Atmanushasan - ஆத்மானு ஸாசனம்




ஆத்மானுஸாசனம்
(ஆன்மாவின் இயல்பு)
आत्मानुशसन्म




இதன் பொருள் தம் ஆன்மாவில் கட்டுப்பாடு, அதாவது ஆன்மாவிற்கு கட்டளையிட்டு அதைக் கட்டுப்பாட்டில் வைத்தல் என்றாகும். இந்நூல் உலகில் துன்பத்திலேயே இருந்து கொண்டிருக்கும் உயிர்களுக்கு, துன்பத்தை அகற்றி நிலையான இன்பத்தை அடைவது எப்படி? என்பதற்கான வழிகாட்டுதல்களின் வழியே அறிவையும், நெறியையும் வழங்குகிறது.

தன்னுடைய வழமையான நிலையை அடைய (to attain its’ own property) மற்றும் ஆன்மாவை கட்டுப்படுத்த பயன்படும் இந்த நூலை யாத்தவர் மஹாபுராணத்தின் முன்பகுதியான ஆதிபுராணத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றிய ஆச்சார்ய ஸ்ரீ ஜினசேனன் அவர்களின் சீடரும், பின்பகுதியான உத்தரபுராணத்தை இயற்றி மஹாபுராணக் காப்பியத்தை நிறைவு செய்த ஆச்சார்ய ஸ்ரீ குணபத்ரர் ஆவார். குணங்களில் சிறந்தவரான இவ்வீதராகி முனிவர் அருளிய இந்த ஆக்கம் என்றும் அழிவில்லாமல் பாதுகாப்பது நம் கடமையாகும். அவ்வழியில் இந்த நூலின் மூலத்திலுள்ள 270 நூற்பாக்களை, கையில் நூல்படிவம் இன்றி எங்கும், எப்போதும் மற்றும் பிற்காலத்திலும் அனைவரும் படித்து பயனுறும் வகையில் எனது அஹிம்சையாத்திரை வலைத்தளத்தில் பதிவிட முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

அதே சமயம் அதனை இக்குழுவிலும் தினம் ஒரு பாடலை வழங்க அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். எழுத்துப்பிழை, சொற்குற்றம் இருப்பின், கண்டவர், அவசியம் தெரிவிக்குமாறும் வேண்டுகிறேன்.

உருவாக்கம் பெற உதவிடும் நூல்கள்:

आत्मानुशसन्म (ஆத்மானு சாஸனம்) - பண்டித தோடர்மால் ஜி அவர்களின் ஹிந்தி உரை- யிலிருந்து பாக்கள் மட்டும், உச்சரிப்புக்கு வகைசெய்ய வேண்டி.

Atmanushasan – by ராவ்பகதூர் J.L. JAINI , M.A.; Bar-at-law – references for comnmentaries and translation.

ஆத்மானு சாஸனம் – Sir, K.V. அஜிததாஸ், M.A.; M.Com.; தமிழ் உரைக்கான குறிப்புகள் பெற…

(தமிழெழுத்து வடிவ நூற்பாக்களை சரியாக உச்சரிப்பு செய்ய ஹிந்து பாடல்களை தட்டச்சு செய்ய முற்பட்டேன். மிகத்தாமதம் ஆவதால் ஹிந்தி நூலில் உள்ளதை புகைப்படமாக எடுத்து வலைத்தளத்தில் பதிவிட உத்தேசித்துள்ளேன். அதனால் ஓரிரு பாடல்களுக்குப் பின் ஹிந்தி பாடல் தட்டச்சில் இருக்காது.)

நன்றி..




மங்களாச்சரணம்
म्न्हळाचरण्म


ल्क्ष्मी निवास्निलयम विलीन विलयम निधाय ह्रुदि वीरम |
आत्मानुशसन्महम वक्ष्ये मोक्षाय भ्य्यानाम || 1 || 



லக்ஷ்மீ நிவாஸ நிலையம் விலீன விலயம்நிதாய ஹ்ருதி வீரம் | 

ஆத்மானுசாஸனமஹம் வக்ஷ்யே மோக்ஷாய பவ்யானாம் || 1 ||
Cherishing in the heart Vira(mahavira the 24th Tirthankara) who is the place of residence of Lakshmi(perfection), whose sins have been destroyed, I describe Atmanusana for the attainment of liberation by those who are capable of being liberated. Commentary – Vira, The last Tirthankara Mahavira swami is often referred to by four other names, vira, Vardhamana, Ati-vira, and sanmati. Lakshmi is the goddess presiding over riches, knowledge, science and arts in perfection. The word as used here refers to the attainment of inherent perfection, infinite-conation, infinite-knowledge, infinite-power and inifinite-happiness, etc. It also refers to the Super-glory of the Hall of Samosarana(Audience) of the Lord, Where the Arhats preside and where discourses emanate from. Atmanushasana, is the name of this book. Literally, it means Self-culture, or Self-education. Bhavyanam. For the good of the qualified for Liberation, that is, those who are inclined to listen and derive benefit from the discourses hereby given.
வினைப்பகையை வென்று, குற்றங்கள் அனைத்தையும் கெடுத்து முக்தித் திருமகளின் இருப்பிடத்தை அடைந்தவரும், இருபத்தி நான்காம் தீர்த்தங்கரான பகவான் ஸ்ரீ மஹாவீரரை என் மனதில் நிறுத்தி; விடுதலை நெறியில் சென்று கொண்டிருப்பவருக்கும், விடுதலைப்பேற்றை அடையும் தகுதி பெற்றவர்களுக்கும் ஆத்மானுசாஸனம் என்ற நூலினை எழுதத் தொடங்குகிறேன். வீரர்: நிகழ்கால கடைசி தீர்த்தங்கரர் மஹாவீரருக்கு வீரர், அதிவீரர், சன்மதி வர்த்தமானர் என்ற நாமங்களும் உள்ளன. லக்ஷ்மி: செல்வம், ஞானம், கலை இவைகளின் தலைவியாக உருவகமாக கூறுவர். பரமாத்ம நிலை, வரம்பிலா அறிவும், ஆற்றல், சுகம் முதலானவைகளைக் குறிப்பதாகும். மேலும் சமவசரணம் அதாவது அறங்கூறம் மண்டபத்தின் அமர்ந்து உலக உயிர்களின் நலனுக்காக உபதேசித்த சிறப்பையும் குறிக்கின்றன. ஆத்மானுசாசனம்: அதாவது ஆன்மாவின் இயல்பு, பண்பு, ஆன்ம ஞானம் பெற்றி அறிதல் எனக் கொள்ளலாம். பவ்யானாம்: வீடுபேறு அடைய தகுதியானவர்கள். அதாவது அதற்காக அறவுரை கேட்டு பயனடைபவர்கள்.





दु:खाद्विभेषि नितराम भिवाच्चसि सुखमतो अहम्प्यातमन |
द:खापहारि सुख्क्र्म्नुशास्मि त्वानुम्त्मेव || 2 ||

து:காத்விபேஷி நிதராமபிவாச்சஸி சுகமதோஅஹமப்யாத்மன் |

து:காபஹாரி ஸுககரமனுசாஸ்மி தவானு மதமேவ || 2 ||
Oh soul ! thou art always afraid of pain, and desirous of pleasure. There I also offer thee the object of thy desire, which tends to give pleasure and remove pain.
ஏ ஆன்மனே! சிலர் குரு உபதேசத்தைக் கேட்டு கைக்கொள்வதில் ஏற்படும் இவ்வுலக சுகத்தின் இழப்பையும், கடினத்தையும் எண்ணி அஞ்சி ஆகமப்பயிற்சி செய்யாமல் இருப்பர். அவ்வாறு இருக்காதே. துன்பம் நீங்கி இன்பம் பெற விரும்பும் நீ உண்மையான சுகத்திற்கு வழிகாட்டும் உபாயத்தினைக் கூறுகிறேன், என்றார் ஆசிரியர்.





यध्पि क्दाचिदसमिन विपाकम्धुर्म तदात्वक्दु किन्चित |
त्वम त्स्मान्मा भैषीर्यथातुरो भेष्जादुख्रात || 3 || 


யத்யபி கதாசிதஸ்மின் விபாகமதுரம் ததாத்வகடு கிஞ்சித் |

த்வம் தஸ்மான்மா பைஷீர்யதாதுரோ பேஷஜாதுக்ராத் || 3 ||
If perchance, in this(advice) there be something which though sweet at fruition, is yet unpalatable, be thou not afraid of that, just as a sick person is not (afraid) of bitter medicine.
இந்த ஆகமப்பொருள் கசப்பானதாக இருந்தாலும் அதற்காக அஞ்சாதே. மருந்து உண்ணும் போது கசப்பதாக இருந்தாலும் அதன் நற்பயனை நினைத்தால் இனிக்கும். அறிவுடைய நோயாளி தனது நிவாரணத்திற்காக மருந்தை எடுத்துக் கொள்ள அஞ்சுவதில்லை. நம்பிக்கையுடன் அதனை ஏற்கிறான். அதுபோல இந்த ஆகம உபதேசத்தைக் கேட்கும் போது வருத்தம் தோன்றினாலும் அதனால் உண்டாகும் நற்பலனை எண்ணி அஞ்சற்க. ஏற்கும் தகுதி உன்னிடம் உள்ளது.



जना घ्नाश्च वाचाला: सुल्भा: स्युव्ररुथोतिता: |
दुर्लभा हान्थराद्रास्ते जगद्भ्युज्जिहीर्ष्व: || 4 || 


ஜனா கனாஷ்ச வாசால: ஸுலபா: ஸ்யுர்வ்ருதோத்திதா: |
துர்லபா ஹாந்தரார்த்ராஸ்தே ஜகதப்யுஜ்ஜிஹீர்ஷவ: || 4 ||
Persons, who are vain and full of talk, and clouds which thunder but give no rain, are easy to find. But it is difficult to find those kind-hearted persons who desire to uplift the world, just as it is difficult to find clouds, full of rain and beneficial to the world.
பயனற்ற சொற்களை மிகப்பேசுபவர்கள் பலர். அவர்கள் உபதேசித்தவாறு அவர்களே வாழ்க்கையில் கடைபிடித்து நடப்பதில்லை. இவர்கள் மழைதராது இடிக்கும் மேகங்கள் போன்றவர்கள். ஆனால் மழைதரும் மேகங்கள் போன்று பயனுள்ள உபதேசம் செய்பவர்கள் சிலரே. வீடுபேறு அடையும் அருளுணர்வோடு உபதேசிப்பதுடன், நடந்தும் காட்டுபவர்கள்.






(photo copy from Hindi from Pandit Thodarmal ji book) 

ப்ராஞ்: ப்ராப்த ஸமஸ்த சாஸ்த்ர ஹ்ருதய: ப்ரயக்தலோகஸ்திதி: ப்ராஸ்தாச: ப்ரதிபாபர: ப்ரஸமவான் ப்ராகேவ த்ருஷ்டோத்தர: | 


ப்ராய: ப்ரச்ன ஸஹ: ப்ரபு: பரமனோஹாரி பராநிந்தயா, ப்ரூயாந்தர்மகதாம் கணீ குணநிதி: ப்ரஸ்பஷ்டமிஷ்டாக்ஷர: || 5 ||
He, who is wise, well-versed in the essence of the Jaina scriptures, aware of the ways of the world, with no sense-desires, brilliant, calm-minded, ever ready with answers, patient of a volley of questions, powerful, attracting other minds, leader of saints, a repository of good qualities, and with speech clear and sweet, should deliver religious discourses without speaking ill of thers.
நல்ல அறிவுள்ளவராவும்; எல்லா ஆகமப்பொருளின் நுட்பங்களை அறிந்தவராகவும், கடந்தகால அனுபவமும் நிகழ்கால அறிவும் எதிர்கால விளைவைப்பற்றிய உணர்வுடையவராக இருக்க வேண்டும். உலகியல் வழக்கத்தை அறிந்தவராக இருத்தல் வேண்டும். புலன் வேட்கையற்றவராய் இருத்தலுடன் சீடர்களின் வினாக்களுக்கு பொருத்தமான விளக்கத்தை அமைதியாக வழங்கும் திறன் உடையவராக இருத்தல் வேண்டும் கேட்போர் மனதைக் கவரும் சொல்லாற்றல் உடையவராக இருக்க வேண்டும். கேட்போரின் கேள்விகளுக்கு தீர்க்கமான பதிலை முன்பே அறிந்தவாய் இருத்தல் வேண்டும். துறவியர் சங்கத்தின் முதன்மையானவராக, தலைமையேற்கும் தகுதியுடன் இருக்க வேண்டும். குணக்குன்றாய் விளங்க வேண்டும். தெளிவாக, இனிமையாக கருத்துக்களை அளிப்பவராக இருக்க வேண்டும் பிறரது குற்றங்களை பராமலும், வெளிப்படுத்தாதவராகவும் இருத்தல் வேண்டும்.





சுருதமவிகலம் சுத்தா விருத்தி: பரப்ரதிபோதனே,
பரதிருரூத்யோகோ மார்க பரவர்த்தனஸத்விதெள |

புதநுதிரனுத் ஸேகோ லோகஞதா ம்ருதுதாS ஸ்ப்ருஹா
யதிபதிகுணா யஸ்மின்நந்யே ச ஸோஅஸ்து குரு: ஸதாம் || 6 ||

Perfect knowledge of the scripture; pure conduct; inclination to persuade others (to the right path); keen interest in the propagation of the right path (of liberation); obeisance to the learned; pride-less-ness; knowledge of the world; gentleness; desire-less-ness; whoever possesses these and other qualities of the leader of ascetics, be he the Teacher of worthy people.
மேலும் உபதேசம் கூறுபவருக்கான விஷேச தகுதியானது:
ஜினஆகமங்களை ஐயம் திரிபுமற அறிந்திருத்தல் அவசியம்.
யோகத்தில் , மன,வசன, காயத்தூய்மையுடன் குற்றமில்லாமல் செய்படுபவராய் இருக்க வேண்டும்.

அறவோர் வாழ்ந்து காட்டிய நன்னெறியில் ஒழுகுபவராய் இருத்தல்;
மோட்ச மார்க்கத்தில் பேரார்வம் உடையவராயும்;

மெய்ஞானியரிடம் பணிவுடன் நடப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
உலக நடப்பை அறிந்தும் அறவோர் அவைக்களம் அகலாது அணுகுபவராய் இருத்தல் அவசியமாகும்.

இத்தமைய அறப்பண்பாளரே குருவாய் இருந்து பிறருக்கு நற்பண்புகளை போதிக்க முடியும்.


அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் – துறந்து அடங்கி
மண்ணுயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற்பட்ட வன். (அறநெறிச்சாரம் – 4)


விளக்கவுரை:
     அறநூல்கள் பலவற்றையும், கற்றறிந்தவனாயும் கருணை உடையவனாயும், மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளால் அனுபவிக்கப்படும், இன்பம் துய்க்கப் புகாதவனாயும் அகப்பற்று - புறப்பற்று ஆகிய இரண்டையும் விட்டவனாயும் அடக்கம் கொண்டவனாயும் உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு வீடு பேற்றுக்குரிய வழியினை, உரைப்பவன் ஒருவன் இருப்பானாயின் அத்தகையவன் அறம் உரைக்க தகுதியானவன்.    









பவ்ய: கிம் குசலம் மமேதி விம்ருசன் து:காத்பருசம் பீதவான்,
ஸெளக்யைஷீ ஸ்ரவணதிபுத்திவிபவ: ஸ்ருபத்வா விசார்ய ஸ்புடம் |

தர்மம் சர்மகரம் தயாகுணமயம் யுக்த்யாகமாப்யாம் ஸ்திதம்
க்ருஹத் தர்மகதாம் சுருதாவதிக்ருத: சாஸ்யோ நிரஸ்தாக்ரஹ: || 7 ||

The promising one, who ponders over the summumbonum for the self, is very anxious to avoid (worldly) sufferings, seeks happiness, whose intellectual greatness lies in listening, (retaining) etc., who having heard properly meditates upon. Truth, which brings (eternal) happiness is full of the quality of compassion, and is established by reason, and scriptural authority, and (then) accepts the sacred doctrine, being guided by the scriptures, and rid of obstinacy – such a person is worthy of being taught.
அறம் கேட்பவர்… ஆன்மனின் உயர் குணங்களைப்பற்றிய சிந்தனையாளனாக, பவ்யனாக இருக்கவேண்டும். தனக்கு நன்மை தருவது எது? தீமை தருவது எது? என்ற கேள்வியுடைய சிந்தனையாளனாய் இருந்து: தனது நலன் எது என்பது புரிந்தவனாய் இருக்க வேண்டும். நரகத்துன்பங்களை கேட்டு பின் பாபச் செயலுக்கு அஞ்சுபவனாய் இருப்பான். துக்கங்களை விலக்க துணிபவனாய் இருக்க வேண்டும். 

 அனந்த சுகத்தை விரும்புவனாய் இருத்தல் வேண்டும். அவனே உண்மை சுகத்தை அடைய ஆகமப்பொருளில் வழி தேடி அறம் கேட்பான். துறவு பற்றிய அறிவு, துறவியர்களின் பெருமை, உயர்வு அறிந்தவராதல் அவசியம். அவரே சீடனாக தகுதியுடையவன். அவனிடம் கீழ்க்கண்ட பண்புகளை அவசியம்: அறம் கேட்பதில் ஆர்வம், கேட்பதில் கவனம், முழுமனதுடன் கேட்டல், கேட்டபின் மறக்காமல் இருத்தல், சிறப்பானதைச் சிந்தித்தல், சந்தேகத்தை கேட்டு தெளிவு பெறல் மற்றும் தத்துவங்கள் மீது நம்பிக்கை வைத்த அறிய முற்படுதல் போன்றவை. உடல் நலமும், தயைகுணமும், அனுமானிக்கும் திறனும், ஆகமத்தின் நுண்பொருளைக்கேட்டு பின் சிந்தித்து ஏற்பராய் இருத்தல் வேண்டும். 
 பிடிவாத குணம் அற்றவராக இருத்தல் வேண்டும். இக்குணமுடையோரே அறம் கேட்கத் தகுதியானவராவார்.







பாபாத் து:கம் தர்மாத்ஸுகமிதி ஸர்வஜஜஸுப்ரஸித்தமிதம் |
தஸ்மாத்விஹாய பாபம் சரது ஸுகார்தீ ஸதா தமர்மம் || 8 ||

Demerit produces pain, happiness follows Truth (dharma). This is well-known to all. Therefore the man who desires happiness should always refrain from demerit, (and) follow Dharma.
பாபப் செயல்களை செய்வதால் துக்கமும், அறத்தால் சுகமும் கிடைக்கும் என்பது உலக இயற்கை என்று அறவோர் கூறுகின்றனர். ஆகையால் சுகத்திற்கு விழைபவன் தீவினைக்கு வித்திடும் பாப காரியங்களை செய்யாது, நல்வினைக்கு காரணமான அறச் செயல்களையே கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.








ஸர்வ: ப்ரேப்ஸதி ஸத்ஸுகாப்திமசிராத் ஸா ஸர்வகர்மக்ஷயாத்
ஸத்விருத்தாத் ஸ ச தச்ச போதநியதம் ஸோஅப்யாகமாத் |

ஸா சாப்தாத் ஸ ச ஸர்வதோஷரஹிதோ ராகாதயஸ்தே அப்யத:
தம் யுக்த்யா ஸுவிசார்ய ஸர்வசுதம் ஸந்த: ஸ்ரயந்து ஸ்ரியே || 9 ||

All men desire the early attainment of true happiness; it rises from the destruction of all Karmas. (This destruction of the Karmas results) from right conduct; that (right conduct) depends upon (right) knowledge. And that (right knowledge is acquired) from the scriptures. The scriptures are based on discourses (Jinavani), and this (Jina-Vani emanates) from the discourses Omniscient (Apta Arkat), and that Apta is free from all defects. These defects are attachment and others. Therefore after duly reasoned-out contemplation of Him, the source of all happiness, let the worthy resort to him for their benefit. Jina-Vani is speech of Arhat, which is wordless/script less sound, Anakshari Vani. Emanating from the Vibratory Omniscient, is understandable by all present, in their language, being them transformed into lettered discourses.

The defects of eighteen not found over the Omniscient.

Kshuda – Hunger; Trishna – thirst; Jara – old age; Atank –disease; Janma – birth; Marana – death; Bhaya – fear; Smaya – wonder, Raga – love: Dvesha – Hate; Moha – delusion; Rati – Indulgence; Arati – ennui; Chinta – anxiety; Sveda – perspiration; Kheda – distress; Nidra – sleep; shoka – sorrow.
உயிர்கள் யாவும் தூய இன்பத்தை அடைய ‘அறமே துணை என ஏற்கின்றன. அதற்கு முதலில் ஆப்தனை சரணடைய வேண்டும். அதனை அடைய அவரே மூலகாரணமாகிறார்.

அதாவது சுகத்தினை விரைவில் பெறவே அனைத்துயிரும் விழைகின்றன. இந்த நிலையான உண்மை எல்லா வினைகளின் அழிவினால் மட்டுமே உண்டாகிறது. இவ்வினைகள் அழிவது நல்லொழுக்கத்தினால் என்றாலும்; இந்த நல்லொழுக்கம் நல்லறிவு, நல்ல நம்பிக்கை இவற்றைச் சார்ந்துள்ளது. இவை ஆகமங்களிலிருந்து பெறப்பட்டவை.

அதுவோ அருகனின் திருமொழியை(திவ்யத்தொனி) உள்ளடக்கிய ஜினவாணியிலிருந்து கிடைப்பவை. அவையோ அருகப்பெருமான் முழுதுணர்ஞானம் அடைந்ததினால் தோன்றியவை.

இந்த ஆப்தன் எல்லா குற்றங்களிலிருந்தும் விலகி விருப்பு, வெறுப்பின்றி விளங்குபவர்.

அவரது இந்த நிலையே அத்தனை சுகங்களுக்கும் காரணம். அதனால் அவர் குணங்களை வழிபட்டு, வணங்கி, தியானித்து நிலையான சுகத்தை பெற முயற்சி செய்தல் வேண்டும். ---

திவ்யத்தொனி எழுத்துக்களால் உருவான ஒலியல்ல. எழுத்தில்லா வாணி யாகும். ஸயோக கேவலியாக பகவான் சமவசரணத்தில் அமர்ந்த போது அவரிடமிருந்து தோன்றியது. அம்மண்டபத்தில் வீற்றிருக்கும் அனைத்துயிரும் அதனதன் மொழிகளில் அறிந்து கொள்ளும் என்பதே சிறப்பாகும். பின்னரே அவரது ஜினவாணி கணதரர் வழியே ஆச்சார்யார்கள் வழிவழிவந்து ஆகமங்களாக எழுத்துரு பெற்று நம்மிடையே இப்போதும் காணப்படுகிறது.

அதனால் உண்மை சுகத்தை விரும்பும் ஆப்தனை ஏற்று, அவரால் அருளப்பட்ட அறநெறியை நாம் பின்பற்ற வேண்டும்.

அவரிடம் இல்லாத குற்றங்கள் பதினெட்டாகும். பசி, தாகம், முதுமை, நோய், பிறப்பு, இறப்பு, அச்சம், செருக்கு, விருப்பு, வெறுப்பு, மோகம், சிந்தை, வருத்தம், தூக்கம், வியப்பு, மயக்கம், வேர்வை, இளைப்பு போன்ற குற்றங்கள் இல்லாதவர்.








ஸ்ரத்தானம் த்விதம் த்ரிதா தசவிதம் மெளட்யாத்யபோடம் ஸதா, ஸம்வேதிகாதிவிவர்த்திதம் பவஹரம் த்ரயஞான சுத்திப்ரதம் | 


நிச்சிந்வன் நவஸப்ததத்வசமலப்ராஸாத மாரோஸஹதாம், ஸோபானம் பிரதமம் வினேயவிதுஷாமாத்யே யமாராதனா || 10 ||

Right belief is of two, three, and ten kinds.  It is always free from the defects of ignorance, etc., it is overflowing with apprehension of mundane miseries, etc; (it is the) destroyer of the cycle of existences: purifier of three kinds of wrong knowledge (ie transforms them into three kinds of right knowledge); it rightly ascertains the seven or the nine principles (tattvas).  It is the first step for those who ascend up  to the unshakable fortress (of Liberation). It is, indeed, the first Devotion (ardhana) for the learned scholars.

Right-belief is of two kinds. Intutive (Nisargaja), or tutive (Adhigamaja). Nosargaja is self-born, inspired, intutive. Adhigamaja is acquired by study, precept, etc., tutive. It is of 3 kinds having regard to internal causes, viz., (1)subsidential, aupashamika, Inconsequence of the subsidence of 4 error-feeding passions and wrong belief; (2) destructive-subsidential (Kshayopa-Shamika), in consequence of their destructive-subsidence, (3) destructive (Kshayika) as a consequence of their total destruction. See Tattvartha Sutra, Chap I and Kommatasara; Jivakanda Chap I .

Defects of ignorance, etc. – There are 25 such defects, which should be got rid of, for the purification of right belief. They are the following:-
1. Doubt or fear, 2. Sense-ignorance, 3. Disgust, 4. Superstition, 5. Libel, 6. Non-support to slipping souls, 7. Non-affection for the worthy, 8. Indifference to propagation of Truth.

Pride in 1. Knowledge, 2. Position, 3. Paternal lineage, 4. Maternal family, 5. Strength, 6. Wealth, 7. Asceticism, and 8. Beauty.

Blind faith in 1. Popular rites, 2. Unworshipable deties, and 3. Unworthy saints

Association with 1. Unworshipable deities, 2. Unworthy saints, 3. Misleading scriptures, or with the followers of the above three.  
(Total – 25)

For detailed description of seven, or nine principles, go throough Tattvartha Sutra Chap I.


மெய்யறியாமையினால், உண்மைக்குப் புறம்பான எண்ணங்களால் ஆன்மாவின் இயல்குணங்கள் திரிபுடன் காணப்படுகின்றன. நற்காட்சி தோன்றியதும் தன் இயல் குணமான பரமான்ம நிலைக்கு மாறும் முயற்சிக்கு உறுதுணையாகிறது. இது வெவ்வேறு நோக்கில் இரண்டு, மூன்று மற்றும் பத்துவகைகளாகும். அவை தொடர்ந்து வரும் பிறவித் துன்பத்தை அழிப்பதாவது.


உலகமூடம், தேவமூடம், பாசண்டி மூடம் எனும் மூன்று தவறான நம்பிக்கைகளைப் போக்குவது. இது ஏழு தத்துவங்கள், ஒன்பது பதார்த்தங்களை அறிந்து தெளிவு பெற வைப்பது. கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் பலரின் போற்றுதலுக்கு உரியதாக விளங்கும் நற்காட்சி, முக்திக் கோட்டைக்கு செல்லும் முதற்படியாய் விளங்குகிறது.

இது நிசர்கஜம், அதிகமஜம் என உற்பத்தி நோக்கில் இருவகைப்படும்.
தானே உள்ளுணர்வால் தோன்றுவது நிஸர்கஜம். அதாவது பிறரது தூண்டுதலாலோ, பிற நிமித்தங்களாலோ, உபதேசங்களாலோ அல்லாமல் தோன்றுவது நிஸர்கஜம்.

மாறாக பிற உபதேசம், ஆகமப்பயிற்சி முதலான புற நிமித்தத் தூண்டுதலால் உற்பத்தியாவது அதிகமஜம்.

மேலும் நற்காட்சி அகக் காரணங்களால் தணிவு (ஒளபசமிகம்), கேடு தணிவு (க்ஷயோப சமிகம்) கேடு (க்ஷாயிகம்) என மூவகைப்படும். தரிசன மோகனீய வினையின் உபசமத்தினால் (தணிவு) தோன்றுவது ஒளபசமிக சம்யக்தரிசனம். மேற்கூறிய மோகனீயம் கெடுவதால் க்ஷாயிக சம்யக்தரிசனமும், கேடு தணிவினால் தோன்றுவது க்ஷயோபசமிக சம்யக்தரிசனம். (அதாவது மயக்குவினையின் தணிவினால் தணிவுநற்காட்சியும், கேடுதணிவினால் கேடுதணிவு நற்காட்சியும், அழிவதால் கேடுநிலை நற்காட்சியும் தோன்றுகின்றன.)
(மனதில் போட்டு மூடி வைக்கவும், பின்னாளில் தத்துவங்களை தொடர்ந்து படிக்கும் போது புரியவரும்.)

ஒளபசமிகம் என்றால் கோபம், மானம், மாயை, லோபம் எனும் நான்கு கஷாயங்களும், மனதில் பொதிந்துள்ள நான்கு வேறுபாடு உணர்ச்சிகளும், தணிவு ஏற்படும் போது தீக்காட்சி குறைந்து நற்காட்சி உற்பத்தியாகும்.
அதாவது சேருடன் கலந்த நீர் தேற்றாங்கொட்டையால் தெளிந்து அழுக்குகள் கீழே எவ்வாறு படியுமோ அதுபோன்றது  ஒளபசமிக நற்காட்சி.

அதே போல் கஷாயங்கள் கேடு தணிவு நிலை ஏற்படும் போது தீக்காட்சி ஒழிந்து கேடுதணிவு நற்காட்சி தோன்றும்.

சூரியனைக் கண்ட பனிபோல விலகியும் சிறிது விலகாமலும் போல சிறிது விருப்பு வெறுப்புகளோடு கூடியது க்ஷயோபசமிக நற்காட்சி.

மேலும் அதே போல் கஷாயங்கள் கெட்டழிந்தாலும் தீக்காட்சி விலகி கேடு நற்காட்சி/க்ஷாயிக சக்யக்த்வம் உற்பத்தியாகும்.
ஸ்படிக மணிபோல எப்போதும் நிர்மலமாக அழுக்கின்றி இருப்பது க்ஷாயிக நற்காட்சி.

இதன் விளக்கங்கள் த.சூ. ல் அத்தியாயம் ஒன்றில் காணலாம்.
-- -- --

அறியாமையால் 25 குற்றங்கள் உருவாகின்றன. அவைகள் முழுவதையும் அழித்தல் வேண்டும். அப்போதுதான் தூய நற்காட்சி பெற முடியும்.

குற்றங்களாவன:

எட்டுவகை நற்காட்சி இல்லாமைக்கு காரணமானவை;
1. ஐயம் 2. அவா (வேட்கை) 3. உவர்ப்பு (அருவருப்பு),  4. மயக்கு 5. இகழுரை (அறப்பழி கூறல்) 6.  அழிந்தாரைத் தாங்காமை 7. வாத்ஸல்யமின்மை (அறத்துளார் மீது ஆர்வமின்மை) 8. அறம் விளக்குவதில் பாராமுகம்.

எண்வகை மதம் (செருக்கு)
ஜாதி, குலம், வலிமை, செல்வம், அழகு, பெருமை, தபம், ஞானம் இவற்றின் நிமித்தமாகத் தோன்றும் செருக்கு.

மூன்று மூடங்கள்:
உலக மூடம், தேவ மூடம், பாசண்டி மூடம் என்பன.

முக்தி நெறிக்கு இசைய செல்லாதவர்களைப் பணிந்திருத்தல்;
அதாவது அவிநயம் ஆறு:
பொய் துறவியர், அவரது பக்தர், பொய் நூல், அதைப் போற்றுபவர், பொய் தெய்வம், அதனை வணங்குபவர்.  இவ்வறுவரையும் ஆசைகாரணமாக பணிதல் அவினயம் ஆகும்.
இவை இருபத்தைந்தும் நற்காட்சிக்கு இடையூறான குற்றங்கள். இவை விலகாத நிலையில் நற்காட்சி தோன்றாது.

சுருக்கமாக நற்காட்சி தோன்ற எளிய வழிகள்:
1. தேவ சாஸ்திர குருவினிடம் மாறாத நம்பிக்கை
2. ஏழு தத்துவங்கள், ஒன்பது பதார்த்தங்கள் ( மெய்பொருட்கள்) இவற்றைத் தெளிந்து நம்புதல்,
3. ஸ்வபர (தனது-பிற) பொருட்களை நம்புதல்
4. ஆன்ம நம்பிக்கை
5. வினைகளின் ஏழு ப்ரக்ருதிகளின் தணிவு, அழிவு, கேடுதணிவு நிலை ஆகியவற்றால் தோன்றும் மாறுகையான நற்காட்சி.

கூடுதலான விளக்கங்களை அருங்கலச் செப்பு, த. சூ. முதலான நூல்களில் கண்டு மேலும் தெளியலாம்.



முக்தி எனும் மலைஉச்சியாலயம் செல்ல முதற்படி நற்காட்சிதான். அது தோன்றிய பின் தான் ஆன்ம சாதனைகள் பயன் தரும் வகையில் துவங்கும்.  







ஆஞாமார்கஸமுத்வமுபதேஸாத் சூத்ர பீஜ ஸம்க்ஷேபாத் | விஸ்தாரார்தாப்யாம் பவமவ பரமாவாதி காடம் ச || 11 ||
(Right-belief) arises from 1. Ajna, 2. Marga, 3. Updesha, 4. Sutra, 5. Bija, 6. Sankshepa, 7. Vistara, and 8. Artha; and is either 9. Avagadha and 10. Paramavagadha (these are the ten kinds referred to in Shloka above)
ஏற்கத்தக்கன, ஏற்கத்தகாதன (ஹேயம், உபாதேயம்) என இரண்டு தத்துவங்களில் விபரீத கருத்து இல்லாத நம்பிக்கை வடிவில் நற்காட்சி ஒரே விதமானது. 

ஆஞ்ஞா, மார்கம், உபதேசம், சூத்ரம், பீஜம், ஸம்க்ஷேபம், விஸ்தாரம், அர்தம் முதலான எட்டு காரணங்களினால் தோன்றும் நோக்கிலும் எட்டும்; ஞானச் சிறப்பின் நோக்கில் அவகாதம், பரமாவகாதம் என இருபிரிவுவாக மொத்தம் பத்து வகைகள். விபரங்கள் அடுத்த நாற்ப்பாக்களில் காணலாம்.








அஞ்ஞா சம்யக்த்வமுக்தம் யதுத விரூசிதம் விதராகாஞாயைவ த்யக்தக்ரந்தப்ரபஞ்சம் சிவமம்ருதபதம் ஸ்ரத்தன்மோஹசாந்தே: | 


மார்க்கஸிரத்தானமாஹு: புருஷவர புரோணோபதேசோப ஜாதா, யா ஸம்ஞானாகமாப்திப்ரஸ்ருதி பிருபதேஸாதிராதேசி திருஷ்டி || 12 ||
Ajna belief is said to be that which is based solely upon the precept of the passionless (saint). Marga belief is said to be the belief in the peaceful, path of eternal liberation, which is free from temporal ties and which arises from the subsidence of the deluding Karmas. Upadesha or Adesha belief is that which arises from ancient teachings, of great men, and from sayings, etc., received from the ocean of scriptures of right-knowledge.
ஆகமங்களைப் படிக்காமலே பற்றற்ற வீதராகி பகவானின் உரையைக் கேட்ட அளவில் தோன்றுவது ஆஞ்ஞாசம்யக்த்வம். 

 விரிவாக ஆகமங்களை கேட்காமலேயே அக, புறப்பற்றுக்கள் இல்லாத முக்திநெறியில் தோன்றுவது மார்க சம்யக்த்வம். 

 தீர்த்தங்கரர்கள் முதலான சலாகா புருஷர்களின் வரலாற்றின் உபதேசத்தினால்-ஆகமஞானத்தில் சிறந்து விளங்குபவரின் உபதேசத்தினால் தோன்றுவது உபதேச சம்யக்த்வம்.







ஆ கர்ண்யாசாரஸூத்ரம் முனிசரண விதே: ஸுசனம் ஸ்ரத்தான: சூக்தாஸென சூத்ரத்ருஷ்டிர்துரதிகமகதேரர்தஸார்தஸ்ய பீஜை: |


 கேசிசஜ்ஜாதோபலப்தேரஸமசமவசாத் பீஜத்ருஷ்டி: பதார்த்தான், ஸம்க்ஷேபேணைவ புதத்வா ரூசிமுபகதவான் ஸாது. || 13 ||
Sutra belief is well said to be possessed by one who believes in rules declared for the conduct of ascetics, on hearing books on discipline. Bija belief is that which arises from the knowledge of substances, difficult to understand, (but) known with the help of certain symbols, as a result of the subsidence of perverse belief. Sankshepa belief is the laudable belief possessed by one who has acquired faith (in principles) only explained summarily.
துறவு ஒழுக்க விதிகளை ஆசார சூத்திர நூல்களில் உள்ளவைகளைக் கற்று, கேட்டு நம்பிக்கைக் கொள்வதால் தோன்றுவது சூத்திர சம்யக்த்வம். 

 கணித ஞானத்திற்கு மூலகாரணமான சூத்திரங்களை அறிவதால் தோன்றுவது பீஜசம்யக்த்வம். புரிந்து கொள்ள கடினமானவற்றை இதன் வழி புரிந்து கொண்டு நம்பிக்கைத் தோன்றுவது பீஜ சம்யக்த்வம். 

ஸம்க்ஷேபம்: மெய்ப்பொருள்களை ஓரளவு தெளிவாக அறிந்ததால் தோன்றும் நம்பிக்கை சம்க்ஷேப சம்யக்த்வம்.








ய: ஸ்ருத்வா துவாதஸாங்கீம் க்ருதருசிரத தம் வித்தி விஸ்தாரத்ருஷ்டி, ஸம்ஜாதார்தாத் குதச்சித் ப்ரவசன வசனான்யன்தரேணார்தத்ருஷ்டி: | 


த்ருஷ்டி ஸாங்காங்கபாஹ்யப்ரவசனமவகா ஹோத்திதா யாவகாட: கைவல்யாலோகிதார்த்த ருசிரிஹ பரமாவாதிகாடேதி ரூடா || 14 ||

Vistara belief should be known to be possed by one who has acquired faith, after having heard the twelve Angas (Jain sacred lore) Artha belief is that which is produced by ascertaining the true, real meaning of the scared books, independently of words. Avagadha belief is that which is produced by a thorough study of the sacred literature of Angas and of that outside the Angas. Pramavagadha is popularly known to be the belief in substances as seen by Omniscients.
பன்னிரு அங்கங்களைக் கேட்டறிந்தபின் ஏற்படும் நம்பிக்கை விஸ்தார ஸம்யக்தரிஸனம். 
 புனித ஆகமத்தின் உண்மையான பொருளை வெறும் வார்த்தைகளால் இல்லாமல் நுட்பமாக அறிந்து தெளிந்தவர்களிடம் தோன்றுவது அர்த்த சம்யக்த்வம். 
 அங்கம் மற்றும் அங்கபாஹ்யம் ஆகிய ஆகமங்களை ஆழ்ந்து கற்று ஆய்ந்தவரிடம், சுருதகேவலியிடம் தோன்றுவது அவகாத சம்யக்த்வம்.
 கேவலஞானம் வழியே பொருட்களை அறிந்தவருடைய நம்பிக்கை விசேஷமான பரமாவகாத சம்யக்த்வம் ஆகும். 

 ஆக மேற்கண்ட பத்து வகைகளை முழுவதுமாக காண்போம். 

 வீதராகி முனிவர்கள் கூறக் கேட்டறிவதால் தோன்றுவது - ஆஞ்ஞா நற்காட்சி; 

முக்தி நெறியில் கொண்ட பின் வினைத்தணிவினால் வருவது – மார்க நற்காட்சி 

ஆகம , சலாகா புருஷர்களின் புராணங்களைக் கேட்பதால் தோன்றுவது – உபதேச நற்காட்சி 

முனிவர்களின் நல்லொழுக்கங்களை ஆசார சூத்திராங்கத்தினை கேட்டறிவதால் – சூத்ர நற்காட்சி 

கரணானுயோக மூல கணிதம் போன்ற புரிந்த கொள்ள முடியாத சூத்திரங்களை அறிவதால் – பீஜ நற்காட்சி 

மெய்ப்பொருட்களின் இயல்பை கேட்டு அறிவதால் _ சம்க்ஷேப நற்காட்சி 

பன்னிரு அங்கங்களை கேட்டு அறிவதால் – விஸ்தார் நற்காட்சி 

மெய்பொருள்களை உண்மைநோக்கில் தெளிவோடு அறிவதால் – அர்த்த நற்காட்சி 

சுருதகேவலியிடம் தோன்றுவது – அவகாத நற்காட்சி

கேவலஞானியிடம் தோன்றுவது – பரமாவகாத நற்காட்சி.







சமபோதவ்ருத்ததபஸாம் பாஷாணஸ்யேவ கெளரவம் பும்ஸ: | 

பூஜ்யம் மஹாமணேரிவ ததேவ சம்யக்த்வசம்யுக்தம் || 15 ||
The tranquillity, knowledge, vows, and austerities of a person is of value of an ordinary stone. But it becomes adorable, like a great jewel of accompanied by the right belief. The Knowledge and conduct of the above forms with right-belief. Then only it become right knowledge, right conduct, which with right-belief are the three Jewels of Jainism.
கூழாங்கல்லும் இரத்தினமும் கல் இனத்தை சார்ந்தவை யாயினும் கூழாங்கல்லிற்கு ஒளிவீசும் தன்மை இன்மையால் அதற்கு மதிப்பில்லை. 

ஆனால் இரத்தினக்கல் ஜொலிக்கும் என்பதால் பெருமைக்குரியதாகிறது. 

சம்யக்த்வம் இல்லா மந்தகஷாய வடிவ உபசம பரிணாமம், ஆகமப்பயிற்சியினால் பெறும் அறிவு, பாபங்களைச் செய்யாது காக்கும் ஒழுக்கங்கள் மற்றும் உணவருந்தாமை விரதம் முதலிய தவஒழுக்கங்கள் சாதாரண கூழாங்கல்லை யொத்ததாய் இருக்கும். 

அதே தவங்கள் நற்காட்சியுடன் கூடிய செயல்வடிவமாக இருந்தால் இரத்தினக்கல்லைப் போன்றே சிறப்புடன் கூடிய பெரும்பயனும் உடையாதாகிறது.







மித்யாத்வா தங்கவதோ ஹிதாஹிதப்ராப்த்ய நாப்தி முக்தஸ்ய | வாலஸ்யேவ தவேயம் சுமாரைவ க்ரியா க்ரியதே || 16 ||
Only this gentle remedy is prescribed, as for a child, for thee, who art a sufferer from the disease of wrong belief, and does not know what good is to be pursued, and what evil is to be avoided.
நல்லது கெட்டது தெரியாத அறியாத குழந்தைக்கு நோயுற்ற காலத்தில் மிருதுவான சிகிச்சைகளையே செய்ய வேண்டும். அதே போன்ற மனநிலையிலுள்ளவருக்கு எளிய அறப்பயிற்சியினையே அளித்தல் வேண்டும். அதே போல் வலிமையுள்ளவராக, நன்மையினை அறிந்து தீயதை நீக்குபவராக இருப்பின் அவர்களால் கடினமான அகப்பயிற்சியினை மேற்கொள்ள முடியும். அதே மேற்கூறிய மூவகைத்தன்மையிலும் இல்லாதவர்களால் கடினப் பயிற்சிகளை மேற்கொள்ள இயலாது. அதாவது நம்பிக்கையும், முக்திநெறியில் ஆர்வமும், வினைக்கட்டுகளை அறுத்து எரியும் விருப்பமுடையவர்களால் துறவறம் போன்ற உயர்நிலை பயிற்சிகளை மேற்கொள்ள இயலும். இத்தன்மைகள் இல்லாத உன் போன்றவர்களுக்கு சம்யக்த்வம் முதலான எளிய பயிற்சிகளை ஆசாரியர் கூறுகிறேன் என்கிறார்.





  

மித்யாத்வா தங்கவதோ ஹிதாஹிதப்ராப்த்ய நாப்தி முக்தஸ்ய |
வாலஸ்யேவ தவேயம் சுகுமாரைவ க்ரியா க்ரியதே || 16 ||
Only this gentle remedy is prescribed, as for a child, for thee, who art a sufferer from the disease of wrong belief, and does not know what good is to be pursued, and what evil is to be avoided.
ஏ பவ்யனே! நல்லது கெட்டது அறியா நோயுற்ற பாலகனைப்போன்றவர்கள் நோயுற்றால் எளிய மென்மையான சிகிச்சைகளையே அளிக்க வேண்டும். அதேசமயம் வலிமையுள்ளவராயும், நன்மை தீமையை அறிந்து நீக்குபவராயும் உள்ள வயது வந்தவர்களால் சற்றுக் கடினமான அறப்பயிற்சியினை மேற்கொள்ள முடியும். இம்மூன்று தன்மைகளும் இல்லாதவர்களால் கடின பயிற்சிகளை மேற்கொள்ள இயலாது.

முக்திநெறியில் ஆர்வமும், வினைக்கட்டுகளை அறுத்தெரியும் அவா உடையவர்களால் துறவு முறை போன்ற கடின பயிற்சிகளை கைக்கொள்ள முடியும். அவ்வாறில்லாதவர்களுக்கு சம்யக்த்வம் முதலான எளிய பயிற்சிகளை ஆசார்யர் கூறுகிறேன் என்கிறார்.







 

விஷயவிஷமாசனோத்தித மோஹஜ்வரனிததீவ்ர த்ரஷ்ணஸ்ய |
நி:சக்திகஸ்ய பவத: பிராய பேயாத்யுபக்ரம: ஸ்ரேயான் || 17 ||
Having taken the poison of sense-enjoyments, thou hast got the fever of delusion; from this has arisen thy keen thirst (for sense-gratification) and thou hast become feeble. For thee it is the best to be treated mostly with medicines of a drinkable nature.
புலன்களை திருப்தி செய்வதிலேயே மிகுந்த வேட்மை கொண்டு, இன்ப நுகர்வு எனும் விஷத்தை அருந்தி மோகமெனும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளாய். ஆற்றலை யிழந்த உனக்கு ஏற்ற மருந்தை முறையாக அளிப்பது அவசியமாகும்.

