SAMAVASARAN - சமவசரணம்.

Divine Pavilion of Tirthankars  -  தீர்த்தங்கரர்களின் தெய்வீக மண்டபம்:










சமவசரணம்:  

சம =  பொதுவான ,  அசர= வாய்ப்பு ;  அனைவருக்கும் மெய்யறிவு கிடைக்க பொதுவான வாய்ப்பளிக்கும் இடம்.

சமணம் அறிவியலின் மற்ற துறைகளைப் போலவே அரங்குகள் கட்டும் கலையிலும் போதுமான முதிர்ச்சியைக் காட்டியுள்ளது.


பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து, அமர்ந்து, அறவுரையை கேட்டு, அமைதியாக எந்த இடரும் இன்றி வெளியேறும் வசதிகளுடன்  அரங்கம் அமைக்கும் கட்டிடக் கலை பொறியியல் தொழில்நுட்ப திறன் வேண்டும்.
தற்காலத்திலும் இது போன்ற மதநிகழ்வுகளில் நெரிசலும், இடிபாட்டுச் சாவுகளும் நடந்து கொண்டுதான் உள்ளது. காவல் துறையினரும் கட்டுப்படுத்த முடியாமல் பதட்ட முறுகின்றனர்.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே லட்சக்கணக்கான மனிதர்களும், எண்ணிலடங்கா வானவரும் மற்றும் விலங்கு, பறவைகளும் அவரவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்து, ஜிநரின் சொற்பொழிவுகளை கேட்டு, அமைதியாக திரும்பிச் செல்லும் வண்ணம் பலவசதிகளுடன், ஒரு யோசனை, 12 கி.மீ. பரப்பளவிற்கு தெய்வீக அரங்கம்  அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போதுமான போக்குவரத்து வசதியும், வாகன நிறுத்துமிடங்களுடன் இருந்தது.

பண்டைய நூல்களில் அத்தகைய ஏற்பாடுகளின் விரிவான மற்றும் அறிவியல் விளக்கங்களையும் காணும் போது உண்மையில் வியப்பைத் தருகிறது. இது அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் விஞ்ஞான அறிவாற்றலை வெளிப்படுத்துகிறது.


இந்த தெய்வீக மண்டபங்களின் அமைப்பை சுருக்கமான விளக்கத்துடன் காண்போம்.


சமவசரண தீர்த்தங்கரர்களின் சிந்தனையை தூண்டும் சொற்பொழிவுகள், ஆன்மீக உணர்வுகளையும், அணுகுமுறையை தூய்மைசெய்யவும், நம்பிக்கையையும் வளர்க்கவும் செய்கிறது. பகவான் அருகாமையில் அமர்ந்து, தர்மத்தை கேட்டு, அவர் தெய்வீக ஒளிமண்டலத்தில் , தனித்துவ பண்புகளின் எல்லைக்குள் வந்த மனித, தேவ, விலங்கினங்களின் தெய்வத்தன்மை எழுச்சி பெறும்.


இயல்பில் முரண்பட்ட மனிதன், விலங்குகள் அறியாமற் சேர்த்த கொடூரம், பரஸ்பர பகை,  நோய், துயரம், இன்னல்கள், பயம் போன்ற உணர்வுகளை இழப்பர். மேலும் ஜிநரின் போதனைகள் கர்மம் புகுதலை தடுக்கவும், கர்ம உதிர்ப்பை கூட்டவும் வகைசெய்ய ஞானவிஞ்ஞான முதிர்ச்சியை கூட்டும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.  








Like many other branches of science the branch of constructing assembly halls has also amply developed. T construct a large auditorium where thousands of people may arrive, be accommodated, may listen to the lectures and peacefully leave, requires a trained mind with engineering skill. For such an arrangement renowned experts display their skill. Still there are incidents of chaos and stampede in such large congregations. Even the police forces get nervous in trying to control such crowds of thousands of people.

