தத்வார்த்த
சூத்திரம்: - அத்தியாயம் # 4
கடவுள் வாழ்த்து
மோக்ஷ மார்கஸ்ய
நேதாரம் பேதாரம் கர்ம பூப்ப்ருதாம்
ஞாதாரம் விஸ்வ
தத்த்வானாம் வந்தே தத்குண லப்த்தயே
த்ரைகால்யம்
த்ரவ்ய ஷட்கம் நவபத ஸ்ஹிதம் ஜீவ ஷட்காய லேஸ்யா:
பஞ்சான்யே
சாஸ்திகாயா வ்ரத ஸ்மிதி கதி ஞான சாரித்ர பேதா:
இத்யேதன் மோக்ஷ
மூலம் த்ரிபுவன மஹிதை:ப்ரோக்தம் அர்ஹத் பிரீஷை:
ப்ரத்யேதி
ஸ்ருத்ததாதி ஸ்ப்ரூஷதி ச மதிமான் ய: ஸ வை சுத்தத்ருஷ்டி:
ஸித்தே
ஜ்யப்பஸித்தே சவ்விஹராஹணா ஃபலம் பத்தே
வந்தித்தா அரஹந்தே
வோச்சம் ஆராஹணா கமஸோ
உஜ்ஜோவணம்
உஜ்ஜவணம் ணிவ்வஹணம் ஸாஹணம் ச ணிச்சரணம்
தம்ஸணணாண சரித்தம்
தவாணம் ஆராஹணா ஃபணியா
தேவர் உலகம்
தேவர்களின்
உலகம், எத்தனை வகையினர் போன்ற விபரங்களை காணலாம்.
தேவர்களின் வகை
தேவாச்சதுர்நிகாயா:
- (அ4 #1) = (126)
देवाश्चतुर्णिकायाः
Devashchaturnikayah
தேவ – தேவர்கள்; சதுர்நிகாயா:
- நான்கு வகையானவர்கள்
The celestial beings are of four orders (classes) namely the
Residential (Bhavanavasi), the Peripatetic (Vyantara), the Stellar (Jyotishika)
and the Heavenly (Vaimanika).
தேவர்கள்; பவணர்,
வியந்திர்ர், ஜோதிஷ்கர் மற்றும் வைமானிகர் என நான்கு வகையினர்.
தேவகதி நாம கரும
உதயத்தால் தேவலோகத்தில் பிறந்து அதனைச்
சூழ்ந்த தீவுகள், கடல்கள், மலைகள் மற்றும் அழகான பிரதேசங்களிலும் அவரவர் விருப்பப்படி
சென்று இன்பம் துய்ப்பவர்கள் தேவர்கள்.
அவதி ஞானம் போன்ற
அரும் பெறும் ஆற்றலைப் பெற்றவர்கள்.
தேவர்கள் ஆற்றலால்
பல பிரிவுகளாகப் பகுக்கப் படுகின்றனர்.
பல கூட்டமாக(நிகாயம்)
இருந்தாலும், பல பிரிவுகள் இருப்பினும்; சதுர்ணிகாயமாக; நான்கு முக்கிய வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
பவணவாசி (residential); வியந்தரர் (peripatetic);
ஜோதிஷ்கர்
(stellar); வைமானிகர் (heavenly) என முக்கிய நான்கு வகை யாகும்.
---------
இவர்களின் லேச்யைகள் (colouration of their thoughts) பற்றிக் காண்போம்....
-----------
-----------
தேவ லேஸ்யை
ஆதிதஸ்த்ரிஷு பீதாந்தலேச்யா - (சூ2) = (127)
आदितस्त्रिषु पीतानत्लेश्याः
Aditastrishu pitantaleshyah
ஆதித- ஆதியிலிருந்து; த்ரிஷு- மூன்று நிகாயங்களில். பீதாந்தலேச்யா – கிருஷ்ண,
நீல, காபோத,
பீத லேசியா இருக்கின்றன.
The colouration of thought of the first three classes of
celestial beings is black, blue, grey and yellow.
முதல் மூன்று தேவர்களுக்கு பவண, வியந்திரர், ஜோதிஷ்க வரை பீத லேச் யை வரை; அதாவது கிருஷ்ண, நீல,
காபோத, பீத என நான்கு இருக்கும்.
கரும பூமி மற்றும்
போகபூமி பொய்காட்சியுடன் உள்ள மனிதர்கள், விலங்குகளுக்கு இறக்கும் தருவாயில் முதல்
மூன்று லேஸ்யைகளுடன் பவனதிரிகத்தில்
பிறக்கிறார்கள்.
அவ்வாறு பிறந்து பர்யாபதி
(முழு வளர்ச்சி) அடைந்ததும் பீத லேச்யையுடன் இருப்பர்.
அதனால்
அவர்களுக்கு நான்கு லேச்யை வரை சொல்லப்படுகிறது.
-----------------------
அபர்யாப்தம் X பர்யாப்தம்
அபர்யாப்தம் – ஆறு பர்யாப்திகள் உள்ளன.
ஆஹார, சரீர, இந்த்ரிய, ஸ்வாகோஸ்வாச, பாஷா, மனம் என
உடலுக்காக(சரீரம்) பொருளைப் பெறுகிறது ஆன்மா. ஆஹாரம் அப்புறம் இந்திரியம், சுவாசம், மொழி, மனம் (எண்ணம்) இத்தனையும்
முழுமை பெறாத வரை அபர்யாப்த நிலை. முழுமை பெற்றவுடன் பர்யாப்த நிலை.
தேவர்களுக்கும் முதலில் அபர்யாபதம் அது வரை மூன்று லேச்யை; பின்னர் பர்யாப்தம்
அடைந்ததும் நான்காவது லேச்யை.
------------
அடுத்து நால்வகை தேவர்களில் உட்பிரிவைக் பார்ப்போம்.....
--------------
தேவ லேஸ்யை
தசாஷ்டபஞ்சத்வாதசவிகல்பா:
கல்போப்பன்னபர்யந்தா: - (சூ3) =
(128)
दशाष्टपञ्चद्वादशविकल्पाः कल्पोपपन्नपर्यन्ताः
Dashashta-pancha-dvadashavikalpah
kalpopa-pannaparyantah
தச – பத்து; அஷ்ட –
எட்டு; பஞ்ச – ஐந்து; த்வாதச – பன்னிரண்டு; விகல்பா:- பேதமுடையவர்கள்; கல்போப்பன்ன
பர்யந்தா: – கல்பவாசி தேவர்கள் வரை (இந்த தேவர்கள்)
The Residential, the Peripatetic, the Stellar and the
Heavenly beings are of ten, eight, five and twelve classes respectively.
தேவர்கள் நான்கு
வகையினர்களில் உட்பிரிவுகள் பல இருக்கின்றன.
பவணவாசிகளில் 10
வகை, வியந்திரர்களில் 8 வகை; ஜோதிஷ்கதேவர்களில் 5 வகை மற்றும் வைமானிகர்களில் 12
வகை யாக பிரிவுகள் உள்ளன.
வைமானிகர்களில்
கல்பவாசிகள் வரை; அதற்கப்பாலும் பல பிரிவுகள் நவக்கிரைவேயகம் (தனி விமானித்தில்
உள்ளவர்கள்) போன்றும் உள்ளனர்.
----------
16
சொர்க்கத்துக்கு மேலே அகமிந்திரர்கள் அழைக்கப்படுகின்றனர். அதற்கு கீழே பல
பிரிவுகள் உள்ளன.
சைனிகர் (படை);
லெளகாந்திகர்கள் (பகவானுக்கு தீக்ஷை போன்ற பாவனை வருகின்றனர். போன்ற வகைகள் உள்ளன.
-------
மேலும்
உட்பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்....
----------------
இந்திர சபை
இந்த்ர
ஸாமானிகத்ராய ஸ்த்ரிம்ச பாரிஷாத்ம ரக்ஷலோகபாலா நீகப்ரகீர்ணகாபியோக்ய கில்பிஷிகாஸ்சைகச: - (சூ4) = (129)
इन्द्रसामानिक त्रायस्त्रिशपारिषदात्मरक्ष लोकपालीनाक
प्रकीर्ण काभियोग्य किल्बिषि काश्चैकशः
Indra-samanika-trayastrinsha-parishadatmaraksha-lokapalanika-prakirnakabhiyogya-kilbishikashchaikashah
இந்திரர், ஸாமானிகர்,
த்ராயஸ்த்ரிம்சர், பாரிஷதர், ஆத்மரக்ஷ்கர், லோகபாலர், அநீகர், ப்ரகீர்ணகர், ஆபியோக்யர்,
கில்பிஷிகர் இது மாதிரி பிரிவுகள்
There are ten grades in each of these classes of celestial
beings namely the Lord (Indra), his equal (except for the authority and the
prosperity), the Minister, the councillor, the bodyguards, the police, the
army, the citizens, the servants and the menials.
இந்திரர்: தேவ
அரசர், மற்ற தேவர்களிடம் இல்லாத அணிமா போன்ற ருத்திகளை பெற்று, கீழேயுள்ள
தேவர்களுக்கு ஆணையிடுபவர்.
ஸாமானிகர்: அரசன்
போல ஆணை, வைபவம் இல்லாத ராஜ
குடும்பத்தினர். இருப்பிடம், ஆயுள், சக்தி, பரிவாரம், போகம், உபபோகம் போன்றவற்றில்
இந்திரர்களுக்கு சமமானவர்கள். தந்தை, குரு, உபாத்தியாயர்(preceptor) போன்றவர்கள்
த்ராயஸ்த்ரிம்சர்:
அமைச்சர், புரோகிதன் (priest) போன்றவர்கள், இந்திர சபையில் 33 பேர்கள் இருப்பார்கள்.
பாரிஷதர்: அரசவை
உறுப்பினர்கள் (courtiers), நண்பர்கள்,அறிவிப்பாளர்கள்.
ஆத்மரக்ஷகர்:
மெய்க்காப்பாளர் போன்றவர்கள்
லோகபாலர்: காவலர்கள்
(police) போன்றவர்கள், தேவலோகத்தை காப்பவர்கள்.
அநீகர்: யானை,
குதிரை, தேர், காலாட்படை, கந்தர்வர், நர்த்தவர், விருஷபம் ஆகிய ஏழுவகை பிரிவு படைத்தளபதிகள்
ப்ரகீர்ணகர்:
குடிமக்கள் போன்றவர்கள்.
