ஜினவறம்



ஜின அறம்


அறநூல்களில் தெரிவிப்பதாவது…

இந்த உலகம் உயிர், புற்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம், காலம் என்ற ஆறு பொருள்களின் தொகுப்பு. இவற்றின் இயல்புகள் வெவ்வேறானவை . உயிரின் இயல்பு உணர்தல் (சேதனா). புற் கலத்தின் இயல்பு நிறம், சுவை. மணம், ஊறு, நாற்றம் முதலியன.

தன்மத்தின் இயல்பு பொருள்களின் இயக்கத்திற்கு உதவுவது.
அதன்மத்தின் இயல்பு பொருள்களின் நிலைப்பிற்கு உதவுவது.
ஆகாயத்தின் இயல்பு எல்லாப் பொருள்களும் இருப்பதற்கு இடம் தந்து உதவுவது. காலத்தின் இயல்பு பொருள்களின் மாற்றத்திற்கு உதவுவது.

இவ்வாறு ஒவ்வொரு பொருளின் இயல்பும் வெவ்வேறானவை. இவ்வாறு பொருள்களில் உயிர், புற்கலம் தவிர பிற நான்கும் தன் தன் இயல் குணங்களிலேயே மாறாமல் இருப்பன.

உயிரும், புற் கலமும் இரண்டு மட்டும் தன் இயல்பான தன்மையில் இருந்து திரி கின்றன. தூய்மையற்று காணப்படுவது போன்றது. உயிர் அநாதி காலமாக வினை எனும் புற்கலப் பொருள் சேர்க்கையால் தன் இயல்பிலிருந்து திரிந்து காணப்படுகிறது. அதனால் தன் உண்மையான இயல்பை அறியாமல் பிற பொருள்களின் மீது விருப்பு வெறுப்பு கொண்டு தன் இயல்குணத்தை மறந்து, பிறவிச் சுழலில் சிக்கி வருந்துகிறது.

உயிர் தன் உண்மை இயல்பை அறிந்து, தெளிந்து அந் நிலையை அடைய முயல வேண்டும். அதுவே தர்மம்-அறம் ஆகும். அறத்தை சமணம் பல நோக்கில் விளக்கியுள்ளது.

வஸ்து ஸஹாவோ தம்மம் - அதாவது வஸ்து பொருளின் இயல்பே தர்மம் என்பது பொதுப் பொருள். எனினும் உயிரின் இயல்பையும், இந்த இயல் குணத்தை அடையும் முயற்சிகளையும் சிறப்பாக அறம் என்பர்.

அகிம்ஸா பரமோதர்ம: எவ்வுயி ரையும் தம் உயிர் போல் போற்றி வாழும் உன்னத வாழ்வு நெறியே தம் ஆன்ம இயல்பில் நிறுத்தும் என்பதால் அகிம்சையை அறம் என்றனர். அனைத்து ஆன்ம நல ஒழுக்கத்திற்கும் அகிம்சையே அடிப் படை. எனவே அகிம்சையே அறம்.

சாரித்தம் கல தம்மோ - நல்லொழுக்கமே அறம். நல்லொழுக்கம் ஒன்றினாலேயே ஆன்மாவை அதன் திரிபு நிலையிலிருந்து விலக்கித் தன் தூய இயல்பு நிலையில் கொண்டு நிறுத்த முடியும் என்பதால் நல்லொழுக்கத்தை அறம் என்றனர்.

தயா மூலோ தர்ம: அறத்தின் வேராய் இ ரு ப் ப து தயை . ஆகிம்சை, நல்லொழுக்கம் முதலானவைகளுக்கு ஆடிப்படை தயை குணமே. ஆதனால் தயையை ஆறத்தின் வேராகக் கூறினர். தர் மஸ்ய மூலம் தயா ஏன்றனர்.

தம்சன மூலோ தம்மோ - அறத்தின் வேர் நற்காட்சி. ஊயிர், ஊயிரின் ஈயல்பு ஈவற்றில் நம்பிக்கையும், ஈடுபாடும் கொள்ளுதல், முயற்சி மேற்கொள்ளல் தரிசனம். இதனையே நல்நம்பிக்கை (நற்காட்சி) ஏன்பர். ஆதனால் தரிசனத்தை ஆறத்தின் வேர் என்றனர்.

ரத்னத்ரயோ தர்ம: நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் ஓரு சேர நிகழ்வதே முக்தி நெறி. அதாவது ஊயிரை வினைத் தொடர்பில் இருந்து நீக்கி தன் இயல்பில் நிலைக்கச் செய்வது. எனவே மும்மணியை அறம் என்றனர்.

தசலக்ஷண தர்ம: பத்து குணச் சிறப்புகளை உடையது அறம், பத்தறம் ஏன்பர். ஆன்மா வின் பத்து குணங்களை ஆன்ற பொறுமை, மென்மை, செம்மை, மெய்ம்மை, தூய்மை, அடக்கம், தவம், தியாகம், பற்றின்மை, பிரமசரியம் ஏனும் பத்தும் ஆன்மாவின் இயல்குணம் என்பதால் அவற்றை அறம் என்றனர்.

 மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அறம் - என்றார் தேவர். மனதில் தோன்றும் மாசு உயிரின் இயல் குணமல்ல, திரிபு நிகழ்வே. உயிரை இயல்பு நிலைக்கு கொண்டு செல்லும் நல்லொழுக்க முயற்சியில் முதலில் மனம் தூய்மையாக இருக்க வேண்டும் .

 என வே மனத்தூய்மையை போற்றுதலே அறம் என்றார். மனத் தூய்மையின்றி நிகழும் செயல், புறத் தோற்றத்திற்கு நல்லனவாகத் தோன்றினும் உயிருக்குத் தீமை செய்வனவேயாகும்.

இவ்வாறு அறத்திற்கு / தர்மத் திற்கு வெவ்வேறு விளக்கம் கூறி னாலும்; உயிரைப் பிறவி நிலையில் இருந்து விலக்கி அதன் தூய இயல்பான பேரின்ப நிலையில் நிறுத்துவதே அறம்.

ஆன்மாவின் தூயபரிணமமே , நிர்விகார நிலையே அறம். மேற்கூறிய விளக்கமனைத்தும் இந்நிலையை அடைவிக்கும் நெறிகளே. எனவே உயிரின் உன்னத குணங்களைத் தெளிந்து பிற தொடர்புகளை அகற்றி, தன் இயல்பில் பரிணமிக்கச் செய்யும் ஒழுக்கத்தின் வளர்ச்சியே அறம்.

வறியார்க்கு ஒன்று ஈதல், மற்றவர்களுக்கு செய்யும் நல்லுபகாரம், அறநிலையங்களுக்குச் செய்யும் உதவி போன்றன வழக்கில் அறம் தருமம் எனப்படுகிறது. இவை அறநெறி நிற்போர்களின் தன்னலம் கருதா நற்தொண்டு.

ஆனால் இவைகளும் இன்று பெரும்பாலும் ஏதோ ஒரு பிரதி பயனை எதிர் பார்த்துச் செய்யும் செயலாக ஆகி விட்டன. இம்மைச் செய்தது மறுமைக்காம்! என்ற உணர்வோடு பொருளை ஈதல் அறவிலை வணிகமே, இது அறம் எனப்படா.

எனவே வினைகளோடு கட்டுண்டு, தன் இயல்பில் திரிந்து, பிறவியில் சிக்கித் துன்புற்று, உழலும் உயிரை / ஆன்மனை வினைத் தொடர்பை முற்றுமாக நீக்கி, தன் தூய பேரானந்த இயல்பில் நிலை பெறச் செய்யும் ஒழுக்க நெறியே அறம்.

தெளிந்து முயல்வோமாக!!

2 comments: