Chandkaushik
This is a
story about Bhagawan Mahavir when he was a monk. He used to fast, meditate, and
perform penance. He was traveling barefoot from place to place and village to
village. Once Mahavir decided to go to the village of Vachala. On the way,
there he would have to go through a forest where there lived a poisonous cobra
snake named Chandkaushik. It was said that Chandkaushik could kill a person or
animal just by casting its evil, angry glance at them. All the people from the
villages near that forest lived in absolute terror.
When the
villagers learned about Mahavir's intention to pass through the forest, they
begged him to take another route. Mahavir had no fear. He practiced supreme
non-violence. He had no hatred towards anyone, and considered fear and hatred
as violence to the self. He was at peace with himself and all other living
beings. There was a glow of serenity and compassion on the Bhagawan's face. He
convinced the people that everything would be all right, and he took the
dangerous path. After a while, he noticed the beautiful green land fading out
and a deserted, bacon land came. Trees and plants were dead, so he thought this
must be the land that the villagers were talking about where Chandkaushik
lived. So Mahavir stopped there to meditate. Peace, tranquillity, and
compassion for the well being of each and every living being flowed from
Mahavir's heart.
Chandkaushik
sensed that someone had come near his land, so he came out of his abode. To his
surprise, he saw a man standing there. He became furious thinking, "How
dare he came this close to my land?" Chandkaushik started hissing to
threaten Mahavir. He did not understand Mahavir's tranquillity. He became angry
and came closer to the Lord and swayed his head, ready to strike. He saw no
sign that this man would run away or even felt threatened. This made
Chandkaushik angrier and he blew poisonous venom towards Mahavir three times.
The venom neither affected Mahavir nor disturbed his meditation. Chandkaushik
was not ready for this. Now, he became more irritated and bit Mahavir's toe.
When he looked at the man again, he was flabbergasted that not only had nothing
happened to him, but instead of blood, milk flowed from his toe.
Mahavir
opened his eyes. He was calm and there was no fear or anger on his face. He looked
at Chandkaushik in its eyes and told it, "Wake up! wake up Chandkaushik!!
Realize what you are doing!" There was love and affection in those words.
Chandkaushik calmed down and felt as if he had seen this kind of a person
before. He suddenly remembered his two previous lives. Chandakaushik then
realized the truth of life, and what the anger and ego of his last two lives
had done to him. He bent his head peacefully to the ground. Mahavir left to go
on his way.
Chandkaushik
peacefully retreated back to its hole with its head inside, while most of his
body was outside. After a while when the people came to know that Chandkaushik
was not harmful anymore, they came to see it out of curiosity. They saw it
lying quietly. Some started worshipping, pouring milk on it, and offered food.
While some were still mad because their loved ones had died due to it. They
threw stones at it and hit it with wooden sticks. Blood, milk, and food
attracted ants. Chandkaushik bared down biting, beating, and stayed calm in peace
without any anger. This self-restraint and control on its feelings destroyed
many of its bad karmas. Therefore, at the end of its life, it went to heaven.
Peace and
harmony in the society come from the feeling of love and equality of all living
beings. This is Lord Mahavir’s concept
of non-violence.
--------------------
சந்தகெளசிகன்(Chandkaushik)
பகவான் மஹாவீரர்
துறவறம் ஏற்றபின் உபவாசமும், தினத் தியானமுமாக
தவநெறியில் ஒழுகி வந்தார். கிராமம் கிராமமாக பாதயாத்திரை சென்று பிக்ஷை ஏற்று
நன்னெறிகளை உபதேசித்து வாழ்ந்து வந்தார். அவ்வாறு இருந்த காலத்தில் ஒரு நாள் வக்கலா(Vachala)
என்ற கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு அடர்ந்த காட்டை கடக்க வேண்டியதாயிற்று.
கானகத்திற்கருகே
உள்ள மக்கள் “இக்காட்டுக்குள் மிகப்பெரிய (சந்தகெளசிக்
எனும்) நாகப்பாம்பு ஒன்று வாழ்ந்து வருகிறது. மிகவும் கொடூரமானது. கொடிய விஷத்துடன் உள்ள அது ஒரு மனிதனையோ,
விலங்கையோ கோபத்துடன் பார்த்தாலும், புஸ் எனும் பலத்த மூச்சிரைக் காற்றை உமிழ்ந்தாலும்
அவை இறந்து விடும். அவ்வழியே செல்வதை தவிர்த்து விடுங்கள் எனக் கூறினர். மேலும் நாங்கள்
மிகவும் அச்சத்துடன் தான் தினமும் வாழ்ந்து
வருகிறோம். அதனால் மாற்று வழியில் செல்லுங்கள்” என்றனர்.
மஹாவீரரோ அஞ்சா
நெஞ்சம் கொண்டவர். எந்த ஒரு ஜீவனையும் துன்புறுத்தா அஹிம்சை விரதத்தை ஏற்றவர். பயமும், வெறுப்புமே வன்முறையை தூண்டும்
என்பதை நன்குணர்ந்தவர். அமைதியும், கருணையும் ஒளிரும் முகத்தினையுடைய அவர், அவர்களிடம்
“இக்கானகத்தின் வழியே செல்வதால் எனக்கு
எந்த துன்பமும் நேராது, கவலை கொள்ள வேண்டாம்” எனக் கூறி பயணத்தை தொடர்ந்தார்.
கானகத்தில் சிறிது
தூரம் அவர் சென்றவுடன் பச்சைபசேலென்றிருந்த தாவரங்கள் விஷத்தன்மையால் கருகி பாலையைப்
போல காட்சியளித்தன. அவ்விடமே அக் கிராமத்தினர்
கூறிய சந்தகெளசிகன் எனும் கொடிய நாகம் வசிக்கும் பகுதி என்பதை யுணர்ந்தார். அங்கேயே
நின்று தியானத்தில் ஆழ்ந்தார். அவ்வமயம் அமைதி, இரக்கம், கருணையுமே அவர் இதயத்தில்
நிறைந்திருந்தது.
(சந்த்கெளசிக)
நாகம் அதிர்வை உணர்ந்து தன் இருப்பிடத்தை யாரோ நுழைவதாக அறிந்தது. துணிந்து அங்கு வந்த
மனிதனைக் கண்டு வியந்து, சினத்துடன் நோக்கியது. என்ன தைரியம் எனக்கருகில் ஒரு மனிதனால்
வரமுடிந்ததா! என சீற்றத்துடன் சீறிப்பாய்ந்து அவரை நெருங்கியது.
மஹாவீரரின் கருணையுள்ளத்தை
அறியா அந்நாகம் தன்னை கண்டதும் பயந்து ஓடாமல் நிற்பதைக் கண்டு வெகுண்டு அவர் மீது தன்
விஷத்தை பீச்சி அடித்தது. அவரோ அதில் நிலைகுலையாமல், கண் விழித்தும் பாராமல் அசையாது நிற்பதைக் கண்டதும்
கொடுமையாக தாக்க முற்பட்டு, அவர் காலில் மூன்று
முறை ஆழமாய் கொத்தியது (கடித்தது). தலையை ஆட்டி சீறி அச்சுறுத்தியும், கடித்த பின்னரும்,
அவர் சிறிதும் அசையாமல் நிற்பதையும், கடித்த இடத்தில் செங்குருதியின்றி வெள்ளை நிற
பாலே வெளியேறுவதைக் கண்டு திகைத்து நின்றது. தனக்கெதிரே யாருமே இவ்வாறு இருந்ததில்லையே
என குழம்பியது.
தியானத்திலிருந்து
கண் விழித்தார். பயமோ, சினமோ கண்டறியா பகவான், அந்நாகத்தை அமைதியுடன் கண்ணுற்றார்.
“சந்தகெளசிகா விழித்துக்கொள், நீ எவ்வழியில் பயணிக்கிறாய் என்பதை விழிப்புணர்வுடன் உணர்ந்து கொள்” என அன்புடன் அந்நிலையிலும்
கனிவாக பகன்றார். விரித்த படத்தை சுருக்கி, இது போன்ற மனிதரை இதுவரை கண்டதில்லை என
நெகிழ்ந்தது அக்கொடூர நாகம்.
அடுத்த கணமே
தன் முற்பிறப்புகள் அதன் நினைவில் தோன்றின. கடந்த கால வாழ்வின் உண்மையை உணர்ந்தான்
கெளசிகன். முற்பிறப்பில் தன் ஆணவத்தாலும், சினத்தாலும் என்ன நேர்ந்தன என்பது புரிந்ததும்;
தலை குனிந்து உடற்சுருங்கி மஹாவீரரை வணங்கினான் சந்த்கெளசிகன். அவரோ தன் பயணத்தை தொடர்ந்து
கொண்டிருந்தார்.
அந்நிகழ்விற்கு
பின் கெளசிகன் யாருக்கும் எத்தீங்கும் விளைவிப்பதில்லை என முடிவெடுத்தான். சினமும்
சீற்றமுமின்றி சாதுவாய் தன் புற்றில் தலையை மட்டும் நுழைத்து வாழ்ந்து வந்தான். அக்காட்டின்
வழியே செல்லும் கிராமத்தினர், அதனிடம் ஏற்பட்டுள்ள
மாற்றத்தினைக் கண்டு வியந்தனர். இரை தேடச் செல்லாமல் இருப்பதை கண்டு அதனை வணங்கியும்,
பால் ஊற்றியும், உணவளித்தும் வந்தனர். ஆனால்
இந்நாகத்தின் கொடுமையால் குழந்தைகளை, பெரியோர்களை இழந்தவர்கள் அதன் சாத்வகுணத்தை
வாய்ப்பாய் கருதி கல் எறிந்து, கழியால் அடித்து துன்புறுத்தி வஞ்சத்தை தீர்த்துக் கொண்டனர்.
நல் உறுதியுடன்
நற்குணங்களுடன் வாழ்ந்தமையால், பூர்வ ஜன்ம வினைகளை களைந்து, ஓர் நாள் இறந்தது. மஹாவீரரின்
அருளாசியினால் விழிப்புணர்வு பெற்று, அஹிம்சை
விரதம் ஏற்று புண்ணியம் ஈட்டியதின் பலனாக அமரருலகத்தில்
பிறந்து பல காலம் இன்பம் துய்த்தான் அந்நாகமான
சந்தகெளசிகன்.
அன்பும், அனைத்துயிரையும்
சமமாக பாவிப்பதுமே இந்த சமூகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தினையும் தரமுடியும். அதுவே
பகவான் மஹாவீரரின் அஹிம்சைக் கொள்கையாகும்.
No comments:
Post a Comment