வித்தை அறியும் ஆற்றல்.வித்தை அறியும் ஆற்றல்.பகவான் மகாவீரரின் சீடர்களில்  ஒருவன்  கோசாலன் என்பான். (புத்தருக்கும் கோசாலன் என்ற பெயருண்டு) சீடனான அவன் அவரை சோதிப்பதையே சிந்தனையாக வைத்திருந்தான். குருவாக  ஏற்றவரை எக்கணமும் சீடர்கள் சோதிப்பதில்லை. ஆனால் அவர் ஞானியா! இல்லையா? என்று அவ்வப்போது அவன் குயுக்தியாய் பரீட்சை செய்து வந்த்தினால், மஹாவீரர் பல அற்புதங்களை ஆற்றியது அனைவருக்கும் அவர்மீது மரியாதையை கூட்டி வணங்கச்செய்தது.


ஆனால் கோசாலன் சஞ்சல மனமுள்ளவனாதலால் பிற்காலத்தில் அவர் போதனைகளை ஏற்காமல் சங்கத்தை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.


அகம்பாவத்தினால் அவரை சோதிப்பது வாடிக்கையான போழ்தில் ஓர்நாள்:


பகவான் மகாவீரர் அருகிலுள்ள சிற்றூர் நோக்கி வனப்பகுதியில்  நடந்து செல்லும் போது திடீரென ஒரு செடியை கண்ட கோசாலன்,


ஐயனே! எனக்கு ஓர் ஐயம் ஏற்பட்டுள்ளது. இச்செடி பூக்குமா? பூக்காதா? கூறுங்கள், நான் அறிய விரும்புகிறேன் என்றான்.


பகவான் அச்செடியை கண்டு சிறிது நேரம் கண்ணை மூடி தியானித்தார்.


அதனை கண்ட கோசாலன் மகாவீரருக்கு தெரியவில்லை அதனை மறைக்கவே யோசிக்கிறார், என அகங்காரத்தினால் அவரை கேலிசெய்ய முனைந்தான்.


கண்விழித்த ஐயன் கோசல நாட்டவரே, அந்த தாவரம் பூக்கும் வகையைச் சார்ந்ததே எனக் கூறிய உடன்,  அச்செடி புத்தால் என்ன! பூக்கா விட்டல் என்ன! எனக் சொல்லியபடியே அச்செடியை வேருடன் பிடுங்கி வீசினான்.


அச்செடி பூக்கும் இனம் என்பதை ஏற்க மறுத்து அவ்வகம்பாவினன் இவ்விழிச்செயலைச் செய்தான். அனைவரும் ஒருகணம் திகைத்து நின்று, பின் பயணத்தை தொடர்ந்தனர்.


கிராமங்களுக்கு சென்று சில நாட்கள் அறிவுரை வழங்கிய பின், மீண்டும் வ்வழியே திரும்பினர்.


இடைப்பட்ட நாளில் மழை பெய்ததினால் அச்செடியின் வேரில் சேறு பூசி பிழைத்து, பின் பூத்தும் நின்றது.


அதன் அருகில் நெருங்கிய பகவான் இதழ்களிலும் அப்பூவினைப்போல் புன்னகை பூத்திருந்தது. அவர் அச்சீடனை பார்த்ததும் அவன் தனது தவறை மறைக்க சற்று கோபத்துடன் முகம் சுழித்திருந்தான்.


அதனைக் கண்ட பகவான் தற்போது அச்செடியை மீண்டும் பிடுங்கி எறிய எண்ணுகிறாய்? சரிதானே! என்றார்.


அவனும் ஆம் அவ்வாறே செய்ய எண்ணுகிறேன். என்றான் மூடனாக.


அவரோ உன் கேள்விக்கு அத்தாவரத்தில் என்று  பூ அரும்யதோ அன்றே விடை கிடைத்து விட்டது. அதனை வீணே மீண்டும் அழிக்க முனைவதால் யாது பலன்; ஆகவே அதனை அப்படியே விட்டு விடு. நீ மீண்டும் பிடுங்கி எறிந்தாலும் அது பூத்தது பூத்தது தான் என மொழிந்து அவனது அகங்காரத்தை நீக்கினார்.


அருகில்  இருந்த மற்றோரு சீடன் குருவே தாங்கள்  அதனை  எவ்வாறு உணர்ந்தீர்கள், நான் அறிய விரும்புகிறேன் என விழைய அவரும்;


ஆம் நான் அச்செடியின் விதைக்காலம் வரை சென்று அதனுள் உற்று நோக்கிய போது பூவிடும் தாவரயினம் என்பதை உணர்ந்தேன். அதனால் என்றார் அத்தீர்க்கதரிசி.


பகவான் கூறியதிலிருந்து ஒவ்வோர் உயிரின் வித்தை உற்று நோக்கும் ஆற்றல் பெற்றால் அனைத்தும் அறியலாம் என்பது புலனாகும்.


1 comment: