tattvartha sutra - chapter 6




தத்வார்த்த சூத்திரம்: - அத்தியாயம் # 6



கடவுள் வாழ்த்து


மோக்ஷ மார்கஸ்ய நேதாரம் பேதாரம் கர்ம பூப்ப்ருதாம்
ஞாதாரம் விஸ்வ தத்த்வானாம் வந்தே தத்குண லப்த்தயே

த்ரைகால்யம் த்ரவ்ய ஷட்கம் நவபத ஸ்ஹிதம் ஜீவ ஷட்காய லேஸ்யா:
பஞ்சான்யே சாஸ்திகாயா வ்ரத ஸ்மிதி கதி ஞான சாரித்ர பேதா:

இத்யேதன் மோக்ஷ மூலம் த்ரிபுவன மஹிதை:ப்ரோக்தம் அர்ஹத் பிரீஷை:
ப்ரத்யேதி ஸ்ருத்ததாதி ஸ்ப்ரூஷதி ச மதிமான் ய: ஸ வை சுத்தத்ருஷ்டி:

ஸித்தே ஜ்யப்பஸித்தே சவ்விஹராஹணா ஃபலம் பத்தே
வந்தித்தா அரஹந்தே வோச்சம் ஆராஹணா கமஸோ

உஜ்ஜோவணம் உஜ்ஜவணம் ணிவ்வஹணம் ஸாஹணம் ச ணிச்சரணம்
தம்ஸணணாண சரித்தம் தவாணம் ஆராஹணா ஃபணியா

----------------

முன் ஐந்து அதிகாரம் வரை ஜீவ, அஜீவ பதார்த்தம் வரை வழங்கப்பட்டது.

தற்போது யோகம், அதன் பிரிவுகள் மற்றும் இலக்கணங்கள் பற்றி சொல்லப்படுகிறது.


ஆஸ்ரவ தத்துவ விளக்கம்
(Influx of Karma)
 வினை வரும் வழிகள்



 காயவாங் மன: கர்ம யோக:  -  (சூ1) = (210)


कायवाङ्मनः कर्म योगः


Kaya-van-manah karma yogah



காயவாங் மன: கர்ம – சரீரம், வசனம், மனம் இவற்றின் செயல்பாட்டினால் ஆன்மாவில் ஏற்படும் சலனத்திற்கு (அதிர்விற்கு);  யோக: - யோகம் என்கின்றனர்.

The action of the body, the speech organ and the mind is called yoga (activity).



உடலால் வேலை செய்வது, வாயினால் பேசுதல், மனதால் நினைப்பது ஆகியவற்றால் ஆன்மாவில் ஏற்படும் சலனத்திற்கு யோகம் எனப்படும்.


பழைய கர்மங்களின், வினைகளின் தூண்டுதலால் ஆன்மாவில் வெளிப்படும் திறனாகும்.

மன,வசன, காயத்தினால்தான் ஆன்மாவின் திறமை வெளிப்படுகிறது.

கர்மம், கிரியா, செயல், action ஒரே பொருளைக் கொண்டவை.

காயயோகம், (bodily activity) வசன யோகம் (speech…) மற்றும் மனோ யோகம் (mind, internal cause) என மூன்று வகைகளாக இருக்கிறது.

(ஏழு வகை) உடல்களின் காய வர்கணைகளில், ஒன்றின் துணையால், வீர்யாந்திராய கருமம் கேடும் தணிவும் (க்ஷயோபசமம்) ஆவதால் ஆன்மாவில் ஏற்படும் சலனம் காய யோகம் ஆகும்.

நாம கர்மம் செயலுக்கு (உதயமாவதால்) வருவதாலும், வீர்யாந்தராய ஞானாவரணீய கர்மங்களின் கேடு தணிவினாலும், ஒலி கொடுக்கும் அணுக்களின் உதவியாலும் ஆன்மாவில் ஏற்படும் சலனத்திற்கு வசன யோகம் எனப்படும்.

வீர்யாந்தராயம் மற்றும் நோஇந்திரியா வரணத்தின் கேடு தணிவினால் மனோ லப்தி உண்டாகும் போதும், மனோ வர்கணை பரமாணுக்களின் உதவியால் ஆன்மா பிரதேசத்தில் ஏற்படும் சலனத்திற்கு மனயோகம் எனப்படும்.
----------
வீர்யாந்தராயம் மற்றும் ஞானாவரண கருமங்கள் அழிந்த பின்னரும் ஸயோக கேவலிக்கு வர்க்கணைகளின் அடிப்படையில் மூன்று விதமான யோகங்கள்  இருக்கின்றன.
------------- 


ஸாம்பராயிக ஆஸ்ரவம் – கஷாயத்தோடு கூடிய ஆஸ்ரவம் ஆகும்.


ஈர்யாபத ஆஸ்ரவம் – கஷாயமின்றி யோகம் மட்டிலும் ஏற்படுவது ஆகும்.

------------------

பிறவி உயிர்களின்  செயல்பாடுகளே….



----------


ஆஸ்ரவத்தின் இலக்கணம்




ஸ ஆஸ்ரவ:  -  (சூ2) = (211)


स आस्रवः


Sa asravah



ஸ – அந்த யோகம்; ஆஸ்ரவ:  - ஆஸ்ரவம் (ஊற்று) ஆகும்.

These three types of yogo cause vibration/throbbing in the space points of soul resulting in influx (asrava) i.e. incoming of karmas.



கிணற்றில் நீர் வர ஊற்று காரணமோ அதுபோல் ஆன்மாவில் வினை ஊற்று வந்து சேர்வதற்கு யோகம் காரணமாகும்.

இந்த மூன்று வித யோகமே ஆஸ்ரவமாகும்.  யோகமே வினை வரும்  வழியாகும்.

ஏரியில் நீர் வர நீரோடைகள் காரணம் போல, ஆன்மாவில் வினைத்துகள்கள் வர உயிரினங்களின் செயல் பாடுகள் காரணமாகின்றன.

காரணம் மூன்று யோகங்களாயினும் காரணத்தைக் காரியமாக (செயலாக) அதனையே ஆஸ்ரவம் என்று கூறுகிறார்.

பிராணன் நிலைக்க உணவே காரணமாயினும், உணவையே உயிர் எனக் கூறப்படுவது போலாகும்.
----------

அடுத்து புண்ணிய, பாவங்களுக்கு யோகம் மட்டும்…….

------------- 

ஆஸ்ரவங்களின் வகைகள்




சுப: புண்யஸ்யாசுப: பாபஸ்ய – (சூ3) = (212)


शुभः पुण्यस्याशुभः पापस्य


Shubhah punyasyashubhah papasya



சுப: - சுப கர்மம்; புண்யஸ்ய – புண்ணிய கர்ம ஆஸ்ரவ காரணம்; அசுப:- அசுப யோகம்;  பாபஸ்ய – பாப கர்ம ஆஸ்ரவ காரணம்.

Influx is of two types-the good and the evil caused by virtuous and wicked yoga respectively. Influx of good karmas help purify the soul while the influx of evil karmas take the soul away from its purification.


நல்ல எண்ணச் செயல்கள் சுபயோகம்; தீய எண்ணச் செயல்கள் அசுபயோகம் ஆகும்.

ஜைன தரிசனத்தில் செயல்பாடுகளைக் காட்டிலும் எண்ணங்களுக்குத்தான் முக்கியத்வம் அளிக்கப் படுகிறது.

செயல்பாடுகளுக்கான  எண்ணங்கள் அடிப்படையிலேதான் பயன்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு செயலுமே வினை ஊற்றுக்கும், வினைக்கட்டிற்கும் காரணமாகின்றன.

எது, எதனால் ஆன்மாவை தூய்மையாக்கப்படுகிறதோ (நன்மையை தருகிறதோ) அது பூண்ணியம் (merit), அதாவது சாதாவேதனீயம் (happy feeling) ஆகும்.

எவை நற்செயலை செய்யவொட்டாமல் தடுக்கிறதோ, அதாவது ஆன்ம நலனுக்கு தீமை விளைவிக்கிறதோ அது பாபம் (demerit), அசாதாவேதனீயம் (unhappy  feeling etc.) ஆகும்.

-----------
அசுபயோகம்: இம்சை, திருட்டு, உடல் உறவு கொள்ளுதல் (மைதுனம், capulation) ஆகிய தீச்செயல்கள் அசுப காய யோகமாகும்( ie wicked activities of the body).

பொய் பேசுதல், கடுஞ்சொல், நாகரீக மற்ற சொற்கள் போன்றவை அசுப வசன யோகம்;

கொலை செய்ய எண்ணுதல், பொறாமைப்படுதல், பழித்துக் கூறல் ஆகியவை அசுப மனோயோகம் ஆகும்.

சுபயோகம்: மேற் சொன்னவற்றிற்கு எதிர் மாறானவைகள் – சுப காய, சுப வசன, சுப மனோ யோகமாகும்.
------------

ஆஸ்ரவம் பிறவி உயிர்களுக்கு  சமமான பலனை அளிக்கிறதா…..

---------- 


ஸகஷாயாகஷாயயோ: ஸாம்பராயிகேர்யபதயோ:  - (சூ4) = (213)


सकषायाकषाययोः सांपरायिकेर्यापथयोः


Sakashayakashayayoh samparayikeryapathayoh



ஸகஷாயாகஷாயயோ: - கஷாயத்தோடு கூடிய அல்லது கஷாயம் இல்லாத ஜீவனுக்கு;  ஸாம்பராயிகேர்யபதயோ: - முறையே ஸாம்பராயிக,  ஈர்யாபத  ஆஸ்ரவம் உண்டாகிறது.

There are two kinds of influx, namely samparayik influx caused to persons with passions, which extends transmigration, and iryapath influx caused to persons free from passions, which prevents or shortens transmigration.  


கோபம் (anger), மானம் (pride), மாயை (deceitfulness), லோபம் (greed) ஆகிய கஷாயங்கள் இருக்கின்றனவோ மற்றும் எந்த கஷாயம் (துவர்ப்பசை, passion) பிறவிக்கு வழிவகை செய்கிறதோ அவருக்கு சாம்பராகிய ஆஸ்ரவமும்;


எவருக்கு அப்படிப்பட்ட கஷாயம் இல்லையோ மற்றும் பிறவியைத் தடுக்கிறதோ அல்லது பிறவிக் காலத்தை குறைக்கிறதோ அவருக்கு  ஈர்யாபத  ஆஸ்ரவம் ஏற்படுகிறது.

----------------
கடும் உணர்வு (passion) , காபி, தேநீர் கஷாயம் போன்று சிவப்பாக இருப்பதால் கஷாயம்,  துவர்ப்பசை எனப்படுகிறது.

கடுக்காய் போன்றவை துணிகளுக்கு சாயம் கொடுப்பது போல, சினம் முதலிய ஆன்மாவில் வினைகள் சேர்வதற்கு துவர்பசையாக உள்ளது.
----------------
சுத்த ஆன்மாவில் உண்டாகும் ஆஸ்ரவம் அதிக சமயம் நிலைக்கும் ஸ்திதியும், பயனைத்தரும் அனுபாகமும் இன்றி கருமம் வருதல், செல்லுதல் அகிய தன்மையுடையாதால் ஈர்யாபத (சலனம்,vibrations) ஆஸ்ரவம் எனப்படும்.

------------
ஒன்று முதல் பத்து குணஸ்தானங்களில் உள்ளவர்களுக்கு ஸாம்பராயிக ஆஸ்ரவம் உண்டாகும்.
11 முதல் 13 முடிய குணஸ்தானங்களில் உள்ளவர்களுக்கு ஈர்யாபத  ஆஸ்ரவம்  உண்டாகும்.

14 ல் உள்ளவர்களுக்கு முற்றிலும் ஆஸ்ரவம் உண்டாவதில்லை.
-------

சாம்பராயிக ஆஸ்ரவத்தின்  பிரிவுகள் பற்றி….

---------------- 


ஸாம்பராயிக ஆஸ்ரவ வகை



இந்திரியகஷாய வ்ரதக்ரியா: பஞ்சசது: பஞ்சபஞ்ச விம்சதி ஸங்க்யா: பூர்வஸ்ய  பேதா:  - (சூ5) = (214)


इन्द्रियकषायाव्रत क्रियाः पञ्चचतुः पञ्चपञ्चपबिंशतिसंख्याः पूर्वस्य भेदाः


Indriya-kashayavratakriyah:pancha-chatuh:pancha-panchavinshati-sankhyah purvasya bhedah



இந்திரிய – ஐந்து இந்திரய; சது: கஷாய – குரோத,மானம், மாயை, லோபம்; பஞ்ச வ்ரதக்ரியா: - கொலை, பொய், களவு, காமம், பரிக்ரஹம்; (பஞ்சசது:) பஞ்சபஞ்ச விம்சதி – இருபத்தைந்து செயலகள்; ஸங்க்யா: பூர்வஸ்ய  பேத – ஸாம்பராயிக ஆஸ்ரவத்தின் பிரிவுகள் ஆகும்.


The subdivisions of the samparayik influx are the five senses (touch, taste, smell, sight and hearing), the four passions (anger, pride, deceit fulness and greed), non-observance of the five vows (killing, uttering falsehood, stealing, unchastity and attachment) and the following twenty-five activities: (1) Samyaktva-kriya (actions which stregthen right faith, such as worship true God, true preceptors and reading etc. true scriptures) (2) Mithyatva-kriya (worship of false God, false preceptor and reading etc. of untrue scriptures etc.) (3) Prayoga-kriya (going and returning) (4) Samadan-kriya (neglect of vows) (5) Iryapath-kriya (walking carefully looking on the ground) (6) Pradoshiki-kriya (blaming others in anger) (7) Kayiki-Kriya (act in wicked ways) (8) Adhikaran-kriya (keeping arms and amunition) (9) Paritapiki-kriya (causing pain to the living beings) (10) Pranitipatiki kriya (taking away life, senses, energy and respiration) (11) Darshan-kriya (infatuation to see beautiful forms) (12) Sparshan-kriya (pleasurable touch sensation due to passion for sex) (13) Pratyayiki-kriya (make available novel equipment for violence etc.) (14) Samantanupat-kriya (shitting and urinating at the places where animals and humas go, come, sit etc.) (15) Anabhoga-kriya (putting things on the ground or lying/sitting on the ground without looking at the ground) (16) Svahasta-kriya (to do work meant to be done by others on account of greed) (17) Nisarga-kriya (approve or appreciate injurious or unrighteous activities) (18) Vidaran-kriya (proclaiming others’ sins) (19) Agya-Vyapadiki-kriya (mis-interpreting the injunctions laid down in the scriptures) (20) Anakanksha-kriya (indifference to injunctions laid down in the scriptures) (21) Prarambha-kriya (feeling delighted or indulgence in piercing, hewing, slaughtering etc. of living beings) (22) Parigrahiki-kriya (preserving attachment to worldly objects) (23) Maya-kriya (deceitful practice with regard to knowledge, faith, conduct etc.) (24) Mithyadarshan-kriya (confirming wrong belief by praising another person’s wrong belief) (25) Apratyakhyana-kriya (not renouncing what can be renounced).  




தொடு, சுவை, நுகர், பார்வை, செவி; புலன்கள்- ஐம்பொறிகள்

குரோத,மானம், மாயை, லோபம் – துவர்பசைகள்

கொலை, பொய், களவு, காமம், பரிக்ரஹம் (பற்று) -  விரதமின்மை (vowlessness)


கிரியை (செயல்கள்) இருபத்தைந்து எவை  எனின்:

1. சம்யக்த்வ கிரியா:  நற்காட்சியை புலப்படுத்தும் செயல்கள்; பஞ்ச பரமேட்டிகள், உண்மையான குரு, சாஸ்திரங்களுக்கு வந்தனை செய்தல்; ஆத்ம வந்தனை முதலியன.


2. மித்யாத்வ கிரியா: தீக்காட்சி செயல்களைச் செய்தல், (லில்) ஈடுபடுதல். பொய்யான தேவன், குரு,சாஸ்திரம் இவற்றிற்கு வந்தனை செய்தல்.


3. பிரயோகக் கிரியா:  உடல் உறுப்புகளால் செய்யப்படும் செயல்கள் – நடத்தல், பேசுதல் போன்றவை.


4. ஸமாதானக் கிரியா: விரதம் ஏற்றவர் விரதம் ஏற்காதவரை அணுகுவது; ஏற்றபின் உதாசீனம் செய்வது..


5. ஈர்யாபதக் கிரியா: உயிர்களுக்கு இம்சை இன்றி பூமியை கவனித்து நடத்தல். எந்த வித தேவையின்றி வீணாக நடத்தல் போன்றவை.


6. ப்ராதோஷிகீக் கிரியா: கோபத்தால் பிறரை வைதல். பாப பந்தம்.


7. காயிகீக் கிரியா: தீயவை செய்ய முயல்வதற்கான செயல்கள்.


8. ஆதிகரணகீக் கிரியா: இம்சைக்கு ஏதுவான கருவிகளை தருதல், பெறுதல்.


9. பாரிதாபிகீக் கிரியா: தமக்கு அல்லது  பிற உயிர்களுக்கு மனவேதனை தரும் செயல்கள்.


10. ப்ராணாதிபாதிகீக் கிரியா: ஆயுள், இந்திரியம், பலம் மற்றும் ஸ்வாஸோச்சுவாஸம் பல பிராணன்களை தடை செய்வது, உறுப்புகளை துண்டிப்பது போன்றவை.


11. தர்சனக் கிரியா: மிகுந்த  விருப்பத்துடன் அழகுமிக்க உருவங்களைப் பார்ப்பது போன்ற செயல்கள்.


12. ஸ்பர்சனக் கிரியா: அழகான பொருள்களை, பெண்களை இச்சையுடன் நோக்குவது.


13. ப்ராத்யயிகீக் கிரியா:  புதுப்புது பொருட்களை சேர்த்தல், தேடுதல், உற்பத்தி செய்தல்.


14. ஸமந்தானுபாதக் கிரியா: ஆண், பெண், விலங்கு, பறவை போன்றவைகள் வாழும் இடத்திலும், வந்து போகும் இடத்திலும் மல, ஜலம் கழித்தல்.


15. அநாபோகக் கிரியா: நிலத்தை பார்க்காமல், சோதிக்காமல் அமர்வது, உறங்குவது போன்றவை.


16. ஸ்வஹஸ்த கிரியா: பணியாளர்களால், பிறரால் செய்யப்பட வேண்டிய செயல்களை தானே செய்வது. (அந்தந்த குலத்தின் வேலையை அவரவர் செய்தல்.)


17. நிஸர்க்க கிரியா: துன்பம் விளைவிக்க கூடிய, நேர்மையற்ற (பாப) செயலை செய்ய அனுமதிப்பது.


18. விதாரணக் கிரியா: பிறர் பாப, நேர்மையற்ற செயல்களை வெளியிடுவது.


19. ஆஜ்ஞாவ்யாபாதிகீ கிரியா: ஆகம நூல்களில் கூறப்பட்டுள்ள கிரியைகளை தான் செய்ய முடியாமையால், அவற்றை வேறு  விதமாக விளக்கிக் கூறுவது. (சாரித்ர  மோகனீய  வினையின் பயனால்)


20. அனாகாங்க்ஷ கிரியா: விழிப்பின்மை, அறியாமை, சோம்பல், தீய குணத்தால் அகமங்களில்  கூறிய நடைமுறைகளை அலட்சியப் படுத்துவது.