ஐம்பொறிகளின் நுகர்வில் வேட்கை கொண்டு பிறபொருள்களின் மீது விருப்பத்தை கூட்டுவதால், ஆன்ம சக்தி குறைகிறது. இந்நோய் நீங்க முறையான அணுவிரதப் பயிற்சியே பலனளிக்கக் கூடியது. உள்ளுணர்வில் எதுவரை விருப்பம் விலகவில்லையோ அதுவரை முறையாக சிறுசிறு பயிற்சிகளை மேற்கொண்டு அறத்தை வளர்க்கலாம். துறவறமேற்று மஹாவிரதங்களை கைக்கொண்டு வினையறுக்க வில்லை யெனின் பிறவியே வளரும்.








சுகிதஸ்ய து: கிதஸ்ய ச சம்சாரே தர்மஏவ தவ கார்ய: | 

சுகிதஸ்ய ததபிவ்ருத்த்யை துக்கபுஜஸ்ததுபகாதாய || 18 ||
Whether happy or miserable in this world, thou must exercise piety; if happy to increase thy happiness; and if miserable, to remove thy misery.
ஏ உயிரே! நீ பிறவியில் சுகத்தை அனுபவிப்பதாயினும், துன்பத்தை அனுபவிப்பதாயினும் அறத்தை கடைபிடிப்பதற்கு விழைய வேண்டும். ஒருவர் தனது சுகத்தை கூட்டவும், துன்பத்தை போக்கவும் அறத்தையே பரிபாலிக்க வேண்டும்.

செல்வமிக்கவனும், கடனாளியும் பணத்தை சம்பாதிக்கவே விரும்புபவர். அப்போது செல்வந்தனின் செல்வம் மேலும் பெருகுகிறது. கடனாளியின் கடன் குறைகிறது. அதே போல் முன்செய்த புண்ணிய கருமத்தின் பலனால் தற்போது சுகமாக இருந்தாலும் , மேலும் சுகம் பெருக தர்மத்தை செய்யத்தக்கவராகிறார். பாவ கருமத்தின் பலனால் துன்படுபவரும், அப்பாவம் கழிய அவர் தர்மத்தைத்தான் செய்ய வேண்டியவராகிறார்.

எனவே அனைவருக்குமே அறமே துணையாகிறது.








தர்மாராமதரூணாம் பலானி ஸர்வேந்திரியார்த்தசெளக்யானி | 

ஸம்ரக்ஷய தாம்ஸ்ததஸ்தாந்யுச்சினு யைஸ்தைரூபாயைஸ்த்வம் || 19 ||
The pleasures derived from the senses-objects are fruits of the trees of the garden of piety. Therefore preserve thou the trees, and pluck the fruits by all means.
கனிதரும் மரத்தை தோட்டத்தில் எவ்வாறு வளர்ப்பது என்பது போன்று, புலன்வழி நுகர்தலில் சுகத்தை பெற அறமெனும் பழமரத்தை வளர்ப்பதால் மட்டுமே முடியும். 

அதனால் சுகம் தரும் அறத்தின் வகைகளைப் போற்றி பாதுகாத்தால் மட்டுமே சுகத்தை எப்போதும் பெற வழிவகை கிடைக்கும்.








தர்ம: சுகஸ்ய ஹேதுர்ஹேதுர்ண விராதக: ஸ்வகார்யஸ்ய | 

தஸ்மாத் சுகபங்கபியா மா பூர்தர்மஸ்ய விமுகஸ்த்வம் || 20 ||
Piety is the cause of happiness. The cause cannot oppose its own effect. Therefore for fear of being deprived of (present) sense-pleasures, thou should not be indifferent to piety (Dharma).
எந்த ஒரு காரணம் காரியத்திற்கு சாதகமாக இருக்கிறதோ அது பாதகமாக இருக்க வியலாது. அறம் சுகத்திற்கு காரணமானது. அந்த அறம் ஒருபோதும் சுகத்திற்கு இடையூறாக இருக்கப்போவதில்லை. எனவே புலன் இன்பங்கள் கிடைக்காது போய்விடும் என்று அஞ்சி அறத்தினைப் பாராமுகமாய் இராதே. அறத்தை கடைபிடிப்பதனால் சுகமே பெருகும். அறமே துணை.







தர்மாதவாப்தவிபவோ தர்ம் ப்ரதிபால்ய போகமனுபவது | 

பீஜாதவாப்த தான்ய: கிருஷி வலஸ்தஸ்ய பிஜமிவ || 21 ||
The person who in consequence of piety has acquired prosperity may have enjoyments while preserving piety, like the peasant who gets corn from the seed, but (preserves) the seed of that corn.
விவசாயி விதையிலிருந்து சோளம் போன்ற உணவு தான்யங்களை பயிரிட்டு பயனடைகிறான். அதே சமயம் பயனடைய விரும்பி அத்தான்யங்களில் சிலவற்றை விதைக்காக பாதுகாக்கிறான். விதையின்றி எவ்வளவு உழைத்தாலும் தானியங்கள் விளைவதில்லை.

அதுபோன்று எவன் ஒருவன் அறத்தை செய்வதால் சுகம் தரும் செல்வம் போன்றவற்றை அடைகின்றானோ, அவன் மேலும் சுக போகங்களை அனுபவிக்க அறத்தைப் பேணி பாதுகாக்க வேண்டும். அறமின்றி சுகங்கள் எந்நாளும் கிடைப்பதில்லை.

இன்று சுகத்தினை அனுபவிப்பது முன்பு செய்த அறச்செயலினால் விளைந்த புண்ணியத்தால் மட்டுமே. அறத்தை மறந்து மிகக்கடினமாய் உழைத்தாலும் சுகம் பெறமுடியாது. அதனால் இப்போது அறத்தை கடைபிடித்து ஒழுகினால் தான் புண்ணிய கருமாய் தொடர்ந்து பின்பு ஓர் தருணத்தில்(பிறவியில்) சுகத்தை பெறஇயலும். ஆகவே அறத்தை போற்ற ஆச்சாரியார் வலியுறுத்துகிறார்.

-----------------------------------------------

இந்த நூற்ப்பாக்களில் வரும் உதாரணங்கள் எக்காலத்திற்கு பொருந்துவனவாக ஒரு பாமரனும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தொழிலை மனித இனம் உள்ளவரை புறக்கணிக்கவியலாது. செய்முறை மாறலாம் விதைகள், விளைபொருள் மாறுவதற்கில்லை. ஆச்சாரியரின் அறிவை என்னவென்று புகழ்வது. எளிய, எவருக்கும் புரியும் படியான எடுத்துக் காட்டுக்களுடன் உச்ச அறிவின் வெளிப்பாடாக தருவித்துள்ளார். வியாபாரத்தின் மூலதனத்தை என்றும் அழியாமல் பாதுகாத்தால் தான் தொடர்ச்சியான லாபத்தை காணலாம் என்று அவர் கூறவில்லை. அக்காலத்தில் பண்டமாற்று வியாபாரம் இருந்திருக்கலாம். அதைக் கூடஅவர் விளித்துக் கூறவில்லை. அதுபோல் லெளகீக வாழ்க்கையில் அவ்வப்போது வந்து செல்லும் கண்டுபிடிப்புகளைக் கூட உதாரணமாக கூறாமல் இருந்துள்ளார். அதனால் தான் ஆத்மானுசாசனம் போன்ற வழிகாட்டு நூல்கள் இன்றும் நம்மிடையே வழிகாட்டி வருகின்றன. என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.








ஸங்கல்ப்யம் கல்பவிருக்ஷஸ்ய சிந்த்யம் சிந்தாமணேரபி | 

ஆஸங்கல்ப்யம் ஸம்சிந்த்யம் பலம் தர்மாதவாப்யதே || 22 ||

The fruit of the wishing-tree (kalpa-vriksha) is got by wishing, that of Chintamani (miraculous gem) by thinking; (but) the fruit of piety is obtained without wishing and without thinking.
முற்கால உலகில் ஒருவன் விருப்பத்தை தெரிவித்தால் அதனை தருவிப்பது கற்பகவிருக்ஷம், அதேபோல் சிந்தித்தாலே விரும்பியதை தருவது சிந்தாமணியாகும். வாக்கினாலும், மனதாலும் யாசித்தால் சிறிதளவு பொருட்களை தருவன இவ்விரண்டும்.

அதேசமயம் அறம் நாம் விரும்பிக் கேட்டோ, சிந்தித்தோ அளிப்பதில்லை. நமக்கு எது நிரந்தரத் தேவையோ அதை விரும்பாத நிலையிலும் தானாகவே அற்புதமான துன்பங்கலவாத நிலையான முக்திசுகத்தை அறமே தருகிறது. நம் கண்களுக்கு புலப்படாத, சிந்தையில் தோன்றாத அனந்த சுகத்தை அளிப்பது நாம் ஈட்டும் அறமாகும். எனவே கற்பகமரம், சிந்தாமணி இரண்டைக்காட்டிலும் மிக உயர்ந்தது அறம் என்பதை அறிந்து நித்தம் கைக்கொள்ள வேண்டும்







பரிணாமமேவ காரணமாஹு: சுலு: புண்ய பாபயோ ப்ராஞா: | 
தஸ்மாத் பாபாபசய: புண்யோபசயச்ச சுவிதேய: || 23 ||

The wise men say that thought-activity only is the cause of merit and demerit. Therefore one should carefully destroy demerits and accumulate merits.
ஆன்மாவின் வேறுபாட்டு உணர்வே நல்வினை தீவினைக்குக் காரணம் என்று அறிவிற்சிறந்தோர் கூறுகின்றனர். எனவே ஒருவர் விழிப்புடன் செயலாற்றி தீவினைகளை அகற்றி நல்வினைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சக்தி குறைவோ, செல்வமின்மையோ, பிறரது உதவி இல்லாமல் அறத்தைக் கொள்வ்து இயலாது என்று ஒவ்வொருவர் நினைக்கின்றனர். இது அவர்களது கலக்கமே, வீண் பிரமையே! பிறரது குற்றங்களைப் பார்த்து அறஉபதேசங்களைப் பொருளற்ற தாக்காதே. நல்வினை தீவினைக்கு காரணமே நமது உணர்வுகளே ஆகும். ஏனெனில் மற்றவர்களால் நமக்கு நல்வினை திவினை வராது. எனவே தீய பாவனைகளை விலக்கி, தோன்றாமல் செய்து, வராது தடுத்து நல்வினைக்கான உணர்வுடன் செயலாற்றி வினைகளைச் சேர்த்துக் கொள்வோம்.







க்ருத்வா தர்மவிகாதம் விஷயஸுகான்யனுபவந்தி யே மோஹாத் | 

ஆச்சித்ய தரூன்முலாத் பலானி க்ருஹந்தி தே பாபா: || 24 ||

Those who under delusion, destroying Dharma, enjoy sense-pleasures are sinful, and take the fruit (after) cutting down the tree at its root.
ஒருவர் அறத்தை அழித்து, மாயை எனும் மயக்கத்தின் காரணமாக பொறிவழி இன்பத்தினுள் ஆழ்ந்திருப்பது; பழங்களை உண்ண விரும்பி மரத்தை வேறோடு சாய்த்து பறித்துண்பதற்கு ஒப்பான பாவச் செயலாகும். முன்பு செய்த அறத்தின் பயனால் சுகம் கிடைக்கிறது. அதை அனுபவிக்கும் போது மாயை எனும் மயத்தினால் அறிவிழந்து அனுபவித்தல் பாவத்தையே சேர்க்கும். அதாவது பழத்தினால் கிடைக்கும் சுகத்திற்காக மரத்தையே வேரோடு சாய்த்து உண்ண விரும்புவது அறியாமை மட்டுமல்ல அறத்தை அழிக்கும் செயலாகும். பலருக்கும் அப்பலன் கிட்டாமல் செய்யும் பாவச் செயலாகும். இதனை உணர்ந்து செயல் படுதல் வேண்டும். மரத்தை வேரோடு சாய்க்காமல் ஏறிப்பறித்தபின் உண்ணும் போது அதே பழங்கள் தான் அவருக்கு கிடைக்கப்போகிறது. அதே மரம் மேலும் கனிகளை அவனுக்கும், பலருக்கும் வழங்கிக் கொண்டிருக்கும். இதுவே விவேகமான செயலாகும். நல்வினை உதயத்தின் போது அறத்தை அழித்து ஒரு செயலைச் செய்வது மீண்டும் நல்வினை உற்பத்திக்கு பதிலாக தீவினையே வந்து சேரும். அதாவது பிற்காலத்திலும் தொடர்ந்து சுகம் கிடைக்காமல் போகும் என்பதை தெளிவு பெறுதல் வேண்டும். ஒருவன் முன்செய்த அறத்தின் பயனால் ஈட்டிய சுகத்தை அனுபவிக்க துவங்கும் போது சில பாவச் செயல்களைச் செய்ய தீய எண்ணம் கொள்வது. அறத்தை கெடுத்து சுகத்தை அனுபவிப்பது: அதாவது அந்த அறப்பயனால் இப்பிறவியில் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டு அறம் வளரும் செயலை செய்யாமல் அறத்தை அழிப்பது போன்று மேலும் மேலும் பெருஞ்செல்வம் சேர்ப்பது. குரோத, மான, மாயா, லோபமாகிய கஷாய உணர்வுகளைத் தீவிரப்படுத்துவதான செயல்களை மேற்கொண்டு அப்புண்ணிய பயனை அனுபவிப்பது. பிறபொருள் சேர்க்கையால் கிடைக்கும் புலன் இன்ப நுகர்வில் ஈடுபடுவது. அவ்வாறில்லாமல் ஒருவன் முன்செய்த அறத்தின் பயனால் ஈட்டிய சுகத்தை அனுபவிக்க துவங்கும் போது சில பாவச் செயல்களைச் செய்யாது, அறவழிச் செயல்களில் ஈடுபட நல்ல எண்ணம் கொள்வது. அறத்தை வளர்த்து சுகத்தை துய்ப்பது: முன் செய்த அறத்தை புண்ணிய பலனாக அனுபவிக்கும் போது அறவழியில் ஈடுபட்டு செயல்புரிவது. நியாயமற்ற, நேர்மையற்ற வழியில் பாவச் செயல்களை செய்யாது விழிப்புடன் துய்ப்பது. அதாவது தற்போது கிடைத்த செல்வங்களில் திருப்தியடைந்து மகிழ்ச்சி கொள்ளுதல், அதிக கஷாய உணர்வு தோன்றாது நம் நடவடிக்கையை விழிப்புடன் செயல்படச் செய்வது. அவ்வாறான அறத்தை வளர்க்கும் செயலிலேயே எப்போதும் ஈடுபடுவது என இருவகை செயலாற்ற வழிகள் உள்ளது. இதில் இரண்டாதானதையே தேர்வு செய்ய அறிவுறுத்துகிறார். எங்கு கஷாயம் இல்லையோ அங்கு தனம், தான்யம் முதலான பிற பொருள்கள் மிதான பற்றின்றி தியாகம் மேலோங்குகிறது. ஒருவேளை துன்பத்திற்கு காரணமான பொருட்கள் கிடைக்கப் பெற்றாலும் அவர்களிடம் கவலை தோன்றுவதில்லை. இது அடுத்தடுத்து தொடர்ச்சியாக (பரமார்த்திக) தர்மத்தை நிலைப்படுத்தி செயலாற்றுவது பரமானந்த சுகத்தினை அனுபவிப்பதாகும். விதியினால் விளைந்த நன்மையை, அது வளரச்செய்யும் மதியினால் செயல்பட வேண்டும் என அறிவுறுத்துகிறார்.








கர்த்ருத்வ ஹேது கர்த்ருத்வானுமதை: ஸ்மரணசரணவசனேஷு | 

ய: ஸர்வதாபிகம்ய: ஸ கதம் தர்மோ ந சங்க்ராஹ்யா: || 25 ||

Why should such a religion be not pursued, which can be followed in all circumstances, by doing, by having it done, and by approving the doing of it by others, by means of mind, body, or speech?
எல்லா சுழ்நிலையிலும் மனம், மொழி, மெய் வழியே ஒரு காரியத்தை செய்தல், செய்வித்தல், பிறர் செய்வதில் தான் உடன்படுதல் என்ற எல்லா நிலையிலும் கடைபிடிக்க இயலும் என்றிருக்கும் போது அறத்தை ஏன் அவற்றில் கடைபிடிக்க கூடாது? புலனின்பத்தை நுகர்வதால் அறம் கடிபிடிக்கப் படிவதில்லை என்ற தவறான உபதேசத்தில் உண்மை சொல்லப்படாது மறைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களையுமே தியாகம் செய்தால் தான் அறத்தினைக் கடைபிடிக்க முடியும் என்பது துறவற நெறி. மற்றவர்கள் எதுவரை துறக்க இயலவில்லையோ அதுவரை அநேக வழிகளில் சிறுசிறு அளவிலான அறத்தையாவது கைக்கொள்ள வேண்டும். அடுத்தடுத்து தொடர்ச்சியாக எனும் பரமார்த்திக நிலையில் அறம் என்பது விருப்பு, வெறுப்பு அற்றநிலை. புலன்களால் பொருள்வழி நுகர்வதைச் சிறிது சிறிதாக விடுதல் அறிவுறுத்தப்படுகிறது. எவ்வாறு பலவகை வியாபாரம், தொழில் வகையின் வழியே செல்வம் சேர்க்கப்படுகிறதோ, அதே போன்று பலவகைப் பயிற்சியின் மூலம் நல்வினை தரும் அறத்தினை செய்து நல்வினையைச் சேர்க்கவேண்டும். அச்செயல்களிலேயே ஆர்வம் கொள்ள வேண்டும். அறக்காரியங்களை; மனதாலும் செய்தல், செய்வித்தல், பிறர் செய்யும் போது உடன்படுதல்; மொழியாலும் செய்தல், செய்வித்தல், உடன்படுதல் மற்றும் உடலாலும் செய்தல், செய்வித்தல், பிறர் செய்யும் போது உடன்படுதல் ஆக இந்த ஒன்பது வழிகளில் கடைபிடிக்கலாம். மேற்சொன்ன ஒன்பதிலும் பல உறுப்புகள் தோன்றுவதுண்டு. அதில் எந்தச் செயலில் அறம் நிகழ வாய்ப்புள்ளதோ அவ்வழியைக் கடைபிடிக்க வேண்டும். ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாஞ் செயல்’ எனும் குறளின் அடிப்படையில்.. அறமாகிய நல்வினையை தத்தமக்கு இயன்றவாறு அது நடைபெறக்கூடிய வழியெல்லாம் இடைவிடாது (இந்த ஒன்பது வகையிலான) பெரிது சிறிது என பாராது எப்போதும் செய்தல் வேண்டும். அதில் கடினக் கருதாது அறவினைகளில் சோம்பலின்றி செயல்படுதல் வேண்டும். ஒரு சோம்பேறி எந்த வேலையும் செய்யாது தரித்திரனாகித் துயரத்தில் தவிப்பது போன்று அறவழியில் செயலாற்றாமல் புண்ணியத்தை ஈட்டாதவன் நரகம் முதலிய வற்றில் வீழ்ந்து துன்பப்படுவது உறுதி.





 

தர்மோ வஸேன்மனஸி யாவதனம் ஸ தாவத், ஹந்தா ந ஹந்துரபி பச்ய சுதேஅத தஸ்மின் | 

திருஷ்டா பரஸ்பர ஹதிர்ஜநகாத்மஜானாம், ரக்ஷா ததோஅஸ்ய ஜகத கலு தர்ம ஏவ || 26 ||

So long as piety abides well in the heart, the man does not slay even his slayer. When that religion goes away, the father and the son are found killing each other. Therefore the protection of this world depends verily upon Dharma only.
அறவுணர்வு எதுவரை மனதில் தங்கியுள்ளதோ அதுவரை அந்த ஜீவன் தன்னைக் கொல்ல வந்தவனையும் கொல்லுவதில்லை. அவ்வாறு மனதில் அறவுணர்வு அற்ற தருணங்களில் தந்தை; மகன் இருவரும் கூட ஒருவருக்கொருவர் வெட்டி மடிவதைப் பார்த்திருக்கிறோம். எனவே இவ்வுலகை இரக்ஷிப்பது அறம் ஒன்றே என்பது தெளிவு. 

 அக்காலத்தில் தந்தை மகன் இருவரும் கூட ஒருவரையொருவர் கொன்று மடிவதை அக்கால போர்களிலும் பார்த்திருக்கிறோம். இன்றும் இது போன்ற கொடுமைகளை கண்டு கொண்டுதான் இருக்கிறோம். 

 உலகில் அறவுணர்வு மனதில் இல்லாதவர்கள் தாம் மற்றவரைக் கொல்லத் துணிகின்றனர். மாறாக அறவுணர்வு நிலைத்திருக்கும் போது யாரும் எந்த ஜீவனையும் கொல்ல துணிவதில்லை. அவ்வேளையில் மன்னிக்கும் உணர்வே மேலோங்கி நிற்கும். வல்லமை பொருந்தியவன் எளியவனைக் கொன்றால் அந்த வல்லவனுக்கு வல்லவன் அவனைக் கொல்வான். அந்நிலை நீடித்தால் வன்முறைக் கொடுமையால் உலகம் ஒரு நாள் அழிந்தே போகும். 

 ஆனால் அவ்வாறு இல்லாமல் அறம் மேலோங்கி ஒரு உயிர் இன்னொரு உயிரைக் காப்பாற்றும் உணர்வை இன்றும் காணலாம். அதனால் உலகில் அறம் உணர்வில் விளைந்த கருணை, இரக்கத்தை சாதாரணமாக காணலாம். விலங்குகளும் கூட பசி தோன்றாத் தருணங்களில் பிற உயிர்களைக் கொல்வதில்லை. 

 எனவே அறமே உலக உயிர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. 

 எந்த அறம் உலகை காப்பாற்றுகிறதோ, அது தன்னை காப்பவனை கண்டிப்பாய் காப்பாற்றும். எனவே அறமே தன்னைக் காப்பாற்றும் என்பதை உணர்ந்து அறத்தை போற்றுதல் வேண்டும்.







நா சுகானுபவாத் பாபம் பாபம் தத்தேதுகாதகாரம்பாத் | 

நாஜீர்ணம் மிஷ்டான்னான்னனு தன்மாத்ராத்யதிகிரமணாத் || 27 ||

There is no demerit in enjoying pleasures: but there is demerit in doing what tends to destroy their source. Indigestion is not caused by sweet food, (but) by eating it beyond its limit.
உணவில் இனிப்புச் சுவை கூட்டி உண்பதால் அஜீரணம் ஏற்படுவதில்லை. ஆனால் அச்சுவையை உடல் ஏற்கும் அளவிற்கு அதிகமாக உண்பதினாலேயே செரிமாணக் கோளாறு உண்டாகிறது. அதேபோல் புலன் இன்பங்களை துய்ப்பதனால் தீவினை அண்டுவதில்லை. அளவிற்கு அதிகமாக இன்பம் துய்க்க எண்ணி அறத்தை அழித்தோ, அதற்கு மாறான செயல்களில் ஈடுபடும் போதுதான் தீவினைகள் நம்மை ஆட்கொள்கின்றன.

தீர்த்தங்கரர்கள் மற்றும் போகபூமி மக்கள் இவர்களிடம் இன்பம் துய்க்கும் பொருட்கள்- செல்வங்கள் ஏராளமாய் இருந்துள்ளன. அவர்கள் அவற்றை அனுபவிக்கவும் செய்துள்ளனர் சரியான அளவில். அதனால் அவர்களுக்கு நரகம் முதலான துன்பங்களுக்கான தீவினை பந்தம் ஏற்பட்டதில்லை.

ஆற்று நீர் வற்றிய பின் ஊற்று நீரிலும் எப்போதும் வாழும் கெளிறு(கெளுத்தி) மீன் எப்போதும் சிறிய மீன்களை கணக்கின்றி வாயை பிளந்தபடி விழுங்கிக் கொண்டே இருக்கும். அது போல மிகுந்த விருப்பத்துடன் உள்ளவர்களுக்கே தீவினைக்கட்டு உண்டாகின்றது. மேலும் செல்வங்கள் இல்லாத நிலையிலும் அறத்திற்கு கேடு தரும் செயல்களால் நரகம் முதலானவைகளுக்கான தீவினைக் கட்டு ஏற்படுகிறது.

ஆகையினால் உலகில் பொருட்களின் தொடர்பை விட இயலாது. புலன் வழி நுகர்வுகளை விட இயலாது என்ற நிலையுள்ளதால் எனக்கு அறம் தோன்றாது என்று தவறாக எண்ணி அறத்தின் மீது வெறுப்பு கொள்ளாமல் கவனமாக செயலாற்ற வேண்டும்.

எவர் முக்திப்பதவியை உடன் அடைய விரும்புகிறார்களோ அவர்கள் புறப்பொருட்களின் தொடர்புகளை முற்றுமாய் துறந்து முனிதர்மத்தை ஏற்கின்றனர்.

அது சுவர்க்க பதவியை அளிப்பதோடு, பின் ஒரு பிறவில் அதுவே முக்திக்கும் வழி வகுக்கும்.








அப்யே தந்ம்ருகயாதிகம் யதி தவ ப்ரத்யக்ஷது: காஸ்பதம், பாபைராசரிதம் புராதிபயதம் ஸெளக்யாய சங்கல்பத: | 


ஸங்கல்பம் தமனுஜ்ஞிதேந்திரிய சுகைராஸேவிதே தீதனை தர்மர்யே கர்மணி கிம் கரொதி ந பவான் லோகத்வயஸ்ரேயஸி || 28 ||

When thou takest a pleasure in all this hunting, etc., which produce much fear in the very beginning, which evidently cause pain, and which are pursued by sinners, why dost thou not take the same view of piety, which is for the good of both the (present and future) worlds, which is pursued by those who are rich in wisdom, and have not abandoned sense-enjoyments.
சூது, வேட்டை, திருடு, கள், புலால், பிறர் மனைவிருப்பம், வேசியர் தொடர்பு என்ற ஏழு வியசனங்களில் ஒன்றான வேட்டையாடுதலைச் செய்ய முற்படுபவர்கள்; துவக்கத்தில் பாவச் செயல் அது துன்பமளிக்கும் என்பதை உணர்ந்து அச்சப்பட்டாலும் தங்களுக்கு அந்த சமயத்தில் சுகத்தை அளிக்கும் என்ற காரணத்திற்காக தொடர்கின்றனர். அறச்செயல்கள் செய்வதால் அது இம்மையிலும், மறுமையிலும் சுகத்தைத் தரக்கூடியது என அறிஞர் பெருமக்கள் கைக்கொள்வதைப் போன்றே அதே உறுதிப்பாட்டுடன் அறவழி இன்பத்தை நீ ஏன் விரும்புவதில்லை? (விரும்புதல் வேண்டும் என்கிறார்)

 வேட்டையாடல் முதலான, ஏழு வியசனங்கள், இம்சை செயல்கள் சுகத்திற்கு காரணமானவைகளாக சிலர் குதர்க்கம் பேசுகின்றனர். ஆனால் அவை அறத்திற்கெதிரானது, திவினையின் தோற்றுவாய் என்றே கருதப்படுகிறது. அச்சமயத்தில் சொற்ப இன்பத்தை அளித்தாலும் , அந்த ஜீவ இம்சை காரணமாக நிச்சயம் பிற்காலத்தில் துயரத்தையே அளிக்கும். அது அறத்திற்கு எதிரான செயல், தீவினைக்குக் காரணமானது. 

 அறச் செயல்கள் யோகிகள், முனிவர்களால் மட்டுமே செய்யப்படும் செயல் என்று கருதுதல் ஆகாது. எப்படி வேட்டைக்குச் செல்பவன் அவ்வேளை சுகத்தை அளிக்கும் என்று கூறுவதை ஏற்று தாமும் வேட்டைக்குச் செல்ல துணிவது போன்று, யோகிகள் சுகத்திற்காக அறச்செயல்களில் ஈடுபடுவது போன்றே அறத்தில் செயல்பட துணிதல் வேண்டும். 

 போகிகளோ தாங்கள் முனிவர்கள் அல்ல. எப்படியும் பாவங்களைச் பிறர் நலன் கருதிகூட செய்யப்போகிறோம் அதனால் தன் நிகழ்கால சுகானுபவங்களுக்காக வேட்டை போன்ற வியசனங்களில் ஈடுபடாது அறச் செயல்களை செய்தல் வேண்டும். அதாவது. முனிவர்களல்லாத மற்றவர்களும் அறச்செயலில் ஈடுபடலாம். அவ்வாறு செய்தால் புண்ணிய பலனே கிட்டும் என்று அறிவுறுத்துகிறார்.








பீதமூர்த்திர்கதராணா நிர்தோஷா தேஹவித்தகா: | 

தந்தலக்னத்ருணா க்னந்தி ம்ருகீரன்யேஷு கா கதா || 29 ||

Having given up back-biting, begging, deceit, theft, falsehood and other faults, pursue what is best in both the worlds for religion, wealth, renown and happiness.
எது கூச்சமும் மிரளும் தன்மையுள்ள உருவத்தையுடையதோ, ஆதரவற்றதாய் உள்ளவையோ, குற்றம் செய்ய விழையாததோ, உடலை மட்டுமே சொத்தாக வைத்துள்ளவையோ, பற்களால் புற்களை உணவாக பெறுகிறதோ அத்தகையதான அஞ்சி நடுங்கும் பெண்மான்களும் கூட வேட்டையாடிக் கொல்லப்படுகின்றது என்றால் மற்ற விலங்குகளைப்பற்றி என்ன சொல்வது?  

உலகில் மன்னரும், ஆற்றல் மிக்கவரும் அஞ்சி நடுங்கும் உயிர்களைக் கொல்வதில்லை. பாதுகாப்பற்ற, ஆதரவற்றவைகளை காப்பாற்றுகின்றனர். அதனை வளர்க்கவும் செய்கின்றனர். ஏழைகளையும், பெண்களையும், அற்ப புல்லை உண்டு வாழும் சாதுவான பிராணிகளையும் கொலை செய்ய துணிவதில்லை. 

 களவு முதலானவற்றை செய்யாமல் வாழும் ஜீவன்களைக் கொல்வது வழக்கத்திலில்லை என்றாலும் அதே வகையைச் சார்ந்த அழகிய பெண்மானை நேயமின்றி வேட்டையாடுபவர்களுக்கு கண்டிப்பாக கொடிய குணம் இருப்பது உறுதி. சிறிதும் கருணையற்ற அவர்கள் கொடிய பாவிகளே என்றறிதல் வேண்டும். 


 ** ஏதோ சிறுபிள்ளைகளுக்கு சொல்லும் அறிவுரை போன்றுளது. தெரிந்தே பல தவறுகளைச் செய்யும் இக்காலத்தில் யார் கேட்கப்போகிறார்கள் என்ற ஆதங்கமும் தோன்றுகிறது. அவ்வாறு தோன்றினாலே அசிரியருக்கு வெற்றிதான்… 

 ஏனெனில் இக்காலத்திலும் அந்த நற்குணங்களும் அழியாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது என்பது நிரூபணமாகிறது. அதனால் நமது தலைமுறை இன்னும் மொத்தமாக சீரழியவில்லை என்று பெருமை கொள்ளலாம். 

 சில ஜீவராசிகளைக் கண்டாலே விழுங்கி விடும் நாட்டினருக்கு நம் நாடு மேலானதே…. ஆனால் உலகில் பொருளாதாரத்தில் மேலோங்கிய நாடாக அவையே கருதப்படுகிறது. தனி நபர் வருமானம் அதிகமான நாடாக அங்கீரிக்கப்பட்டவை அவை. அவர்களே உலகிலுள்ள உயிர்களின் ஆயுள் முடியுமுன்னே கொன்று தின்னும் கீழான நிலையில் வாழ்பவர்கள். 

 அதே சமயம் அவ்வுணவுக்கு சேர்க்கும் மசாலாப்பொருட்களுக்கு நம்நாட்டில் தான் விற்பனை அதிகமாம். நாம் அவர்கள் உணவுக் கலாச்சாரத்தினை நோக்கிக் தான் சென்று கொண்டிருக்கிறோம். பிணவாடையை நீக்கி உண்பதற்காக சேர்க்கும் நறுமண மற்றும் செரிமாண உணவுப்பொருட்கள் அவை. அவற்றை நம் போன்றோர் நீக்கி வாழ்ந்தால்தான் நம் அடுத்த தலைமுறை அனைத்து பிணங்களையும் கழுகு போன்று தின்னாத நிலைக்குச் செல்லாமல் வாழ்வர். 

 அந்த நம்பிக்கையில் தான் இது போன்ற ஜீவன்களை காப்பாற்றும் கலாச்சாரத்தை, அஹிம்சை உணர்வை காப்பாற்றவே ஜினதர்மத்தை வளர்த்து வருதல் நம் தலைமுறைக் கடமையாகும். 

அதற்காகத்தான் நாம் இக்குலத்தில் பிறந்துள்ளோம். அதற்கான புண்ணியபலனை முற்பிறவிகளில் ஈட்டியுள்ளோம் என்பதை மறத்தல் கூடாது. (ஏன் பிறந்தோம் என்று நினைத்து பல தடவை வருந்தியுள்ளோம். 
அதற்கான கர்மாவை சேர்த்தவர்களும் நாமே… ) 

நாம் வேட்டையாடுவதில்லை ஆனால் பிறர் வனங்களை அழித்து, நாட்டிற்குள் வாழும் ஜிவராசிகளை வளர்த்து வேட்டையாடுகிறார்களே அவர்களுக்கு அறிவுறுத்தவே இது போன்ற நன்னூலின் அறிவுரைகளை வளர்ப்பதே திருவறமாகிறது.








பைகன்யதைன்யதம்பஸ்தேயான்ருதபாதகாதி பரிஹாராத் | லோகத்வயஹிதமர்ஜய தர்மார்தயச: ஸுகாயார்தம் || 30 ||
Having given up back-biting, begging, deceit, theft, falsehood and other faults, pursue what is best in both the worlds for religion, wealth, renown and happiness.
புறங்கூறுதல், இரத்தல், வஞ்சகம், களவு, பொய் மற்றும் பிற தவறுகளை விட்டுவிட்டு, தர்மவழிகள், செல்வம், புகழ் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றிற்காக இரு உலகங்களிலும் சிறந்ததைத் தொடரவும்.

ஏ பவ்யனே ! நீ புறங்கூறல், கபடு, களவு, பொய் மற்றும் கொலை போன்ற தீயசெயல் முதலான பாவங்களை தியாகம் செய்து விட்டு, இம்மை மறுமைக்கு நலம்பயக்கும் செயல்களைச் செய்வாயாக! அறம், பொருள், இன்பம் மற்றும் நல்வினைகளை தருவதான செயல்களைச் செய்வதில் விருப்பம் கொள்வாயாக!

புறங்கூறுதல், இரத்தல், வஞ்சகம், களவு, பொய் மற்றும் பிற தவறுகளை விட்டுவிட்டு நற்சமய சிந்தனை, செல்வம், புகழ் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றிற்காக சிறந்த வழியைத் தொடரவும்.

பொய், களவு போன்றவவை பெரும் பாவச்செயலாகும். இவற்றை விலக்குவதால் அணுவிரதம், மஹாவிரதம் முதலிய அறச்சிந்தனை வளர்வதால் இம்மையிலும், மறுமையிலும் நன்மை விளையும். அறத்தை கைக்கொள்வதால் மக்களிடம் நம்பிக்கை ஏற்படும். செல்வத்தை பெருக்குவதற்கான காரணங்களாகவும் அமையும். அதனால் சாதாவேதனீயம் முதலான நல்வினை பந்தத்திற்கு காரணமாகிறது. இவற்றை உணர்ந்து பாவச் செயல்களை செய்யாது விலகுவாயாக!









புண்யம் குருஷ்வ க்ருதபுண்ய மனீத்தசோ அபி, நோபத்ரவோஅபிபவதி ப்ரபவேச்ச பூத்யை | 

ஸந்தாபயன் ஜகத சேஷமசீதரச்மி : பத்மேஷு பச்ய விததாதி விகாஸலக்ஷமீம் || 31 ||
Acquire merit; Even an unheard of calamity does no affect the doer of meritorious deeds. Indeed it does him good. See the sun, which oppresses the whole world (with its heat), gives a lovely bloom to lotuses.
நல்வினையைத் தேடிக்கொள். அதற்கொப்பானது வேறெதுவும் இல்லை. அவ்வேளையில் இடையூறுகள் வந்தாலும் அவற்றால் பாதிப்பொன்றும் இல்லை. உண்மையில் அவையும் நல்வினைக்கு காரணானவையே. எவ்வாறு சூரியன் வெப்பக்கிரணங்களால் உலகினை தகித்தாலும் தாமரையோ அதனால் மலரவே செய்கிறது.

அறச்செயலில் ஈடுபடும்போது உபசர்க்கங்கள் ஏற்பட்டாலும் அவை நல்வினையாளர்களுக்கு நல்வினையை அளித்து நன்மையே செய்கிறது. எவ்வாறெனில் சூரிய உதயம் வெப்பக்கதிர்களை பூமியின் மீது வீசி தகிக்கச் செய்தாலும், அது தாமரை மலர்வதற்கு நன்மையே செய்வது போன்றது.

அதாவது அறச்செயலின் போது ஏற்படும் இடயூறுகளை (உபசர்க்கங்களை) நல்வினைக்குக் காரணாமானவையே என்று கருதி தொடரவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

-------------------

தாமரை மலர்

தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்றெல்லாம் சொல்கிறோம். தாமரை மலர் இறைவனைப் பூஜிக்க மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தாமரை மலரைத் தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.

நம் வேதங்களிலேயே தாமரை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும் இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப்பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது.

இப்படி பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே நாமும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து மேல் எழுந்து தாமரையைப் போலவே உள்ளும் புறமும் தூய்மையுடனும், அழகுடனும் விளங்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

அதே போல தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இதழ்கள் தண்ணீரினால் நனைவதில்லை. இது ஞானிகளின் மனநிலைக்கு உதாரணமாக இருக்கிறது. எத்தனையோ துன்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவே ஞானியின் உலக வாழ்க்கை அமைந்தாலும் ஞானி அவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் மேலான இயல்பு மாறாமல் இருப்பதை தாமரை இலை - தண்ணீர் உதாரணம் மூலம் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தனியாக ஓரிடத்தில் இருப்பவன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அது ஒரு கஷ்டமான காரியம் அல்ல. துன்பங்களும், பிரச்சினைகளும், கவர்ந்திழுக்கும் விஷயங்களும் நிறைந்த உலகின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருந்தும் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பது தான் பேருயர்வு. அது தான் உன்னத நிலை. அந்த நிலைக்கு ஒருவன் உயர்ந்திருக்க ஏண்டும் என்று சதா நினைவூட்டிக் கொண்டிருப்பது தாமரையின் தனிப்பெரும் சிறப்பு.

செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை உலகிற்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்”.

மனித உடலில் “சக்ரா” என்னும் சக்தி மையங்கள் ஏழு உள்ளன என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. மூலாதார சக்ராவில் இருந்து சஹஸ்ரர சக்ரா வரை உள்ள அந்த ஒவ்வொரு சக்ராவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்கள் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப் படுகின்றது. உதாரணத்திற்கு மூலாதார சக்ரா என்னும் முதல் சக்ரா நான்கு இதழ் தாமரையான சக்ராவாகவும், ஏழாவது சக்ராவான சஹஸ்ரர சக்ரா ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. இப்படி சக்தி மையங்களை உருவகப்படுத்தும் போது கூட தாமரை மலரைக் கொண்டே உருவகப்படுத்தும் அளவு தாமரை சிறப்புப் பெற்றிருக்கிறது. வெள்ளத்தனைய மலர்நீட்டம்.. என்று ஏலாச்சாரியார் (நம்ப திருவள்ளுவர்) கூறியுள்ளதை ஆராய்ந்தால், அவர் மிகுபொருள் விரும்பாமை கொள்கையை தெரிவித்துள்ளார் என்பது புரியும்.

தாமரை, குளத்தினது ஆழத்திற்குத்தகுந்த அதன் காம்பு நீண்டு மேலே வந்து மலர்வது போல; நமது வாழ்க்கைக்கு தேவையான அளவு பொருளிட்டினால் முகமலர்ச்சியுடன் வாழலாம். இரவில் நன்றாக உறங்கி காலையில் தாமரை போன்று மலர்ச்சியுடன் நித்தம் எழலாம் என்பதைத்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாமரையின் தண்டு அது பிறக்கும் நீர்நிலையில் ஆழத்தைப் பொருத்து வளர்வது போல; ஒருவரின் பொருள் வேட்கையின் கூடுதலும், குறைச்சலும் அவர் வாழும் சூழலைப் பொருத்தது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்றே கருத வேண்டும்.

இப்படி முற்காலத்தில் இருந்து ஆன்மிக மலராய் கருதப்படும் தாமரைக்கு மருத்துவத் தன்மைகளும் இருக்கின்றன. பழங்காலத்திலிருந்தே தாமரை ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுவதால், அதைப் பற்றிய விவரங்கள் ஆயுர்வேத நூல்களில் அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. கப, பித்தங்களை சீராக்கவும், பேதிக்கு மருந்தாகவும் தாமரை பயனாகிறது. முக்கியமாய் இதய நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாக தாமரை கருதப்படுகிறது.

----------------

இந்த நூற்ப்பாவில் சேறும் சகதியுமான பூமிக்கடியில் தோன்றினாலும் தன் முயற்சியால் நீரின் மேற்பரப்பிற்கு வந்து சூரியனின் முழு உஷ்ணத்தை பெற்று விட்டேன் என்று முகமலரும் தாமரைபோல. அதாவது சூரிய உஷ்ணம் போன்று நீருக்கு அடியில் குறைவாக இருந்து மேல்மட்டத்திற்கு வந்தது கூடுவது போன்று அறச்செயலில் ஈடுபடும் போது எவ்வளவு கஷ்டங்கள் மேலும் மேலும் வந்தாலும் அவற்றை தாங்கிக் கொண்டு மேலுயரும் போது கண்டிப்பாக நல்வினை அவரது அறச்செயலுக்கு கூடவே செய்யும். பின் ஒரு பிறவியில் அறம் மட்டுமே நிலைத்து நல்வினையும் கழிந்து நித்தய சுகத்தை அளித்து மலரவே செய்யும் என்ற பொருளில் அறிவுறுத்துகிறார் ஆச்சார்ய ஸ்ரீ குணபத்ரர்.







நேதா யத்ர பிரஹஸ்பதி: ப்ரஹரணம் வஜ்ரம் ஸுரா ஸைனிகா: சுவர்கோ துர்கமனுக்ரஹ: கலு ஹரேரைராவணோ வாரண: | இத்யாச்சர்யபலாந்விதோஅபி பலபித்பக்ன: பரை: ஸங்கரே. தத்வியக்த்தம் நனு தைவமேவ சரணம் திக்திக்வ்ருதா பெளருஷம் || 32 ||
Whose guide was Brihaspati, whose weapon was thunder-bolt, whose soldiers were celestial beings, whose fortress was heaven, who was certainly in the favour of har (Krishna) and whose elephant was Airavata - even with such wonderful forces,. Indra was defeated in battle by others. From this, it is certainly evident that destiny is the only protection and futile endeavour (to change this destiny) is contemptible.
பிரஹஸ்பதி மந்திரியாக இருந்தும், வஜ்ராயுதத்தை கொண்டிருந்தும், தேவர்கள் அனைவருமே படையாக இருந்தும், ஹரி அவனுக்கு உதவிசெய்பவராக இருந்தும், ஐராவதம் எனும் வெள்ளையானையில் அமர்ந்து போர்புரிந்தும் இந்திரன் பகைவனால் தோற்கடிக்கப்பட்டான். இதனால் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளலாம். நமக்கு சாதகமாக விதியிருந்தால் மட்டுமே சாதிக்க இயலும். அதை மாற்ற முயலும் கடின முயற்சிகள் வீண். நல்வினையால் வந்த விதியே நன்மை செய்யக்கூடியது. வெற்றியளிக்கக்கூடியது.

இந்திரன் என்றால் வலிமையின் சிகரம் என்ற பொருள். அதிபராக்கிரமசாலியான இந்திரனே நல்வினை ஈட்டாமல் இருந்தால் எவ்வளவு வலிய, பெரிய சேனையும், அமைச்சரும் இருந்தாலும் தோல்வியையே தழுவுவான்.

அதாவது வினை வலியது என்பதை தெளிவாக்குகிறது. உலக பொருட்களை அடைவதில் பெருவிருப்பம் கொண்டவர்களும், வலிமையானவர்களாக இருந்தாலும், மரணம் நெருங்குவதை உணராது செயல்படுவர்களும், நல்லொழுக்க நெறியை உடன் கைக்கொள்ளுதல் வேண்டும் என்பதை விளக்குகிறார்.

வினை வழிவந்த விதி வலியது என்பதால் எதிர் கொள்வதில் உள்ள புருஷார்த்தம் பயனற்றது எனக் கொள்ளகூடாது. அவ்விதியை அறவழியில் எதிர்கொண்டால் வெல்லலாம், விதியை மதியால் வெல்லலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நம் செயலில் புருஷார்த்தமே நமக்கு நல்வினை ஈட்டி எப்போதும் நம்மை வெற்றியடைய செய்யும். வினையின் வலிமையை தணிக்கவோ, விலக்கவோ இயலும்.

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்” என்பது குறள்.

உள்ளத்தில் சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இன்றி உழைப்பவர், அச்செயலுக்குப் பயன் விளைக்காதவாறு இடையூறாகத் தோன்றும் ஊழையும் ஒதுங்கச் செய்வர். ஊழ்தன்னையும் மனிதன் தாழச்செய்ய முடியும் என்று ஊக்கம் தரும் குறள் இது. அதாவது அறவழியில் எதிர்கொண்டால் அவ்வூழ் வலிமையற்றுப் போகும்.

அறம் சிறக்க நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிப் பாதையில் செல்ல இப்போதே முயலவேண்டும். காலம் கடத்தினால் மரணம் முந்திச் சென்றுவிடும் என்பதை வலியுறுத்துகிறார் ஆச்சார்ய பெருமான்.