ஆபியோக்யர்: வாகனமாகும்
தேவர்கள்; யானை, குதிரை போல உருவம் எடுப்பவர்கள். இவர்கள் மீதமர்ந்து செல்வர்.
இந்திரன் ஏவலாட்கள் (அஞ்ஞானிகள் சிலர் இவர்களை கடவுள் போல் வணங்குவர்)
கில்பிஷிகர்: இழிவான
தொழில் செய்பவர்கள்; பாவச்செயல்கள் புரிபவர்கள். தொலைவில் வசிப்பர்.
------------------------
மேலும் சில விபரங்கள்..........
--------------
----------
-----------------
த்ராயஸ்த்ரிம்ச
லோகபால வர்ஜ்யா வ்யந்தர ஜ்யோதிஷ்கா: - (சூ5) = (130)
त्रायस्त्रिंशलोकपालवर्ज्या व्यन्तरज्योतिष्काः
Trayastrinsha-lokapala-varjya vyantara-jyotishkah
த்ராயஸ்த்ரிம்ச
லோகபால வர்ஜ்யா - திராயஸ்த்ரிம்சர் மற்றும் லோகபாலவர் தவிர (மீதி எட்டு வகை)
வ்யந்தர ஜ்யோதிஷ்கா: - வியந்திர, ஜோதிஷ்க தேவர்கள்
The Peripatetic and the Stellar devas are without the
ministers and the police.
வியந்திர, ஜோதிஷ்க
தேவர்களில் திராஸ்திரிம்ஸர் மற்றும் லோக பாலர் என்னும் இரண்டு பிரிவுகள் இல்லை.
மீதி எட்டு
பிரிவுகளாவர்கள் இருக்கின்றனர்.
அதாவது மந்திரி,
புரோகிதன் போன்றவர்கள் மற்றும் காவலர் ஆகிய இரு வகையினர்கள் வியந்திர, ஜோதிஷ்க
தேவர்களில் இல்லை.
----------------
இந்த மேலான
நால்வகையில் இந்திரர்கள் இருக்கின்றனரா.......
-------------
பூர்வயோர்
த்வீந்த்ரா: - (சூ6) = (131)
पूर्वयोर्द्वीन्द्रा
Purvayordvindrah
பூர்வயோ – முதல் இரண்டு;
(பவண,வியந்திரர்) த்வீந்த்ரா: - இரண்டு,
இரண்டு இந்திரர்கள்
The Residential and the Peripatetic places in the Heaven
have two Lords.
பவணவாசி, வியந்திரர்
ஆகிய முதல் இரண்டு தேவர்களில் இரண்டு, இரண்டு இந்திரர்கள் இருக்கின்றனர்.
பவணர்களில் அசுர,
நாக ... என பத்து வகையினர்கள் என்பதைப் பார்த்தோம். ஆக வகைக்கு இரண்டாக 20 பேர்கள்
உள்ளனர்.
வியந்திர
தேவர்களில் கின்னர, கிம்புருஷ .... என எட்டு வகையினர்களில் வகைக்கு இரண்டாக 16
இந்திரர்கள் உள்ளனர்.
-------------
தேவர்களின்
சுகங்கள் எவ்வகையில் உள்ளன என்பதை......
தேவர்களின் பாலின சுகம்
காயப்ரவீசாரா ஆ ஐசாநாத் - (சூ7) = (132)
कायप्रवीचाराः
Kayapravichara a aishanat
காயப்ரவீசாரா – மனிதர்களைப் போல காம போகம்; ஐசாநாத் – ஐசான தேவலோகம்
வரை.
The Residential, the Peripatetic and the Stellar devas and
those in the Saudharma and the Aishan (the first two Heaven) have body sex like
humans and animals.
ஐசான(ஈசான)
சொர்க்கம் வரை உள்ள தேவர்கள் மனிதர்கள் போலே உடலால் கூடி ஆணும், பெண்ணும் காம
இன்பம் பெறுவர்.
பவணர், வியந்திரர்,
ஜோதிஷ்கர், செளதர்ம கல்பவாசியர், ஈசான கல்பவாசியர் வரை இதில் அடங்குவர்.
உடல் உறவு உண்டே தவிர குழந்தைப் பேறு இல்லை. ஏனெனில்
தேவர்கள் உபபாதம் என்ற பிறப்பு வகையைச் சேர்ந்தவர்கள்.
-----------
_அங்கும் சில
தேவியர், உடல் உறவிலிருந்து விலகியுள்ளனர்.
தீர்த்த்ங்கர்ர்களுக்குச் சேவை செய்ய வருகின்ற ஸ்ரீஹரி முதலான 56 தேவியர்
அவ்வாறு காம நுகர்வின்று உள்ளனர்.
------------
மற்றவர்களின் உடல் இன்பம் எத்தகையது என்பதை.....
------------
தேவர்களின் பாலின சுகம்
சேஷா: ஸ்பர்சரூபசபதமன:ப்ரவீசாரா: - (சூ8) = (133)
शेषाः स्पर्शरूपशब्दमनः प्रवचाराः
Sheshah sparsha-rupa-shabda-manah-pravicharah
சேஷா: - மேலே உள்ள மற்ற தேவர்கள்; ஸ்பர்சரூபசபதமன:ப்ரவீசாரா: - ஸ்பரிசம், ரூபம்,
சப்தம் மற்றும் மனத்தால் காம வாசனை அனுபவிப்பவர்கள்.
The Heavenly beings in the next fourteen Heavens derive
pleasure of sex by touch, sight, sound and thought of celestial beings of
opposite sex.
எஞ்சியுள்ள
கல்பவாசி தேவர்கள் தமக்குரிய தேவிகளைத் தொட்டும், உருவத்தைக் கண்டும், மொழிகளைக்
கேட்டும், மனதால் நினைத்தும் இன்பமடைகின்றனர்.
3- 4 சொர்க்கத்திலுள்ள
ஸாநத்குமார மற்றும் மாஹேந்திர தேவர்கள், தேவியர்கள் அங்கங்களை தொடுவதால்
இன்பமடைகிறார்கள் (பிரவீசாரம்)
7- 8 சொர்க்கத்திலுள்ள
பிரம்ம, பிரம்மோத்தர, லாந்தவ மற்றும் காபிஷ்டம் ஆகிய தேவ, தேவியர்கள் உருவம்,
சிருங்காரம், களியாட்டம், அலங்காரம் முதலியவற்றாலும்;
9 – 12 சொர்க்கத்திலுள்ள
தேவ, தேவியர்கள் இனிய மொழிகள், சிரிப்பு, இசையினூடேயும்;
13 – 16 வரை சொர்க்கத்திலுள்ள
தேவ, தேவியர்கள் மனதால் நினைத்த மாத்திரத்திலேயேயும் இன்ப சுகத்தை தணிக்கின்றனர்.
இங்கு வேசித்தன்மை
கிடையாது. எனினும் காம சுவை கர்ம பந்தத்திற்கு வித்திடுகிறது.
-----------
எஞ்சியுள்ள பிற
தேவர்கள் எப்படி இன்பம் துய்க்கின்றனர் என்பதை.......
தேவர்களின் பாலின சுகம்
பரேநப்ரவீசாரா: - (சூ9) = (134)
परेऽप्रवचीराः
Pare(a)pravicharah
பரே: - அதற்கு (சொர்க்கத்துக்கு) மேலே; அப்ரவீசாரா: - காமபோகம் கிடையாது.
Heavenly being residing beyond the sixteen Heavens is
without sexual desire.
பதினாறாவது (அச்யுத)
சொர்க்கத்துக்கு மேலே காம போகம் (sexual sensation) கிடையாது.
கிரைவேயகம், அணுத்திசை,
அனுத்தர, தேவர்களுக்கு காம இச்சையே கிடையாது.
அகமிந்திரர்கள் என
அழைக்கப்படும் இவர்கள் முற்பிறப்பில் முனிவர்களாக இருந்தவர்கள்.
காம விருப்பம்
துன்பத்தை மட்டுப்படுத்துவதற்கே என அறிந்தவர்கள் அதனால் பெரும் சுகத்தையே
பெறுகின்றனர்.
_-----------
செளதர்ம கல்பம்
மற்றும் ஈசான கல்பங்களில் மட்டுமே தேவியர்கள் தோன்றுவார்கள்.
மற்ற
சொர்க்கத்தில் உள்ளவர்கள் அவர்களை காம சுகத்திற்காக அழைத்துச் செல்வர்.
-----------
பவணவாசி
தேவர்களின் பொதுவான, சிறப்பான செய்திகளைக் காண்போம்....
------------------
பவணர்களின் பத்து
பிரிவினர்
பவனவாஸினோஸுர
நாகவித்யுத் ஸுபர்ணாக்னிவாத ஸ்தனிதோத்தி த்வீபதிக்குமாரா: - (சூ10) = (135)
भवनवासिनोऽसुरनाविद्युत्सुपर्णाग्निवातस्तनितोद
धिद्वीपदिक्कुमाराः
Bhavanavasino(a)sura-naga-vidyutsuparnagni-vata-stanitodadhi-dvipa-dikkumarah
பவனவாஸின: -
பவணவாசி தேவர்கள்; அஸுர ஸுபர்ணாக்னிவாத ஸ்தனிதோத்தி த்வீபதிக்குமாரா: -
அசுரகுமார், நாககுமார், வித்யுத்குமார், ஸுவர்ணகுமார், அக்னிகுமார், வாதகுமார்,
ஸ்தனிதகுமார், உத்திகுமார், த்வீபகுமார், திக்குமார் என பத்து வகையாவர்.
The Residential devas comprise of Asura Kumar, Naga Kumar,
Vidyut Kumar, Suparna Kumar, Agni Kumar, Vata Kumar, Stanita Kumar, Udadhi
Kumar, Dvipa Kumar and Dikkumaras.
பவனங்களில்
வசிப்பதால் அசுரகுமார், நாககுமார், வித்யுத்குமார், ஸுவர்ணகுமார், அக்னிகுமார்,
வாதகுமார், ஸ்தனிதகுமார், உத்திகுமார், த்வீபகுமார், திக்குமார் என பத்து வகையான
தேவர்களை பவனவாசி என அழைக்கின்றனர்.
எந்தெந்த நாம
கருமத்தின் பலனால் உதித்தார்களோ அதே பெயரிலே சுட்டப்படுகிறார்கள்.
உடுத்துவது,
ஆபரணங்கள் அணிவது, கருவிகள் கையாள்வது,
வாகனங்களில் செல்வது போன்ற இளைஞர்களின் பழக்கங்கள் இருப்பதால் இவர்கள் குமாரர்கள்
என அழைக்கப்படுகின்றனர்.
முதல் பூமியான
ரத்னப்பிரபாவில் ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகள் உள்ளன.
ஒவ்வொன்றும்
ஆயிரம் யோசனைகள் உள்ளன.
முதல் கரபாகம்
எனப்படும். அதில் அசுர குமாரர்கள் தவிர மற்ற ஒன்பது பிரிவினர்களும் உள்ளனர்.
இரண்டாவது
அடுக்கான பங்க பாகத்தில் அசுரகுமாரர்கள் வசிக்கின்றனர்.
மூன்றாவது
அடுக்கான அப்பஹூலா என்னும் கீழ் பாகத்தில் முதல் நரகம் இருக்கிறது.
-----------
அடுத்து வியந்திர
தேவர்களின் சிறப்புகளைக் காண்போம்.....
-------------
The Peripatetic devas comprise Kinnara, Kimpurusha, Mahoraga, Gandharva, Yaksha, Rakshasa, Bhuta and Pishacha classes.
-----------------------
வியந்திரர்களின் எட்டு
பிரிவினர்
வியந்தரா:
கிந்நரகிம்புருஷமஹோரக்கந்தர்வயக்ஷ ராக்ஷஸபூதபிஸாசா: - (சூ11) = (136)
व्यन्तराः किन्नरकिंपुरुष महोरग
गन्धर्वयक्षराक्षसभूतपिशाचाः
Vyantarah
kinnara-kimpurusha-mahoraga-gandharva-yaksha-rakshasa-bhuta-pishachah
வியந்தரா: -
வியந்தர தேவர்கள்; கிந்நரகிம்புருஷமஹோரக்கந்தர்வயக்ஷ
ராக்ஷஸபூதபிஸாசா: - கின்னரர், கிம்புருஷர், மஹோரகர், கந்தர்வர், யக்ஷர், ராக்ஷஸர்,
பூதர், பிசாசார் என எட்டு ஜாதியினர்.
The Peripatetic devas comprise Kinnara, Kimpurusha, Mahoraga, Gandharva, Yaksha, Rakshasa, Bhuta and Pishacha classes.
வியந்தர தேவர்கள் கின்னரர்,
கிம்புருஷர், மஹோரகர், கந்தர்வர், யக்ஷர், ராக்ஷஸர், பூதர், பிசாசார் என எட்டு
வகையினர் ஆவர்.
இவர்களின் பெயர்கள்
அவர்களின் நாம கரும உதயத்தின் பெயரால் வந்தது.
ஜம்பூத்வீபத்தின்
எண்ணற்ற தீபங்கள் மற்றும் சமுத்திரங்களின் தொலைவில் அடுத்து கீழே ரத்னப் பிரபையின்
கரபாகத்தில் ஏழு வகையான வியந்திரர்களின் வாழிடங்கள் உள்ளன.
நடுபாகத்தில்
ராக்ஷசர்களின் வாழிடங்கள் உள்ளன.
-----------
குகை, மரப்பொந்து, பாழடைந்த வீடு முதலிய இடங்களில்
வசிக்கின்றனர்.
-----------
அடுத்து ஜோதிஷ்க
தேவர்களைப் பற்றிய பொதுவான சிறப்புகளை அறிவோம்...
ஜ்யோதிஷ்க தேவர்கள் இருப்பிடம்
ஜ்யோதிஷ்கா:
ஸுர்யாசந்த்ரமஸெள க்ரஹநக்ஷத்ர ப்ரகீர்ணக தாரகாச்ச - (சூ12) = (137)
ज्योतिष्काः सूर्याचन्द्रमसौ
ग्रहनक्षत्रप्रकीर्णकतारकाश्च
Jyotishkah:surya-chandramasau-graha-naksatra-prakirnaka-arakashcha
ஜ்யோதிஷ்கா: -
ஜ்யோதிஷ்க தேவ இனம்; ஸுர்யாசந்த்ரமஸெள –
சூரிய, சந்திர மற்றும்; க்ரஹநக்ஷத்ர ப்ரகீர்ணக தாரகாச்ச – கிரஹ, நக்ஷத்திர,
பிரகீர்ண, தாரகை இவையனைத்தும்
பிரகீர்ணக –
சிதறிய ; தாரகை – சிறிய நக்ஷத்திரம்;
The Stellar (luminary) devas comprise the sun, the moon, the
planets, the constellation and the scattered stars.
இந்த ஐவகை
தேவர்களும் ஒளிமயமாக இருப்பதால் ஜோதிஷ்கர்கள் (luminaries) எனப்பட்டனர்.
சூர்ய, சந்திர
நாமகருமத்தினால் கிடைக்கப் பெறுவதால் முக்யத்வம் பெறுகின்றன.
நாம் வாழும்
பூமியிலிருந்து 790 யோசனை உயரத்திற்கு மேல் 900 யோசனை உயரம் வரை சிதறியனவாகக்
காணப்படும் பிரகீர்ணக நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.
அவற்றுக்கும் மேல்
10 யோசனை உயரத்தில் சூரியன்கள்
அவற்றுக்கும் மேல்
80 யோசனை உயரத்தில் சந்திரன்கள்
அவற்றுக்கும் மேல்
4 யோசனை உயரத்தில் நட்சத்திரங்கள் (constellations)
அவற்றுக்கும் மேல்
4 யோசனை உயரத்தில் புதன்கிழமை
அவற்றுக்கும் மேல்
3 யோசனை உயரத்தில் சுக்கிரன்
அவற்றுக்கும் மேல்
3 யோசனை உயரத்தில் வியாழன்
அவற்றுக்கும் மேல்
3 யோசனை உயரத்தில் செவ்வாய்
அவற்றுக்கும் மேல்
3 யோசனை உயரத்தில் சனி
இவ்வாறு ஜோதிஷ்க
தேவர்களின் (stellar devas) பிரிவினர்கள் பரந்து சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
யோசனை என்பது 2000
கோசங்களாகும்.
-------------
ஜம்பூத்வீபத்தில்
இரண்டு சூரியன்கள், இரண்டு சந்திரன்கள் இருக்கின்றன.
--------------
ஜோதிஷ்கர்
தோன்றுமிடங்கள்
மேருப்ரதக்ஷிணா
நித்யகதயோ ந்ருலோகே - (சூ13) = (138)
मेरुप्रदिक्षिणा नित्यगतयो नृलोके
MeruprathakshiNa nithyagathayo
nruloKe
மேருப்ரதக்ஷிணா – மேருவை இடமிருந்து வலமாக சுற்றுதல்;
நித்யகதய: - எப்போதும் சுற்றிக் கொண்டு; ந்ருலோகே – மனுஷ்ய லோகத்தில்
In the human region (Jambudvipa-Lavanodadaya ocean,
Dhatakikhanda divapa-Kalodadhi ocean dvipa and inner half of Pushkardvipa) the
Stellar devas are characterized by incessant motion around Meru.
மனித உலகத்தில்
(இரண்டரை த்வீபத்தில்) உள்ள ஜோதிஷ்க தேவர்கள் மேரு மலையை வலது புறமாக எப்போதும்
சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஜம்பூத்வீபம், லவண
சமுத்திரம், தாதகீ கண்ட தீபம் காலோத்தி
சமுத்திரம் மற்றும் அர்த புஷ்கர தீபம்,
அதாவது இரண்டரை
தீபம், இரண்டு சமுத்திரத்திலுள்ள ஜ்யோதிஷ்க தேவர்கள் மேரு மலையை எப்பொழுதும்
சுற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
இவர்கள்
அபியோக்யர்கள் என்னும் வாகன தேவர்களின் மேல் அமர்ந்திருப்பதால் சுற்றி
வருகின்றனர்.
அவர்கள்
மேருமலையைச் 1121 யோசனைகள் தூரத்திலிருந்தே சுற்றி கொண்டிருப்பதால், அவற்றுக்கு
வெளியே செல்வதில்லை.
--------------
அவர்கள்
சுற்றுவதால் இரவு, பகல் காலத்தை நமக்கு மாறி, மாறித் தருகிறார்கள்.
இரண்டரைத்
தீவிற்கு வெளியே ஸ்திரமான காலமாக உள்ளது.
அவ்வாறு அவர்கள்
சுற்றும் போது மேருவில் உள்ள ஜினாலயங்களை தரிசித்துக் கொண்டே இருக்கும் புண்ணியம்
கிடைக்கிறது.
-------------
அடுத்து இரவு,
பகல் கால பேதங்களைக் காண்போம்....
----------------
காலவேறுபாடுகள்
தத்க்ருத: காலவிபாக: - (சூ14) = (139)
तत्कृतः कालविभागः
Tatkrtah kalavibhagah
தத்க்ருத: - சுற்றுதலால் ஆகிறது (ஜோதிஷ்க தேவர்கள்); காலவிபாக: - (இரவு, பகல், நாள், மாதம்) கால
மாறுதல்கள்
The divisions of time into hour, minute, day and night are
caused by these Stellar devas.
காலத்தினை வெறும்
இயக்கத்தின் மூலமாக அளவிட முடியாது.
ஜோதிஷ்க
தேவர்களின் இயக்கத்தின் அடிப்படையில் காலம் அளவிடப்படுகிறது. அது வியவஹார காலம் (conventional) எனப்படும். உண்மைக்
காலம் (real) என்பது முக்கிய காலமாகும்.
சமயம், ஆவலி முதலிய காலத்தின் பிரிவுகள்; சுற்றிக் கொண்டிருக்கும் ஜோதிஷ்க
தேவர்கள் இயக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதாகும். (conventional)
ஜோதிஷ்க தேவர்கள் இரண்டரைத் தீவின் 1121 யோசனைக்கு மேல் 110 யோசனை வரை உள்ள
பிரதேசத்தில் ஐந்து மேருமலைகளை சுற்றி வருகின்றனர்.