21. ப்ராரம்ப கிரியா: துண்டிப்பது, கத்திரிப்பது போன்ற தீயச் செயல்களை செய்வது,  தூண்டுவது, அனுமதிப்பது, ஆமோதிப்பது, செய்வதை கண்டு மகிழ்வது போன்றவை.


22. பாரிக்ரஹகீ கிரியா: போக, உபபோக பொருட்களை பற்றின்  காரணமாய் அளவுக்கதிகமாய்  சேர்த்தல், பாதுகாத்தல், போற்றுதல்.


23. மாயா கிரியா: ஞான, தரிசன விஷயங்களில் மாயம் செய்தல். நற்காட்சி, நல்ஞானம் முதலியவை உடையவரிடம், வஞ்சனையோடு சலனத்தை  ஏற்படுத்துதல்.


24. மித்யாதர்சன  கிரியா: தீய காட்சியுடையவரை புகழ்ந்து, மேலும் பொய்க்காட்சியில் வீழ்வது.


25. அப்ரதயாக்யான கிரியா: துறக்க வேண்டியவற்றை துறக்காது, தியாகத்தில்  ஈடுபாடு  கொள்ளாது  இருத்தல். (சாரித்ர மோகனீய வினையால்)


இந்த சாம்பராயிக வினைகளின்  ஊற்று வழிகளே பிறப்பு, இறப்புகளுக்கு வகை செய்கின்றன.
--------

மேலும் செயல்பாடுகள் எண்ணங்களாலும், உணர்வுகளாலும்……

------------- 


ஆஸ்ரவத்தின் விசேஷம்



தீவ்ரமந்தஜ்ஞாதாஜ்ஞானபாவாதிகரணவீர்ய விசேஷேப்யஸ்தத்விசேஷ: - (சூ6) = (215)



तीव्रमन्दज्ञाताज्ञात भावाधिकरण वर्यिविशेषेभ्यस्तद्विशेषः


Tivra-manda-gyatagyata-bhavadhikarana-virya-visheshe-bhyastadvisheshah



தீவ்ர மந்த க்ஞாதா க்ஞான பாவா – தீவிர, மந்த, அறிவு பூர்வமாக ஏற்படும், அறியாமையால் ஏற்படும் எண்ணம்; அதிகரண – ஊற்றுக்கு ஆதரவாக; வீர்ய – செயலை செய்வதற்கான ஆற்றல்; விசேஷேப்ய – விசேஷங்களில்; தத்விசேஷ: - ஆஸ்ரவத்தின்  விசேஷம் ஆகும்.


Influx is differentiated on the basis of intensity or feebleness of thought-activity, intentional or unintentional nature of action, the substratum and its peculiar potency.  



எண்ணங்கள் எவ்வாறு உள்ளதோ அதற்குத் தக்கவாறு வினைகள் வந்துசேரும்

அகம்/புறம் காரணங்களால் ஏற்படும் எண்ணங்கள் சில சமயம் தீவிரமாகவும், சில வேளைகளில் மந்தமாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் துவர்ப்பசைகள்.

துவர்ப்பசைகள் அதிகமாக உள்ள போது ஏற்படும் எண்ணங்களுக்கு, சினம் தீவிரமாக ஏற்படுகிறது, தீவிர பாவம் எனப்படும்.

குறைவாக ஏற்படும் எண்ணங்களுக்கு மந்த பாவம்  எனப்படும்.

அறிந்து விரும்பி செய்யப்படும் தன்மைக்கு  காரணமான எண்ணம் ஞாதபாவம் ஆகும்.

அறியாமல், கவனக்குறைவினால் ஏற்படும் எண்ணம் அஞ்ஞாதபாவம் ஆகும்.

ஊற்றுக்கு ஆதாரமாக (சார்புடைமை) இருப்பதற்கு அதிகரணம் எனப்படும்.

செய்வதற்கு  உண்டான தகுதியும்,  சக்தியும் வீரியம் எனப்படும்.

--------
இவையனைத்தும் வினாடிக்கு வினாடி மாறுபடுவதோடு, இது  போன்ற வேறுபாடுகள்,  ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் ஊற்றின் தன்மை மாறுபடுகின்றது.

வினைகள் வந்தடைவதில் ஏற்றம்/ தாழ்வும் இருக்கும் என்பதை அறியலாம்.
-----------

ஆஸ்ரவத்தின் அதிகரணங்கள் எவை என்று காண்போம்….

---------------- 



அதிகரணம்



அதிகரணம் ஜீவாஜீவா:  -  (சூ7) = (216)


अधिकरणं जीवाजीवाः


Adhikaranam jivajivah



அதிகரணம் – ஆதாரம்;  ஜீவாஜீவா – ஜீவ, அஜீவ என இருவகை அதிகரணங்கள்.


The living and the non-living constitute the substrata.  


ஆஸ்ரவத்திற்கு ஜீவன், அஜீவன் என இரண்டும் ஆதாரமாக உள்ளது.

ஜீவன், அஜீவன் ஆகியவை இரண்டும் இம்சை முதலியவற்றிற்கு உபகரண பாவமாக (being the instruments) இருக்கின்றது.

அவற்றின் பரியாயங்களைத்தான் அதிகரணம் எனக் கொள்ளப்படுகிறது.

ஏதாவது ஒரு பரியாயத்துடன் கூடிய பொருளே அதிகரணமாகிறது.
----------------

ஜீவ அதிகரணத்தின் பிரிவுகளைக் காண்போம்…..

----------------- 


ஜீவாதிகரணம்



ஆத்யம் ஸம்ரம்பஸமாரம்பாரம்பயோக க்ருதகாரிதானுமத கஷாய  சேஷைஸ்த்ரிஸ்த்ரிஸ்த்ரிசதுஸ்சைகச: - (சூ8) = (217)


आद्यं संरम्भ समारम्भारम्भ योग कृतकारितानुमत कषायविशेषेस्त्रिस्त्रिस्त्रिश्चतुश्चैकशः


Adyam samrambha-samarambha-rambha-yoga-krta-karitanumata-kasaya-visheshai-stristristri-shchatushchaikashah


ஆத்யம் – ஆதி அதிகரணம், ஜீவ அதிகரணம்; ஸம்ரம்ப – செயலைச் செய்ய நினைத்தல்; ஸமாரம்ப – அதற்கான சாமான்களை சேகரித்தல்; அரம்ப – செயலைச் செய்ய ஆரம்பித்தல்; யோக – மன,வசன, காய யோகம்; க்ருத – தான் செய்தல்; காரித – பிறரால் செய்வித்தல்; அனுமத – பிறர் செய்வதற்கு அமோதித்தல்;  கஷாய – குரோத, மான, மாயா, லோப; விசேஷ – விசேஷங்களினால்;  த்ரி,த்ரி,த்ரி,சது : மூன்று, மூன்று, மூன்று, நான்கு பிரிவுகள்: (மடங்கில் மொத்தம் 108)

The substratum of the living is of 108 kinds made up of three stages (try to do, make arrangements and start to do) multiplied by three yoga (mind, speach and body) multiplied by three ways (do, get it done or approve others do) multiplied by four passions (anger, pride, deceitfulness and greed).  


ஸம்ரம்பம்: கொலை முதலிய பாபச் செயல்களை செய்ய எண்ணுதல்/திட்டமிடுதல்.

ஸமாரம்பம்: அப்பாவச் செயல்களை செய்ய ஏற்பாடுகள் செய்தல்; அதாவது பொருள் முதலியன சேகரித்தல்.

ஆரம்பம்: பாபச் செயலைச் செய்ய துவங்குதல்.

மேற் சொன்ன மூன்றையும் மனம், வசனம், உடல் (காயம்) ஆகிய யோகங்கள் வழியே செய்வது. அதாவது 3x3 = 9 விதமாகிறது.

க்ருதம்- தானே செய்வது; காரிதம் – பிறரைக் கொண்டு செய்வித்தல்; அனுமோதம் – பிறர் செய்வதற்கு  துணை புரிவது, ஆமோதிப்பது. இவையும் மூன்றாகிறது.

ஆக 9 x 3 = 27 ஆகிறது.

பிறகு இவையெல்லாம் நான்கு கஷாயங்களினால் செய்வது. அதாவது கோபம் கொள்வதால்; செருக்கு கொள்வதால்; கபடத்தனம்/வஞ்சனையால் மற்றும் கடும் பற்றினால் செய்வது அக 4 x 27 = 108 விதமாகிறது.

ஆக ஜீவாதி கரணம் (substratum of living) மேற்கூறிய பிரிவுகளான 108 ஆகிறது.

---------
சினம் கொள்வதால் உடல் வழியே முயற்ச்சிப்பது, பிறர் கொண்டு செய்விப்பது, பிறர் செய்வதை ஆமோதிப்பது;

சினம் கொள்வதால் வசன வழியே முயற்ச்சிப்பது, பிறர் கொண்டு செய்விப்பது, பிறர் செய்வதை ஆமோதிப்பது;

சினம் கொள்வதால் மன வழியே முயற்ச்சிப்பது, பிறர் கொண்டு செய்விப்பது, பிறர் செய்வதை ஆமோதிப்பது;

அதே போல் செருக்கு, கபடம், பேராசை யின் வழியே உடல், வசன, மன வழியே, பிறர் கொண்டும், செய்வதை ஆமோதிப்பதும் ஆக செயலாகிறது.

ஆக மொத்தம் 4 கஷாயம் x 3 யோகம் = 12

அதே போல் 4 கஷாயம் x 3 யோகம் x 3 ஸம்ரம்ப (செய்ய நினைத்தல், சாமான் சேகரித்தல், செய்ய ஆரம்பித்தல்) 12 x 3 = 36

 3 ஸமாரம்ப (தான், பிறர் கொண்டு செய்தல், பிறர் செய்வதை  ஆமோதித்தல்)
 - 36 x 3 = 108 ஜீவாதிகரணம் ஆகிறது.
-----------
நம் ஜபமாலையில் 108 மணிகள் உள்ளன.

