Acharya pujyapadha - ஆச்சார்ய பூஜ்யபாதர்ஆச்சார்ய பூஜ்யபாதர்


திகம்பரத்துறவிகளில் முக்கியமானவர்களில் ஒருவரான இவர் வாழ்ந்த காலம், ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (between 464 - 524 CE. மற்றும் 510 CE to 600 CE)


திகம்பர துறவேற்பதற்கு முன்னர் தேவநந்தி என்றழைக்கப்பட்டுள்ளார்.  சமண நந்தி சங்கத்தின்  பத்தாவது குருவாக விளங்கியுள்ளார். அதே சங்கத்தில் இவருக்கு முன்பு குந்தகுந்தரும் இணைந்து தீக்ஷ்சை ஏற்று திகம்பர துறவியாக வாழ்ந்தவர்.


கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த பிராமண தம்பதியரான மாதவ பட்டர் மற்றும் ஸ்ரீதேவி இருவருக்கும் மகனாக பிறந்துள்ளார். அவர் குடும்பம் சமண வழியை பின்பற்றியதால் அதன்மீது  ஆழ்ந்தபற்று கொண்டு அவ்வழியில் நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆச்சார்ய பூஜ்யபாதர் கங்க பேரரசின் மன்னனான துர்வினிதன் அரசபையில் ராஜகுருவாக இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.


சமண ஆச்சார்ய மரபில் முன்னோடிகளாக திகழ்ந்த ஸ்ரீகுந்தகுந்தர், ஸ்ரீசமந்தபத்ரர் போன்றோரின் வரிசையில் இவரும்  உயர்ந்த துறவியராக கருதப்படுகிறார். ஜினர் வழியில் தம் வாழ்வொழுக்கம் இருப்பினும், புலமைமிகுதியால் சமஸ்கிரத உரைநடை மற்றும் இலக்கண  நூல்கள், ஆயுர்வேத மருத்துவ நூல் மற்றும் உலக சம்பந்தமான நூல்களையும் தந்துள்ளார். அதனால் பலதுறையில்  பாண்டித்யம் பெற்ற சான்றோராக விளங்கியுள்ளார்.இவர் இயற்றிய நூல்கள்:


இஷ்டோபதேசம் – 51 செய்யுள்களைக் கொண்ட தெய்வீகபிரசங்கமாகும்.


சர்வார்த்த சித்தி – முக்தியை பெறும் வழிகாட்டியான தத்வார்த்த சூத்திரத்தின் விளங்கங்களை வழங்கும் நூல்


ஜைநேந்திர வியாகரனா – சமஸ்கிரத இலக்கண நூல். இதுவே முதல் நூலாக கருதப்படுகிறது.


சமாதிதந்ரா – 106 சுலோகங்களைக் கொண்ட யோக நூல். உடல் மற்றும் ஆன்மா வின் வேறுபாட்டினை சுட்டி முக்திக்கான வழிகாட்டியாகும்


தசபக்தியாதிசங்கிரஹா – மோட்ச மார்க்கம் வேண்டி வழிபாட்டுத் தொகுப்புகள்


சாந்தியஷ்டகா – ஸ்ரீ சாந்திநாதர் துதி


சப்தவட்ரான்யசா – சமஸ்கிர உரைநடை-இலக்கண நூல்


ஜைனாபிஷேகா – ஜினபூஜை, அபிஷேக சடங்குமுறைகள்


சந்தசாஸ்த்ரா   -  சம்ஸ்கிர மொழி யாப்பிலக்கணம்


--------------------------------


Ācārya Pūjyapāda

who lived in the 5th century of the Common Era was a renowned grammarian and saint belonging to the Digambara tradition of Jains. Before initiation as a Jain ascetic, he was known as Devanandi.

Since it was believed that he was worshiped by demigods on account of his vast scholarship and deep piety, he was named Pūjyapāda. He was heavily influenced by the writings of his predecessors like Ācārya Kundakunda and Ācārya Samantabhadra. He is rated as being the greatest of the early masters of Jain literature.

