்த பிறகு மறு கணம் விட்டு விடுகிறது.

பிறகு நோகர்ம திரவிய பரிவர்த்தனையில் கூறிய முறைப்படி அதே புற்கலங்கள் அதே உயிரிடம் அதே முறையில் எப்பொழுது வினைகளாக மாறும் நிலை (கருமபாவம்) கிடைக்கப் பெறுகிறதோ அப்பொழுது இவை எல்லாம் சேர்ந்தது ஒரு பரிவர்த்தனை ஆகிறது. அதுவே கர்ம  திரவிய பரிவர்த்தனை எனப் படுகிறது.

(ஜீவனானது வரம்பற்ற காலங்கள் வரை புத்கல பரிவர்த்தனை வடிவத்தில் பிறவி சுழற்சியில் உழன்று கொண்டுருக்கிறது.)

---------------
க்ஷேத்ர பரிவர்த்தனை: ஒரு ஆன்மா மேருமலை அடிவாரத்தில்  தொடங்கி உலகில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒரு முறை வீதம் புகுந்து புறப்பட்டு உலகம் முழுவதையும் சுற்றிவர ஆகும் காலம் ஒரு க்ஷேத்ர பரிவர்த்தனை எனப்படும்.

இவ்வாறு உலகின் எப்பகுதியையும் விலக்காது அனைத்துப் பகுதியிலும் எண்ணற்ற பிறவிகள் எடுத்து மீண்டும் பழைய இடத்தை அடைவது ஒரு க்ஷேத்ர பரிவர்த்தனையாகும்.
 (ஜீவனானது அநேக முறை க்ஷேத்ர பிறவி சுழற்சியில் பிறந்தும், இறந்தும் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.)

கால பரிவர்த்தனை: ஒரு ஜீவன் உத்ஸர்ப்பினி கால (ஏறு காலம்) முதல் சமயத்தில் பிறந்து ஆயுள் முடிவடைந்து இறந்து விடுகிறது. அதே ஜீவன் மற்றொரு உத்ஸர்ப்பினி காலத்தில் இரண்டாவது சமயத்திலும் பிறந்து ஆயுள் முடிந்து, மூன்றாவது உத்ஸர்ப்பினி கால மூன்றாவது சமயத்திலும் பிறந்து வாழ்ந்து இறக்கிறது. அதே முறைப்படி உத்ஸர்ப்பினியின்  அனைத்து சமயங்களிலும் பிறந்து இறந்து விடுகிறது.

அதே முறைப்படி அவஸர்ப்பினி காலத்திலும் (இறங்கு காலம்) எல்லா சமயங்களிலும் பிறந்து இறக்க வேண்டும். இந்த பிறப்பும், இறப்பும் தொடர்ந்து எவ்வித இடைவெளியில்லாமல் நடைபெற வேண்டும்;

இந்த ஏறு,  இறங்கு காலங்களிலும் பிறந்து  இறந்த காலத்தை சேர்த்த மொத்த காலம் ஒரு கால பரிவர்த்தனை எனப்படுகிறது.

பவ பரிவர்த்தனை: நரக கதியில் மிகக் குறைந்த ஆயுள் 10000 வருடங்கள்: அவ்வாறு ஒரு உயிர் அந்த ஆயுளுடன் பிறந்து இறந்த பிறகு வேறு கதியில் சுழன்று பின் அதே நரக கதியிலேயே பிறக்கிறது.

அந்த 10000 வருடங்களில் எத்தனை சமயங்கள் உள்ளனவோ அத்தனை முறை அதே கதியில் பிறக்கிறது.

இவ்வாறாக ஒவ்வொரு சமயமாக உயர்ந்து உயர்ந்த நரக ஆயுளான 33 கடற்காலங்கள் வரை பிறந்து நிறைவு செய்கிறது.

அதே போல விலங்கு கதியில் மிக குறைந்த ஆயுளான ஒரு அந்தர் முகூர்த்தம் (48 நிமிடங்கள்) /அயுள் முதல் மூன்று பல்யங்களாக (அதிக பட்ச ஆயுள்) நிறைவு செய்கிறது.

அதே போல மனித கதியிலும் பிறந்து இறந்து சுழற்சியை நிறைவு செய்கிறது.

தேவ கதியிலும் 10000 வருடங்கள் தொடங்கி 31 கடற்கால ஆயுள் வரையில் பிறந்து நிறைவு செய்ய வேண்டும்.

இவை எல்லாம் சேர்ந்தது ஒரு பவ பரிவர்த்தனை யாகும்.

பாவ பரிவர்த்தனை: யோக ஸ்தானம், அனுபாக அத்யவசாய ஸ்தானம், கஷாய அத்யவசாய  ஸ்தானம், ஸ்திதி  ஸ்தானம் அகிய இந்நான்கும் பரிவர்த்தனை முறையாக நிகழ்தல் ஒரு பாவ பரிவர்த்தனை காலம் ஆகும்.

--------------
{ஜகன்ய – மிகக் குறைந்த;
அஸங்கியாத உலகளவு – spatial units of the universe ;
கஷாய அத்யாவசாயம்  – degree of passion
அத்யாவசாய ஸ்தானம் – degree of intensity;
யோகஸ்தானம் – degree of activity. }


அதாவது ஜிவனுக்கு மிகக் குறைந்த (ஜகன்ய) ஸ்திதி ஸ்தானம்; ஜகன்ய கஷாய அத்யவசாய ஸ்தானம்; ஜகன்ய அனுபாக அத்யவஸ்தானம்; ஜகன்ய யோகஸ்தானம் இருக்குமோ அது பாவ (bhava) பரிவர்த்தனையின் தொடக்க காலம்.

பிறகு யோக ஸ்தானத்தின் ஒவ்வொரு ஸ்தானம் முறையாக மாறி உயர்ந்த பட்ச ஆஸங்கியாத ஸ்தானம் நிறைவு பெறல் வேண்டும். மற்ற மூன்றும் குறைந்த அளவே (ஜகன்ய) ரூபமாகவே இருக்க வேண்டும்.

இப்படி யோகஸ்தானம் முழுமை பெற்ற பிறகு அநனுபாக அத்யவஸ்தானம் மாறி இரண்டாவது நிறைவு பெற வேண்டும். மற்ற இரண்டும் ஜகன்ய ஸ்தானமாகவே இருக்க வேண்டும்.

இவ்வாறு யோகஸ்தான மாற்ற பூர்வகம், அசங்க்யாத லோக பிரமாணம், அனுமாக அத்யவசாய ஸ்தானம் முறையாக மாறி  நிறைவு பெற்றால் அப்போது கஷாய அத்யவசானம் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.

இப்படி  யோகஸ்தானம், அனுபாக அத்யவசான் பூர்வகம், கஷாய  அத்யவசானம் முறையாக மாறி அசங்க்யாத லோகப் பிரமாணம் முழுமை பெற்ற  பிறகு ஸ்திதி ஸ்தானம் ஜகன்யத்தில் இருந்து மாறி;

இரண்டாவதாக அதாவது ஒரு சமயம்  அதிகம் ஆதல், இப்படி எல்லா மூலப் ப்ரக்ருதிகள் உத்தரப் ப்ரக்ருதிகளின் ஸ்திதி ஸ்தானம் இதே வர்சையில் மாறுவதில் எவ்வளவு காலம் ஆகுமோ அவை எல்லாம் சேர்ந்து ஒரு பாவ பரிவர்த்தனைக் காலம் என்பர்.
(பின்னர் அடுத்த அடுத்த சூத்திரங்களைத் தொடரும் போது இதனை புரிந்து கொள்ளலாம்.)
-----------
இதன் கருத்து யாதெனில் திரவிய பரிவர்த்தனை காலம் அனந்தம். இதை விட அன்ந்த மடங்கு பவ பரிவர்த்தனை காலம், இதைவிட அனந்த மடங்கு பாவ (bhava) பரிவர்த்தனை காலம்.

இந்த ஐந்து பரிவர்த்தனை காலம் சேர்ந்து ஒரு பரிவர்த்தனை காலம் என்று அழைக்கப் படுகிறது.

ஜீவன் மித்யாத்வத்திற்கு அடிமையாகி தன்னுடைய தூய்மையான பரிணாமங்களுக்கு ஏற்ப இன்ப  துன்பங்களை அனுபவித்தவாறு அனந்த பரிவர்த்தனைகளைச் செய்து முடித்துள்ளது.


எனவே பிறவி சுழற்சியினின்று தப்பிக்க முயற்சி செய்ய  வேண்டும். இதைத் தான் ‘சம்சார பாவனை’ என்பர்.
--------------
இரண்டாவது :-

முக்த உயிர்: இந்த ஐந்து வகை பரிவர்த்தனைகளிலிருந்து விலகிய ஜீவன்களை முக்த ஜீவன்கள் என அழைக்கின்றனர்.

முக்த என்ற சொல்லே மனதுடைய பிறவி உயிரிடம் தான்  கிடைக்கப் பெறுகிறது.

இதில் இரண்டு வகை ஜீவன் முக்தன்; கர்ம முக்தன்.

கேவலி பகவான் ஜீவன் முக்தன் ஆவார். ஏனெனில் இறப்பு, பிறப்பு சுழற்சி இனி இல்லை.

ஸித்த பகவானுக்கு எட்டு கர்மங்கள் அழிந்து விட்டன. அதனால் கர்ம முக்தன் ஆவார்.

-----------------


ஸமனஸ்காமனஸ்கா: - (அ2 #11) =(44)


समनस्कामनस्काः


Samanaskamanaskah



ஸமனஸ்க – மனமுள்ள ஜீவன் (rational beings endowed with faculty of reasoning);  அமனஸ்க – மனமில்லா ஜீவன் (irrational beings not capable of  reasoning)

The two kinds of transmigrating souls are with and without minds.


மனமுள்ளது, மனமில்லாதது என பிறவி உயிர்கள் இரு வகைப்படும்.


மனமுள்ள ஜீவன்: ஸமனஸ்க; இதனிடம் நல்லது எது கெட்டது எது என பகுத்தறியும் திறன் உள்ளது. ஐயறிவுள்ள யானை, குதிரை,கிளி,  மைனா, மனிதர் முதலிய பிறவி உயிர்களுக்கு மனம் உண்டு.

மனமில்லா ஜீவன்: அமனஸ்க; அதாவது நல்லது கெட்டது எது என்று பிரித்தறியும் திறன் இல்லாதது. நாலறிவு வரை யுள்ள ஜீவன்கள் (ஐயறிவு உள்ள ஓணான், உடும்பு, etc முதலிய உயிர்களுக்கு மனம் இல்லை.

இதயத்திற்கு அருகே எட்டு இதழ்கள் கொண்ட தாமரை போன்று மனோவர்கணை எனப்படும் நுண்ணிய அணுக்களால் ஆனது மனம்.

திரவிய (physical) மற்றும் பாவ(phychical) மனம் என இருவகையுண்டு.

திரவிய மனம் புற்கல விபாகீ அங்கோபங்க (limbs and minor limbs) நாம கருமத்தின் உதயத்தினால் ஏற்படுகிறது. பொருளில் மாற்றத்தை கொண்டு வருகிறது.

பாவ(bhava) மனம் வீர்யாந்தராய (energy obstructive) மற்றும் நோஇந்திரியாவரண (quasi sense-covering karmas) கருமங்களின் க்ஷயோபசமத்தால் ஏற்படும் ஆன்மாவின் தூயதன்மைக்கு (விசுத்தி) பாவ மனம் என்பர்.

மனத்தின் செயல்பாடுகள் நான்கு வகையின.