ஒவ்வொரு மணியும் ஒரு ஜீவாதிகரணத்தை நினைவு கூறுவதையே அமைத்துள்ளனர்.
------------

அடுத்து அஜீவாதிகரணத்தைக் காண்போம்….

------------- 



அஜீவாதிகரணம்




நிர்வர்தனாநிக்ஷேபஸம்யோகநிஸர்கா த்விசதுர்த்ரியேதா: பரம்  -  (சூ9) = (218)


निर्वर्तनानिक्षेपसंयोग निसर्गा द्विजतुर्द्वि्वत्रिभेदाः परम्


Nirvartana-nikshepa-sanyoga-nisarga dvi-chatu-rdvi-tribhedah param



நிர்வர்தனாநிக்ஷேப ஸம்யோகநிஸர்கா – நிர்வர்தனை, நிக்ஷேபம், ஸம்யோகம், நிஸர்கை;  த்விசதுர்த்ரியேதா: - இரண்டு, நான்கு, இரண்டு, மூன்று என முறையே பேதமுடைய; பரம் – மற்றது. 


Substratum of non-living for influx is of eleven kinds – two production or performance (primary-body, speach, mind, inhalation and exhalation; and secondary-making objects of wood, clay, etc or making pictures), four kinds of placing (placing on the floor without seeing, without cleaning, in a hurry and any where without care), two combining/mixing (food/drink etc. and any other item) and three urging or behaviour (urging the body, speach and mind to act).  


அஜீவ அதிகரண ஆஸ்ரவங்கள் இரண்டு நிர்வர்தனை (production) நான்கு நிக்ஷேபம், இரண்டு ஸம்யோகம்(combing), மூன்று நிஸர்கம் (urging) ஆகிய பதினோறு வகைகளை உடையவை.

நிர்வர்த்தனை – ரசனா, செய்தல், உண்டாக்குதல் (production/ performance)

அதிகரணம் இரு பிரிவுகளை உடையது.

மூலகுண நிர்வர்த்தனை : உடல், மனம், வாக்கு, சுவாஸஉச்சுவாசம் (inhalation/ exhalation) ஆகிய ஐந்தினை  உண்டாக்குதல். (ie substratum of the primary attributes)

உத்தரகுண நிர்வர்தனை: (substratum of the seconday attributes) சித்திரம் வரைதல், மரம், மண் பிம்பம் செய்தல் போன்றவை.

நிக்ஷேபம் (placing) நான்கு வகையாகும்.

அப்ரத்ய வேக்ஷித நிக்ஷேபாதி கரணம்: நிலத்தை பார்க்கமல், சோதிக்காமல் ஒரு பொருளை வைப்பது (எறும்பு, ஈ போன்றவற்றிற்கு ஹிம்சையினை தவிர்க்க)


துஷ்ப்ரம் ருஷ்ட நிக்ஷேபாதி கரணம்: இடத்தை சுத்தம் செய்யாமல் பொருட்களை வைத்தல்.


ஸஹஸா நிக்ஷேபாதி கரணம்: பொருட்களை அவசர அவசரமாக வைத்தல்.


அநாபோக நிக்ஷேபாதி கரணம்: பொருளை அதற்கு தகுதியான இடத்தில், கவனம் கொள்ளாமல், வைக்க கூடாத இடத்தில் வைத்தல்.


ஸம்யோகம்: சேர்த்தல்/கூட்டுதல்; இரு வகையாகும்.

பக்தபான ஸம்யோகாதி கரணம்:  உயிரோடு கூடிய (ஸசித்த) ஆஹாரத்தை தூய்மையில்லாத (அசித்த) ஆஹாரத்தோடு சேர்த்தல்.


தண்ணீரில் வெந்நீரை கலத்தல், பச்சை இலையால் சூடான பொருள் மூடுதல், போன்றவை.

உபகரண ஸம்யோகாதி கரணம்:  கமண்டலம், புத்தகங்கள் முதலியவற்றை பிஞ்சத்தால் சுத்தம் செய்தல், நனைந்த உடலை உலர்ந்த துணிகளால் துவட்டல்


நிஸர்காதி(urging behaviour)  கரணம்: கிரியை செய்தல். ( மூன்று வகைகள்.



காய நிஸர்காதி கரணம்: உடற் கிரியை செய்தல், உடலை ஒடுக்குதல்

வாங் நிஸர்காதி கரணம்: தீய சொற்களை பேசுதல்.

மனோ நிஸர்காதி கரணம்: தீயவற்றை மனதில்  செலுத்துவது., சிந்திப்பது.



அடுத்து ஒவ்வொரு கருமமும் எப்படி வந்தடைகின்றது…..

------------------ 


ஞானாவரணம், தர்ஸனா வரணம் தோன்ற காரணம்.




தத்பிரதோஷநிஹ்நவமாத்ஸர்யாந்தராயாஸாத நோபகாதா ஜ்ஞானதர்சநாவரணயோ: - (சூ10) = (219)


तत्प्रदोष निह्रवमात्सर्यान्तरायासादनोपघाता ज्ञानदर्शनावरणयोः


Tatpradosha-nihnava-matsaryantarayasadano-paghata gyana-darsanavaranayoh



தத் – ஞான தர்சன்ங்களைப்பற்றி; பிரதோஷ – தர்ம உபதேசத்தைல் வெறுப்படைதல்; நிஹ்நவ – தெரிந்ததை தெரியாதென்று மறைத்தல்; மாத்ஸர்ய – பொறாமை கொள்ளுதல்; அந்தராய – வெளிப்படுத்தும் ஞானத்தை தடை செய்தல்; ஆஸாதந – நல்ஞானத்திற்கு மதிப்பளிக்காமை; உபகாதம் – உயர்ந்த ஞானத்தை குறைகூறுதல்; ஞானதர்சநாவரணயோ: - ஞான, தர்சனாவரண ஆஸ்ரவமாகும்.


Spite against knowledge, concealment of knowledge, non-imparting of knowledge out of envy, causing impediment to acquisition of knowledge, disregard of knowle-dge and disparagement of true knowledge, lead to the influx of karmas which obscure knowledge and perception.  



வீடு பேறு அடைய தத்வ ஞானம் சாதனமாகும்.

அதனை எடுத்துக் கூறும் போது விரும்பாதிருத்தல், பொறாமைப் படுதல் – பிரதோஷம் (spite).

அறிந்தவற்றை கேட்கும் போது பிறரிடம் கூறாமல் இருத்தல் – நிஹ்நவம் (concealment of knowledge)

கற்றறிந்தவர் பிறருக்கு கற்பித்தால் அறிஞனாகி விடுவான் என்ற பொறாமையால் எடுத்துரைக்காமல் இருப்பது – மாத்ஸர்யம் (envy)

ஞானத்திற்கு காரணமான சாதனங்களைத் தடுத்தல் – அந்தராயம் (impediment).

(அதாவது படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள்,  எழுதுகோல் முதலியவற்றை பறித்தல்; பள்ளி, கலாசாலை, தர்மசாலை, ஆலயம் முதலிய அறிவை பெருக்கும் கூடங்களை கட்ட தடையாய் இருத்தல் போன்றவை.)

பிறர் வெளிப்படுத்தும் ஞானத்தைத் தடை செய்தல் (மதிப்புணராமல்) ஆஸாதநம் (disregard).

நற்செயல்களையும், பிறர் அறிந்த உயர்ந்த ஞானத்தை (தாம் அறிந்திருந்தாலும் வேண்டுமென்றே) குறை கூறுதல் – உபகாதம் (disparagement) எனப்படும்.

ஞானம் பற்றிச் சொன்னது போலவே தர்சனத்திற்கும் பிரதோஷம், நிஹ்வனம்,…. சொல்லலாம்.
------
ஞானாவரணீய ஆஸ்ரவம் ஞானத்திற்கும், தர்சனாவரணீய ஆஸ்ரவம் தரிசனத்திற்கும் பொருந்தும்.
-------

அடுத்து வேதநீய வினைகளுக்கான ஆஸ்ரவத்திற்கான காரணம் பற்றி……..

-------------- 


அஸாதா  வேதனீய  கருமங்களுக்கான காரணங்கள்




துக்கசோகதாபாக்ரந்தநவதபரிதேவநாந்யாத்ம ரோபயா ஸ்தாநாந்ய  ஸத்வேத்யஸ்ய – (சூ11) = (220)


दुःख शोकतापा क्रन्दन वधपरिदेवनान्यित्मपरोभयस्थान्यसद्वेघस्य


Duhkha-shoka-tapakrandana-vadha-paridevananya-tmaparobhaya-sthanya-sadvedyasya



துக்க – துக்கமும்; சோக – சோகமும்; தாப – கழிவிரக்கமும்; க்ரந்தன – உரக்க அழுதலும்; வத – வதையும்; பரிதேவநாநி – இறங்கும் படி அழுதலும்; அத்ம ரோபயா ஸ்தாநி – தனக்கும், பிறருக்கும் மற்றும் இருவரிடமும் ; அஸத்வேத்யஸ்ய- ஆஸாத வேதனீய கர்ம ஆஸ்ரவம்.

Suffering, sorrow, agony, moaning, injury and lamentation, in oneself, in others or in both, lead to the influx of karmas which cause unpleasant feeling.  



துக்க விஷய அனுபவங்கள் வழி ஆஸ்ரவம் எண்ணிலடங்காத உலக அளவு ஏற்படுகிறது. இருப்பினும் சிலவற்றைக் கூறுகிறார்.

