Acharya shri Vidhya Sagar Maharaj - ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் மகராஜ்








ஆச்சார்ய  ஸ்ரீ வித்யாசாகர் மகராஜ்



இந்த நவீன யுகத்தில் வாழும் திகம்பர சமண ஆச்சார்யர்.  முக்கியமாக தத்துவ ஞானி யாவார். அவரது பாண்டித்யம், தவ வாழ்க்கை இரண்டும் பலரையும் பாராட்டும் படி அழைக்கிறது. இந்த  காலத்திலும் அவர் கடுமையான துறவற நெறியையும், தியானத்தையும் கடைப்பிடிப்பதால் அனைவராலும் வணங்கும் நிலையை எய்தியுள்ளார்கள்.


வித்யாசாகர் அவர்கள் 10, அக்டோபர், 1946 ல் கர்நாடகா, பெல்காமுக்கு அருகில் சடல்கா என்ற கிராமத்தில், தந்தை மல்லப்பா, தாய் ஸ்ரீமதி இருவருக்கும் பிறந்தார்இயற்பெயர் வித்யாதர். அவரது இரு சகோதரிகள் சிறுவயதில் ஆச்சார்ய தர்மசாகரிடம் தீக்ஷை ஏற்று அச்சங்கத்தில் சேர்ந்தனர். மூன்று சகோதரர்களில் மஹாவீர் என்பவரை பரம்பரை வாரிசு கருதி இல்லறத்தில் விட்டு விட்டு; இவரும், இவருடைய இன்னொரு சகோதரரும் தீக்ஷை ஏற்றனர்.


ஆச்சார்ய ஸ்ரீ சாந்தி சாகர் மகராஜ்

வித்யாசாக்ர் தமது 22 வது வயதில் ஆச்சார்ய சாந்தி சாகர் மகராஜின் திகம்பர முனி சங்கத்தை சேர்ந்த ஆச்சார்ய ஞான்சாகர் மகராஜிடம் அஜ்மீரில் 1968 ம் ஆண்டு தீக்ஷை பெற்றார். அதன் பின்னர் தான் ஆச்சார்ய மகராஜ் எனும் மேனிலையை எய்தினார்.



ஆச்சாரிய வித்யாசாகர் மகராஜுக்கு இந்தி, கன்னடம் போன்ற பன்மொழிகள் தெரிந்தாலும் சமஸ்கிரதம், பிராகிருத மொழியில் பாண்டித்யம் பெற்றவராவார். பல மேதைகளும், ஆராய்ச்சியாளர்களும் இவரது படைப்புகளை ஆராய்ந்துள்ளனர்அவரது படைப்புகளில் முக்கியமாக நிரஞ்சன ஷதகா, பாவன ஷதகா, பாரிஷ ஷதகா, சுனிதி ஷதகா மற்றும் ஷரமன ஷதகா போன்றவை குறிப்பிடப்படுகிறது. எழுநூறுக்கும் மேற்பட்ட ஹைகூ கவிதைகளை வெளியிட்டுள்ளார். முகாமதி என்னும் ஹிந்தி காப்பியத்தை படைத்துள்ளார். அக்காப்பியம் பல ஹிந்தி பல்கலைக்கழகங்களால், முதுகலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் வைத்துள்ளனர். அக்காவிய பாடல்கள் திரு. லால்சந்திர  ஜைன் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய ஜனாதிபதியவர்களுக்கும் வழங்கப்பட்டு, உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது.


உலக உயிர்காக்கும் நோக்கத்துடன் பல நிறுவனங்களை துவங்க உத்வேகம் அளிக்க காரணமாக இருந்தவர் ஆச்சார்ய வித்யாசாகர் அவர்கள். மத சம்பந்தமான விழாக்கள் பல அமைய காரணமாயும், இதுவரை ஒன்பது நூற்றாண்டு காணா, ஏறக்குறைய 125 சமணத்துறவிகளுக்கு தீக்ஷை அளித்த பெருமையும் இவரையே சாரும்.




இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பல ஜினாலயங்கள், ஜினபிம்பங்கள் தோன்றவும், உருவாகவும், வளர்ச்சியடையவும், புதிப்பிக்கப்படவும் காரணமாக இருப்பது ஆச்சார்ய ஸ்ரீ என்பது மிகையாகாது. பல அறிஞர்களையும், மேதைகளையும் குழுமித்து பல பாடங்களையும் ஆராயச் செய்த பெருமையும் அவரையே சாரும்.


தனது சீடர்களுக்கு சமண ஆகமங்களை போதித்தும் வருகிறார். மேலும் பசுவதை தடுப்பு இயக்கத்திற்கு வலுவான ஆதரவை அளித்து வருகிறார்.


மத்திய பிரதேசத்தில்  உள்ள நகரான ஒர்ச்சாவில்(orchha) உள்ள பார்ஸ்வநாதர் சிலையினடியில்,ஆச்சார்ய சாந்திசாகர் வழியில் வந்த ஆச்சார்ய வித்யாசாகர் என்ற முனிவழியைஎன்ற வாசகம்  வெட்டப்பட்டுள்ளது. அதனால் அனசக்த யோகி, ஜேஷ்தா, ஷ்ரேஷ்தா, சந்சிரோண்மனி என்று பெருமை கூட்டப்பட்டும் அழைப்படுகிறார்.


சென்ற 2016ம் ஆண்டு 38 முனிகளுடன் சாதுர் மாத மழைத்தங்கலின் போது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்க் செளஹான் அழைப்பில் 28, ஜூலை 2016 அன்று சட்டமன்றத்தில் பிரவசனம் செய்துள்ளார் என்பது முக்கிய நிகழ்வாகும்.




அதே 2016ல் பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் அவரை போபாலில் சந்தித்து வணங்கினார். அப்போது நாட்டின் நிலை குறித்தும், எதிர் கால நோக்கம் குறித்தும் உரையாடியுள்ளார்கள்.


மேலும் முன்னாள் மத்திய மந்திரி ஜோதிரத்ய சிந்தியா என்பவரும் சந்திந்துள்ளார். அவரை சந்தித்து ஆசி பெறின் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கையாக வைத்துள்ளனர் என்பது தெரிகிறது.


அவருடைய பாரம்பரியம் என்னவெனில்; அவர் ஆச்சார்ய சாந்திசாகர் முனி சங்கத்தில் சேர்ந்து முனி தீக்ஷை ஏற்றார். ஆச்சாரிய  சாந்திசாகர், பின் ஆச்சார்ய சிவசாகர்; ஆச்சாரிய ஞான்சாகர் அவர்களுக்கு பின் ஆச்சார்யரானார் முனி வித்யாசாகர் அவர்கள். அவரது இரு சகோதரர்களான முனி யோகசாகர், முனி சமயசாகர் இருவரும் இவரிடம் முனி தீக்ஷை ஏற்று, வழிதடத்தில் வருகின்றனர்.


பெரிய மேதைகள் பலர் அவருடைய சீடர்களாக உள்ளனர். 2001 ம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள திகம்பர முனிகளில் 21 சதவீதத்தினர் இவருடைய சங்கத்தில் இருந்தனர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.


அவருடைய  முக்கிய சீடர்களில் ஒருவரான, 2015ம் ஆண்டு சமாதியடைந்த முனி  க்ஷமாசாகர் ஆவார். முனி சுதாசாகர், உபாத்யாய குப்திசாகர்  போன்றோரும் இவரது  சீடர்களே.


தற்போதும் பல  துறவிகளும், பெண் துறவிகளும் (ஏறக்குறைய 117, 172 பேர்கள்) இவரிடம் முனி தீக்ஷை  ஏற்று அவரது சீடர்களாய் அரும்பெரும் முனி சங்கத்தில்  உள்ளனர். அம்முனிகள்  சற்றேறக்குறைய இந்தியா நாட்டில் 60 இடங்களில் மழைக்கால தங்கலில் உள்ளனர். அங்குள்ள சீலமிகு சிராவகர்களின்  சத்திரத்தில் தங்கி,  சரியை ஏற்கின்றனர்.


திகம்பர முனிகளின் விதிப்படி மழைக்காலம் நான்கு மாதங்கள் தவிர, ஓரே  இடத்தில் தங்குதல் கூடாது. அதன் படி அவர் ஓரிடத்தில் நீண்ட நாட்கள் தங்குவது இல்லை. அவர் முன்னறிவிப்பு இன்றி திடீரென முன்பே குறிப்பிடாத இடத்தை நோக்கி கிளம்பி விடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.


அவர் தீட்சை  ஏற்ற 1968ம் ஆண்டிலிருந்து ஏழு இடங்கள் ராஜஸ்தானிலும், ஒரு இடம் உத்திர பிரதேசத்திலும், ஏழு இடங்கள் மத்திய பிரதேசத்திலும்,  ஒரு இடம் பீகாரிலும், ஒன்பது இடங்கள் மத்திய பிரதேசம், இரு  இடங்கள் மஹாராஷ்ட்ரா,  மீண்டும் ஒரு இடம் மத்திய பிரதேசம், ஒரு  இடம் குஜராத்,  பின் பதினொரு இடங்கள் மத்தியப் பிரதேசம், ஒரு இடம் மஹாராஷ்ட்ரா, எட்டு இடங்கள் மத்தியப் பிரதேசம் என மாறி மாறி மழைக்கால தங்கலில்  இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆச்சார்ய வித்யாசாகர்,  முனிகள் பாரம்பரியத்தில் நீக்கிய உணவுகள் அன்றி உப்பு, சர்க்கரை, பழங்கள், பால் முதலியவற்றையும் உண்ணாமல் நீக்கி யுள்ளார்கள். அவர் சரியைக்கு செல்லும் போது பல சிராவகர்கள் அழைத்து நிற்பர். அவர்களில் ஒரு இல்லறத்தாரை தேர்வு செய்து அவர்களிடம் கையேந்தி உணவை பெற்று வருகிறார்.


பாரதீய ஞானபீடம் அவரது சீடரான முனி க்ஷமாசாகர் எழுதிய 'In Quest of the Self'  என்ற ஆச்சார்ய வித்யாசாகரின்  வாழ்க்கைச்சரிதத்தை வெளியிட்டுள்ளது பெருமைகுரியதாகும்.


முனி தீக்ஷை ஏற்று ஐம்பாதாவது அண்டை தழுவிய
ஆச்சார்ய வித்யாசாகர் மகராஜுக்கு
நமோஸ்து, நமோஸ்து, நமோஸ்து.





4 comments:

  1. மிகவும் அருமையான கட்டுரை . தங்கள் ஒருவராலேயே இவ்வாறு தொகுத்து எழுத இயலும் .அருமை

    ReplyDelete
  2. கனக.அஜிததாஸ்

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete