கலிகுந்த பார்ஸ்வநாதர் ஸ்தோத்ரம்
1. தேவா தி தேவம் ஜிதபாவஜம் தம்
தேவாதி பை ரன்வித பாத பத்மம்
நத்வா ஜிதேத்ரம் ஸிவஸெளக்ய ஸித்யை
ஸ்தோ ஷ்யே பவித்ரம் கலி குண்டயந்தரம்
2. பூஜாம் ப்ரகுர்வந்தி நராஸ்து பக்த்யா
யந்தரஸய யே ஸ்ரீ கலிகுண்ட நாம் ந:
தேஷாம் நராணாமிஹ ஸர்வ விக்நா
நஸ்யந்த்ய வஸ்யம் புவிதந் ப்ரஸாதாத்
3. சிதாம் புஜே யே ஸ்வகுரூபதேஸாத்
த்யா யந்தி நித்யம் கலிகுண்ட யந்தரம்
ஸிம்ஹாதாயோ துஷ்ட ம்ருகா ஸ்து லோகே
பீடாம் ந குர்வந்தி ந்ருணாம் ச தேஷாம்
-----------------------------
கலிகுந்த (கலிகொண்ட) பார்ஸ்வநாதர் கதை
தற்போதைய குஜராத், தோல்கா நகரம் ஒருகாலத்தில்
அடர்ந்த காடாக இருந்துள்ளது.
அவ்வனமான காதம்பரியில் கலி எனும் ஒரு மலை இருந்துள்ளது. அதன் அருகில் குந்த எனும் ஆழமான ஏரி பரந்து விரிந்து
காணப்பட்டுள்ளது.
அதனால் அப்பள்ளத்தாக்கு கலிகுந்தா என்றழைக்கப்பட்டுள்ளது.
அது எப்படி பார்ஸ்வநாதரின் அருள் பொழியும்
ஸ்தலமாக மாறியது என்பதை காண்போம்…
அப்பள்ளத்தாக்கிற்கு அருகில் இருந்த கிராமத்தில் ஒரு குள்ளன் வாழ்ந்து வந்தான்.
அவனை காணும் அரசனிலிருந்து ஆண்டிவரை அனைவரும் கேலி செய்து சிரித்து வந்துள்ளனர்.
அதனால் மனம் நொந்த அக்குள்ளன் அக்காட்டில் ஒரு
மரத்தின் கிளையில் தூக்கிலிட துணிந்தான்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு சிராவகர், அவனைத் தடுத்து நிறுத்தி தேற்றி அவனை
மரணத்திலிருந்து காப்பாற்றினார். அவனிடம் தினமும் ஜினரை மனதார பூஜித்து, ஜின தர்மத்தை
கடைபிடித்து வந்தால் நீ விரும்பிய வாழ்வு கிட்டும்
என்று என்றார். மேலும் நீ நல் விரதங்களை ஏற்று கடைபிடித்து வாழ்ந்தால் நற்பேற்றினை
பெறுவாய் என அறிவுறுத்தினார்.
அவரது நண்பனைப்போன்று உதவியோடு அருகிலிருந்த போதகர்
ஒருவரிடன் தினமும் அழைத்துச் சென்றார்.
அக்குள்ளனும் தினமும் நடைபெறும் உபதேசங்களையும்,
போதனைகளையும் கேட்டு நல்வழிப்பட்டான். அம்முனிவர்கள் கூறிய நல்லொழுக்கங்களை சிரமேற்கொண்டு ஜைன தர்மத்தை கடைபிடித்து முழு ஈடுபாட்டுடன்
இயம, நியமங்களை ஏற்று ஒழுகி வந்தான்.
அவ்வழி நடந்தால் தான் உயரமான மனிதனாவோம் என்ற
நம்பிக்கையுடன் இருந்து ஒருநாள் இறந்தான்.
பின்னர் அக்காட்டின் தலைவனாய், மலிந்திரா என்ற
ஒரு பெரிய யானையாய் பிறந்தான்.
அப்போது
ஒருமுறை ஸ்ரீபார்ஸ்வநாதர் அக்காட்டிலுள்ள அந்த ஏரிக்கு அருகில் வந்த போது அவ்விடத்தில்
அமர்ந்து தியானத்தில் ஆழந்தார்.
அவ்வேளையில் தாகம் தீர்க்க அந்த ஏரியை அடைந்த
அக்களிறு அங்கு தியானத்தில் அமர்ந்துள்ள பகவானை கண்டதும், ஜாதீஸ்மரணம் ஏற்பட்டு தன் முற்பிறவியை உணர்ந்தது.
உடன் “ஐயனே உயரம்
வேண்டி ஒழுகி, எனது அறியாமையினால் இவ்விலங்குப்பிறவியை அடைந்தேன். தாங்களே எனக்கு அர்த்தமுள்ள வாழ்வை அளிக்கும் பிறவியை வழங்குமாறு வேண்டுகிறேன்” என மனமுருகி நின்றது.
அதன் பின் தினமும் பகவான் பாதங்களுக்கு தாமரை
மலரை வைத்து வணங்கி வந்தது. உண்ணா நோன்பினை கடைபிடித்தும் வந்ததால் வியந்திர தேவனாக
மறுபிறவியை எய்தியது.
அந்நிகழ்வைக் கேள்வியுற்ற அருகிலுள்ள நகரத்து
அரசன் கரகாந்தன் ஆச்சர்யமடைந்தான்.
அத்தோடு நில்லாமல் மிகுந்த ஆர்வத்துடன் பக்தி
மேலோங்க அவ்வனத்தின் ஏரியை நோக்கி வந்தான். ஆனால் பகவான் அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தார்.
பகவானை தேடியபடி “தங்களைக்
காணாமல் ஏமாற்றமடைந்தேன். அய்யனே யானைக்கு நற்கதி அளித்தது போன்ற எனக்கும் நற்கதி அருளுங்கள்” என வேண்டினான்.
‘என்னைப்போன்ற
பாவியின் கண்களுக்கு தாங்கள் காட்சி கொடுப்பதில்லை, உத்தம ஜீவனான யானைக்குத் தான் தென்படுவீர்கள்” என மனம் நொந்து அரற்றினான்.
அவ்விடத்திலேயே ஒரு அழகிய பிரம்மாண்டமான ஜினாலயத்தை
கட்ட உத்தரவு இட்டான். அஜ்ஜினாலயத்தின் கருவறையில்
ஒன்பது அடியுயர பகவான் பார்ஸ்வந்தாரை பிரதிஷ்டை செய்து மகிழ்ந்தான்.
அவ்வேளையில் ஸ்ரீ தரணேந்திரரின் அருளினால் அந்த
ஒன்பது அடி ஸ்ரீ பார்ஸ்வநாதர் சிலை அரசனுக்கு கிடைத்ததாக வரலாறு பகர்கின்றது.
வியந்தர தேவனாக பிறந்த (அக்குள்ளன்) யானை அவ்வாலயம் நோக்கி வரும் பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி
செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அவ்வியந்திர தேவனும் கலிகுந்த பார்ஸ்வநாதரை தினமும்
வணங்கி வந்து,
சில பிறவிகளுக்கு பின் விடுதலை பேற்றை அடைந்தான்.
கரகாந்த மன்னனும் அம்மூலவரை வணங்கி வந்ததோடு அங்கு நடந்த நிகழ்வுகளை நாடகமாக, விழாவாக உற்சவ காலங்களில் அரகேற்றி வந்ததாகவும்
கூறப்படுகிறது.
இன்றும் இத்தலத்தில் தூயமனதுடன் வணங்கி வரும் சிராவகர்களுக்கு நற்கதி கிட்டும் என்று நம்பப்படுகிறது.
அவ்வாலயத்தில் துதிப்பாக்களும், கலிகொண்ட அராதனை மந்திரமும் வெளியிட்டுள்ளனர்.
---------------------
Address:
108 Kalikund Parshwanath Jain Tirth,
Address: Kalikund, Dholka,
Gujarat 382225
Phone: 097251 75455
-------------------------
See the Sri
Paswanath abishek video.
No comments:
Post a Comment