ப்ரம்மதேவர் ஸ்துதி


ப்ரம்மதேவர் ஸ்துதி




பதாம்புக ப்ரமனே ஏ வரமருள்வாய் கஜவாகனனே
சதாநந்த ஜின சீதளனடி சேவிதா சீரா சகல குணாகரா

அய்யா அருள்புரிவாய் துய்யா அம்புய மலர் கையா
அனுதினம் உனதடி பணிந்தேன் மெய்யா
துய்யா சாத்தையா தொழுதேனேன் கையால்
அய்யமின்றியருள் செய்வாய் சாத்தையா

 பதாம்புக ப்ரமனே ஏ வரமருள்வாய் கஜவாகனனே
 சதாநந்த ஜின சீதளனடி சேவிதா சீரா சகல குணாகரா


தேவா எந்தனை காவா சந்ததம் ஓவா
திகழ்மணி முடியணி மகானுபாவா
மாவாவனந்த குண மாக்ஷிமை கொள் மூவா
வாவா ஆதி சக்கரவர்த்தி யருள் தா

பதாம்புக ப்ரமனே ஏ வரமருள்வாய் கஜவாகனனே
சதாநந்த ஜின சீதளனடி சேவிதா சீரா சகல குணாகரா


சீரா முனிகிரிபேரா செண்டலங்காரா
பூரண புஷ்கலை சுகுமாரா
தீராய் துயர் நீராய் செய்வருள் தாராய்
நேராய் கலக் கண் பாராய் ஒய்யாரா

பதாம்புக ப்ரமனே ஏ வரமருள்வாய் கஜவாகனனே
சதாநந்த ஜின சீதளனடி சேவிதா சீரா சகல குணாகரா

No comments:

Post a Comment