த்ருஷ்டாஷ்டக ஸ்தோத்ரம் - அத்யாஷ்டக ஸ்தோத்ரம்

 

ஓம் ஜிநாய நம :

 

த்ருஷ்டாஷ்டக ஸ்தோத்ரம்

ஜிநாலய காட்சி துதி

 

 

[ஜிநாலயத்திற்குச் செல்லும் போதோ அல்லது ஜிநாலயத்தில் வலம் வரும்போதோ ஜிநாலயத்தைத் தரிசிக்க வாய்த்த பெரும் புண் ணியத்தை எண்ணி மகிழ்ந்து பக்தியுடன் கீழ் வரும் "த்ருஷ்டாஷ்க ஸ்தோதரத்தைச் சொல்லலாம்.

 

1  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் பவதாபஹாரீ

பவ்யாத்மனாம் விபவ ஸம்பவ - பூரி -ஹேது I

துக்தாப்தி-பேன-தவளோஜ்ஜவல - கூட கோடீ-

நத்த - த்வஜ-ப்ரகர-ராஜி-விராஜமானம் II

 

1  எல்லையற்ற உயிர்களின் தாபத்தைத் தணிக்க வல்லதும், எல்லையற்ற வைபவங்களை அளிக்க வல்லதும், பால் மற்றும் கடல் நுரை போல வெண்மை ஒளியுடைய கோபுரங்களின் உச்சியில் கொடிகளோடு விளங்குவதுமான ஜிநேந்த்ர பவனத்தை (ஜிநாலயத்தை) இன்று நான் தரிசித்தேன் .

 

2  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் புவனைக லக்ஷ்மீ –

 தாமர்த்திவர்த்தித -மஹாமுனி-ஸேவ்ய மானம் I

வித்யாதராமர-வதூஜன முக்த திவ்ய-

புஷ்பாஞ்சலி- ப்ரகர-ஷோபித-பூமிபாகம் II

 

2  மூவுலக லக்ஷ்மீகளுக்கு இடமானதும், ரித்தி பெற்ற மகா முனிவர்களால் வணங்கப் படுவதும், வித்யாதரர் மற்றும் தேவ மகளிர்களாலும் தூவப் பட்ட திவ்ய மலர்களால் அழகு பெற்ற பூமியோடு கூடியதுமான ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித்தேன்.

 

3  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் பவனாதிவாஸ

விக்யாத- நாக- கணிகா- கண - கீயமானம் I

நாநாமணி-ப்ரசய - பாஸுர - ரஷ்மி ஜால

வ்யாளீட நிர்மல-விசால- கவாக்ஷஜாலம் ll

 

3  பவனவாசி முதலான தேவர்களின் கணிகைகள் பாடி மகிழ்வதும், பல வகையான மணிகளினால் அழகு பெற்ற அகன்ற சன்னல்களை உடையது மான ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்.

 

4  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் ஸுரஸித்த-யக்ஷ

கந்தர்வ - கின்னர -கரார்பித- வேணு - வீணா I

ஸங்கீத - மிஸ்ரித- நமஸ்க்ருத- தீரநாதை

ராபூரிதாம்பர - தளோரு- திகந்தராளம் II

 

ஆகாயத்தில் எல்லா திசைகளிலும் தேவர். சித்தர், யக்ஷர், கந்தர்வர், கின்னரர் ஆகியோர்' வணங்கி தம் கைகளில் உள்ள வீணைகளினால் எழுப்பும், இசையினால் விளங்கித் தோன்றும் ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்

 

5  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் விலஸத்விலோல

மாலாகுலாலி - லலிதாலக - விப்ரமாணம் I

மாதுர்ய வாத்ய-லய-ந்ருத்ய-விலாசினீனாம்

லீலா - சலத்வலய- ந்ருபுர-நாத ரம்யம் II

 

அசையும் அழகிய மாலைகளால் மயங்கிய வண்டு கள் சூழ்ந்த மாலைகள் கூந்தல் போல விளங்க. இனிய இசைக் கருவிகளில் எழுந்த இசைக்கு இசைவாக ஆடும் மகளிருடைய வளையல்களும், சிலம்புகளும் எழுப்பும் ஒலியோடு விளங்குகின்ற ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்

 

6  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் மணி-ரத்னஹேம்

ஸாரோஜ்ஜவலை: கலச சாமர-தர்பணாத்யை: I

ஸன்மங்கலை: ஸததமஷ்டசத-ப்ரா பேதைர்

விப்ராஜிதம் விமல -மௌக்திக-தாமசோபம் II

 