Thousands of years ago the divine pavilions were created for the assembly of a Tirthankar where not only millions of human beings but also innumerable gods and animals used to assemble.
In a large pavilion or assembly hall covering an area of one Yojan (4 sq. kosa or 12 sq. km) used to accommodate innumerable gods, humans and animals. They would arrive and sit in the allotted sections, listen to the discourses of the Tirthankar and go back peacefully. There were adequate traffic and parking arrangements for vehicles.



The detailed and scientific description of such arrangements available in the ancient scriptures is truely astonishing. It also reveals the highly developed science and intellect during that period. We give brief description of the structure of these divine pavilions of the Tirthankars.


The beholding of a Tirthankar in his divine pavilion, pondering over his discourses, and following his teachings purifies and strengthens the attitude, faith and realization of spiritual pursuits. Sitting in proximity of the Tirthankar, seeing him, listening to his discourse and coming under the influence of his aura and various unique attributes is spiritually inspiring not only for the gods and humans but also for the animals. Men and animals of contrasting attitudes loose their cruelty and mutual animosity, disease, sorrow, afflictions, fear etc. The Tirthankar’s discourse also provides benefits in shape of enhancement of knowledge and science and progress on the path of liberation through stoppage of inflow and acceleration of shedding of Karmas.



-------------------------- 







NALLUR,  TAMIL NADU  -  நல்லூர் , தமிழ்நாடு.   







 NALLURU  KARNATAKA  - நல்லூரு,  கர்னாடகா



சமவசரண தெய்வீக அமைப்பு



சமவசரணம் அமைக்க தேவர்கள் ஸ்தலத்தை அப்போதுள்ள காலத்திற்கு தகுந்தார் போல் குறைந்த பட்சம் 12 கி.மீ.(Mahaveerar) பரப்பளவிற்கு நிர்ணயித்துமழை பொழியசெய்து தூய்மைப்படுத்தி, அச்சூழலை மலர்மழை தூவி  மணக்கச் செய்கின்றனர்.

நகரத்தையே மாணிக்கம், பச்சைக்கல், பல ரத்தினங்களால் ஆன மாலைகள், தோரணங்களால் அலங்கரிக்கின்றனர்.

வியந்திர தேவர்கள் தங்க, நவரத்தினங்கள் பதித்த ரம்மியமான வடிவ பூச்சுள்ள (motiffis) புறச்சுவர்களுடன்குடை, மனித உருவம், முதலை வடிவம், ஸ்வஸ்தீகம் போன்ற வடிவங்களில் தோரண நுழைவாயில்களை அமைக்கின்றனர்.

தேவேந்திரன் தனது அற்புத சக்தியினால் மாணிக்கமும், தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்டஒன்றுக்குள் ஒன்றான வட்ட வடிவ வேதிகைகளை (rampart, கோட்டை கொந்தள சுவர்) அமைக்கிறான்.

வெளிபுறச்  சுவற்றினை ஜோதிஷ்க தேவர்களும், உட்புற சுவரை வைமானிக தேவர்களும் அமைத்து, அவர்களே நவரத்தினங்கள் கொண்டு பூவேலைகள் செய்கின்றனர்.

பிரதான வாயில் பவனலோக தேவர்களால் பொன்னும், மணியும் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. பெரிய கெண்டிகளும், தூபக்கால்களும் நறுமண பொடிகள் தூவப்பட்டு வியந்திர தேவர்களால் நிறுத்தப்பட்டுள்ளன.

சமவசரணத்தின் நான்கு திசைகளிலும் தோரண நுழைவாயிலுகருகே அழகிய தங்க நவரத்தினங்கள் பதித்த வேலைப்பாடமைந்த வானுயர்ந்த மானஸ்தம்பங்கள் நாற்புறமும் நிலை நிறுத்தியுள்ளனர்.

மையப்பகுதியில் ஸ்ரீமண்டபம் அமைக்கப்பட்டிருக்கும். அதில் கந்தகுடி என்னும் மேடையும் இருக்கும்.

பிரதான வாயிலுக்கும், ஸ்ரீமண்டபத்திற்கு இடையே உள்ள பகுதி ஏழு வட்டப்பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வாயிற் வீதிப்பாதை, மூன்று வட்ட வேதிகை சுவரின் சந்தியில் தோரண நுழைவாயில்கள்  அலங்காரத்துடன் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் இரு பகுதியிலும் நடன அரங்கங்கள் உள்ளன.

