அருகர் சிலை - முகாசா பரூர்
Location: Google Map - (11.5755, 79.2559) - M.parur
விருத்தாசலத்திலிருந்து 15 கி. மீ. வடமேற்கில் - உளுந்தூர்பேட்டையிலிருந்து 12 கி.மீ. தென்மேற்கில். - M. பரூர் உள்ளது.
It is located on a small
raised platform beneath the Peepal tree on the northern side, outside the Sri
Varadaraja Perumal Temple compound.
ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின்
வடக்கு மதிற்சுவருக்கு வெளியே உள்ள அரசமரத்தடிக்கு கீழே சிறிய மேடையின் மீதுள்ளது.
அன்றைய தினம் முகாசபரூர் (கடலூர்
மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா) ஓர் பிண்டி மர நிழலில் (அரசமரம்) அமர்ந்து தியானம்
செய்யும் கோலத்தில் 1200 ஆண்டுகளை கடந்த தீர்த்தங்கரர் சிலையை வணங்கும் பேறு பெற்றோம்.
மேடை அமைத்த நண்பருக்கு நன்றி.
நடுநாட்டில் பல தனித்த தீர்த்தங்கரர் சிற்பங்களில் 4.5 அடி உயரமும் முன்று அடி அகலமும் உடைய அழகான ஒரு சிலையாகும்.
முக்குடை முழுவதுமாக, முகத்தில்
சில பகுதிகள் சிதிலமடைந்த நிலையில் இருந்தாலும் தீர்த்தங்கரருக்கான பிண்டி மரம், முக்குடை,
பிரபாமண்டலம், சாமரைத்தேவர்கள் இருவர், மலர்தூவும் தேவர்கள், சிங்காதனம் (புதையுண்ட
நிலையில்) முதலிய எண் வகைச் சிறப்புகளுடன்
வடிக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை இவ்வூரின் ஜமீன்தார்(கச்சிராயர்)
மற்றும் அவர் குடும்பத்தார் பாதுகாத்து வந்துள்ளார். மேலும் இந்த சிலைவடிவம் வள்ளிமலை,
முருகன் அலயத்திற்கு செல்லும் வழியிலுள்ள தூண்டுக்கரை என்ற சிறு குன்றின்மீதுள்ள புடைப்புச்
சிற்பத்தை ஒத்துள்ளது. (நன்றி: திருவாளர் மஹாத்மா செல்வபாண்டியன், வரலாற்றறிஞர்)
-------------
இந்த மு.பரூர் எனும் முகாசபரூரை
தன் ஆட்சியில் கொண்ட கடலூர் மாவட்டத்தை சங்க காலத்தில் அருவாநாடு என்றும், பிற்கால
சோழற்காலத்தில் நடுநாடு, மகதம்(மகதை நாடு) என்று அழைக்கப்பட்டுள்ளது. (தொண்டை மண்டலத்திற்கும்,
சோழ மண்டலத்திற்கு இடைப்பட்ட பகுதி( பழைய தென் ஆர்க்காடு மாவட்டம்- விழுப்புரம், புதுச்சேரி,
கடலூர் மாவட்டங்கள்)
பொதுஊழிக்கு (கி.மு.) 3ம் நூற்றாண்டுக்கு
முன்னரே தமிழகத்தில் சமணம் வந்திருக்க வேண்டும் என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
அதாவது 22ம் ஜினரான ஸ்ரீநேமிநாதர்
காலத்தில் அகத்தியர் துவாரகைப்பகுதிக்கு சென்று திரும்பும் போது அங்கிருந்த சில பதினென்குடி
வேளிரையும், அருவாளரையும் தமிழகத்திற்கு அழைத்து வந்ததாக தொல்காப்பியத்தின் உரையில்
நச்சினார்கினியர் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.(Ref:
தஞ்சையில் சமணம்- நூல்)
அப்போதிலிருந்தே இந்தப் பகுதியில்
சமணம் தழுவிய அருவாளர்கள் வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது. அதனால் 7 ம் நூற்றாண்டிற்கு
பின் இப்பகுதியில் கட்டிடக் கோவில்களை பிற்காலச் சந்ததியினர் கட்டியிருக்கலாம்.
அப்போது வீசிய சமயப்புயலில்
அங்குள்ள சமணராலயம் அழிந்து பட்டிருக்கக் கூடும் என்பது இந்த வரலாற்றையும், இப்போது
கிடைத்துள்ள தீர்த்தங்கரர் சிலையையும் காணும் போது தெரியவருகிறது.
An Auspicious Spiritual Experience and a Glimpse into Ancient History
we were blessed with the
opportunity to worship a Tirthankara sculpture over 1,200 years old, seated in
a meditative posture beneath the shade of a sacred Peepal tree, at Mugāsapurur
(Mu. Parur) in Vriddhachalam Taluk, Cuddalore District.
Our sincere thanks to the
friend who constructed the platform.
Among the solitary Tirthankara sculptures found in the Nadu Nadu region, this statue stands out for its refined beauty, measuring 4.5 feet in height and 3 feet in width. Although certain portions of the face are damaged, the sculpture retains all the classical iconographic features of a Tirthankara: the Bindi tree, the triple umbrella (mukkudai), the Prabhāmaṇḍala (aureole), two chauri-bearer deities, flower-showering celestial beings, and a lion throne (currently buried underground)—together representing the eight traditional auspicious symbols.
This rare sculpture has
been carefully preserved over generations by the local Zamindar (Kachirayar)
and his family. Interestingly, the form and style of this image closely
resemble the bas-relief sculpture located atop the small hill at Thoondukkarai,
along the route to the Vallimalai Murugan Temple to reach.
(Acknowledged by: Thiru
Mahatma Selvapaandiyan, historian)
During the Sangam period,
the region now known as Cuddalore District was referred to as Aruva Nadu. In
later Chola times, it came to be known as Nadu Nadu or Magadha Nadu (Magathai
Nadu). Geographically, this area lay between Tondai Mandalam and Chola Mandalam,
encompassing what was formerly the South Arcot District—today’s Villupuram,
Puducherry, and Cuddalore districts.
Historical references
suggest that Jainism must have arrived in Tamil Nadu even before the 3rd
century BCE. According to the commentary on the Tolkāppiyam by Nachinarkiniyar,
during the time of the 22nd Tirthankara Śrī
Neminatha, the sage Agastya, upon returning from Dvārakā, brought with him
members of the Eighteen Velir clans and the Aruvalar community into Tamil Nadu
(Ref: Jainism in Thanjavur).
From that period onward,
it is understood that Aruvalar communities who embraced Jainism lived in this
region. Consequently, after the 7th century CE, later generations may have
constructed structural temples here. However, during the intense religious upheavals
of that era, the original Jain shrine in this locality might have been
destroyed. The discovery of this Tirthankara sculpture today stands as a silent
yet powerful testament to that lost chapter of history.








.jpg)
