மணி,ரத்தம், பொன்னால் அமைந்த 108 கலசங் கள்,சாமரை, கண்ணாடி முதலான நல்ல மங்கலப் பொருள்களால் விளங்குகின்ற,குற்ற மற்ற முத்து மாலைகளால் அழகு பெற்ற ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்

 

 

7  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் வரதேவதாரு-

கர்ப்பூர -சந்தன துருஷ்க-சுகந்தி தூபை: I

மேகாய மான ககனம் பவனாபி காத-

ஞ்சச்வலத் விமல- கேதன - துங்க-சாலம் II

 

உயர்ந்த தேக்கு, உத்தம தேவதாரு, கற்பூரம் சந்தனம், முதலான நறுமணப் பொருள்களால் ஆக்கப்பட்ட தூபத்திலிருந்து எழுந்த புகையா னது ஆகாயத்தில் மேகம் படிந்தாற் போல அற்புத அழகுடன் விளங்குகின்றதும், வீசும் காற்றினால் அசைகின்ற கொடிகளோடு விளங்கு கின்றதுமான ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித்தேன்.

 

8  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் தவளாதபத்ர-

ச்சாய நிமக்ன - தனு - யக்ஷ குமார - வ்ருந்தை: I

தோதூயமான - ஸித-சாமர- பங்க்த்தி பாஸம்

பாமண்டல- த்யுதியுத ப்ரதிமாபிராமம் II

 

வெண்குடை நிழலில் உள்ள யக்ஷ குமாரர்கள் வீசும் வெண் சாமரை வரிசைகளின் அழகுடன் விளங்குகிற, பாமண்டல ஒளியுடன் கூடித் திகழும் பிரதிமைகளுடன் மிக அழகு வாய்ந்த ஜிநேந்த்ர பவனத்தை இன்று நான் தரிசித் தேன்.

 

9  த்ருஷ்டம் ஜிநேந்த்ர பவனம் விவிதப்ரகார

புஷ்போபஹார்-ரமணீய -ஸுரத்ந பூமி  I

 நித்யம் வஸந்த திலகச்சீரிய மாத தானம்

ஸன்மங்கலம் ஸகல - சந்த்ர முனீந்த்ர - வந்த்யம் II

 

பல வண்ண மலர் மாலைகளால் அழகிய ரத்ந பூமி சிறந்து விளங்குகின்ற, வசந்தகால திலக மலர்களுடன் விளங்குகின்ற, உத்தம மங்கல வடிவ முழு நிலவு ஒளிபோல குளிர்ச்சி செய்கிற முனிவர்கள் (அல்லது ஸகல சந்திர முனிவர்) வணங்குகிற ஜிநேந்த்ர பவனத்தை இன்று தரிசித்தேன் .

 

 

10  த்ருஷ்டம் மயாத்ய மணி - காஞ்சன- சித்ர-துங்க

ஸிம்ஹா ஸனாதி- ஜிந பிம்ப- விபூதியுக்தம் I

சைத்யாலயம் யததுளம் பரிகீர்திதம் மே

ஸன்மங்கலம் ஸதல-சந்த்ரமுனீந்த்ர - வந்த்யம் II

 

மணியும் பொன்னும் அமைந்தமையால் அழகு பெற்று விளங்குகின்ற சிம்மாசனம் முதலான வைபவங்களுடன் கூடி அழகுடன் திகழ்கிற, ஒப்பற்ற புகழுடன் கூடிய, எனக்கு மங்கலத்தைத் தருகின்ற, முழு நிலவு ஒளிபோல குளிர்ச்சி செய் கின்ற முனிவர்கள் (அல்லது ஸகல சந்த்ர முனிவர்) வணங்குகின்ற ஜிநேந்த்ர சைத்யால யத்தை இன்று தரிசித்தேன்.

 

 

அத்யாஷ்டக ஸ்தோத்ரம்

ஜிந பகவான் காட்சி துதி

 

[ஜிநாலயத்தை மூன்று முறை வலம் வந்த பின்பு உள்ளே சென்று ஜிநபிம்பத்தைத் தரிசிக்கும் போது இந்தத் துதியைச் சொல்ல வேண்டும். பகவானைத் தரிசிப்பதால், தான் பெறும் நன்மைகளை எல்லாம் சொல்லி மனம் குளிர்ந்து மகிழ வேண்டும்.)

 

1 அத்ய மே ஸபலம் ஜன்ம

நேத்ரே ஸபலே மம I

த்வாமத்ராக்ஷம் யதோ தேவ

ஹேது மக்ஷய ஸம்பத: II

 

1  தேவ! அழியா செல்வத்திற்கு (முக்திக்கு)க் காரணமான உம்மை இன்று நான் தரிசித்தேன். அதனால் என் பிறவி பயனடைந்தது; என் கண்களும் பயன் பெற்றன!