சிக்ஷா – உத்தரவுகளைப் பெறுதல்
கிரியா -  பிரித்து அறிதல்
உபதேச – எடுத்துச் சொல்லுதல்
அலாப -  திரும்பத் திரும்ப சொல்லுதல்
                    
மனம் உள்ள உயிர் செயல்படுவதற்கு முன் தான் செய்யத்தகுந்தது எது? செய்யத்தகாதது எது என அலசிப்பார்க்கிறது.

------------- 


ஸம்ஸாரிணஸ்த்ரஸஸ்தாவரா: - (அ2 #12) =(45)*


संसारिणस्त्रसस्थावराः


Sansarinastrasa-sthavarah



ஸம்ஸாரிண- ஸம்சாரி ஜீவன்; ஸ்த்ரஸஸ்தாவரா: - த்ரஸ மற்றும் ஸ்தாவரம் என  இரண்டு வகை.

The transmigrating souls are also divided into two kind’s i.e.  the mobile and the immobile beings.



பிறவி உயிர்களில் மேலும் திரஸம் (இயங்குயிர், mobiled), ஸ்தாவரம் ( நிலை உயிர்,immobile) என இரு வகைகளாக உள்ளன.

எவற்றிற்கு திரஸ நாம கருமத்தின் உதயம் இருக்கிறதோ அவை திரஸ உயிர்கள் எனப்படுகின்றன.

எவற்றிற்கு ஸ்தாவர நாம கருமத்தின் உதயம் இருக்கிறதோ அவை ஸ்தாவரம் (நிலை உயிர்) எனப்படுகிறது.

ஆகமத்தில் உடல்  நோக்கில் இந்திரிய ஜீவன்களிலிருந்து அயோக கேவலி (omniscient) வரை எல்லா ஜீவன்களும் இயங்குயிர்கள் ஆகும்.

த்ரஸ – இடம் பெயரக்கூடியவை. ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களுடன் கூடியது.

ஸ்தாவர – இடம் விட்டு இடம் நகர இயலாதவை.  ஒரு தொடு உணர்ச்சி மட்டுமே உள்ளவை. இயங்குயிர்களுக்கு எப்பொழுதும் பயம் உள்ளதால் பயத்தை தரும் பொருள்களிலிருந்து விலகும் தன்மை உடையன. நிலை உயிர்களுக்கு இத்தன்மை கிடையாது.

It refers to the previous sutra.  Those that are described as with and without minds are transmigrating souls.

Without such a qualifying attribute, it would be taken respectively.

That is, the mundane souls are with minds and the liberated souls are without minds. 

Hence the use of word samsarinah is proper.
----------
It should be noted the lustrous and gaseous beings, which are usually considered as Sthavar, are here termed as Tras on the ground that they happen to move.

-------------


ப்ருதிவ்யப்தேஜோவாயுவனஸ்பதய: ஸ்தாவரா: - (அ2 #13) =(46)*

पृथिव्यप्तेजोवायुवनस्पतयः स्थावराः

Prthivyaptejovayuvanaspatayah sthavarah


ப்ருதிவி (காயிகம்) – மண்ணுடல் கொண்டவை; அப் – நீருடல்; தேஜ் – நெருப்புடல்; வாயு – காற்றுடல்; ஸ்தாவர – தாவரங்கள்.

The immobile beings are of five kinds having earth, water, fire, air and vegetation as their body.


பிருத்வீகாயிகம் முதலான ஸ்தாவர நாம கரும உதயத்தின் (fruition) அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர்களாகும்.

எந்த ஜீவனில் மண் உருவில்  உடல் இருக்கிறதோ அதனை பிருத்வீகாயிகம் என அழைக்கப்படுகிறது.

ப்ருத்வி காயிகம் – மண்ணை உடலாக உடைய உயிர்;

ப்ருத்வி காய – உடல் உள்ளது அதில் உயிர் இல்லை. அதாவது உயிர் நீங்கிய உடல்.

பிருத்வி ஜீவன் - பிருத்வீ காய யோகத்தில் இருக்கும் ஜீவனானது எதுவரை மண்ணை உடலாகக் கொண்டில்லையோ அதுவரை பிரத்வீ ஜீவன் என அழைக்கப்படுகிறது.

The earth soul is that which has acquired the name karma of earth body and is in transit with the karmic body, but has not actually entered the earth body.

இவ்விதமாக ஜலகாயிகம் முதலியவற்றில் கூட அபகாயிகம், அபகாயா, அபஜீவ என எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை கண்களுக்கு புலப்படாது. உதாரணமாக ஒரு குவளை நீரை எடுத்துக் கொள்வோம்.  அதன் ஒவ்வொரு துளியும் அநெக அப்புகாயிக உயிர்களைக் கொண்டுள்ளது.

அந்த துளியை மைக்ராஸ்கோப் மூலம் பார்க்கும் போது காணப்படும் பொருட்கள் அப்புகாயிக உயிர்கள் அல்ல. அவை அன்னிய உடலாகக் கொண்டவை. தண்ணீர் மட்டுமே அவற்றின் உடல்களாகும்.  

இது மாதிரியே மற்ற ஒருயிர்களுக்கும் ஆகும்.

அவற்றின் உருவ அமைப்பு ப்ருத்வி உயிரின் உடல் அமைப்பு பச்சைப் பயிறு போல் ஒருவித முட்டை வடிவமாகும்,

அப்புகாயிக உயிர் – நீர்த்துளி போன்ற வட்ட வடிவம் கொண்டது.

தேயுகாயிக உயிர்;  பல கூர்மையான ஊசிகளை ஒன்று சேர நீண்ட உருளை வடிவத்தில் அடுக்கி வைத்தல் போன்றது நெருப்புடலி ஆகும். (Long cylindrical with pointed  tips like a collection of needles.)

வாயுகாயிக உயிர்; நீண்ட சதுரமான சாட்டை போன்ற உருவம் கொண்டது காற்றுடலி ஆகும். (Oblong like a flog)

ஆகவே இவ்வைந்து வகையான உயிர்கள் ஸ்தாவர உயிர்கள் ஆகும்.


இவற்றிற்கு நான்கு பிராணன்கள் உள்ளன. 

------------- 

த்வீந்திரியாதயஸ்த்ரஸா:  - (அ2 #14) =(47)


द्वीन्द्रियादयस्त्रसाः


Dvindriyadayastrasah



த்வி – இரண்டு; இந்திரியா – பொறிகள்; திரஸ- இயங்குகிற

The mobile beings are from the two-sensed beings onwards.


திரஸ நாமகர்மோதயத்தினால் உண்டாகும் உயிரினுடைய பர்யாயம். இடம் விட்டு இடம் பெயரும் (த்ரஸ) உயிர்கள் இரண்டு முதல் அதிக புலன்களைக் கொண்டது. 2,3,4,5, 5+ மனம் இல்லாதது மற்றும் மனமுடன் கூடி இருப்பது என்பவையாகும்.

ஒரு பிறவி உயிருக்கு சில உயிர்த் துடிப்புகள் உள்ளன, அவை பிராணன்கள் (life-principles) எனப்படும்.

பிராணன்கள் மொத்தம் பத்து; புலன்கள் ஐந்து, மன,வசன, காயம் என மூன்று சக்திகள், ஆயுள் ஒன்று மற்றும் மூச்சு ஒன்று ஆக மொத்தம் பத்தாகும்.

ஒரு இந்திரிய ஜீவன்களுக்கு நான்கு பிராணன்கள் இருக்கின்றன.  அவை தொடுயுணர்வு, உடல் சக்தி,  ஆயுள், மூச்சு.

இரு பொறி உயிர்களுக்கு மேற்சொன்ன நான்குடன் மேலும் இரண்டு பிராணங்கள் கூடுதலாக இருக்கும், அதாவது நாக்கு (சுவையறிதல்) வசன சக்தி (the organ of speech) மொத்தம் ஆறு.

மூன்று புலன் உயிர்களுக்கு மேற்கூறிய ஆறுடன் வாசனையறிதல் (முகர்தல், the sense of smell) சேர்ந்து ஏழாகும். 

நான்கு இந்திரிய உயிர்களுக்கு கண்பார்வை (sight) சேர்ந்து எட்டாகும்.

ஐம்புல மனமில்லா உயிர்களுக்கு காதால் கேட்கும் (hearing) சக்தியோடு சேர்ந்து ஒன்பதாகும். 


ஐம்புல மனமுள்ள உயிர்களுக்கு மனத்துடன் சேர்ந்து பத்துப் பிராணன்களாகும்.

----------------- 

பஞ்சேந்த்ரியாணி - (அ2 #15) =(48)


पंचेद्रियाणि


Panchendriyani



பஞ்ச இந்த்ரியா – ஐந்து பொறிகள், (தொடு; சுவை; நுகர்வு; பார்த்தல்; கேட்டல் புலன்கள்)

The senses are five-touch, taste, smell, sight and hear.



அதிக பட்சமாக ஆன்மாவுக்கு ஐந்து இந்திரியங்கள் தான் இருக்க முடியும்.


---------------
முன்னரே குறிப்பிட்ட படி:

இந்திரியம்: ஆன்மா பொருட்களை அறிகிறது என காட்டுவதற்கு எவை நிமித்தமாக அமைகிறதோ அது இந்திரியமாகும்.

அதாவது சூக்குமமாக உள்ள ஆன்மாவின் இருப்பினை, ஆத்மா என்பது உள்ளது என்பதை உணர்த்த காரணமாக உள்ள அடையாளத்தை, லிங்கத்தை (_sign_) தான் இந்திரியம் என அழைக்கப்படுகிறது.

*தொடு உணவிற்கு காரணமாக பொறிகளின் பயன்பாடுகளுக்கு ஆத்மா காரணமாகிறது.*
(ஆக இந்திர என்ற சொல் நாம வினையை குறிக்கிறது)
--------------
ஆன்மாவின் உபயோகத்தைப் பற்றி பேசும் போது; உபயோகத்தினுடைய சாதனங்கள் (instruments) ஆகிய இந்திரியங்களை மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
------------------
மற்ற அங்கங்கள், அங்கோபாங்க நாம கருமத்தின் உதயத்தினால் செயல்பாடுகளுக்கு உதவும் கருவிகளாகும்.  கருமேந்திரியங்கள் ஐந்துதான் என்பது போல் நிச்சயித்துக் கூற முடியாது.

செயல்பாடுகளுக்கான இந்திரியங்கள் (the organs of activity) சேர்க்கப்படவில்லை.

----------------


த்வீவிதானி - (அ2 #16) =(49)


द्विविधानि


Dvividhani



த்வீவிதானி – இரண்டு பிரிவுகள் (இந்திரியங்கள்)

Each of the senses is of to two kinds i.e. material and emotional.



இந்திரியங்கள் ஒவ்வொன்றும் இரண்டு-இரண்டு பிரிவுகளாக உள்ளன

திரவியேந்திரம் – (physical sense);  பாவேந்திரியம் (psychical sense) என்பனவாகும்.


-------------------------------


நிர்வ்ருத்யுபகரணே த்ரவ்யேந்த்ரியம் - (அ2 #17) =(50)


निर्वृत्युपकरणे द्रव्येन्द्रियम्


Nirvrattyupakarane dravyendriyam



நிர்வ்ருத்யுபகரணே – நிர்விருத்தி மற்றும் உபகரண ரூப முடையது; த்ரவ்யேந்த்ரியம் – திரவிய இந்திரியம்


The material sense consists of accomplishment of the organ itself and means or instruments alongwith its protecting environment.



ஆற்றல் நிறைதலும் (நிர்விருத்தி, accomplishment) உபகரணத்தையும் (means of instruments) உடையது திர்வ்யேந்திரம் (physical sense) ஆகும்.

செயல்களின் மூலமாக ஆற்றல் நிறைவு பெறுகிறது.


நிர்விருத்தி: நிர்விருத்தி  நாமகர்மத்தின் உதயத்தினால் ஏற்படும் உடல் வடிவுக்கு பெயர்.

இதில்  இரண்டு பேத மிருக்கின்றது:

ஆப்யந்திர நிர்விருத்தி: (internal formation) ஆன்ம பிரதேசங்கள் பொறிவடிவமாக தோன்றுதல்.
ஆத்ம பிரதேசங்கள் ஒரு சிறிய அளவிற்கு பரந்து விரிவது.  உத்சேதாங்குலத்தினை அஸங்க்யாத பாகங்களாகப் பிரித்து அதில் ஒரு பிரிவு அளவு பொறி வடிவங்களாக அதாவது கண்கள் முதலிய பொறிகள் போல அமைவது.

(உத்சேதாங்குலம்- அகலத்தில் சுண்டு விரல் அளவும், விட்டத்தில் எட்டு பார்லி விதைகள் உள்ள அளவாகும்.)

அதாவது ஆத்மப் பிரதேசத்தில் (ஆத்மனிடத்துள்) சிகப்பு துவரம் பருப்பு (மஸூரிகா) அளவு கண்ணில் கருவிழி அமைந்திருத்தல் போன்றது.

பாஹ்ய நிர்விருத்தி: (external formation) புத்கல பரமாணுக்கள் பொறி வடிவமாக அமைதல்.
நாம வினைகள் பலன்களைத் தருகின்றபோது சேகரிக்கப்படுகின்ற புற்கலப் பொருள் குறிப்பிட்ட உருவில் அல்லது அமைப்பினை ஆன்மாவில் மறைக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில் இருப்பதை பாஹ்ய நிர்விருத்தி என்பர்.

உபகரணம்: நீர் விருத்திக்கு எது உதவி செய்கிறதோ அது உபகரணம்.

 இதிலும் இரண்டு வகையுள்ளது.

ஆப்யந்திர உபகரணம்: மூலப் பொறியை சுற்றியுள்ள பிரதேசம் அதாவது  கண்ணின் கருப்பு,வெள்ளை பாகங்கள்.

பாஹ்ய உபகரணம்: கண்களின் இமைகள் ரோமம் முதலியன. இப்படியே எல்லா பொறிகளையும் அந்தந்த அடையாளங்களால்  அறிய வேண்டும்.

----------------
பிரதேசங்களின் பரிஸ்பந்தனத்தைப் (அதிர்வு-யோகம்) பொருத்து ஒவ்வொரு  சமயமும் வேறு வேறு பிரதேச ஆப்யந்திர நிர்வ்ருத்தி வடிவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

எதற்கு எத்தனை இந்திரியங்கள் இருக்கின்றனவோ அத்தனை இந்திரிய மறைப்பு வினை (இந்திரியாவரண கருமங்கள்) களின் க்ஷயமும், உபசம்மும் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

--------------- 


லப்த்யுபயோகெள பாவேந்த்ரயம் - (அ2 #18) =(51)


लब्ध्युपयोगौ भावेन्द्रियम्


Labdhyupayogau bhavendriyam



லப்த்யுபயோகெள – லப்தி மற்றும் உபயோக ரூபமாக (உள்ளது.) பாவேந்த்ரியம் – பாவ(bhava) இந்திரியம்.

The emotional sense consists of attainment and consciousness.



லப்தி (attainment, அடைதல்), மற்றும் உபயோகம் (consciousness) இவ்விரண்டும் பாவேந்திரியமாகும்.

லப்தி: ஆற்றலைப் பெறுதல் அல்லது அடைதல் என்று பொருள் கொள்ளலாம்.

அந்த அந்த இந்திரியங்களின் கர்ம மறைப்பு (ஆவரணம்) க்ஷயோபஸமத்தால் உண்டாவது லப்தி.
ஞானாவரண கருமத்தின்  (அறிவு மறைப்பு வினை) கெடுதலாலும், தணிதலாலும் லப்தி அடையப் பெறுகிறது.


உபயோகம்: இந்த லப்தியின் துணை கொண்டு ஆத்மாவின் குண்ங்களின் (ஞான, தரிசன்) ஏற்படும் மாறுகைக்கு உபயோகம் எனப்படுகிறது.
வெளியே உள்ள பொருள்களை இந்திரியங்கள் வழி அறிதல் உபயோகம்.

கண் பார்க்கிறது. அப்போது வந்து போனது யார் என்று வினவும் போது; தெரியாது எனில்; உபயோகம் அங்கு இல்லை என்று அர்த்தம். பார்க்கிற பொருள் மீது மனம் இருக்க வேண்டும். அதுவே பஞ்சேந்திரிய ஜீவனுக்கு உபயோகம்.
----------
காரணத்தினுடைய பலனை காரியத்தில் காண முடிகிறது.

பானை உருவம் மற்றும் அதன் தன்மை பற்றிய அறிவு கூட பானை எனப்படுகிறது.

இந்திரியத்தின் பலனை இந்திரியம் என்று கூறுவதில் தவறில்லை.

ஆன்மனின் அடையாளம் இந்திரியம். ஜீவனுடைய இலக்கணம் உபயோகம் (அறிவுணர்வு) ஆகும். ஆகையினால் இந்திரியம் எனக் கொள்வது சரியாகவே இருக்கிறது.

-------- 


ஸ்பர்சன ரஸன க்ராண சக்ஷு: ஸ்ரோத்ராணி - (அ2 #19) =(52)


स्पर्शनरसन घ्राणचक्षुःश्रोत्राणि


Sparshana-rasana-ghrana-chakshuh-shrotrani



ஸ்பர்சன (மெய், touch), ரஸ (taste, வாய்/ நாக்கு), க்ராண (smell, மூக்கு), சக்ஷு (sight, கண்) மற்றும் ஸ்ரோத்ரம் (hearing, செவி/ காது) ஆகிய இந்திரியங்களாகும்.

Touch, taste, smell, sight and hearing are the five senses. Here the sense refers to the body organ e.g. eyes for the sight.


மெய் முதலிய இந்திரியங்கள் ஆத்மாவை சார்ந்திருக்கின்றன.

வீர்யாந்தராயம் (energy obstructing) மற்றும் மதி ஞானாவரண (sensory-knowledge-covering) கருமங்களின் கெடுதலாலும், தணிவினாலும்; மேலும் அங்க உப அங்க (அங்கோபங்க) நாமவினை  அடையப் பெறுவதாலும் (attainment of  name karmas of limbs and minor limbs) ஆத்மா அவற்றின் மூலமாக தொடு உணர்வு அனுபவம் செய்ய முடிகிறது.

அதனை ஸ்பர்சன இந்திரியம் (மெய்) எனப்படுகிறது.
எதன் மூலம் சுவைக்க முடிகிறதோ அதனை ரசன இந்திரியம் (நாக்கு) என்றும்,
 எதன் மூலம் நுகர முடிகிறதோ அதனை க்ராண (மூக்கு) இந்திரியம் என்றும்; அதுபோல் பார்க்க முடிகிறதோ அது சக்ஷு, கண் இந்திரியம் என்றும் ,
கேட்க முடிகிறதோ அது ஸ்ரோத்ர இந்திரியம் ஆகும்.

இப்படி இந்திரியங்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் தன்மை பார்க்கப் படுகிறது.
---------------
சூத்திரத்தில் இந்த இந்திரியங்கள் எந்த வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே ஒவ்வொரு இந்திரியங்களாக ஒரிந்திரிய ஜீவனிலிருந்து பஞ்சேந்திரியம் வரை அதிகமாகிறது.
----------------

ஸ்பர்ஸம்: தொடு உணர்வுகள் எட்டு. வெப்பம்,  குளிர்ச்சி, கடினம், மென்மை, வழவழப்பு, சொரசொரப்பு, லேசானது,  கனமானது என அறிவது.

சுவை: ஐந்து வகை கசப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு எனப்படும். இதனை  அறிவது நாக்கு.

வாசனை: இரண்டு வகை; நல்ல வாசனை, துர்வாசனை என அறிவது மூக்கு.

வர்ணம்: ஐந்து வகை; கருப்பு, நீலம், மஞ்சள், பத்மம் (pink), வெண்மை என ஐவகை வண்ணங்கள். அறிவது கண்கள்.

ஸப்தம்: ஏழு வகை; ஷட்ஜ, ரிஷப, காந்தார, மத்வமா, பஞ்சம, தைவத,  நிஷாத. (do, re, me, fa, sol, la, si) என்பது போன்ற ஒலிகளைக் கேட்பது காதுகள்.

--------------------- 


ஸ்பர்சரஸகந்தவர்ணசப்தாஸ்ததர்த்தா:  - (அ2 #20) =(53)


स्पर्शनरसन्गन्धवर्णशब्दास्तदर्थाः


Sparsha-rasa-gandha-varna-shabdastadarthah 



ஸ்பர்ஸன – தொடு உணர்வு; (தோல் உடல்  முழுவதும்)
ரஸந  -  ருசியறிதல் (நாவினால்)
க்ராண – வாசனையறிதல் (மூக்கினால்)
சக்ஷு  -  பார்த்தல் (கண்ணால்)
ஸ்ரோத்ர  -  காதால் கேட்டல்  (காதால்)
அந்தந்த இந்திரியங்கள் விஷயமாகும்.

Touch, taste, smell, colour and sound are the objects of the senses.


--------------
எப்பொழுது திரவிய நோக்கு முக்கியமாக இருக்கிறதோ அப்போது  செயல் குறிப்பிடப்படுகிறது.

எது தொடப்படுகிறதோ அது ஸ்பர்சம்; (touch)
எது சுவைக்கபடுகிறதோ அது ரசம்; (taste)
எது நுகரப்படுகிறதோ அது கந்தம்; (smell)
எது பார்க்கப்படுகிறதோ அது நிறம்; (colour)
எது ஒலிவடிவில் இருக்கிறதோ அது சப்தம் (sound) ஆகும்.

எப்பொழுது பர்யாய நோக்கு முக்கியமாக உள்ளதோ அப்பொழுது பாவம் (எண்ணம்) குறிப்பிடப்படுகிறது.
தொடுதலை ஸ்பர்சம்; சுவைத்தலை ரசம்; நுகர்தலை கந்தம்; நிறத்தை வர்ணம் என்றும் மற்றும் கேட்பதனை ஒலி என்றும் கூறப்படுகிறது.
------------
மனம் அனவஸ்திகமாக (நிலையற்றது, unstable) உள்ளதால் அதை ஒரு இந்திரியமாக கருதப்படுவதில்லை.

ஆனால் மனம் உபயோகத்திற்கு உதவி செய்கிறது. இந்திரியப் பயன்பாடுகளில் பிரயோஜனம் உள்ளதாக இருக்கிறது.

-------------------


ஸ்ருதமனிந்த்ரியஸ்ய  - (அ2 #21) =(54)


श्रुतमनिन्द्रियस्य


Srutamanindriyasya



ஸ்ருதம் – நூல், ஆகமம்; அனிந்த்ரிய - மனம்

Scriptural knowledge is the province of the mind.


சுருத ஞானம் (scriptural knowledge) மனத்தின் விஷயமாகும்.

சுருத அறிவினுடைய விளைவாக கிடைக்கப் பெறுவது சுருதம். மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.

சுருத ஞானாவரணத்தின் க்ஷயோபசமத்தினால் ஆன்மாவிற்கு சுருத அறிவு விஷயத்தில் மனதினை சார்ந்து அறிவு உண்டாகிறது.

சுருதம் என்ற சொல்லிற்கு அர்த்தம் சுருத அறிவாகும்/ அது மனதினுடைய பிரயோஜனம் ஆகும்.

பொறிகளுக்கு அப்பாற்பட்ட விஷயம், மனம் சம்பந்தப்பட்டது.
அதனால் மனதினை அநிந்திரியம் என்று சொல்லப்படுகிறது.

---------- 


வனஸ்பத்யந்தானாமேகம் - (அ2 #22) =(55)


वनस्पत्यन्तानामेकम्


Vanaspatyantanamekam



மண்ணுடலியிலிருந்து - வனஸ்பதி தாவர உடலி வரை ஒரு இந்திரியமுடையதாகும்.

Up to the end of vegetation being (i.e. all immobile beings)  possess one sense of touch.

-----------
வீர்யாந்தராயம் – ஆற்றல் குறைவுக்கு காரணமான வினை
ஸர்வகாதி – முழு பாதிப்புடையது
ஸ்பர்தகங்கள் – வர்க்கணைக் கூட்டம்.
---------
மண்ணுடலி (பிருத்வீகாயக) உயிரிலிருந்து தாவர உடலி உயிர்கள் வரை ஸ்பர்சன (மெய்) இந்திரியம் இருக்கிறது.

அதாவது மண்ணுடலி, நீருடலி,  நெருப்புடலி, காற்றுடலி மற்றும் தாவர  உடலி உயிர்களுக்கு தொடு உணர்வு இந்திரியம் இருக்கின்றது.

வீர்யாந்தராயம் க்ஷயோபசமம் ஆவதினால் மற்றும் மீதியுள்ள இந்திரியங்களின் ஸர்வகாதி ஸ்பர்தகங்கள் பலனைக் கொடுப்பதாலும்; மேலும் உடல் நாம கருமத்தினை கொண்டிருப்பதாலும் மற்றும் ஏகேந்திரிய ஜாதி நாம வினையின் உதயத்திற்கு கீழ்பட்டிருப்பதாலும் ஓர் இந்திரிய ஸ்பர்சன ஜீவன்கள்  தோன்றுகின்றன.

-------------------








ஈரறிவு ஜீவன்கள்
மூன்றறிவு ஜீவன்கள்






நான்கறிவு ஜீவன்கள்
ஐந்தறிவு ஜீவன்கள்



க்ருமிபிபீலிகாப்ரமரமனுயாதீனாமேகைகவ்ருத்தானி - (அ2 #23) =(56)



कृमिपिपीलिका भ्रमर मनुष्यादीनामेकैक वृद्धानि


Krami-pipilika-bhramara-manusya-dinamekaika-vraddhani 



க்ருமி – புழு; பிபீலிகா – எறும்பு; ப்ரமர – வண்டு; மனுயாதீனாம் – மனிதர் முதலானோருக்கு; ஏகைக வ்ருத்தானி – ஒன்று ஒன்று அதிகமாக இந்திரியங்கள்.


The worm, the ant, the bee and man, etc. have each  one more sense than the preceding one.


புழு, எறும்பு, வண்டு, மனிதர் முதலான உயிரினங்களுக்கு முறையே ஒவ்வோர் இந்திரியமாக அதிகமாகின்றது.

---------

புழு, சங்கு முதலானவற்றுக்கு மெய், வாய் என இரண்டு இந்திரியங்கள்;
எறும்பு, தேள் முதலானவற்றுக்கு மெய், வாய், மூக்கு என மூன்று இந்திரியங்கள்;
வண்டு, கொசு முதலானவற்றுக்கு மெய், வாய், மூக்கு, கண் என நான்கு இந்திரியங்கள்;
மனிதன், விலங்குகள் முதலானவற்றுக்கு மெய், வாய், மூக்கு, கண், காது (ஸ்பர்சன,  ரசன, க்ராண, சக்ஷு மற்றும் ஸ்ரோத்ர) என ஐந்து இந்திரியங்கள்.

இந்த தோற்றத்திற்கான காரண்ங்களைப் பேசும் பொழுது பிற இந்திரியங்கள் அமையாமைக்கு சர்வகாதி ஸ்பர்தகங்களின் (முழு பாதிப்பைத் தரும் வர்கணைகளின்) உதயமே என புரிந்து கொள்ள வேண்டும்.

உடலுடன் கூடிய (mundane) உயிர்கள் இயங்குயிர், நிலைஉயிர் என இரு பிரிவுகளாக உள்ளன.
இந்திரியங்கள் அடிப்படையில் அவை ஐந்து வகைகளாகும்.

------------

ஸம்ஜ்ஞின: ஸமனஸ்கா - (அ2 #24) =(57)*

संज्ञिनः समनस्काः

Sanginah samanaskah


ஸம்ஜ்ஞின: மனமுள்ள ஜீவன்;  ஸமனஸ்கா: மனத்தோடு இருக்கிறது.

The five-sensed beings with mind (capability to receive and judge the good and the bad) are called sangyi.


மனமுடைய ஐம்பொறி உயிர்களை ஸஞ்ஞி ஜீவன் என அழைக்கப்படுகிறது.


ஓரறிவு முதல், நான்கறிவு வரை உள்ள ஜீவன் நிச்சயமாக அஸம்ஜ்ஞி (மனம் இல்லாதன).

ஐந்தறிவு ஜீவன்களில் சில ஸம்ஜ்ஞி; சில அஸம்ஜ்ஞி.

தேவர், நரகர், மனுஷ்யர், ஸம்ஜஞி உயிர்கள். விலங்குகள் சில – பசு,  குரங்கு, புறா, பாம்பு போன்றவை மனமுள்ளவை.

ஸம்ஜ்ஞி ஜீவன்கள் உபதேசம் முதலியவற்றை கிரகிக்கும் தன்மையுள்ளவிய. அஸம்ஜ்ஞி ஜீவன்கள் அப்படிப்பட்டவைகளை கிரகிக்கும் தன்மை இல்லாதவை.

--------
மனம் செயல்பாடாமலிருக்கும் போது, கரு நிலையில், மயக்கநிலையில் மற்றும் தூக்க நிலையில் கூட நல்லது கெட்டதை பிரித்துப் பார்க்க முடியும் என்பதால் அவற்றினை ஸம்ஞ்ஞினி ஜீவன்கள் என கொள்வதே சரியாகும்.

விரும்பியதில் விருப்பமும், விரும்பாததில் வெறுப்பும் ஒவ்வொரு ஜீவன்களுக்கும் இருக்கின்றன.

ஆனாலும் மனம் சுதந்திரமான இருப்பு (சத்தா) நிலையைப் பெற்றிருக்கிறது.

இந்த சுதந்திரத்தன்மைக்கான காரணம் ஒப்பு நோக்கும் தன்மையுள்ள படிப்பு அல்லது ஆராய்வு, இவ்வுலக சிந்தனை, நன்மையானது/தீமையானது என்ற விவேகம் முதலியன எந்த உயிருக்கு இருக்கிறதோ அந்த உயிரைத்தான் ஸ்ம்ஞ்ஞி எனப்படுகிறது.

------------ 

விக்ரஹகதெள – கர்மயோக: - (அ2 #25) =(58)


विग्रहगतौ कर्मयोगः


Vigrahagatau karmayogah



விக்ரஹ கதெள – உடலைவிட்டு செல்வதும்/திரும்புவதுமான இடைவெளியான  கதியில்; கர்மயோக – கார்மண காய யோகம் இருக்கிறது.

In transit from one body to another, there is vibration of the karmic body only.


விக்ரஹ கதியில் அதாவது ஒரு உயிர் ஒரு உடலைவிட்டு மற்றொரு உடலை அடைய இடம் பெயர்தலில் (in transit from one body to another) கார்மண காய யோகம் (வினை உடல் நிகழ்வு - vibration of the karmic body) மட்டும் இருக்கிறது.


மரணம் அடைந்த ஜீவன் வேறொரு கதிக்குச் செல்கின்ற இடம் பெயர்தலுக்கு  விக்ரஹ கதியாகும் (திரும்புதலுக்கும் விக்ரஹம் என்று பெயர்).

எல்லா உடல்களும் தோன்றுவதற்கான மூல காரணமான கார்மண உடலை (வினை உடலை) கருமா எனப்படுகிறது.

மனம்,மொழி, மெய் வர்கணை (molecules) களின் நிமித்தத்தினால் ஆத்ம பிரதேசத்தில் ஏற்படும் அசைவுக்கு யோகம்(activity) எனப்பெயர். கருமத்தின்  நிமித்தத்தினால் எந்த யோகம் ஏற்படுகிறதோ அது கருமயோகம் ஆகும்.

அந்த கருமயோகம் விக்ரஹ கதியில் ஏற்படுகிறது என்பது தான்  கருத்தாகும்.
-----------
அதாவது உயிரானது புதிய கருமத்தினை ஈர்த்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது நிகழ்கிறது.
----------
ஆன்மா  ஒரு பிறவியிலிருந்து பிரிந்து வேறு  ஒரு பிறவியை  அடையச் செல்லுதல், விக்ரஹகதி எனப்படும். அப்பயணத்தின் போது கார்மண காய யோகம் மட்டுமேயிருக்கும்.
அச்சமயம் உயிரணுக்களும் கார்மண அணுக்களும் தைஜஸ கார்மண அணுக்கள் மட்டுமே ஆன்மாவினால் ஆகர்ஷிக்கப் படுகின்றன.
ஞானாவரணம் முதலான எட்டு கர்மங்களும் கார்மணம் எனப்படும். கார்மண சரீரத்தினுடைய தொடர்பினால் ஆத்ம பிரதேசத்தில் உண்டாகும் அசைவு யோகம் எனப்படும். அதைக் கர்ம யோகம் அல்லது கார்மண யோகம் என்றும் கூறுவர்.
இதன் உதவியினால்  தான் ஆன்மா ஒரு சரீரத்தை விட்டு (மரண காலத்தில்) மற்றொரு சரீரத்தை ஏற்கச் செல்கிறது.

------------ 


அனுஸ்ரேணி கதி: – கர்மயோக: - (அ2 #26) =(59)


अनुश्रेणि गतिः


Anushreni gatih



அனுஸ்ரேணி – (உடலற்ற ஆன்மாக்களின்) ஒழுங்குமுறை வரிசையில் செல்லும் ஏணிப் பாதைகள்


Transit takes place in rows (straight lines) in space.


(ஜீவன் மற்றும் புற்கலங்களின்) செல்லுகை ஆகாசத்தில் நேர்க்கோட்டு  வரிசையில் ஏற்படுகிறது.


ஒரு உயிர் இறந்த பின் இன்னொரு பிறவி எடுக்கச் செய்யும் காலத்திலும் மற்றும் முக்தி அடைந்த உயிர்கள் உயரச் செல்லும் காலத்திலும் வரிசையிலேயே அதாவது நேர்கோட்டிலேயே செல்லுகின்றது.

தேச (space) (நியமம்) விதி என்பது மேலுகத்திலிருந்து கீழுலகத்திற்குச் செல்வது, கீழுலகத்திலிருந்து மேல் உலகத்திற்குச் செல்வது, பக்கவாட்டாக கீழும்  மேலும் அல்லது பக்கவாட்டில்  வரிசைகளில் செல்வதாகும்.

இது போலவே புற்கலங்கள் உலகத்தின் முடிவு வரை  செல்வதும் வரிசையில் தான்  நிகழ்கின்றன.
-------
அதாவது ஒரு ஆன்மாவின் விக்ரஹகதிப் பயணம் நேர் கோட்டிலேயே அமைந்திருக்கும்.

கதியை சென்று அடைய விதிகள் நான்கு வகை. அவைகள் பின்வருமாறு.

இக்ஷுகதி:  திருப்பம்  இல்லாமல் நேராகச் செல்வதும், ஒரு சமய காலம் உள்ளதும் ஆகிய விக்ரஹகதி.

பாணி முக்தாகதி: ஒரு திருப்பம் (one turn) திரும்பி செல்லுதலும், இரண்டு சமயகாலமுள்ளதும் ஆகிய விக்ரஹகதி.

லாங்குலிகாகதி: இரண்டு திருப்பம் (one turn) திரும்பி செல்லுதலும், மூன்று சமயகாலமுள்ளதும் ஆகிய விக்ரஹகதி.

கோத்ரிகாகதி:  மூன்று திருப்பம் (one turn) திரும்பி செல்லுதலும், நான்கு சமயகாலமுள்ளதும் ஆகிய விக்ரஹகதி.

ஆன்மா இந்த நான்கு சமயத்திற்குள் புதிய உடலைத் தரிக்கும்.
-------------
ஸ்ரேணி என்பது உலகத்தின் மத்திய பாகத்திலிருந்து மேலும், கீழும் பக்கங்களிலும் கிரமமாக அமைந்திருக்கும் ஆகாசப் பிரதேசங்களின் வரிசை.

ஆறு திக்குகளில் சமச்சீராகச் செல்லும்  நேர்கோடுகள். அதாவது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,  மேல், கீழ் என்பன.
---------
கண்ணுக்கு புலப்படாத ஒரு பரமாணு உலகத்தின் எங்கோ  ஒரு கீழ்பாகத்திலிருந்து உலகின் உச்சியை – பதினான்கு ரஜ்ஜு தூரத்தை  ஒரே  சமயத்தில்  சென்றடையும்.

எல்லா புத்கல  பரமாணுக்களும் ஸ்ரேணியைக் குறித்துச் செல்வதில்லை.
-------------



அவிக்ரஹா ஜீவஸ்ய - (அ2 #27) =(60)


 अविग्रहा जीवस्य


Avigraha jivasya



அவிக்ரஹா – திரும்புதல் இன்றி;  ஜீவஸ்ய – முக்த ஜீவன்

The movement of a liberated soul is straight upwards without a bend.


மோக்ஷம் போகிற ஜீவன் நேராகச் மேல் நோக்கிச் செல்லும்.

அந்த பயணப்பாதை அவிக்ரஹா; அதாவது திருப்பங்கள்(வளைவுகள்) இல்லாதது.

ஸ்ரேணிக்கு ஏற்றவாறு செல்லும் போக்கிற்கு இரண்டு பிரிவு உண்டு.

விக்ரஹா: திருப்பம் உள்ளது. (hindered, bent, not straight)
அவிக்ரஹா: திருப்பம் இல்லாதது
--------------
இரண்டரைத் தீவில்தான் மோக்ஷம் அடையலாம். அதே  அளவுதான் மோக்ஷ பூமி (ஸித்த  பூமி).

அது 45 லக்ஷம் யோஜனை அளவுடையது.
------------


விக்ரஹவதீசஸம்ஸாரிண: ப்ராக்சதுர்ப்ய: - (அ2 #28) =(61)


विग्रहवती च संसारिणः प्राक् चतुर्भ्यः


Vigrahavati cha sansarinah prakchaturbhyah



விக்ரஹவதீசதிருப்பங்கள் உள்ளவாறு; ஸம்ஸாரிண: - சம்ஸாரி ஜீவன்; சதுர்ப்ய: ப்ராக் – நான்கு சமயம் வரை

The movement of the transmigrating souls is with bend and can take up to the four instants, which is for movement with three bends. Each bend requires one additional instant.


சம்சாரி ஜீவனின் செல்லுகை (கதி) நான்காவது சமயத்திற்குமுன் திருப்பத்துடன் (அதாவது ஒன்று முதல் மூன்று சமயங்கள் வரை), திருப்பம் இல்லாமலும் இருக்கும்.

திருப்பத்துடன் செல்வது மூன்று சமயங்களுக்குள் நிகழ்கிறது. அதாவது நான்காவது சமயத்தில் இல்லை.
--------
ஒரு சமயம் என்பது ஒரு புத்கல அணு தான் இருக்கும் ஒரு பிரதேசத்தை விட்டு அடுத்த பிரதேசத்தைச் சென்றடையும்  நேரம்.
-----------
முக்த ஜீவன் மேல்நோக்கிச் செல்லும், ஒரு சமய நேரத்தில் சென்றடையும்.

சம்ஸார ஜீவன் விக்ரஹ கதியில் செல்லும் போது ஒரு திருப்பம் இருந்தால் இரண்டு சமயமும்; அவ்வாறு மூன்று திருப்பங்கள் வரை செல்ல நான்கு சமய நேரம் எடுத்துக் கொள்ளும்.

அதாவது அதிகமாக நான்கு  சமய நேரங்களுக்கும், அதிக பட்சம் மூன்று திருப்பங்களுக்குள் புதிய உடலை எடுத்துக் கொள்ளும்.

------------
நாம் முன்னர் பார்த்தபடி

இக்ஷு கதி: திருப்பம் இல்லாமல் நேரே செல்வது; ஒரு சமயகாலமுள்ளது; அவிக்ரஹகதி (Movement without bend)

பாணி முக்தா கதி: ஒரு திருப்பம், இரு சமய கால விக்ரஹ கதி (movement with bend)

லாங்குலிகா கதி: இரண்டு திருப்பம், மூன்று சமய கால விக்ரஹ கதி (movement with bends)

கோமுத்ரிகா கதி: மூன்று திருப்பம், நான்று சமய கால விக்ரஹ கதி கொண்டது. (movement with bends)
---------


ஏக ஸமயாவிக்ரஹா - (அ2 #29) =(62)


एक समयाविग्रहा


Ekasamaya (a)vigraha


ஏக் ஸமயாஒரு சமயம் (உடையது) ; ()விக்ரஹாதிருப்பம் இல்லாத கதி.

Movement without a bend takes one instant.


எந்த கதியில் அவிக்ரஹ அதாவது திருப்பமில்லாமல் செல்கிறதோ அது திருப்பமில்லா கதியாகும் (அவிக்ரஹகதி)

நகர்ந்து கொண்டிருக்கும் உயிர் மற்றும் புற்கலங்களின் செல்லுகை  உலகத்தின் உச்சியை தடையேதும்  இல்லாமல்  இருந்தால் ஒரு சமய (instant) காலமே யாகும்.

----------
கரும பந்தம் பரம்பரையில் அனாதி காலத்தினதாமும்.

அதனால் ஆரம்ப காலத்திலிருந்தே பொய் நம்பிக்கை, முதலிய வற்றால் வயப்பட்டு இருந்த காரணங்களால் கருமங்களை உயிரானது கட்டிக் கொண்டது.

அவ்வாறு ஒரு கதியிலிருந்து அடுத்த கதிக்கு செல்லும் போது (விக்ரஹகதியில்) கருமங்களை பெறுகிறதா என்பதை அடுத்து காண்போம்.....
-----------


ஏகம் த்வெள த்ரீந்வானாஹாரக: - (அ2 #30) =(63)


एकं द्वौ त्रीन्वानाहारकः


Ekam dvau trinva(a)naharakah



ஏகம் த்வெள த்ரீ- ஒன்று, இரண்டு, மூன்று (சமயம் வரை) அனாஹாரக: - ஆஹாரம் இல்லாமல் (கர்மங்களை ஏற்காமல்) இருக்கும்.

During movement upto the last bend the soul remains non-assimilative for one, two or three instants.


விக்ரஹகதியில் ஜீவன் ஒன்று இரண்டு  அல்லது மூன்று சமயங்கள் வரையில் ஆஹாரங்கள்; கரும, நோகர்மகங்கள் பற்றாமல் இருக்கும்.

ஆன்மா விக்ரஹ கதியில் செல்லும் போது ஒன்று, இரண்டு, மூன்று சமயங்கள் வரை உடல்  இல்லாமல் இருக்கும். அதுவே அநாஹாரக நிலை.
---------
மூன்று வகை உடல்கள், ஆறுவகை பர்யாப்தி களுக்கு தகுதியான புத்கலங்களை எடுத்துக் கொள்வதற்கு ஆஹாரம் எனப்படுகிறது. அவ்வாறு அஹாரம் எடுத்துக் கொள்ளாத உயிர்களை ஆஹாரகம் எனப்படுகிறது.

மூன்று வகை உடல்கள்:
ஓளதாரிக உடல் - தாவரம், விலங்கு,  மனிதர்களிட்த்தில் காணப்படுவது.
வைக்ரீயக உடல் – தேவர்,  நரகர் களிடமுள்ள உருமாறும் உடல்.
ஆஹாரக உடல் -  முனிவர்களிடமிருந்து வெளிக் கிளம்புவது.

பர்யாப்திகள் ஆறு:
ஆஹாரம்(assimilation of molecules of matter), உடல், இந்திரியம், ஸ்வாஸோச்வாஸம் (the respiratory organ), மொழி, மனம் என்பன பூர்த்தியடைவது பர்யாப்திகளாகும்.

(பின் வரும் சூத்திரங்களில் காணலாம்.)
------------
எப்போது உயிர் தேவர், நரக லோகங்களில் (நேர்கோட்டில் சென்று) பிறக்கிறதோ அப்போது புற்கலங்களை எடுத்துக் கொள்ளும் ஆஹாரக உயிராக இருக்கிறது.

மற்ற மூன்று சமயங்களில் அது அனாஹாரகமாக, அதாவது மூவகை உடல்கள் மற்றும் ஆறுவகை  பர்யாப்திகளுக்கு வேண்டிய புற்கல  கருமங்களை  ஈர்த்துக் கொள்ளாமல், இருக்கிறது.

------------- 


ஸம்மூர்ச்சனகர்போபபாதாஜ்ஜன்ம- (அ2 #31) =(64)


संमूच्छंनगर्भौपरादा जन्म


Sammurchchhana-garbhopapada- janma



ஸம்மூர்ச்சன – கர்ப - உபபாதா - ஜன்ம  

Birth is by spontaneous generation, from the uterus or in the special bed.


பிறப்பு மூன்று வகையில் ஏற்படும்.

ஸம்மூர்ச்சன – இயற்கையாக பிறப்பது; (birth by spontaneous generation; ஆண் பெண் உடலுறவில்லாமல் பிறப்பது),

கர்ப்பம் – உடலுறவினால் கருப்பையின் உதவியினால் பிறப்பது; (birth by the uterus),

உபபாதம் – பெட்டி போன்ற படுக்கைகளில் தோன்றுவது – birth in the special bed; என வகைகளில் உள்ளது.
----------

மேலுலகம், நடுவுலகம், கீழுலகம் என மூன்று உலகங்களின் எல்லாப் பக்கங்களிலும் நான்கு பொறி வரையுள்ள உயிர்களின் பிறப்பு (மண், சாணம், குப்பை போன்ற பெளதிகப் பொருட்களுடன் ஒன்று சேர்ந்து) ஏற்படுவது ஸம்மூர்ச்சனம் எனப்படும்.

பெண்ணின் ஸ்ரோணிதமும், ஆணின் சுக்கிலமும் சேர்ந்து கருவாகி யோனியில் தோன்றுவது கர்ப்ப  ஜென்மமாகும்.

பெட்டி போன்ற சிறப்பான படுக்கைகளிலிருந்து எழுந்து நடப்பது உபபாதம் ஆகும். இது தேவர்களுக்கும், நரகர்களுக்கும்  ஏற்படுகிறது.


இம்மூன்று வகையான ஜன்னங்களும் பிறவி உயிர்களின் சுப, அசுப பரிணாமங்களின் காரணமாக பல வித கருமங்கள் கட்டுவதினால் ஏற்படுகின்றது.

------------ 


ஸசித்தசீதஸம்வ்ருதா: ஸேதரா மிஸ்ராச்சை கசஸ்தத்யோநய: - (அ2 #32) =(65)


सचित्तशीतसंवृताःसेतरा मिश्राश्चैकशस्तद्योनयः


Sachitta-shita-samvrtah setara  mishrashchaika-shastadyonayah




ஸசித்த-சீத-ஸம்வ்ருதா: ஸேதரா மிஸ்ரா--ஏகச: தத்-யோனய

Living matter, cold, covered, their opposites and  their combinations are the nuclei severally.

----------------
யோனிஉயிர் உற்பத்தியாகும் இடம்.
சித்தம்ஆன்மாவின் அறிவுணர்தல் தன்மை. (சைதன்ய வடிவம்- consciousness)
---------

ஸசித்தம்:  (living matter) சித்தத்துடன் இருப்பது ஸசித்தம். உயிருடன் கூடிய யோனி. வயிற்றில் உள்ள கிருமிகள்.

சீதம் :  (cold) என்பது குளிர்ச்சி – திரவியம் மற்றும் குணம் இரண்டினையும் குறிக்கிறது. சிறு சிற்றுயிர்கள்

ஸம்வ்ருதம் : (coverd)எவருக்கும் புலப்படாமல் மூடியிருப்பதாகும். கூடையில் முடிவைக்கப்பட்ட பழங்கள் அழுகி ஜீவன்கள் உற்பத்தியாதல்.


ஸ்தேரா - அதற்கு எதிரான (their opposites)


அசித்த: (non-living matter) தேவ, நரக உயிர்கள்; சுவர் மேஜை முதலிய உயிரற்ற பொருள்களின் இடுக்குகளில் ஜனிக்கும் கொசு, மூட்டைப்பூச்சி போன்றவை.

உஷ்ண : (hot) சிறு சிற்றுயிர்கள் பிறக்கும்.

விவ்ருத : (exposed) குளம் குட்டையில் பாசி முளைத்தல்


மிஸ்ரம் -  அவைகளின் இணைதல்கள்: (their combinations)


ஸசித்தாசித்த : (living matter cum dead matter) உயிருள்ள அல்லது இறந்த உடலில் பிறப்பது. தெள்ளுப்பூச்சி, பேன்  முதலியன்.

சிதோஷ்ண: (cold and hot) தேங்கிய நீரில் பிறக்கும், சூரிய வெப்பதாலும், நீரின் குளிர்ச்சியும் கலந்த இடத்தில் உற்பத்தி யாகும் உயிர்கள்.

ஸம்விருத்த விவ்ருத்த: (covered and exposed): பாதி மூடியும், பாதி மூடாமலும் உள்ள யோனியாகும்.

இவைகள் அனைத்தும் சேர்ந்து ஒன்பது யோனிகளாகின்றன.

-----------------
பிறக்கும் இடத்திற்கும் (container), பிறப்பிற்கும் (contained) அதாவது பிறக்கும் வகைகளுக்கும்  வேறுபாடுகள் உள்ளன.

ஸசித்தம் முதலிய பிறப்பு வடிவ ஆதாரத்தில், ஸம்மூர்ச்சனம் முதலிய பிறப்புகளில் ஆத்மா, சரீரம், ஆஹாரம் மற்றும் இந்திரியங்களைப் பெறும் தகுதிகளைப் பெறுகிறது.

கர்ப்பத்தில் பிறப்பவர்களுக்கு மிஸ்ர யோனி வகைகளாகும்.

ஸம்மூர்ச்சனங்களில் மூன்று வகையான சசித்த, அசித்த, மிஸ்ரயோனியும் இருக்கின்றன.

தேவர், நரகியர்களுக்கு சீத,  உஷ்ண என இரண்டு விதமாக யோனிகள் இருக்கின்றன.

விகலேந்திரியங்களுக்கு (ஒரு பொறி மற்றும் நான்கு பொறி உயிர்களுக்கு) நிவ்ருத்த யோனிகள் உள்ளன.

ஒவ்வொன்றிலும்  பலவித உயிர்கள் பிறப்பதினால்; அத்துனை வகைகளைச் சேர்த்திடின் மொத்தம் 84 லட்சம் யோனி பிரிவுகளில் உயிர்கள் உருவாகின்றன.
------------
ஆகமத்தில் கூறப்பட்டுள்ள பிரிவுகள்:

நித்ய நிகோதம் – 7 லட்சம்;
அழிவற்ற பொது உடலி – 7 லட்சம்;
இதர நிகோதம் – 7 லட்சம்;
மண்ணுடலி – 7  லட்சம்;
நெருப்புடலி – 7 லட்சம்;
காற்றுடலி – 7 லட்சம்;
தாவர் உடலி – 10 லட்சம்;
விகலேந்திரிய உயிர்கள் – 6 லட்சம்;
தேவர்; நரகர் மற்றும் விலங்குகளின்  யோனிகள் 4;4;4 லட்சம்;
மனிதர்கள் யோனிகள் – 14 லட்சம்;
 ஆக மொத்தம் 84 லட்ச யோனிகளாகும்.
----------


ஜராயுஜாண்டஜபோதானாம் கர்ப:  - (அ2 #33) =(66)

जरायुजाण्डजपोतानां गर्भः


Jarayujandaja-potanam garbhah



ஜராயுஜ அண்டஜ போதானாம் கர்ப: 

Uterine birth is of three kinds, umbilical (with a sac covering), incubatory (from an egg) and unumbilical (without a sac covering).


கர்ப்பத்து பிறப்பு மூன்று வகைகள்.



ஜராயுஜ: (umbilical (with a sac covering) வலையைப் போல் மாமிசம், இரத்தம், நிரம்பிய பை போல சுற்றப்பட்டிருக்கும்.

(குழந்தை, பசுங்கன்று களின் பிறப்பு தோலினால் ஆன போர்வையால் சுற்றப்பட்டிருப்பதிலிருந்து வெளி வருகிறது)

அண்டஜ: incubatory (from an egg) முட்டையிலிருந்து பிறந்தவை

(பறவையின் பிறப்பு; வெளிவந்தவுடன் நடக்கவும், ஓடவும் செய்கிறது)

போதானாம்: unumbilical (without a sac covering) பிறந்தவுடன் நடத்தலும், ஓடுதலும் உடைய பை போல சுற்றப்படாது இருக்கும்.

(சிங்கம், மான் மேற்குரிய போர்வை போன்ற அமைப்பு இல்லாமல் வெளிவருகிறது,  அவையும் நடக்கவும், ஓடவும் செய்யும்.)

தீர்த்தங்கரர் பிறக்கும் போதுகூட மாம்ஸம் முதலானவை உண்டாகாது.
----------------


தேவநாரகாணாமுபபாத: - (அ2 #34) =(67)


देवनारकाणामुपपादः


Deva-narkanamupapada



தேவ, நரகியர்களுடைய பிறப்பு உபபாத பிறப்புகளாகும்.

The birth of celestial and infernal beings is by instantaneous rise in special beds.


பவணர், வியந்தரர், ஜ்யோதிஷ்கர், வைமானிகர் என்னும் தேவர்களும், நரகர்களும் தாய், தந்தை தொடர்பு இல்லாமல் பிறப்பர்.

----------

The sutras (32- 35) describe three types of birth as resulting from 1. pregnancy, 2. spontaneous emergence and 3. agglutination.

The first category is termed as Garhajanya, the second as upapatajanya and the third as Sammoorchchhim.

Those born with umbilical cords like human beings and other mammals, those born without the umbilical cord like invertebrates and those turning out of eggs like most of the birds are termed as Garbhaj; all the heavenly and infernal beings are Aupapatik and all others are Sammoorchchhim. 

The last one is an  exclusively Jain concept.  It denotes the birth, where a soul absorbs the material  particles lying on the spot and converts them into the agglutinated body.

----------- 



சேஷாணாம் ஸம்மூர்ச்சனம்  - (அ2 #35) =(68)


शेषाणां संमबर्च्छनम्


Sheshanam sammurcchhanam


சேஷாணாம் – மற்ற எல்லா உயிரினங்களும்;  ஸம்மூர்ச்சனம் - இயற்கையாக பிறப்பது

The birth of the rest of the beings is by spontaneous generation.


ஏனைய உயிர்களுக்கு அதாவது கர்ப்ப மற்றும் உபபாத பிறப்புகள் இல்லாமல் ஸம்மூர்ச்சன மாகும்.

ஜராயுஜ, அண்டஜ மற்றும் போதஜ உயிர்களின் பிறப்பிற்கு ஆதாரமாக இருப்பது கர்ப்பப்பை ஆகும்.

அதுபோல தேவ, நரகியருக்கு உபபாத பிறப்பே ஏற்படுகிறது.

ஸம்மூர்ச்சன பிறப்பு ஏனைய; பாக்கியுள்ள உயிர்களுக்கே (மட்டுமே) ஏற்படுகின்றது.

------------

இந்த ஒன்பது வகையான யோனிகளிலிருந்து வெளிவரும் பிறவி உயிர்களுக்கு எத்தனை உடல்கள் கிடைக்கின்றன என்பதை காணுவோம்.....


(சுப, அசுப நாம கரும உதயத்தினால்/ பந்தத்தை அனுபவம் செய்வதினால்)

-------------- 

ஒளதாரிக வைக்ரியிகாஹாரகதை ஜஸகார்மணானி சரீராணி - (அ2 #36) =(69)


औदारिकवैक्रियिका हारकदैजसकार्मणानि शरीराणि


Audarika-vaikriyikaharaka- taijasa-karmanani sharirani



ஒளதாரிக; வைக்ரியிகம்; ஆஹாரக; தைஜஸ; கார்மணம் என ஐந்து சரீராண(உடல்கள்) ஆகும்.

The ornamental or physical, the transformable, the projectable, the luminous (electric) and the karmic are the five types of bodies.


எவை எளிதில் அழியக்கூடியதோ அல்லது கரையக் கூடியதோ அவை உடலாகும்.

ஓளதாரிகம்: (organic) பருவுடல்; (physical) பெளதிக பருமனான உடலைக் குறிக்கும். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மரம், செடி, கொடிகளுக்கும் உள்ள உடலாகும்.
(the body of all men and animal)

வைக்ரீயிகம்: (protean) ஒன்று/பல; சிறிய/பெரிய என பலவகையான உடல்களை உருவாக்கும் ஆற்றலையுடையது. இந்த விக்ரியா சக்தி உடல் உருமாற்றத்திற்கு உள்ளதால் வைக்ரீயிக (வேறு உருவாகும் உடல்) ஆகும்.
(Fluid; the body of hellish and celestial beings, which they can change at will)

ஆஹாரக உடல்:(carrier) பருவுடல்/ பூத உடல் எனப்படுவது. ஆறாம் குணஸ்தானத்து முனிவர்களுக்கு சாஸ்திரத்தில், தர்மத்தில் சந்தேகம் ஏற்படின் அதைப் போக்கிக் கொள்ள தலையிலிருந்து ஒரு முழம் உயரம் வெண்மை நிற உருவம் புறப்பட்டு கேவலி, சுருதகேவலிகள் எங்குள்ளனரோ, அங்கு சென்று அவரது திருவடியைத் தொட்டு, தன் சந்தேகம் நீங்கிய வுடன்; மறுபடியும் அதே வுடலை வந்து சேரும்.
(Assimulative; the spiritual man like emanation from the head of a saint in doubt, etc)


தைஜஸம்: (lustrous) எது பிரகாசத்திற்கும், பொலிவுக்கும் காரணமாக உள்ளதோ அது தைஜஸ சரீரம் ஆகும். (தைஜஸ வர்க்கணைகளால் உருவாவது)
(Electric; body of mundane souls formed of fine molecules of electric  matter called taijesa vargana)


கார்மணம்: (karman) கருமங்கள்; எல்லாவித உடல்களும் உருவாவதற்கு காரணமாக இருந்தாலும் கூட,  கார்மண அணுக்களால் அமைந்திருப்பதால் கார்மண உடல் எனப்படுகிறது. எல்லா பிறவி உயிர்களுக்கும் இருக்கும்.
(Karmans: body of mundane souls, made of fine  molecules of Karmic matter called Karmana varganas)
-------
(Organic,  protean, carrier, lustrous and karman are the five types of bodies, each succeeding type is subtler than  the preceeding one.)

தொடு உணர்வினால் ஒளதாரிக உடல் மட்டுமே உணரக் கூடியதாய் உள்ளது. மற்ற உடல்கள் ஏன் அறியப்படவில்லை......

--------------------

பரம் பரம் சூக்ஷ்மம்  - (அ2 #37) =(70)


परं परं सूक्ष्मम्


 Param param sukshmam


பரம் பரம் – ஒன்றுக்கொன்று தொடர்பு முறை; சூக்ஷ்மம் - நுட்பமானது

The bodies are more and more subtle successively.


உடல் ஒன்றைக் காட்டிலும்  ஒன்று நுட்பமானது.

ஓளதாரிக உடல் பருமையாக (ஸ்தூலமாக; gross) இருக்கிறது.
அடுத்து வைக்ரியிக உடல் (வேறுருவா உடல்; transformable body) நுட்பமானது.
ஆஹாரக உடல் மேலும் நுட்பமானது (fine).
தைஜச உடல் (luminous body) அதைவிட நுட்பமாகவும்;
கார்மண உடல் (வினையுடல்) அவற்றை  எல்லாம்  விட நுட்பமாகவும் உள்ளது.

-----------
ஒளதாரிக சரிரம் நீங்கலாக மற்ற உடல்களைக் காண முடியாது.
----------
A protean body is composed of innumerably more clusters than an organic body and a carrier body of innumerably more than a protean body.
The remaining two types lustrous and karman bodies have infinely more clusters and are unobstructed.
They are associated with soul  since the time without beginning.
Every worldly soul has these two bodies.
------------

ப்ரதேசதோ ஸ்ங்க்யேய குணம் ப்ராக்தைஜஸாத்  - (அ2 #38) =(71)


प्रदेशतोऽसंख्येयगुणंप्राक् तैजसात्


Pradeshato(a)sankhyeyagunam praktaijasat



ப்ரதேசத: - பிரதேசங்களின் அபேக்ஷையில்; அஸங்க்யேய குணம் – அஸங்க்யாத மடங்கு;  ப்ராக் –  கூறப்பட்ட; தைஜஸாத் – தைஜச சரீரத்திற்கு முன்னே

Prior to the luminous body, each has innumberable times the number of space-points of the previous one.


ஒளதாரிக,  வைக்ரீயிக, ஆஹாரக உடல்களின் பிரதேசங்கள் (அஸங்கியாத, innumerable times) எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட மடங்கு ஆகும்.
-----------
பிரதேசம் -  மேலும் பிரிக்கமுடியாத பரமாணு.
அஸங்கியேய – எண்ணிக்கையில் அடங்காத மடங்கு.
-----------
வைக்ரீயக உடல் ஒளதாரிக உடலைக் காட்டிலும் எண்ணற்ற மடங்கு பிரதேசங்களை உடையது.
ஒளதாரிக உடல் ஆஹாரக உடலைக் காட்டிலும் எண்ணற்ற மடங்கு பிரதேசங்களை உடையதாய் இருக்கிறது.
-----------
அப்படியெனில் உடல்கள் ஒன்றைக் காட்டிலும் ஒன்று அளவில் பெரியதாய் இருக்க வேண்டும்.
ஆனால் அப்படியில்லை, பஞ்சுக்குவியல் மற்றும் இரும்பு உருண்டை போலவாகும்.
-------------

கடைசி இரண்டு உடல்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?......

--------------

அணந்தகுணே பரே  - (அ2 #39) =(72)


अनन्तगुणे परे


Anantagune pare



அணந்தகுணே பரே  - கணக்கற்ற மடங்கு;  

The last two have infinite times the space points of the previous one.


ஆஹாரக பிரதேசங்களைக் காட்டிலும் தைஜச உடலில் அனந்த மடங்கு பிரதேசங்கள் அதிகமாக உள்ளன.
தைஜச பிரதேசங்களைக் காட்டிலும் கார்மண உடலில் அனந்த மடங்கு பிரதேசங்கள் அதிகமாக உள்ளன.
----------
மேற்பட்ட சரீரங்களில் பரமாணுக்கள் அதிகமாக இருந்த போதிலும் அதன் அமைப்பு இரும்பின் அடர்த்தியைப் போல் நெருக்கமாய் கொண்டது.

இவை அடுத்த உடலுக்குள் செல்வதற்கு தடையேதும் இருப்பதில்லை.

---------- 

அப்ரதிகாதே  - (அ2 #40) =(73)


अप्रतीघाते


Apratighate


அப்ரதிகாதம் – இடையூறு/ தடை யில்லாத

The last two are without impediment.


தைஜச, கார்மண உடல்கள் இரண்டும் தடையில்லாதவை.

எப்படி இரும்புத்துண்டில் வெப்பம் உடபுகுகிறதோ; அது போல் தைஜச, கார்மண இரண்டு உடல்களின் வஜ்ரபடலம்,  மிகவும் கடினமான, வைரம் போன்ற பொருட்களில் ஊடுருவிச் செல்ல தடை இல்லை.

இரண்டு உடல்களுக்கு உலகத்தின் முடிவு வரை, அதாவது எல்லா இடங்களுக்கும் செல்ல தடையில்லை. ஆனால் மற்ற வைக்ரிக, ஆஹாரக உடல்களுக்கு தடைகள் உள்ளன.
------------
உயிர் மறு பிறப்புக்கு போகும் இடமெல்லாம் அவையிரண்டும் உடலோடு போகின்றன.

வீடுபேறு அடையும் வரை உயிரை விட்டு அவை விலகுவதில்லை.
--------------

இதற்குண்டான வேறு சிறப்புகளைக் காண்போம்.....



---------------------


அனாதி ஸம்பந்தே ச  - (அ2 #41) =(74)


अनादिसंबन्धे च


Anadisambandhe cha


(தைஜச சரீரமும், கார்மண சரீரமும் உயிருடன்) தொடக்கமற்ற காலத்திலிருந்தே தொடர்பு கொண்டுள்ளன.

The last two are of beginning-less association with the soul.


தைஜச, கார்மண சரீரங்கள் காரிய காரண பாவத்தின்(bhava) வழிவழியான, பரம்பரை  நோக்கில் அனாதியாகவும் (beginingless);  சம்பந்த நோக்கில் அதாவது குறிப்பிட்ட நய நோக்கில் விதையும், மரமும் போல அரம்பமுடையதாகவும் (with a beginning) இருக்கிறது.

இவை புத்கல(matter) திரவியம் என்பதால் இவற்றில் பழைய கார்மணம் கழிதலும் புதியன புகுதலும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த நோக்கில் ஆரம்பமுடையதாகவும் உள்ளது.
-------------   
The gross, the transformable and the translocation bodies are associated with the soul at some time or other.

But the luminous and the karmic bodies are not so.

On the other hand, these two are associated with the soul till the attainment of liberation.
---------------
தைஜச, கார்மண உடல்கள் சிலருக்கு அல்லது அனைவருக்கும் உள்ளதா என்பதை அடுத்து காண்போம்....

---------------------


ஸ்ர்வஸ்ய - (அ2 #42) =(75)


सर्वस्य


 Sarvasya



ஸ்ர்வ – எதனையும் விட்டு விடாமல் அனைத்தையும்

The last two are associated with all transmigratory souls.


தைஜச, கார்மண உடல்கள் நால்வகை கதியில் உழலும் எல்லா பிறவி உயிர்களிடமும் உள்ளன.
---------
பொதுவாக குறிப்பிடுவதால் ஒளதாரிகம் முதலிய ஐந்து உடல்களும் ஒரே சமயத்தில் பிறவி உயிர்களிடம் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. ஆனால் அக்கருத்தை மறுக்கும் அடுத்த சூத்திரத்தைக் காண்போம்....


---------------------



ததாதீனி பாஜ்யானி யுகபதேகஸ் மின்னா சதுர்ப்ய: - (அ2 #43) =(76)


तदादीनि भाज्यानियुगपदेकस्मिन्ना चतुर्भ्यः


Tadadini bhajyani yugapadeka-sminna-chaturbhyah



யுகபத் – ஒரே நேரத்தில்; ஏகஸ்ய – ஒரு ஜீவனுக்கு; ததாதீனி – அந்த (தைஜச, கார்மண) சரீரங்கள் முதலாக; ஆ சதுர்ப்ய – நான்கு சரீரங்கள் வரை; பாஜ்பானி – அமையலாம்.

Commencing with these (luminous and karmic), up to four bodies can be had simultaneously by a single soul since a soul can have at a time either physical or transformable body.



விக்ரஹ கதியில் ஒரு பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுக்கும் வரை தைஜச, கார்மண உடல்கள் மட்டும் இருக்கும்.

ஒரே நேரத்தில் ஒரு உயிருக்கு அந்த தைஜச, கார்மண சரீரங்கள் முதலாக நான்கு சரீரங்கள் வரை அமையலாம்.

ஒரு உயிரடத்தில் ஒன்றாகவே முன்னர் கூறப்பட்ட இரண்டு சரீரங்களிலிருந்து நான்கு சரீரங்கள் வரை இருக்கும்.

மூன்று உடல்கள் இருக்கும் போது ஒளதாரிக, தைஜச, கார்மண (மனிதர், விலங்கு கதியில்) அல்லது வைக்ரியக, தைஜச, கார்மண கூட்டாக (தேவ, நரக கதியில்) இருக்கும்.
நான்கு உடல்கள் என்றால் ஒளதாரிக, ஆஹாரக, தைஜச, கார்மண என இருக்கும். (முனிவர்களுக்கு சில சமயம் அமையும்.)
-------------
மேலும் சிறப்பாக அறிய வேண்டுமாயின்.....


------------------


  லப்திப்ரத்ய்யஞ் ச  - (அ2 #47) =(80)


  लब्धिप्रत्ययं च


   Labdhipratyayam cha



(வைக்ரீயிக உடல் தவத்தின் பலனால்) இயற்கையாகவும் அமைகிறது

Attainment through special penance is also the cause of the origin of transformable body.



லப்தி: தவத்தின் மகிமையால் ஏற்படும்  சிறப்பான ஆற்றலுக்கு லப்தி எனப் பெயர்.

இந்த சிறப்பான ஆற்றலால் எந்த உடல் தோன்றுகிறதோ அதனை லப்திப்ரயயம் என கூறப்படுகிறது.

வைக்ரீயிக சரீரத்தில் கூட இந்த லப்திப்ரயயம் ஏற்படுகிறது.
----------------

வேறு உடல்களுக்கு கூட ஏற்படுகிறதா.....

-----------------


தைஜஸமபி  - (அ2 #48) =(81)


तैजसमपि


Thaijasamapi



தைஜச சரீரம் (luminous body) கூட ருத்தி எனப்படும் சிறப்பான ஆற்றலை அடைய முடிகிறது. அதாவது லப்திப்ரத்யயம் (attainment of super natural powers) கிடைகிறது.

 The luminous body is also caused by attainment.



அதில் இருவகையுள்ளது.

சுபதைஜசம்: உதவி கரமானது. தேசத்தில் பஞ்சம், தொற்று நோய்கள் முதலியன ஏற்பட்ட காலத்தில் முனிவர்கள் தங்கள் சாரித்திரத்தின் மகிமையால் அவர்களது வலது தோளினின்று ஒரு தைஜச சரீரம் கிளம்பிச் சென்று அத்துன்பத்தினை துடைத்த பின் திரும்பி வந்து தன்னிடத்தை அடையும்.

அசுபதைஜசம்: துன்பம் இழைப்பது.  இந்த தைஜஸ சரீரம் முனிவரின் கோபத்தின் காரணமாக அவரது  இடது தோளிலிருந்து புறப்பட்டுச் சென்று கோபத்திற்கு ஆளானவனை அழித்து விட்டு, திரும்ப  அம்முனிவரிடமே வந்து அவரையும் அழித்து விடும். {(உ-ம்) தீபாயன முனிவர் கதையைக் கூறலாம்.}
-------------

ஆஹாரக  உடல் இலக்கண பற்றிக் காண்போம்.....

------------------ 

  சுபம்விசுத்தமவ்யாகாதி சாஹாரகம் ப்ரமத்த ஸம்யதஸ்யைவ - (அ2 #49) =(82)


  शुभं विशुद्धमव्याघाति चाहारकं प्रमत्तसंयतस्यैव



  Shubham vishuddhamavyaghati chaharkam pramatta-sanyatasyaiva




ஆஹாரகம் – ஆஹாரக சரீரம்; சுபம் – நல்ல சுகம்; விசுத்தம் – தூய்மையாக இருக்கும்; அவ்யாகாதி – தடை இராது, பாதகம் இராது; ப்ரமத்த ஸம்யத தஸ்யைவ – பிரமத்த குணஸ்தானம் (ஆறாவது குணஸ்தான முனிவரிடம் (உற்பத்தி ஆகும்.)


The projectable body, which is auspicious and pure and without impediment, originates in the ascetic of the sixth stage only for clearing any doubts.


  
ஆஹாரக உடல் சுபச் செயல்களைச் செய்யக் கூடியதும், தூய்மையானதாக அதாவது தூய்மையான நற்காரியங்களையே செய்வதாகவும்;

பிற உயிர்களுக்கு தீங்கு இழைக்காத்தாகவும் மற்றும் பிற பொருள்களால் இடையூறு ஏற்படாததாகவும் இருக்கிறது.

இவ்வுடல் ஆறாம் குணஸ்தானத்தில் உள்ள முனிவர்களுக்கே தோன்றுகிறது.

விசுத்தம் – சுத்தமானது; புண்ணியங்களின்  வரவு
அவ்யாகாதி – அதன் வழியில் யாரும் குறுக்கிட முடியாது. அதுவும் பிற பொருட்கள் வழியில் குறுக்கிட்டு எந்த துன்பமும் ஏற்படாது.
--------------
ஆஹாரக சரீரம் என்பது ஆறாம் குண்ஸ்தானத்திலிருக்கும் ஒரு முனிவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவர் தலையிலிருந்து ஒளி போன்ற ஒரு வடிவம் புறப்பட்டு ஆகாயத்தில் ஊடுருவி ஒரு கேவலி/ சுருதகேவலியின் பாதங்களையடைந்து சந்தேகம் நீங்கப்பெற்று திரும்பி முனிவரின் தலையை வந்தடையும்.

(like Sruthakevali Badrabahu  and the preceptor of Chandragupta mourya)

இவையனைத்தும்  ஒரு அந்தர் முகூர்த்த நேரத்தில் முடிந்து  விடும்.
-------------
இதன் சிறப்பு அம்சங்களை அடுத்து காண்போம்...

------------ 


    நாரகஸம்மூர்ச்சினோ நபும்ஸகானி - (அ2 #50) =(83)


     नारक-संमूर्च्छिनो नपुंसकानि


    Naraka-sammurchchhino napunsakani



நாரக – நாரக ஜீவன்கள்; ஸம்மூர்ச்சின – ஆண்-பெண் உறவின்றி; நபும்ஸக – அலித்தன்மையுடைய

The infernal beings and the spontaneously generated are of the neuter sex.


நாரக உயிர்களும், ஸம்மூர்ச்சன உயிர்களும் அலித்தன்மை உடையனவாகும்.


நரக உலகில் பிறப்பவர்; நாரகர் கண்டிப்பாக அலிகளாக இருப்பர். (பின்னர் காணலாம்)

ஸம்மூர்ச்சன பிறப்பில் (spontaneously generated) அதாவது ஆண், பெண் உறவின்றி தோன்றுவனவும் நபும்ஸக உயிர்களாக (neuter sex) இருக்கும்.

ஸம்முர்ச்சன உயிர்கள் - இரண்டு  லிருந்து நான்கு பொறியுள்ள ஜீவன்கள் விகலேந்திரியங்களாகும்.

நோக கஷாய பிரிவில் நபும்ஸக வேதத்தின் உதயம் மற்றும் அசுப நாம கர்மத்தின் உதயமும் கொண்ட உயிர்கள் அலிகளாக பிறக்கின்றனர்.
------------

எங்கு நபும்ஸக வேதம் இல்லை என்பதை அடுத்து காண்போம்....

---------------------

ந தேவா: - (அ2 #51) =(84)


न देवाः


 Na devah


தேவர்களுக்கு நபும்ஸக வேதம் (neuter sex) இல்லை.

The celestial beings are not of neuter sex.


தேவர்கள் சுபகதி நாம கரும உதயத்தால் ஆண்-பெண் தொடர்பினால் ஏற்படும் இன்பம் அரிதாகும்.

(இந்த அபூர்வமான அரிய இன்பத்தை தேவர்கள் அனுபவம் செய்கின்றனர்.)

ஆகையினால் அவர்களுக்கு அலித்தன்மை வேதமில்லை (உணர்வு, அனுபவம்)

----------
மற்ற உயிர்களுக்கு எத்தனை லிங்கங்கள் (sign) என காண்போம்....


-------------


   சேஷாஸ்திரிவேதா: - (அ2 #52) =(85)


   शेषस्त्रवेदाः


   Sheshastrivedah



சேஷ – மீதி (மனிதர், விலங்கு); த்ரிவேதா – மூன்று வேதங்கள்.

The rest of transmigrate souls can have any of the three sexes.



எது உணரப்படுகிறதோ அது வேதம், லிங்கம் எனப்படுகிறது.

மீதமுள்ள மனித, விலங்கு உயிர்கள் (கர்ப்பத்தில் தோன்றுபவை) மூன்று வித பாலுணர்வு கொண்டவை.
ஆண் (masculine) , பெண் (feminine) , அலி (common/neuter) என்ற லிங்கம் உடையவை யாகும்.

லிங்கம் (வேதம்) இரண்டு  வகை:

திரவிய லிங்கம்: (physical sign) எந்த யோனி வெளிப்படையான லிங்கம் (அதாவது ஆண் உறுப்பு) நாம கருமத்தின் உதயத்தால் உருவாக்கப் பட்டிருக்கிறதோ அது திரவிய லிங்கம் ஆகும். (அதே போல் பெண் உறுப்பும் ஆகும்)

பாவ லிங்கம்: (psychical sign) நோகஷாயத்தினால் ஏற்படுவது, அதாவது பாலுணர்வைத் தூண்டும் காமம் பற்றிய எண்ண அலைகள், பாவ லிங்கம் ஆகும்.

மேற்கூறிய இரண்டு வகையான தகுதிகள் இல்லாமல் இருக்கிறரோ அவர்கள் அலி (நபும்ஸகம்) ஆவார்.
-----------
புருஷ வேதத்தின் உதயத்தால் எவர் குழந்தைகளைப் பிறக்க வைக்கிறாரோ அவர் ஆணாவார்.

ஸ்திரீ வேதத்தின் உதயத்தால் எவர் கர்ப்பம் தரிக்கிறாரோ அவர் பெண் ஆவார்.

நபும்ஸக  வேதத்தின் உதயத்தால் இரண்டும் இல்லாமல் இருப்பவர்கள் அலிகளாவர்.
------------
உடலை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள் வாழ்நாள் கழிந்த  பிறகோ அல்லது அதற்கு முன்னரோ மற்ற உடலை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா என்பதை.....


-------------

    ஒளபபாதிக சரமோத்தம தேஹா ஸங்க்யேய வர்ஷாயுஷோன பவர்த்யாயுஷ: - (அ2 #53) =(86)


   औपपादिक चरमोत्तमदेहाऽसंख्येय वर्षायुषोनवर्त्यायुषः


 Aupapadika-charamottamade-hasankhyeyavarshayusho(a)na-pavartyayushah




ஒளபபாதிக – உபபாத ஜன்மம் உடையவர்; சரமோத்தம தேஹ – அதே பவத்தில் மோக்ஷம் அடைபவர்; அஸங்க்யாத வர்ஷாயுஷ – போக பூமியில் பிறந்தவர்கள்; அனபவர்த்யாயுஷ: - அகால மரணம் இல்லை.

The lifetime of living beings born in special beds, those with absolute superior bodies and those with innumberable years, cannot be cut short. 



உபபாத பிறவி எடுத்த தேவர், நரகர் முதலானவர்களுக்கும்;

சரம தேஹம், அதாவது ஆன்மாவுக்கு இனி பிறவியில்லை என்ற கடைசி பிறவி எடுத்துள்ள உயர்ந்த வகை ஒளதாரிக உடலுடன் கூடிய உயிர்களுக்கும்;
(சரம- ultimate, final, that which comes at the end, அத்துடன் முடிவு என்பதாகும்.)

போகபூமியில் பிறந்த மனிதர், விலங்கு இவற்றிற்கு ஆயுள் பூரணமானது.
(பல்யம் முதலானவற்றை ஆயுளாக கொண்டவர்கள், உத்தர குரு முதலான இடங்களில் பிறந்தவைகள்)

அவர்களுடைய ஆயுள் பிறர் காரணமாகவோ, தம் காரணமாகவோ பாதிக்காது. அதாவது அகால மரணம் இல்லை. (அபவர்த்ய இல்லாமல் அனபவர்த்ய ஆயுள்)
------------

இரண்டாம் அதிகாரம் முற்றும்.

------------------------------------------------ 




மங்களாஷ்டகம்:


கோடி சதம் த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
 அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம் ஸவ்வம்
பணமாமி பக்தி ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா


அக்ஷரமாத்ரபத ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே


தஸாத்த்யாயே பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:


ததத்வார்த்த ஸுத்ர கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்


ஜம் ஸக்கயி தம் கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ பாவயி அஜராமரம் ட்டாணம்


தவயரணம் வயதரணம் ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்

அந்தே ஸமாஹிமரணம் சஉவிஹ துக்கம் ணிவாரேஇ




************************** 


No comments:

Post a Comment