He was prominent preceptor, with impeccable pontifical pedigree and spiritual lineage. "He was a great yogi, sublime mystic, brilliant poet, noted scholar, eminent author and master of several branches of learning.

He wrote in Sanskrit, in prose as well as verse form.

He was pontiff of the Nandi sangha, which was a part of the lineage of Ācārya Kundakunda. He was the tenth guru of the pontifical lineage of the Nandi Sangha. He was born in a Brahmin family of Karnataka. His parents were Madhava Bhatta and Shridevi.

It is likely that he was the first Jain saint to write not only on religion but also on secular subjects, such as ayurveda and Sanskrit grammar. When one looks at the earlier writers in the Jain tradition, notably Kundakunda and Samantabhadra, one does not find any secular writings. They wrote beautifully on religion and the means to attain liberation. Whereas Ācārya Pūjyapāda, besides being a profound scholar of the Jain religion and a mendicant walking in the footsteps of the Jinas, was a grammarian, master of Sanskrit poetics and of ayurveda. Ācārya Pūjyapāda was said to be the guru of King Durvinita of the Ganga dynasty.[5] He is reliably dated as having lived between 464 - 524 CE.


Ācārya Pūjyapāda's works:

Jainendra Vyākaraa (Jainendra Grammar) - Jainendra Vyākaraa deals with Sanskrit grammar and is considered as one of the finest early works on Sanskrit grammar.

Sarvārthasiddhi (Attainment of Higher Goals) - Sarvārthasiddhi is a commentary on the Tattvārthasūtra, marked by precision and conciseness. It serves as the definitive mula patha for all Digambara works on the Tattvārthasūtra. Sarvārthasiddhi is the earliest surviving commentary on the Tattvārthasūtra, since an even earlier commentary, the Gandhahastī Mahābhāya of Ācārya Samantabhadra, is no longer available. Not even the famed Jain manuscript libraries, known as Grantha Bhandaras, have a copy of the Gandhahastī Mahābhāya.
Samādhitantra (Method of Self-Contemplation) – It is a treatise on yoga and adhyatma, outlining the path to liberation through differentiating the soul from the body. This is a short work, succinctly written, with 106 verses.

Iṣṭopadeśa (Divine Sermons) – It is a concise work of 51 verses dealing with the real and ethical aspects of life using examples from our day to day lives. Ācārya Pūjyapāda adumbrates the spiritual requirements that would transform our mundane lives into the sublime. Pūjyapāda differentiates between the important and the trivial, the essential and the non-essential and explains how the soul is different from its mortal coil. He goes a step further and explains that without realizing the essential difference between the eternal, i.e. the soul and the mutable, i.e. the body, all the devotion and all the meritorious deeds one performs shall not lead to liberation.

Daśabhaktyādisangraha (Collection of Ten Adorations) - This is a collection of 10 adorations of the Arihantas and the Siddhas, meant to be performed by Jain ascetics. It also serves to record traditions, especially concerning the life of Mahāvīra.

Śāntyāṣṭaka (Hymn in Praise of Śāntinātha) - A poem of 8 verses in adoration of Bhagavān Śāntinātha, the 16th Tīrthankara.

Kalyāakāraka (Causer of Benefit) - A valuable work on āyurveda.

Digambara Jain monks hold that one must master three texts in order to have a fruitful ascetic career:

i) Samādhitantra to cleanse the soul

ii) Jainendra Vyākaraa to cleanse one's language

iii) Kalyāakāraka to cleanse one's body and keep it free of disease and the debilitating effects of aging.

Śabdāvatāranyāsa (Arrangement of Words and their Forms) - A work on Sanskrit grammar, said to be a gloss on Pāinī
Jainābhieka (Jain Anointment) - A work on Jain rituals

Chandaśāstra (Treatise on Prosody) - A work on Sanskrit prosody

No comments:

Post a Comment