அந்த ஏழு வட்ட துண்டுகளின் முதல் கோட்டத்தில்  சைத்யாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 வதில் ஆழமான அகழியும் (நீர்பகுதி) 3 வதில் பூக்களுள்ள சிறிய தாவரங்களும், 4 வதில் பூங்காவனமும், 5 வதில் துவஜமரங்கள் (flag mast) நிறுத்தப்பட்டும், 6 வதில் கற்பக விருக்ஷங்கள் 7. வதில் பவனங்கள் (அழகிய கட்டிடங்கள்) போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரு வனப்பகுதிகளிலும் மலைகள், குன்றுகள், அருவிகள், விளையாட்டு மைதானம், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. (வரும் அபவ்யர்கள் அப்பகுதியில் பொழுதைக் கழித்து சென்று விடவவும். பவ்யர்கள் கந்தகுடி வரை சென்று இடையூறின்றி அறவுரை கேட்கவும்.)

நடுப்பகுதியான கந்தகுடிக்கு  செல்ல 20000 படிகளும் (மாறுதலுக்குரியது)
    ஸ்ரீமண்டப பகுதி: மூன்று அடுக்காகவும் (tier), ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாகவும் மொத்தம் 12 பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. சில காலங்களில் அடுக்குகள் இன்றியும் குறிக்கப்பட்டுள்ளது.

கந்தகுடி: தீர்த்தங்கர் உயரத்தை விட 12 மடங்கு பெரிய அசோக மரத்தை ஈசானிய தேவர்கள் உள்வட்டத்தின் மையத்தில் உற்பத்தி செய்து, மரத்தினடியில் மாணிக்க மேடை அமைக்கின்றனர். அம்மேடையின் மீது சிங்காதனத்தை ஸ்படிக கால்களில் நிறுத்தியுள்ளனர்.

அதன்மீது ஒன்றன் மீது ஒன்றாக மூன்று அடுக்கு விதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பலிந்தர , க்ஷாமர் தேவர்கள் கைகளில் தூவாலையுடன்(சாமரை) நிற்கின்றனர். வியந்திர தேவர்கள் தர்மச்சக்கரத்தை அதன் எதிரே நிறுத்தியுள்ளனர்.




.
தீர்த்தங்கரர் கிழக்கு வாயில் வழியாக பிரவேசம் செய்து, சிங்காதனத்தில் உள்ள ஆயிரத்தெட்டு இதழ் கொண்ட தாமரை மலரில், (இரண்டு அங்குல இடைவெளி உயரத்தில் ) அமர்ந்தவுடன்,

பிரதான கணதரர், மற்றும் அவரது சீடர்களும், (ஆகம தொகுப்பாளர்கள்) சிங்காதன மேல்தளத்தில், தீர்த்தங்கரரை வணங்கி அவர் காலடி அருகில் அமர்வார்கள்.

பின்னர் கேவலிகள்; மனப்பர்யாய /அவதி ஞானிகள்; முனிபுங்கவர்கள் அனைவரும் அவரை வணங்கி வலதுபுற (தென்கிழக்கு) பகுதியில் அமர்வார்கள்.


பின்னர் கல்பவாசி தேவியர், அடுத்து ஆர்யிகைகள், (மற்றும் மானிட பெண்கள்), பவனவாசி தேவியர்கள், வியந்திர தேவிகள், ஜோதிஷ்க தேவியர்கள், பவனவாசி தேவர்கள், அடுத்தடுத்து வியந்திர, ஜோதிஷ்க, கல்பவாசி தேவர்களும், அடுத்து மனிதர்கள், பின்னர் விலங்கு, பறவைகள் என அடுத்தடுத்த 11 ஒதுக்கீடுகளில் அமர்ந்து தினமும் அறவுரை கேட்பர்.

தீர்த்தங்கரர்கள்  ஆயுட்கர்மம் கழிந்து மோட்சம் அடைந்ததும், சமவசரணம் மறைந்து விடும்.

சமவ சரணம் அந்தந்த தீர்த்தங்கரர் காலத்திற்கும், மனிதர்கள் உயரங்களுக்கு தகுந்தார் போல், 1 யோசனை முதல், 12 வரையான பரப்பில் அமைக்கப்படுகின்றன. கந்தக்குடி என்னும் மையப்பகுதியும், சிங்காதன அளவும் மாறுபடுகிறது.

சமவ சரணம் அமைத்துள்ள ஸ்தலத்தின் காவல் தெய்வமான க்ஷேத்ர பாலகரும், சோம, வருண என்ற வாயிற்காப்போரும் நாற்புறமும் காத்து நிற்கின்றனர்.


 தீர்த்தங்கரரின் சமவசரணம் முக்கிய நிகழ்வானதால், இதுவரை இச்சாதனையை காணாத துறவிகள் 144 கி.மீ. தூரத்திற்கு வெளியேயிருப்பினும் ஊக்கத்துடன் காணவருகின்றனர்.  

அதன் எல்லைப் பிரதேசத்திற்குள் இருக்கும் துறவிகள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்பது முனிகள் ஒழுங்கு. ஒரு துறவி இது போன்ற நிகழ்வுகளை அறியாமலோ, அலட்சியப்படுத்தினாலோ; நற்காட்சியில்; பங்கமும், குறைவும், ஆழமற்றும், உறுதியற்ற தன்மையின் காரணமாக நான்கு நாட்களுக்கு உபவாசம் இருந்து தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். 

 சமவசரணத்தில் வீற்றிருக்கும் ஜிநரின் முன்பாத அழகை, அனைத்து தேவர்களின் பாத அழகைக் ஒன்று சேர்ந்தாலும் அதன் பொலிவை மிஞ்சி விடாது. 

கேவலஞானம் ஏற்பட்ட பிறகு தீர்த்தங்கரர் சரீரம் எடை குறைந்து சில ஆயிரம் வில் உயரம் சென்று விடுகிறது. அதனால் சமவசரணம் ஆகாயம் வரை அமைக்கப் படுகிறது. 

அதற்கான படிகளில் மக்கள் சிரம்மில்லாது ஏறி செல்லுகின்றனர்.  எந்த ஜீவனுக்கு பிறவிச் சுழற்சி அதிகமுள்ளதோ, அவை மித்யாத்வம் பேசிக் கொண்டு அங்கே செல்வதில்லை.

 ஜீவன்கள் மூன்று விதமான வினைகளைக் கட்டிக் கொண்டுள்ளது. 1. திரவிய வினைகள் எட்டு. 2. பாவ வினைகள் ஆசை, வெகுளி, மயக்கம் போன்றவை. 3. ஓளதாரிக, வைக்ரீயக, ஆஹாரக, தேசஜ, கார்மண சரீரம் என்ற நோகர்ம ரூபங்கள்.

 இதில் திரவிய வினைகளில் புண்ணியம் இன்பத்தை தர வல்லது, எடை குறைந்தது, பாவ வினைகள் துன்ப மயமானது எடை அதிகமுள்ளது. அவர் காதி கருமங்களான பாவ வினைகளைக் நீக்கியதும், அவர் சரிரமும் எடையற்று உயரே சென்று விடுகிறார்.

கேவலஞானம் அடைந்தபின் பாவவினைத் துகள்கள் சேராது. அதனால் அவர் சம்சார சுழற்சிக்குள் வருவதில்லை. 

எடை குறைந்ததினால் சமவசரணம் செல்லும் போது , அவர் தாமரை மலர்மீது நடந்து செல்கிறார். அவர் சிங்காதனத்தில் தாமரை மலர்மீது (தீண்டாமல்) அமர்ந்து உபதேசிக்கிறார். 

அர்த்தமகதியில் ( எளிய பேச்சு மொழி) அவர் நிகழ்த்திய உரைகளை தேவர்களும், அனைத்து மக்களும் கேட்டு மகிழ்கின்றனர். மேலும் அவர் திவ்யதொனி மூன்று உலகையும் தூய்மைப் படுத்துகிறது. 