ஜம்பூத்வீபத்தில் இரண்டு சூரியன்களும், இரண்டு சந்திரர்களும்; ஒரு சூரியன்
சுற்றிவர இரண்டு பகல்கள் இரண்டு இரவுகள் ஆகும்.
அபியோக்ய தேவர்கள் சூரியன் போன்ற விமானங்களை எப்பொழுதும் இழுத்துச்
செல்கின்றனர்.
-------------
அபியோக்கிய
தேவர்கள் சிம்மம், யானை, எருது, குதிரை ஆகிய உருவங்களாக கிழக்கு, தெற்கு, மேற்கு,
வடக்கு ஆகிய திசைகளில் வாழ்கின்றனர்.
--------------
பன்னிரண்டு
ஜோதிஷ்க தேவர்கள் எவ்விதம் நிலை கொண்டுள்ளனர்.....
----------
பஹிரவஸ்திதா: - (சூ15) = (140)
बहिरवस्थिताः
Bahiravasthitah
பஹி - வெளியில் (மானுக்ஷேத்திர மலைக்கு) ; அவஸ்திதா:
- நிலையாக (இருக்கின்றன)
Outside the human regions the Stellar devas remain
stationary.
ஜம்பூத்வீபம்,
தாதகீஷண்டத்தீவிபம், புஷ்கரார்த்தம் என்னும் இரண்டரை தீபத்தின் வெளியில்
இருக்கும் ஜ்யோதிஷ்க தேவர்கள் நிலையாய் இருக்கின்றனர்.
மனிதர்கள் இல்லாத
பகுதியின் மேற்புரம் வாழும் ஜ்யோதிஷ்க தேவர்கள் சுற்றி வட்டமிடாமல் நிலையாய்
இருக்கின்றனர்.
---------------
அடுத்து வைமானிக
தேவர்களைப் பற்றி காண்போம்.....
-----------------
வைமானிக தேவர்கள்
வைமானிகா: - (சூ16) = (141)
वैमानिकाः
Vaimanikah
வைமானிகா –
விமானத்தில் பிறப்பு
The Heavenly Beings (Vaimanikah) are the fourth class of
celestial beings.
விமானத்தில்
பிறந்தவர்கள் வைமானிகர்கள்
மிக்க புண்ணியம்
செய்தவர்கள் பிறக்கும் இடம் விமானம்,
அதில் பிறந்தவர்கள் வைமானிகர்.
இந்த்ரக, சிரேணி பந்தம் மற்றும் புஷ்பப்ரகீர்ணக என்னும்
பிரிவுகளானதில், இந்த்ரக விமானங்கள் நடுவிலும், சிரேணிபந்த ஆகாயத்தில்
வரிசைக்கு சமானமாக நான்கு திசைகளிலும்
அமைந்திருக்கின்றன.
புஷ்பப்ரகீர்ணக
விமானங்கள் சிதறிய பூக்கள் போல இடையிடையே அமைந்துள்ளன.
-----------
அவர்களின்
பிரிவுகள் பற்றி.......
------------------
--------------------------
வைமானிகர்களின் வாழ்விடங்கள்
-------------------------------
----------------------
வைமானிகர்களில் வகைகள்
கல்போபபன்னா:
கல்பாதீதாஸ்ச: - (சூ17) = (142)
कल्पोपपन्नाः कल्पाताताश्च
Kalpopapannah kalpatitasca
கல்போபபன்னா: -
கல்பவாசி; கல்பாதீதாஸ்ச: -
கல்பாதீதர் என இரு வகை
Vaimanikas are of two kinds, those born in the sixteen
Heavens or Kalpas and those born beyond these Kalpas.
கல்போபன்னர், கல்பாதீதர் என இரு
பிரிவுகளில் வைமானிகர்கள் வாழ்கின்றனர்.
ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு என கல்பங்கள் மொத்தம் எட்டு உள்ளன.
செளதர்மன் முதலாக அச்சதம் வரையிலாக
பதினாறு சொர்க்கங்களில் (எட்டு கல்பங்களில்) தோன்றுபவர்கள் கல்போபன்னர் ஆவார்.
அதற்கு மேலே கிரைவேயகம், அனுதிசை இவைகளுக்கு மேல் அநுந்தர விமானங்கள் உள்ளன.
அவ்விமானங்களில் தோன்றுபவர்களை கல்பாதீதர் என அழைக்கப்படுகின்றனர்.
------------
அவர்களின் இடங்கள்
எப்படி உள்ளன என்பதை.......
உபர்யுபரி - (சூ18) = (143)
उपर्युपरि
Uparyupari
உபர்யுபரி –
ஒன்றின்மேல் ஒன்றாக
The habitation places for different classes of Heavenly
beings are located one above the other.
எட்டு கல்பங்களும், நவக்ரைவேயகம், நவானுத்திசை,
பஞ்சாநுத்தரம் ஆகியவைகள் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளன.
இவை வியந்திர
தேவர்களின் வாழ்விடங்களைப் போல சமமற்று (uneven) இல்லை.
-------------
எத்தனை விமானங்களில் இந்த தேவர்கள் வாழ்கின்றனர் என காண்போம்.....
வைமானிக தேவர்கள்
இருப்பிடங்கள்
ஸெளதர்மைசானஸானத்குமாரமாஹேந்த்ர
ப்ரஹ்மப்ரஹ்மோத்தர லாந்தவகாபிஷ்ட சுக்ரமஹா சுக்ரஸதார ஸஹஸ்ரா ரேஷ்வானத ப்ராண
தயோராரணாச்யுதயோர் நவஸு க்ரைவே யகேஷு விஜயவைஜயந்த ஜயந்தாபராஜி தேஷு
ஸர்வார்த்தஸித்தெள ச - (சூ19) = (144)
सौधर्मैशानसानत्कुमार माहेन्द्र ब्रह्मब्रह्मोत्तर
लान्तवकापिष्ठ
शुक्रमहाशुक्रशतारसहस्रारेष्वानतप्राणयोरारणाच्युतयोर्नवसुग्रैवेयकेषु विजय
वैजयन्त ययन्तापराजितेषु सर्वार्थसिद्धौ च
Saudharmaishana-sanatkumara-mahendra-brahma-brahmottara-lantava-kapishtha-shukra-mahashukra-shatara-sahastrareshvanata-pranatayorarana-chyutayornavasu
graiveyakeshu vijaya-vaijayanta-jayantaparajiteshu sarvarthasiddhau cha
ஸெளதர்மைசானஸானத்குமாரமாஹேந்த்ர
ப்ரஹ்மப்ரஹ்மோத்தர லாந்தவகாபிஷ்ட சுக்ரமஹா சுக்ரஸதார ஸஹஸ்ரா ரேஷு - செளதர்ம-ஐசான; ஸானத்குமார-மாஹேந்த்ர;
ப்ரஹ்ம-ப்ரஹ்மோத்தர; லாந்தவ-காபிஷ்ட;
ஸுக்ர-மஹாஸுக்ர; ஸதார-ஸஹஸ்ரார; ஆனத ப்ராண
தயோ – ஆனத-பிராணத, (ஆரணாச்யுதயோ –ஆரண-அச்யுத; இந்த 16 சொர்க்கங்களிலும், நவஸு க்ரைவே யகேஷு – ஒன்பது ; சுதர்ஸன், அமோக, ஸுப்ரபுத்த, யசோதர, ஸித்ர, ஸுவிசால, ஸுமானஸ, ஸெளமனச, ப்ரீதீங்கர) கிரைவேயகங்களிலும்
மற்றும் ஒன்பது -அர்சி, அர்சிமாலினி, வஜ்ர, வைரோசன, ஸெளம்ய, ஸெளம்யரூபக, அங்க,
ஸ்படிக மற்றும் ஆதித்ய - விஜயவைஜயந்த ஜயந்தாபராஜி தேஷு
ஸர்வார்த்தஸித்தெள – விஜய, வைஜயந்த, ஜயந்த, அபராஜித
ஸர்வார்த்த ஸித்தி ஐந்து அணுத்திரங்கள்.
Heavenly beings reside in sixteen Heavens, nine Graiveyaka,
nine Anudish and five Anuttar. Sixteen Heavens are Saudharma, Aishana,
Sanatkumara, Mahendra, Brahma, Brahmottara, Lantava, Kapishta, Shukra,
Mahashukra, Shatara, Sahasrara, Anata, Pranata, Arana and Achyuta. Nine
Graiveyak are Sudarshan, Amogh, Suprabuddha, Yashodhar, Subhadra, Suvishal,
Sumanas, Saumanas and Pritikar. Nine Anudish are Aditya, Archi, Archimalini,
Vair, Vairochan, Saum, Saumrup, Ark and Sphatik. Five Anuttar are Vijaya,
Vaijayanta, Jayanta, Aparajita and Sarvarthasiddhi.
வைமானிக தேவர்கள் –
செளதர்ம, ஐசான, ஸானத்குமார, மாஹேந்த்ர, பிரம்ம, பிரம்மோத்ர, லாந்தவ, காபிஷ்ட,
ஸுக்ர, மஹாஸுக்ர, ஸதார, ஸஹ்ஸ்ரார;
மேலும் ஆனத,
பிராணத, ஆரண, அச்யுத, விஜய, வைஜயந்த, ஜயந்த, அபராஜித, ஸர்வார்த்த சித்தி எனும் ஐந்து
அநுத்தரங்களிலும் வசிக்கின்றனர்.
அதற்கு மேல் சித்த
க்ஷேத்திரம், வீடுபேறு பெற்ற சித்தர்கள் இருப்பிடம் ஆகும்.
செளதர்ம என்னும்
முதல் விண்ணுலம் தான் நமக்கு மிக அருகில் உள்ளது.
எப்படியெனில் அதன் நடு விமானம் (விண்ணுலக ஊர்தி) மத்திய மேருவின் உச்சிக்கு
மேல் ஒரு மயிரிழை அகலத்தில் உள்ளது.
இந்த மேருமலை
100040 யோசனை உயரமும், அதில் 1000 யோசனை அளவு பூமியில் புதைந்தும் எஞ்சிய 99040
யோசனைகள் பூமிக்கு மேலாக உள்ளது. அதில் உச்சி மட்டும் நாற்பது யோசனை உயரம் உள்ளது.
தேவலோகத்தில்
பன்னிரண்டு வகைத் தேவர்களுக்கு பன்னிரண்டு இந்திரர்கள் உள்ளனர். அதாவது பதினாறு சுவர்க்கங்களில் பன்னிரண்டு இந்திரர்கள்
உள்ளனர்.
நான்காவது
கல்பங்களில் அந்தந்த பெயர்களைக் கொண்ட இந்திர்ர்கள் நான்கு பேர், 5,6 வது
கல்பத்திற்கு ஒரு பிரம்மேந்திரன், 7,8 வது கல்பத்திற்கு ஒரு லாந்தவ இந்திரன், 9,10
வது கல்பத்திற்கு ஒரு சுக்ர இந்திரன்,
11,12 வது கல்பத்திற்கு ஒரு ஸதார அனும் இந்திரன்.
12-16 வது
கல்பங்களில் அதே பெயர்களைக் கொண்ட இந்திர்ர்கள் நான்கு பேர் என ஆக மொத்தம்
(4+1+1+1+1+4) பன்னிரண்டு இந்திரர்கள் பதினாறு சொர்க்கங்களில் உள்ளனர்.
பதினாறு சொர்க்கங்களில்
ஐம்பத்திரண்டு படலங்கள் (layers) உள்ளன.
9 கிரைவேயகங்களில் 9 படலங்கள்,
9 அனுதிசைகளில் 1 படலங்கள்,
5 அனுந்தரங்களில் 1 படலங்கள் = 63 படலங்கள் உள்ளன.
-------------------
மேலும் வைமானிக
தேவர்களின் சிறப்பு ..........
---------------------
வைமானிக
தேவர்களின் சிறப்பு
ஸ்திதிப்ரபாவஸு கத்யுதிலேச்யா விசுத்தீந்த்ரியாவதி விஷயதோsதிகா: - (சூ20) = (145)
स्थिति प्रभावसुखद्युतलेश्याविशुद्धीन्द्रियावधिविषयतोऽधिकाः
Sthiti-prabhava-sukha-dyuti-leshya-vishuddhindriyavadhi-vishayato
(a)dhikah
ஸ்திதிப்ரபாவஸு கத்யுதிலேச்யா விசுத்தீந்த்ரியாவதி விஷயத: - ஸ்திதி, ப்ரபாவம்,
ஸுகம், த்யுதி, லேஸ்யா, விசுக்தி, இந்திரிய விஷயம். அவதி ஞான விஷயம் இவற்றின்
அபேக்ஷையில் மேலே செல்லச் செல்ல (தேவர்கள்);
அதிகா:- சிறந்து விளங்குகிறார்கள்.
There is increase with regard to the lifetime, influence of
power, happiness, lumination of body, purity in thought-colouration, capacity
of the senses and range of clairvoyance in the Heavenly beings residing in the
higher palces.
ஆயுள், வல்லமை,
சுகம், ஒளி, பரிணாமம் (லேச்யை), தூய்மை, புலங்களின், ஆற்றல், ஓதியறிவு மூலம்
அறிதல் ஆகிய இவை தேவர்களுக்கு மேலே போகப் போக சிறந்து விளங்குகிறது.
ஆன்மா ஒரு
குறிப்பிட்ட உடலில் சேர்ந்து இருப்பது ஆயுள் எனப்படும்.
துன்பத்தை
விளைவிப்பது அல்லது அருள் பரிபாலிப்பதான ஆற்றலை வல்லமை எனப்படும்.
பொறிவழி இன்பம்
பெறுவதினை சுகம் எனப்படும்.
உடல், உடை மற்றும்
ஆபரணம் முதலியவற்றின் ஓளி அல்லது பிரகாசம் (ஜோதி) எனப்படும் (brilliance).
லேச்யை விசுத்தி/ தூய்மையான மனோபாவங்களை குறிக்கும்.
இந்திரிய விஷயங்கள் புலன்களின் ஆற்றல் எனப்படும்.
அவதி – ஓதியறிவு அதன் மூலம் கிடைக்கும்
ஆற்றல்.
மேற்கூறிய ஆற்றல்கள் மேலே மேலே செல்லச் செல்ல தேவர்களுக்கு கூடிக் கொண்டே
போவதால் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
இவை போன்று ஆற்றல்கள் வைமானிக தேவர்களுக்கும் கூடிக்கொண்டே போகும்.
---------------
மற்ற பண்புகளை பற்றி காண்போம்......
--------------
வைமானிகர்களிடம் குறைவது
கதிஸரீரபரிக்ரஹாபிமானதோ ஹீனா: - (சூ21) = (146)*
गतिशरीरपरिग्रहाभिमानतो हीनाः
Gatishariraparigrahabhimanato hinah
கதிஸரீரபரிக்ரஹாபிமானத: - கதி,
சரீரம், பரிக்ரஹம், அபிமானம் இவை மேலே,
மேலே உள்ள தேவர்களுக்கு; ஹீனா: - குறைவாக இருக்கிறது.
But there is decrease with regard to motion, stature,
attachment and pride.
இந்த வைமானிக
தேவர்களுக்கு செல்கை, உடல், உயரம், பரிக்ரஹம், அபிமானம் (அகங்காரம்) ஆகிய இவை
மேன்மேல் உள்ள சுவர்கங்களில் குறைகிறது.
இடம் விட்டு இடம்
செல்வது கதி யாகும்.
உடல் – வைக்ரீயக உடல்
(transformable
body)
லோப கஷாயத்தின் உதயத்தினால் உலகியல் விஷ்யங்களில் பற்று கொள்வது பரிக்ரஹம் ஆகும்.
மான கஷாயத்தினால் தோன்றுவது அகங்காரம், அபிமானம் ஆகும்.
இவை யனைத்தும் மேலே மேலே செல்லச் செல்ல குறைந்து கொண்டே போகிறாது.
---------------
புலனின்ப வேட்கை
மேலே செல்ல செல்ல குறைவாக உள்ளதால் இடம் பெயர்வது குறைகிறது.
செளதர்ம, ஐசான
சுவர்க்கத்து தேவர்கள் உயரம் - 7 முழங்கள்
ஸானத், மாஹேந்திர
தேவர்களது உயரம் - 6 முழங்கள்
பிரம்ம, பிரம்மோத்ர,
லாந்தவ மற்றும் காபிஷ்ட தேவர்களது உயரம் -
5 முழங்கள்
சுக்ர, மகாசுக்ர,
சதார, ஸஹஸ்ரார கல்பத்தில் உயரம் - 4 முழங்கள்
ஆனத, பிராணத கல்பத்தில் உயரம் - 3.5 முழங்கள்
ஆரண, அச்சுத
கல்பத்தில் உயரம் - 3
முழங்கள்
கீழ், மத்திய,
மேல் க்ரைவேயகத்தில் அகமிந்திரர்களின் உயரம் 2.5; 2 ; 1.5 முழங்கள்
மற்றும் ஐந்து
அணுத்தர விமானங்களிலுள்ள அகமிந்திர்ர்களின் உயரம் ஒரு முழமாகவும் உள்ளன.
விமானங்களின் நீளம், அகலம் முதலான
பரிக்ரஹம்; துவர்ப்பசை குறைவாக உள்லதால்
அகங்காரம் போன்றவை மேலே, மேலே செல்லச்
செல்ல குறைகிறது.
புண்ணிய
அதிசயங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.
-----------
இப்போது நான்
காவது பிரிவு தேவரகளின் எண்ணப் பரிணாமங்களை காண்போம்.....
-------------
வைமானிகர்களின்
லேச்யைகள்
பீதபத்மசுக்ல்லேச்யா த்வித்ரிசேஷேஷூ -
(சூ22) = (147)
पीतपद्मशुक्ललेश्या द्वित्रिशेषेषु
Pita-padma-shuklaleshya dvitrishesheshu
பீதபத்மசுக்ல்லேச்யா – வரிசையாக பீத, பத்ம, சுக்ல லேசியா; த்வித்ரிசேஷேஷூ – இரண்டு கல்பம், மூன்று கல்பம் மற்றும் மேலே உள்ள எல்லா
விமாங்களிலும்.
The thought colouration (leshya) of the Heavenly beings in
the first four heavens is yellow; five to ten Heavens is grey, eleven to
sixteen Heavens is white and in Graiveyaka, Anudish and Anuttar is super white.
சௌதர்ம-ஐசான,
ஸானத்குமார-மா ஹோந்திர என்னும் இரண்டு
கல்பங்களிலும்; பிரம்ம-பிரம்மோத்தர, லாந்தவ-காவிஷ்ட, சுக்ர-மகாசுக்ர என்னும்;
மூன்று கல்பங்களிலும் மற்றெல்லா விமானங்களிலும் இருப்பவர்களுக்கு முறையே பீத
லேஸ்யை, பத்ம லேஸ்யை மற்றும் சுக்ல லேஸ்யைகள் இருக்கின்றன.
ஸெளதர்ம-ஈசான
ஸ்வர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு பீத (மஞ்சள்) லேச்யையும்
ஸானத்குமார-மஹோந்திர
குமார ஸ்வர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு பீத (மஞ்சள்) லேச்யையும்
பிரம்ம-பிரம்மோத்தர,
லாந்தவ-காவிஷ்ட கல்பங்களிலும் உள்ள தேவர்களுக்கு
பத்ம (pink) லேச்யையும்,
சுக்ர-மகாசுக்ர (அதாவது
ஸீகர, மஹாஸீகர, ஸதார, ஸஹஸ்ரார) என்னும் கல்பங்களில் உள்ளவர்களுக்கு பத்ம மற்றும்
சுக்ல (வெண்மை) லேச்யையும்
ஆனத, பிராணத, ஆரன,
அச்யுத கல்பத்தில் உள்ளவர்களுக்கு பரம சுக்ல (தூயவெண்மை) லேச்யையும் இருக்கும்.
----------
கல்பம் என்றால்
என்ன.....
--------------------
ப்ராக்க்ரைவேயகேப்ய: கல்பா: - (சூ23) = (148)
प्राग्ग्रैवेयकेभ्यः कल्पाः
Praggraiveyakebhyah kalpah
ப்ராக் – முன்னே இருப்பவை ; க்ரைவேயகேப்ய: - கிரைவேயகத்துக்கு; கல்பா: -
கல்பங்கள்
Sixteen Heavens are called Kalpas and the rest are called
Kalpatit. Those living in Kalpatit are called Ahamindra and are equal in
grandeur.
கிரைவேகங்களின்
அடியிலுள்ள பதினாறு சொர்க்கங்களும்
கல்பங்களாகும்.
ஒன்பது
க்ரைவேயகங்களுக்கு கிழே உள்ள 1-16 வரையுள்ள விண்ணுலகங்களை கல்பங்கள் எனவும்,
அங்குள்ள தேவர்களை
கல்போபன்னர் எனவும் அழைப்பர்.
நவகிரைவேயகம்,
ஒன்பது அணுத்திசை, ஐந்து அனுத்தர விமான்களை கல்பாதீதம் என அழைப்பர்.
இவற்றில்
வசிக்கும் தேவர்கள் ஒரே மாதிரியான செல்வாக்கைப் பெற்றவர்களாவார்கள். அதனால்
அவர்கள் அகமிந்திரர்கள் என அழைக்கப் படுவர்.
-----------
லெளகாந்திக
தேவர்கள் யார்......
------------------
லெளகாந்திகர்களில் எட்டு பிரிவுகள்
ஸாரஸ்வதாதித்ய வஹ்ன்யருண கர்த்ததோய துஷிதாவ்யா பாதாரிஷ்டாச்ச - - (சூ25) = (150)
सारस्वतादित्य व ह्रयरुणगर्दतोयुषिताव्यावाधारिष्टाश्च
Sarasvataditya-vahnyaruna-gardatoya-tushitavyabadharishtashca
ஸாரஸ்வதாதித்ய வஹ்ன்யருண கர்த்ததோய துஷிதாவ்யா பாதாரிஷ்டாச்ச - ஸாரஸ்வர், ஆதித்யர், வஹ்நியர், அருணர்,
கர்த்த்தோயர், துஷிதர், அவ்யாபாதர்,
அரிஷ்டர் என எட்டு வகை.
Lokantikas are of eight classs. They are Sarasvata, Aditya,
Vahni, Aruna, Gardatoya, Tushita, Avyabadha and Arishta.
ஸாரஸ்வர், ஆதித்யர்,
வஹ்நியர், அருணர், கர்த்த்தோயர்,
துஷிதர், அவ்யாபாதர் மற்றும் அரிஷ்டர் என
(லெளகாந்திக தேவர்களில்) எட்டு பிரிவினர்கள் இருக்கின்றனர்.
மேற் குறிப்பிட்ட
எட்டும் விமானத்தின் பெயர்கள் ஆகும். அதில் வசிக்கும் தேவர்களும் அப்படியே
அழைக்கப்படுகின்றனர்.
இந்த எட்டு விமானங்களுக்கு
இடையே இடையே இரண்டு இரண்டு வேறு விமானங்கள் இருக்கின்றன.
அவ்விமானங்களிலும்
லெளகாந்திக தேவர்கள் வசிக்கின்றனர்.
எனவே இருபத்து
நான்கு பிரிவினர்களாகும்.
--------------------
லெளகாந்திகர்கள்
யாவரும் ஒரே மாதிரியாகவும், தனித்தும், காம இச்சை இன்றியும் இருப்பர்.
எனவே அவர்களை ‘தேவரிஷி’
என்பர்.
தீர்த்தங்கரர்களாகப்
போகின்றவர்கள், உலக பற்றுகளைத் துறக்க முடிவெடுக்கும் தருணத்தில், இந்த தேவரிஷி
யான தேவர்கள் நேரில் வந்து அவர்களுக்கு ஊக்கமூட்டுகின்றனர்.
-------------------------
சரமதேஹம் என்றால்
என்ன?
---------------
சரமதேஹம் என்றால்
விஜயாதிஷுத்விசரமா:
- - - (சூ26) = (151)
विजयादिषु द्विचरमाः
Vijayadishu dvicaramah
விஜயாதிஷு – விஜய,
வைஜயந்த, ஜயந்த, அபராஜித விமான்ங்களில்
(உள்ள தேவர்கள்); த்விசரமா: - கடைசி இரண்டு
பவங்களை உடையவர்கள்.
Ahmindras in Vijaya, Vaijayanta, Jayanta and Aparajita take
two births as humans before attaining liberation while those in Sarvarthasiddhi
take one birth as humans before attaining liberation.
விஜய, வைஜயந்தா,
ஜயந்த, அப்ராஜித என்னும் நான்கு விமானங்களிலும், ஒன்பது அணுத்திசைகளிலும் பிறக்கும்
தேவர்கள், அடுத்த இரண்டு மானிடப்பிறவிகளிலும் நிச்சயமாக சரமதேஹதாரியாவர்.
அதாவது வினைகளைக்
களைந்து பிறப்பெடுத்து வீடுபேறு எய்துவர்.
இவர்கள் தம்
தேவாயுள் முடிந்து பின் மனிதர்களாகப் பிறந்து, புலனடக்கம் செய்வதினால், மீண்டும் விஜய போன்ற விமான ங்களில் பிறந்து, மறுபடி மனிதப்பிறவி எடுத்து வீடுபேறு
அடைவர்.
---------------
அடுத்து
விலங்குகளைப்பற்றி.....
---------------
விலங்குகள்
ஒளபபாதிக
மனுஷ்யேப்ய: சேஷாஸ்திர்யக்யோனய: - (சூ27) = (152)*
औपपादिक मनुष्येभ्यः शेषास्तिर्यग्योनयः
Aupapadika-manushyebhyah sheshastiryagyonayah
ஒளபபாதிக
மனுஷ்யேப்ய: - உபபாத ஜன்மத்தில் பிறந்தவர்கள் மற்றும் மனிதர் தவிர சேஷா – மற்ற எல்லா
ஸம்ஸாரி ஜீவஙன்களும் திர்யக்யோனய: - திர்யக் ஜீவன் கள் (விலங்குகள்)
The beings other than celestial, infernal and human beings
are animals.
உபபாத பிறவி
எடுப்பவர்கள் தேவர்களும், நரகர்களும் ஆவார்.
எனவே தேவர்,
நர்கர், மனிதர் தவிர்த்த மற்றெல்லா உயிர்களும் விலங்குகதியில் அடங்கும்.
விலங்குயிர்கள்
உலகம் எங்கும் பரவியுள்ளன.
ஆயினும் இரண்டு
முதல் ஐந்து பொறிகளை உடைய இயங்குயிர்கள், உலகில் நடுப்பாகத்தில் மட்டுமே
உள்ளன.
இப்பகுதி திரஸநாளி
என்று அழைக்கப்படும்.
-------------
பவண தேவர் ஆயுள்
பற்றி காண்போம்.....
----------------------
பவண தேவர் ஆயுள்
ஸ்திதிரஸு ரநாகஸு
பர்ணத்வீபசேஷாணாம் ஸாகரோபம த்ரிபல்யோபமார்த்தஹீணமிதா: - (சூ28) = (153)
स्थितिसुरनागसुपर्णद्वीपशेषाणां सागरोपमत्रिपल्योपमार्द्ध
हीनमिताः
Sthitirasura-naga-suparna-dvipa-sheshanam-sagaropama-tripalyopa-marddhahinamitah
ஸ்திதி - உத்க்ருஷ்ட ஆயுள் முறையே (ஒரு கடல்) ; ரஸு
ரநாகஸு பர்ணத்வீபசேஷாணாம் – அஸுர, நாக, ஸுபர்ண, த்வீப மற்றும் ஆறு பவண வாசியர்
(வித்யுத் (குமார்), அக்னி, வாத, ஸ்தனித,
உததி, திக்(குமார்); ஸாகரோபம
த்ரிபல்யோபமார்த்தஹீணமிதா: - ஒரு கடல், 3 பல்யம், 2.5 பல்யம், 2 பல்யம், 1.5
பல்யம் ஆகும்.
The maximum lifespan of Asura kumar is one Sagara, Naga
kumar is three palyas, Suparna kumar is two and a half palyas, Dvipa kumar is
two palyas and the rest of the Residential devas is one and a half palyas.
பவண தேவர்களின்
அதிக பட்ச ஆயுள் பின்வருமாறு.
அசுரகுமாரர் - 1
கடற்காலம்
நாககுமாரர் - 3
பல்யம்
ஸுபர்ணகுமாரர் –
2.5 பல்யம்
த்வீப குமாரர் – 2
பல்யம்
ஏனைய வித்யுத்
குமாரர், அக்னிகுமாரர், வாதகுமாரர், ஸ்தனிதகுமாரர், உதத்திகுமாரர், திக்குமாரர்
ஆகியவர்களின் ஆயுள் - 1.5 பல்யம் ஆகும்.
----------------
வைமானிகரின்
உயர்ந்த ஆயுள் எவ்வளவு.....
---------
வைமானிகரின் உயர்
ஆயுள்
செளதர்மைசானயோ:
ஸாகரோபமே அதிகே: - (சூ29) = (154)
सौधर्मेशालयोः सागरोपमेऽधिके
Saudharmeshanayoh sagaropame adhike
செளதர்மைசானயோ:
- செளதர்ம, ஈசான சொர்க்க தேவர்களுக்கு
உத்க்ருஷ்ட ஆயுள்; ஸாகரோபமே அதிகே: - 2
கடல் காலத்திற்கு சிறிது அதிகம்.
The maximum lifespan of Heavenly beings is same in the pair
of two Kalpas. In the first pair of Saudharma and Aishana Kalpas the maximum
lifespan is a little over two sagaras.
செளதர்ம, ஈசான
கல்பத்தில் உள்ளவர்களின் உயர்பட்ச ஆயுள் இரண்டு சாகரத்திற்கு சற்று கூடுதல் ஆகும்.
ஸாகரோபமே என்று
பன்மையில் ஆளப்பட்டிருப்பதால் இரண்டிற்கும் சற்று அதிகம் என்று பொருள் கொள்ள
வேண்டும்.
---------
அடுத்த அடுக்கில்
உள்ள தேவர்களின் ஆயுள் என்ன?....
---------------
வைமானிகரின் உயர்
ஆயுள்
ஸானத்குமார
மாஹேந்த்ரயோ: ஸப்த - (சூ30) = (155)
सानत्कुमार माहेन्द्रयो सप्त
Sanatkumara-mahendrayoh sapta
ஸானத்குமார
மாஹேந்த்ர – ஸானத்குமார, மாஹேந்திர சொர்க்க தேவர்கள் உத்க்ருஷ்ட ஆயுள் ; ஸப்த – ஏழு கடல் காலத்திற்கும் கொஞ்சம் அதிகம்.
In the second pair of Sanatkumara and Mahendra the maximum
lifespan of the Heavenly beings is seven sagaras.
ஸாநத்குமார,
மாஹேந்திர (3,4வது சொர்க்கம்) கல்பங்களில் உள்ளவர்களின் அதிக பட்ச ஆயுள் ஏழு
கடற்காலங்களுக்கு சற்று அதிகம்.
--------------
ஆயுள் பந்தம்
எவ்வாறு கட்டுகிறது. (அபகர்ஷண் காலம்.)
நமது பிறவியில்
எட்டு முறை பந்தம் ஆக வாய்ப்பு உள்ளது.
நமது ஆயுளை முன்று
பாகமாக்கி, இரண்டாவது பாகம் கழியும் போது அடுத்த பிறவிக்கான் ஆயுள் பந்தமாகிறது.
------------------
உ-ம்: 81 என்றால்
54 வயதில் முதல் சமயத்தில் பந்தமாகிறது.
அதன் பிறகு
வாழ்நாள் இருப்பின், அடுத்து 27/3 ல், +18 வருஷம் கழிந்த பின் 72 வயதில் பந்தமாகும்.
அடுத்து 9/3 ல், *6
வருஷம் கழித்து 78 ல் பந்தமாகும்.
3/3ல ல், +2
வருஷத்தில் 80 ஆகும்.
இப்படியாக 81 ல்
கண்டிப்பாக ஆயுள் பந்தமாகிவிடும். (அடுத்த பிறவிக்கான)
-------------------
இது மாதிரி 8
தடவைக்குள் ஆயுள் (கட்டு) பந்தமாகிவிடும்.
தேவ, மனித, நரக,
விலங்கு என நான்கு கதியில் ஒன்று பந்தமாகும்.
இவ்வாறு 8
முறையில் பரிணாமத்திற்கு தகுந்த படி அடுத்த கதிக்கான ஆயுள் பந்தம் கூடலாம்/
குறையலாம்.
இப்படியாக ஆயுள்
காலம் ஒரே கதியில் சற்று அதிகமாக/ குறைவாக மாறுகிறது.
அதைத் தான் தேவர்
ஆயுள் கடல் காலத்திற்கு சற்று அதிகமாக என குறிப்பிடப்படுகிறது.
-------
அடுத்து பிரம்ம
லோகத்திலிருந்து அச்யுதம் வரையுள்ள தேவர்களுக்கான ஆயுள் பற்றி.....
----------------
----------------
வைமானிகரின் உயர் ஆயுள்
திரிஸப்தநவைகாத சத்ரயோதச பஞ்சதச பிரதிகானி து - (சூ31) = (156)
त्रिसप्तनवैकादशत्रयोदश पञ्चदशभिरधिकानि तु
Tri-sapta-navaikadasha-trayodasha-panchadashabhiradhikani tu
திரிஸப்தநவைகாத சத்ரயோதச பஞ்சதச – மூன்று, ஏழு, ஒன்பது, பதினொன்று, பதின்மூன்று,
பதினைந்து; அதிகானி – கொஞ்சம் அதிகமாகிய; து
– கல்ப சொர்க்கத்தில் மீதமூள்ள ஆறு ஜோடி
பகுதி தேவர்களுக்கும்; கூடிய ஏழு கடற்காலம் ஆகும்.
The maximum lifespan of the Heavenly beings in the balance
six pairs of Kalpas exceeds that of seven sagaras in second pair of Kalpas by
three, seven, nine, eleven, thirteen and fifteen sagaras respectively. Thus
maximum lifespan in the eighth pair of kalpas is 22 sagaras.
அதற்கும் மேலே
உள்ள கல்பங்களில் உள்ளவர்களின் உத்கிருஷ்ட ஆயுள் முன் சொன்ன ஏழுடன் கூட்டினால் வருவது.... அதாவது,
5,6 வது
கல்பங்களில் வாழும் பிரம்ம, பிரம்மோத்ர தேவர்களின் உச்ச ஆயுள் (3+7) 10
சாகரங்களுக்கு சற்று கூடுதல்
7,8 வது
கல்பங்களில் வாழும் லாந்தவ, காபிஷ்ட தேவர்களின் உச்ச ஆயுள் (7+7) 14 சாகரங்களுக்கு
சற்று கூடுதல்
9,10 வது
கல்பங்களில் வாழும் சுக்ர, மஹாசுக்ர தேவர்களின் உச்ச ஆயுள் (9+7) 16 சாகரங்களுக்கு
சற்று கூடுதல்
11,12 வது
கல்பங்களில் வாழும் சதார, சகஸ்ரார தேவர்களின் உச்ச ஆயுள் (11+7) 18 சாகரங்களுக்கு
சற்று கூடுதல்
13,14 வது
கல்பங்களில் வாழும் ஆனத, பிராணத தேவர்களின் உச்ச ஆயுள் (13+7) 20 சாகரங்கள்
மட்டும்
15,16 வது
கல்பங்களில் வாழும் ஆரண, அச்யுத தேவர்களின் உச்ச ஆயுள் (15+7) 22 சாகரங்கள்
மட்டும்
(சாகரம் –
கடற்காலம்)
------------
அடுத்து மேலே உள்ள
விமாங்களில் உள்ளவர்களின்.....
----------------
----------------
வைமானிகரின் உயர்
ஆயுள்
ஆரணாச்யுதாதூர்த்வமேகைகேன
நவஸு க்ரைவேயகேஷு
விஜயாதிஷு ஸ்ர்வார்த்தஸித்தெள ச: - (சூ32) = (157)
आरणाच्युततादूर्ध्वमेकैकेननवसु ग्रैवेयकेषु विजयादिषु
सर्वार्थसिद्धौ च
Aranachyutadurdhvamekaikena navasu
graiveyakeshu vijayadishu sarvarthasiddhau cha
ஆரணாச்யுதாத் – ஆரண அச்யுத சொர்க்கத்தின்; ஊர்த்வ – மேலே ;
ஏகைகேன – முறையே ஒன்று ஒன்று அதிகமான; நவஸு க்ரைவேயகேஷு – ஒன்பது கிரைவேயகங்களில்
அணுதிசையில்; விஜயாதிஷு – விஜயாதி அணுத்திரங்களில்; ஸர்வார்த்தஸித்தெள –
ஸர்வார்த்தஸித்தியில்; ச: - அதிக ஆயுள்
ஆகும்.
Above Arana and Achyuta, the last pair of Kalpas, the
maximum lifespan in each of nine Graiveyak increases by one sagaras and the
last Graiyeyak having 31 sagaras. The maximum lifespan of the Heavenly beings
in all nine Anudish is 32 sagaras and in all five Anuttar is 33 sagaras. Life
span of the Heavenly beings in sarvarthsiddhi is fixed as 33 sagaras.
ஒவ்வொரு கிரைவேயகத்திலும்
ஒவ்வொரு ஸாகரோபமம் அதிகமான ஆயுள் இருக்கிறது.
கிழேயுள்ள
கிரைவேயகங்களில் முதாலாவதில் 23 கடற்காலங்களும்,
இரண்டாவதில் 24
கடற்காலங்களும்;
மூன்றாவதில் 25
கடற்காலங்களும் உயர் ஆயுள் ஆகும்.
நடுவிலுள்ள மூன்று
கிரைவேயங்களில் முறையே 26, 27, 28 ஸாகரோபமங்களும் (கடற்காலம்) அதிக ஆயுள் ஆகும்.
மேலேயுள்ள மூன்று
கிரைவேயங்களில் முறையே 29, 30, 31 ஸாகரோபமங்களும் (கடற்காலம்) அதிக ஆயுள் ஆகும்.
அடுத்துள்ள
அனுத்திசை விமானங்களில் 32 கடற்காலங்களும்,
விஜய முதலிய நான்கு
அனுத்திரங்களில் அதிக ஆயுள் 33 கடற்காலங்களும்,
ஸர்வார்த்த
சித்தியிலும் அதிக ஆயுள் 33 ஸாகரோபமங்கள் ஆக உள்ளன. (குறைந்த ஆயுள் என்ற பிரிவு இங்கு
இல்லை.)
மற்றவற்றில் ஜகன்ய
(குறைந்த) ஆயுள் உண்டு)
---------------
அடுத்து குறைந்த
ஆயுள் பற்றியும் காண்போம்..
-------------------
-------------
வைமானிகரின்
குறைந்த ஆயுள்
அபரா பல்யோபமமதிகம் - (சூ33)
= (158)
अपरापल्योपममधिकम्
Apara palyopamamadhikam
அபரா – குறைந்த ஆயுள்;
ப்ல்யோபமமதிகம் - ஒரு பல்யத்திற்கும் கொஞ்சம் அதிகம்.
The minimum lifespan of Heavenly beings in the first pair of
Kalpas is a little over one palyopama.
செளதர்ம, ஐசானிய
கல்பத்தில் உள்ள தேவர்களுக்கு குறைந்த பட்ச ஆயுள் ஒரு பல்யத்திற்கு மேல் சற்று
அதிகம்.
-----------
Let us just see the
description of a palya, 51 "Palya is of three kinds, vyavahara palya,
uddhara palya and addhapalya.
These are significant
terms, The first is called vyavahara palya as it is the basis for the usage of
the other two palyas, There is nothing which is measured by this.
The second is uddhara
palya, as the continents and oceans are numbered by the bits of wool drawn out.
The third is addhapalya. Addha means duration of time.
Now the first palya is
described. Three pits of the extent one yojana (consisting of 2,000 kroias)
long, one yojana broad and one yojana deep, based on the measure of pramaoangula,
are dug out.
These are packed with the
smallest ends of the wool of rams from one to seven days old, the bits
incapable of being further cut by scissors. This is called vyavahara palya.
Then the small bits of
wool are taken out one by one once in every one hundred years. The time taken
for emptying the pits in this manner is called vyavahara palyopama. Each bit is
again cut into so many pieces as there are instants in innumerable crores of
years.
And (imagine that) with
such bits the pits are filled up. This is called uddhara palya. Then these bits
are taken out one by one every instant. The time taken for emptying the pits in
this manner is called uddhara palyopama.
Ten crores multiplied by
one crore uddharapalyas make up one uddhara sagaropama.
The continents and oceans
are as numerous as the bits in two and a half uddhara sagaropamas.
The pits are filled with
bits got from cutting each bit of uddharapalya into the number of instants in
one hundred years. This is addhapalya.
Then these bits are taken
out one by one every instant. The time taken to empty the pits in this manner
is called addha- palyopama.
Ten crore multiplied by
one crore addhapalyas make one
(reference from Reality
book, by S.A. Jain)
-----------------
அதற்கு அடுத்த
கல்பத்தில் உள்ளவர்களின்............
வைமானிகரின்
குறைந்த ஆயுள்
பரத: பரத: பூர்வா
பூர்வாS னந்தரா: - (சூ34) =
(159)
परतः परतः पूर्वा पूर्वाऽनन्तरा
Paratah paratah purva-purva(a)nantarah
பரத: பரத: - மேலே
மேலே உள்ளவர்களின்; பூர்வா பூர்வா – கீழே கீழே உள்ளவர்களின் உத்கிருஷ்ட ஆயுள்; அனந்தரா: - ஜகன்ய ஆயுளாக
The maximum lifespan of the Heavenly beings in the
immediately preceding pair of Kalpas is the minimum lifespan of the Heavenly
beings of the next pair of Kalpas. Similarly the minimum life span is 22
sagaras in the first Graiveyak and increases to 30 sagaras in the last
Graiveyak, 31 sagaras in all nine Anudish and 32 sagaras in Anuttars except
Sarvarthasiddhi.
முதல்
சுவர்க்கங்களின் தேவர்களின் அதிகபட்ச ஆயுள் அதனையடுத்து மேலே உள்ள சுவர்க்கங்களின்
தேவர்களின் குறைந்த பட்ச ஆயுளாகும்.
செளதர்ம, ஐசான
சுவர்க்கங்களில் உள்ள தேவர்களின் உச்ச ஆயுள் 2 கடற்காலம், மேலே உள்ள ஸநத்குமார,
மாஹேந்திர சுவர்க்க தேவர்களின் குறைந்த பட்ச ஆயுளாகும்.
அதே போல
அடுத்தடுத்து உள்ள சுவர்க்கங்களின் உயர் ஆயுள், மேலே உள்ளவர்களின் குறைந்த
ஆயுளாகும்.
சர்வார்த்த
சித்தியில் உள்ள தேவர்களுக்கு மட்டும் குறைந்த ஆயுள் அளவு கிடையாது.
--------------
நரகர்களின் ஜகன்ய
ஆயுள்......
-----------
------------------
நாரகியரின்
குறைந்த ஆயுள்
நாரகாணாம் ச
த்விதியாதிஷு - (சூ35) = (160)
नारकाणां च द्वितीयादिषु
Narakanam cha dvitiyadishu
நாரகாணாம் –
நாரகர்களுக்கு; ச - முன்னே, முன்னே உள்ளவர்களின் உயர் ஆயுள்
பின்னே, பின்னே உள்ளவர்களுக்கு குறந்த ஆயுள்;
த்விதியாதிஷு – இரண்டாவது நரகத்திலிருந்து.
From the second infernal region onwards the minimum lifespan
of infernal beings in a region is same as the maximum lifespan in the previous
infernal region.
முதல் நரகத்தில்
உள்ள நாரகர்களின் உயர் ஆயுள் இரண்டாவது நரகத்தின் குறைந்த ஆயுள் ஆகும். அதாவது ஒரு
கடற்காலம்.
மூன்றாவதில்
உள்ளவர்களுக்கு இரண்டாவதின் உயர் ஆயுளான 3 கடற்காலம் ஜகன்ய ஆயுளாகும்.
நாலாவதின்
நாரகர்களுக்கு குறைந்த ஆயுள் மூன்றாவதான உயர் ஆயுள் 7 கடற்காலமாகும்.
ஐந்தாவதின்
நாரகர்களுக்கு குறைந்த ஆயுள் நான்காவதான உயர் ஆயுள் 10 கடற்காலமாகும்.
ஆறாவது நரகத்தின் நாரகர்களுக்கு குறைந்த ஆயுள் ஐந்தாவதான உயர்
ஆயுள் 17 கடற்காலமாகும்.
ஏழாவது நரகத்தின் நாரகர்களுக்கு குறைந்த ஆயுள் ஆறாவதான உயர் ஆயுள்
22 கடற்காலமாகும்
---------------
அப்படியானல் முதல்
நரகத்தின் குறைந்த ஆயுள்......
நாரகியரின்
குறைந்த ஆயுள்
தசவர்ஷ ஸஹஸ்ராணி
ப்ரதமாயாம் - (சூ36) = (161)*
दशवर्षज्ञसहस्राणि प्रथमायाम्
Dasha-varsha-sahastrani prathamayam
தசவர்ஷ ஸஹஸ்ராணி – ஜகன்ய ஆயுஷ்யம் பத்தாயிரம் வருஷம்; ப்ரதமாயாம் – முதல் பூமியில்
The minimum lifespan of infernal beings in the first region
is ten thousand years.
முதல் நரக
பூமியில் பத்தாயிரம் வருடங்கள் ஆகும்.
-----------
இப்போது பவனவாசி
தேவர்களின் குறைந்த ஆயுள் பற்றி.....
---------------
பவனேஷு ச - (சூ37)
= (162)
भवनेषु च
Bhavaneshu cha
பவனேஷு – பவனவாசி
தேவர்களுக்கும்; ச – அதே ஆயுள்.
In the Residential regions also the minimum lifespan of the
Residential devas is ten thousand years.
பவணவாசி
தேவர்களுக்கும் குறைந்த ஆயுள் பத்தாயிரன் ஆண்டுகளாகும்.
--------------
அடுத்து வியந்தர
தேவர்களின்........
-----------------
வ்யந்தராணாம் ச - (சூ38)
= (163)
व्यन्तराणां च
Vyantaranam cha
வ்யந்தராணாம்
- வியந்திர தேவர்களுக்கும்; ச – அதே குறைந்த ஆயுள்
The Peripatetic devas also have a minimum lifespan of ten
thousand years.
வியந்தர
தேவர்களுக்கும் குறைந்த ஆயுள் பத்தாயிரன் ஆண்டுகளாகும்.
-----------
அவர்களின் உயர்
ஆயுள்........
-----------------
பரா பல்யோபமமதிகம்
- (சூ39) = (164)
परापल्योपममधिकम्
Para palyopamamadhikam
பரா – அவர்களுடைய உயர்
ஆயுள்; பல்யோபமமதிகம் – ஒரு பல்யத்திற்கும் கொஞ்சம் அதிகம்.
The maximum lifespan of the Peripatetic devas is a little
over one palya.
வியந்திர
தேவர்களுடைய உயர் ஆயுள் ஒரு பல்யோமத்திற்க்கு கொஞ்சம் அதிகமாகும்.
------------
அடுத்து ஜோதிஷ்க
தேவர்களின்......
-----------------
ஜ்யோதிஷ்காணாம் ச - (சூ40)
= (165)
ज्योतिष्कणां च
Jyotiskanam cha
ஜ்யோதிஷ்காணாம் –
ஜ்யோதிஷ்க தேவர்களின் உயர் ஆயுள்; ச – அதே போல் ஒரு பல்யத்திற்கு அதிகம்.
The maximum lifespan of the Stellar devas is also a little
over one palya.
ஜோதிஷ்க
தேவர்களின் உயர் ஆயுள் ஒரு பல்யோபமத்திற்கு சற்று அதிகமாகும்.
--------------
அவர்களது குறைந்த
ஆயுள்.......
-----------------
ததஷ்டபாகோநபரா - (சூ41) = (166)
तदष्टभागोऽपरा
Tadashtabhago (a)para
ததஷ்டபாகா – ஒரு பல்யத்தில்
எட்டில் ஒரு பாகம்; அபரா – ஜகன்ய ஆயுள்
The minimum lifespan of the Stellar devas is one-eighth of a
palya.
ஜ்யோதிஷ்க
தேவர்களின் குறைந்த பட்ச ஆயுள் ஒரு பல்யத்தில் எட்டில் ஒரு பங்காகும்.
----------------
அடுத்து
லெளகாந்திக தேவர்களின் ஆயுள் பற்றி.....
-----------------
லெளகாந்திகா
நாமஷ்டெள ஸாகரோபமாணி ஸர்வேஷாம் - (சூ42)
= (167)
लौकान्तिकानामष्टौ सागरोपमाणि सर्वेषाम्
Laukantikanamashtau sagaropamani sarvesham
ஸர்வேஷாம் லெளகாந்திகாநா
– எல்லா லெளகாந்திக தேவர்களுக்கும் ஆயுள்;
அஷ்டெள ஸாகரோபமாணி – எட்டு கடல் கால அளவாகும்.
Lifespan is eight sagaras for all Laukantikas.
எல்லா லெளகாந்திக
தேவர்களுக்கும் ஆயுள் எட்டு ஸாகரோபமங்களாகும்.
இவர்கள் அனைவரும்
சுக்ல லேச்யை உள்ளவர்கள் ஆதலால் உயரம் ஐந்து முழங்களாகும்.
ஆயுள் எட்டு
பல்யோபமங்களாகும். உயர், குறைந்த ஆயுள் என்ற பேதமில்லை.
பரத கண்டத்தில்
வந்து மனிதராய் பிறந்து வீடுபேறு அடைவார்கள். ஒரு பிறப்பே உடையவர்கள்.
-------------
இது வரை நான்காம் அதிகாரத்தில் உள்ள சூத்திரங்களைப் பார்த்தோம்.
இனி ஐந்தாம்
அதிகாரத்திலிருந்து தொடர்வோம்.
----------------
மங்களாஷ்டகம்:
கோடி சதம்
த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச
ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம்
ஸவ்வம்
பணமாமி பக்தி
ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா
அக்ஷரமாத்ரபத
ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம
க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே
தஸாத்த்யாயே
பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:
ததத்வார்த்த ஸுத்ர
கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர
ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்
ஜம் ஸக்கயி தம்
கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ
பாவயி அஜராமரம் ட்டாணம்
தவயரணம் வயதரணம்
ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்
அந்தே ஸமாஹிமரணம்
சஉவிஹ துக்கம் ணிவாரேஇ
--- 0 ---
No comments:
Post a Comment