 

2 அத்ய ஸம்ஸார - கம்பீர

பாராவார் : ஸுதுஸ்தர: I

ஸுதரோயம் க்ஷணேனைவ

ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

2  ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் கடந்து செல்லுதற்கு அரியதாகிய இப் பிறவிப் பெருங் கடல் கண நேரத்தில் கடப்பதாக ஆகி விட்டது.

 

3 அத்ய மே க்ஷாளிதம் காத்ரம்

நேத்ரே விமலே க்ருதே I

ஸ்நாதோஹம் தர்ம தீர்த்தேஷு

 ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

3  ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் எனது உடல் தூய்மை பெற்றது; கண்கள் தூய்மை பெற்றன; தரும தீர்த்தத்தில் நான் குளித்தவன் ஆனேன்!

 

4 அத்ய மே ஸபலம் ஜன்ம

ப்ரசஸ்தம் ஸர்வ மங்கலம் I

ஸம்ஸாரார்ணவ - தீர்ணோsஹம்

ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

4  ஜினேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் என் பிறவி பயன் பெற்றது; புகழான மங்கலங் கள் எல்லாம் எனக்கு வாய்த்தன; நான் பிறவிக் கடலை நீந்திக் கடந்தேன்!

 

5 அத்ய கர்மாஷ்டக - ஜ்வாலம் விதூதம் ஸகாஷயகம் I

துர் கதேர்வி நிவ்ருத் தோஹம் ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

5 ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் கஷாயங்களுடன் எட்டு வினைகளையும் எரித்து நீக்கி விட்டேன்; தீய பிறவியிலிருந்தும் தப்பி விட்டேன்!

 

6 அத்ய ஸௌம்யா க்ரஹா : ஸர்வே சுபாச்சைகாதச-ஸ்திதா: I

நஷ்டானி விக்ன - ஜாலானி ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

6 ஜிநேந்த்ர. இன்று நான் உம்மை தரிசித்தலால் எனது பன்னிரண்டு ஸ்தானங்களில் நிற்கும் எல்லா கிரஹங்களும் அமைதியும் நன்மையும் உடையனவாக ஆகிவிட்டன ; தடை வலைகள் அறுந்து விட்டன.

 

7 அத்ய நஷ்டோ மஹாபந்த: கர்மணாம் துக்க தாயக: I

ஸுக-ஸங்கம் ஸமா பன்னோ ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

7 ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் துன்பத்தைத் தரும் வினைக்கட்டு அழிந்தது ; சுகம் தரும் தொடர்பு பெற்றேன்!

 

8 அத்ய கர்மாஷ்டகம் நஷ்டம் துக்கோத்பாதன காரகம் I

ஸுக்காம் போதி - நிமக்னோsஹம் ஜிநேந்த்ரம் தவ தர்சனாத் II

 

8 ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் துக்கத்தைத் தரும் எட்டு வினைகளும் அழிந் தன ; நான் சுகக் கடலுள் அமிழ்ந்து போனேன்!

 

9. அத்ய மித்யாந்த காரஸ்ய ஹந்தா ஜ்ஞான - திவாகர: I

உதிதோ மச்சரீரே$ஸ்மின் ஜிநேந்த்ரம் தவ தர்சனாத் II

 

 

9 ஜிநேந்த்ர! இன்று தான் உம்மை தரிசித்தலால் என் உடலுள் அறியாமை இருள் அகன்று ஞான சூரியன் தோன்றினான்!

 

10 அத்யா ஹம் ஸுக்ருதீபூதோ நிர்தூதாசே கல்மஷ: I

புவன-த்ரய - பூஜ்யோsஹம் ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

10  ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசித்தலால் எல்லா களங்கங்களையும் கழுவிவிட்டு நல்லவ னாகி மூவுலகத்திலும் பாராட்டுதலுக்குரியவனா னேன்!

 

11 அத்யாஷ்டகம் படேத்யஸ்து குணா நந்தித- மானஸ: I

தஸ்ய ஸர்வார்த்த ஸம்ஸித்திர் ஜிநேந்த்ர தவ தர்சனாத் II

 

11  ஜிநேந்த்ர! இன்று நான் உம்மை தரிசிக்கும் போது உம்முடைய குணங்களில் ஆனந்தமாக என்னுடைய மனத்தை ஈடுபடுத்தி இந்த 'அத் யாஷ்ட' துதியைச் சொல்கிறேன்; உம்மை தரி சிப் பதாலேயே அதன் அறிகிறேன்; அல்லது அடைகிறேன்! எல்லாப் பொருளையும் ஸர்வாத்த ஸித்தியை

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment