Mukkudai - Triple Umbrella - முக்குடை

Triple Umbrella  -   முக்குடை












முயல்கொண்ட கறை துடைத்த முத்தணிந்த
மும்மணி முக்குடையாய்

#திருக்கலம்பகம்    
                  
மதிமூன்றில் குடை மூன்றும் உடன் நிழற்ற

#திருக்கலம்பகம்                       

முக்குடையின் கீழ் அமர்ந்த முதல்வன் நீயே

#நாககுமார காவியம்                      
 

திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடை

#சிலப்பதிகாரம்                       

இலங்கொளி முக்குடை எந்திரத்து இயங்க

#பெருங்கதை 
                      

கதிர்மா மதிபோல் தண்ணிய வான்குடை மூன்றுடையான தாமரையே...

#திருநூற்றந்தாதி                       


முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை
அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே

#நன்னூல்


போன்ற தமிழ் நூல்களில்  குறிப்பிடப்பட்டிருக்கும் முக்குடையின் விளக்கம்.



தீர்த்தங்கரர்களுக்கு அசோகமரம், தேவமலர்மாரி, திவ்யத்தொனி, சாமரம், சிம்மாசனம், ஒளி மண்டலம், தேவதுந்துபி, முக்குடையென்ற எண் வகைச் சிறப்புகளில் குடையும் ஒன்றாகும். இக்குடை ஒன்றின்மீது ஒன்றாக மூன்று குடைகளைப் பொருத்தி அமைக்கப்பட்டு, முக்குடை எனப்படும்.


மூன்று உலகங்களுக்கும் உரியவரான அருகக்கடவுட்கு உரியதும், சந்திராதித்யம், நித்திய வினோதம், சகலபாசனம் என மூவடுக்குள்ளதுமான குடை 



முக்குடைகளில் முதல் குடை

சந்திராதித்யம் -  முழுமதி சந்திரன் தோன்றியவுடன் உலகிலுள்ள உயிரினங்கள் அதன் குளிர்ச்சியினால்  மூவுலகிலும் வாழும்  உயிர்கள் அனைத்தும் இன்பம் பெறுவர்.   அது போல் அருகர் தோன்றியவுடன் மூலகிலும் உள்ள அனைத்து உயிர்களும் இன்பம் எய்துவர்.

இரண்டாவது தட்டு

நித்ய விநோதம்: மத்திமலோகமாகிய நிலவுலகில்  வாழும் மக்கள் தான் தவம் செய்து முக்தி அடையும் வாய்ப்பினர். முக்தி அடைந்த ஆன்மாங்கள் அழிவின்றி நித்யானந்த மயமாக ஆத்ம இன்பத்தில் தோய்ந்து இருப்பர். அருகனது அருளால்  நடுவுலக மக்களின் இந்த இன்பத்தை நித்ய விநோதம்  குறிக்கிறது.

மூன்றாவது குடை:

சகல பாசனம்:  கீழுலகில் உள்ள ஏழு நரகங்களில் உள்ள கணக்கற்ற உயிர்கள் உள்ளன. இவற்றில் மேல் தளங்களில் உள்ள உயிர்கள்  துன்பத்திலிருந்து விடுதலை  பெற்று அருகனது அருள் குளுமை நல்கும் மூன்றாம் குடை சகல பாசனம்.




இதுவே முக்குடைச்சிறப்பு


முற்கால புடைப்புச்  சிற்பங்கள், மற்றும் தனி சிலைகளில்,  பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சுகாசனம், கட்காசனம் போன்ற யோக நிலையில் உருவாக்கப்பட்ட சிற்பங்களில் முக்குடை இருப்பின் அது சமண தீர்த்தங்கரராகக் கொள்ளவேண்டும். மேலும் நாகங்கள் குடை பிடிக்க குடைபோன்று இருப்பின் ஸ்ரீ பார்ஸ்வஜினராக அடையாளமாக கொள்ளப்படும்.


No comments:

Post a Comment