Samyaktva - சம்யக்த்வம்








சம்யக்த்வம்


சம்யக்த்வம் (நற்குணங்கள், நேர்மையான பண்பு, நீதிவழி) ஒன்று தான் சுயத்தியான வழிமுறையாகும். சம்யக்த்வ குணமே தியானத்தினால் கிடைக்கும் ஆன்ம விழிப்புணர்வை சுயம்புவாக தருகிறது என்று *சிரமண பகவான் மஹாவீரர் கூறுகிறார்.* எவரிடம் சம்யக்த்வம் உள்ளதோ அவரே சரியான நடவடிக்கையுடன் வாழ்வர் என்கிறார்.


மேலும் சம்யக்த்வம் என்பதே சுயதியானமாகிய தருமத்தியானத்திற்கு வழிவகுக்கும். பின்னர் சுக்லத்தியானம் கிட்டும் என்று பல இடங்களில் கூறுகிறார். அந்த நேர்மையான, நீதியான பண்பில்லாமல் கர்மங்களை அழிக்க முடியாது. அந்த நற்குணமில்லாமல் செய்யும் எந்த ஒரு வழிபாடும், தியானமும் ஒன்றுக்கு முன்னால் இடப்பட்ட பூஜ்யத்தைப் போன்று மதிப்பற்றவையே,  நேர்மையான, இறைநீதியான அந்த நற்குணத்தின் மீதான நம்பிக்கையே சம்யத்வம்.

உலக சத்தியத்தின்/  அழியாஉண்மைகளின் மீதான நம்பிக்கையே சம்யக்த்வம் என்கிறார் வணக்கத்திற்குரிய பகவான் மஹாவீரர்.


ஆறு நிலையான உண்மைகள்/ சத்தியங்கள் உள்ளன.

1.   ஆன்மா உள்ளது

2.   ஆன்மா அழிவற்றது.

3.   ஆன்மா வினையின் செயலாண்மை/முகவராக உள்ளது.

4.   ஆன்மா வினையால் கனிந்து வரும் இன்ப துன்பத்தை நுகர்கிறது.

5.   ஆன்மா கர்மத்தளையால்  கட்டுண்டுள்ளது.

6.   கர்மத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆன்மா விடுதலை பெற்றது.


அதாவது அன்மா விடுதலை பெறுகிறது. இந்த சத்தியங்களின் மீது நம்பிக்கை வைப்பது  முற்றிலும் அவசியமானது. நவதத்துவங்களான  ஜீவ, அஜீவ, பாப, புண்ணிய, ஆஸ்ரவ, சம்வர, நிர்ஜர, பந்த மற்றும் மோட்ச இவற்றின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

மேலும் ஒரு பொருளை உள்ளது உள்ளபடி பார்த்தல், சிந்தித்தல், பேசுதலே சம்யக்த்வமாகும்.


ஒவ்வொரு உயிரினமும் புலனுணர்வு(புலன்காட்சி), அறிவு, ஒழுக்கம் கொண்டுள்ளன. அம்மூன்று மட்டும் தியானத்திற்கு வழிகோலுவதில்லை. தியானத்தில் வெற்றி கொள்ள சம்யக்த்வம் கலந்த மூன்றுமே முற்றிலும் அவசியமாகிறது.


அதாவது சிரமண பகவான்  மஹாவீரர்; நற்புலன்காட்சி (நற்காட்சி), நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளே ஒருவனை விடுதலைபேற்றை பெறச் செய்கிறது என்கிறார். அவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. நற்காட்சியின்றி நல்ஞானமில்லை. நல்ஞானமின்றி நல்லொழுக்கமில்லை. இந்த சம்யக்த்வம் இல்லாத காட்சி, ஞானம், ஒழுக்கம் வினைகளை அழிக்க முடியாது.  அதனால் விடுதலை பேறும் பல பிறவிகள் எடுத்தாலும் கிட்டுவதில்லை.

ஆகவே சம்யக்த்வமே சுயதியானத்திற்கு அஸ்திவாரகல்லாகிறது.
(பல பிரிவுகளும், உட்பிரிவுகளும்  இந்த சம்யக்த்வத்தில் உள்ளது.)



**இதுவே மஹாவீரர் கூறிய சம்யக்த்வம்…… 


**************************** 






Samyaktva (righteousness) is the very essence of self-meditation. Sramana Bhagvan Mahavir has said that he who has no Samyaktva cannot cultivate right conduct.

‘Samyaktva’ is the first letter of the alphabet of self-mediation. Without samyaktva, there can be no destruction of karma. If there is no samyaktva in life, all sorts of worship and meditation are considered useless, like zero without the figure 1. The simple meaning of samyaktva is ‘faith’.

To have faith in the eternal truths is called ‘Samyaktva’.

There are six eternal truths.
1. The soul exists,
2. The soul is eternal (immortal), 
3. Only the soul is the agent of karma, 
4. Only the soul is the endurer and enjoyer of fruits, 
5. The soul is bound by karma, 
6. The soul gets liberated after getting rid of karma..

This means that there is liberation. It is absoultely necessary to have faith in these six eternal truths. Also to have faith in the nine tattvas (categories) - Jiva, Ajiva, Papa, Punya, Asrava, Samvara, Nirjara, Bhandha and Moksa is ‘Samyaktva’.


Samyaktva is also called ‘Samakita’. To see, know, think and speak of a substance as it is i.e. in its real form, is samakita or samyaktva.

Every living being has perception, knowledge and conduct, but meditation does not result by the mere presence of these three. To entertain and acquire samyaktva is absoultely necessary for the glorious success of meditation.

Therefore Sramana Bhagvan Mahavir said, ‘Right perception, right knowledge and right conduct lead a person to liberation. And these three are successive. There is no right knowledge without right perception; one cannot have right conduct without right knowledge. There can be no destruction of Karma without right conduct. there is no liberation without the destruction of karma.

Thus, ‘Samyaktva’ is the foundation-stone of self-meditation. There are many divisions and sub-divisions of ‘Samayaktva’.


**********************

No comments:

Post a Comment