சினம் முதலானவை தன்னுள்ளோ/பிறருள்ளோ/இருவரிடமோ உள்ளதால் இவையெல்லாம் அஸாதவேதனீய வினையின்  ஊற்றுக்கு காரணமாகி துன்பம், துக்கங்கள் எப்போதும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

துக்கம் – முள்தைத்தல், கல்தாக்குதல், வியாதியினால் உண்டாகும் வலி இவற்றால் உண்டாவது.

சோகம் – தனக்கு மிகவும் விருப்பமுள்ள பொருள் விலகிச் செல்வதால் ஏற்படுவது.

தாபம் – இல்லறத்தார்களுக்கு தம்முன் உண்டாகும் பழி அவமானம் முதலியவற்றால் ஏற்படும் போது உண்டாகும் மனோவேதனை.

ஆக்ரந்தனம் – வாய் விட்டும், கண்ணீர் விட்டும் உறக்க பச்சாதாபம் ஏற்படும் படி அழுதல்.

வதை – ஒரு ஜீவனின் இந்திரியம் முதலிய பல பிராணங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது பலவற்றையோ நீக்குதல்/ சிதைப்பது.

பரிதேவனம் – பிறர் மனதில் கருணை ஏற்படும் அளவிற்கு துயரமான எண்ணங்களைக் கொண்டு விம்மி விம்மி அழுதல்.

இவையாவும் அசாதா வேதனீய (unpleasant feeling producing karma) வினைவரும் வழிகளாகும்.
------------


இனி சாதாவேதனீய கருமங்களின் ஊற்றுக்கான காரணங்களை……

-----------------


ஸாதா  வேதனீய  கருமங்களுக்கான காரணங்கள்





பூதவ்ரத்யனுகம்பாதான ஸ்ராகஸம்யமாதி யோக: க்ஷாந்தி: சௌசமிதி 
ஸ்த்வேத்யஸ்ய – (சூ12) = (221)


भूतव्रत्यनुकम्पादानसराग संयमादियोगः क्षान्तिः शौचमिति सद्वेद्यस्य


Bhuta-vratyanukampa-dana-saragasanyamadi-yogah kshantih shauchamiti sadvedyasya



பூதவ்ரத்யனுகம்பாபிராணிகளிடத்தும் விரதிகளிடத்தும் அருள் காட்டுதல்; தானதானம் செய்தல்; ஸ்ராகஸம்யமாதிபொறிவழி ஆசைகளில் விரக்தி கொள்ளல்; யோக: - செயல்; க்ஷாந்தி: - பொறுமை, கோபமின்மை; சௌசமிதிலோபமின்மை ஸ்த்வேத்யஸ்ய

Compassion towards living beings in general and the devout in particular, charity, asceticism with attachment, restraint-cum-non-restraint, involuntary dissociation of karmas without effort, austerities not based on right knowledge, contemplation, equanimity, freedom from greed_these lead to the influx of karmas that cause pleasant feeling.  


இன்பத்தை தரவல்லது ஸாதா வேதனீய கர்மம் (pleasant feeling).

பூதஅனுகம்பா: எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுதல்.

விரதி அனுகம்பா: அனுவிரதி மற்றும் மகாவிரதிகளிடத்தில் கருணையும், அளவிலா அன்பும் வைத்தல்.

தானம்: பிறருக்கு நன்மை தரும்படியாக தன் பொருட்களை வழங்குதல்.

ஸராக ஸம்யமம்: ஐம்புலன்களையும், மனத்தையும் அடக்குதலும், உயிர்களைக் கொல்லாமையும் ஸம்யமம் எனப்படும்.
சிறிதளவு பற்றுள்ள ஸம்யமத்திற்கு ஸராக ஸம்யமம் எனப்படுகிறது.

ஸம்யமா ஸம்யமம்: விரதங்களைக் காத்தல்.

ஸம்யமாதி  அதாவது விரதங்கள், அகாம நிர்ஜரை மற்றும் பால தபத்தினை குறிக்கும்.
-----------
அகாம நிர்ஜரை – போக, உபபோக பொருட்களை விடுவதற்கு மனமில்லையெனினும், அப்பொருள் கிடைக்காமல் தடுக்கப்படுவதால்; அவற்றினால் வரும் பாப வினைகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு கழிவதற்கு அகாம நிர்ஜரை  எனப்படும்.
------------
மேற்குறிப்பிட்ட யோகமே; அவற்றில் மனம் நாடாமலிருத்தலுக்கு பூதவ்ரத் யனுகம்பா தான ஸராக ஸம்யமாதி யோக மாகும்.
----------

க்ஷாந்தி – கோபம் முதலிய  கஷாயங்களின்றி இருத்தல்.

செளசம் – உலோபமும், பேராசையும் நீங்கிய சந்தோஷமான  நிலை.
-----------
இதி – அரஹந்தரை வணங்குதல்; பூசை செய்தல்; முனிவர்கள், சிறியோர்/பெரியோருக்கு உதவி/சேவை புரிதல்
----------
இவையணைத்தும் சாதா வேதனீய கருமத்தின் உற்றுக்குக் காரணங்கள் ஆகம்.

அடுத்து மோகனீய வினை ஊற்றிற்கான காரணங்கள்…..


-------------------- 


தர்ஸன  மோகனீயம்



கேவலிஸ்ருத ஸங்கதர்மதேவாவர்ணவாதோ  தர்ஸனமோஹஸ்ய  -  (சூ13) = (222)


केवलिश्रुतसंघ धर्म देवावर्णवादो दर्शनमोहस्य


Kevali-shruta-sangha-dharma-devavarnavado darsanamohasya



கேவலி – கேவலி பகவான்; ஸ்ருத – சாஸ்திரம்;   ஸங்க – முனி, ஆர்யிகை, ஸ்ராவகர், ஸ்ராவகியர் சங்கம்; தர்ம – அறம்; தேவர் – மேல் உலகத்தவர்; அவர்ணவாதோ – பழிப்பதால்; தர்ஸனமோஹஸ்ய  - தர்ஸன மோகனீய கர்ம ஆஸ்ரவ காரணங்கள்.

Attributing faults to the omniscient, the scriptures, the congregation of ascetics, the true religion and the celestial beings, leads to the influx of faith-deluding karmas.  



ஞானத்திற்கு கர்ம மறைப்பு இல்லாதவர் கேவலியாவார். முழுதுணர் அறிவுள்ள வாலறிவர் ஆவார். (perfect knowledge)

அதிசயிக்கத் தக்க புத்தியுடையவரும், தீர்த்தங்கரர்களின் முதன்மை சீடர்களான கணதரர்களால் அவரது உபதேசங்களை தொகுத்து கொடுத்திருப்பதை சாஸ்திரம்/ஆகமம் (scriptures) என்பர்.

முனி, ஆர்யிகை, ஸ்ராவகர், ஸ்ராவகியர் ஆகியோர்களைக் கொண்டு அமைந்தள்ளதை சங்கம் என்பர்.

முழுதுணர்ஞானி அருளிய கொல்லாமை விரதத்தை முதன்மையாக எடுத்துக் கூறுவது அறமாகும். (தர்மம்)

வாலறிவன், அரஹந்த கேவலி, அகமங்கள், தேவருல வாசிகள் ஆகியோர்களை இகழ்ந்து பேசுதல் (அவர்ணவாதம், இல்லாததை சொல்வது) தர்சன, மோகனீய வினை ஊற்றின் காரணமாகும்.

அதாவது நற்காட்சியை மறைக்கும் வினை வரும் வழி ஆகும்.
----------
கேவலிகளை பழித்தல் – கேவலி அவர்ணவாதம்.

புலால் உண்ணலாம் என ஆகமம்  கூறுகிறது  எனபொய்யுரைப்பது - சுருத அவர்ணவாதம்.

நால்வகை சங்கத்தை பழிப்பது – சங்க அவர்ணவாதம்.

அறத்தை  கடைபிடிப்பவர் அசுரர் ஆவார் என பழிப்பது – தர்ம அவர்ணவாதம்.

மது அருந்துவது, புலால் உண்பது போன்ற வற்றை செய்யும்; தேவர்கள் உயிர்பலி கொடுப்பதால் மகிழ்ச்சியடைவர் எனக்கூறுவது – தேவ அவர்ணவாதம் ஆகும்.

---------
தர்ஸணாவர்ணம் வேறு; தர்ஸனம் கிடைக்காதது. தர்ஸணமோகனீயத்தால் சம்யக் தர்ஸனம் கிடைக்காது.
----------

சாரித்ர மோகனீய கர்மத்தின் ஊற்று பற்றி காணலாம்….

------------ 


சாரித்ர மோகனீய வினை வரும் காரணங்கள்




கஷாயோதயாத்தீவ்ரபரிணாம ஸ்சாரித்ரமோஹஸ்ய – (சூ14) = (223)


कषायोदयात्तीव्रपरिणामश्चारित्रमोहस्य


Kashayodayattivra-parinama-shcharitra-mohasya



கஷாயோதய – துவர்ப்பசை உதயத்தால் வரும்; தீவ்ரபரிணாம – திவிர எண்ணம் உண்டாதல்;  ஸ்சாரித்ரமோஹஸ்ய – சாரித்ர மோகனீய கர்ம ஆஸ்ரவத்திற்கு காரணமாகும்.


Intense feelings induced by the rise of the passions cause the influx of the conduct-deluding karmas.



கோபம், மானம், லோபம், மாயா போன்றவற்றின்  உதயத்தினால் ஏற்படும் தீவிர எண்ணத்தூண்டலினால்; முனிவர்களை வசைபாடுதல், தர்மத்தினைக் கெடுத்தல், விரதிகளுக்கு பங்கம்  ஏற்படுத்துதல், நீக்குதல் முதலிய வற்றால் சாரித்ர  மோகனீய கர்மத்தின் ஊற்றுகள்  வரும்.


சாரித்ர மோகனீய வினை – நல்லொழுக்கத்தைத் தடுக்கும் வினை (conduct deluding karmas)


வேதனீய ஊற்றுகளின் வகைகள்-

ஹாஸ்ய (laughter) வேதனீயம்: சத்தியத்தை குறை  கூறுதல், ஆதரவற்றவர்கள், ஏழைகளை பரிகாசம் செய்தல், கோழி, பாம்பு, கீரி போன்ற விலங்களை சண்டையிட்டு மகிழ்தல், அதிகமாக பிதற்றல், சிரித்தல் மற்றும் பரிகாசத்திற்கான வழிகள் போன்றவை.

ரதி வேதனீயம்: விசித்திர வழி ஆனந்தங்கள், விரதங்களில் நாட்டமின்மை யுடன் பல விதமான விளையாட்டுகளில் நாட்டம் போன்றவை.

அரதி வேதனீயம்: பிறரிடம் வெறுப்பு கொள்ளல், பாபிகளுடன் சினேகம் கொள்ளுதல்.

அசாத வேதனீயம்: தானே துக்கமடைதல், பிறரை துக்கத்தில் ஆழ்த்துதல், அப்படிப் பட்டவர்களை பாராட்டுவது போன்றவைகள்.

பய வேதனீயம்: தானும், பிறரையும் பயமடையச் செய்தல்.

ஜுகுப்ஸா (disgust) வேதனீயம்:  சுகம் தரும் ஆசாரங்களில் வெறுப்பு, வீண் குற்றம் சாட்டுவதில் ஆர்வம் முதலியவை.

ஸ்திரி வேதனீயம்: பிறரை ஏய்த்தல், பிறர் குற்றம், பலகீனங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம், தீவிர பற்று போன்றவை.

புருஷ வேதனீயம்: சிறிதளவு சினம், அருட்தன்மை, மென்மையான சுபாவம், தன் மனைவியிடமே இன்பம் அனுபவித்தல் முதலியவை.

நபும்ஸக வேதனீயம்: அதிக கஷாயங்கள், மர்ம உறுப்புகளை வதை செய்தல், பெண்களை பலாத்காரம் செய்தல் முதலியன.
------------

ஆயுள் கர்மம்  பற்றிக் காண்போம்…..

------------ 


நரகபிறவிக்கு காரணம்




பஹ்வாரம்ப பரிக்ரஹத்வம் நாரகஸ்யாயுஷ்:  -  (சூ15) = (224)


बह्वारम्भपरिग्रहत्वं नारकसयायुषः


Bahvarambhaparigrahatvam narakasyayushah



பஹ்வாரம்ப – அதிக ஆரம்பம்; பரிக்ரஹத்வம் – மிக்க பற்று ஆகியவை; நாரகஸ்யாயுஷ்:  - நரகப் பிறவிக்கு காரணம்.

Excessive infliction of injury or pain (domestic works) and excessive attachment cause the influx of karma which leads to life in the infernal regions.



உலக  விஷயங்களில் அதிகமான ஈடுபாடு, கடும் தொழில்  பற்று; எதையும் தான் அடைய வேண்டும் என்பதில் எண்ணம்;  அதிகமான பொருட்பற்று; அதிக ஆசை கொண்டு செயல்படுதல் நரக பிறவிக்கு காரணமாகும்.

பிறர் பொருட்களை அபகரித்தல்; எதையும் தான் அடைய முற்படுதல்; பழிவாங்கும் சுபாவம், பகை, சண்டையிடும் தன்மை அதாவது கிருஷ்ண லேஸ்யை உடையவரும், ரெளத்ர தியானம் முதலியவை நரக ஆயுள் கரும  ஆஸ்ரவத்திற்கு காரணங்களாக அமைகின்றன.
-----------

விலங்கு கதி வினை ஊற்றுக்கான காரணங்களை….. 

------------ 

விலங்கு பிறவிக்கு காரணம்



மாயா தைர்யக் யோநஸ்ய – (சூ16) = (225)


मायातिर्यग्योनस्य


Maya tairyagyonasya



மாயா – வஞ்சனை, கபடம்; தைர்யக் யோநஸ்ய – விலங்கு பிறவி ஆஸ்ரவ காரணம்.

Deceitfulness causes the influx of life-karma leading to the animal, world and immobile life
 

வஞ்சனை செய்தல், ஜிநர் அறத்திற்கு மாறாக உரைத்தல் போன்றவைகளால் விலங்குப் பிறவிக்குரிய வினை வந்தடையும்.

மாயை (நிக்ருதி) – சாரித்ர மோகனீய கர்மம். அதன் உதயத்தால் சூது, வஞ்சனை, கபடம் தோன்றும்.

பிறரை ஏமாற்ற நினைத்தல்; நன்நடத்தை யில்லா வாழ்க்கை, தர்ம காரியங்களில் உண்மைக்கு புறம்பாக அறவுரை அளித்தல், மரணத்தின் போது நீல/கபோத லேஸ்யைகளுடன் (தீவிரமான தீய எண்ணங்களுடன்) இருப்பது; இவை விலங்கு கதிக்கான வினைவரும் வழிகளாகும்.

---------------

ஆயுள் பெறுவதற்கான வினையூற்று வழிகள்….

-----------------

மனித ஆயுளுக்கான ஆஸ்ரவம்



அல்பாரம்பபரிக்ரஹத்வம் மானுஷஸ்ய  - (சூ17) = (226)


अलपारम्भ परिग्रहत्वं मानुषस्य


Alparambha-parigrahatvam manushasyaa


அல்பாரம்ப – குறைவாக ஆரம்பம் செய்தல்: பரிக்ரஹத்வம் – தன் தேவைக்கு மட்டும் சேகரித்தல்; மானுஷஸ்ய – மனிதப் பிறவிக்கு காரணமாகும்.

Little infliction of injury or pain (domestic works) and little attachment cause the influx of life-karma that leads to human life. 


நரகாயுளுக்கு எதிரான காரணங்கள் என்ன உளதோ அவை மனிதப்பிறவிக்கான ஆயுள் ஊற்று வழிகளாகும்.

இயற்கையாகவே உலக விஷய ஈடுபாடு, பொருட்களை அதிக  அளவில்லாமல்  பார்த்துக் கொள்ளுதல், ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுதல் முதலானவை மனிதப்பிறவிக்கான காரணமாகும்.
-------------
மனித ஆயுளுக்கான ஆஸ்ரவம் பற்றி மேலும் அடுத்து…..


--------------------


ஸ்வபாவ மார்தவஞ் ச  - (சூ18) = (227)


स्वभावमार्दवं चं


Svabhavamardavam cha



ஸ்வபாவ – இயல்பாக; மார்தவஞ் ச  - மென்மைத்தன்மை உடையவராக இருப்பினும் 

Natural mildness also leads to the same influx. 


இயற்கையாகவே வணக்கமுடையவனாக இருப்பதும் கூட மனிதப் பிறவிக்கு காரணமாகும்.

இயல்பிலேயே மென்மையாக (gentle) இருப்பது மார்தவம் எனப்படும், அதாவது கர்வமில்லாத, செருக்கில்லாத மென்மையான பரிணாமம் எனப்படும்.
------------------
அதுவும் தேவப்பிறவிக்கும் வழிவகுக்கும் என்பதையும் தெரிவிக்கிறது.
---------------
மேலும் ஆஸ்ரவத்திற்கான காரணம்…..


---------------- 



நிச்சீலவ்ரதத்வம் ச ஸர்வேஷாம்  - (சூ19) = (228)


निःशीलव्रतत्वं च सर्वेषाम्


Nishshilavratatvam cha sarvesham



நிச்சீல வ்ரதத்வம் – ஏழு சீலம், ஐந்து விரதம் இல்லாதிருப்பது; ச – மற்றும்; ஸர்வேஷாம்  - எல்லா ஆயு கர்மத்துக்கும் ஆஸ்ரவ காரணம் ஆகும்.

Non-observance of supple-mentary vows, vows, etc. causes the influx of life-karmas leading to birth among all the four kinds of beings (conditions of existence).


ஏழு சீலம் : , திக் விரதம், அனர்த்த  தண்ட விரதம், போக உபபோக பரிமாணம்
 போன்ற குண விரதமும்; தேச விரதம், ஸாமாயிகம், புரோஷத உபவாசம், வையாவிருத்யம் போன்ற சிக்ஷா விரதமும் ஆகும்.

ஐந்து விரதம் : கொல்லாமை, பொய்யாமை, திருடாமை,  பிரம்மசர்யம், பற்றின்மை போன்றவை யாகும்.

இவை இரண்டும் இல்லாமலிருத்தல் ஆயுள் கர்மத்திற்கு ஆஸ்ரவ காரணங்கள் ஆகும்.

மேலும் உலக விஷயங்களில் குறைவான ஈடுபாடும், குறைவான பொருட் பற்றும் காரணமாகின்றன.

-------------
போகபூமியில் உள்ளவர்கள் விரதமும், சீலமும் இல்லாதவர்களாயினும், மென்மைத் தன்மையுடையவர்களாக இருப்பதால் ஈசான  சொர்க்கம் வரை சென்று பிறக்கின்றனர்.
---------

அடுத்து மேலுலகில் பிறப்பதற்கான காரணங்களை காண்போம்….

-------------------- 


தேவபிறவிக்கான  காரணங்கள்



ஸராகஸம்யமஸம்யமாஸம்யமாகாம நிர்ஜரா பாலதபாம்ஸி தைவஸ்ய  - (சூ20) = (229)


सरागसंयम संयमासंयमा काम निर्जराबालतपांसि दैवस्य


Saragasanyama-sanyamasanyamakamanirjara-balatapansi daivasya



ஸராகஸம்யம் போகோப போகப் பொருள்களை அடைய விரும்பி விரதமேற்றல்; ஸம்யமாஸம்யம் – விரத, விரதமற்ற தன்மை; அகாம நிர்ஜரா – சுய  விருப்பம்/முயற்சியின்றி சில வினைகள் கழிதல்; பாலதபாம்ஸி – முக்தி வழி நன்குணராமல் அதற்காக அஞ்ஞானத்துடன் தவமிருத்தல்;  தைவஸ்ய – தேவ பிறவிக்கு காரணமாகும். 

Restraint with attachment, restraint-cum-non-restraint, involuntary dissociation of karmas and austerities accompanied by perverted faith, cause the influx of life-karmas leading to celestial birth.  



ஸராக  ஸம்யமம் (restraint with attachment) : சிறிய எதிர்பார்ப்புடன்  கூடிய  கட்டுப்பாடு. முனிவர்களிடத்தில் காணப்படுவது.

ஸம்யமா ஸம்யமம் (restraint cum non-restraint) – கட்டுப்பாடு, கட்டுப்பாடின்மை, விரத  சீலங்கள் இருப்பினும் அவசியத்தின் காரணமாக மற்ற விஷயங்களில் ஈடுபாட்டுடன் இருத்தல். இது இல்லறத்தார் நிலை.

இல்லறத்தார் பெரிய கொலைகளை செய்வதில்லை என விரதமேற்பினும்; பயிரிடுதல், பூசை செய்தல், அடுப்பெரித்தல், செடி கொடிகளை வெட்டுதல் முதலானவைகளால் உண்டாகும் சிறு சிறு கொலைகளை தவிர்க்க இயலாதவர்கள்; அது அஸம்யமம் ஆகும்.

இவ்விரு தன்மைகளும் ஸம்யமம் ஆஸம்யமம் ஆகும்.

அகாம நிர்ஜரை (involuntary disassociation of Karmas) : பழைய வினைகள் தானாக கழிவதால் ஏற்படும் விளைவுகளை முழுமனதுடன் ஏற்றல்.

பாலதபம்: (austerities with perverted/improper faith) நல்ஞானம் இன்றி அரைகுறை அறிவுடன் தவம் மேற்கொள்ளல்.

இவை யனைத்தும் தேவ பிறவிக்கு வழிவகுக்கும்  காரணங்களாகும்.
--------------
மேலும் தேவ பிறவிக்குக்கான …..

--------------

ஸம்யக்த்வம் ச  -  (சூ21) = (230)


सम्यक्त्वं च


Samyaktvam cha



ஸம்யக்த்வம் ச – ஸம்யக்த்வமும் கூட

Right belief also is the cause of influx of life-karma leading to celestial birth in the Heavens.



ஸம்யக்த்வம் இருக்கும் போது ஆசை (ராகம்) இருந்தால் தேவ ஆயுள் பந்தமாகும்.

அதாவது  வைமானிக தேவராக பிறப்பர்.

மற்றவர்கள் பவன, திரய, கீழ் முத்தேவர்களாகப் பிறப்பர். இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொருந்தும்.
குறிப்பு: ஒரு மனிதனோ,விலங்கோ நற்காட்சி எய்துவதற்கு முன் வேறுவிதமான ஆயுட்கர்மம் கட்டியிருந்தால், அந்த பிறவியை எடுத்தே ஆகவேண்டும்.
---------

நாம கர்மம் பற்றி காண்போம்..

--------------- 


நாம கர்ம ஆஸ்ரவ காரணம்



யோகவக்ரதா விஸம்வாதனம் சாசுபஸ்ய நாம்ன:  -  (சூ22) = (231)


योगवक्रता विसंवादनंचाशुभस्य नाम्नः


Yogavakrata visamvadanam chashubhasya namnah


யோகவக்ரதா – மன வசன காய த்தின் கபடம்; விஸம்வாதனம் – விபரீதமாக நடத்தல்;  அசுபஸ்ய நாம்ன: - அசுப நாம கர்மத்திற்கு ஆஸ்ரவ காரணங்கள் 

Crooked and deceptive actions of mind, speach and body, and criticising the right actions and prompting for wrong actions cause the influx of inauspicious physique-making karmas.


தவறான சொல், முறை தவறி நடப்பது ஆகிய தீய யோகம் அசுப நாம வினைகளின் ஆஸ்ரவத்திற்கு காரணம் ஆகும்.

வக்ரதா – நேர்மையற்ற (crookedness)

யோக வக்ரதா – கெடுக்கும் எண்ணத்துடன் உதவி செய்ய வந்தவனை போல் கூறி நடித்து தீங்கு செய்வது.

விஸம்வாதனா – பிறரை ஏமாற்றுதல் (deceiving others)

ச (அசுஸ்ய) – மித்யாத்வம், பொறாமை, மன சஞ்சலம், தவறான எடை/அளவை கொண்டு லாபம் ஈட்டுதல்

அசுப நாம கர்மம் – inauspicious physique making karmas


அசுப நாம கர்மம் அழகான உடல் இல்லாமல் அங்கஹீனம் முதலான வற்றை அமைக்கும்.
-------------

அடுத்து சுப நாம கர்ம வினைகள் பற்றி….

------------------- 


தத்விபரீதம் சுபஸ்ய  - (சூ23) = (232)


तद्विपरीतं शुभस्य


Tadviparitam subhasya


தத்விபரீதம் – முன்  சூத்திரத்திற்கு எதிர்மறையானவை. சுபஸ்ய – சுபநாம கர்மத்தின் ஊற்றுக் காரணமாகும்.

The opposites of these (namely straightforward activity and honestry or candour) cause the influx of auspicious physique-making karmas.  


அதாவது யோகங்களின் செயல் நேர்மையாகவும், தவறான நடத்தை இல்லாமலும் இருப்பின் சுபநாமவினை ஊற்று ஏற்படும்.

தார்மீக புருஷர்களுக்கும்/இடங்களுக்கும் வணக்கம் செய்தல், பிறவிக்கு அஞ்சுதல், விழிப்புடன் இருத்தல்,சோம்பலைத் தியாகம் செய்தல், இவை சுப நாம வினை உற்றுக்கான காரணங்கள்.
---------

தீர்த்தங்கர நாம வினைக்கான காரணங்கள்….

-------------- 




தீர்த்தங்கர  நாம கர்ம ஊற்றுக்கான காரணம்




தர்சனவிசுத்திர்விநயஸம்பந்நதா சீலவ்ரதேஷ்வ்நதீசாரோSபீக்ஷணஜ்ஞாநோபயோகஸம்வேகெள சக்திதஸ்த்யாகதபஸீ ஸாதுஸமாதிர் வையாவ்ருத்ய கரணர்ஹதாசார்யபஹுஸ்ருதப்ரவசனபக்திராவஸ்யகாபரிஹாணிர் மார்கப்ரபாவனா ப்ரவசனவத்ஸலத்வமிதி தீர்த்தங்கரத்வஸ்ய – (சூ24) = (233)


दर्शनविशुद्धिर्निनय सम्पन्नता शीलवव्रतेष्वनतीचारोऽभीक्ष्ण ज्ञानोपयोगसंवेगौ शक्ति तस्त्यागतपसी साधु समाधिर्वैयावृत्त्यकरण मर्हदाचार्य बहुश्रुत प्रवचन भक्ति रावश्य का परिहाणिर्मार्गं प्रभवनाप्रवचन वत्सलत्व मितितीर्थकरत्वस्य


Darshanavishuddhirvinayasampannata shilavrate-shvanaticharo(a)bhikshna-gyanopayoga-sanvegau shaktitastyaga-tapasi- sadhusamadhirvaiya-vrattyakaranamarhadacharya-bahushruta-pravachana bhaktiravashya-kaparihanirmargaprabhavana pravachanavatsalatvamiti tirthankaratvasya



தரிசன விசுக்திஇருபத்தைந்து குற்றங்கள் நீங்கிய நற்காட்சி (ஜிநபகவான் உரைத்த முக்திக்காண வழிகளை நம்புதல்);

விநய ஸ்மப்ந்நதாஸம்யக் தர்சன, ஞான, சாரித்ரய மான மும்மணிகளையும், அதனை தழுவி இருக்கும் குருக்களிடம் பணிவு காட்டல்;

சீல விரதேஷ்வ நதீசாரஅஹிம்சை, பொய்யாமை, திருடாமை, பிரம்மச்சர்யம், பற்றின்மை முதலான ஐந்து விரதங்களையும்,  குண, சிக்ஷா, திக்அனர்த்த தண்ட, போக உபபோக பரிமாண விரதம்; தேச விரதம், ஸமாயிகம், புரோஷத உபவாசம், வையாவிருத்தம் போன்ற  ஏழு சீலங்களையும், குற்றமின்றி கடைபபிடித்தல்;

அபீக்ஷண ஞாநோபயோகம் – ஸ்வபர சிந்தனை, ஞானத்தை பெறும் விழைவு, அதனை நற்செயலுக்கு உபயோகித்தல், நித்தம் தத்துவ பயிற்சி கொள்ளல்;

ஸம்வேகெளபிறவித் துன்பங்களுக்கு பயப்படுதல்;

சக்தி தஸ்த்யாக சக்திக் கேற்ற தானமளித்தல்; (ஆகார, அபய, ஞான தானம் ஆகியன) பாபம் விடுதல்,

சக்தி தபசக்திக்கேற்ப உபவாசம், காயக்கிலேசம் முதலான ஆகம விதிப்படி தவமேற்றல்;

ஸாதுஸமாதிர் – முனிவர்களுக்கு ஏற்படும் துன்பங்களை நீக்கி பாதுகாப்பு அளித்தல்;

வையாவ் ருத்யகரணம்முனிவர்களிடத்து உபகாரமாயும், சேவையும் செய்தல்

அர்ஹத்பக்தி – அரகந்த பகவானுக்கு பக்தி  செய்தல்;

ஆசார்ய பக்தி - குருவிடமும், முனிவர்கூட்டத்தின்  தலைவரிடமும் (ஆச்சாரியர்பக்தி செய்தல்;

பஹுஸ்ருத  பக்திஉபாத்தியாயர்களிடத்தில் பக்தியுடனிருத்தல்;

ப்ரவசன பக்திசாஸ்திரங்களை உயர்வாக மதித்து பக்தி செய்தல்

ஆவஸ்யநா பரிஹாணிதினசரி ஆறு கடமைகளான: பூசை,சாமியிகம், ஸ்துதி, ப்ரதிக்ரமணம், ப்ரத்யாக்யானம், காயோத்ஸர்கம் முதலியவற்றை விடாதிருத்தல். மேலும்  காலத்தில் செய்தல்.

மார்க பிரபாவணாரத்தினத்ரய மோக்ஷ மார்கத்தை தெளிவாகப் பரப்புதல்; அதாவது ஞானம், தபம், தானம் மற்றும் ஜினபூஜை மூலமாக

ப்ரவசன வத்ஸலத்வம்கன்றைக் கண்ட கறவை மாடுபோல சத்தர்மிகளையும், கோக்ஷ்மார்க்கத்தில்  பயனிப்பவருடன் அன்பு கொள்ளுதல்.

இவையனைத்தும் தீர்த்தங்கர நாம கரண உற்பத்திக்கு காரணமாகும்.


The influx of Tirthankara name-karma is caused by these sixteen observances, namely purity of right faith, reverence, observance of vows and supplementary vows without transgressions, ceaseless pursuit of knwoledge, perpetual fear of the cycle of existence, giving gifts (chairty) and practising austerities according to one’s capacity, removal of obstacles that threaten the equanimity of ascetics, serving the religious minded by warding off evil or suffering, devotion to omniscient lords, chief preceptors, preceptors and the scriptures, practice of the six essential daily duties (worship omniscient, devotion to preceptor, study of scriptures, self restraint, austerity and charity), propagation of the teachings of the omniscient, and fervent affection for one’s brethren following the same path.


தர்சன விசுத்தியுடன் கூடி அனைத்து பாவனைகள் அல்லது ஏதேனும் இவற்றில் ஒன்றையேனும் நற்காட்சியுடன் முழுவதுமாக கடைப்பிடித்தல் தீர்த்தங்கர நாமவினை ஊற்றுக்கு காரணமாகும்.

தர்சன விசுத்தி இன்றி  மற்றவை யிருந்தாலும் தீர்த்தங்கர நாம கர்ம ஆஸ்ரவம் ஏற்படாது.

அதாவது தூய நற்காட்சியின்  சிறப்பு யாதெனில்;

ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பு இன்மை, மயக்கமின்மை, பிறர்குற்றம் பாராட்டமை, அறவழி தவறியவரை மீண்டும் அவ்வழியில் நிலை  நிறுத்துதல், அறவோர்களிடம் அன்புடன் அளவளாவுதல், அறத்தி விளக்குதல்/பரப்புதல் என  எட்டு அங்கங்கள் உள்ளன.
-------------

அடுத்து கோத்ரநாம கர்ம (status determining karmas) ஊற்றுகளைக் காண்போம்….

------------- 

கோத்ர வினைக்கான காரணங்கள்




பராத்மநிந்தாப்ரசம்ஸே ஸதஸத்குணோச்சாதநோத்பாவநே ச நீசைர்கோத்ரஸ்ய – (சூ25) = (234)


परात्मनिन्दा प्रशंसे सदसद्गुणोच्छादनोद्भावने च नीचैर्गौत्रस्य


Paratmanindaprashanse sadasadgunochchhadanodbhavane cha nichairgotrasya



பராத்மநிந்தாப்ரசம்ஸே – பிறரை நிந்திப்பது, தன்னைப் புகழ்வது, ச - மற்றும் ஸதஸத்குணோச் சாதநோத்பாவநே – பிறர் நற்குணங்களை மறைத்தல், இல்லா நற்குணங்கள் தன்வசம் இருப்பதாக தெரிவித்தல்;  நீசைர் – தாழ்ந்த; கோத்ரஸ்ய – கோத்ர வினை ஊற்றுக்கான காரணங்களாகும்.


Censuring others and praising oneself, concealing good qualities present in others and proclaiming noble qualities absent in oneself, cause the influx of karmas which lead to low status
 

தாழ்ந்த,  இழிந்த குலமாக சமூகத்தால் கருதப்படும் இடத்தில் பிறப்பதற்கான வினை ஊற்றுக்கான காரணங்கள்;

பிறரைத் தூற்றுதல், தற்புகழ்ச்சி, பிறரது நற்பண்புகளை மறைத்தல், தன்னிடம் இல்லாத உயர் குணங்களை இருப்பதாக கூறுதல் போன்றவை யாகும்.

-----------

அடுத்து  உயர்குல நாம கோத்திரத்திற்கான காரணங்களை….

----------------------- 



தத்விபர்யயோ நீசைர்வ்ருத்யநுஸேகெள சோத்தரஸ்ய  - (சூ26) =  (235)



तद्विपर्ययो नीचैर्वृत्त्यनुत्सकौ चोत्तरस्य


Tadviparyayau nichairvrtyanutsekau chottarasya



தத்விபர்யயோ – நீச கோத்ர ஆஸ்ரவ காரணத்துக்கு விரோதமானது;  நீசைர்வ்ருத்யநுஸேகெள – பணிவும், மதம்(செருக்கு) இல்லாமையும், உத்தரஸ்ய  - உச்சகோத்ர கர்ம ஆஸ்ரவ காரணங்கள்.


The opposites of those mentioned in the previous sutra and humility and modesty cause the influx of karmas which determine high status.  



பிறரைப்புகழ்தல், தன்னைப்பற்றி அடக்கமாக பேசுதல், பிறர்செய்த நற்செயல்களை வெளிப்படுத்துதல், தன்னிடம் உள்ள குணங்களை புகழாமல் அடக்கமாய் இருத்தல்,

பெரியோர்களை வணங்குதல், கர்வமில்லாது இருத்தல், பொருள் அதிகமிருந்தும் செருக்கடையாமல் இருத்தல் ஆகிய இவை உயர்குலத்தில் பிறப்பதற்குக் (உச்ச கோத்ர நாம வினை உற்றுக்கான) காரணங்களாகும்.

-------------

அடுத்து அந்தராய வினைகள் (obstructive) ஊற்றுக்கான…….

---------------------------- 



விக்நகரண மந்தராயஸ்ய  -  (சூ27)  =  (236)


विघ्नकरणमन्तरायस्य


Vighnakaranamantarayasya



விக்நகரணம் – பிறருடைய லாப, போக, உப்போக, வீர்ய செயல்களில் இடையூறு (விக்னம்) செய்தல்;  அந்தராயஸ்ய – அந்தராய கர்ம ஆஸ்ரவ காரணம் ஆகும்.


Laying an obstacle in charity, gains, consumption and power of others is the cause of the influx of obstructive karmas.


பிறருடைய  தானம், லாபம், போகம், உப்போகம், வீர்யம் இவற்றிற்கு தடை செய்வதால் அந்தராய வினை ஊற்றுக்கு காரணமாகிறது.

எனவே பிறருக்கு எவ்வித தீங்கு செய்கிறோமோ அவ்விதமான தீங்கு நமக்கே வந்து சேர்ந்துவிடும் என்பதாகும்.
-----------------
ஆயுட் கர்மம்  தவிர மற்ற ஏழு கர்மங்களும் கஷாயங்களுடன் கூடிய ஆத்மனில் எப்போது நீங்காமல் வந்து சேர்கின்றன. 

ஆயுட் கர்மமும் சில விசேட நேரங்களில் வந்து சேர்கிறது.
-----------------------
ஒரு மனிதனின் வாழ்வில் ஆயுள் கர்ம வினை ஊற்று எட்டு முறை வருகிறது.

(உ-ம்) ஒரு மனிதனுக்கு ஆயுள் 81 ஆண்டுகள் எனின்
(மூன்றில் இரண்டு பாகம் கழியும் சமயங்கள்)

1 வது முறை – 54 வது வயதில்
2 வது முறை – 72 வது வயதில் (54+18) 27/3*2
3 வது முறை – 78 வது வயதில் (72+6) 9/3*2
4 வது முறை – 80 வது வயதில்
5 வது முறை – 80+8மாதம் ஆகும் போது
6 வது முறை – 80+10 மாதம்+20 நாட்கள் ஆகும் போது
7 வது முறை – 80+11 மாதம்+16 நாட்கள் ஆகும் போது
8 வது முறை – 80+11 மாதம்+25 நாட்கள்+13 மணி+20 நிமிடங்கள் ஆகும் போது

அப்படியும் ஆயுள் வினையூற்று இல்லாவிடில் கடைசியாக 81 வயது முடிந்ததும் அவன் ஆயுள் முடியும்.

-------------
.

இத்துடன் ஆறாம் அத்தியாயம் முற்றிற்று.

குறிப்பு: முதல் நான்கு அத்தியாயம் ஜீவனைப் பற்றியும், ஐந்தாவது அஜீவ தத்துவத்தைப் பற்றியும், ஆறாவது ஆஸ்ரவ தத்துவம் பற்றியும் கூறியது.


----------------
மங்களாஷ்டகம்:


கோடி சதம் த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
 அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம் ஸவ்வம்
பணமாமி பக்தி ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா

அக்ஷரமாத்ரபத ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே

தஸாத்த்யாயே பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:

ததத்வார்த்த ஸுத்ர கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்

ஜம் ஸக்கயி தம் கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ பாவயி அஜராமரம் ட்டாணம்

தவயரணம் வயதரணம் ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்

அந்தே ஸமாஹிமரணம் சஉவிஹ துக்கம் ணிவாரேஇ

--------------------------  




No comments:

Post a Comment