கணதரர் அதனை எழுத்து வடிவமாகவும், சூத்திரமாகவும் எழுதியுள்ளார். அவரே திரவ்ய சுருத கர்த்தாவாகிறார். 

 தீர்த்தங்கரரின் பாவ ஸ்ருதத்தை, கணதரர் இந்திரபூதி 12 அங்கமாகவும், 14 பூர்வமாகவும் நூல்வடிவத்தில் (திரவிய ஸ்ருதமாக) எழுதியுள்ளார். 

 திவ்யதொனி என்னும் மருந்தை பயன்படுத்தினால் மனோவியாதியும், சம்சார துன்பமும் நீங்கிவிடும். புலனாசை என்னும் விஷத்தை போக்க கூடியது. அஞ்ஞானம், மோகம் என்னும் இருள் விலகுகிறது, ஞானம் என்னும் ஒளி தோன்றுகிறது. அதன் வழியே கடைபிடித்து ஜீவன்கள்  நிரந்தரமான, அழியாத சுகத்தை பெறுகின்றன.


கேவலஞான கல்யாணகத்தன்று கேவல ஞான பூஜாவிதானமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.


சமண ஆகமத்தில் உள்ள ஒரு குறிப்பு:

------------------ 
தீர்த்தங்கரர் கேவலஞானம் அடைந்ததும், எல்லையில்லா ஆற்றலை பெறுகிறார். அவரின் சுண்டு விரலின் சக்தியை; ஆகமத்தின் கணிப்பின் படி காணும் போது:

⚡ 12 வீரர்களின் சக்தி கொண்டது எருது,
⚡ 10 எருதுகளின் சக்தி கொண்டது குதிரை
⚡ 12 குதிரைகளின் சக்தி கொண்டது எருமை
⚡ 15 எருமைகளின் சக்தி கொண்டது யானை
⚡ 500 யானைகளின் சக்தி கொண்டது சிங்கம்
⚡ 2000 சிங்கங்களின் சக்தி  கொண்டது ஆக்டொபெட்(எண்கால் மிருகம்)
⚡ பத்து லட்சம் அக்டொபெட் சக்தி கொண்டவர் பலதேவர்
⚡ இரு பலதேவர்கள் சக்தி கொண்டவர் வாசுதேவர்
⚡ இரு வாசுதேவர்கள் சக்தி கொண்டவர் சக்கரவர்த்தி
⚡ லட்சம் சக்கரவர்த்திகள் சக்தி கொண்டவர் தரணேந்திரர்
⚡ கோடி தரணேந்திரர்கள் சக்தி கொண்டவர் இந்திரர் 

⛳ எண்ணிலடங்கா இந்திரர்களின் சக்தி கொண்டது தீர்த்தங்கரரின் சுண்டுவிரலாகும்.  🙏
-------------------- 



ஒவ்வொரு பிரிவினரின் ஆகமங்களுக்கேற்ப வரைபடம் மாறியுள்ளதே தவிர வரைமுறைகள்கலந்து கொண்டவர்கள்அற உபதேசம் ஒன்றியுள்ளது. 

சமவசரண பிரதான தோரண வாயிலிலிருந்து சிங்காதனம் வரை உள்ள ஏழு நிலைகளையும்;  தாமரைமலர் மீதமர்ந்து திவ்யதொனி வழங்கும் தீர்த்தங்கரரை நினைவு கூறும் முகமாகசமண ஆலயங்கள் அனைத்தும் அமைக்கப் பட்டுள்ளன.( மானஸ்தம்பம் இல்லாத இடங்களில் ராஜகோபுரம் அமைக்கப் பட்டிருக்கும்.)

திராவிட பாரம்பரியத்தையும்கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் முகமாகவும் கட்டப்பட்டுள்ளன. 





 Divine Plan of the Samavasaran



The celestial  gods, first of all, inform about village, town or area where the Samavasaran is to be constructed to the subordinates . These gods, then clear, clean and level a 12 sq. km area pneumatically. Fragrant water is aerially sprinkled over that area and than in order to make the atmosphere pleasantly perfumed a variety of suitable flowers are showered. The whole area is decorated with various gemstones including moonstone and sapphire. Now the Vyantar gods construct gem studded and gold inlaid gates in all the four directions. These gates are embellished with motiffis like umbrella, human figure, crocodile arch, swastika etc.
After this the kings of gods with their special powers construct three concentric parapet walls with serrated design and embellished with gems and gold. The outermost wall is constructed by the king of the Jyotishka gods. The innermost wall is full of gemstones and is made by the king of Vaimanik gods. The decorations and embellishments are also done by the gods who construct the walls. The main gate studded with every gem is made by the Bhavanpati gods. Large urns with burning incenses with mixtures of fragrant powder like black Agar and Kundarak are installed all around by the gods.

Now Ishan gods arrive and plant a Ashok tree 12 times the height of the Tirthankar exactly at the center of the innermost circle. Under this tree they make a gem studded platform. At the center of this platform they make a throne with leg-rest of crystal-quartz. Over this throne there are three canopies, one over the other. On both the flanks of the throne stand the Balindra and Chamar gods with whisks in their hands. The Vyantar gods install the emblem of wheel of religion a little distance away and in front of the throne. After this all the gods hail in loud voice and express their feeling of extreme joy.





After the construction of the Samavasaran is complete the Tirthankar enters it by the eastern gate during the first hour after the dawn or when the second hour is approaching. He moves stepping on divine lotuses. While walking, seven divine lotuses appear both at the front and back of him. He first circumambulates the Chaitya tree and then approaches the throne and sits on it facing east.

Three replicas of the Tirthankar sitting on the throne are created by gods and installed facing remaining three directions. Thus the Tirthankar is visible to every one sitting anywhere in the assembly.

At the feet of the Tirthankar the senior most principle disciple sits after bowing to the tirthankar. The senior Ganadhar sits near the feet of the Tirthankar in south-east direction. All the other Ganadhars sit at his side or ahead of him.

Then the omniscient ascetics enter from the eastern gate, circumambulate the Tirthankar, utter-Namastirthaya (salutation tot he Tirth), and take their seats at the back of the Ganadhars . After this the remaining highly endowed ascetics (Manahparyav Jnanis, Avadhi Jnansis, Fourteen Purvadhars, other Purvadhars etc.) also enter from the eastern gate, go around the Tirthankars thrice, pay homage to the Tirthankar and other seniors, and take seats behind the Kewal Jnanis.

Now enter the female ascetics and after formally paying homage to all the seniors go and stand behind the Vaimanik gods, they do not sit. Goddesses from the Vaimanik dimension enter from the eastern gate and formally saluting to the Tirthankar and all the ascetics go and stand behind the common ascetics. One after another come the goddesses from Bhavanpati, Vyantar and Jyotishka dimensions, from the southern gate and paying homage to the Tirthankar and all the ascetics go and stand in the south-western direction one behind the other in the said order.

After all these arrive gods from Bhavanpati, Jyotishka and Vyantar dimensions from the eastern gate and after due formalities take their allotted seats, one group behind the other in the said order in the north-western direction. Then from the northern gate enter the Vaimanik gods followed by men and women and after due formalities take their allotted seats. In front sit Vaimanik gods, behind them are men and then women. The families sit near the gods with whom they are associated and nowhere else.

In every direction and the corners sit these clusters of people in groups of three classes (gods, men and women). As a rule the juniors pay respects to the seniors at the time of their arrival in the assembly, irrespective of the order of arrival. At the four gates-east, west, north and south stand Soma, Varun and respectively as guards of the directions.

Sitting in this fashion there is no if superiority or inferiority, envy, competition, differences or animosity. Due to the miraculous influence of the Tirthankar, even the natural enemies from the animal kingdom loose anger or fear from each other.

This is the arrangement of the first enclosure.

Arrangement of the Second and Third Enclosures

The second enclosure is allotted to all types of animals (the five sensed ones). The third enclosure is allotted for parking of vehicles.


Outside these enclosures there are crowds of animals, humans, as well as gods. Sometimes they come separately and sometimes all together. However, in spite of the crowd the movement is orderly and peaceful. There is hardly any rush or stampede or altercation.














No comments:

Post a Comment