பர்தார: குலபர்வதா இவ பூவோ மோஹம் விஹாய ஸ்வயம், ரத்னானாம் நிதய: பயோதய இவ வ்யாவிருத்தவித்தஸ்பருஹா: | 


ஸ்ப்ருஷ்டா: கைரபி நோ நபோ விபுதயா விஸ்வஸ்ய விஸ்ராந்தயே, ஸந்த்யத்யாபி சிரந்தனாந்திகசரா: ஸந்த: கியந்தோ அப்யமீ || 33 ||

Some worthy disciples of the ancient sages exist even today. These, having themselves destroyed all delusion, have become protectors of (people), like Kulachalas ( mounts Himavana, Mahahimana, etc., protecting the terrestrial regions, Bharata, Haimavata etc). They are the respositories of jewels (of attibutes) like the oceans, having vanquished all desire for wealth. They are not touched by (attachment for) anything whatsoever. Majestic, like space, they are a source of peace to all.
மிகத்தொன்மையான காலத்தில் வாழ்ந்த மாமுனிகளைப் போல் அறநெறி பிறழாத துறவறநெறியில் வாழும் சீடர்களை இன்றும் காணலாம். இவ்வறவோர்கள் எந்த ஒரு விருப்பமும், எதிர்பார்ப்புமின்றி, ஜம்பூத்வீப நிலவுலகை அரண் போல உறுதியாய் நின்று காக்கும் குலமலைகளுக்கு ஒப்ப உறுதியாய் அறவழி நின்று மக்களை வழி நடத்துகின்றனர். நற்காட்சி எனும் செல்வங்களை, முத்து, பவளம் போன்ற ரத்தினங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அதன்மீது எவ்விதவிருப்பமுமின்றி சூழ்ந்திருக்கும் கடல் போன்று பற்றற்று வாழ்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் அடைக்கலம் தந்தாலும், எந்த ஒன்றுடனும் பட்டும் படாததுமாய் இடமளிக்கும் ஆகாய திரவியத்தின்(மெய்ப்பொருள்) பண்பினை ஒத்தவர்கள்.

இந்நூற்ப்பாவில் குறிப்பிட்ட குலமலை என்பது கரணானுயோக லோகஸ்வரூபம் எனும் **சமண அண்டவியலில் மத்திம லோகத்திலுள்ள ஜம்பூத்வீபத்திலுள்ள பரதம், ஐராவதம் போன்ற ஏழு க்ஷேத்திரங்களையும் காத்து நிற்பவை குலமலைகள் ஹிமவான், மஹாஹிமவான் போன்றவைகளாகும். அவை போன்று அம்மாமுனிகளின் சீடர்களும் அறநெறியை உறுதியாக வாழ்வில் கடைபிடிப்பவர்கள் என்று கூறுகிறார்.

அதே போன்று முத்து, பவளம் போன்ற நவரத்தினங்களைக் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அவற்றின்மீது எந்த ஒரு விருப்பமுமின்றி பிறருக்கு அளித்து வளம் தருவன போன்று அவ்வறவோர்கள் மும்மணிச் செல்வத்தை உடையவராய் பிற உலகியல் பொருட்கள் மிது விருப்பமின்றி அவ்வறங்களை பிறருக்கு அளித்து வாழ்பவர்களாகவும்;

ஆறு திரவியங்களில் ஒன்றான ஆகாய திரவியம் (மெய்ப்பொருள்) காலம் தவிர உயிர், புத்கலம், தன்ம, அதன்ம திரவியங்களுக்கு இடமளித்தாலும் அதனுடன் பிடிப்பும், எத்தொடர்பு மின்றி உள்ளது போல, இவ்வுலகில் பற்றற்று வாழும் சத்புத்திரர்கள் இவர்கள் ஆவார்கள் என்றுரைக்கிறார்.

** அருகன் தத்துவம் சென்ற April, May 2019 இருமாத இதழ்களில் காணலாம்.








பிதாபுத்ரன் புத்ர: பிதரமபிஸந்தாய பஹுதா | 

விமோஹாதீஹேதே ஸுகலவமவாப்தும் ந்ருபபதம் || 

ஆஹோ முக்தோ லோகோ ம்ருதிஜனன தம்ஷ்டராந்தரகதோ | ந பச்த்யஸ்ராந்தம் தனுமபஹரந்தம் யமமமும் || 34 ||

Being moved with desire of getting Kingship (which is only a small) bit of pleasure, the father often tries to cheat his son, and the son to the father. It is stange that this foolish world, which is fallen between the jaws of birth and death, does not see yonder Death indefatigably snatching away the body.
அரசபதவி மீது விருப்பங்கொண்டு தந்தை மகனையும், மகன் தந்தையையும், அது ஒரு அற்ப சுகமே என்ற எண்ணமில்லாமல், ஏமாற்றி வஞ்சித்துக்கொள்கின்றனர். என்ன ஆச்சர்யம்! இந்த மூடஉலகம் பிறப்பு, இறப்பு எனும் இரு தாடைகளுக்கிடையில் அகப்பட்டு தொலைவில் நம்மை நெருங்கிவரும் கூற்றுவனைக் காணாமல் இந்த உடலை ஆவலுடன் பற்றிப் போற்றி வருகிறது.

தன்னைக் கொல்லத் திட்டமிட்டு நெருங்கும் கொடியவிலங்கை கண்டறியாது தனது உடலைக் காப்பாற்ற புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் மான் போல, எமனின் பிடியில் சிக்கியுள்ள உலகமக்கள் பதவி, பொறிநுகர் இன்பம், உடல் சுகம் இவற்றில் வேட்கை கொண்டு ஆயுளைக் கழித்து வருகின்றனர். இம்மூடத்தனத்தை விட்டொழிக்க வேண்டும் என்கிறார்.








அந்தாதயம் மஹாநன்தோ விஷயாந்தீக்ருதேக்ஷண | 

சக்ஷு ஷாஅந்தோ ந ஜானாதி விஷயாந்தோ ந கேநசித் || 35 ||

One whose eyes are blinded by sense-desire is the blindest of the blind. The blind man cannot see with the eye(only), while one, blinded by sense-desires cannot (perceive) through any means.
எவனொருவனது அறிவுக்கணை ஆசைமறைக்கிறதோ அவன் குருடர்களைவிட பெருங்குருடனாவான். கண் குருடானவனுக்கு அவனது கண்களால் மட்டுமே பார்க்க இயலாது. ஆனால் புலனாசையில் குருனாகிவிட்டால் எல்லா இந்திரியங்களாலும் நல்லதை அறிய இயலாது.

கண்கள் உருவத்தை மட்டுமே பிரதிபலிப்பவை. அப்பொறியை இழந்தால் தோற்றம் மட்டுமே தென்படுவதில்லை. ஆனால் பிற இந்திரியங்கள் மற்றும் மனதின் உதவியால் ஒரு பொருளை உணரமுடியும். அதே சமயம் ஆசை சூட்சும இந்திரியமான மனதில் அமர்ந்து நோக்கும் போது அப்பொருளின் உண்மைத்தன்மையை உணர இயலாது. அதாவது ஆறாவது இந்திரியமான மனம் குருடானால் அனைத்து புலங்களுமே குருடாகி புலன் நுகர்இன்பத்திற்கு அடிமையாகி காம, போகத்தில் அறியாது வீழ்ந்து கிடப்பர். எனவே புலர்நுகர்வில் குருடனாய், அறிவை இழந்து ஆசைக்கு அடிமையாகி விடக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்.









ஆஷாகர்த்த: ப்ரதிப்ராணி யஸ்மின் விச்வமனூபமம் | 

கஸ்ய கிம் கியதாயாதி வ்ருதா போ விஷயைஷிதா || 36 ||

Every living being (has such a deep) pit of worldly desires that (all objects in) the world (amount to) only a particle for it. What, and how much, then, can each get? Useless (is) your desire of sense-enjoyments.
ஆசை எனும் பெருங்குழி ஒவ்வொரு உயிரிடத்திலும் காணப்படுகிறது. எண்ணில் அடங்கா எண்ணிக்கையில் உலகில் உயிர்கள் காணப்படுகின்றன. அவ்வளவு உயிரினத்தினிடமும் அப்பெரும்பள்ளம் காணப்படவே செய்கிறது. உலகிலுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு குழியில் இட்டாலும் அவை ஒரு மூலையில் அணுஅளவே காட்சியளிக்கிறது என்றால், ஒவ்வொரு உயிருக்கும் எவ்வளவு கிடைக்கும். எனவே புலனுகர்வுப் பொருள்களின் வேட்கை கொள்வது பயனற்றது அல்லது வீணேயாகும்.

ஆசையோ உயிர்களிடம் ஒன்று தணிந்தால் உடன் மற்றொன்று தோன்றிய வண்ணம் உள்ளது. அதில்… மூவுலகிலும் ஆசையைத் தணிக்கும் பொருட்கள் அனைத்தும் மிகச் சிறியதான, அல்பஅளவினதாகவே உள்ளன. ஆனால் உயிர்கள் ஒவ்வொன்றிடமும் ஒரு சமயத்தில் தோன்றிடும் ஆசைகளோ பெரும் அளவில் காணப்படுகிறது. அதற்கான வைபவங்கள், சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சிக்கான பொருட்களை யாருக்கு எந்த அளவில் இவ்வுலகம் பிரித்து வழங்கும். அப்படியே நிரப்ப முயன்றாலும், ஒவ்வொருவரின் பெரும்வேட்கையில் ஒரு அணுவளவையே தணிக்க இயலும். அதனால் எக்காலத்திலும் எவருடைய ஆசையும் பூர்த்தியடைய போவதில்லை.

உலக இன்பத்தின் அளவு சொற்பமாயிருக்க பெருவிருப்பத்தை தோற்றுவித்து எப்போது நிறைவேற்றிக் கொள்வது. எவ்வளவு முயன்றாலும் ஏமாற்றமே மிஞ்சும். அதனால் ஐம்பொறிவழி இன்பங்களை நுகர்வதில் நாட்டம் கொள்வது வீணாது என்கிறார் ஆசையை கணிதமுறைப்படி கணக்கிட்ட ஆச்சார்ய பெருமான்.

ஆசை என்பது எப்பொழுதும் முழுமையாக நிறைவேறுவது இல்லை. ஏதாவது ஒரு செயல் நிறைவேறிவிட்டால் கூட துன்பம் என்னவோ ஒரு முடிவுக்கு வருவதில்லை. ஒரு கஷாய உணர்வு அழிந்த அதே சமயம் புலன்நுகர்வு வேட்கையினால் வேறோரு கஷாய உணர்வு ஏற்பட்டு விடுகிறது.








ஆயு: ஸ்ரீவபுராதிகம் யதி பவேத் புண்யம் புரோபார்ஜிதம், ஸ்யாத் ஸர்வம் ந பவேன்ன தச்ச நிதராமாயாதிதே அப்யாத்மனி | 


இத்யார்யா சுவிசார்ய கார்யகுசலா: கார்யேஅத்ர மந்தோத்யமா த்ராகாகாமிபவார்தமேவ ஸததம் பிரீத்யா யதந்தேதராம் || 37 ||

(Long) life, Wealth, (strong and well-built) body etc., are all possible if merit has been acquired in the past: if not, they are not possible even if the soul under goes unremitting labour (to attain them). Thus gentlemen, proficient in practical matters, after proper consideration, exert themselves mildly for worldly matters; but cheerfully take prompt and continuous measures for the life hereafter.
ஒருவருக்கு நீளாயுள், நிறை செல்வம், வலிமையும் வனப்பும் மிகுந்த சரீரம் கிடைப்பது முற்பிறவிகளில் ஈட்டிய நல்வினைபயனால் தான். நல்வினை இல்லையேல் மேற்சொன்ன சிறப்புகள் எதுவும் தன்னை வருத்துக் கொண்டு எவ்வளவு முயற்சி செய்தாலும் பெறமுடியாது. ஆகையால் நற்பண்பாளர்கள், நடைமுறை விஷயங்களில் அனுபவப்பட்டவர்கள், சரியான பரிசீலனைக்கு பிறகே உலக விஷயங்களை வேட்கையின்றி காரியமாற்றுவார்கள். அவர்களே மறுமைக்கான நல்வாழ்விற்கு முறையாக செயல் புரிபவர்கள்.

எவர் முன்பிறப்புகளில் தயை, தானம், தபம் முதலிய நற்செயல்கள் புரிந்து நல்வினை ஈட்டியுள்ளார்களோ அவர்கள் இப்பிறவியில் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்லுடல் முதலான சிறப்புகளைப் பெறுகின்றனர். முன்செய்த நல்வினை இல்லாதவர்கள் இப்பிறவியில் பெருமுயற்சி செய்தாலும் துன்பமும், வருத்தமும் நிறைந்தே காணப்படுவார்கள். அதனால் அறிவாளர்கள் சிந்தித்து இப்பிறவியில் உலகியல் பொருட்கள் மீது வேட்கை மிகாது, மறுமை நலனுக்குரிய நல்வினை ஈட்ட நற்காரியங்களை செய்வார்கள்.








க: ஸ்வாதோ விஷயேஷ்வஸெள கடுவிஷ பிரக்யேஷ்வலம் துக்கினா, யானன்வேஷ்டுமிவ த்வயாஅகசிக்ருதம் யேனாபிமானரம்ருதம் | 


ஆஞாதம் கரணைர்மன: ப்ரணிதிபி: பித்தஜ்வரா பிஷ்டவத், கஷ்டம் ராகரஸை: சுதீஸ்வமபி சன் வ்யத்யாஸிதா ஸ்வாதன: || 38 ||

What pleasure is there in sense-gratifications, which are well-known as bitter like poison, that thou, being distressed in the search for them hast grossly defiled the nectar of thy self_respect? Enthralled by the senses, attendant upon the mind, (and) like one possessed by bilious fever, thou, alas! though wise, hast got perverted taste by the enjoyment of (worldly) attachments.
விஷம் போன்ற கசப்பு என்று நன்கு அறியப்பட்ட உணர்ச்சி-மனநிறைவுகளில் என்ன இன்பம் இருக்கிறது, அவைகளைத் தேடுவதில் நீங்கள் பல வேதனைகளை சந்திக்கிறீர்கள். மேலும் உனது சுயமரியாதை எனும் அமிர்தத்தை முற்றிலுமாக கறைபடுத்தி கெடுத்து விடுகிறது. புலனின்பத்தால் ஈர்க்கப்பட்டு, மனதால் மயங்கி பித்தத்தால் தாக்கப்பட்டவனைப்போல் ஆகிவிட்டாய். ஐயகோ! அறிவிருந்தும் உலகியல் தொடர்புகளில் மூழ்கி விபரீத சுவையை அனுபவிக்கிறாய்! இவை அதிக துன்பத்தையே அளிப்பன. பித்தஉபரிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவனுக்கு ஊண்ணும் உணவின் சுவை மாறுபட்டு காணப்படுவது போல நீ விபரீத சுவைவிரும்பியாகி விட்டாய். கசப்பான விஷத்திற்கு சமமான இந்த புலநுகர்ச்சி இன்பங்களில் என்ன சுவை யிருக்கிறது? அது மனதின் வேட்கையினால் கவரப்பட்டுள்ளதே. அச்சிற்றின்ப வேட்கையினால் துன்புற்று அனந்த சுகத்தை அடையும் வாய்ப்பை இழந்து வருகிறாய்.








அனுவ்ருத்தேர்ஜத்ஸர்வம் முகாதவசினஷ்டி யத் | 

தத்தஸ்யா ஸக்திதோ போக்தும் விதனோர்பானுசோமவத் || 39 ||

(The fact) that the whole world has been saved from the mouth of one, who has renounced nothing, is because of his non-capacity for taking in (the whole of) it, just as the sun and the moon (have been saved from the mouth) of Rahu, a planet.
ராகு கிரகம் சூரியனையும், சந்திரனையும் விழுங்க முயற்சிக்கிறது. ஆனால் தோல்வியடைந்து விடுவதால் அவைகள் இரண்டும் இன்றும் அப்படியே உள்ளன. அதே போல் நீயும் உலகப்பொருட்களை விழுங்க முயற்சி செய்தாலும் அவை அப்படியே பின்னப்படாமல் இருக்கிறதே. அப்படியானால் நம் உண்ண இயலாமையைக் காண்பிக்கிறது.

சோதிட சாஸ்திரத்தில் ராகு, கேது கிரகங்கள் சூரிய, சந்திரனை கிரணத்தன்று விழுங்கி விடுவதாக கூறப்படுகிறது. ஆனால் அது அவ்வாறு இல்லை என்பது இவ்விரு கிரகங்களும் இன்னும் ஒளியுடன் முழுமையாய் இருப்பதலிருந்து தெரிகிறது.

(உண்மையில் அவை மறைக்கவே செய்கின்றன. அதனால் விழுங்குவது போன்ற மாயத்தோற்றத்தைத் தருகின்றன. மேலும் அவை இரண்டுமே நிலப்பரப்பே இல்லாத வீடற்ற கிரகமாகவே ஜோதிடசாஸ்திரம் கூறுவதையும் கவனிக்க வேண்டும். கிரகணத்தன்று சூரிய, சந்திரனுக்கு இடையில் சந்திரனும், பூமியும் தான் குறுக்கிட்டு நிழலை ஏற்படுத்தி பாமரனுக்கு விழுங்கி, மீள்வது போன்ற தோற்றத்தை தருகின்றன.)

அதே போல் ஜீவன்கள் அதிக வேட்கை கொண்டு மூவுலகப் பொருள்களையும் துய்க்க எண்ணுகின்றன. அவ்வாறு துய்த்தழித்திருந்தால் வரும் சந்ததியருக்கு எதுவே மிஞ்சியிருக்காது. அதனால் புலனுகர்ச்சி என்பது ஒரு மாயஉணர்வு என்கிறார் முனிவர் பெருமான். அவ்வுணர்ச்சி நிழலாய் தான் நம்மனதில் தோன்றி இன்பஉணர்ச்சியை அளிக்கின்றன.

நுகரும் பொருள் எதற்கும் எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் அவை நிரந்தரமாக இப்பூமியில் தன்மூல நிலையில் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் கூட்டுநிலையே நிழலாக தோன்றி இன்ப உணர்வை ஜீவராசிகளுக்கு அளிக்கின்றன என்ற விஞ்ஞான கூட்டுப்பொருள் தத்துவத்தையும், அது பிரிந்து வேறொரு பொருளாக மாறும் தத்துவத்தையும் விளக்கியுள்ளார்.

அதனால் எந்த ஜீவனுக்கும் எந்த ஒரு மூலப் பொருளையும் துய்த்தழிக்கும் சக்தி யில்லை என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார். அந்த மாய உணர்விலிருந்து வெளியேறி அறவுணர்வில் வாழ வழிகாட்டுகிறார். பிரபஞ்ச மூலப்பொருட்கள் என்றும் எந்த அளவிலும் கூடுவதுமில்லை, குறைவதுமில்லை என்ற உண்மையை தெளிவு படுத்துகிறார்.








சாம்ராஜ்யம் கதமப்யவாப்ய ஸுசிராத் சம்சாரசாரம் புன:, தத்தியக்வைவ யதி க்ஷிதீஸ்வரவரா: ப்ராப்தா: ஸ்ரியம் சாச்; வதீம் | 

த்வம் ப்ராகேவ பரிக்ரஹான் பரிஹர த்யாஜ்யான் க்ரஹீத்வாபி தே, மா பூற்பெளதிகமோத கவ்யதிகரம் ஸம்பாத்ய ஹாஸ்யாஸ்பதம் || 40 ||

Having after a long time and some how obtained the position of an Emperor (chakravarti), the best (of all positions) in the world, the mightly monarchs obtained eternal bliss only its renunciation. Thou shouldst (then) from the beginning renounce worldly entanglements, which are fit to be discarded. Be not thou an object of ridicule like (the person in garb of) an ascetic (who rendered himself an object of) ridicule (by taking up) a sweet ball (which had falled in filth, and who said that he would no eat it but would throw it away after washing it).
ஏ பவ்வியனே, உலகில் உயர்ந்த அதிகாரம் பெற்ற சக்கரவர்த்தி பதவியை அடைந்தவரும் நீண்டகாலத்திற்குப் பின் அதைத்துறந்தே அழியாப்பேரின்பத்தை அடைந்தார்கள். முக்திப்பேற்றை யடைந்துள்ளனர். அதனால் நீயும் உலக இன்பத்தில் பற்று கொண்டு அந்நிலையிலேயே அமர்ந்து விடாமல் விரைந்து தியாகம் செய்து வெளியேறி விடு. சிலகாலம் பற்றுடன் வாழ்ந்து பின் விட்டுவிடலாம் என்றெண்ணினால், கையிலிருந்த இனிப்புத்துண்டை சாக்கடையில் நழுவவிட்டபின் எடுத்து கழுவி வைத்துக்கொண்டது போலாகும். அச்செயலை கண்டவரிடம் பின்பு அதனை தூக்கித்தான் எறியப்போகிறேன் என்று சொல்வதற்க்கு ஒப்பானது. அதனால் இக்கேலிக்குரிய செயலை நீ செய்யாதே. 

 மிக உயர்ந்த பதவி வகித்து அதன் வழியே இன்பத்தை அனுபவித்தாலும் / இறப்பதற்கு முன்பு பேரின்பத்தை நாட அவற்றைத் தியாகம் செய்து விலகத்தான் வேண்டும் என்கிறார். அம்முடிவை கடைசிக்காலத்தில் எடுப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை என்கிறார். 

 சாதுபோல் வேடமிட்ட ஒருவன், இரந்துண்டு வாழ்ந்து வந்தான். ஒருநாள் லட்டு ஒன்று பிச்சையாய் கிடைத்தது. அதனை எடுத்தபோது கைநழுவி சாக்கடை நீரில் வீழ்ந்துவிட்டது. எடுத்து பின்பு சுவைக்கலாம் என நல்ல நீரில் கழுவி அதனை உள்ளே வைத்தபோது, அவ்வழி சென்ற வழிப்போக்கன் அவ்வாறு செய்யாதே என்று அறிவுறுத்தினான். அவனிடம் ஆம் அதனை உண்ணாமல் பின்னர் தூக்கித்தான் எறிவேன் என்று கூறினான். அது ஏற்க தகுதியற்றது என்று தெரிந்திருந்தும் வைத்துக் கொண்டிருப்பதில் என்ன பயன். 

அது போலல்லாமல் மனதில் தோன்றும் மாசுக்களை அவ்வப்போது விலக்குவதே சிறந்தது. இளமையிலிந்தே பொருட்வேட்கையில் நாட்டம் கொண்டு பொருளீட்டாமல் வாழ வேண்டும். அதனால் பிற்காலத்தில் வரும் துன்பத்திற்கு பின் அப்போதே அதனை தியாகம் செய்திருக்கலாம் என்று எண்ணுவது. ஒருநாள் அவற்றை தியாகம் செய்தே தீரவேண்டும். அதனால் இப்போதிருந்தே வேட்கை தணிந்த வாழ்க்கையில் வாழ பழகவேண்டும் என்கிறார். 

 சந்தனக்குழம்பு போன்று தோற்றமளித்த சேற்றில் காலை வைத்துவிட்டு பின்பு கழுவுவதால் என்ன பயன். அதில் காலை பதிக்காமல் இருத்தலே விவேகமான நிலை என அறிவுறுத்துகிறார் முனிவர் பெரும.








ஸர்வம் தர்மமயம் க்வசித் க்வசிதபி ப்ராயேன பாபாத்மகம், க்வாப்யேதத் த்வயவத்கரோதி சரிதம் ப்ரஞாதனானாமபி | 


தஸ்மாதேஷ ததந்தரஜ்ஜுவலனம் ஸ்நானம் கஜஸ்யாதவா, மத்தோன்மத்தவிசேஷ்டிதம் ந ஹி ஹிதோ கேஹாஸ்ரம: சர்வதா || 41 ||

The household stage makes the stage life of even those who are rich in wisdom, sometimes, sometimes of meritorious, sometimes all sinful, and sometimes both; it is thus like the making of a rope by the blind, or the bathing of an elephant, or the act of a mad man. It is not whilly beneficial.
இல்லறவாழ்வில் ஈடுபடுவோர்க்கு எவ்வகையிலும் நன்மை இல்லை. மிகவும் புத்திக்கூர்மையுடன் செயல்பட்டாலும் நற்செயலையும், சில வேளைகளில் தீவினைக்குரியதாகவும், சில சமயம் இருவகைச் செயல்களாகவும் ஆக வாய்ப்புண்டு. அதாவது குருடன் ஒருமுனையில் முறுக்கும் போது கயிற்றின் மறுமுனை பிரிந்து செல்லவதை காணமுடியாதது போன்றும்; குளித்தபின் யானை சேற்றை வாரிப் பூசிக்கொள்வது போன்றும்; புத்திசுவாதீனமில்லாதவனின் செயல் போன்றும் சில சமயம் இவ்வில்லற வாழ்க்கையின் செயல்பாடுகள் அமைவதுண்டு.

இல்லறத்தில் வாழ்பவர்களுக்கு அமைதியாகவும், முக்திப்பயணத்திற்குத் தேவையான செயல்களை வரையறுத்து அதன்படி நடப்பது அரிதாகிறது. துறவறத்தார் போன்று நித்திய நியமங்கள், இயமங்கள் போன்ற விரத சீலாச்சாரங்களில் இயல்பாகவே ஈடுபட்டு ஆன்ம வளர்ச்சிப்பாதையில் முன்னேற வாய்ப்பின்றி அமைந்துள்ளது. எவ்வளவு கவனமாக செயல்பட்டாலும் நல்வினை, தீவினைக்குமான காரியங்களில் ஈடுபட வேண்டியுள்ளது என்கிறார்.

அதனால் இல்லறத்தார் தம் கடமையில் தர்ம வழியிலிருந்து சிறிதும் வழுவாமல் கவனமாக செயல்படுதல் அவசியம் என்று அறிவுறுத்துகிறார்.








க்ருஷ்ட்வோப்த்வா ந்ருபதீன்னிஷேவ்ய பஹுஸோ ப்ராந்த் வாவனேஅம்போனி தெள கிம் க்லிஸ்நாஸி ஸுகார்தமத்ர சுசிரம் ஹா கஷ்ட மஞானத: | 


தைலம் த்வம் ஸிகதாஸ்வயம் ம்ருகயஸே வாஞ்சேத்விஷாஜ்ஜி விதும், நன்வா சாக்ரஹனிக்ரஹாத்வ ஸுகம் ந ஞாதமேதத் த்வயா || 42 ||

It is great pity that thou shouldst out of ignorance make thyself miserable so long in the world by ploughing and sowing the land, by serving kings in many ways, and by wandering about in jungles and on the seas, in pursuit of pleasure. Thou wishest(to get) oil from sand: thou wishest to live on poison. Dost thou not know that thy happiness lies in subduing the demon of desires?
இவ்வுலக வாழ்க்கையில் நீ நீண்ட காலமாக ஆட்சியருக்கு அடிமையாய் இருந்து நிலத்தை உழுது விதைப்பது போன்ற பல் வீணான பணிகளை செய்து கொண்டிருக்கிறாய். காட்டில் அலைந்து கடலை கடந்து சென்று வாணிகம் செய்தும் சுகத்திற்காக பலதொழிலைச் செய்கின்றாய். நீ மணலில் இருந்து எண்ணை எடுக்கவும், விஷத்தைப் பருகி வாழவும் விரும்புகிறாய் என்பதாகவே உள்ளது. நீ விரும்பும் இன்பம் ஆசையெனும் பேயைப் சாந்தப்படுத்துவதில்தான் வாழ்நாள் கழிகிறது என்பதை நீ அறியவில்லை என்கிறார்.

இந்த பாடல் சற்று நம் வாழ்க்கையையே முடக்கிப் போடுவது போன்று தோன்றும். ஆனால் ஆச்சாரியார் அவ்வாறான எண்ணத்தில் எழுதியிருக்க வழியில்லை. ஏனெனில் இச்செயல் அனைத்தையும் அசி, மசி, கிருஷி என்ற ஆறு தொழில் வகைகளாக ஆதிநாதர் வழிகாட்டுதலில் தோன்றியவையே. அன்றிருந்த தர்மம் அப்பணிகளில் முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நசுங்கி, குறுகிய எண்ணத்துடன் செயலாற்றுவதாக உருமாற்றம் பெற்றுள்ளதை தெரிவிப்பதே அவர் நோக்கமாக இருந்திருக்கும்.

மேலும் தேவைக்கும், ஆசைக்குமான இலக்கணத்தையும், இடையே வேறுபடும் வாழ்வுநிலை மாற்றத்தின் எல்லையை வரையறுக்கவும் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்றே கருகிறேன்.

உலகில் மனிதனைத்தவிர அத்தனை ஜிவராசிகளும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை தன் ஆயுள் காலம் முடியும் வரை வாழ்ந்தே மடிகின்றன. இடைப்பட்ட வாழ்நாட்களில் இயற்கை வளம் அளிக்கும் உணவையும், உறைவிடத்தையும் ஏற்று சுகம்மிகுந்த வாழ்க்கையையே வாழ்வதை இன்றும் நாம் காணலாம். தன்னை விழுங்கும் பகைவர் வரும் காலத்தை தவிர மற்ற சமயங்களில் இந்த வெட்ப, தட்ப சூழ்நிலைக்கேற்ப இடம்பெயர்ந்தும், அதனால் வரும் துன்பத்தை சட்டை செய்யாமல் கிடைத்த உணவை உண்டு, இரவில் இயற்கை உறைவிடத்தில் உறங்கி சுகமாக வாழுவதை காணத்தான் செய்கிறோம்.

அவ்வாறில்லாமல் மனிதன் மட்டுமே சுவைக்கான உணவை பெறவேண்டி உழவு, பயிர் செய்தல் போன்ற பணிகளிலும், இயற்கை சுழலளிக்கும் வெப்பத்தை மாற்றி யமைக்க எண்ணி உறைவிடத்தையும், விரும்பியவைனைத்தும் தன்னிடம் நீடிக்க விரும்பியும், பிற்காலத்தை எண்ணியும் கலங்கி, சேமிக்கும் நோக்கத்தில் வியாரத்தைச் செய்து பொருளீட்டியும் வாழ்த்துணிந்ததால் இன்றைய சமூக கட்டமைப்பும், ஆண்டான் அடிமை போன்ற அனைத்தும் தோன்றியுள்ளன. அவன் தனது அற்ப ஆசையை பூர்த்தி செய்ய எண்ணியே பெரிய சுமைகளையும், அற்ப சுகத்திற்காக பல மணி உழைப்பையும் ஏற்றுக் கொள்கிறான் என்பதை அவர் சுட்டிக் காட்ட விரும்பியுள்ளார்.

தேவையை பூர்த்தி செய்ய இயற்கை இருக்கும் போது, இயற்கையை மீறி தான் விரும்பும் சுகத்திற்காக மணலிலிருந்து எண்ணெயை எடுக்கவும், உணவை விஷமாக்கி உண்ணவும் விரும்புகிறான் என்கிறார் ஆச்சார்ய குணபத்ரர். அறிவியல் இயற்கையை மீறி செயல்படும் போது ஏற்படும் போராட்டங்களை அக்காலத்திலேயே அவர் விரும்பவில்லை. அனைத்தும் வீண் என்கிறார்.

தேவைத்தாண்டி வேட்கை கொள்ளும் போது ஆசையெனும் பேய் நுழைகிறது, மனம் சஞ்சலம் ஏற்பட்டு துன்பமே விளைகிறது என்றளவில் தேவைக்கும், ஆசைக்குமான எல்லைக் கோட்டை சுட்டுவதாகவே அவ்வரிகளை கொள்ள வேண்டும்.

“ஆசையெனும் பேயை விலக்கு, இயற்கையே உன் தேவையை புர்த்தி செய்யும்” என்று கூறிவதோடு, அதுவே அமைதியான இன்பம் வாழும்நாள் வரை அளிக்கும் என்றும் அறிவுறுத்துகிறார் எனக் கொள்ள வேண்டும்.








சுத்தைர்தனைர் விவர்தந்தே ஸதாமபி ந சம்பத: | 

நஹிஸ்வச்சாம்பூபி: பூர்ணா: கதாசிதபி ஸிந்தவ: || 45 ||

The of even good men is not increased by pious income; the seas never be filled with fresh water only. It is impossible to earn money while observing a conduct, which may not cause any injury or pain to any living being. The different occupations of agriculture, trade and industry, etc., inevitably involve the causing of pain to unnumerable living beings, by which demeritorious Karmas are bound.
நல்லோர்களின் தூய நன்னெறியால் நேர்மையால் செல்வம் பெருகாது. ஏனெனில் நன்னீரால் மட்டுமே கடல் நிரம்புவதில்லை.

எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காமல், அஹிம்சை வழியை கடைபிடித்து செல்வத்தை ஈட்டுதல் முடியாது. இரண்டும் வேறு வேறு திசையில் பயணிப்பது. அதேபோல் விவசாயம், வாணிபம் மற்றும் தொழில் போன்றவற்றில் ஈடுபடும்போது. அவ்வேளையில் கணக்கற்ற உயிர்களுக்கு இம்சை ஏற்படுவதைத் தடுக்க இயலாது. அதனால் தீவினையிலிருந்து தப்ப இயலாது.

எனவே ஆன்ம சித்திக்கு இடையூறான இவ்வழிகளில் மிகவும் கவனமுடன் கடமையாற்றவேண்டும். இம்சை குறைந்த அளவில் பொருளீட்ட முயலவேண்டும். அதுவே தீவினை வளர வழிவகுக்காமல் காக்கும் என்று அறிவுறுத்துகிறார்.









ஸ தர்மோ யத்ர நாதர்மஸ்தத்ஸுகம் யத்ர நாஸுகம் | 

தஜ்ஞானம் யத்ர நாஞானம் ஸா கதிர்யத்ர நாகதி: || 46 ||

Dharma is that where there is no Adharma. Happiness is that, where there is no un-happiness, knowledge is that, where there is no ignorance. Condition of existence is that, whence there is coming back (to the world).
எவ்விடத்தில் அறமற்ற தன்மையில்லையோ அங்கு அறம் இருக்கிறது. எங்கு துன்பமில்லையோ அங்கு இன்பமுள்ளது. எங்கு இனிதானதில்லையோ அங்கு இனிதுள்ளது. எங்கு அறியாமையில்லையோ அங்கு அறிவு உள்ளது. எங்கு பிறப்பு, இறப்பு இல்லையோ அங்கு விடுதலையுள்ளது.

அதாவது அறமற்றதன்மை, இனிமையற்றநிலை, அறியாமை போன்றவை இயல்புக்கு மாறானவை. அவை இயல்பு நிலையிலிருந்து வெளியேறும் போது தோன்றியவை. அவை இயல்பு நிலைக்கு திரும்பினாலே அறம், இனிமைத்தன்மை, முக்தி அனைத்தும் வெளிப்படும்.

ஆனால் ஆன்ம பயிற்சியை நம் இயல்பு நிலைக்கு திரும்பவே பயிற்சி செய்கிறோம். இயல்பற்றதிலிருந்து வெகுதூரம் வெளியேறியதால் வந்த விளைவுகள் துன்பங்களாகின்றன. இயல்பைத் தொலைத்து விட்டு இன்பத்திற்கான வழிதெரியாமல் அலைகிறோம் என்பதாக கூறுகிறார் ஆச்சாரியர்.








வார்த்தாதிபிர்விஷய லோல விசாரசூன்யம், க்லிஸ்நாஸி யன்முஹு ரிஹார்தபரிக்ரஹார்தம்: | 

தச்சேஷ்டிதம் யதி ஸக்குத் பரலோகபுத்த்யா ந ப்ராப்யதே நனு புனர்ஜனனாதி துக்கம் || 47 ||

Being entangled in enjoyments, (and therefore) thoughtless, thou art again and again made miserable by occupation, etc., to obtain wealth and other objects of this world. If thou under-goest the same trouble (even) once, intending to obtain liberation, then certainly thou wouldst never experience the pain of being again and again.
இன்ப அனுபவத்தில் சிக்கிக்கொண்டு சிந்தனையற்றவனாக இருப்பதால், இவ்வுலக செல்வத்தையும், பிற பொருட்களையும் பெறவேண்டி நீ மீண்டும் மீண்டும் தொழில் போன்றவற்றால் துயரத்தையே தேடிக்கொள்கிறாய். உலக இன்பத்திற்கான கடின உழைப்பை நீ ஒருமுறையேனும் விடுதலை வேட்கைக்காக செலவிடுவாயே யானால் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் பிறவித் துன்பம் அணுகாது ஒழியும் என்கிறார்.

இவ்வுலக இன்பத்திற்காக மேலும் மேலும் செல்வம் தேடுதலை விடுத்து அறச்சிந்தனையோடு காரியம் செய்வாயாக. அதற்கான உழைப்பின் விரயத்தை ஒருமுறை முக்திப்பாதையில் பயணிக்க முயற்சி செய்தால் பிறவிச்சுழலிருந்து விடுபட வழிவகை செய்யும் என்கிறார்.








சங்கல்ப்யே தமனிஷ்டமிஷ்ட மிதமிதயஞாத யாதாத்ம்யகோ, பாஹ்யோ வஸ்துனி கிம் வ்ருதைவ கமயஸ்யாஸஜ்ய காலம் முஹு: | 


அந்த: சாந்திமுபைஹி யாவததயப்ராப்தாந்தகப்ரஸ்புர- ஜ்ஜ்வாலா பிஷணஜாட ரானலமுகே பஸ்மீ பவேன்னோ பவான் || 48 ||

Ignorant of the true nature of things, considering some to be desirable and others undesirable, why dost thou waste thy time being often attached to external things again and again. Attain to internal peace to mind before you are reduced to ashes in the cruel and approaching Death’s abdominal fire, horrible with its leaping flames.
பொருட்களின் உண்மைத்தன்மையை அறியாது கையாள்வதினால் சில பொருட்கள் மீது விருப்பும், சில பொருட்கள் மிது வெறுப்பும் கொள்கிறாய். இவ்வாறு மாறிமாறி புறப்பொருள்கள் மீது பற்றும், வெறுப்பும் கொண்டு வாழ்நாட்களை வீணாக்குகின்றாய். நீ மரணத்தை தழுவி உடல்தீக்கிரையாகி சாம்பலாவதற்குள் மன அமைதியை தேடிக்கொள்.

“சாகிறவரையிலும் நீ திருந்தமாட்டாய்” என்று வீட்டில் பெரியோர்கள் கூறுவது போன்று அறிவுரையை அன்னியோன்யமாய் வழங்குகிறார் ஆச்சாரியர். பிற பொருள்களின் உண்மையான இயல்பினை அறியாமல் செல்வம், பதவி, ஆண்/பெண் முதலானவற்றை நல்லன வெனவும், தீயன எனவும் உணர்கிறாய். இவ்வாறு விருப்பு, வெறுப்பு எனும் மாயஉணர்வில் வாழ்ந்து பிறவியை வீணடிக்கிறாய். அந்த தவறான புரிதலில் உனதாயுளை கழிக்கிறாய். மரணம் தீண்டி மயானம் செல்லும் முன் வேட்கையை விலக்கி அந்த பொய்யுணர்விலிருந்து வெளியேறி விடு என்று அறிவுறுத்துகிறார்.









ஆயாதோSஸ்யதிதூரமங்க பரவான்சாஸரித் ப்ரேரித: கிம் நாவைஷி நனு த்வமேவ நிதராமேனாம் தரிதும் க்ஷம: | 


ஸ்வாதந்த்ரயம் வ்ரஜ யாஸி தீரம சிரோன்னோ சேத் துரந்தாந்தக க்ராஹவ்யாப்த கபீ ரவக்த்ர விஷமே மத்யே பவாப்தேர்பவே: || 49 ||

Oh friend! dependent upon external things (and) floating in the river of desire, thou hast come down from a long long distance. Dost thou not know that thou thyself art quite capable of crossing this river easily? Be independent, (and) thou shalt reach the shore very soon: otherwise, thou shalt founder in the ocean of existence, which is terrible, an account of the deep and wide-open mouth of the unvanquishable crocodile of death.
பிற பொருள்மீது கொண்ட ஆசை என்னும் நதி வெள்ளத்தில் விழ்ந்து வெகுதூரம் அடித்துச் செல்லபட்டிருக்கிறாய். அவ்வெள்ளத்திலிருந்து கரையேற ஆன்ம ஞானம் இன்றி வேறு எதுவுமில்லை. அந்த ஆற்றல் உன்னிடம் உள்ளதை அறிவாயோ. பற்றற்ற நிலையில் பிறபொருள் தொடர்பை விட்டு சுதந்திரமாய் இருக்க பழகிக்கொள். இல்லையேல் இந்த ஆசைநதியில் அடித்துச் செல்லப்பட்டு வாயைப்பிளந்தபடி காத்துநிற்கும் முதலைகளை கொண்ட கடலில் சென்று அகப்பட்டு அழிவாய் என்கிறார் முனிவர்.

ஆசையை விடு. பிறவிப்பெருங்கடலில் வீழ்ந்து மடியாமல் முக்தி யடையலாம் என்பதை ஆசையெனும் நதி பொருட்பற்றினால் அடித்துச் செல்லப்படும் வெள்ளமாக, உவமான நயத்தோடு கூறி, அந்நதி பிறவி எனும் கடலொடு கூடும் முகத்துவாரத்தில் வாழும் முதலையின் வாயில், பிறவிச்சுழலில், வீழ்ந்து மடிவாய் என்றும் கூறி விளக்குகிறார். அப்பொருட்பற்றிலிருந்து விடுதலைபெற ஆன்மவிழிப்புணர்வே வழிவகை செய்யும் என்ற உபாயத்தையும் தந்துதவுகிறார். அதுவே அந்தக் கடல் ஜலசந்தி வரை அடித்துச் செல்லாமல் கரைஏற வழி செய்யும் என்கிறார்.








ஆஸ்வாத் யாத்ய யதுஜ்ஞிதம் விஷயி பிர்வ்யாவ்ருத்த கெளதூஹலை ஸ்தத்பூயோப்ய விகுத்ஸயன்ன பிலஷஸ்யப்ராப்தபூர்வம் யதா | 


ஜன்தோ! கிம் தவ சாந்திர ஸ்தி ந பவான் யாவத்துரா சாமிமா, மம்ஹள் ஸம்ஹதி வீரவைரி ப்ருதனா ஸ்ரீவை ஜயந்தீம் ஹரேத் || 50 ||

Thou desirest now, without any revulsion (to pick up) again, as if thou hadst never tasted before, what has been discarded by the sensualists, after the satiety of enjoyment. Oh soul! Canst thou gain peace so long as thou dost not conquer this desire-evil which is the victory banner of the forces of (your) powerful enemy, the host of sins.
நீ இப்போது எந்தவொரு வெறுப்புமில்லாமல், சலிப்பும் கொள்ளாமல் மீண்டும் சுவைக்கத்தூண்டுபவைகளை இதற்குமுன் சுவைத்தறியாதவை போல வேட்கை கொள்கிறாய். கணக்கற்ற பிறவிகளில் இவற்றை அனுபவித்து சலித்துமிருக்கிறாய். கணக்கற்ற உயிர்களும் அவ்வாறே பலமுறை அனுபவித்தவைதான். இருந்தும் அதை நிராகரிக்க மனமில்லை. ஓ ஆத்மனே! பாவங்களே வெற்றிக்கொடிகளை கையிலேந்தி உனக்கு முன் சென்று கொண்டிருக்கிறது. அப்பாவங்களின் புரவலரான ஆசையை, தீமையை நீங்கள் வெல்லாதவரை அமைதியைப் பெறமுடியுமா?

பலபிறவிகளில் ஆசையினால் அனுபவித்து துயரடைந்து, சலித்த பதிவுகளை தீண்டும் ஆற்றலைப்பெறாதவரை நாம் புதிய உணர்வுகளைத் தேடி அம்மாயவலையில் வீழ்ந்து மடிந்து கொண்டுதான் இருப்போம். அப்பழம் பதிவுகளை தவவாழ்வை மேற்கொண்டு தியானித்து, பலபிறவிகளில் அவ்விருப்பு வெறுப்புகளால் பட்ட முற்பிறவி துயர அனுபவங்களை உணரும் ஆற்றல் பெறும் வரை நாம் மீண்டும் மீண்டும் விட்டில் பூச்சியைப் போல் அது பழம் என்று நினைத்து புலனின்பத் தீயில் வீழ்ந்து கொண்டிருப்போம் என்று அறிவுறுத்துகிறார்.








பங்க்த்வா பாவிபவாம்க்ஷ்ச போகிவிஷயமான் போகான் புபுக்ஷுர்ப்ருசம், ம்ருத்வாபி ஸ்வயமஸ்த பீதிகருண: ஸர்வஞ்ஜிகாம் ஸுரமுதா | 


யத்யத் ஸாது விஹர்ஹிதம் ஹதமதிஸ் தஸ்யைவ திக் காமுக காமகுரோத மஹாக்ரஹா ஹிதமனா: கிம் கிம் ந குர்யாஜ்ஜன: || 51 ||

Fie on the wretch who having lost fear (of the next world) and compassion, keenly desires sense-enjoyments, which are terrible like serpents, and having ruined his future lives, foolishly kills all (happiness) by himself, dying an(impious death), and who desires all the which is censured by the saints! What may not a person do, whose mind has been influenced by the demon of desire and anger.
பிறவிச் சுழற்சி பற்றிய பயமின்றி, இன்ப உணர்ச்சியின் மிது விருப்பத்தை வளர்த்து, கருணையின்றி, கருநாகத்திற்கொப்பான புலனுகர் போகங்களையே அனுபவிக்கும் தீய எண்ணங்களை உடையவனாய் வாழ்ந்து இழிவான மரணத்தைத் தழுவுகிறாய். காம, குரோதம் உள்ளவர்கள் எவற்றைச் செய்வதில்லை? தகாத செயல்கள் அனைத்தையும் செய்வர்.

முனிபுங்கவர்; புலனாசைகள் கருநாக விஷத்திற்கொப்பானது. அதில் அதிக நாட்டம் கொண்டு தீய செயல்களை செய்து துர்கதிகளுக்கான காரணிகளை கட்டிக்கொள்கிறாய். பிற உயிர்களிடத்தில் அச்சமின்றி வாழ்வது பல பிறவிகளுக்கு வித்திடும். வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய பொருள்களை தியாகம் செய்யாமல் அவற்றின் மீது பெருவிருப்பம் கொள்கிறாய். ஆசை, கோபத்தினால் தகாத செயல்களை செய்து துன்பத்தில் சிக்கித்தவிக்கிறாய். இம்சை, பொய், களவு, ஒழுக்கமின்மை போன்ற கஷாய உணர்வுகளே தீய செயல்களை செய்ய தூண்டி விடும் வேராகும் என்பதை உணர்ந்து செயல்படு என்கிறார்.







ஸ்வோ யஸ்யாஜனி ய: ஸ ஏவ திவஸோ ஹயஸ்தஸ்ய ஸம்பத்யதே, ஸ்தைர்யம் நாம ந கஸ்யசிஜ்ஜகதிதம்காலானிலோன்மூலிதம் | ப்ராதர்ப்ராந்திமபாஸ்ய பஸ்யஸி தராம் ப்ரத்யக்ஷ மக்ஷ்ணோர்ன் கிம், யேனாத்ரைவ முஹுர்முஹுபஹுதரம் பத்தஸ் ப்ருஹோ ப்ராம்யஸி || 52 ||


That same day which appears as to-morrow for one, becomes yesterday for him. Nothing can be called stable. This world is being uprooted by the wind of time. Oh brother, having given up delusion, why dost thou not see what is visible to thy eyes. By not doing so, thou, mainly a bondsman of desire, wanderest again and again, in this very world.
ஒருவருக்கு நாளை என்பது கற்பனையாக இருந்தது பின்னர் நேற்று என்பதாக கடந்து விடுகிறது. எதுவுமே நிலையாய் இருப்பதில்லை. உலகம் காலம் எனும் புயல் காற்றால் அடியோடு பிடுங்கி எறியப்படுகிறது. ஏ சகோதரா! இவ்வுலகில் நீ காண்பவை எல்லாம் ஒருநாள் காணாமல் போய்விடும் ஆதலால் உனது பிரேமையை விடு. நீயோ ஆசையில் கட்டுண்டதனால் உலகில் இங்கும் அங்குமாய் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாய்.

காலத்தின் வலிமையை இச்செய்யுளில் கூறுகிறார். எதுவானாலும் இவ்வுலகில் நிலையாய் இருப்பதில்லை. மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அனைத்துமே காலப்புயலால் அவ்வப்போது அடியோடு மாற்றப்படுகிறது. காண்பவை எதுவும் ஒரே நிலையில் நிலைப்பதில்லை காலச்சக்கரத்தின் ஒருபுள்ளியில் கட்டியது போன்று சுழன்று கொண்டே இருக்கிறது. நேற்று குழந்தையாய் இருப்பவன், இன்று இளைஞனாகிறான். பின்னர் நாளை முதுமை வந்து அவனை அழித்துச் செல்கிறது. அதேபோல் விதை மரமாகிறது, ஒருநாள் அதுவும் காலம் எனும் சுழல்காற்றினால் அடியோடு வீசி எறியப்படுகிறது.

காண்பவை அனைத்தையும் அதன் ஆயுளின் முடிவு வரை அழைத்துச் செல்லும் வல்லமை காலத்திரவியத்திற்கு உண்டு. அதனால் இது நிலையாக என்னிடம் இருக்கும் என்ற பிரேமையை விடு. உனது பற்றுள்ளத்தினால் எதையும் சிறைப்பிடிக்க இயலாது. அதனால் இந்த நிலையில்லா வாழ்வில் ஆசைகொள்ளாது அவ்வப்போது வரும் சுகத்தை அனுபவித்து நிரந்தர சுகத்திற்கான வழியில் பயணிக்க முயற்சி செய் என்று அறிவுறுத்துகிறார்.

இவ்வுலகில் காலம், விதி, இயற்கைதன்மை, வினைக்கட்டு இவற்றை எவராலும் வெல்லவோ, மாற்றவோ இயலாது. அதன் வழியில் குறுக்கிடாமல் வாழ்க்கை எனும் நீரோடை ஓடும் திசையில் மூழ்கிடாமல் அறசார்ந்த முயற்சியுடன் நிந்திச் செல்வதே உத்தமம் என்கிறார்.









சம்சாரே நரகாதிஷு ஸ்ம்ரு திபதேப் யுத்வே காரிண்யலம் து: கானி, பிரதிஸேவிதானி பவதா தான்யேவமேவாஸதாம் | 

தத்தாவத்ஸ்மர் ஸஸ்மரஸ்மிதசிதாபாங்கை ரனங்காயுதை ர்வாமானாம் ஹிமதக்திமுக்த தருவத்யத்ப்ரா ப்தவான் நிர்தன: || 53 ||

In this world you have suffered many miseries in hell and elsewhere, so much that even their recollection is excruciating. Let them be just as they are. Dost thou then remember that, like a young sapling blasted by frost, thou art made a pauper by the piercing giances and lovely smiles and females, (which are the) weapons of Cupid.
இவ்வுலகில் நரகமென எல்லா இடங்களிலும் துன்பங்களையே அனுபவிக்கிறாய். அதை நினைத்தாலே துயரமே மேலோங்குகிறது. அப்படி இருக்கும் போதும் நீ ஏழ்மையிலிருந்தாலும் எல்லா பொருள்களையும் அனுபவிக்கவே ஆசை கொள்கிறாய். துளிர்விடும் சிறுகொடியினை மூடுபனி நாசம் செய்வதுபோல மன்மத பானமாக பெண்களின் காமப்பார்வையும், புன்னகையும் உன்னை வறியவனாக மாற்றிவிடுகிறது. இதனை எண்ணிப்பார்.

உலகில் இன்பத்தினை அலைந்து பெற்றாலும் அது விரும்பிய அளவிலும் இருப்பதுமில்லை; எப்போதும் நிலைத்திருப்பதுமில்லை. அதனால் நிம்மதியும், திருப்தியுமின்றியே வாழ்கிறாய். கானல் நீரை ஊற்று என தேடி ஓடி ஏமாந்த மானைப்போல துன்பத்தையே பெறுகிறாய்.

யானை உடற்சுகத்தினை தணிக்க பெண்யானை மீது வேட்கை கொண்டு மூடிய பள்ளத்தில் வீழ்ந்து பிடிபட்டு காலம் முழுதும் துன்புறுகிறது. மீனோ சுவைபுலனின் வேட்கையினால் தூண்டில் புழுவை விழுங்கி அகப்பட்டு இரையாகிறது. மாலைவேளையில் வண்டானது தாமரைமலரின் மகரந்தமணத்தை மூக்கினால் நுகர்ந்து தேடி அமர்கிறது. அது தேனை உறிஞ்சி மயங்கியபோது, சூரிய அஸ்மனத்தால் மலர் மூடிக்கொள்ள உள்ளே அகப்பட்டு உயிரை இழக்கிறது. (ஓரு விந்தை என்ன வெனில் கடும் மரப்பலகையை துளைக்கும் வண்டு மலரில் தேனை உண்டு மலர் மூடியபின்னும் மயங்கியதால் பலமிழந்து மடிவது இயற்கை)

விட்டில் பூச்சி கண்ணில் ஒளிபுகுந்த வேட்கையில் விளக்கின் சுடரை பழமென நினைத்து வீழ்ந்து அழிகிறது. அசுணமா எனும் பறவையோ செவிவழி கேட்ட வேடுவனின் இசைக்கு மயங்கி அவனிடம் பிடிபட்டு அழிகிறது. தொடக்கமில்லாக் காலங்களாக ஐம்பொறி உயிர்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வகையில் துன்பத்தையே நுகரச் சென்று அழிகின்றன. இவ்வுலக வாழ்வில் வேட்கை கொண்டு பிறவிச் சுழற்சியில் சிக்கி நகரம், நிகோதம் என மிகுந்த துன்பங்களையே அனுபவிக்கின்றன.

விரகதாபத்தில் வீழ்ந்த விலைமாதர்களின் கடைக்கண்பார்வையில் காம தாகத்தால் பீடிக்கப்பட்டு உறைபனியில் மாட்டி கருகிய செடிகள் போன்று துன்புறுகிறான் மனிதன்.

அதனால் புலன் இன்ப விழைவை தியாகம் செய்து, உண்மை சுகத்திற்கு வித்திடும் விருப்பு வெறுப்பட்ட உணர்வு கொள்ள வேண்டும் என்கிறார்.






உத்பனோSஸ்யஸிதோஷதாது மலவத்தேஹோஸி கோபாதிவான் ஸாதிவ்யாதிரஸி ப்ரஹிணா ரிதோSஸ்யஸ்யஸ்யாத்மனோ வச்சக: |


ம்ருத்யுவ்யாத்த முகாந்தரோஸி ஜரஸா க்ராஸ்யோஸி ஜன்மின்! வ்ருதா, கிம் மத்தோSஸ்யஸி கிம் ஹிதாரிரஹிதே கிம் வாஸி பத்தஸ்ப்ருஹ: || 54 ||

O! living being thou hast taken birth; thou hast assumed a body full of defects and blood and bones, etc.; thou art subject to anger, etc., thou art subject to physical and mental suffering; thy character is very bad, thou art a cheat to thy soul; thou art lying in the wide-open mouth of death; thou art in the clutches of age. Oh why art thou deluded? Why art thou an enemy to thy own good? And why hast thou fixed thy desires on unwhole-some things?
ஓ! நீயோ ஜீவனாய் பிறவி எடுத்துள்ளாய்; எலும்பும், ரத்தமுமாய் பலகுறைபாடுகளை கொண்ட உடலை நீ என்றே கருதுகிறாய். நீ கோபஉணர்வுக்கு ஆட்பட்டவன்; நீ உடல் மற்றும் மன துயரங்களுக்கு ஆளானவன்; உன் உள்தன்மையோ மிகவும் மோசமானது: நீயே உனது ஆன்ம-சொந்த-நலனுக்கு பகைவனாய் இருப்பது ஏன்? உனது ஆயுட்காலத்தின் பிடிக்குள்ளும், மரணத்தின் வாயிலிலும் எப்போதும் சிக்கியுள்ளாய். சில விஷயங்களில் ஆசையை வளர்த்து உனது நன்மைக்கே நீ ஏன் எதிரியாய் உள்ளாய்.

பிறவி உயிராகிய சம்சார ஜீவன் பலவேறு பிறவிகளில் சிக்கி வெவ்வேறு உடல்களைப் பெறுகிறது. பலபிறவிகளில் ஊனத்துடனும் வாழ்ந்துள்ளது. அத்தனை பிறவிகளில் தான் எடுத்த ஊனும் சதையும் நாற்றமும் கொண்ட உடலையே தனதென எண்ணி காரியமாற்றுகிறது. அதனால் நரககதிக்குச் சென்று பட்ட துன்பங்களை சொல்லி மாளாது. தேவர் உலகில் உடல்நோய்கள் இல்லையானாலும் மனநோயான துயரத்திற்கு பஞ்சமில்லை. மனித, விலங்குப் பிறவியிலும் உடலானது வாதம், பித்தம், கபம் போன்றவற்றின் விகிதாச்சாரம் மாறிமாறி பல நோய்களுக்கு ஆளாகி வலிகளுக்கே ஆட்படுத்துகிறது. அதனால் மன வேதனைக்கும் குறைவேயில்லை.

இவ்வுயிர் உடலுடன் சேர்ந்துள்ளதால் இந்த நான்கு கதியிலும் தானும் துன்புற்று, கருணையற்று பிற ஜீவன்களுக்கும் துன்பத்தையே தருகிறது. உணர்வில் பொய்யும், களவும், காமமும், கடும்பற்றும் கொண்டு பாப காரியங்களையே செய்து மகிழ்ச்சியற்று வாழ்வதோடு பல பிறவிகளுக்கு வித்திடுகிறது. ஆன்மனே, அவ்வாறான இவ்வுடல்களின் மீது பற்று கொண்டு நட்புடன் இருப்பது ஏன்? இவ்வுணர்வே உனக்கு பல கதிகளை தந்து பிறவிச்சக்கரம் போன்று அமைந்து பல துன்பசுழற்சிக்கு ஆட்படுத்துகிறது.

ஆன்மனே உன்னை நீ ஆறியாமல் பல பிறவிகளில் உடலுடன் உழல்கின்றாய். இவ்வுடல் தனித்து இயங்குவதில்லை. உன்னுடன் சேர்ந்து சொற்ப இன்பத்தை அளித்தாலும், அதிக துன்ப உணர்ச்சிகளையே அளிக்கிறது. இனியாவது குரு உபதேசத்தை ஏற்று, உடல்மீது கொண்ட நேசத்தை விட்டு விடு. நீ உடலல்ல ஆன்மனே என்பதறியாமல் உனக்கு நீயே பகைவனாய் உடலுக்கு உயிரூட்டம் தந்து கொண்டிருக்கிறாய். உடல் வேறு, நீ வேறு என்பதை உணராமல் துன்பத்தில் உழல்கிறாய். இவை யனைத்தும் உன் மனதில் தோன்றிய விருப்பு வெறுப்புகளால் விளைவன. அகப்பற்றுக்களை கடந்து விடு, உன்னை- ஆன்மனை மட்டுமே நேசி.





  


கிம் மர்மாண்யபினன்ன பிசுரதரோ துஷ்கர்மகந்முத்கண:, 

கிம் துக்கஜ்வலநவளீ விலஸி தைநெளலேடி தேஹச்சிரம் | 
கிம் கர்ஜத்யமதூர்பைரவ ரவான்னா கர்ணயந்நிர்ணயம், 
யேனாயம் ந ஜஹாதி மோஹவிஹிதாம் நித்ரா மபத்ராம் ஜன: || 57 ||

Has not the exceedingly frightful mace of sinful actions torn the vital parts? Has the body not been licked since long, by the flames of the fires of pain? Has he no veritably heard the terrible sound of the bugles of death. Why then does this man not give up the harmful sleep, caursed by delusion.
தீவினைக்குரிய பாவச் செயல்கள் செய்தவனின் பரமாந்திரத்தை(தலைப்பகுதியை) தண்டாயுதம் கொண்டு கிழித்தெறியவில்லையா? நீண்ட காலமாக அவன் உடல் துன்பமென்னும் தீயினால் சுட்டெரிக்கப்படவில்லையா? சாவுமணியோசை உள்ளுக்குள் எப்போதும் ஒலிப்பது கேட்கவில்லை? பின்பு ஏன் (இத்துன்பத்திற்கு காரணமான) மோக மயக்கத்திலிருந்து விழித்தெழவில்லை?

தூங்குகின்ற ஒருவனை தடியால் அடித்தாலும், நெருப்பினால் சுட்டாலும், பெரும்ஓசை கேட்டாலும் விழுத்துக் கொள்வான். அவனது உடலை வலிக்கச் செய்து விழித்தெழச் செய்கிறது.

ஆனால் ஆசையெனும் மோகத்தினால் பாவச்செயல்களைச் செய்து தீவினையை தேடியவன், நரகத்தில் விழ்ந்து பெரும் துன்பத்தை அடைவான். எவ்வாறெனின் அதோலோகத்தில் தூங்குகின்ற பாவியானவனை பிரமாந்திரத்தில் (தலையில்) கதாயுத்தால் அடித்து கிழித்தெறியப்படும்போது அவனது வேதனை எவ்வாறிருக்கும். அவர்கள் தண்டாயுத்தால் அடித்து துன்புறுத்தப்படுவார்கள். உடலை நெருப்பினால் சுட்டு மாய்க்கச்செய்து மறுபடி உயிர் பெறச்செய்து மீண்டும் தீயினால் பொசுக்கப்படுவார்கள். பெரும் வலியும், வேதனைகளையும் தினம் தினம் க்ஷனத்திற்கு க்ஷனம் சந்திப்பர். மேலும் தினம் தினம் மரணிக்கும் துன்பத்தை அனுபவிப்பதால் அவனுள் போர்சங்கொலி போன்ற அச்சுறுத்தும் மரணஓசை உள்ளுக்குள் கிலியை ஏற்படுத்தி விழிப்படையச் செய்துகொண்டே இருக்கும். (இந்நிலை நம் தேசத்தின் எல்லையில் வாழ்பவர்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். முன் தலைமுறையில் வியட்நாமியர் அந்த கிலியுடன் கூடிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்தனர்.)

இவையனைத்தும் அவரவர் ஆழ்மனதில் பலபிறவிகளால் ஏற்பட்ட வடுக்கள் என்பதையே மறைபொருளாய் தெரிவித்திருக்கிறார். அவரது ஆழ்நிலை தியானத்தில் உணரந்தவையே அவையனைதும் என்பதை அவ்வரிகளில் மறைபொருளாய் கூறுகிறார் ஆச்சார்யஸ்ரீ.

அதனால் அப்பாவச்செயலுக்கு காரணமான மோகமயக்கத்திலிருந்து விழித்தெழுவாயாக என்று நம்மை எச்சரிக்கிறார்.

------------------------------

மறுபிறவிக் கொள்கையில் நம்பிக்கையுள்ள மதங்கள்; சொர்க்க, நரக வாழ்க்கைப் பற்றிய விளக்கங்கள் ஆகமங்களில் குறிக்கப்படுகின்றன. அதில் ஊர்த்துவ எனும் தேவப்பகுதி வாழ்வு மனிதவாழ்வை விட சுகம் கூடுதலாகவும், அதோலோகத்தில் (அதோகதி என்றும் பெரியோர்கள் பேசும் போது கூறுவார்கள்) நரக வாழ்க்கை, மிகவும் துன்பத்தை வேதனையின் வடிவாக அனுபவிப்பர் என்றும் குறிப்புக்களை தருகின்றார்கள்.

அதாவது மனம், மெய், மொழி வழிச்செயல்பாடுகளே உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு அவ்வப்போது தண்டனையும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் பதிவிடப்படுவதாக முற்காலப்பெரியோர்கள் நம்பிக்கையளவில் வாழ்ந்துள்ளார்கள். அவை உண்மைதான் என்று பல மகாபுருஷர்களும் தெளிவான விளக்கங்களாக வினைக்கொள்கை வடிவில் தந்துள்ளார்கள்.

இவ்வுலக வாழ்விலும் நரகவேதனையை உலகெங்கும் வாழும் மனிதர்கள் வாழ்வினை ஒப்பிட்டு பார்த்தால் நன்கு புலப்படும். “மண்டையை பிச்சுக்கிட்டு அலையறேன்”. “அப்..பா… மண்டையே சுக்குநூறாய் உடைச்சுடும் போல வலிக்கிறது” “உன்னோட இருக்கிறதுக்கு சுண்ணாம்புக்காளவாயில குடுத்தனம் பண்ணலாம்” “இவ்வளவுநாளா நெருப்பில வாழ்ந்தே(ன்) இப்போ? தீயில விழப்போகிறேன்” “இப்ப என்ன சொல்லிட்டேன்னு, ஏ இப்படி சிடுசிடுங்கற (சுடுசொல்லால்..) “மூஞ்சில முள்ளை விட்டெறியற” “எனக்கு இன்னிக்கு சங்குதான்” இதுபோன்ற மனவலியின் உச்சத்தின் வேதனைவரிகள் பல்லாயிரம் எழுதலாம் தானே! தனியா ஒரு நரக வேதனை வேறு இருக்க வேண்டுமா என்ன?

இக்காலத்தில் பலருக்கும் மத்மலோகமே அதோகதி தான்.

இவையனைத்தும் ஆசைக்காரணிகளால் ஏற்பட்ட வேதனைகளின் வெளிப்பாடுகளே என்பதை உணரவேண்டும் என்பதையே அத்மானுசாசன நூற்பாக்கள் தெரிவிக்கின்றன.








ததாத்மயம் தனுபி: ஸதானுபவனம் பாகஸ்ய துஷ்கர்மணோ,

 வ்யாபார: ஸமயம் ப்ரதி ப்ரக்ருதிபிர்காடம் ஸ்வயம் பந்தனம் |
 நித்ரா விஸ்ரமணம் ம்ருதே: ப்ரதிபயம் சச்வந்ம்ருதிச்ச த்ருவம், 
ஜன்மின! ஜன்மனி தே ததாபி ரமஸே தத்ரைவ சித்ரம் மஹத் || 58 ||

Thou art identified with the bodies; always dost thou experience the fruition of pain-bearing Karmas: thy business is to be closely bound, of thy own accord, at every moment, by the Karma Prakritis, ie Karmic matter. Thou feelest rest in sleep; art ever fearful of death, and death is always certain. Oh living being, dost thou still take pleasure in birth. It is this which is very strange.
உடல்களுடன் நீ அடையாளம் காணுகிறாய்; வேதனையைத் தரும் கர்மங்களின் பலனை நீ எப்போதும் அனுபவிக்கிறாய்: உன் வாழ்க்கை ஒவ்வொரு தருணத்திலும், கர்ம பிரகிருதிகளால், அதாவது கர்ம பந்தத்தினால் நெருக்கமாக பிணைக்கப் பட்டிருக்கிறது. நீ தூக்கத்தில் நிதானமாக இருக்கிறாய்; (விழித்தால்) எப்போதும் மரணத்திற்கு பயப்படுகிறாய், ஆனால் மரணம் என்றும் நிச்சயம். ஓ ஆன்மனே, பிறந்து கொண்டிருப்பதிலேயே நீ இன்பம் பெறுகிறாயா? இது மிகவும் விசித்திரமானது.

பிறவிச் சுழற்சியில் ஆட்பட்டிருக்கும் உயிர்கள் உண்மையில் பல துன்பங்களை அனுபவிக்கின்றன. இந்தப்பிறவியில் துன்பங்களை பெற்றாலும் நீ பிறக்கும் வாழ்வையே நேசிக்கிறாய். துன்பக்காரணிகளை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. துன்பமாகிய பிறவிக் கடலில் இன்ப விளையாட்டில் ஈடுபட விரும்புகிறாய். அதற்காக பல விஷயங்களில் ஈடுபடுகிறாய். ஆனால் உன் உடலே துன்பமயமானது. அதிலிருந்து விடுதலை யடைவதை விரும்புவதே மிகச் சிறந்தது.

தந்தையின் வீர்யம் தாயின் குருதி இவற்றிலிருந்து தோன்றியது இவ்வுடல். அது தாயின் கர்ப்பத்தில் பத்து திங்கள் வெப்பத்திற்கிடையே தலைகீழாகவும் இருந்து துன்பப்படுகிறது. பிறக்கும் போது துன்பத்திற்கு ஆளாகிறது. குழந்தைப் பருவத்தில் சுகம் என்பதை உணர முடிவதில்லை. இளமைப் பருவத்தில் காமம், சினம், செருக்கு, மாயை, லோபம், மோகம் என தீய உணர்வுகளால் சிறைபட்டு எப்போதும் மனம் சஞ்சலத்தில் ஆழும். முதுமையிலோ உடல் மிகவும் தளர்ந்து செயல்திறனை இழந்து விடுகிறது. எந்தப் பருவத்தையும், சுகமான தருணத்தையும் நிறுத்தவும் முடிவதில்லை, அதே சமயம் துன்பத்தை அனுபவிக்காமல் கடக்கவும் முடியாது. இவையே இம்மனிதப் பிறவி.

தேவப்பிறவியில் உடல் இன்பத்தை பெற்றாலும் மானசீகமாய் பெரும் துன்பங்கள் தோன்றுகின்றன. குறைந்த ஆற்றலுடன் தோன்றிய தேவர் அதிக ஆற்றலுடைவருக்கு அஞ்சி வாழ நேருகிறது. பிற தேவர், தம் தேவியின் மரணம் கண்டு வேதனைப்படுவதோடு, தங்கள் ஆயுள் முடியும் காலத்தை முன்னரே உணரும்போது (ஆற்றலை கொண்டதால்) பெரும் துயரத்திற்கு ஆட்படுகிறது அத்தேவப்பிறவி. அத்துன்பம் அதுவரை அனுபவித்த இன்பங்களை விட பலமடங்கு அதிகமானது.

விலங்கு கதியில் பிராணிகள் படும் துன்பங்களை கண்கூடாகக் காணுகிறோம். அதனை கூறவும் வேண்டுமோ..

நரக கதியோ துன்பத்தின் உச்சபூமி வாழ்க்கை. அங்கு அனுபவிப்பதோ விவரிக்க இயலாதது. உடலை கோடரியால் வெட்டப்பட்டும், கடப்பாரையால் குத்தி துளைப்பதும், கொதிக்கும் எண்ணையில் போட்டு காய்ச்சியதால் உண்டாகும் சித்ரவதையின் வலி, வேதனையை உச்சத்தை அடைந்தாலும் அவ்வேளையில் மரணிக்காமல், முழு ஆயுளும் முடியும் வரை அனுபவித்தே தீரவேண்டும். எத்தனை துண்டுகளாக உடல் வெட்டப்பட்டாலும் திரும்பவும் கூடி அடுத்த சித்ரவதைக்கு ஆளாக வேண்டிவரும். துர்நாற்றமுடைய அந்த நரக வாழ்வின் துன்பத்தை ஒப்பிட்டுச் சொல்ல பிரபஞ்சத்தில் வேறிடம் எதுவுமில்லை.

இவ்வாறு நான்கு கதிகளில் சுழன்று துன்பத்தை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதே வழக்கமாகிறது. தீவினை கழியும் வேளையில் துன்பத்தை அனுபவித்தாலும், மீண்டும் சேர்த்துக் கொள்வதும்/ உதயமாவதுமாய் பிறவிச் சுழ்ற்சி சுழல்கிறது. இடைப்பட்ட காலத்தில் கிடைக்கும் சொற்ப இன்பத்தை நாடுவதோ வியப்பை உண்டாக்குகிறது. இத்துன்பச்சுழற்சி கதியிலிருந்து வெளியேறி நிரந்தர சுகத்திற்கான வழியை அறிந்து அதனை ஏற்று வாழத்துவங்கு என அறிவுறுத்துகிறார், முற்பிறவிகளை உணரும் ஆற்றலைப் பெற்ற அம்மாமுனிவர்.







ததாத்மயம் தனுபி: ஸதானுபவனம் பாகஸ்ய துஷ்கர்மணோ, 

வ்யாபார: ஸமயம் ப்ரதி ப்ரக்ருதிபிர்காடம் ஸ்வயம் பந்தனம் | 

நித்ரா விஸ்ரமணம் ம்ருதே: ப்ரதிபயம் சச்வந்ம்ருதிச்ச த்ருவம், 
ஜன்மின! ஜன்மனி தே ததாபி ரமஸே தத்ரைவ சித்ரம் மஹத் || 58 ||
Thou art identified with the bodies; always dost thou experience the fruition of pain-bearing Karmas: thy business is to be closely bound, of thy own accord, at every moment, by the Karma Prakritis, ie Karmic matter. Thou feelest rest in sleep; art ever fearful of death, and death is always certain. Oh living being, dost thou still take pleasure in birth. It is this which is very strange.
உடல்களுடன் நீ அடையாளம் காணுகிறாய்; வேதனையைத் தரும் கர்மங்களின் பலனை நீ எப்போதும் அனுபவிக்கிறாய்: உன் வாழ்க்கை ஒவ்வொரு தருணத்திலும், கர்ம பிரகிருதிகளால், அதாவது கர்ம பந்தத்தினால் நெருக்கமாக பிணைக்கப் பட்டிருக்கிறது. 

நீ தூக்கத்தில் நிதானமாக இருக்கிறாய்; (விழித்தால்) எப்போதும் மரணத்திற்கு பயப்படுகிறாய், ஆனால் மரணம் என்றும் நிச்சயம். ஓ ஆன்மனே, பிறந்து கொண்டிருப்பதிலேயே நீ இன்பம் பெறுகிறாயா? இது மிகவும் விசித்திரமானது. 

 பிறவிச் சுழற்சியில் ஆட்பட்டிருக்கும் உயிர்கள் உண்மையில் பல துன்பங்களை அனுபவிக்கின்றன. இந்தப்பிறவியில் துன்பங்களை பெற்றாலும் நீ பிறக்கும் வாழ்வையே நேசிக்கிறாய். துன்பக்காரணிகளை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. 

துன்பமாகிய பிறவிக் கடலில் இன்ப விளையாட்டில் ஈடுபட விரும்புகிறாய். அதற்காக பல விஷயங்களில் ஈடுபடுகிறாய். ஆனால் உன் உடலே துன்பமயமானது. அதிலிருந்து விடுதலை யடைவதை விரும்புவதே மிகச் சிறந்தது. 

 தந்தையின் வீர்யம் தாயின் குருதி இவற்றிலிருந்து தோன்றியது இவ்வுடல். அது தாயின் கர்ப்பத்தில் பத்து திங்கள் வெப்பத்திற்கிடையே தலைகீழாகவும் இருந்து துன்பப்படுகிறது. 

பிறக்கும் போது துன்பத்திற்கு ஆளாகிறது. குழந்தைப் பருவத்தில் சுகம் என்பதை உணர முடிவதில்லை. இளமைப் பருவத்தில் காமம், சினம், செருக்கு, மாயை, லோபம், மோகம் என தீய உணர்வுகளால் சிறைபட்டு எப்போதும் மனம் சஞ்சலத்தில் ஆழும். முதுமையிலோ உடல் மிகவும் தளர்ந்து செயல்திறனை இழந்து விடுகிறது. 

எந்தப் பருவத்தையும், சுகமான தருணத்தையும் நிறுத்தவும் முடிவதில்லை, அதே சமயம் துன்பத்தை அனுபவிக்காமல் கடக்கவும் முடியாது. 

இவையே இம்மனிதப் பிறவி. தேவப்பிறவியில் உடல் இன்பத்தை பெற்றாலும் மானசீகமாய் பெரும் துன்பங்கள் தோன்றுகின்றன. குறைந்த ஆற்றலுடன் தோன்றிய தேவர் அதிக ஆற்றலுடைவருக்கு அஞ்சி வாழ நேருகிறது. 

பிற தேவர், தம் தேவியின் மரணம் கண்டு வேதனைப்படுவதோடு, தங்கள் ஆயுள் முடியும் காலத்தை முன்னரே உணரும்போது (ஆற்றலை கொண்டதால்) பெரும் துயரத்திற்கு ஆட்படுகிறது அத்தேவப்பிறவி. 

அத்துன்பம் அதுவரை அனுபவித்த இன்பங்களை விட பலமடங்கு அதிகமானது. விலங்கு கதியில் பிராணிகள் படும் துன்பங்களை கண்கூடாகக் காணுகிறோம். 

அதனை கூறவும் வேண்டுமோ.. நரக கதியோ துன்பத்தின் உச்சபூமி வாழ்க்கை. அங்கு அனுபவிப்பதோ விவரிக்க இயலாதது. 

உடலை கோடரியால் வெட்டப்பட்டும், கடப்பாரையால் குத்தி துளைப்பதும், கொதிக்கும் எண்ணையில் போட்டு காய்ச்சியதால் உண்டாகும் சித்ரவதையின் வலி, வேதனையை உச்சத்தை அடைந்தாலும் அவ்வேளையில் மரணிக்காமல், முழு ஆயுளும் முடியும் வரை அனுபவித்தே தீரவேண்டும். 

எத்தனை துண்டுகளாக உடல் வெட்டப்பட்டாலும் திரும்பவும் கூடி அடுத்த சித்ரவதைக்கு ஆளாக வேண்டிவரும். 

துர்நாற்றமுடைய அந்த நரக வாழ்வின் துன்பத்தை ஒப்பிட்டுச் சொல்ல பிரபஞ்சத்தில் வேறிடம் எதுவுமில்லை. 

 இவ்வாறு நான்கு கதிகளில் சுழன்று துன்பத்தை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதே வழக்கமாகிறது. தீவினை கழியும் வேளையில் துன்பத்தை அனுபவித்தாலும், மீண்டும் சேர்த்துக் கொள்வதும்/ உதயமாவதுமாய் பிறவிச் சுழ்ற்சி சுழல்கிறது. இடைப்பட்ட காலத்தில் கிடைக்கும் சொற்ப இன்பத்தை நாடுவதோ வியப்பை உண்டாக்குகிறது. 

இத்துன்பச்சுழற்சி கதியிலிருந்து வெளியேறி நிரந்தர சுகத்திற்கான வழியை அறிந்து அதனை ஏற்று வாழத்துவங்கு என அறிவுறுத்துகிறார், 

முற்பிறவிகளை உணரும் ஆற்றலைப் பெற்ற அம்மாமுனிவர்.







அஸ்தி ஸ்தூல துலா கலாப கடிதம் நத்தம் சிராஸ்னாயுபி- ச்சர்மாச்சாதிதமஸ்ர ஸாந்திரபி ஸிதைர்லிப்தம் ஸுகுப்தம் கலை: | 


கர்மாராதி பிராயுருத்கனிகலாலக்னம் ஸரீராலயம், 
காராகார மவைஹி தே ஹதமதே பிரீத்திம் வ்ருதா மா க்ரதா || 59 ||

Know the body of thine to be a prison house, built of a number of thick bones as stone pillars, fastened by nerves and muscles, covered over with skin, plastered with wet flesh, well-protected by its wicked enemies, the Karmas, and closed by strong barriers of age-Karmas. O Bereft of wisdom! Have no foolish love for it.
நம்முடைய உடல் ஒரு சிறை வீடு என்று அறிந்து கொள்ளுங்கள், பல தடிமனான எலும்புகள் கொண்டு கற்தூண்களாக கட்டப்பட்டு, நரம்புகள் மற்றும் தசைகளால் பிணைக்கப்பட்டு, குருதி எனும் ஈரமான சதைடன் பூசப்பட்டு தோலால் மூடப்பட்டிருக்கும். 

இவ்வுடலை அதன் பொல்லாத எதிரிகளான கர்மாக்களால் நன்கு பாதுகாக்கப்படுகிறது. ஆயுட்கர்மங்களின் வலுவான மதிர்சுவர்களால் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஞானத்தை இழந்தவர்களே! அதன் மீது முட்டாள்தனமான அன்பு வேண்டாம் என நமது அறியாமையை சுட்டி ஆதங்கப்படுகிறார். 
----------------------------------

 உடல் ஒரு சிறை என்பதை: “எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை இரத்தம் இல்லை.” என்பது அக்கால முதுமொழி, அதாவது அறச்சிந்னை அற்ற உடல் என்கிறார் ஒரு சித்தர். 

-- -- 

"எட்டடிக் குச்சுக்குள்ளே எத்தனை நாளிருப்பேன்” என்பது ஒரு பழம் பாடல். *நம் ஆத்மா இந்த எண் ஜாண் உடம்பில் எத்தனை ஜன்மம் ஜன்மமாக பிறந்து இறந்து பிறந்து கஷ்டப் படுகிறது?!* 
ஆன்ம தரிசனம் கிடைக்கவில்லை என்பதை தெரிவிக்கும் ஆன்ம சாதகனின் கூற்று. 

குருவை சேர்ந்து தவம் செய்தால் மச்சுவீடு என்று பாடல் செல்கிறது. 

*அதுதான் நம் உடலாகிய மச்சு - மாடி!* குடியிருந்தால் வளமாக என்றும் வாழலாம் என்பதே இதன் ஞானப்பொருள்! 

“எட்டடி குச்சி போட்டுக்கலாம், இழுத்து உள்ளே பூட்டிக்கலாம். கொற்றவன் வந்தால்?” என்றும் ஒரு ஆன்ம சாதகன் பாடியுள்ளார். 


“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.” 

இது குந்த குந்தரின் குறள் எனும் ஏழுசொற்பாடல். உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தினான் வரும். 

ஆதலால் அவ்வன்பில்லாதார்க்கு உளதாவது என்பின்மேல் தோலினால் போர்க்கப்பெற்ற உடம்பு என்றவாறு, (அதாவது இது வீடு பெறார் என்றவாறு). என்பது மணக்குடவர் உரை. 

அன்பில்லாதவன் உயிர் இருந்தும் இல்லாதவன் ஆவான். 

அன்பில்லாதவனிடத்தில் அறச்சிந்தனை வருவதில்லை. அதற்கான செயலுமில்லை. அன்பே உயிர்; அன்பின் வழியாகத்தான் உயிர் உடம்பில் நிலைத்திருக்கிறது; அன்பில்லாதவர்கள் எலும்பைத் தோலால் போர்த்திய வெறும் உடம்பைக் கொண்டவர்கள்தாம் என்கிறது இக்குறள். 

மாந்தரின் உடம்பு இரண்டுவகையாகப் பிரித்துப் பேசப்படுகிறது. ஒன்று உயிர் நிற்கும் உடம்பு. மற்றொன்று உயிர் நில்லா உடம்பு. இங்கு பிணமல்ல. 

உயிர் நிற்கும் உடம்பு அன்பின்வழி நடப்பது என்றும் மற்றையது என்பினைத் தோலால் பொதிந்து வைத்த வெறும் உடம்பு என்றும் சொல்லப்பட்டது. 

அன்பின் வழியது உயிர்நிலை என்றதால் அன்பே உயிர் காத்துப் பேணும் ஆற்றல் கொண்டது என்பதும் அதுவே வாழ்வைத் தருவது என்பதும் பெறப்படும். 

அன்புடையது உயிருள்ள உடம்பு. அன்பில்லாதது உயிரில்லா உடம்பு. 

ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறிய அவர் விடுகிற மூச்சுக்காற்று வழியாலோ, இதயத்துடிப்பு வழியாகவோ அல்லது குருதி ஓட்டம் வழியாகவோ மருத்துவர் முடிவு கட்டுவர். 

ஆனால் அன்பின் வழியாக மட்டுமே ஒருவருக்கு உயிர் உள்ளதா அன்றி இல்லையா என்பது அறியப்படவேண்டும் என்று குந்தகுந்தர் கூறுகிறார். 

'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற தொடர்க்கு உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தினான் வரும், 

அன்பின் வழியிலே நடப்பான் உயிர் மீண்டும் மீண்டும் பிறவாநிலை நிற்கும்.
என்பதே அவர் கூறும் வாக்கு. 

அறஉணர்வே அன்பை வளர்க்கும் அதுவே உடலெனும் சிறையிலிருந்து மீட்கும் என்பதை அறியலாம்.







தமிழ் விளக்கம்ஷரணமஷரணம் வோ பந்தவோ பந்தமூலம், 
சிறபரிசிததாரா த்வாரமாபத்க் ருஹாணாம் | 

விபரிம்ருசத புத்ரா: சத்ரவ ஸர்வமேதத், 
த்யஜத பஜத தர்மம் நிர்மலம் சர்ம கா மார்: || 60 ||

Your house is no protection; the relations are the cause of bondage; the wife to whom you have been long attached is the door to abodes of miseries. Know your sons to be your enemies. Forsake all these. Desirous of happiness, you should practise pure religion.
உனது வீடு பாதுகாப்பற்றது. உறவுச் சூழல் வினைக்கட்டினால் அமைந்தவை. உன்னுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் மனைவி/கணவன் துன்பத்திற்கான கூடுதலே. 

உனது பிள்ளைகளும் உன்னை பகையாக கருதலாம். இவற்றையெல்லாம் கைவிட்டுவிடு. ஆனந்தத்தை விரும்பும் நீயோ தூய அறத்தை கடைபிடித்தல் வேண்டும். எத்தனை அரண்களுடன் அமைந்த கோட்டைக்குள் வாழ்ந்தாலும் கூற்றுவனிடமிருந்து உன்னை காப்பாற்ற இயலாது. 

காலனை வெல்லும் எந்த காவலும் இல்லை. நீ இவ்வுடலை விட்டு ஒருநாள் நீங்கவே செய்வாய். உதவிகள் பலவகை செய்தாலும் உபயோகம் குறைந்தால் உறவுகள் ஒருநாள் உட்பகையாவது நிச்சயம். கொடுத்தால் உறவு, எடுத்தல் பகை என்ற கணக்கில் தான் உறவின் உதவிப் பரிமாற்றம். 

பரஸ்பர உதவி என்றும் அவரவர் மதிப்பளவில் கூட்டல் கழித்தல் கணித முறையே. சுற்றமும் நட்பும் உனது தீவினையால் சூழ்ந்தவை. பல பிறவிகளின் பகை இப்பிறவிக்கான தண்டனையானது. வாழ்க்கை துணையும் உனது தீவினையே தேர்வு செய்கிறது. 

இன்பமும் துன்பமும் உன் பரஸ்பர உணர்வில் அடக்கம். நல்ல துணை யமைந்தாலும் அது நிரந்தமல்ல. உனதாயுளே ஒருநாள் பிரித்து விடும். உன் கடன்பணியே உனது பிள்ளைகள். 

இதை உணராதவர் வாழ்வில் துன்பமே கடைசிநிலை. பரஸ்பர உறவென நினைத்தால் உட்பகை தோன்றி பிரிந்தே வாழும். 

 இவ்வாறு உன்னை சூழ்ந்த அத்தனை பரிவாரங்களும் துன்பக் காரணிகளே. தானாய் சேர்ந்ததல்ல அத்தனையும் உன் திவினை சேர்த்தவையே. 

ஆழ்ந்து சிந்தித்தால் இவைஅடைக்கலத்தால் சேர்ந்தவை ஆதரவுக்கானதல்ல என்பதை உணர்வாய். 

 நிலையான பேரின்பம் வேண்டுவாயெனில் இதிலும் பற்றில்லாமல் வாழு.

 தூய அறத்தை கைக்கொள்வாயாக என்று அறிவுறுத்துகிறார் முற்றும் துறந்த முனிவர்.








தத்க்ருத்யம் கிமிஹேந்தனைரிவ் தனைராசாக்னி ஸம்து க்ஷணை: ஸம்பந்தேன கிமங்க சச்வதசுபை: ஸம்பந்திபிர்பந்துபி: | கிம் மோஹாஹிமஹாபிலேன ஸத்தசா தேஹேன கேஹேன வா, தேஹின் யாஹி சுகாய தே ஸமமமும் மா கா: ப்ரமாதம் முதா || 61 ||
What should, in this world, be done with wealth, which, like fuel, feeds the fire of desire? Oh friend! What is the use of connection with family and relations who are ever (helpful in acquiring) inauspicious (Karmas)! What is the use of the body and the home, which are like big holes of the cobra of delusion! O thou embodied one, for happiness acquire this equanimity, (which is the essence of religion); do not be negligent in vain.
இந்த உலகில், செல்வத்தை தேடுவது ஆசையெனும் நெருப்பிற்கு விறகை இடுவது போன்றது. 

ஓ நண்பர்களே தீங்கு விளைவிக்கும் கர்மங்கள் எப்போதும் எதையும் பெறுவதற்கு உதவியாக இருக்கும். 

உடல், உறவு, குடும்பம் மற்றும் உறவுகளுடனான தொடர்பின் பயன் என்ன! மாயை என்ற நாகத்தின் பெருந்துளைகளாலான (பருத்த) உடலைப் போன்றது. அதனால் விளையும் பயன் அதுவே! ஓ தனித்தன்மையனே, நீ மனதில் சமநிலையை எப்போதும் கைக்கொள், 

இதுவே ஜைன தர்மத்தின் சாராம்சம்; அதனால் வீணாக அலட்சியமாக இருக்காதீர்கள். 

 இந்த உயிருக்கு தீங்கு விளைவிப்பது மோகம் என்னும் உணர்வு நிலையே. அதுவே ஆசை எனும் வேட்கையாய் விருப்பு வெறுப்பு என்ற மாறுபாட்டுடன் உணர்கிறது. அவ்வாறான வேறுபாட்டு உணர்வை கைவிட்டு சமநிலை உணர்வுடன் வாழ் என்று குரு உபதேசம் செய்கிறார். 

 குரு என்பவர் வாழ்வின் இருளைப் போக்குபவர். அவ்வாறான ஞானதீபஒளியாய் ஆச்சார்ய குணபத்ரர் அறிவுரை செய்து மாந்தர்களின் மாயை என்னும் இருளை போக்க வழிகாட்டுகிறார் இப்பாடலில். 

 நீ தனித்துவமாய் இப்பிரபஞ்சத்தில் வாழ தகுதியானவன். ஆனால் இப்போதுள்ள உடலை முன் பிறவியில் வந்த மோகம் போன்ற உணர்வினால் வந்த வினைகளே தந்துள்ளது. உடலால் இன்பத்தை நுகரலாம் என்று நினைத்தாய். 
ஆனால் இந்த மாயஉடம்போ பலதுன்பங்களை பற்றுதலினால் சேர்ந்துக் கொள்ளவே விழைந்தது. (பரிக்கிரஹம்) ஒன்றை நுழையச் செய்தால் இன்னொன்று அனுமதியின்றியே அதனுடன் நுழையச்செய்யும். 

பின்னது வந்ததும் இன்னொன்றை தன்வீடுபோல் அழைத்து இடமளிக்கும். அந்த பரிக்கிரஹ உணர்வே உன் மோகவினையால் விளைந்தவை.

 அதுவே தொடர் பற்றுக்கு காரணமானது. வாழ்க்கைத்துணை என்னும் பரிக்கிரஹ பற்றுணர்வு பிள்ளைகளை அழைத்தது. அதனால் உறவினர்கள், நண்பர்கள் சேர்த்துக்கொண்டது. 

அவர்களுக்காக பல துன்பங்களை சகித்து செல்வம் ஈட்டினால் அது குடும்பம் எனும் வீட்டை பற்றுக்கொள்ள செய்கிறது. அந்த வீடு சமூகம் என்ற பரிக்கிரஹத்தை சேர்க்கிறது. 

இவை அனைத்தையும் விடாமல் இருக்க விரும்பியதால் மேலும் செல்வத்தை ஈட்டுகிறாய். அச்செய்வமோ குடும்பச்சுவற்றில் இல்லாமல் கெளரவம், புகழ், பெருமை என்ற அலங்கார பொருளை அலங்கரிக்கச் செய்தது. ஒன்றைப் பெற துன்பங்களைப் பொறுத்துக்கொண்டால் அது அடுத்த ஒன்றை அழைத்து இரண்டினால் மேலும் துன்பங்களை அனுபவிக்கவே செய்கிறது. 

 இதுபோன்று வாழ்வில் மீண்டும், மீண்டும்; மேலும், மேலும் என்ற மோக உணர்விற்கு விறகுகளாக்கி துன்பமெனும் தீயை கொழுந்து விட்டு எரியவே செய்கிறது. இவை யனைத்தும் இந்த உடல் சுகத்திற்காக என்று எண்ணியதால் என்ன சுகத்தை கண்டாய்! 

அது துன்பத்திற்கான காரணிகளை பலமடங்கு அதிகரிக்கச் செய்ததேயொழிய இன்பத்தை தரவில்லையே. ஆனால் இப்போது முன்வினையால் இவ்வுலகில் இந்த உடலுடன் பிறந்து விட்டாய், இன்பம் வேண்டும் என்றே நினைத்தாய். 

ஆனால் உன் செயல்பாட்டில் விளைந்த அனுபவத்தை விருப்பு வெறுப்பு என பிரித்துணர்கிறாய். அவ்வாறான பிரித்துணர்வை நீக்கினால் இவ்வுலக வாழ்வில் சேரும் பரிக்கிரஹத்தினால் வரும் துன்பங்கள் குறையவே செய்யும். அதனால் எச்சூழலிலும், எப்போதும் நீ சேர்த்துக் கொள்ள விழையும் போதும், சேர்ந்த பின்பு தக்கவைத்துக் கொள்ள துணியும் போதும் விரும்பும் வெறுப்புமாய் பிரித்துணர்வதை விட்டு விட்டு சமநிலை உணர்வுடன் வாழக் கற்றுக் கொள்.

 பரிக்கிரஹங்கள் சேரும்போது விருப்பமும், பிரியும் போது வெறுப்புமாய் இன்றி; வருவது சுகம் தரவில்லை என்றால் வெறுப்பும், பிரியும் போது விருப்பமாய் பிரித்துணர்வதை தவிர்த்து; இவை இரண்டுமே மனதின் மோகஉணர்வு வேறுபாட்டினால் எழுந்தவை என அறிந்து, இரண்டு அனுபவத்தையும் சமநிலை உணர்வாய் ஏற்று பதிவு செய்ய பயிற்சி செய் அதுவே இவ்வுலக வாழ்வில் இன்பத்தை அளிக்கும். மேலும் வேண்டும், 

இன்னும் சேர்க்க வேண்டும் என்ற உடல், மன உணர்நிலையில் தோன்றும் பரிக்கிரஹத்தை குறைத்து, 
பின்னர் நீக்கவும் செய்யும் என்பதால் சமதாபாவம் என்னும் ஞானஒளியை மனிதனின் மனதில் ஏற்ற விழைகிறார் இந்த குருவானவர்.







ஆதாவேவ மஹாபலரைவிசலம் பட்டேன பத்தா ஸ்வயம், 
ரக்ஷாத்ய க்ஷபுஜாஸிபஞ்சரவ்ருதா ஸாமந்த சம்ரக்ஷிதா | 

லக்ஷ்மீர்தீ பஸிகோபமா க்ஷிதிமதாம் ஹாஅ பஸ்யதாம் நஸ்யதி, 
ப்ராய: பாதிதசாமரா நில்ஹதே வான்யத்ர காS சா ந்ருநாம் || 62 ||

Alas, the fortune of rulers of the earth, though it is inextricably bound, in the very beginning, by mighty ones themselves, with (royal) turban, is protected by their vassals, is surrounded, as if it were in cage, by swords in the hands of guarding soldiers, perishes, while they remain looking at it, (in the twinkling of an eye), like the flame of a lamp blown off by wind raised by royal fan. In case of what persons can there be hope (of a steady fortune).
என்னவென்று சொல்வது! இப்புவியில் மக்களை ஆட்சிசெய்பவர்களின் அதிர்ஷ்டமும் விலகிச் செல்ல முடியாத சில சிறையினுள் தான் அடைக்கப்பட்டுள்ளது. குடிமக்களால் போற்றப்பட்டவராயினும் கூட்டில் அடைபட்ட வாழ்க்கைதான். வாளேந்திய வீரர்கள் காவலில் மணிமுடிதரித்து அரியணையில் அமர்ந்திருப்பினும், அருகில் வீசும் சாமரத்தின் காற்றில் ஒரு சமயம் அணையும் விளக்கொளிபோல் ஒரு நாள் இவரது செல்வங்களும் இவரை விட வலிமையினால் கவரப்பட்டே விடும். அவ்வாறெனில் மற்றவர்கள் செல்வத்தின் மீது கொள்ளும் நம்பிக்கையைப் பற்றி என்ன சொல்வது?

(முனிவர், அவரது கண்ணோட்டம் அப்படித்தானிருக்கும் என்று தான் நினைக்கத்தோன்றும். ஆனால் நிதர்சனம் என்ன வென்று ஆராய்ந்தால் எவ்வளவு யதார்த்தம் இதில் புதைந்துள்ளது என்பது புரியும்.) செல்வத்தின் வேட்கை கூடும் போது அவனுக்கு சுயபாதுகாப்பும் கூடுகிறது. அது பொதுச்சேவையானாலும் செல்வம் கூட்டுதலே அவசியமாகிறது. அப்போது நேர்விகிதத்தில் பாதுகாப்பும் கூடவே செய்கிறது.

செல்வம் பாதுகாப்பு பெட்டியை அழைக்கிறது. ஏனெனின் அது சிறைக்குள் தான் வாழும் பண்புடையது. அதனால் வைத்திருப்பவனது மகிழ்ச்சியும் அதே பாதுகாப்பு பெட்டியில் சிறைகொள்ளத் துவங்குகிறது. அன்றையிலிருந்தே, தனது மகிழ்ச்சியையும் சேர்த்தே தாளிட்டு, செல்வத்தைக் காவல் புரியத் துவங்குகிறான். அவன் இல்லாத வேளைக்காக ஒரு காவலர்களைத் தேடுகிறான்.

செல்வவேட்கை கூடியவன் மனதால் கஜானாவிற்க்குள் சிறைவைக்கப்படுகிறான். உடல் எங்கு சென்றாலும் மனதால் கஜானாவை சுற்றி சிறைச்சுவரை எழுப்பத்துவங்குகிறான். அன்றிலிருந்தே அவன் சுதந்திரம் சிறைபடுறது.

சுற்றுலா சென்றாலும்,கண்குளிரும் காட்சிகள் எதிரில் கண்டாலும் அடிக்கடி அவனது கஜானாவின் தோற்றமே அவற்றை காண மறைக்கிறது. மனமில்லாமல் மகிழ்ச்சியை அனுபவிக்கவியலாதே. உடன் உடலால் அப்பெட்டியை அடையவே திரும்பிவிடுகிறான்.

உலகில் சுதந்திரமாய் மகிழ்ச்சியை அனுபவிக்காதவன் சிறைபட்ட கைதிதானே. அந்தமட்டில் செல்வத்தை பெருக்கும் வேட்கை கொண்டவனும் அதன் கைதியே என்கிறார். சொத்துதான் சுதந்திரத்தை சிறைபடுத்துகிறது.

உலகின் பூத்துக்குலுங்கும் மரங்களையும், அவை குடியேறிய மலைகளின் தோற்றமும், எங்கும் நிறைந்த புற்களும் அங்கு சுற்றும் வண்டினமும் போன்ற இயற்கை காட்சிகளை, ரசிக்கமுடியாதவன் இன்பத்தில் எப்படி வாழமுடியும். சிறைபட்டு துன்பத்தில் வாழ்பவனே. செல்வப்பாதுகாப்பே சிறைப் படுத்துகிறது.

செல்வத்தை சேர்க்க துவங்கியவனுக்கு அகச்சிறைச்சாலை. செல்வத்தை அபகரிப்பவனுக்கும் புறச்சிறைச்சாலை. அதனால் செல்வ வேட்கை ஒரு சிறையே என்னும் யதார்த்தத்தை நமக்குணர்த்துகிறார்.

ஒரு இல்லறத்தானின் நிலை இப்படி என்றால் ஆட்சி செய்யும் மன்னனோ, மந்திரியோ எவரும் தினமும் பாதுகாப்பு எனும் சிறைக்குள் தான் வாழ்கிறார்கள் என்பதே நிதர்சனம். பாதுகாப்பு சுவர் கூடுகிறதே ஒழிய அதிலிருந்து என்றைக்கு விடுதலை கிட்டும் அவர்களுக்கு.

(முன்னால் பலநூறு காவலர்கள், பின்னால் பலநூறு காவலர்கள் என்ற நிலை ஆட்சியருக்கும் இன்றும் காணலாம்.)

ஆம் வலிமைமிக்க ஒருவன் அம்மன்னரை வென்றால் அத்தனை செல்வத்தையும், அதிகாரத்தையும் வேறொருவன் அள்ளிச் செல்கிறான்.

அதேசமயம் தான் உள்சிறைக்குள் நுழைகிறான், அங்கிருந்தவனை விடுதலை செய்து புறச்சிறைச்சாலையில் தள்ளி விடுகிறான். எனவே ஆட்சி செய்பவரின் (சிறை)வாழ்வியலை செல்வமே முடிவு செய்கிறது என்ற கேடான வாழ்வு முறையை வெளிச்சமாக்குகிறார் முற்றும் அறிந்தபின், துறந்த ஞானி குணபத்ரர் என்பதே இப்பாடலில் காணும் நிதர்சனம்.

செல்வம் ஒருவருக்கு சிறையே என்றால் அதன் மிது ஏன் வேட்கை கொள்கிறாய் பற்றென்னும் கதவை திற, சுதந்திரக்காற்று வரட்டும் என்று அறிவுறுத்துகிறார் நம் வாழ்வில் விடுதலை விளக்கை ஏற்றவந்த குருவரர்.







தீப்தோ பயா க்ரவாதாரிதாருதரக கீடவத் | 

ஜன்ம மிருத்யுஸமாச்லிஷ்டே ஸரீறே பத ஸீதஸி || 63 ||

Alas, thou art tortured in the body, wrapped by birth and death, like an insect inside a castor log burning at both ends.
இருமுனைகளிலும் தீபிடித்து எரியும் ஆமணக்குத் தண்டின் நடுவில் சிக்கிய எறும்பு போன்று, பிறப்பு இறப்பிற்கு இடையில் அகப்பட்டு இந்த உடல் சித்ரவதைப் படுகிறது. அந்தோ என்ன பரிதாபம்!

--------------------------------- ஆச்சார்ய குணபத்ரர் என்ற குருபதவிக்கு மிகப்பொருத்தமானவர் இந்த குணபத்ரர் என்ற பண்பினர். ஏனெனில் சக்யக்தரிசனம் என்ற அடிப்படைக்கல்வியை இந்த 63 வது நூற்பாவில் தான் மறைபொருளாக தெரிவிக்க துவங்கியுள்ளார். ஒரு நல்ல ஆன்மீக கல்வியாளர் என்று தான் முதற்சிறப்பான கெளரவத்தை அவருக்கு அளிக்கலாம் (மாலை, மலர்க்கீரீடம், மேடை, போர்வை செலவில்லையே)

ஆன்மீக கல்வித்துறையில் பணியாற்றியவர்களில் சீக்கிரமே ஆச்சார்ய பதவிக்கு வந்திருப்பார். அதனால் தான் எத்தனையோ முனிகள் இருந்து முக்தியைப் பெற்றிருந்தாலும் இந்த HOD மட்டுமே இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். (அதே சமயம் எத்தனை பொறாமைக்கார சகமுனிகளையும் சந்தித்திருக்கவே செய்திருப்பார். அவர் தான் முனி நிலை இலக்கணமும் நன்கு தெரிந்தவராயிற்றே அதனை கண்டிப்பாக பொருட்படுத்தியிருக்க மாட்டார் என்றே இந்த ஆத்மானுசாசனம் தெரிவிக்கிறது.)

----------------------------------------- 


 பசி இரண்டு வகைப்படும். ஒன்று உடல் பசி. இன்னொன்று உள்ளப்பசி. அதைப்போல, பற்றும், உடல் பசியின் மீதும், உள்ளப் பசியின் மீதும் ஏற்படும்.

விலங்கினங்களுக்கு உடல் பசியின் மீதுதான் பற்றுண்டு. அந்தப் பற்று உணவுப் பொருள் மீதுள்ள பற்றாக மட்டுமே அமைகிறது. ஆனால், மனிதனுக்கு உடல், உள்ளம் ஆகிய இரண்டு பசியின் மீதும் பற்றுகள் உண்டு.

உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான உணவை நாடுவதும் இத்தகையதே. ஒரு குறிப்பிட்ட உணவின் மீதுள்ள பற்றினால், விருப்பத்தினால், அதை அதிக அளவிலே உண்டால், உடலுக்கு நோய்வரும். உடல் துன்பம் அடையும்.

இதனையே வள்ளுவரும், எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருள் மீது, எந்த அளவுக்குப் பற்று இல்லாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவற்றினால் வரும் துன்பங்கள் குறையும் அல்லது துன்பங்களே வராது என்று குறிப்பிடுகிறார். இது தான் வள்ளுவர் துறவுநிலைக்குக் கூறும் இலக்கணம்.

அவர் அனைவரும் துறவியாக சென்று ஆசிரமத்தில் சேர்ந்து விடுங்கள் என்று சொல்லவில்லை, ஏன் எவருமே சொல்லவில்லை. நம்மால் கடைபிடிக்க இயலாது என்று முடிவு செய்தமையால் இவை முனிநிலைக்கானது என்று விலாசமிட்டு தப்பித்துக் கொள்கிறோம். (முனி நிலைக்கு சென்றால் தான் அந்த ஆசிரமத்தில் எந்தனைப் பேருக்கு தொண்டூழியம் செய்ய வேண்டி வரும் என்பதும் நமக்குப் புரியும், இதே மனநிலையில் இருந்தால்…)

சிவன் என்ற முனி உயிர் எனும் இந்த அடிப்படையான சக்தியை, இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் உடல் தன்மையிலோ அல்லது காம உணர்வினாலோ வெளிப்படுத்தாமல், அதே சக்தியை விழிப்புணர்வின் உச்சநிலையை அடையப் பயன்படுத்தினார். அதனால் அவர் (ஆதி)யோகிஎன்று அழைக்கப்பட்டார். (அப்ப பார்வதி மற்ற பரிவாரங்கள்? இடைச்சேர்க்கைகளே)

பொதுவாக, உடல் ரீதியாக தொடர்பில் இருக்கும்போது ‘பற்று’ ஆழமாக ஏற்படுவதை பார்க்கலாம். திருமண பந்தத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிக பற்றுகொள்ளும்போது முக்தியை எப்படி அடைய முடியும்?

இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்று இருக்கும் நிலையை அடைய காட்டும் வழி என்ன என்பதை நம் முனிவர்களும் அளித்துள்ளார்கள். அதனை படித்தறிய மனம் மறுப்பது இந்த உடல் பற்றுணர்வே. (அதனால் தான் தனி சமூக அந்தஸ்த்தை கொடுத்து முனிகளைப் பாதுகாக்கிறோம்.)

நம் உடல் மீது கொண்டிருக்கும் அடையாளம்தான் மற்ற உடல்கள் மீது கொண்டிருக்கும் பிணைப்புகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதே அடிப்படை உண்மை. எந்த ஒரு பிறவி உடலும், பிற உடலைச் சார்ந்தே வாழும் இலக்கணத்துடன் இப்பரபஞ்சதால் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆன்மா தனித்துவமானது, சார்பு நிலையற்றது. அதனால் அதற்கு பற்று வருவது இல்லை. அதற்கு பசி, உணவு, சந்தோஷம், மகிழ்ச்சி எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.

அதனால் மனதில் பற்றுதல் என்பது வேறு யாருடனோ அல்ல, அது நம் உடலிலிருந்து தான் துவங்குகிறது. இந்த உடலுடன் நாம் தீவிரமாகப் பற்று கொண்டிருப்பதால்தான், வேறு யார் மீதோ பற்றுக் கொண்டிருக்கிறோம்.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீது கொண்டிருக்கும் உறவுகளைக் களைவதற்காக நாம் ஏதும் செயல் செய்ய வேண்டியதில்லை. நம் சொந்த உடல் மீதுள்ள பற்றுதலைக் களைவதற்காகத்தான் நாம் ஏதோ செயல் செய்ய வேண்டியதிருக்கிறது. இதிலிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டால், பிறகு நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலிருந்தும் விடுபடலாம். அதுவே விடுதலைப்பேற்றிற்கான வழித்தடப் பயண திசைகாட்டி.

உடல் மீதான உணர்வு மனித மனத்தில் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆன்மீக செயல்முறைகளின் நோக்கமே அந்த உணர்வைக் கடந்து செல்வதுதான். ஏனெனில் அதுதான் நம்மைச் சிக்கவைக்கும் பொறியாக இருக்கிறது. உடல் மீது கொண்டிருக்கும் அடையாளம்தான் மற்ற உடல்கள் மீது நாம் கொண்டிருக்கும் பிணைப்புகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த சிந்தனைக்கு எடுத்துக் காட்டு நாம் இப்போது வாழும் ஒவ்வொரு கணமுமே. நம் வாழ்வே நமக்கு எடுத்துக்காட்டாய் அமையும். ஏற்றுக்கொள்ளவே மறுப்பதால் பல கதைகளை பிரமாணு யோகத்தின் வழியே தர வேண்டியுள்ளது.

நாம் நம் உடலுடன் பிணைப்பு கொள்ளாமல் இருந்தால், மற்ற உடல்களுடனும் (அதாவது மற்றவர்களுடனும்) பிணைப்பு கொள்ள மாட்டோம். உடலுறவு(not only sex) தொடர்பான உறவுகளில், எப்போதும் பற்றுதல் தீவிரமாக இருக்கிறது. ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் பிரம்மச்சரியம் பற்றியோ அல்லது இதுபோன்ற உறவுகளைத் தவிர்ப்பது பற்றியோ பேசுவது ஏனென்றால், அவர்கள் உறவுநிலைகளுக்கு எதிரானவர்கள் என்பதாக அல்ல, இதுபோன்ற உறவுகள் பற்றுதலைத் தீவிரப்படுத்தும் என்பதால்தான்.

முக்தியடைதல் என்று பார்க்கும்போது, எந்தமாதிரியான உறவு நிலைகளில் நாம் இருக்கிறோம் என்பதும் வாழ்க்கையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் ஒருவிதத்தில் எந்த அர்த்தமும் கொண்டதல்ல. ஆனால் தேவையான ஆதரவை உருவாக்குவது என்னும் கோணத்தில் பார்க்கும்போது அது அர்த்தமுடையதாக மாயத்தை தோற்று விக்கிறது. நாம் நமக்காக ஒரு ஆதரவான சூழ்நிலையை உருவாக்க விரும்புகிறோமா இல்லையா என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். தங்கள் வாழ்வில் ஓரளவு வேரூன்ற நினைக்கும் சிலருக்கு இதுபோன்ற உறவுகள் தேவைப்படலாம். இத்தகைய உறவுகள் இல்லையென்றால், அவர்கள், தங்கள் வாழ்வில் எதையும் தேடுவதற்கு மிகவும் தயக்கப்படுவார்கள். இவையனைத்துமே உடல் பற்றின் தூண்டுதல்களே.

ஆன்மீக செயல்முறை என்பது உள்நிலையில் செய்ய வேண்டிய ஒன்று. வெளிப்புறத்தை எப்படி நிர்வகிக்க விரும்புகிறோம் என்பது அல்ல. நமது விருப்பமோ வெளிச்சூழலை சரிசெய்வதிலேயே ஆயுள் முழுக்க கழிந்து விடுகிறது.

நாம் உள்நிலைக்கு மாறும்போது, அந்த மாற்றம் இயல்பாகவே மோட்ச மார்க்கத்திற்கு வழிவகுப்பதாக நம் வெளிப்புறத்திலும் பிரதிபலிக்கும். (கொஞ்சம் கஷ்டம் தான்… )

என்ன செய்வது நம் பிறப்பின் நோக்கம், வாழ்வின் பிரதான லட்சியம் என்று நம் ஆன்மா விடுதலையை விரும்புகிறது. ஆனால் நாமோ உடல் லட்சிய, நோக்கத்திலேயே வாழ்ந்து மடிகிறோம். அதனை மனித லட்சியமாக தவறாக கருதி வாழ்கிறோம்.

ஆனால் உண்மைநிலையில் நம் புருஷ அர்த்தமான, மானுட இலட்சியம் வேறு காரணத்திற்காக பிறப்பத் தந்துள்ளது. அதற்கான சக்தியைத்தான் அது உடலுக்கு உயிராக தங்கி அளிக்கிறது. அதனை யுணராது உடல் தேவைக்காகவே இந்த ஆன்மா அளிக்கப்பட்டதாக நினைத்து மாயையில் வாழ்கிறோம்.

அந்த மாயை நீங்கினால் ஆன்மஞான விழுப்புணர்வு தோன்றும். அதுவே இவ்வுலக துன்பத்திலிருந்து விடுதலையை அளிக்கும். இதை யுணர்வதே சம்யக் தரிசனம், நற்காட்சியாகும். அந்த காட்சி வந்தால் நல்லறிவும், நல்லொழுக்கமும் ஆன்ம வழி வாழ்க்கையில் தாமாகவே பயணிக்கத்தொடங்கி விடும்.

இத்தனை செயல்முறைக்கும் தடையாய் இருந்து நம் வாழ்வை மடைமாற்றி வேறு திசையில் பயணிக்கச் செய்வது இந்த உடலுமல்ல.(?) அதன் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான்.(!) அந்த பற்றை விலக்க முயலவேண்டுமே யொழிய. உடலை விலக்க முடிவு செய்வதுமல்ல.

அதனால் நாம் உடலல்ல என்ற மாயையிலிருந்து விலகி ஆன்மா என்ற சத்தியத்தை உணர்வதே சம்யக்த்வம், நல்ல காட்சி என்பதை நம் ஆச்சார்யர்கள் பல வகையிலும் அறிவுறுத்த முனைந்துள்ளனர்.

அதனால் இல்லறத்தார், துறவறத்தாருக்கானது என்ற பாகுபாடு, பாகப்பிரிவினை கோடுகளை மஹாவீரர் அளிக்க வில்லை. நம் உணர்வில் நாம் உயிர்தான், உடலல்ல என்ற எண்ணத்தில் எப்போது நிலைத்திருக்கவே அவர் வழிகாட்டியுள்ளார்.

அதற்கு தடையான உடல் மீது நாம்பற்று வைக்காமல், மோட்சப்பயணத்திற்கு சரியான வாகனமாக, கருவியாக, சாதனமாக பயன் படுத்துவதே விவேகஞானமாகும். அதனால் மோட்சம் எனும் போட்டியாளர்கள் இல்லாத ஒலிம்பிக்கிற்கு நல்ல பயிற்சியாளராக பகவான் மஹாவீரர் முதல் பல முனிவர்களும் இருந்துள்ளார்கள்.

இந்த அடிப்படையில் துவக்கப்பட்டது தான் நம் சமண தரிசனத்தின் இமய, நியமங்கள்.

அதில் ஒன்று தான் தசதர்மம் எனும் இன்றைய நியமம் துவங்கும் நாள்- செப். 12 அன்று முடிவடைகிறது.

நம்முடைய உடல் லக்ஷணத்தை பற்றி முக்யத்வம் அளிக்காமல் மன லக்ஷணத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினாலே, அதாவது குணநலன், பண்பில் மாற்றத்தை கொண்டுவந்தாலே நற்காட்சிக்கு வித்திடும் என்றளவில் பத்து தினங்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது. கடைபிடிப்போமாக…

---------------------------------- 


 இதிலேயும் ஒரு பாலிடிக்ஸ் ஸ்வேதாபருக்கு, முன்னர் துவங்கி விட்டது நமக்கு இன்றைக்குத்தான். நாம் இந்த நியமத்தை தள்ளிப்போட இதுவும் வசதியாகவே வரையறை செய்யப்பட்டுள்ளது. சமண தரிசனத்திற்குள் பல பிரிவினைகளை ஏற்படுத்தவே சமண மதம் துவக்கப்பட்டுள்ளதாக கருதவேண்டியுள்ளது. அவை பல பாகப்பிரிவினையும் அளிக்கப்படுவதிலேயே முழுகவனமும் செலுத்தப்படுகின்ற இச்சூழலில் இந்த மதத்தில் பிறந்த நாம் என்றைக்கு வேண்டுமானாலும் தசதர்ம நியமத்தை ஏற்று கடைபிடிக்கத் துவங்கலாம். சமண தரிசனம் நமக்காக அளிக்கப்பட்டது. சமண மதம் அந்த பிரிவுக்குள்ள தலைவருக்கானது… அந்த நிலைப்பாட்டில் நாம் கடைபிடிப்பதே நம் விவேக ஞானம்..

---------------------------------------

ஏதோ ஓரளவு சம்யக்த்வம் என்றால்…. சரி அடுத்தடுத்த பாக்களில் தென்படுகிறதா என்று சேர்ந்தே படிப்போம்.








நேத்ராதீஸ்வரசோதித: ஸகலுஷோ ரூபாதி விஸ்வாய கிம், 
ப்ரேஷ்ய: ஸீதஸி குத்ஸிதவ்யதிகரை ரம்ஹாம்ஸ்யலம் பிரும்ஹயன் | 
நீத்வா தானி புஜிஷ்யத: பகலுஷோ விஸ்வம் விஸ்ருஜ்யாத்மவா- 
நாத்மானம் தினு ஸத்ஸுகீ துஜரஜா: சத்வ்ருத்திர் பினிர்வ்ரத: || 64 ||

Servant of, and instigated by the eye and other rulers(i.e., the senses), and greatly multiplying thy sins by censurable acts, why dost thou miserably distress thyself for beauty and other worldly objects. Having brought them under thy yoke, having renounced the world without regret, having mastered thyself, having washed away the dust(of Karmas) by rule of right conduct, having freed thyself (from mundane existence), and having become supremely happy, enjoy (this bliss of ) self-realization.
கண் மற்றும் பிறபொறிகளை பிரித்துணர்ந்து தணிக்கைசெய்யும் ஒன்றின் ஆட்சிக்கு அடிமையாகி நுகர்ந்ததால் மீண்டும் அதனால் தூண்டப்பட்ட செயல்களைச் செய்து தீவினைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்கிறீர்கள். அழகு, அலங்காரம் போன்ற உலகியல் பொருட்களுக்காக உங்களை ஏன் துன்பப்படுத்தி கவலையில் ஆழ்கிறீர்கள். உன்னை சிறைப்படுத்தும் அவற்றிலிருந்து சிறிதும் வருந்தாது விடுதலையடை. அவற்றை தியாகம் செய். சுயத்தை உணர்ந்து சரியான ஒழுக்க விதியில் செயல்பட்டு மாசுக்களை கழுவி, உங்களை துன்பங்களிலிருந்து விடுவித்து பேரானந்தத்தை அனுபவிக்கும் சச்சிதானந்த வடிவனாக விளங்குங்கள்.

-- -- -- -- -- 

 “கண் இருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய் காலிருந்தும் முடவனாய் வாய் இருந்தும் ஊமையாய் வாழ வேண்டியிருக்கிறது உலக வக்கிரங்களையும் அக்கிரமங்களையும் பார்த்துக்கொண்டு.........” என்ற ஆற்றாமை வரிகளைக் கொண்ட பாடலை படித்திருப்போம்.

கண் இருந்தும் குருடாய் இருந்துவிட்டேன் நான் காலம் எல்லாம் வீனே கழித்துவிட்டேன். பொன் பொருள் சதம் என்று பூமியிலே அலைந்து உண்மையை பொய் என்று எண்ணியிருந்தேன் ஐயா.. உன் மனம் பாராமல் மறந்துவிட்டேன் ஐயா உன்னையே.. இன்று தான் உணர்ந்து கொண்டேன். – இது பட்டினத்தார் பாடல்.

இதுபோன்ற ஞான வரிக்களுக்கு மூலம் தான் இந்த 64ம் பாடலின் முதல் வரி.

கண் நன்றாக இருக்கும் பார்வை இருக்காது. அதாவது இரண்டும் வேறு, வேறு என்பதை அறியவேண்டும். கண் பொறி(device), பார்வை புலன்(sensory) அந்த பொறிக்கான திறன்; பொறிவழி செய்தியை அறியும் திறனே புலன்.

புலன்வழி செய்திகள் மனதில் தெளிவாக, அறிவாக பதியப்படுகிறது. அந்தப்பதிவுகளின் களமே சித்தக்களம். அக்களத்தில் பொறிவழிச் செய்தியும், தெளிவும் பதிவாகியிருக்கும்.

அதாவது அச்செய்தி(perceiving) தணிக்கை(audit) செய்யப்படுகிறது. அதுவே தெளிவாக பதியப்படுகிறது. இந்த தணிக்கையாளர்(auditor) தான் ஆளுமை எனும் அகங்காரம், மமகாரம் கொண்டவன்/ நான், எனது எனும் உணர்வுடன் வாழ்பவன். தன்முனைப்பாளன், Ego.

இந்த தணிக்கை செய்பவனுக்கும் பின்புலத்தில் மேநிலையில் நான்கு உயர்அதிகாரிகள், 16 உபஅதிகாரங்களுடன் இருக்கின்றனர். இவர்களே மனவேறுபாட்டுணர்வைத் தருபவர்கள். இவர்களைத்தான் கஷாயங்கள் என்று சமண தத்துவங்கள் கூறுகின்றன. இது ஒரு மேலோட்டமான அதிகார அமைப்பு, psycho-governing body. இதன் செயல்பாடுகள் அனைத்தையும் எழுத வரிகள் போதாது. (முழுவதும் அறிந்தவரும் இல்லை, நானறிந்த வரை…)

கண் போன்றே மூக்கு, காது, வாய், உடல்தோல் என ஐந்து பொறிகளுக்குள்ளும் புலனுகர்ச்சிக்கான ஏற்பாடுகள் உள்ளன. அவையும் தணிக்கையாளரான தன்முனைப்பால் தெளிவாக மனதில் பதிவிடப்படுகிறது.

ஓரளவு உணர்ச்சி(புலனுகர்ச்சி)களுக்கான தெளிவைப்பற்றி புரிந்து கொண்டிருக்கலாம். (அவ்வளவுதான் எனக்கு தெரியும்…)

---------------------------------------- 


 இதில் பொறி, புலனுடன், மூளை நுகரறிவு வரை கண் (eye, carnia, retina, cones, rods, optice nerve, brain ) பற்றிய தெளிவுகள் அறிவியாளரால் கண்டு பிடிக்கப்பட்டது.

அவை மனம் என்ற ஒருபதிவகத்தில் பதியப்படுகிறது. அவையே ஆளுமை (Id, Ego, Superego) என்பது வரை சிக்மன் பிராய்ட் காலத்திற்கு பின் உளவியலாக மலர்ந்து நிற்கிறது.

அவைகளின் பின்புலத்தில் என்ன உள்ளது என்பதை பல ஞானிகளும் கண்டறிந்து, நம் ஞானிகள் வரையறை செய்தவைதான் கஷாய உணர்வுகாளான குரோத, மான, மாய, லோபம் என்ற நான்கின் அதிகாரத்தன்மையும், அந்த இகோவின் ஆட்சியும், புலன்களின் அடிமைத்தன்மையும். அவை ஆன்மனில் படிந்தால் அது வினைத்துகள், ஒன்றிணைந்து வினையுடல் என்பது வரை குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களே ஆன்ம, மெய்ஞானியர்கள்.

இவர்களுக்கு சோதனைச்சாலையில் நிருபிக்க இயலாத நிலை. ஏனெனில் அவை ஐம்புலணர்வுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள். அதனை மனதை ஒருநிலைப்படுத்தி ஆன்ம பார்வை உணர்வை விழிப்படையச் செய்தால் தான் அறிந்து, புரிந்து, தெளிவைப்பெற இயலும். அதற்கான (training) எண்ணத்தை சீரமைக்கும் தியானப்பயிற்சியை வழங்கியுள்ளனர்.

---------------------------------------- இத்தனை விஷயங்களும் அறிவியல் , உளவியல் என்ற கல்வி இல்லாத காலம். அதே சமயம் இப்போதுள்ள காகிதம், மை, பேனா, அச்சுப்பொறிகள், கணிணி, தட்டச்சு செய்யும் இயந்திரம் போன்ற அனைத்து வசதிகளும் இருந்திருந்தால் குணபத்ராச்சாரியாரும் மேலும் சிறந்த முறையில் நூலாக வெளியிட்டிருப்பார். மாறான அவர்கால சூழ்நிலைக்கேற்ற வகையில் நூற்பாவாக SMS வடிவில் சுருக்கி வடித்து அளித்துதவியுள்ளார். கடுகைத் துளைத்து கடலைப் புகுத்திய கலையும் அவரிடம் இருந்துள்ளது. அதனை அறியாமல், அருமை புரியாமல் அவர் ஒரு அறுவைப் பேராசிரியராக வர்ணித்து விட்டது இக்காலத்தலைமுறை. ¬----------------------------------------

இதற்குமேலும் நான் இந்த நூற்பாவிற்கு விளக்கம் தரவேண்டியதில்லை என்றே கருதுகிறேன். இருந்தாலும் மரபின் காரணமாக…

பொறிகள் வழி புலனுணர்வு பெறும் செய்திகளை கஷாய உணர்வினால் திரிபு செய்யப்பட்டு மனதில் பதிவாக மாற்றப்படுவதால் இவ்வுலகச் சூழலில் துன்பத்தையே தழுவுகிறாய். அந்த தணிக்கைக்காரர்களை விலக்கி துன்பத்திலிருந்து விலகி மீண்டும் பிறவா விடுதலைப்பேற்றை பெற்று பேரானந்தத்தில் திளைக்கும் சத்தியத்தை அறிந்துணர்ந்து நித்தியஆனந்தத்தில் திளைப்பவனாக, சத்சித்ஆனந்தனாக வாழ நல்லொழுக்க வழிகளுக்கான, தீவினை நீங்கிய பழக்கமுடையவனாக, ஆன்மவிழிப்பினைத்தரும் நற்காட்சியாளனாக வாழ அறிவுறுத்துகிறார் அக்காலத்திய கல்வித்துறையின் தலைமைப்பேராசிரியர் குணபத்ரர்.

நாளையிலிருந்து நீண்ட பதிவாக இல்லாமல் சுருக்க முற்படுகிறேன்.







அர்திநோ தனமப்றாப்ய தனிநோப்யவித்ருப்தித: | கஷ்டம் சர்வேஅபி ஸீதந்தி பரமேகோ முனி: சுகி || 65 ||

பராயத்தாத் ஸுகாத் துக்கம் ஸ்வாயத்தம் கேவலம் வரம், | அந்யதா ஸுகினாமான: கதமாஸம்ஸ்தப ஸ்வின: || 66 ||
The poor are discontented for not obtaining wealth, and the rich too are (so) for want of contentment. Alas! all are in trouble. Only an ascetic is happy. 65

Happiness, dependent upon others(leads) to pain. Only independent happiness is commendable. Else how could the ascetics be called happy? 66
செல்வத்தைப் பெறாததற்காக ஏழைகள் அதிருப்தி அடைந்துள்ளனர், பணக்காரர்களும் மனநிறைவை எட்டவதற்காக அதேநிலைபாட்டில் உள்ளனர். அந்தோ! அனைவரும் சிக்கலில் தான் உள்ளனர். ஒரு சந்நியாசி மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்.

மகிழ்ச்சி, மற்றவர்களைச் சார்ந்தது மன வலிக்கு வழிவகுக்கிறது. சுயாதீனமான மகிழ்ச்சி மட்டுமே பாராட்டத்தக்கது. இல்லையென்றால் சந்நியாசிகள் எப்படி மகிழ்ச்சியானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்?

------------------------------------------------------------- 


 இல்லறத்தாரைப் பொருத்த மட்டில் ஆச்சார்யர் மிகவும் ஆபத்தானவர்தான். நம்மை எதையும் அனுபவிக்க விடமாட்டார் போலும். அப்படித்தான் தோன்றும்… ஆனால்….

வறியவன் எல்லாப்பொருள்மீதும் விருப்பத்தை கொண்டவான வாழ்கிறான். பணக்காரன் என்று சொல்லப்பட்டவன் எவ்வளவு செல்வம் வந்தாலும் மேலும் மேலும் வேண்டும் என்ற அதிருப்தியில் வாழ்கிறான்.

வேண்டும் என்றாலும், இன்னும் வேண்டும் என்றாலும் உழைப்பு வேண்டும், சிக்கல்களை சந்திக்க வேண்டும், சிந்தனை வேண்டும், தீர்வுகளை தேடவேண்டும். இவை எல்லாமே இன்பத்துக்கான உணர்வை வழங்குபவையா, துன்பக் காலத்தை வழங்குபவையாக இருக்குமா என்று வினவுகிறார். இல்லை என்பது தானே நிதர்சனம்.

அடிப்படையில் எல்லாம் வேண்டும் என்பதும் வேட்கையுணர்வு. அவை கிடைத்திருந்தாலும் மேலும் வேண்டும் என்ற அதிருப்தியினால் வேட்கையுணர்வு. வேட்கையுணர்வு என்றாலே துன்பக்காரணிகளைதான் அளிக்கும் என்பது தெளிவாகிறது. அதனால் ஏழையின் விருப்பமும், பணம் மேலும் வேண்டும் என்ற விழைவும் ஒருவனுக்கு துன்பத்திற்கே வழிவகுக்கிறது.

இவ்விரண்டையும் தியாகம் செய்பவனே இன்பச்சூழலில், ஆனந்த உணர்வில் வாழ முடியும் என்று அறிவுறுத்துகிறார். அது வாழ்வியலில் இல்லறத்தில் கிட்டுமா அல்லது துறவறத்தில் கிட்டுமா என்பதை வரையறை செய்ய வேண்டியது நம் கையில் தான் உள்ளது. அதனால் புறச்சார்பு நிலையில் வாழ்பவன் துன்பப்படுகிறான். அகச்சார்பு நிலையில் வாழ்பவன் ஆனந்தத்துடன் வாழ்வான் என்பதே அவர் அளிக்கும் தெளிவு.

அவர்வாழ்ந்த காலத்தில் ஸ்ராவகாச்சாரத்தை கடைபிடிக்கும் இல்லறத்தாரை விட சந்யாசத்தை கடைபிடிக்கும் துறவறத்தாருக்கு சார்பு நிலை குறைவு. அதனால் அவர் முனிநிலைக்கு அழைப்பதாக கருதப்பட்டது.

இக்காலத்தில் சந்யாசம்? சமுகச் சார்பு நிலை கூடுதலாகவே தேவைப்படுகிற நிலையாகிவிட்டது. அதுவும் இல்லறத்தாரை விட அதிகச் புறச்சார்புநிலையில் வாழ்வதான பிரதேசங்களாக பல மாறிக் கொண்டிருக்கிறது.

அதனால் இக்காலச் சூழலில் துறவறத்தில் சுயச்சார்பு கிட்டினால் அவ்வாழ்வியலை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனின் மிகுபொருள் விரும்பாமை உணர்வுடன், புறச்சார்பு நிலையில் அதிகத் தியாகத்துடன் வாழ்வதே சிறந்தது. அவரும் அவ்வாறு அறிவுறுத்தவே செய்வார் என்பதே நிதர்சனம்.

----------------------------------- 


சார்பு நிலையில் இன்பம் எவ்வாறு இப்பிரபஞ்சத்தில் உள்ளது …..

உயிர்+உயிரற்றதான உடல் சார்பு நிலையில் ஆனந்தக்காரணிகள் குறைவாகத்தான் உள்ளது. உடல் சார்பில் தோன்றுவது சந்தோஷம். எவ்வளவு நேரம் அந்த சந்தோஷம் நிலைக்கும் என்பதை கணித்தல் அவசிமாகிறது.

அதே சமயம் மனத்துடன் பிற பொருளான மற்றவருடன், விலங்குகளுடன், மற்றபொருட்களுடன் சார்ந்திருந்தால் கிடைப்பது மகிழ்ச்சி. அவற்றையும் எவ்வளவு நேரத்திற்கு தக்கவைத்துக் கொள்ள இயலும் என்பதையும் வரையறை செய்தல் அவசியம்.

இவ்விரண்டு நிலையிலும் புறச்சார்பிற்கான உழைப்பு அதனால் ஏற்படும் துன்ப உணர்ச்சிகள் எவ்வளவு என்பதை கூட்டிக் கழித்துப் பார்த்தால் சொற்பநேரம் சந்தோஷம்+மகிழ்ச்சியாக, அதாவது ஆனந்த உணர்வு நம்மிடம் தங்கும் என்பதை உணரலாம்.

அதே சமயம் சுயச்சார்புடன் வாழ்வது என்பது புறச்சார்பில் பெரும்பகுதியை தியாகம் செய்து வாழ்வது. அவ்வாறான தியாகி நிலையில்தான் ஆனந்த உணர்வு கூடுதலாக இவ்வுலக வாழ்க்கையில் கிட்டும் என்பதை பலவகையிலும் நமக்கு உணர்த்தவே முனிகள் பலரும் வழிகாட்டியுள்ளனர்.

(என்ன செய்வது அவர்கள் உணர்த்தினால் தான் தெரிகிறது. ஆனால் அதற்குள் ஆயுளில் பெரும்பகுதி missing.) அதனால் சிறுவயதினர் இவற்றை உணர்ந்தால் இவ்வுலகில் ஆனந்தநிலையில் அதிகநாட்களை தக்கவைக்கலாம் என்பதே சரியான தெளிவு. அதற்கு உதவுவது பகவான் மஹாவீரர் வழங்கிய மிகுபொருள் விரும்பாமை வாழ்வு முறையே.

சாது தரிசனம் ஜன்ம சாபல்யம் என்றனர்.





  



யதேதத்ஸ்வச் சந்தம் விஹரணமகார்பண்யமசனம், 

ஸஹாயை: ஸம்வாஸ: ஸ்ருதமுபசமைக ஸ்ரமபலம் | 
மனோ மந்தஸ்பந்தம் பஹிரபி சிராயாதி விம்ருஸன், 
ந ஜானே கஸ்யேயம் பரிணதிருதாரஸ்ய தபஸ: || 67 ||

 விரதிரதுலா சாஸ்த்ரே சிந்தா ததா கருணா பரா, 
மதிரபி ஸதைகாந்தத்வாந்தபிரபஞ்சவிபேதனி | 
அனசன தபச்சர்யா சாந்தே யதோக்தவிதானதோ, 
பவதி மஹதாம் நால்பஸ்யேதம் பலம் தபஸோ விதே: || 68 || 
I do not know of what noble austerities is this the result, that (an ascetic) moves about at will,(gets) food without humility, (has) company of the saints, (has) knowledge with calmness as fruit of hard study, and (his) tranquil mind (being deeply absorbed in ) contemplating (upon the self) comes out after long intervals to external (objects). The high-minded (saints) have unique renunciation (of worldly attachments), contemplation of the scriptures, unlimited compassion (towards the living world), also an inteleect capable of ever dispelling the illusion of sticking to one-sided view of a thing and lastly the austerity of fasting according to rules laid down (in the sacred books). This is the result of practising high and not small austerities.
ஒரு சந்நியாசம் ஏற்றவன் அதன் விளைவாக என்ன உன்னதமான புனித ஒழுக்கவாதி என்பது சரியாக எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட நியமத்தின் வழியில் வாழ்வு நகர்கிறது. அதே சமயம் மனத்தாழ்மையின்றி உணவைப் பெறுவதும், சங்கத்திலுள்ளவர்களுடன் இணக்கத்துடன் சார்ந்து வாழ்வதும், ஆழ்ந்த கல்வியின் பயனாய் பெற்ற மனோவேகம் அமைதியாக தரும் தெளிவான அறிவுடனும், எவ்வுயிரையும் சமமாக பாவிக்கும் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி திளைக்கின்றனர். அதனால் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் புற உலகுடன் தொடர்பு கொள்கின்றனர்.

(சந்நியாச சங்கத்தில் உள்ளவர்கள்) உயர்ந்த புனித எண்ணம் கொண்டவர்கள். உலகப்பற்றிலிருந்து விலகிய தனித்துவமான தியாக வழிப்பயணம்; ஆகமங்களின் வழியே சிந்தனை, உலக வாழ்வினங்களிடம் வரம்பற்ற இரக்கம், அஹிச்சையுணர்வு; ஒருதலைப்பட்சமான பார்வை மற்றும் அபிப்ராயத்திற்கு காரணமான மாயையை எப்போதும் அகற்றும் திறன் கொண்ட விவேக ஞானம் மற்றும் புனித நூல்கள் கூற்றின் விதிகளில் மாறா உண்ணாநோன்பின் வழி மரணித்தல் ஆகிய சிக்கனமான நடவடிக்கைகளை கொள்வதற்கான பயிற்சியில் வாழும் முறையால் சந்நியாசிகள் புனித எண்ணம் உடையவராகிறார்கள்.

இவை இரண்டு நூற்பாக்களும் மஹாவிரதமேற்றவர்களுக்கான வழிமுறையை சுருக்கமாக அளிக்கிறது. அதுவே பெருமைமிக்கது, சரியான புருஷார்த்தம், புருஷ லக்ஷணம், மானுடஇலட்சியம் என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த இலட்சியப்பணிக்கு உறுதுணையான இயமங்களை, நியமங்களை கடைபிடிப்பதே மிகக்குறுகிய பிறவிநீக்கும் வழித்தடமாக அறிவுறுத்துகிறது சமணம். அதனை பகவான் மஹாவீரரின் வாழ்வுமுறையும், அவரது அவ்வப்போதான போதனைகளும், அறிவுரைகளும் நமக்கு மதத்தின் நோக்கமாக, கொள்கையாக – system and procedures – அமைப்பு நடைமுறைகளாக வகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. 

 -----------------------------------------

ஜைன தரிசனத்தின் அமைப்பு நடைமுறைகள் - system and procedures – உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொருத்தமானதாக வரையறை செய்யப்பட்டவை. அதன் வழியில் பயணித்தால் இப்பூவுலகமே போகபூமியாய் மாறுவது உறுதி. அப்போது தேவகதிக்கான முயற்சி அவசியமே இல்லை.

ஆனால் இடைக்காலத்தில் அந்த system and procedures ஐ சிலர் கடைபிடிக்காத சூழலில், அப்போதுள்ள அரசியலாரால் சட்டமாக வரையறை செய்யப்பட்டதனால் தான் மதம் என்ற மாற்றம் பெற்றுவிட்டது. (யானைக்கு பிடிப்பது மனிதர்களையும் பிடித்து கொண்டது) அங்கு அவ்வழியில் நடக்க வழிதெரியாதவர்களை, அறியாமையில் வாழ்ந்தவர்களை சம்யக்தரிசனம் அற்றவர்கள், மித்யாத்வவாதிகள் (ஏதோ தீவிரவாதிகள்போல) என்று வகைப்படுத்த பட்டபோது தான் பல தரிசனங்களும் தோன்றியிருக்க வேண்டும். அதாவது சமணம் என்ற முக்திவழிகாட்டுதல் தத்துவங்கள் சட்டமாக வரையறுக்கப்பட்டபோது, அதிலிருந்து வெளியேறியவர்களே இத்தரிசனத்தில் அஹிம்சைக் கொள்கையை அளவோடு பயன்படுத்தும் வகையில் மாறிவிட்டனர். அவ்வேளையில் வேறு வாழ்வுநெறியை பரப்பும் போது அவற்றை பின்பற்ற தொடங்கி விட்டனர். அவையே பல மதங்களாக உருவெடுத்தன.

அதேபோன்ற நிலைப்பாட்டில் பிறதரிசனங்களுக்கு மாறவியலாத மனஉறுதியுடனிருந்தவர்கள் உட்பிரிவையும் அதில் உபபிரிவுகளைகளாக பல கிளைகளாக மாற்றி தங்கள், தங்களுக்கான சட்டத்தினை பரிபாலிக்க துவங்கிவிட்டார்கள் என்பதே நிதர்சனம்.

அதனால் சட்டமாக எந்த ஒரு அமைப்பின் நடைமுறைகளும் அழுத்தம் கொடுக்க படும் போது அவை பிரிவினையைத்தான் உருவாக்கும். (அதனை நாம் இப்போதுள்ள சூழ்நிலையிலும் புரிந்து நடத்தல் அவசியம். இதை இத்தோடு விட்டுவிடுவோம்; இந்த வரிகளைத்தான் கூறினேன்…) 

-----------------------------------------

விரதம் என்பது மனதளவைப் பொருத்தது. ஏற்பது கடினம் என்பது அவரவரகளது மனவலிமையைப் பொருத்தது. மனவலிமை சீக்கிரமே தொய்வைத்தேடுவது. அதற்கான பயிற்சிகளும் நம் தரிசனத்திலுள்ளது. அதனை எந்த ஒரு நபர் தேர்வு செய்தாலும் முக்திப்பயணமே. கடைபிடிப்பவர்களுக்கு கடினத்தன்மையை அளவிட்டு உணரும் போது அணுவிரதம், மஹாவிரதம் என்ற வகைப்பாடாகிறது.

மஹாவிரதம் இயமமாக வழங்கப்பட்டது; அணுவிரதம் நியமமாக வரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயமம் – PRINCIPLE; நியமம் – POLICY (ஆயுள் காப்பீடு போன்று, சில காலம் வரை)

இயமம் - ஒருவர் இறக்கும் வரை வழுவாது கடைபிடிக்கப்படும் வாழ்வுநெறி வழிகாட்டல், விரதம். அஹிம்சை கொள்கை. நியமம் – ஒருவர் தனதாயுளுக்குள் சில காலம் வரை கடைபிடிக்க வரையறை செய்யப்பட்ட வாழ்வுநெறி.- கருணை, இரக்கம், தொண்டுள்ளம், கோபமின்மை, செருக்கின்மை போன்ற நோக்கத்தை சிலகாலம் கண்டிப்பாக - விரதமாக - கடைபிடித்தல்.

இவ்விரண்டில் முதலில் நியமமே தருவிக்கப்படும். பின்னர் அவை இயமமாக மாற அதுவே முயற்சி செய்யும் என்பதே சமணநெறி வழிகாட்டுதலின் கல்விமுறை.

இரவு உண்ணாமையை ஒருமாதம், ஒரு வருடம் என்று ஏற்றால், பின்னர் ஆயுளுக்கும் அது பழக்கத்தில் வைக்க நம்மால் முடியும் என்ற மனவலிமையை அளிக்கும். பின்னர் அவ்வலிமை பெற்ற இம்மனம் அதில் உறுதியாய் நின்று விடும் என்பதே விரதங்களின் நோக்கம்.

அவ்வழியில் தசலக்ஷண பருவமும் அவ்வாறே நியமமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் பத்து நாட்கள் என்பது ஆயுள் முழுவதுக்குமான நாட்களாய் நாம் பரிமாணம் எடுத்துக் கொள்ள வகைசெய்யும் மனஉறுதியை அளித்து விடும்.

ஒரு முனிவராக சங்கத்தில் சேர்ந்த ஒருவர் கண்டிப்பாக இயமமாக கடைபிடித்தால் மஹாவிரதம். அதை இல்லறத்தில் செய்பவராக மாறினாலும் சந்நியாசமே.

முனிசங்கத்தில் இணைந்தால் அவ்வலிமை வந்துவிடும், இல்லையேல்… என்பது நம் மனம் நம்மை ஏமாற்றச் செய்யும் போது நாம் பலியாவதே தவிர. மனிதனாய் பிறந்த எவராலும் இயமங்களை கடைபிடிக்கும் வலிமையை பயிற்சியில் கொண்டுவர முடியும் என்பதை ஏற்பதே சமண தரிசனம். இல்லையெனின் சமண மதத்தின் வரையறைபடி வாழ்ந்து மடிய வேண்டியது தான்.

இல்லறத்தாரோ, துறவறத்தாரோ அவர் தோற்றத்தில் வாழும்நிலையில் விரதங்களை ஏற்பவராக கொள்ள அவசியமில்லை. மனதளவில் பாவனை வடிவில் அவற்றை இன்றே ஏற்றுக் கொண்டாலும் அது தியாகமே, அவரும் தியாகியே, சந்நியாசியே என்பதை தெளிவாக ஏற்றுக் கொண்டால் நம் முக்திப்பாதையில் எந்த ஒரு மாற்றுவழி திசைகாட்டியும், TOLL GATE ம் இல்லாமல் பயணிக்கலாம். (முனியாக, தியாகியாக தகுதிகளை பின்னர் காண்போம்….)









உபாயகோடிதூரக்ஷே ஸ்வதஸ்தத இதோ அன்யத: | 

ஸ்ர்வத: பதனப்ராயே காயே கோஅயம் தவாக்ரஹ: || 69 ||

What is this attachment of thine for the body, which is altogether destructible, (and) which cannot be saved by millions of remedies (either) from thee (or) from others?
உன்னிடமிருந்து (அல்லது) உங்களிடமிருந்து லட்சக் கணக்கான வைத்தியங்களால் ஒருநிலையில் காப்பாற்ற முடியாத, முற்றிலும் அழியக்கூடிய, உடலுக்கான (மற்றும் பொருட்களுக்கான) உன்னுடைய இந்த உலகத்துடனான பிணைப்புதான் என்ன? 
-- -- -- -- --

இந்த முனிவர்களே ஏன் இப்படி சாபம் விடுகிறார்கள், அபசகுன வார்த்தைகளை அடிக்கடி உபயோகிக்கிறார்கள் என்று தான் தோன்றும். ஏனென்றால்,

“நல்லாவே இருக்க மாட்டே, நீ அழிந்துதான் போவே நாசமா போறவன; நீ கழிசலில் தான் போவாய்… போறவழியிலே அக்ஸிடெண்ட் ஆகித்தான் சாகப்போகிறாய்…”

என்ற சாபங்களை கேட்டுக் கேட்டதனால் வந்த தெளிவு.

பலரும் சாவு, மரணம், பிணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயப்படுவார்கள். என்ன இப்படி அபசகுனமாய் பேசுகிறான் என்று. ஒரு கருமாதி பத்திரிக்கை வந்தாலே ஓரத்தில் கறுப்பு முக்கோணக்குறியீட்டை தரும் இந்த சமுதாயத்தில்; சுப, அசுப என்பதை தவறான கோணத்தில் ஆராய்ந்து வந்த ஒரு சமுதாயத்தில் இம்முனிவரின் வாக்குகள் ஒரு அபசகுன வரிகளாகத்தான் தென்படுவது இயற்கையே.

ஆனால் அவர் அந்த கோணத்தில் அவ்வாறு கூறி சபிக்கவில்லை. உள்ளதை உள்ளபடி அறிந்து கொள் என்பதை நமக்கு தெரிவிக்கவே நமக்கு இந்த நூற்பாக்களை வழங்கியுள்ளார் என்பதை ஆராயும் போது விளங்கிக் கொள்ளலாம். 

 -- -- -- -- --

நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், பல நண்பர்கள், மருத்துவர்கள் உதவி செய்தாலும் ஒருநாள் இவ்வுடலை அழிவதிலிருந்து காப்பாற்ற இயலாது என்று தெரிந்திருந்தும் அதன் மீது நிரந்தரப் பற்றை வைத்து ஏன் மயங்குகிறோம். இந்த உணர்வை விலக்கு என்பதற்காக…

இன்றில்லாவிட்டால் நாளை உடல் முழுதும் அழிந்துவிடும். உடல் என்பது சிந்தனைக்கு உரியது அன்று. ஆனால் மனதின் சக்தி அடுத்த பிறவியில் கூட நம்மோடு இருக்கும் . ஆகவே காம, பற்று சிந்தனை இல்லாமல் கணத்துக்கு கணம் வாழ்பவன் உண்மையிலேயே வாழ்கிறான். அவன் தனது மனதின் ஆற்றலை சேமித்து கொள்கிறான். நிஷ்காமிய கர்ம யோகத்தில் வாழ் என்றுதான் அந்த கருமைநிறத்தவனும் அங்காங்கே அள்ளித்தெளித்திருக்கிறான். அதாவது கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று. பலன் பற்று வைக்கும்போதுதான் நம்மை கவ்விக்கொள்கிறது என்பதை தேரோட்டி வேடத்தில் வந்தாலும் மனஓட்டத்தை நிறுத்து என்று சொல்லிச் சென்றுள்ளான்.

கண்டிப்பாய் ஒரு நாள் உங்கள் உடல் கெட்டுப் போய்விடும். அந்த நாளிலும் நாம் இறந்து போவோம். ஆனால் அந்த நேரத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் நமது கைநழுவி போய் விட்டிருக்கும். ஆனால் இப்போதோ நமது உடல் இங்கேயே இருக்கிறது. நாமும் இன்னும் சுவாசித்து கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே இப்பவே இறந்து போகலாம். நாம் உயிரோடு இருக்கும் போதே இறப்பது என்பது ஒரு மிக புதிய அனுபவம்.

ஞான பாதையின் சாராம்சம் இதுவாகவே, இதுவாக மட்டுமே இருக்க முடியும். அழியக்கூடியதையும் அழிவற்றதையும் தனித்தனியாக பிரித்து பார்க்க கூடிய தன்மையை அடைவது என்பதுதான். அதாவது "நாம்" என்றால் என்ன? நம்முடைய உடல் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வதும் தான் .

பிறகு, நாம் மற்றவர்களை போல வாழ மாட்டோம். நம்முடைய வாழ்க்கையானது ஒரு உன்னதமான நிலையை அடைந்து விட்டிருக்கும். உள்ளே உயிர்ப்பு தன்மையுடனும், வெளியே ஒரு சவத்தை போலவும் காணப்படுவோம். இதுதான் உண்மையான ' சமாதி' நிலை. இப்போது நாம் எதற்கும் பயப்பட மாட்டோம். 

-- -- --

தினமும் மரணம் சம்பவித்துக் கொண்டுதானிருக்கிறது... ஆயினும் மக்கள்...தமக்கு மரணமே ஏற்படப் போவதில்லை... என்கிற தோரணையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்..." நமக்கும் ஒருநாள் மரணமுண்டு என்பதை யாருமே நினைத்துப் பார்ப்பதில்லையே...

இத்தனை மரணங்களுக்கு இடையே…. இத்தகைய 'விசுவாசம்' ஏற்படக் காரணம் என்ன?

இந்த 'விசுவாசம்' மிகவும் அர்த்தப்பூர்வமானது. மரணிக்கும் உடலில் அமர்ந்திருப்பவன் என்றும் மரணிப்பதில்லை.

மரணம் மேற்பரப்பாய் உள்ளது. ஆனால், மையத்தில் மரணமில்லை. உடல், மனம் என்பதை பகுத்து பார்த்துக் கொண்டிருப்பவன் நன்கு அறிகிறான், நான் உடலுக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டவன் என்று...

மரணத்தை பார்த்துக் கொண்டிருப்பவன் மரணமாக மாட்டான். அவனுக்குத் தெரியும், தனக்கு மரணமில்லை என்பது.

மரணம் என்பது வெறும் உடலின் மாறுதலே. நான் நித்தியமானவன்... எல்லாவித மரணங்களையும் பலபிறவிகளில் கடந்தவன் தான் என்று இதனை உணர்தலே முக்தி அடைதலாகும்...

மரணம்" கண் எதிரே காட்சி தருகிறது. அமரத்துவத்தின் ஞானமோ" மறைவாக உள்ளது. அதையும் பிரதட்சயமாக்கிக் கொள்கிறவனே... பிறப்புமில்லை... இறப்புமில்லை..என்பதை அறிந்து கொள்கிறான்...

வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு ஜீவனை அடைதலே மோட்சமாகும்... அது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு. அதை அறிந்து கொண்டால் போதும். 

-- --------------------------------

மஹாவீரர் போன்ற ஒரு சாதுவை யாரோ கேட்டார்கள்...

மரணம் என்றால் என்ன?" வாழ்வு என்றால் என்ன? இதனை அறிந்து கொள்ளவே நான் உங்களிடம் வந்துள்ளேன்...

அதற்கு, சாதுவானவர் கொடுத்த பதில்...

அப்படியென்றால் வேறெங்காவது செல்லுங்கள்; நான் இருக்கும் இடத்தில் மரணமும் கிடையாது... ஜீவனும் கிடையாது... என்றும் அமைதியே, ஆனந்தமே என்றார்.





 

அவச்யம் நஸ்வரைரே பிராயு: காயாதி பிர்யாதி | 

ஸாச்வதம் பதமாயாதிமுதா அயாதமவேஹி தே ||70||

If eternal place (liberation) can be had through these necessarily perishable age, body, etc., and then know that thou hast obtained it easily.
அழியா நிலையான முக்தி யடைய இந்த அழியும் ஆயுளும் உடலும் தேவைதான். இவற்றை நீ இப்போது பெற்றிருக்கிறாய். இதனை எனது என நினையாமல் அழிவதற்கு முன்பாகவே விரைந்து நீ இதனை பயன் கொள்வாயாக!

ஆ(ன்மா ஓரு உடல்)உள் இருக்கும் காலம் ஆயுள். ஆன்மா உடலை ஆளும் காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை உணர்தல் வேண்டும். அது சகல ஜீவராசிகளுக்கும் பொருத்தமாக அந்த கதிக்கேற்ற அளவில் அமைக்கப்பட்ட கால அளவு.

அது காலத்தால் நிர்ணயமும் செய்யப்பட்டது. அதனை யாராலும் கூட்ட இயலாது. குறைக்க முயல்வது முட்டாள் தனமானது என்பதையும் உணர்தல் வேண்டும். இடைப்பட்ட நாள்கள் வாழும் காலம். அதாவது வாழ்நாள். ஒருஜீவனின் வாழ்நாள் காலத்தினால் அளவிடப்படுகிறது. அக்காலத்தின் வாழ்வுமுறையே அடுத்த பிறவிக்கான உடலை தேர்வி செய்கிறது. அதனால் உடலை தேர்வு செய்யும் முயற்சியும் அவரவரிடமே தரப்பட்டுள்ளது. பிறந்த பின் அவ்வுடலுக்கான கால அளவை கூட்ட இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதனாஅல் காலத்தின் முக்கியத்வத்தை ஒவ்வொருவரும் உணரவேண்டும். அதனால் தான் ஆயுள் முடிந்த மனிதரை காலமானார் என்றார்கள் தமிழில். உயிரினும் மேலானது காலம், வாழ்நாள் என்பதை அறிவுறுத்தவே பலவழியிலும் முன்னோர்கள் முயன்றுள்ளார்கள். அக்காலத்தில் ஒருவர் ஈடுபடும் இலட்சியத்தின் முயற்சிகளே அடுத்த பல பிறவிகளையும் வரையறை செய்கிறது என்பதே சமண தரிசனத்தின் வினக்கொள்கையின் நோக்கம். அதனால் ஆயுள் எனும் அக்காலத்திய புருஷார்த்தமே உனது வாழ்வை உய்யச் செய்து விடுதலையை அளிக்கும் என்பதை உணரவேண்டும்.

நம் புறஉலகு சார்ந்த இலட்சியங்கள் ஆயுள் காலத்திற்குள் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அடுத்த பிறவிக்கான இலட்சியத்திற்கான திட்டத்தையும் இப்பிறவியிலேயே முடிவு செய்யவும் சமணம் வழிவகுக்கிறது. அதுவே புருஷார்த்தம் ஆகும். இவ்வுலக வாழ்க்கையில் இன்பத்திற்கான கால அளவைக்கூட்டியும், வரும் பிறவியிலும் அதுபோன்ற இன்பநாட்களுக்கான கால அளவை கூட்டவுமான நடத்தைகளை நல்லொழுக்கமாக அளிக்கிறது.

அவ்வாறாக ஒரு பிறவிஉயிர் எவ்வளவு முயற்சி செய்தாலும் 33 கடலாயுட் காலமே இன்பம் நீட்டக்கப்படும். அனுத்தர விமானத்தில் வாழ்ந்தாலும் அந்த ஆயுட்கால சுகமே ஒரு உயிர் பெறும் என்பதையும் பிரபஞ்ச ஜீவராசிகளின் விவரங்களை கரணானுயோகத்தில் தந்துள்ளது.

அவ்வாறான ஒரு சுகி ஜீவன், தேவஆயுள் பெற்று நீட்டப்பட்டாலும் மீண்டும் இறந்து இப்பிரப்பஞ்சத்தில் துன்பத்தை அனுபவித்தே மீண்டும் அந்த உயர் ஆயுள் சுகியாக வாழ இயலும் என்பதே இப்பாடலின் வழித்தெளிவு.

தேவ கதி, மனிதகதி, விலங்கு கதி, நரககதி என்ற சுழற்சியில் முழுதுணர் ஞானத்தை அடைந்த தீர்த்தங்கரராக இருந்தாலும் வாழ்நாட்களை நீட்டி முயற்சியில் ஈடுபட்டு இன்பத்தை அனுபவிக்க இயலாது. அதனால் உடல்களிலிருந்து விடுதலை பெற்ற பிறவாநிலையே ஒரு ஆன்மாவிற்கு பேரின்பத்தை நிலையாய் அளிப்பது. அந்த சித்த ஆன்ம நிலைக்கே நிரந்த வாழ்நாள் அளிக்கப்பட்டது.

அந்த சித்தநிலையை பெற நீ இந்த பிரபஞ்சத்தில் உடலற்ற நிலையை அடைய முயலவேண்டும். அதுவே சிறந்த புருஷார்த்தம், அதாவது மானுடத்தின் சிறந்த இலட்சியம் என்பதை உணர்த்துகிறார் அக்கால ஞானி ஆச்சார்யர் ஸ்ரீ குணபத்ரர்.







கந்துமுச்ச் வாஸனி: ச்வாஸைரப்யஸ்யத்யேஷ் ஸந்ததம் | 

லோக: ப்ருதகிதோ வாஞ்சத்யாத்மாநமஜராமரம் || 71 ||

This (life) constantly practises to go out by breaths coming in and going out. The people, on the other hand, wish the present life to be undecayable and immortal.
இந்த உயிர் எந்நேரமும் வெளியேறியவண்ணமே மூச்சுக்காற்றை வெளியேற்றுவதும் உள்ளே இழுப்பதுமான சுவாசத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் மனிதர்களோ இதை உணராது இன்றைய வாழ்வு நிலையானது, அழியாதது என்று விருப்பங் கொள்கின்றனர்.

ஆச்சார்யஸ்ரீ அவர்கள் கலையும், பொறியியலும், வானியலும், மருத்துவமும் கற்றறிந்து பல்கலை அறிவியல் நிபுணர், பேராசிரியர் என்பதை நமக்கு வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். He knew all branches of science. என்னே ஒரு அறிவாற்றல்.. (ஒரு வேளை நான் மரமண்டையாக கூட இருக்கலாம்)

சுவாசம் செய்யும் போதும் உயிர் வெளியேறிக்கொண்டுதானிருக்கிறது என்ற தெளிவை இப்பாடலின் வழியே தெரிவிக்கிறார்.

நாம் சுவாசம் தடைபடாமல் இருக்க பல வழியிலும் பயிற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதில் பழுது ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று சரிசெய்து கொள்கிறோம். அது நல்ல முறையில் இயங்க பிரணாயாமம், ஆசமனம் போன்ற பயிற்சி செய்து முறைப்படுத்துகிறோம். தடையில்லா சுவாசமே உயிர் போகாமல் இருக்க வழிவகுக்கிறது என்றுதான் நினைக்கிறோம். அது முழுவதுமாக உண்மை இல்லை. சுவாசம் தடைபட்டாலும் சிலரின் உதவியுடன் மீண்டும் சுவாசம் வரவதற்கான முயற்சிகளையும் நாம் (வாயுடன் வாயை வைத்து காற்றழுத்தம் கொடுக்கும் காட்சிகளையும் பார்த்திருக்கலாம்) கற்று வைத்திருக்கிறோம்.

சுவாசம் தடைபட்டால் உயிர் போய்விடும் என்றுதான் நாம் சரிசெய்ய முயல்கிறோம். சுவாசம் தடைபடாமல் இயங்கும் போதும் உயிர் போய் கொண்டுதானிருக்கிறது என்று கூறுகிறார்.

சுவாசம் என்றால் என்ன?

உயிர் வாழ்கின்ற எல்லா உயிரினங்களுமே சுவாசிக் கின்றன. உயிரினத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு பணியை மேற்கொண்டிருந்தாலும், சுவாசிக்கின்ற பணியே மிக முக்கியமான முதன்மையான பணியாக விளங்குகின்றது. உயிர் வாழ்கின்ற எல்லா உயிரினங்களுமே சுவாசிக் கின்றன. உயிரினத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு பணியை மேற்கொண்டிருந்தாலும், சுவாசிக்கின்ற பணியே மிக முக்கியமான முதன்மையான பணியாக விளங்குகின்றது.

ஆமாம், நாம் உயிர் வாழ்வதற்கு காற்று மிகவும் கட்டாயமாகத் தேவைப் படுகிறது. காற்றில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு உறுப்புக்களுக்குத் தருவதும், உறுப்புக்கள் உண்டாக்குகிற கரியமில வாயுவை வெளியே அனுப்பி வைத்து விடவும் கூடிய வேலையைத்தான் சுவாசம் (Respiration) என்கிறோம்.

இந்த சுவாசம்; சுவாசத்தொகுதி, மூச்சுத்தொகுதியினால் நடைபெறுகிறது. மூச்சுத்தொகுதியால் உள்மூச்சு மூலம் ஆக்சிஜன் விகிதம் அதிகமுள்ள காற்று உள்ளெடுக்கப்பட்டு, வெளிமூச்சு மூலம் கார்பன்டைஆக்சைடு விகிதம் அதிகமுள்ள காற்று வெளியிடப்படுகின்றது. அவ்வியக்கம் உடற்கூறு அல்லது அமைப்பை சரிசெய்ய பயன்படுகிறது. இதுவே உடலின் பெரும் பயன்பாட்டிற்கு வழிவகை செய்கிறது. பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்கும், இந்த சுவாச வேலை தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. சுவாசம் இல்லாமல் எந்த உயிரும் இயங்க முடியாது. எப்பொழுது சுவாசம் நின்று விடுகிறதோ, அப்பொழுதே அதற்கு உடல் என்ற பெயர் போய்விடுகிறது.

இயந்திரம் இயங்கதேவையான மின்சாரம் போன்று, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற ஒரு சக்தி தேவைப்படுகிறது. இந்த முச்சுத்தொகுதி எனும் இப்பொறி இயங்க உயிர்சக்தி எப்போதும் தேவைப்படுகிறது. எந்த ஒரு இயக்கமானாலும் சக்தி விரயமாவது உறுதி. அதுபோல் உயிர் இருப்பிருந்து உயிர்சக்தி சுவாசம் உள்ளிழுக்கப்பட்டாலும், வெளியேற்றப்பட்டாலும் சக்திவிரயமாகின்றது என்பதை உணர்தல் வேண்டும்.

ஆக மூச்சு இயங்கினாலும் ஒவ்வொரு மூச்சிலும் உயிர் போயிக்கொண்டுதானிக்கிறது. ஆயுள் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு முச்சிலும் நாம் மரணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் மூச்சுக்காற்றால் உயிரை பெருக்கிக் கொண்டு வாழ்வதாகவும் அது உயிர் விரயத்தை ஈடு செய்து நம்மை வாழ வைப்பதாக, தவறான புரிதலில், மாயநிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அதனால் இந்த வாழ்க்கை, வாழ்நாள் ஒவ்வொரு மூச்சிலும் கழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாம் நம் வாழ்க்கை நிலையானது அழியாதது என்றுதான் நினைத்து பலவிருப்பங்களை பெருக்கி, அதற்கான திட்டங்களை தீட்டி அதில் வெற்றிபெறும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதனால் ஒவ்வொருகணமும் விரயமாகும் உயிர்ச்சக்தியை பொருட்சார்ந்த விருப்பத்தில் வீணடிக்காமல், பேரின்பத்தை அளிக்கும் புருஷார்த்த வழிகளில், முக்தி வழி முயற்சிகளில் மடைமாற்ற அறிவுறுத்துகிறார் முனிவர் பெருமான்.








 
கலத்யாயு: ப்ராய: ப்ரகடிதகடியந்த்ரஸலிலம், 

கல: கயோ அப்யாயுர்கதிமனு பதத்யேஷ ஸததம் | 
கிமஸ்யான்யைரன்யைர்த்வயமயமிதம் ஜீவிதமிஹ, 
ஸ்திதோ ப்ராந்த்யா நாவி ஸ்வமிவ மனுதே ஸ்தாஸ்னுமபதீ: || 72 ||

Age, is constantly running out, like water from the bucket of the well-known water-drawing wheel. This wicked body too is always following the course of age. What to say of this soul’s friendship with others in this world, (when) these two (body and age) are such (ie, transient). It is only a fool, who like one sitting in a boat, thinks himself, out of illusion, to be steady.
நீர்நிலையிலுள்ள இராட்டை எப்படி வாளி வாளியாக நீரை வெளியேற்றுகிறதோ, அதுபோல ஆயுளும் எப்போதும் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த உடலோ ஆயுளுடன் கூட தொடர்ந்து சென்று கொண்டுள்ளது. இவைகளே இத்தன்மையாய் உள்ளபோது உலகில் பிறரது உறவும், நட்பும் எத்தகையது என்று சொல்வது? படகில் உட்கார்ந்திருக்கும் ஒருவன் மாயையால் தனக்குள் தான் நிலையாக (அசையாது) இருப்பதாக எண்ணியிருப்பது போன்ற அறியாமையேயாகும்.

-- -- -- -- -- -- -- -- -- உடல் இருக்கும்போது இந்த உயிர் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வில்லை என்றால், உடல் போனபிறகு அது எப்படி செயல்படும் என்பது வெறும் கட்டுக்கதையாகத்தான் இருக்கும்.

எப்போழுது ஒரு கட்டுக்கதை சொல்கிறோமோ பலவிதமான கற்பனை ஓடத்துவங்கும். ஆனால் ஒரு புதுபரிமாணம் என்பது உணராமல் புரிந்து கொள்ள முடியாது. இதனால் மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்று என்பதை பேசுவதை தவிர்த்தல் நலம். நாம் உடலோடு இருக்கும் போது உயிர் எவ்வாறு செயல்படும், அதன் தன்மை என்ன அதன் மூலம் என்ன என்பதை தெரிந்து கொண்டால் உணர்ந்து விட்டால் மரணத்தைப்பற்றிய கேள்வியே இருக்காது. அதனைப்பற்றி கவலையும் இல்லாமல் வாழமுடியும். இந்த உடலுக்குள் செயல்படும் இவ்வுயிர் எந்த ஒரு உடலுக்குள்ளும் அவ்வாறே செயல்படும் என்ற நம்பிக்கை, மரணம் பற்றிய அச்சத்தை, அதன் பிறகென்ன என்ற ஐயத்தை போக்கவே செய்யும். அதற்கான வழிகளைத்தான் நம் முனிவர்கள் முயன்றிருக்கிறார்கள்.

உடலுக்கு பல பொருளைக் கையாள இவ்வுலகில் எவ்வளவோ கருவிகள் உள்ளன. அதுபோல உயிருக்கான கருவிகள் கண்டிப்பாய் இருக்கும் ஆனால் மனதால் புரிந்து கொள்ளும் அளவில் தத்துவமோ, போதனைகளோ சரியாக வழங்க இயலாது. அதன் பயன்பாட்டை, உபயோகத்தை வைத்துத்தான் புரிந்து கொள்ள இயலும்.

அதற்கான கருவிகள் ஏராளமாய் இருந்தும் பயன்படுத்தாமல் இருக்கும் போது உயிரைப்பற்றிய தெளிவு வருவது கடினமே. அதனால் அதன் பயன்பாட்டை, உபயோகத்தை ஒழுக்கத்தின் வழியே, நடவடிக்கைகள் வழியே கடைபிடித்து உணரவே முடியும் என்பதை பல வகையிலும் நமக்கு நம் முனிவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுவே நல்ஞானம் என்றும் சொல்வர். அதனால் இப்பிரபஞ்சம், உயிர் பற்றிய உணர்வுகளுக்கான ஜன்னல்களை அடையாளம் காட்டுகிறார்கள். அதன் வழியே இப்பிரபஞ்சத்தை கண்டாலொழிய, அதற்கான வாசலை தேடி அதன் வழியே வெளியே செல்ல முயற்சி செய்வோம். அதுவரை வெறும் சொற்களாக, வரிகளாக, வார்த்தைகளாகவே இருக்கும் என்பதே நிதர்சனம்.

-- -- -- -- -- -- -- -- -- வட இந்தியாவில் சில கிராமங்களில் பெரிய ரங்கராட்டினம் போன்ற அமைப்பின் ஆரத்தில் பல வாளிகளை தொங்கவிட்டு அதனை நீர் நிலையில் மேற்பரப்பிலுள் அமிழ்ந்து செல்லுமாறு அமைத்திருப்பார்கள். அதனை சுழற்றும் போது அந்த ராட்டையிலுள்ள வாளிகள் நீர்பரப்பில் மூழ்கும் வேளையில் நீரை நிரப்பி மேற்பரப்பிற்கு வரும்போது வாய்க்காலில் இறைத்து விடுவார்கள். அது தொடர்ந்து செயல்படும் போது அதிக அளவில் நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும்.

அந்த அமைப்பை உதாரணமாக இந்நூற்பாவில் எடுத்துக்காட்டாக தெரிவிக்கிறார் ஆச்சார்யஸ்ரீ. அதே போன்று உயிர் ஆற்றல் உடல் எனும் இராட்டையினால் வெளியேற்றப்பட்டு ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது என்கிறார். உடல் என்றும் உயிர்சக்தியினால் இயங்குவதால் அதன் சக்தி விரயத்தை நிறுத்த இயலாது.

அதனால் இந்த உடலை இயக்க மனமானது முன்வரும்போது உடலுக்கு ஆற்றலைக் கூட்ட எந்த வகையிலும் உதவி செய்ய இயலாது. அதே சமயம் அதன் இயக்கத்தை கூட்டி ஆற்றலை வீணடிப்பதில் மட்டும் முனைப்புடன் செயல்படும். அதாவது தவறான இவ்வுலக பொருட் சேமிப்பில் பற்று வைத்து உயிர்சக்தியை வீணடித்துக் கொண்டே இருக்கும். அதனால் அதன் பிடியிலிருந்து விலகி, நல்லொழுக்க வழியில் பயணித்தால் உயிராற்றல் பிறவிச்சுழற்சிகாக வீணாக்காமல், நன்முறையில் செலவிடப்பட்டு விடுதலைக்கு வழிவகுக்கும் என்று அறிவுறுத்துகிறார்.

அதனால் இப்பிறவிக்கடலில் மனம் என்னும் படகில் பயணம் செய்யும் போது பிரேமையால் தனது ஆயுள் கழியாமல் நிலையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறி விழிப்புணர்வைத் தருகிறார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள்.








உச்சுவாஸ: கேதஜன்யத்வாத் துக்கமேஷோ அத்ர ஜீவிதம் | 
தத்விராமோ பவேன்ம்ருத்யுர்ன்ருணாம் பண குத: சுகம் || 73 ||

Life here is painful on account of the fatigue arising from breathing: on its cessation, there is death. Say where is happiness (then) for human kind.
சுவாசத்திலிருந்து எழும் சோர்வு காரணமாக இங்குள்ள வாழ்க்கை வேதனையானது: அதன் நிறுத்தத்தில், மரணம் இருக்கிறது. மனித இனத்திற்கு மகிழ்ச்சி (பின்னர்) எங்கே என்று சொல்லுங்கள்.

சுவாசம் செய்தால் உயிர் விரயம் என்று முன்பாடலில் கண்டோம். இந்தப்பாடலில் சுவாசக்கோளாறு வந்தால் அதனால் ஏற்படும் வலி, வேதனையைப் பற்றி தெரிவிக்கிறார் முனிவர் பெருமானார்.

"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!" என்று மனித உடலைப்பற்றி பாடினார், பட்டினத்தார். உண்மையும் அதுதானே! "உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" என்றார், திருமூலர். உள்ளத்தில் உள்ள உற்சாகம், முகத்தில் உள்ள பொலிவு, உடலில் உள்ள வலிமை, இவை அனைத்துக்கும் காரணம், நாம் சுவாசிக்கும் காற்றே என்றால், என்ன நினைப்போம்?

இந்த உலகில் உள்ள ஒரு செல் உயிரினம் முதல், ஆறறிவு படைத்த மனித இனம் வரை, அனைவரின் வாழ்க்கைக்கும், தேவையானது காற்று! பேரண்டப் பரவெளியில், உயிர் வாழத்தேவையான பிராண வாயு காற்று நிரம்பிய ஒரே கோளாக இன்றுவரை, நாம் வாழும் பூமியே, அறியப்பட்டு வருகிறது.

மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை, ஒரு நிமிடத்துக்கு சராசரியாக பதினைந்து என்ற அளவில் இருந்தால், நூறு ஆண்டுகள் வரை வாழலாம். ஆனால் நிமிடத்திற்கு பதினெட்டு முதல் இருபது என்ற அளவில் சுவாசித்தால், எழுபது ஆண்டுகள் முதல் எண்பது ஆண்டுகள்வரை உயிர்வாழலாம். இருபதுக்கும் மேலும் கூடுதலாகத்தான் பலரும் சுவாசிக்கின்றனர் என்பது அவர்கள் படும் அவஸ்தையே காண்பிக்கிறது.

படிஏறினாலே நெஞ்சடைக்கிறது. இரண்டாவது தளம், மூன்றுமாடி என்றால், அதிலும் லிப்ட் இருந்து வேலைசெய்யவில்லை என்றால் நினைத்தாலே மூச்சு நின்றுவிடும் என்று தோன்றுகிறது. மலைஏற்றம் சொல்லவே வேண்டியதில்லை. நம்ம சமணர் மலைகளுக்கு மேலேறும் ரயில் வைத்தால்தான் தரிசனம் என்றளவில் தான் நாம் பலரும் உள்ளோம். இல்லையெனில் தூக்குதூக்கிகள், லோலி வாலாக்களின் உதவியிருந்தால் தான் தரிசனம் என்றளவில் நம் மூச்சுக்கு எவ்வளவு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

BMI (Body mass index) சார்ட்க்கு வீதம் மாறும் போது என்னென்ன கோளாறுகள் என்று காணும் போது முதலில் மூச்சுதான் அதன் அறிகுறியாக உள்ளது.

உடலில் இதய நோய், மூட்டுவலி எனப் பெரிய பெரிய நலக் குறைபாடுகளுக்குக்கூட மருந்து, மாத்திரை சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆனால், இந்த சளியும் ஜலதோஷமும் இருக்கிறதே... அது வந்துவிட்டால், அதற்காக மாத்திரை சாப்பிட்டாலும்கூட ஒரு வாரம் பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டுத்தான் நம்மைவிட்டு அகலும்.

சளித் தொந்தரவு வந்துவிட்டால், முழுமையாக வேலையில் கவனம் செலுத்தவோ, நிம்மதியாகத் தூங்கவோகூட முடியாது. ஆகவேதான் சளி என்றாலே பலருக்கும் அழற்சி, அருவருப்பு ஏற்படுவது இயல்பு. சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால், சைனஸ், தூசி மற்றும் நுரையீரல் அழற்சி உள்ளவர்களின் நிலையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

குறிப்பாக சைனஸ், நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு கோடை, குளிர், மழைக்காலம் என எந்தப் பருவகாலமும் விதிவிலக்கு இல்லை.

இது ஒருபக்கம் இருக்க, புகைப்பழக்கம், நகரமயமாக்கலால் காடுகள் அழிப்பு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனால் நுரையீரல் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இயல்பாகவே அதிகரித்துவருகின்றன. இதுபோன்ற காரணங்களால் நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற கடுமையான நுரையீரல் பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன.

இதுபோன்ற இவ்வுலக வாழ்க்கையில் சுவாசப் பிரச்சனைகள் அன்றாடம் ஏதோ ஒருவகையில் மூச்சுத்திணறலில் மாட்டி அவஸ்தை பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஜன நெருக்கடி வியர்வை நாற்றம் ஒன்றே போதும்.

மூச்சினால் ஏற்படும் வலிக்கும், கோளாறுகளால் வரும் வியாதியால் படும் வேதனைக்கும் அளவே இல்லை. அக்கோளாறு காலத்தில் மூச்சு நின்று விட்டால் மரணம் என்ற எச்சரிக்கையுணர்வு ஏற்படுகிறதே அதுவே மேலும் கொடுமையானது இவ்வுலகில், அவ்வாறான வாழ்க்கையில் மனித இனத்திற்கு ஏது மகிழ்ச்சி என்கிறார் ஆச்சார்யஸ்ரீ.










ஜன்மதால த்ருமாஜ்ஜந்துபலானி ப்ரச்யுதான்யத: | 

அப்ராப்ய ம்ருத்யுபூ பாசுமந்தரே ஸ்யு: கியச்சிரம் || 74 ||
Living beings are (like) fruits, falling down from the palm-tree of birth. How long can (they) be in the intervening space before they reach the ground of death?
உயிருள்ள ஜீவன்கள் பனைமரப் பழங்களைப் போன்று (பிறவி எனும் மரத்திலிருந்து) ஒருநாள் கீழே விழுகின்றன. அவை மரணத்தின் நிலையை அடைவதற்கு முன்பு (அவைகள்) இடைப்பட்ட நேரத்தில் எவ்வளவு காலம் இருக்க முடியும்?

மனிதன் பலபிறவிகளைக் காணும் போது மிகச்சிறிய காலமே வாழ்ந்து மடிகிறான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தானே வாழ்க்கை. பிறக்கும் போது நமது வருகை வெறுமையான வரவு, அது போல தான் வெளிச் செல்கையும் அமைகிறது.

இந்த வாழ்க்கை பயணத்தில் இடையில் வந்து இணையும் பந்தங்கள் இடையில் விட்டுச் செல்கிறது. அல்லது நாம் இடையில் விட்டுச் செல்கிறோம். இங்கு யாரும் யார் மீதான இருப்பை வலியுறுத்த முடியாது. அவ்வாறு வலியுறுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறான அதிகாரம் என்பது நம் மனதில் உதிக்கும் ஆசையாகும்.

இவ்வூரில் உள்ள ஏதாவது ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வரவேண்டும். அவ்வாறு மண் எடுக்கும் வீடு இதுவரை மரணம் நிகழாத வீடாக இருக்க வேண்டும் என்றால் அது கிடைக்குமா என்ன?

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. – குறள்.

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும் என்றார் குந்தகுந்தாச்சாரியார்.

நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணுவதும், பொய்யானவற்றை மெய்யானவை என்பதும் மாயை. இம்மயக்கம், ஆன்மா தன் உண்மை நிலையை அறிய விடாமல் தடுக்கிறது. ‘பொருள்களின் புறத்தோற்றங்களையும் இயல்புகளையும் உண்மை எனக் கொள்ளாமல் அவற்றைக் கடந்துசென்று நிலைத்த உண்மையைக் காண்பதே அறிவு என்பார் வள்ளுவர். இந்த நிலைத்த அறிவு நிலையாமையினை முழுப்பொருளையும் நன்கறிந்து செயல்படும்.

‘இளமையும் நில்லா யாக்கையும் நில்லா இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா’. என்று சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் நிலையாமை குறித்துப் பேசுகின்றார். உலகில் காணப்படும் யாவும் நிலையற்றன என்று அறிந்தும் மக்கள் அவற்றின் மேல் பற்று வைப்பதற்குக் காரணம் பாசபந்தமேயாகும். ஒன்றின் மீது பற்று வைத்தவர் அதனைப் பிரியவோ இழக்கவோ நேரும்பொழுது அதனால் துன்புறுவதும் இயல்பானதாகும்.

‘மனித வாழ்க்கையானது நீர்க்குமிழி போன்று நிலையற்றது. இந்த உண்மையை உணராது இந்த உலகியல் வாழ்வில் என்றும் நிலைத்திருப்போம் என்றெண்ணிப் பசித்தோர்க்குச் சிறிதளவு உணவும்கூட அளிக்காமல் சிலர் வாழ்கின்றனர். அத்தகையோர் இறந்தால் அவர்களுக்காக யாரும் வருந்தமாட்டார்கள் என்று ஈகையை வலியுறுத்துகிறார்கள் ஞானியர்கள்.

‘ஒவ்வொரு மனிதனின் உலகியல் வாழ்க்கையும் என்றேனும் ஒருநாள் முடிவுக்கு வந்தே தீரும் என்பது தெளிவான உண்மை. இந்த உண்மையைஉணர்ந்து யாவருக்கும் மனத்தாலும் தீங்கு செய்யாமல் வாழ வேண்டும்” அறிவுறுத்துகின்றார்கள் பெரியோர்கள்.

வாழ்க்கை நிலையற்றது என்ற கருத்தை உணரும்போதுதான் மனிதன் நிலையில்லாத வாழ்க்கைக்காகச் சேர்த்து வைக்கும் பொருள்களெல்லாம் வீண் என்ற எண்ணம் தோன்றும். இத்தகைய எண்ணம் வாழ்க்கையை எளிமையானதாக மாற்றிக்கொள்ள வழி செய்யும். உலகியல் பொருள்கள் நிலையற்றவை என்ற எண்ணம் முத்தி நிலைக்குப் படிக்கட்டு எனலாம்.

நீரில் எழுதப்படும் எழுத்து உடன் மறைவது போன்று யாக்கையும் விரைவில் அழியும் இயல்புடையது. இது பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றிற்கு ஆட்பட்டு நிலைதடுமாறும் தன்மை உடையது. உடலில் உயிர் உள்ளவரை மட்டுமே உடம்பிற்கு மதிப்பு. உயிர் பிரிந்தவுடன் அதைப் பிணம் என்று தீயிட்டு எரித்துவிடுவர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் எனும் மும்மணியைக் கைக்கொண்டு ஒழுகுதல் நல்ல புருஷார்த்தமாக அமையும் என்பதை உணர்த்துகிறார் ஆச்சார்ய ஸ்ரீ குணபத்ர ஸ்வாமிகள்.







க்ஷிதி ஜலதிபி: ஸங்க்யாதிதைர்பஹி: பவனைஸ்த்ரிபி: 

பரிவ்ருத்தமத: கேனாதஸ்தாத் கலாஸுரனாரகான் |
 உபரி திவிஜான் மத்யே க்ருத்வா நரான் விதிமந்திரிணா, 
பதிரபி ந்ருணாம் த்ராதா நைகோ ஹாலந்த்யதமோஅந்தக: || 75 ||
The minister_Karma has placed evil-minded asura (kind of celestials) and hellish beings below, the heavendly beings above: and human beings in the middle (of universe) and surrounded them with innumerable continents and oceans, and further with the three sheaths of atmosphere, there is not even one protecting guardian of man-kind. Surely dealth is most insurmountable.
மந்திரி (போல் தண்டனையளிக்கும்)__ கர்மா தீய எண்ணம் கொண்ட அசுரர்களையும் (ஒருவிதமான வானங்களும்), நரக மனிதர்களையும், மேலே உள்ள பரலோக தேவர்களாலும்: மற்றும் மனிதர்களை நடுவில் (பிரபஞ்சத்தின்) வைத்து, அவற்றை எண்ணற்ற கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களால் சூழ்ந்திருக்கிறார்கள், மேலும் வளிமண்டலத்தின் மூன்று உறைகளுடன் , மனிதனின் வகையான பாதுகாவலர் ஒருவர் கூட இல்லை. நிச்சயமாக பற்றாக்குறை மிகவும் தீர்க்க முடியாதது.

வினையெனும் மதியூகமந்திரி தீய அசுரர்களையும், நரக மனிதர்களையும் கீழுலகிலும், மேலே தேவர்களையும் அமைத்து மனிதர்களை கடல்களால் சூழப்பட்ட எண்ணற்ற தீவுகளுக்கிடையே உள்ள மனிதர்களை தன் கண்காணிப்பில் வைத்துள்ளான். அதுமட்டுமல்ல இவைகளைச் சுற்றி மூன்று காற்று வலயங்களை தப்பித்துவிடாமல் பாதுகாப்புஅரணாக அமைத்துள்ளான். இவ்வாறான அமைப்பிலிருந்து (எந்த ஒரு) மனிதனும் தப்பிக்க இயலாது. எந்த ஒரு சக்தியாலும் மரணத்திலிருந்து அவனை காப்பாற்றவும் இயலாது. (அதனால்) மரணத்தை யாராலும் வெல்லமுடியாது.

மிகச்சுருக்கமாக பிரபஞ்சத்தைப்(லோக ஸ்வரூபத்தை) பற்றிய குறிப்பும், இங்கு வாழ்பவரின் நிலையும் பற்றி மிக அழகாக இந்நூற்பாவில் ஆச்சார்யர் ஓரு பிரபஞ்ச விஞ்ஞானியைப் போலத் தெரிவித்துள்ளார். நல்ல ஒரு வழிகாட்டுதலை வழங்கி நம்மை எச்சரிக்கவும் செய்கிறார்.

ஒரு நுட்பமான சக்தியொன்று இந்த பிரபஞ்சத்தில் உன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தீய/நல்லதானவற்றை எக்கணம் செய்தாலும் அதன் பிடியிலிருந்து நீ ஒருநாளும் தப்பிக்க இயலாது. அச்சக்தியே உனக்கான காலத்தை நிர்ணயம் செய்கிறது. அச்சக்திக்கு இணக்கமாகவே காலமும் செயல்படுகிறது. இந்த இணைப்பை எந்த ஒரு இந்திரனோ, சந்திரனோ, சக்கரவர்த்தியோ, அமானுஷ்ய சக்தியாய் கூறிக்கொள்ளும் எந்த ஒரு கடவுளாலும் அந்த காலத்தை வென்று உன்னைக் காப்பாற்ற முடியாது என நம்மை எச்சரிக்கிறார்.

இந்த பிரபஞ்சத்தில் செயல்களுக்கேற்ற விளைவினை வழங்க வினைத்துகள்கள் எந்நேரமும் எல்லா பிரதேசங்களிலும் சூழ்ந்துள்ளது. அது ஒவ்வொரு ஜீவராசியையும் கண்காணித்துக் கொண்டே வருகிறது.

பிரபஞ்சத்தில் ஆகாசத்திரவியம் உள்ள லோகஸ்வரூபம் எனும் லோகாகாச அமைப்பில்… சித்தஷீலா – (விடுதலைபேறடைந்த ஜீவன்கள் உறையுமிடம்), ஊர்த்துவ லோகம் (மேலுலகம்), மத்திமலோகம் (மத்திய உலகம்), அதோலோகம் (கீழுலகம்) என நான்கு பகுதிகள் உள்ளன.

ஊர்த்துவலோகமான மேற்பகுதியில் உள்ள பல்லண்டங்களில் வசிக்கின்றனர்கள் கல்பாதீத தேவர்கள். (சமஅந்தஸ்திலுள்ளவர்களான) அஹமிந்திரர்களான நவக்ரைவேயகம்(9), நவானுதிசை(9), பஞ்சானுத்ரம்(5) ஆகியவற்றில் வாழ்பவர்களும்;

கல்போபன்னா(கல்பவாசி) –அந்தஸ்து படிநிலையில் (இந்திரன், காவலன் போன்ற.. ) செளதர்ம கல்பத்திலிருந்து அச்சுத கல்பம் பதினாறு சுவர்க்கம் வரையில் வாழும் தேவர்களான கல்பவாசியர்களும்;

மத்திய உலகம் தொடர்பான மனிதர்கள் வாழ்விடங்களோ லோகாகாத்தின் மையப்பகுதியில் ஒரு சிறிய அண்டமாக(galaxy) மேலும் கீழுமுள்ள பல்லண்டங்களுக்கு (multiverse) நடுவில் அமைந்துள்ளது. அதில் ஜம்பூத் தீவு, தாதகி கண்டம் முதலிய அயங்கிய(எண்ணிலடங்கா) தீவுகளும், (லவணோததி, கலோததி முதலிய அயங்கியம்) கடல்களும் உள்ளன. இந்த மத்திய உலகத்தில் மனிதர், விலங்கு, ஜோதிஷ்க தேவர்கள் மற்றும் சில வியந்தரவாசி தேவர்களாக வாழ்கின்ற ஜீவராசியினர்களும்;

கீழ்பகுதியில் பல அடுக்கு அண்டங்களில் பவணர்கள், அரக்கர்கள், பேயுருவினர் மற்றும் அதன் கீழே அதோலோகத்தில் 7 பிரிவுகளான பொந்து போன்ற பிலங்கங்களில் வாழும் தீயாத்மாக்களும்; (நரகர்கள்)

இந்த வினைத்துகள்கள் எனும் நுட்பமான பொருளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவருமே காலத்தின் வரையில் வாழ்பவர்கள். எந்த ஒரு தேவரானாலும், மனிதனாலாலும், விலங்குகளானாலும், நரகர்களானாலும், தாவரமானாலும் தனது ஆயுளை ஒரு பின்ன நொடியளவுக்கு கூட கூட்டவோ, குறைக்கவோ மாற்றியமைக்க முடியாது.

ஆயுள் வினைத்துகள் நிர்ணயிக்குள் அளவு முடிந்தவுடன், காலம் அனைவரது உடலையும் எடுத்துச் சென்று விடும்.

காலத் திரவியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வணைத்து உயிர்களும் பிரபஞ்சத்தை சுற்றி பாதுகாப்பு அரண்போன்று அமைக்கப்பட்டு மூன்று காற்று வலையங்களால் சூழப்பட்டுள்ளதால் வெளியே உள்ள அலோகாசப்பகுதிக்கு எவராலும் தப்பித்தும் செல்ல முடியாது.

இந்த பிரபஞ்சப்பகுதியிலுள்ள ஆறுதிரவியங்களின் இயல்பை மீறி எதுவும் செய்ய இயலாது. அதனால் உயிர், உயிரற்றது, தன்மம், அதன்மம், ஆகாசம், காலம் இவற்றின் இயல்பினை, உள்ளதை உள்ளபடி, அறிந்து அதற்கான சரியான நடவடிக்கைகளை(புருஷார்த்தங்களை) மேற்கொண்டால் இந்த மரணிக்கும் செயல்பாட்டிலிருந்து தப்பித்து, மரணமில்லா பெருவாழ்வினைத்தரும் நித்தியானந்த பிரதேசமான சித்தஷீலா சென்று உறைய வழியை தேடலாம் என்று அறிவுறுத்துகிறார் பிரபஞ்ச அறிவியல் மேதை குணபத்ர ஆச்சாரியர்.

( லோகஸ்வரூப வர்ணனையை அருகன் தத்துவத்தில் வரும் “சமண அண்டவியல் எனும் எனது தொடரைப்படித்து வந்தால் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.)





 

அவிஞாதஸ்தானோ வியபசுததுநு: பாபமலின:, 

கலோ ராஹுர் பாஸ்வத்தச சதகராக்ராந்த புவனம் | 
ஸ்புரந்தம் பாஸ்வந்தம் கில கிலதி ஹா கஷ்டமபர:, 
பரிப்ராப்தே காலே விலஸதி விதைள கோஹி பலவான் || 76 ||

It is great pity that the wicked trunkless Rahu, dark, from sin, and of unknown abode, verily devours the glowing sun, who with his thousand dazzling rays overspreads the earth. Who indeed is (more) powerful (than) the operative age_Karma when the time (of its cessation) arrives.
நிழல் வடிவில் தலைமட்டும் கொண்ட ராகு எனும் ஸர்ப்பம் ஆயிரம் கதிர்கள் கொண்டு பிரகாசிக்கும் சூரியனை விழுங்குகிறது எனின் இறுதிக்காலம் வந்தபின் மரணமடையச் செய்யும் ஆயுள்வினையை விட வலிமைமிக்கவர் யாரும் உண்டோ?

இந்நூற்பாவில் ஆச்சாரியர் உலகியல் வழங்கும் சூரிய கிரகணத்தை உவமையாக கூறுகின்றார். சுட்டெரிக்கும் கிரணங்களை கொண்டிருந்தாலும் சூரியனை தலைமட்டுமே யுடைய ராகு என்றும் பாம்பு விழுங்கி விடுவது போன்று, ஆன்மா எனும் சக்தியை ஆயுள் எனும் வினையால் காலம் என்ற பாம்பு போல் வந்து விழுங்கி விடுகிறது என்று ஒப்பிடுகிறார்.

காலம் என்ற திரவியம் ஆறு மெய்ப்பொருள்களில் ஒன்றானாலும் அமூர்த்தமான ஜடப்பொருளாகும். அது சத் எனும் வடிவில் எங்கும் நிறைந்திருக்கிறது. அதனால் அதை நிழல் போன்று வந்து மரணத்தை தழுவுவதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஜீவனுக்கும் ஆயுள் இருப்பு முடிகிறதோ அப்போது உயிர் அவ்வுடலை விட்டு வேறு உடலுக்குச் சென்று விடுகிறது. அரசு அன்றே கொல்லும் தப்பினால் காலம் நின்று கொல்வது நிச்சயமே என்று எச்சரிக்கிறார்.

அறிவியல் நோக்கில் சூரிய கிரணம் என்பது சந்திரனின் நிழல் வந்து விழுவதால் பூமி மறைக்கப்படுகிறது என்பதை கண்டுணர்ந்தனர். அவ்வாறெனின் உயிர் எனும் சூரியனின் கதிர்கள் பூமி எனும் உடலில் வீழ்ந்து கொண்டிருந்தாலும் உரிய காலத்தில் சந்திரனின் நிழல்(ஆயுள்) உடலை மறைத்து விடும் என்றும் கொள்ளலாம்.

மனிதனின் வாழ்நாள் ஒரு மூச்சு விடும் நேரம் அதாவது ஒரு கணமே என்று ஞானியர் கூறுகிறார்கள். அவ்வேளையில் கடந்தகால விருப்பங்களை சுமந்து எதிர்காலத்தில் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்து போகாமல் நிகழ்காலத்தில் நல்வழியே சென்று வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் வாழ்நாளை வீணடிக்காமல் நல்லொழுக்கத்தை உடன் துவக்கு என்று அறிவுறுத்துகிறார்.

வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல் (38) என்பது குந்தகுந்தரின் வாக்கு.

வீணாகக் கழியும் நாள் ஆகாமல், ஒருவன் நல்ல அறச்செயல்களைச் செய்தால் அது அவன் வாழ்நாளில்(ஆயுள்) வரும் (பயனற்ற) வழிகளை அடைக்கும் தடைக்கல் ஆகும்.

அதனால் நலச் செயல்களாற்றினால், விழுதுபோல இளமை வேரூன்றிப் போர்வைபோல போர்த்திருக்கும். அவ்வாறு அறம் ஆற்றும் அறனின் ஆயுள் தன்னைப் பாதுகாக்கும் கல்வியாக அது விளங்கும்.

வினை, விதி (நியதி), சுயத்தன்மை, காலம் இவற்றை யாராலும் மாற்ற இயலாது. அதனை உணர்ந்து, காலத்தை சாதகமாக்க நன்நெறிகளை கடைபிடித்து வாழக்கற்றுக் கொள்வதே இம்மைக்கும் மறுமைக்கும் நலம் பயக்கும்.







உத்பாத்ய மோஹமத விஹ்ருவ லமேவ விச்வம், 

வேதா: ஸ்வயம் கதத்ருணஷ்டகவத்ய தேஷ்டம் |
 ஸம்சார பீகரம ஹாகஹனாந்தராலே ஹன்தா, 
நிவாரயிதுமத்ர ஹி க: ஸமர்த: || 77 ||
What brave person (literally killer) is capable of counteracting the cruel Karma who alone has distressed all (mundane souls) with intoxication and delusion just as he pleased, like a thug, in this frightful and dense forest of the world.
மூன்றுலகம் எனும் இந்த அச்சந்தரும் அடர்காட்டில் பிறவிஉயிர்களை போதை மற்றும் மாயையால் மடக்கி துன்பப்படுத்தும் கொடிய கர்மாவை எதிர்க்கும் ஆற்றல் எவரிடத்தில் உண்டு.

மாய உலகம் இது நம்மை மயக்கத்தில் ஆழச்செய்து துன்பப்படுத்த வல்லது என்று எச்சரிக்கிறார் ஆச்சார்யர். இதிலிருந்து விடுதலை பெறும் வழியைத் தேடுவதே உசிதம் என்கிறார்.

மலைக்கும் மடுவுக்கும் மத்தியில், சூட்டுக்கும் குளிருக்கும் மத்தியில், கஷ்டத்துக்கும் நஷ்டத்துக்கும் நடுவில், இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில் நீண்ட தோர் பயணமாய் செல்லும் மனித வாழ்வில்…

உயர்த்திப்பார்க்க சிலர் நினைப்பர், வெறுத்து தாழ்த்திப் பார்க்க சில துடிப்பர்; உரிமையோடு தட்டிக்கேட்க சிலரும், தட்டிக்கழிக்க பலரும் காத்திருப்பர். திடீரென சில மாற்றங்கள் கசப்பிலும், இனிப்பிலுமாய் அதுவும் கடந்து போய் காலமே பதிலாக மாறும் கட்டாயமே இந்த மாயவுலகம்.

வாழ்க்கைப்பயணத்தில் காணும் காட்சிகளை இரசிக்க முடியுமே தவிர தொடமுடியாது, தொட்டு கட்டி வைக்கவும் முடியாது. ஒருநாள் நம்மைவிட்டு செல்வதுதோ இல்லை நாம் விட்டு விட்டுச்செல்வதோ உறுதி. எதுவும் எங்கும் என்றும் நிலைப்பதுமில்லை என்பது என்னமோ நிச்சயம்.

பணம் பணம் என்று தினம் தினம் ஓடினாலும் மனம் என்னவோ என்றும் நிரந்தர அமைதியிலில்லை. கிழக்கில் தோன்றியவனை நிறுத்தவும் முடியவில்லை, மேற்கில் சென்றவனை அனுப்பி வைக்கவும் இயலவில்லை. மீண்டும் மீண்டும் நம்மை சுற்றி வந்து வட்டமிட்ட வண்ணமே உள்ளான் இக்காலன். அவனுடன் ஓடவும் மனமில்லை, ஒளியவும் வழியில்லை, நிறுத்தவும் தெம்பில்லை. அந்த மாய ஓட்டத்தில் மாறி மாறி சுற்றி வரும் உயிர்களின் துன்பமோ கோடி என்கிறார் முனிவ பெருமான்.

ஆனால் மாயையான உலகில் தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்தி அதில் வாழ்க்கை நடத்த அனைவரும் பழிகிவிட்டார்கள். அவர்களுக்கு இதை புரிய வைக்கவும் முடியாது விளக்கவும் இயலாத நிலை. உண்மையான மெய்யை உணராமல் மாயையில் சுழல்கிறார்கள். உண்மையற்ற செயல்களில் மகிழ்ச்சியை பகிர்கிறார்கள்.

Virtual world ஒரு ஆபத்தான மனநோய்; தேவையில்லாத செயலிகளுக்கு (Mobile Apps) அடிமையாவது அதையே தன் இன்ப வாழ்வென மெய்யை உணராமல் இருப்பது. விளங்காச் செயலில் நேரத்தை வீணடிப்பது. இந்த அடிமை சமூகத்துடன், கொஞ்சம் கூட மனம் சார்ந்த புரிதல் இல்லாமலும், வாழ்வியல் பற்றிய சூழலியல் சார்ந்த அறிவு இல்லாமலும் வாழ்ந்து வருகிறோம். இதில் இருந்து வெளிவந்து மெய்யறிவை உள்வாங்கி பயணிப்போம் என்று அறிவுறுத்தவே செய்வார்.

ஊழியை தடுக்கவோ தள்ளிபோடவோ சாத்தியம் இல்லை. ஊழியோடு வாழ பழகுங்கள். தப்பி பிழைப்பது சிறு கூட்டமாக தான் இருக்கும் அந்த கூட்டம் பகவான் வாழ்வியல் முறையை பின்பற்றுவதாக அமையட்டும் என்று இம்மாயவுலக மெனும் அடர்ந்த காட்டில் மயத்தில், போதையில் வீழாது நல்ல புருஷார்த்தத்தை இன்றே துவக்கு என்று எச்சரிக்கிறார் இன்றைய சமூகத்தையும்….







கதா கதம் குத: கஸ்மின்னித்ய தர்க்ய: கலோ அந்தக: | 

ப்ராப்னோத்யேவ கிமித்யாத்வம் யதத்வம் ஸ்ரேயஸே புதா: || 78 ||

Wicked death is certainly overtaking all: it cannot be guessed as to when, how, whence, for whom, and in which way (it comes). Let all wise men look to their welfare.
பொல்லாத மரணம் நிச்சயமாக அனைத்தையும் முந்திக் கொண்டிருக்கிறது: எப்போது, எப்படி, எங்கிருந்து, யாருக்காக, எந்த வழியில் (அது வருகிறது) என்று யூகிக்க முடியாது. அதனால் விழிப்புடன் சுய(ஆன்ம)நலனைக் கவனியுங்கள்.

இந்த ஆத்மானுசாசனத்தின் ஆசிரியர் அதிகமாக மரணம் பற்றிய செய்திகளை கூறி எச்சரிப்பதிலேயே கவனமாக இருக்கிறார். சில நேரங்களில் சற்று எரிச்சலையும் தரத்தான் செய்கிறது. (இழவெடுத்த மனுசன் எப்ப பத்தாலும் வாயில சாவையே வச்சுகிட்டு திரியறாரேன்னு தோணத்தான் செய்கிறது.)

அவர் நமது மனப்பக்குவம் மேலோங்கியதாக எண்ணியே இருபத்தைந்து பாடல்களுக்கு பிறகு நாம் நற்காட்சிப்பயணத்திற்கு தயாராகி பயணிக்கவும் தொடங்கி விட்டோம் என்று தான் கருதியிருக்க வேண்டும்.

அதாவது நாம் உடலல்ல அதன் உயிரோட்டமாய் விளங்கும் உயிர் என்பதை உணர்ந்திருப்போம் என்றே நினைக்கிறார். (அவ்வுணர்வில்லை என்றால் மேலெழுந்த வரிகள் தான் நமக்கு தோன்றச் செய்யும்)

அந்த கணிப்பில் தான் இந்த உடலை சீக்கிரத்திலேயே விடுதலை பெற வகைசெய்யும் நல்லதொரு புருஷார்த்த வழியில் செல்ல அறிவுரை கூறி வருகிறார் ஆச்சார்யஸ்ரீ.

உலகில் எதுவுமே நித்தியமில்லை மாறுதலுக்கு உட்பட்டவையே. அந்த மாற்றம் ஒன்றுதான் நித்தியமானது, மாறாதது. அதனை அறிவியலாரும் Change is constant என்றுதான் வரையறை செய்துள்ளார்கள். நிலையாமைக் கொள்கையை வலியுறுத்துவதே மோட்சமார்க்கத்தை அளிக்கும் தரசினங்களின் மூலக்கருத்தாகும். அதில் முதன்மையானவை சமணம், பெளத்தம் போன்றவை.

அதே சமயம் சமணம் நித்தியமான பொருட்கள் ஆறு திரவியங்களாக உள்ளன என்றும் கூறுகிறது. அவையும் நிலைமாற்றத்திற்கு (பர்யாயம்) உட்பட்டவையே என்றும் கூறுகிறது. அவற்றில் ஒன்றான புத்கலம் அதே பண்பைப்பெற்றது தான் பெற்றிருக்கும். அதன் கூட்டமைப்பில் ஸ்தூலமாக உள்ளதே இவ்வுடல் என்றும், புத்கலக்கூட்டத்தின் தோற்றமே ஜீவனின்களின் உடல் என்றும் தெளிவுறுத்துகிறது.

அதனால் பிரபஞ்சத்தில் இதன் கூட்டணிக்கான காலமும் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதே நிதர்சனம். என்றைக்கு அந்தக் கூட்டணியில் இணைந்துள்ள புத்கலங்கள் நிலைமாற்றத்தை பெறுமோ அன்று அழிவது நிச்சயம் என்பதைத்தான் மரணம் என்று அறிவுறுத்தச் செய்கிறது. அவ்வழியில் தான் ஆச்சார்யஸ்ரீ யும் நமக்கு அதனை நினைவு கூறுகிறாரே ஒழிய நம்மை சபிப்பது அவரது நோக்கமல்ல.

நமது இன்றைய, இப்போதைய, இக்கணத்திற்கான தோற்றத்திற்கான காரணத்தையும் அது என்றும், எக்கணமும் அழியலாம் என்று எச்சரிக்கையே செய்து நம்மை நல்வழிப்படுத்துகிறார்.

உற்பத்தியான தேதியுடன் ஒரு மருந்து வந்தாலும் காலாவதி தேதியும் கண்டிப்பாக இருப்பது போன்றே இந்த உலகில் அனைத்து பொருட்களுக்கு இருப்பதை நாம் கண்டுதான் வருகிறோம்.

இந்த உடலுக்கும் உற்பத்தி தேதிமட்டுமே நமக்கு தெரிகிறது. அதே சமயம் காலாவதி தேதி தெரிவதில்லையே. அது ஆளாளுக்கு, ஜீவனுக்கு ஜீவன் மாறுபடவே செய்கிறது. அது நியதியாக வழங்கப்பட்டுள்ளது.

இடைபட்ட நாட்களை சரியாக வரையறை செய்ய இயலாத இந்த வாழ்நாளில்(ஆயுளில்) எந்த ஒரு லட்சியத்தை தொடங்கினாலும் உடனே அதற்கான திட்டத்தையும், செயலாக்கத்தையும் துவக்கிவிடு என்று கூறுகிறார்.

அது நல்லொழுக்கமாயின் உனது துன்பங்களுக்கு விடுதலை அளிக்கும் என்று பகவான் கூறுகிறார், நான் அவர் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன். என் பயணத்தில் நீயும் சேர்ந்து விடு என்றழைப்பதுதான் அவரது தலையாய பணியாக இந்த நூற்பாக்களில் தெரிவித்து வருகிறார்.

அவர் வழிகாட்டுதலின் படி நல்லதோ (கெட்டதோ) உடன் இலட்சியத்தை நிர்ணயம் செய்து, திட்டமிட்டு செயலாக்க துணிவதே விவேகமான செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சரியான லட்சியமின்றி முறையான வழிகாட்டுதலின்றி திட்டமிட்டு செயலாற்றி சொற்ப இன்பத்திற்காக பல இன்னல்கள், துயரங்கள் என துன்பங்களையே இப்பூமியில் அனுபவித்து வருகிறாய். உடனே அவ்விலக்கை விலக்கி நற்திசை நோக்கிய பயணத்திற்கான வழிகளைத் தேடுவதே நம் வாழ்வு உய்ய வழிவகுக்கும் என்றே நமக்கு அவ்வப்போது அறிவுறுத்துகிறார்; நம் வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் அமர்ந்துள்ள இக்குருநாதர்.

உடல் நலமே சுயநலம் என்று கருதிவரும் நம்மிடம்; எவ்வேளையாயினும், எப்படியும், எங்கிருந்தும், யாராலும், எந்த வழியிலும் அழிக்க இயலாத பண்பை கொண்டு நிரந்தமாகத் திகழும், எத்துன்பமும் நெருங்கா ஆனந்த ஸ்வரூபமான ஆன்மாவின் நலனே சுயநலம் என்பதை நமக்கு விளக்குகிறார்.

-- -- -- புத்தர் ஒரு பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். ஞானமடைந்த சீடர்களில் ஒருவரான அவள் “என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம். நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான் முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், ‘உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்.’ என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும்” என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்.

அதுபோன்ற நிலையே நாமும் எய்தவேண்டும் என்பதே இந்நூற்பாவின் குறிக்கோள்.







அஸாமவாயிகம் ம்ருத்யோரேகமா லோக்ய கஞ்சன் | 

தேசம் காலம் விதிம் ஹேதும் நிச்சிந்தா: ஸந்து ஜந்தவ: || 79 ||

May all living beings be free from anxiety on seeing that Death is sudden and has no (fixed) place, time, mode, and cause.
மரணம் திடீரென்று சம்பவிப்பதற்கும் (நிலையான) இடம், நேரம், முறை மற்றும் காரணம் எதுவுமில்லை என்பதை அறிந்து அனைத்து உயிரினங்களும் கவலையிலிருந்து விடுபட்டு வாழவும்.

இது ஒரு மாயை நமக்கெல்லாம் பொதுவானது நமக்கு பிறகும் எஞ்சி நிற்பது. இதற்கு பயப்படவோ, இதைப் பற்றி அறியவோ, இதைத்தேடி போகவோ முயற்சிக்க வேண்டாம். உன்னைத்தேடி உன் பின்னே அது வந்துகொண்டு இருக்கிறது. நிழல் போன்ற அதை பிரிக்க இயலாது. உன்னை நெருங்கிய பிறகு நீயே அதை தழுவிக்கொள். அதுவரை வாழ்ந்துகொள் என்கிறார் முனிவர்.

எல்லாமே உன்னைவிட்டு போன பிறகும்கூட உனக்காகவே உன்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கும். உன்னுடைய ஒரே சொந்தம் அதுதான். அதனால் அதை வெறுத்து ஒதுக்க வேண்டாம்.

நாம் நம் லட்சியத்தை நோக்கி செல்கிறோமோ? இல்லையோ? ஆனால் மரணத்தை நோக்கித்தான் செல்கிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

வாழ்க்கையின் நீதி மன்றத்தில் பாரபட்சமின்றி, காலம் நமக்கு அளித்த ஒரே தண்டனை மரண தண்டனைதான். மண்ணாசை பொன்னாசை பொருளாசை, நூறாண்டு வாழ்ந்திடவும் பேராசை. ஆனால் மரணத்தின் மீது மட்டும் யாருக்குமே ஆசை இல்லை. ஆனாலும் மரணம் நம்மை விட்டுவிட போவதில்லை. மரணத்தின் மீது பழி சுமத்த முடியாது ஏனென்றால் அது என்றைக்குமே கடமை தவறாதது. விதியின் மீதும் பழி சுமத்த முடியாது. ஏனென்றால், அது நம் முற்செயலால் எழுதப்பட்டது.

அன்பாலும் ஒழுக்கத்தாலும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையாலும் மரணத்தைகூட தற்காலிகமாய் மரணம் செய்துவிடலாம். மரணம் பெரியதா? இல்லை கடவுள் பெரியதா? என்று ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிட்டு கிடைத்த வாழ்க்கையை புருஷார்த்தத்தில் ஈடுபடுத்தி வளமாக வாழ முயற்சி செய். ஏனென்றால், எந்தக் கடவுளாலும்கூட மரணத்தை தடுத்துவிட முடியாது என்கிறார் ஆச்சார்யஸ்ரீ.

மரணம் உன்னைவிட பெரியதுதான்; ஆனாலும் அது உன்னை ஒரே ஒரு முறைதான் ஜெயிக்கமுடியும். ஆனால் நீ வாழும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை ஜெயித்துக் கொண்டு இருக்கிறாய் என்பதை மறந்துவிடாதே. அதனால் பிறவியை ஜெயிக்கும் வழியில் சென்றால் மரணத்தையும் ஜெயிக்கலாம் என்று அனைவருக்கும் அறிவுறுத்துகிறார் முனிவர்.

காலம் கடந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை விரலிடுக்கில் நழுவிக் கொண்டே இருக்கிறது. ஜீவிதம் உனக்கு அளித்திருக்கும் பெரியதொரு செல்வத்தை மனம்போல செலவழித்து வீணாக்கி கொண்டிருக்கிறாய் என்று தான் பொருள். அது உன் சம்பாத்தியம் அல்ல . அதற்கு நீ அருகதையானவன் அல்ல . அது உனக்கு தரப்பட்டிருக்கும் வெகுமதி. அன்பு பரிசு. தயவுசெய்து அதை வீணாக்கி விடாதே.

இந்த நொடிதான் கடைசி என்று வாழ்வது மூலம் நமது மொத்த வாழ்க்கையும் போட்டியற்ற, யாருடனும் ஒப்பிடாத ஒரு புதிய திசைவழியில் செல்வதற்கு நம்மை மாற்றுகிறது. நமக்கு இதுவொரு பாடமாக இருக்கட்டும்.

எனவே மரணத்தை எண்ணி அஞ்ச வேண்டாம். மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மேனிதான் அழியும். காலன் வந்து அழைக்கும் வரை பிறவி நீங்கும் வழியில் சென்று கொண்டிரு என்று அறிவுரை வழங்குகிறார்.








அபிஹிதமஹாகோரதுவாரம் ந கிம் நரகாபதா – 

முபக்ருதவதோ பூய: கிம் தேன சேதமபாக ரோத் | 
குசலவிலயஜ் வாலாஜாலே கலத்ரகலேவரே, 
கதமிவ பவாநத்ர பீத: ப்ரதக்ஜன துர்லபே || 80 ||

Why are you attached to the body of women, which is difficult of acquisition by every man, which is like a net of flames, destroying welfare. Is it (body) not an open and terrible gate to the miseries of hell? Of what use is it to thee? It has wronged (you), who have often done it good (nourished it).

பெண்களின் உடலுடன் ஆண்கள் ஏன் இணைக்கப்படுகிறீர்கள், இது ஒவ்வொரு ஆணுக்கும் அவ்வாறு கையகப்படுத்துவது கடினம், இது தீப்பிழம்புகளின் வலையைப் போன்றது, ஆன்மநலனை அழிப்பது. உடல்சுகம் நரகத்தின் துயரங்களுக்கு பயங்கரமான திறந்த வாயில் அல்லவா? ஆண்களுக்கு(பெண்களுக்கும்) இதனால் என்ன பயன்? இது அநேகமாக சந்தோஷத்தை தருவது போன்று (அதை வளர்த்ததும்) அநீதி இழைப்பதாகும்.

-- ----------------------------- 

 முற்காலத்தில் பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவர்கள் ஆணகளை விட சக்தியளவில் குறைந்தவர்களாக காணப்பட்டதால். அவர்கள் போருக்கு அழைப்படுவதில்லை. போர்களத்தில், கருவிகளை கையாளும் திறமை மட்டுமல்லாது, உடல்வல்லமைதான் மேலோங்கிய நிலையில் தேவையாகும். அதனால் போரே ஒரு மனிதனை வலிமை மிக்கவன் என்று பிறரால் கருதப்பட வைத்த காலம். அதனால் பெண்கள் வலியவர்களாக கருதப்பட்டனர்.

மேலும் உடலளவில் கருத்தரித்து குழந்தைகளை பத்து மாதங்கள் சுமக்கும் கருப்பையை பெற்றிருந்ததால் அவர்கள் போருக்கு அழைத்துச் செல்லாமல் காக்கப்பட்டனர். அதே நிலை வியாரத்திலும் தேவைப்பட்டதால் பெண்களும் பலமாதங்கள் ஆண்கள் இல்லாத அவ்வேளையில் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தனர். அதனால் செல்வத்தை ஈட்டுவதும், போரில் நாட்டைக் காப்பதிலுமான முக்கிய பொறுப்பை ஆண்கள் ஏற்றிருந்ததால் பெண்களை மனித இனத்தில் சற்று அடிமைத்தனத்தில் இன்றுவரை வைத்திருப்பது அன்றைய காலக்கட்டத்திலிருந்து வந்தவை.

அதனால் பெண்களின் விருப்பம் மறுக்கப்பட்டு அவர்களது பேச்சுக்களும், நடவடிக்கையும் சமூகம் ஏற்றுக் கொள்ளாமல் உதாசீனம் செய்து வந்ததால் பெண்களை ஆளும் நிலைக்கு தங்களை உயர்த்திக் கொண்டனர் என்பது வரலாறு தரும் தெளிவு.

மனிதன் - பெண்கள் சகஜீவராசியாய் இருந்தும் - பெண்ணினத்தை உயிரற்ற பொருளாகவே கருதி அடுத்தநிலையில் நடத்தி வந்தான். அன்று அடிமைகளாக கருதப்பட்ட காலமாக இருந்தது. மண்ணையும், பொன்னையும் தேடும் போது அவற்றை பாதுகாக்க, தனக்கு தேவையான மனிதர்களை, வாரிசுகளாக உருவாக்கிடவும் ,சுமக்கவும், வளர்க்கவுமாக பல பணிகளை அந்த பெண்களிடம் விட்டுச் செல்வதும் பின்னர் ஏற்றுக் கொள்வதுமாய் ஆண்கள் வாழ்ந்து வந்த காலம்.

பொருளீட்டும் போது மண்ணையும், பொன்னையும் சேமிப்பது போன்றே பெண்களையும் ஈட்ட முற்பட்டனர். அதுவும் அவனது ஆசைப் பொருட்களில் ஒன்றாக கருதப்பட்டது. அதுவும் மண், பெண் போன்றே ஆசைப்பொருளாக்கப்பட்ட காலமாக மாற்றப்பட்டிருந்தது.

ஆசையை விலக்க வலியுறுத்தும் போது மனித மனத்திலிருந்து மண்ணையும், பொன்னையும் விலக்குவது போன்றே பெண்ணையும் விலக்க அறிவுரை வழங்க வேண்டிய கட்டாயச் சூழல் அக்கால சான்றோர்களுக்கு ஏற்பட்டிருந்த காலத்தில் சமண யதிகளும் அவ்வாறான வழியில் அறிவுரை வழங்கி வந்தனர் என்பது வரலாற்றினால் ஏற்பட்ட தெளிவுகள்.

ஆனால் பிற தரிசனத்தனர் பெண்பிறவிகளையே இழிபிறவியாக கருதிய காலகட்டத்தில் பெண்களை அவ்வாறு சமண, பெளத்தங்கள் கருதவில்லை என்பதை அவர்கள் வழிகாட்டுதலிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அவ்வாறு தாய், சகோதரி, மனைவியைத் தவிர விலைமாதர்களாக வாழ்வை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் சற்று கீழ்நிலையில் கருதியது.

அந்த நிலைப்பாட்டில் தான் ஆச்சார்ய குணபத்ரரும் பெண்கள் என கூறாமல் “பெண் உடல்” என்று நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். பெண்ணை உயிருள்ள ஜீவனாக தாயாக, சகோதரியாக, மனைவியாக கருதாமல் பெண்ணுடலை சந்தோஷத்திற்காக இச்சைப்பொருளாக்குவதை சுட்டி, அதிலிருந்து வெளியேறவே வலியுறுத்தியுள்ளார் ஆச்சார்யஸ்ரீ என்பதை நாமனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணிணத்தையே குறை கூறவில்லை என்பதில் நாம் தெளிவு பெறவேண்டும்.

சந்தோஷம் எனும் போது பிறபொருள் தொடர்பு அவசியமாகிறது. அதற்கும் பெண்ணுடலைத் பொருளாக கருதும் ஆடவருக்கும், அதற்கு துணைபுரியும் பெண்களையும் அந்நிலைப்பாட்டிலிருந்து வெளியேற்ற எண்ணியே இந்நூற்பாவில் வழிகாட்டுகிறார் ஆச்சார்யஸ்ரீ.

-- --------------------------- 

 மண் பெண் பொன் ஆசை மயக்கத்திலே விழுந்து கண் கெட்ட மாடு அது போல் கலங்கினேன் பூரணமே இது பட்டினத்தார் பாடல்.

“குமரி கலத்துறை மூழ்கி” (அருணகிரிநாதர்) என்றால், இளம் பெண்ணின் மோகத்தால் உண்டாகும் மகிழ்ச்சியாகிய நீர்த்துறையிலே மூழ்குதல் என்று பொருள். மேற்கூறியபாடல் மூலம் அருணகிரிநாதர் விலைமகளிரிடம் தொடர்பு கொண்டிருந்ததும், அதனால் மனத்துயர் அடைந்ததும், பார்த்தவர்கள் வெறுக்கத்தக்க அளவிற்குக் கொடுமையான நோய் உற்றதும் புலப்படுகிறது.

ஒரு மனிதன் வறுமை அடைவதற்குப் பல காரணங்கள் உண்டு. குந்தகுந்தச்சாரியரும் வறுமை ஏற்படுவதற்கான காரணங்கள் மூன்று எனக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அவையாவன, 1. இருமனப் பெண்டிரிடம் தொடர்பு கொள்ளுதல், 2. கள்குடித்தல், 3. சூதாடுதல் என்பனவாகும்.

பொதுவாக விலைமகளிரை இருமனப் பெண்டிர் என்று கூறுவர். ஏனெனில் பாசமுள்ளவர் போல் நடித்துத் தன்னிடம் வரவழைத்துக் கொண்ட ஆடவரிடம் உள்ள கைப்பொருள் அனைத்தையும் அவர்கள் கவர்ந்து கொள்வர். அஃதாவது, விலைமகளிரின் ஒருமனம் ஆடவரோடு பாசம் காட்டிப்பழகும், மற்றொரு மனம் அவ்வாடவரிடம் உள்ள கைப்பொருளைக் கவரும்.

அவ்வாறான இருமனமுள்ள விலைமாதர்களிடம் தொடர்பு கொண்டவர்களையும், கள்குடிப்பவர்களையும், சூதாடுபவர்களையும் திருமகள் நெருங்குவதில்லை. அவர்களைவிட்டு நீங்கிவிடுவாள். இக்கருத்தையே குந்தகுந்தரும், “இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திரு நீக்கப்பட்டார் தொடர்பு” (46) என்ற குறள் மூலம் கூறியிருப்பதைக் காணலாம்.

மேலும் காமப்புணர்ச்சிக்கு, ‘வரைவின் மகளிர்’ என்னும் அதிகாரத்தில் விளக்கம் தருகிறார். உடல் திணவுக்காக, அன்பு இல்லாத மனதுடன், பொருளுக்கு உடலை விற்கும் விலைமகளிரிடம் புணர்ச்சிக் கொள்ளும் செயலைக் காமம் என்று கூறிப் பழிக்கின்றார். பொருட் பெண்டிருடன் சேருதல், இருட்டில் பிணத்தைப் புணர்ந்தது போன்றது என்கிறார். இத்தகைய காமஇச்சை கொண்ட ஆண், பெண் அனைவரும் இழிவுக்கு ஆளாகின்றனர் என்பதாகவே சுட்டுகிறார்.

நாலடியார் பாடலொன்று இருமனப் பெண்டிரை வேசையர் என்று குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது. வேசையர்களுடன் நட்பு கொண்டால் அவர்கள் தம் கைப்பொருளை இழப்பது உறுதி என்பதை, “விளக்கொளியும் வேசையர் நட்பு மிரண்டுந் துளக்கற நாடின் வேறல்ல” என்கிறது அப்பாடல்.

__ ___ ___ 

 காதல் மேலானது என்றாலும்… அதன் இலக்கணம் இக்காலத்தில் மாறுபட்டே நிற்கிறது என்பதால்… காதலுடன் கூடிய காமத்தை ‘உடல் திணவுக் காமம்’ என்று கூறுகிறார் பாரதிதாசனார். காதலில் காமம் உள்ளடங்கும். ஆனால் வெறும் தசை உணர்வாகிய காமத்தில் காதல் அடங்காது.

காதலில் உள்ளத்தின் உணர்ச்சியாகிய அன்பு, பற்று, பாசம், நேசம் ஆகியனவும், உடலின் வேட்கையாகிய ஆவல்; காம, இச்சை ஆகியனவும் அடங்கும். இவ்வாறான காதலுக்குக் காரணம் இனகவர்ச்சி என்பது அறிவியல் உண்மையாகும்.

ஆகவே காதலில் உள்ளத்தின் உணர்ச்சியும், உடலின் உணர்ச்சியும் இணைந்து தோன்றும் என்பது இயற்கையாகும். காதல் என்பது உள்ளம், உடல் ஆகிய இரண்டின் உணர்ச்சிகளும் இணைந்தது ஆகும். காமம் என்பது உடலை அடிப்படையாகக் கொள்வது.

இன்றைய பெரும்பாலான காதல் Love அல்ல Lust என்பதாகவே தோன்றுகிறது. ‘Lust’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இச்சை, கழிகாமம், அடங்காச் சிற்றின்ப அவா, தாகச் சிற்றின்ப வேட்கை, மட்டில் புலன் நுகர்வு, மிருக விருப்பம் எனக் கூறப்படும் பொருள் நோக்கத்தக்கது.

பாரதியார் காமம் குறித்து, காதல் என்ற சொல்லை; நாம் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் பொதுவாயிருப்பதாகிய காமம் என்ற அர்த்தத்தில் வழங்கவில்லை. அறிவு சம்பந்தப்படாத வெறும் உடல் ஆசை, “காதல் அல்லது பிரேமை என்று சொல்லத் தகுதி உடையதில்லை” என உரைப்பதில், காமம் மிருகவெறி என்பது கருதத்தக்கது. மேலும் “விடுதலைக் காதலை மிருகங்கள் புணர்ச்சியென்றும் வெறும் காமம் நுகர்தல், சிறு புழுவாழ்க்கை என்றும், காமத்தை பிசாசு என்றும் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்.

இந்த காதலும் ஒருவகையில் ஆச்சார்யஸ்ரீ கூறும் பெண் உடல் விருப்பத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதே. அதனால் இக்காலத்தில் காதல் என்ற அடிப்படையில் காம இச்சையே மோலோங்கியுள்ளதை நாம் அனைவரும் கண்டுதான் வருகிறோம். அவ்விருப்பமும், பொருள் வேட்கைக்கான இரை தீரும்போது பலரிடம் மணவிருப்பம் குறைந்து மணமுறிவில் முடிவதை இக்காலத்தில் கண்கூடாகக் காண்கிறோம்.

அதேசமயம் அக்காலத்தில் மணமுறிவை மனதளவில் ஏற்று பிறன்மன நோக்கவோ, பிறபெண்ணுடலை கவர்வதிலோ சென்றார்கள். அவர்களுக்கு வழங்கும் அறிவுரையே இந்நூற்பாவின் முக்கிய நோக்கம்.

எனவே பெண்ணுடல் விருப்பத்திற்கு வழிவகுக்கும் காம இச்சையும், பொருள் பற்று போன்றே பலபிறவிகளுக்கு வித்திடும் என்று எச்சரித்துள்ளார் ஆச்சார்யஸ்ரீ குணபத்ரர் அவர்கள்.








வியாபத்பர்வமயம் விராமவிரஸம் மூலேஅப்யபோக்யோசிதம், விச்வக்க்ஷுத்க்ஷதபாதகுஷ்டகுதிதாத்யுக்ராமயைச்சித்ரிதம் | 

மானுஷ்யம் குணபக்ஷிதேக்ஷு ஸத்ருசம் நாமைகரம்யம் புன: 
நிஸ்ஸாரம் பரலோக பீஜமசிராத் க்ருத்வேஹ ஸாரீகுரு || 81 ||

As a sugarcane eaten up by Ghuna Worms, (is) full of joints (at intervals), tasteless at the (outer) en, uneatable at the root, sweet in name, but having no pulp, so the human body (is full of) calamities at intervals (insipid in old age, unenjoyble in infancy) and throughout injured by frightful diseases like hunger, wounds, leprosy, laceration, etc., (good looking in name only, but of no utility). (If such a piece of sugarcane is sowed in the ground, it produces many fruits. Similarly you should) make (this body) here useful without any delay, by making it a seed(to produce, good in) the next world.
புழுக்கள் நுழைந்து சாப்பிட்ட கரும்பு போல, கணுக்கள் இடைவெளியில், (வெளிப்புறத்தில்) சுவையற்றும், வேரில் சாப்பிட முடியாததுமாய், பெயரில் இனிமையானதாய், ஆனால் இனிப்பு கூழ்(pulp) இல்லாமல் போவது போன்று, மனித உடல் இடைப்பருவத்தில் பேரழிவுகளால் (முதுமையில் தெளிவற்றதாயும், குழந்தை பருவத்தில் அனுபவிக்க தெரியாததாயும்) மற்றும் பசி, காயங்கள், தொழுநோய், சிதைவு போன்ற பயமுறுத்தும் நோய்களால் தாக்கமடைந்தவர்கள், தோற்றத்தில் மட்டும் அழகாக இருக்கிறார்கள், அதனால் எந்தப் பயனும் இல்லை. அத்தகைய ஒரு கரும்பு மீண்டும் நிலத்தில் விதைக்கப்பட்டால், அது பல பழங்களை உற்பத்தி செய்வது போல. நீங்கள் (இந்த உடலை) இப்பூமியில் தாமதமின்றி பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அடுத்த உலகத்தில் நன்மையை பெறும் விதையாக்க அறவழியில் செல்ல முயற்சி கொள்ளலாம்.

ஆச்சார்யஸ்ரீ அறிவியலில் தற்போது தாவரயியல்; உழவுத்தொழிலில் தனது முதிர்ந்த அறிவை இந்த நூற்பாவில் நிரூபித்துள்ளார். எந்த ஒரு துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை. சகலகலா வல்லுநராக திகழ்ந்துள்ளார். ஏறக்குறைய 1200 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் கரும்பு பயிர் செய்துள்ளார்கள் என்பதையும்; இன்றைய அறிவியலார் உழவுத்தொழிலில் என்னென்ன இடையூறுகள் உள்ளன என்று தெரிவிப்பதை அன்றே கண்டறிந்து குறிப்பிட்டுள்ளார் என்பதையும் அறியலாம்.

---------------------------------


 (சொந்த நிலம் (இருந்தது;) இருப்பினும் வங்கியில் விவசாயத் துறையில் பணியாற்றியதன் அனுபவத்தில் தெரிந்த கொண்டவற்றை பகிர்கிறேன்…)

விவசாயிகள் கரும்பை பயிரிடும் போது; அப்பயிரை முக்கியமாக இரு (பூச்சி புழுக்கள்) தண்டு துளைப்பான்கள் தாக்குகின்றன. அவையிரண்டும் பெரும் சேதத்தை விளைவிப்பன. அதனால் கிட்டத்தட்ட 40 லிருந்து 60 சதவீதம் வரை மகசூல் பாதிப்படையும். அதனுடைய சாறு மிகக்குறைந்து, கூடான கழிகளாக தென்படும். வெட்டி எடுத்தாலே கைக்கு பளுஇன்மை நன்கு தென்படும். தூறு வைப்பதும் மிகக்குறைவாகவே இருக்கும். தண்ணீர் பாய்ச்சியதுதான் மிச்சம் என்றளவில் வருத்தமே மிஞ்சி நிற்கும். சர்க்கரை ஆலைக்கு அனுப்பினாலும் அவர்கள் வழங்கிய வங்கிக் கடனுக்கு வட்டி செலுத்த மட்டுமே விளைச்சல் இருந்ததுண்டு.

ஒன்று இளம் குருத்துப் புழு: இளம் குருத்துப் புழு பூச்சியானது இளம் மஞ்சள் கலந்த பழுப்பு வண்ணத்தில் புழு போல் காணப்படும். இலையின் அடியில் இடப்படும் முட்டைகள் பொரித்த பின்னர் இளங்குஞ்சுகள் செடியின் அடிப்பாகத்தை துளைத்து செடியின் மேற்பகுதிக்குச் சென்று தண்டை துளைத்தெடுக்கும். இப் பூச்சிகள் தாக்கினால் தலைக் குருத்துக்களும், இரண்டாம் நிலை குருத்துக்களும், மூன்றாம் நிலை குருத்துக்களும் 75 சதம் வரை காய்ந்துவிடும். அடிப்பகுதியில் நுழைந்து கடைசியில் கரும்பின் உயரத்தில் அந்தப் பூச்சி வெளிவரும்.

மற்றொன்று இடைக்கணுப் புழு: பூச்சி தாக்குதலுக்குள்ளான கரும்பைப் பிளந்து பார்த்தால் உள்ளே வெண் பழுப்பு மற்றும் முதுகில் கருநீல வரிசையான புள்ளிகள் மற்றும் கோடுகளையுடைய புழுக்களை காணலாம். இந்த வகையான புழுக்கள் (பூச்சிகள்), கரும்பு பயிர் நட்ட 90 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை தாக்கும். இதனால், பாதியளவு மகசூல் இழப்பு, மற்றும் 40 சத சர்க்கரைகூழ்(pulp) இழப்பு ஏற்படும். இடைக்கணுப் பகுதியில் இப்புழுவினால் ஏற்பட்ட துவாரங்கள் தென்படும். சேதமுற்ற பகுதி செந்நிறமாக காணப்படும். கரும்பு காய்ந்துவிடவும் வாய்ப்பு உண்டு.

(இவற்றை கணுக்களில் சுவையற்றும் என்று சுருக்கமாக தெரிவித்துள்ளார்)

--------------------------------- 


 ஆச்சார்யஸ்ரீ விவசாயம் செய்து உழவுத்தொழிலில் ஆழ்ந்த ஞானத்தை பெற்றிருக்கவேண்டும் என்பது இந்த நூற்பாவில் கணுவை துளைத்த புழுவைப்பற்றிய செய்தியை அழகாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறான புழு ஏறிய அந்தக் கரும்பு வளர்ந்தும் முழு உபயோகமில்லாமல் காய்ந்தது தான் மிச்சமாய் இருக்கும். பெருத்த நஷ்டத்தை அளிக்கும் அந்த கரும்பைப் போன்றே…..

இனிமையான இளமைப்பருவத்தை மனிதன் வீணடிக்கிறான் என்று தெரிவிக்கிறார். வயோதிகப் பருவ உடல் அந்தக்கரும்பின் வேர்பாகத்தைப் போன்று முழுப்பயன்தராது. குழந்தைப்பருவமோ நுனிக்கரும்பைப் போன்று இனிப்புச் சாருமற்ற, உவர்ப்புடன் நுகர பயன்பாடற்றும் காணப்படும். ஆனால் நடுப்பகுதியான இளமைப்பருவமோ பலவகை தீய பழக்கங்களால் (புழுக்களால் உறிஞ்சப்பட்டு) பலவகை நோய்களால் பீடிக்கப்பட்டு பெயரளவிற்கு அழகானதாக தோற்றத்துடன் வாழ்வதால் என்ன பயன் என்கிறார்.

கரும்பை மறுபடி விதையாக நட்டு நற்கரும்பை அடுத்த மகசூலில் பெற இயலும் அதேபோல் மனித உடலையும் அறத்தைக் கைக்கொள்ள வலியுறுத்தி மறுமைக்கு வித்தாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவு றுத்துகிறார் ஆச்சார்ய பெருமான்.

இளமையில் கட்டுப்பாடும், கவனமுமின்றி செய்யத்தகாதவற்றை செய்பவனும், செய்யத்தகுந்த வற்றை செய்யாது இருப்பவனும் பெரும் துன்பத்திற்கு ஆளாவான் என்பதே இந்நூற்பாவின் வழிகாட்டல்.








ப்ரஸுப்தோ மரணா சங்காம் ப்ரபுத்தோ ஜீவிதோத்ஸவம் | 

ப்ரத்யஹம் ஜனயத்யேஷ திஷ்டேத் காயே கியச்சிரம் || 82 ||

Every day while sleeping, he wears the appearance of death and while awaking he makes merry on his being alive. Every day produces this (scene). How long can this soul live in the body.
ஒவ்வொரு நாளும் தூங்கும் போது, அவர்(மனிதன்) மரணத்தின் தோற்றத்தை எடுத்துக்கொள்கிறார், விழித்திருக்கும்போது அவர் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு நாளும் இதை (காட்சி) உருவாக்கப்படுகிறது. இவ்வாறு இந்த ஆன்மா உடலில் எவ்வளவு காலம் வாழ முடியும்?

உறக்கம், மரணம் இரண்டின் இலக்கணத்தை எளிமையாக இப்பாடலில் ஆச்சார்யஸ்ரீ விளக்கியுள்ளார். தினம் தினம் மறுபிறவி எடுக்கிறோம் என்கிறார். ஆனால் மீண்டும் மனதில் விழிப்பின்றி ஏன் வாழ்கிறாய் என்பதை மறைமுகமாக அறிவுறுத்துகிறார். உடல் விழிப்பு தொடர்வது எத்தனை நாளோ தெரியாது. உடனே மனமலர்ச்சிக்கான வழிகளை தேடு. துன்பக்காரணிகளுக்கான வாழ்வை விலக்கு. நற்காட்சியை ஏற்று நல்வழியில் நட என்று அறிவுறுத்துகிறார் முனிவ பெருமான்.

மரணம் என்பது என்ன? உறக்கம் என்பது என்ன?

"உறக்கம் - தற்காலிக மரணம்"

" உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (அதிகாரம்:நிலையாமை - குறள் எண்:339) என்பது குந்தகுந்தர் வாக்கு.

உயிர்கள் சாவதும் பிறப்பதும், தூங்குவது-விழிப்பது போன்று இயல்பான நிகழ்வுகள். இறப்பு எனப்படுவது உறங்குவது போல்வது. பிறப்பு எனப்படுவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்தல் போன்றது.

உயிர்கள் தூங்காமல் இருக்க முடிவதில்லை. உறங்கச் செல்லும் உயிர்கள் தூங்கிக்கொண்டே இருப்பதுமில்லை. அதுபோலவே உயிர்களுக்கு இவ்வுலகில் இறத்தலும், பிறத்தலும் இயல்பாகவே நடந்து வருகின்றன. சாக்காடு-பிறப்பு என்பது உறங்குவதும் பின் உறக்கத்தினின்றும் விழித்தலும் போலவே இருக்கின்றன.

உறக்கம் --- மீண்டு வரக்கூடிய மரணம்; மரணம் --- மீண்டு வரமுடியாத உறக்கம்.

உறக்கம் : எல்லோருக்கும் தினந்தோறும் ஆன்மன் அருளிய இன்ப மரண அனுபவம். புலன்கள் அயர்ந்த நிலை உறக்கம். புலன்கள் அற்ற நிலை மரணம்.

உடமைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் உடையவன் உறங்காமல் காத்துக் கொண்டு இருப்பது உறக்கம். உடமைகளை துறந்து விடுதலை உணர்வோடு நிலைத்திருப்பது மரணம்.

இவ்வாறான தினப்பிறவி சுழற்சியில்:

விழிப்பு நிலையுடன் கூடிய உறக்கம் தவம். விழிப்பவன் அடங்கிய உறக்கம் சமாதி. விழிப்பும் சமாதியும் அற்ற நிலை உறக்கம்.

உறக்கம் மரணத்தின் ஒத்திகை; மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி....

உறக்கம் :- எது நம்மில் உறங்குகின்றது? உடலா.,.மனமா.,உயிரா.,அறிவா..!

Conscious sleep is Meditation. Unconscious meditation is Sleep என்று கூறுவார்கள்.

உறக்கம் :- உடலுக்கென்றால் உள்ளுருப்புக்கள் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. மனதிற்கென்றால் கனவும் வந்துகொண்டுதான் உள்ளது. உயிரும் இயங்கிகொண்டுதான் உள்ளது. ஆம் அப்போது அறிவுதான் உறங்குகின்றது. அறிதலுக்கு தடை தரும் நேரம் அது. அறிதல் ஆன்ம இயல்பாயிற்றே. அந்த அறிதலுக்கு உதவிடுவது உணர்வு. அதனால் அந்த உணர்வுக்கு தரும் ஓய்வே உறக்கமாகிறது.

அந்த நேரத்தில் அருகில் உள்ளதையும், இருப்பவர்களையும் அறிந்துகொள்ள முடிவதில்லை என்ற நிலை. ஏனெனில் உணர்வு ஓய்வெடுக்கும் நேரம் அது.

உணர்வு விழித்தெழ மறுத்தால் மட்டுமே உறக்கம் நிரந்தரமாகிறது; மரணமாகிறது.

விதைநெல்லுக்கு உறக்கம் மட்டுமே. வெந்த நெல்லுக்கு மரணம் மட்டுமே. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை, எண்ணியவன் உறங்கினாலும் எண்ணங்கள் உறங்குவது இல்லை.

விதைகளும் உறங்குவதில்லை, விதைத்தவனும் உறக்கம் கொள்ளவில்லை. எனவே இனி யாருக்கும் உறக்கமென்ற மரண பயமும் வேண்டாம். மரணமென்ற உறக்க பயமும் வேண்டாம். ஜனன, மரண சுழற்சி என்ற சுழலில் இருந்து மீட்சி பெறுவோம். வாழும் போதே வாழ்ந்து காட்டுவோம்.

வாழும்போதே உறங்கியும் பார்ப்போம். வாழும்போதே (நான்) மரணித்தும் முடிப்போம்.

என்றைக்கு “இப்போதைய நான்” மரணித்து “உள்ளார்ந்த நான்” விழித்தெழுகிறதோ அதுவரை பிரதி உறக்கமும், பின் மரணமும் மாறி மாறி பலகதிகளில் வந்தே தீரும் என்கிறார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள்.

இரவு உறக்கத்தில் கனவு காண்கிறோம். நினைவுலகம் மறந்து போகிறது. விழித்துக் கொண்டதும், கனவுலகம் மறந்து போகிறது. அதே சமயம் ஆழ்ந்த உறக்கத்தில் கனவு கண்டேன் என்று சொல்வது யார். கனவை ஞாபகத்தில் வைத்திருப்பது யார்!

உறக்கம் வருகிறது. கனவு வருகிறது. விழிப்பு வருகிறது. இவற்றை எல்லாம் ஒதுங்கி நின்று சாட்சியாய் ஒன்று கவனித்து வருகிறது. அதுதான் நான்.

மற்றபடி விழித்திருந்தாலும், உறக்கத்திலிருந்தாலும் எல்லாம் கனவுதான்.

கனவு காண்பவன் மட்டுமே நிஜம். அவனருகில் சென்று அமர்ந்து கொள்ள ஆயத்தம் செய் என்று அறிவுறுத்திச் சென்றுள்ளார் முனிவர் பெருமான்.








ஸத்யம் வதாத்ர யதி ஜன்மனி பந்து க்ருத்ய- 

மாப்தம் த்வயா கிமபி பந்துஜனாத்திதார்த்தம் | 
ஏதாவதேவ பரமஸ்தி ம்ருதஸ்ய பச்சாத் 
ஸம்பூய காயமஹிதம் தவ பஸ்மயந்தி || 83 ||

Say truly if in this life any act whatsoever of fraternal nature has been done thee by thy relatives, for thy good. This is the only good, that after(thy) death having assembled together, (they) cremate thy body, which is(thy) enemy.
இந்த வாழ்க்கையில் சகோதர இயல்புடைய எந்தவொரு செயலும் உங்களது உறவினர்களால் உங்களது நன்மைக்காக செய்யப்பட்டிருந்தால் உண்மையிலேயே சொல்லுங்கள். அவர்கள் செய்யும் இதுதான் ஒரே நன்மை, (உம்முடைய) மரணத்திற்குப் பிறகு, (அவர்கள்) உங்கள் உடலை தகனம் செய்கிறார்கள், ஏனென்றால் அது உங்களுக்கும் எதிரி.

இந்த நூற்பா ஆச்சார்யஸ்ரீ யின் அகவையை அளக்க உதவிடுகிறது. கண்டிப்பாக அவர் அறுபதைக் கடந்த வயதைக் கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறேன். இன்றைய Senior citizen ன் உள்ளார்ந்த மனநிலையை வெளிக்கொணர்ந்துள்ளார். அவ்வயதினர் சிலரின் அழுகுரலும் அவர்காதில் விழுந்திருக்க வேண்டும். விரக்தியின் எல்லைக்கே அழைத்துச் செல்லும் வரிகள் இவை.

ஆயிரத்தி இருநூறு ஆண்டுகள் கழிந்தும் இன்றைக்கும் அதே நிலைதான் நிலவுகிறது இப்புவியில் என்பது தெரிந்ததும், மனதை ஓரளவு தேற்றிக் கொள்ளலாம். இந்த நூற்பாவிற்கு கருத்துரை எழுதாமலே பல குடும்பத்தலைவர்கள், குடும்பத்தலைவிகளுக்கு நன்கு புரிந்திருக்கும். வயது ஒரு தடையல்ல. விரக்தியடைந்த கடமை தவறாத தலைவ, தலைவிகள் உணர்ந்த வரிகள் இவை.

நீண்டநாட்களாக பலவழியில் உன்மீது ஏற்பட்டுள்ள பகையை; - உன் அறிவில், செல்வத்தில், பெருமையில், புகழில், செல்வாக்கில் வெளிவந்த உயர்வினால் எழுந்த பொறாமையை; - உதவி செய்வாய் என்று எதிர்பார்த்து ஏமாந்த கோப உணர்வை; - தலைவன் இறந்தால் தான் சொத்து, சுகம், செல்வாக்கு, ஆட்சி கிடைக்கும், நாட்டு/குடும்ப அதிகாரம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில்; - இறந்த பின் நீ உயிர்பெற்று திரும்பி வந்து விடக்கூடாது என்ற உணர்வில்; சுற்றி உள்ளவர்கள் உன் உடலையாவது எரித்து சமன் செய்து கொள்கிறார்கள் என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார் என்றே தோன்றச் செய்யும்.

-------------------------------------------

மாடா தேய்ந்து ஓடாய்ப்போனேன்; ஓடி ஓடி உழைச்சு என்னத்த கண்டேன்; என் சாபம் உன்னைச் சும்மா விடாது; பழத்த வரைக்கும் மரத்தை கிளிகள் தேடிவந்தன, பழுத்தபின் ஒன்று கூட இல்லையே; என்னையே சுத்தி சுத்தி வந்தான் இப்ப அவளையே சுத்தி சுத்தி… ; எனக்குன்னு பத்து பைசா கூட எடுத்து வைக்காம போனது தப்பா போச்சு; கறவை மாட்டுக்கு இனி ஈத்து இல்லை, இனி அடிமாடுதான்;

-------------------------------------------

விரக்தியில் தோன்றும் இந்த ஆதங்க வரிகளில் ஒன்று உணர்வில் தோன்றி பிறர் மீது மட்டுமே குறைகூறுவதில் எந்த ஒரு பயனும் இல்லை என்பதையும் எவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

தேவையின் அடிப்படையில் தான் உறவுகள் அனைத்தும் தோன்றின என்கின்ற அடிப்படை இலக்கணத்தை தெரியாமல் பழகியதால் வந்த விளைவுகள்.

Give and take என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு வார்த்தை; (take and give என்றல்ல) யாதெனில் பிறருக்கு ஒன்றைக் கொடுத்தால் உனக்கு வேண்டிய ஒன்றைப் பெறலாம் என்ற சமன்பாட்டுத் தத்துவம் தான் உறவுகளுக்குப் பொருந்தும்.

ஏனெனில் அனைத்து உயிர்களுமே ஒன்றைஒன்று சார்ந்து வாழ்கிறது. சார்புநிலை என்பது அவ்வப்போது கூட்டிக் கழித்துப்பார்க்கும் மனோநிலையாகும். ஒன்றை விட்டால் அதற்கு சமமாக வேறோன்றை பெற்றே தீர வேண்டும் என்ற கணிதமுறை மனோநிலை. It should be equalize mutually either by Financial +/or Emotional state vice versa.

அது பொருளாகவோ, சந்தோஷமாகவோ, மகிழ்ச்சியாகவோ திரும்பப் பெறவேண்டும் என்ற மனநிலை வாழ்க்கை. ஒவ்வொருவரும் உழைப்பதும், வழங்குவதும் தமக்கு இனிமையான தருணத்தை பெறவேண்டியே. சந்தோஷம், மகிழ்ச்சி எனும் அந்த இனிமையான உணர்வுநிலை எப்போதும் சமநிலையில் இருந்தால் தான் உறவு என்ற நிலைக்கு இலக்கணம் சரியாக அமையும். இல்லாவிடில் இனிமை எனும் உணர்வுநிலையில் பிணக்கம், பிசகியநிலை ஏற்பட்டு உறவு உட்பகையாகவோ, வெளிச்சூழலில் முறிந்தோ போகவும் வாய்ப்புள்ளது.

சர்க்கஸில் பத்து பந்துகளை விட்டெறிந்து கீழே விழாமல் பிடிக்கும் வித்தைக்காரனின் திறமை போன்றதுதான் உறவுகளை கையாளுதல். (உறவும் தெளிவும் என்ற தலைப்பில் எழுதிய வரிகள்…)

உழைப்பதால், உறவினால் இந்த இனிமையான நேரம் வந்தால் இன்பம்; வராவிட்டால்/ கிடைக்காவிட்டால்/ சமன் செய்யப்படும் வரை துன்பம் என்ற உணர்வு நம்மை ஆட்கொண்டுவிடும். So pleasantness makes a man with joyfulness in the material world.

அந்த இனிமை எப்பொழுதும், எல்லா இடத்திலும் இவ்வுலகில் கிடைக்கப்போவதில்லை. எப்போதாவது கிடைக்க அதிகம் உழைக்க வேண்டும்; பிறருடன்/உயிருடன் சரியான சார்புநிலை உறவில் நெறிபடுத்தி வாழ தெரிந்திருக்க வேண்டும். உழைத்தால் துன்பம், உறவின் சார்புநிலையில் பிசகிடும் போது பெரும் துன்பம் என்ற நிலையே இப்பூவுலகில்.

அதனால் பொருட்சார்ந்த இவ்வுலகில் இனிமையாக வாழ அறிவும், திறமையும், மனப்பக்குவமும் நிறையவே தேவைப்படுகிறது. அதனைப் பெறுவதற்கும் வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்து விடுகிறது. முற்பிறவி அறிவின் மேனிலையை இப்பிறவில் தொடும் வழியும் தெரிவதில்லை.

அதனால் இந்த பிறவிச் சுழற்சியினால் எந்த ஒரு இனிமையும் நிரந்தரமாக கிடைக்கப்போவதில்லை. அதனால் நிரந்தர இனிமையான நித்தியானந்த நிலையை எய்தும் வழிகளை பகவான் கற்பிக்கிறார்.

அந்த வழிகளில்/வாழ்க்கை நெறிகளில் கவனத்தை இன்றே செலுத்து . அதுவே இன்றும், என்றும் ஏன் மீண்டும் பிறந்தாலும் சரியாக, நெறியாக ஏதேச்சையாக வாழ வழிவகுக்கும். பிறவிச் சுழற்சியிலிருந்தும், இவ்வுலக உறவுகளிலிருந்தும் விடுபட்டு விடுதலை பெற அது ஒன்றே வழிவகுக்கும் என்பதை அவ்வப்போது நூற்பாக்களின் வழியே அறிவுறுத்துகிறார் ஆச்சார்யஸ்ரீ.

அவரது மனோதத்துவ அணுகுமுறையை என்னவென்று சொல்வது! புகழ்வதை நிறுத்தி அவ்வழியில் பயணத்தை தொடக்கு என்று பகவானும், அவர் வழித்தடம் சென்ற ஆச்சார்யாளும் கூறும் அசரீது ஒலி நம் காதுகளில் விழத்தான் செய்கிறது…








ஜன்ம ஸந்தான ஸம்பாதி விவாஹா திவிதாயின: | 

ஸ்வா: பரேஅஸ்ய ஸக்ருத்ப்ரா ணஹாரிணோநபரேபரே || 84 ||
One’s relatives, who arrange marriage, etc,, which cause a series of births are the enemies of the soul. The others who take away life only onece, are not enemies.
திருமணத்தை ஏற்பாடு செய்யும் (ஒருவரின்) உறவினர்கள் தொடர்ச்சியான பல பிறப்புகளை ஏற்படுத்தும் ஆத்மாவின் எதிரிகள். உயிரை ஒரு முறை மட்டுமே பறிக்கும் மற்றவர்கள், (இவர்கள் அளவிற்கு) எதிரிகள் அல்ல.

கொலைகாரனைக்காட்டிலும் மோசமானவர்கள் திருமணம் செய்பவர்கள் என்றவாறு திருமண பந்தத்தை காட்டமாக சாடுகிறார் ஆச்சார்யஸ்ரீ. ஏனெனில் அப்பந்தமும் பிற பந்துக்கள் போன்றே உருவாக்கப்பட்டதால் அவ்வாறான நிலைக்கு தள்ளிவிட்டார் என்றே தோன்றுகிறது.

எந்த ஒரு பொருளுடன் / உறவுடனும் பற்று வைத்தால் அவ்வுறவு நமக்கு பல பிறவிகளை அளிக்கவே செய்யும் என்பது ஆன்மீக வழிகாட்டுதலாகும். விருப்ப விதையில் முளத்ததே பற்று. பற்று என்றாலே பலபிறவிகள் என்பது தான் இப்பிரஞ்சத்தின் நியதி. ஏனெனில் பலருக்கானதை தனக்கு என பதுக்கத் துணிந்தால் இப்பிரபஞ்சம் நடைமுறைக்கு எதிர்மறையாக கருதுகிறது.

திருமணம் பந்தமாக கருதப்பட்டால் அது பெருந்துன்பத்தையே அளிக்கும் என்பது அந்த நியதிக்குள் வந்து விடுகிறது. நான் பிறருக்காகவே வாழ்கிறேன் என்பது அறவழியில் வந்த பரோபகாரம். அச்சூழலில் நாம் உனக்காகவே வாழ்கிறேன் என்றால் பொதுச்சேவையில் பங்கம் ஏற்பட்டு விடுகிறது. அப்போது குடும்பச்சேவை என்னும் குறுகிய வட்டத்திற்குள் தள்ளப்பட்டுவிடுகிறது.

அவ்வாறாக குடும்பம் எனும் வட்டத்திற்குள் வருபவர்கள் எவரெவர் என்பதில் தான் பல குழப்பங்கள் அவ்வப்போது ஏற்பட்டு குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருக்கும் துன்பத்தை அளித்து விடுகிறது. பரோபகாரத் தம்பதிகளாக வாழ்பவர்களின் இல்லறம் என்றும் நல்லறமாகவே உள்ளது என்பதை அக்காலத்திலிருந்தே பெரியோர்களின் வழிகாட்டலாக உள்ளதை படித்துணரலாம். அதனை பல இல்லறத்தாரும் நிரூபித்துள்ளார்கள் என்ற பரம்பரைக் கதைகளும் இன்றும் நம்மிடத்தில் உலவி வருகிறது.

முனிவர்களும், கேவலிகளும் தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் தானே. திருமணம் என்னும் பந்தம் இல்லையெனில் மனித இனமே அழிந்து விடும் என்பதும் அவர் அறிந்த உண்மையே. மனிதனாய் பிறந்தவருக்குத்தானே சித்த பதவி கிட்டும் என்ற வரையறையையும் அடிக்கடி யதிகளே தெரிவித்துத்தான் வருகின்றனர்.

இருப்பினும் தலைவனும், தலைவியும் குழந்தையை ஈன்ற போது உவந்தாலும் அவ்வுறவினால் பல துன்பங்களை சந்திக்கத்தான் நேரிடுகிறது. அத்துன்பத்தை சட்டை செய்யாது சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்பவர்கள் தான் பலரும். அதே சமயம் இன்ப துன்ப உணர்வை சமநிலையில் உணரும் தம்பதியினரால் எந்த ஒரு பொறுப்புணர்ச்சியும், கடமையுணர்வும் சங்கடத்தை தருவதே இல்லை என்பதை இந்த ஆச்சார்யாரும் அறிந்தவரே.

ஆனால் பல தலைமுறையாக அவ்வாறான இல்லறத்தார் ஒழுக்கத்தை முழுவதுமாக கடைபிடித்து வாழும் மரபு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதையே இந்நூற்பாவில் ஆதங்கத்துடன் முனிவ பெருமான் சுட்டியுள்ளார் என்றே கொள்ள வேண்டும். இருபாலருக்கான ஒழுக்கத்தை நிர்ணயம் செய்துவிட்டுத்தான் பகவான் மோட்சப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். அவ்வழியில் எந்த ஒரு ஸ்ராவகரும் முழுவதுமாக நடக்க எத்தனிப்பதில்லை என்ற நிலை வந்த போதுதான் திருமணபந்தமும் பல பிறவிகளுக்கு வழிவகுப்பதாய் அமைந்து விட்டது என்பதே அவர் இடித்துரைப்பது.

--------------------------------------------

பகவான் அருளிய ஜைன ஆகமங்கள் இருவகை தொகுப்பாக உள்ளது. ஒன்று தத்துவம் மற்றொன்று இல்லற, துறவற ஒழுக்கங்கள். அதாவது சாரித்ரம், ஆசாரங்கள். தத்துவவியல் நமக்கு அடிப்படை அறிவைத்தரும். ஆனால் ஒழுக்கவியலே நம்மை ஆன்மநிலையில் மேலோங்கச் செய்யும்.

அவ்வாறான தத்துவத்தை படிப்பதோடு நின்று விடாமல் அதன் அடிப்படை வரையறை செய்த ஒழுக்கத்தை கடைபிடித்தலும் அவசியமாகும் போது நமக்கு வழிகாட்டியாக வருவது இல்லறத்தார் ஒழுக்கத்தை வரையறை செய்வது சிராவகாச்சார நூல்கள். அதில் ஆச்சார்ய சம்பந்தபத்ரரால் முதன்முதலில் எழுதப்பட்ட இரத்னகரண்டக சிராவகாச்சாரம் சிறப்பான நிலையைப் பெற்ற இல்லறவழிகாட்டு நூலாகும். அதன் தமிழாக்கமே அருங்கலச்செப்பாகும்.

இவ்விரண்டு நூலும் திருச்சி உறையூரில் க்ஷத்ரிய குலத்தில் - கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கிடையே – பவ்யர் சாந்திசர்மாவாக உதித்து காஞ்சிபுர நகரிலிருந்த ஜினமடத்திலிருந்த நிர்வாண முனியிடம் தீக்ஷை ஏற்று ஆச்சாரிய நிலைக்கு உயர்வு பெற்ற ஸ்ரீ சமபந்தபத்ரர் எழுதியவதாகும். அவர் தமிழறிவு மட்டுமல்லாது சமஸ்கிரதம், பிராகிருதம் போன்றவற்றில் சிறந்து விளங்கியவர் என்பது அவர் காசி நகரில் வசித்துள்ளார் என்ற வரலாற்றிலிருந்தே அறியலாம்.

கரண்ட என்றால் செப்புதல் என்று பொருள். அருங்கலமாக செப்பப்பட்ட இந்தநூலே அக்காலத்திய இல்லறத்தாருக்கு அரும்பெரும் வழிகாட்டியாக இருந்துள்ளது என்பதே நிதர்சனம். பாரதத்தில் சமஸ்கிரம் மற்றும் தமிழ் மொழியறிந்த அனைத்து சமண இல்லறத்தாரும் அதன் வழியில் பயணித்துள்ளார்கள். அதுவே மோட்ச மார்க்கத்தை அளிக்கவல்லது என்பதை பல நூல்களில் அதன் சிறப்பைப்பற்றி சுட்டுவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இது இல்லறநெறியை செம்மப்படுத்தும் வழியில் தரப்பட்டு கடைசியாக சமாதி மரணம் என்னும் நெறியை ஏற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வழியில் ஒரு ஜைனமுனிவர் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த கல்வெட்டு ஒன்று திருநாதர்குன்றில் (செஞ்சி) பொறிக்கப்பட்டுள்ளது.

ரத்னத்திரயம் எனும் அற்புதபொருளை காப்பதற்கு உரிய இரத்தினப்பெட்டி என்பதால் இந்நூலுக்கு இப்பெயர் ஏற்பட்டது. பிறவிச் சுழலில் துன்பப்படும் ஒருவருக்கு நல்நெறியில் ஒழுகச் செய்து கரைசேர துணை செய்வது மும்மணிகளான நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்பவையே. நற்காட்சி பிறவிக்கடலில் மாசுபட்ட நெஞ்சங்களை தூய்மை பெறச் செய்து கரைஏறுவதற்கு இது ஓடம் போன்றது என்று கூறுகிறார்.

வாகனத்திற்கு ஓட்டுநர் எவ்வளவு முக்கியமோ அது போன்றது சம்யக்தரிசனம் எனும் நற்காட்சி என்கிறது இந்நூல்.

150 ஸ்லோகங்களால் உருவாகியுள்ள இந்நூல் சம்யக்துவத்தை, மும்மணிகளை கூறுவதோடு கடைசியாக சல்லேகனா பற்றியும் எடுத்துரைக்கிறது. மேலும் சிராவக நிலையை பதினொன்றாக வகுத்து விளக்கம் தந்து அதில் பயணிக்கச் செய்ய அறிவுறுத்துகிறது.

இது மந்திர, தந்திரத்திற்கு உட்பட்டதல்ல; அறம் மனிதவாழ்க்கையை செம்மைப்படுத்தும் ஒருதிறவுகோல்; மேலும் இல்லறத்தான் அறத்தின் இலக்கணத்தை நன்கு அறிந்து அதன்படி நடப்பானாயின் அவன் ஆடைகளை களைந்த முனிவனுக்கு ஒப்பானவன் (ஸு102); இம்சை, பொய், களவு, ஒழுக்கமின்மை, பேராசை இவ்வைந்தும் பாவத்திற்கு வித்து, இதிலிருந்து விடுபடுவதே ஒழுக்கம் (ஸு49) என்றும் தெரிவிக்கிறது.

இல்லறத்தாரும் துறவற நெறியாளர் போன்றே கடைபிடித்து ஒழுகி சல்லேகனா ஏற்று முக்திப்பாதைக்கு வழிவகுக்கலாம் என்பதை தெரிவிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கம்.

--------------------------------------

இக்காலத்து ஸ்ராவகர், தம் நெறியை அறியாது புறச்சடங்குகளிலேயே உழன்று வருகின்றனர். இல்லறநெறிக்கு நற்காட்சியே வேர்போன்றது. அதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று சம்பந்த பத்ரர் கூறுவதையே இந்த நூற்பாவில் குணபத்ரரும் தெரிவித்துள்ளார் என்பதே நிதர்சனம்.

அதனால் தான் சரியான புரிதலுடன் துவக்கப்படாத இக்கால திருமண பந்தங்கள் பல துன்பத்திற்கு தம்மை ஆட்படுத்திக் கொள்வதோடு , தங்களை பல பிறவிகளுக்கும் வித்திடுகிறார்கள் என்பதையே வலியுறுத்தி கூறியுள்ளார்.

அதனால் அப்போதைய இல்லறத்தாரின் மீது மிகுந்த அக்கறையுடன் நெருக்கமாக, சிராவகாச்சாரம் எனும் இல்லறத்தார் ஒழுக்கத்தை வரும் தலைமுறைக்கு கற்பிக்காமல் இருக்கும் இச்சமூகத்தை கண்டிக்கும் வகையில்; - திருமணத்தை செய்குவிக்கும் அவ்வாறான உறவினர்கள் ஆன்ம முன்னேற்றத்திற்கு விரோதிகள் என்று கூறியுள்ளதாக கொள்ள வேண்டும்.

திருமணம் எனும் பந்தத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் நியதியுடன் இல்லறத்தார் ஒழுக்க விதிகளை நன்குணர்ந்து செயல்பட்டால் அவர்களுக்கு பல பிறவிகளை குறைக்கும் என்பதை சுட்டவே இந்நூற்பா வழங்கப்பட்டுள்ளது.

அதனால் பொருட்பற்று போன்றே உறவின் மீதுள்ள குடும்பப்பற்றும் பல துன்பங்களை அளிப்பதோடு விடுதலைப்பேற்றிற்கான கால நிர்ணயத்தை நீட்டிக்கவே செய்யும் என்ற விவேக ஞானத்துடன் நாமும் ஆன்ம முன்னேற்றத்தில் பயணிப்போமாக..








தனரன்தனஸம்பாரம் ப்ரக்ஷிப்யாசாஹுதாஸனே | 

ஜ்வலந்தம் மன்யதே ப்ராந்த: ஸாந்தம் ஸந்துக்ஷணக்ஷணே || 85 || 

 What a deluded soul it is who having fed the fire of desire with the faggot of wealth, (ie worldly objects, and himself) burning (in it) considers himself refreshed while he is blowing (the fire) every moment.
ஆசை எனும் எரியும்நெருப்பை செல்வக்குவியலான (அதாவது உலகப் பொருள்கள், மற்றும் தன்னையே) விறகினால் எரிப்பதால், ஒவ்வொரு கணமும் (அந்த நெருப்பில்) வீசும்போது தனக்கு புத்துணர்ச்சியூட்டுவதாக மயங்குகிறது இந்த ஆன்மா. (எவ்வளவு ஏமாளியானது இந்த ஆன்மா.)

ஒருவன் சிறுக எரிந்து கொண்டிருந்த நெருப்பில் மேலும் மேலும் விறகினை இட்டு அது குளிர்ச்சியை கூட்டுவதாக நினைத்தால் எவ்வளவு அறிவீலியாவான். அதுபோல ஆசை மேலோங்க வாழ்பவன் செல்வத்தையும், புகழ், பெருமையையும் கூட்டிக்கொண்டே செல்வான். அதனால் அவன் துன்பத்தையும், துயரையும் பெருக்கிக் கொண்டே செல்வான் என்கிறார் முனிவ பெருமான்.

அவனால் அவன் குடும்பத்தினரும் துன்பத்திற்கு ஆளாவர். அவர்களே பின்னாளில் பகைவர் ஆவர் என்பதை அறிதல் வேண்டும் என்கிறார்.

சமணமும் ஆசையை அறுக்கவே சொல்கிறது.

----------------------------------------

சமண முனிவர் குணபத்ர ஆச்சார்யஸ்ரீ கூறும் அந்த ஆசை என்றால் என்ன…..

அன்பு – பிறரின் தேவையை உணர்ந்து பூர்த்தி செய்யும் (அறிவின்) பக்குவப்பட்ட நிலை. அந்த அறிவின் நிலைப்பாட்டிற்கு அன்பு என்று பெயர். கருணை – அத்தேவைகளை அறிந்து அதற்கான சரியான முயற்சிகளை எடுப்பது கருணை.

அன்பும் கருணையும் மிக்கதே பண்பு. அந்த பண்பு நிறைந்தவர்களே மனிதர்கள். அப்பண்பில் உயர்ந்த வாழ்க்கையே மாமனித வாழ்க்கை. அவ்வாறு வாழ்பவர்களே மகான்கள் ஆகின்றனர்.

அதே மனிதனின் தான் மற்றும் தனது எனும் அதிகாரப்பற்று, பொருட்பற்று உணர்வே மனிதப்பண்பிலிருந்து கீழிறங்கச் செய்கிறது. அந்த ஆணவம், செருக்குணர்வில் வாழும் மனிதர்களை விலங்குபோல் மாற்றக் கூடிய சக்தி எதற்கு இருக்கிறது என்றால்; ஆசை என்ற உணர்விற்கு இருக்கிறது.

ஆசை என்றால்….. மன எழுச்சி நிலைதான் ஆசை. அதாவது ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற வேகத்தோடும், அழுத்தத்தோடும் எழும் எண்ணம் தான் ஆசை.

அவை பசி, தாகத்தினால் ஏற்படும் வேகம், அழுத்த எண்ணம் -- தட்பவெட்ப சூழ்நிலை ஏற்றத்தாழ்வுகள். (மாற்றத்தினால்) ஏற்படும் வேகம், அழுத்த எண்ணம். -- கழிவுப் பொருட்களின் உந்து வேகம் போன்றவையே (மலம், சிறுநீர், இனபெருக்க கழிவு) ஆசை எனும் மன எழுச்சிக்கு காரணமாகிறது. அது நிரந்தரமாக வேண்டும்போது பேராசையாக மாறுகிறது.

அந்த ஆசையின் வழிவந்தவையே பேராசை, சினம், கரும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம். இந்த குணங்களை பலவிகிதாச்சாரத்தில் கொண்ட மனிதனாக வாழ்ந்து விலங்கு நிலைக்கு தள்ளுவது இந்த ஆசை எனும் எழுச்சிஉணர்வு.

-------------------------------------

பிற பொருள்கள் மீது நாம் ஆசைப்படுவது நமக்கு இயற்கையாகவே தோன்றுகிறது. ஏன்? சற்று ஆராய்ந்து பார்த்தால் நாம் நம் மீது; ஆணவத்தின் மீது வைக்கும் ஆசையின் காரணமாகத்தான் பிற பொருள்களை நாடுகிறோம் என்று சொல்வது சரியல்லவா.

முதலில் நம்முடைய உடலை நாம் என்று நினைத்துக் கொள்கின்றோம். இந்திரியங்கள் சேகரிக்கும் விஷய அறிவு நமது மனதை வந்து சேர்கிறது. அங்கே அது ஆசைக்கு வித்திடுகின்றது. மனமாகிய நிலத்தில் பல பிறவிகள் தோறும் எண்ணங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அவை ஆசைகளைத் தூண்டி விடுகின்றன. மனமானது ஓர் அழுக்குத் துணியைப் போல. பிறவிதோறும் அழுக்குச் சேர்ந்து கொண்டே வருகின்றது.

ஆசைகள் அழுக்கைப் போலவே உண்மையை, தூய்மையை மறைத்து விடுகின்றன. ஆசைகள் வலிமை பொருந்தியவை. இந்திரியங்களின் வயப்பட்டு ஆசைகளை வளர்த்து வரும் மனம் அங்கும் இங்கும் அலைந்து சுற்றி வருகின்றது.

ஆசைகள் காமத் தீயை வளர்க்கின்றன. காமம் என்பது பொருள்கள் மீது நாம் சதா வைக்கும் பற்றாகும். காமம் நிறைவேறாதபொழுது சினம் பிறந்து மனிதனை ஆட்டி வைக்கின்றது. சினம் அறிவை அழிக்கின்றது. மயக்கத்தைக் கொடுத்து உண்மையை மறைக்கின்றது. அதனால் உயிர்கள் உண்மை நிலையை அறியாது மாயையாகிய இருளில் ஆழ்ந்து துன்பப்பட்டு நிற்கின்றன.

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களும் உயிரை இருளில் ஆழ்த்திப் பிறப்புக்குக் காரணமாகின்றன. ஆசைகள் வளர வளர உயிரானது பல பிறப்புகள் எடுத்து அவற்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தம்மை வைத்துக் கொள்கின்றன.

மனத்திலிருந்து நிரம்பி வழியும் ஆசைகள் நமது வாக்கிலும் உடலிலும் வெளிப்படுகின்றன. மனத்தில் ஆசைகள், வாக்கில் இன்னாச் சொல், பொய், புறம் கூறல், உடலில் செயல் அழுக்கு ஆகியவை உயிருக்கு வினைத்துகள்களைச் சேர்த்து இறப்பையும் பிறப்பையும் மாறி மாறித் தருகின்றன.

அந்த காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களிலிருந்து விடுபட்டவர் பிறவிக் கடலைத் தாண்டுவர். மற்றவர் துன்பத்தில் மூழ்கி அழிவர்.

உயிரானது உடலுடன் சம்பந்தப்பட்ட நிலையில் இந்திரியங்களால் தூண்டப்பட்டு உடலின் வேட்கைகளைத் தீர்த்துக் கொள்ள ஆசைகள் நம் மனத்திலே தோன்றுகின்றன. அவற்றை நாம் தீர்த்துக் கொள்ள முயலுகின்றோம். சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. அப்பொழுது நமக்கு இன்பம் ஏற்படுகின்றது.

மனம் வெகு வேகமாக இயங்கக் கூடியது. ஒரு நொடியில் பல நூறு ஆசைகளை மனத்தால் உருவாக்கிக் கொள்ள முடியும். நிறைவேற்ற முடியாத ஆசைகளை எல்லாம் அதிகமாக மனம் உருவாக்கிக் கொண்டே இருப்பதனால் நாளுக்கு நாள் மனம் தளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது. வாழ்க்கையிலே வெற்றி கிட்டுவதில்லை. விரக்தி, வெறுப்பு முதலியவை உண்டாகின்றன.

பல ஆசைகளை நம்மால் நிறைவேற்ற முடிவதில்லை. துன்பப்படுகிறோம். துன்பங்களாகிய பேரலைகளும், நடுநடுவே சிற்றலைகளைப் போல தோன்றி மறையும் இன்பங்களும் உயிர்களை அங்கும் இங்கும் தள்ளிச் செல்கின்றன. வாழ்க்கை என்னும் ஆழ்கடலில் துணை ஒன்றுமின்றி, பற்றுக் கோடின்றித் தனியாக நின்று நம்மைச் சும்மா விடுமா என்றால் அதுவும் இல்லை.

பிற பாலர் மீதுள்ள மயக்கம் ஓரு சூறாவளிக் காற்றைப் போல் நம்மைத் தாக்க, நமது மனம் தடுமாற்றம் அடைந்து கொந்தளிக்கும் கடலிலே தத்தளிக்கின்றது. காமமாகிய சுறா மீன்கள் நம்மைக் கவ்விச் செல்லப் பார்க்கின்றன. இவற்றால் நமக்குக் கடைசியில் கிடைப்பதெல்லாம் துன்பமேயன்றி வேறில்லை.

இவ்வாறாக ஆசையினால் உந்தப்பட்ட, எழுந்த எண்ணத்தின் எழுச்சியே பல துன்பங்களுக்கும், பிறவிகள் தோறும் அத்துன்பத்தை அளித்துக் கொண்டே வருவதை விலக்கவே ஆச்சார்யஸ்ரீ அறிவுறுத்துகிறார்.

அந்த எழுச்சிநிலை எண்ணத்திற்கு விறகினை இட எண்ணி செல்வத்தையும் பொருட்களையும் சேர்க்கும் நீ எவ்வாறு இன்ப உணர்வில் வாழமுடியும் என்று நம்மை வினவுகிறார் முனிவர் பெருமான்.



  

பலிதச்சலேன தேஹான்னிர்கச்சதி சுத்திரேவ தவ புத்தே: | 

கதமீவரீ பரலோகார்தம் ஜரீ வராகஸ்தத்தா ஸ்மரதி || 86 ||
Under the pretence of grey hair, the (essence or) purity of thy wisdom goes out of the body; how can a wretched old man remember at that age (his duty) for the next world?
(உனக்கு) நரை முடி வந்தபோது ஞானத்தின் (சாரம் அல்லது) தூய்மை உடலிலிருந்து வெளியேறுவதாக போலித்தோற்றத்தை காட்டுகிறாய்; ஒரு வயோதிகன் அந்த வயதில் மறுமைக்காக என்ன செய்ய முடியும். அதைப்பற்றி சிந்திக்க கூட இயலாது.

இளமையில் பொருள்சேகரிப்பு, எதிர்பாலினம் முதலியவற்றில் இன்பம் என நுகரும் முயற்சியில் முதன்மையாய் ஈடுபட்டு காலம் கழிந்தபின் முதுமையில் மறுமை நலனுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று எண்ணுகிறாய். அப்போது ஆன்மீகப் பாதையில் முன்னேறிய தோற்றத்தை உனது நரைமுடி, நடையுடை பாவனை தரலாமே ஒழிய, உடற்கட்டு தளர்ந்ததும் எந்த ஒரு புருஷார்த்த நடவடிக்கையிலும் உன்னால் முழுமையாக ஈடுபட இயலாது.

உனது உடல் இயம, நியமத்திற்கு தகுதியற்றுப் போயிருக்கும். உன்னால் அதைப்பற்றி சிந்திக்க இயலாதபடி நினைவாற்றல் வற்றிப் போகலாம். அதனால் இளம் வயதிலேயே மறுமைக்கான முயற்சிகளை, பிற லட்சியங்களுடன், முதன்மை லட்சியமான புருஷார்த்தத்தை இடையிடையே கைக்கொள்ள முயல்வதே ஆன்மப்பயனுள்ள செயலாகும். அவ்வாறாக வாலிபப் பருவத்தில் ஆன்ம முயற்சியில் ஈடுபட்டால் முதுமையில் அது மேலும் கூடுதல் நிலையை எய்த வழிவகுக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.

----------------------------------

வணக்கத்திற்குரிய ஆச்சார்யஸ்ரீ குணபத்ரர் அவர்கள் குறள் போன்று இரண்டே வரியிலான இந்த நூற்பாவில் ஆன்மீகத்தின் உட்பொருளை பயிற்சிக்கான சரியான காலத்தினையும் வழங்கியுள்ளார் என்றால் மிகையாகாது. சிலநாட்களாக அவர் தெரிவித்த பிரவசனத்தின் தொகுப்பை இந்த நூற்பாவில் வழங்கியுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.

என்னால் முடியாத காரியம் என்று தெரிந்தும், அந்த நூற்பாவின் ஆன்மீக விரிவாக்கத்தை சுருக்கமாக விளக்க முனைகிறேன். பொருத்தருள்க….

------------------------------------------

முதற் நூற்பாவில் கூறியதுதான் சுருக்கமாக மீண்டும் ஒரு முறை….

மனிதனுக்கு மட்டுமேயான சிறப்பு பகுத்தறிவு. நல்லது, கெட்டது என்பதை பகுத்தறிந்து நல்லதை மட்டும் தேர்வு செய்யும் சிந்தனை யாற்றல் தான் பகுத்தறிவு என்பது அறிவியலார் கூற்று.

மனிதனுக்கு மட்டும் தான் தன்னை உணரும் சக்தியுள்ளது. தன்னை மட்டும் உணர்வதோடு மட்டுமல்லாது, தன் மூலமான ஆன்மாவையும் உணரும் சக்தியுள்ளது என்பது ஞானியரின் கூற்று.

அவன் மூலமே தெய்வமாக காட்சி தருகிறது. அதனை புறத்தோற்றத்தில் வெளிப்படுத்தவே கோவில்களை நிறுவி அதில் தெய்வப்பண்பை ஒரு சக்திவடிவாக, இறைசக்தியாக நிறுவி வணங்குகிறான். இது வேறெந்த ஒரு ஜீவராசிக்கும் இல்லாத சிறப்பாற்றலாகும்.

அம்மூலமாகிய ஆன்மா அன்பெனும் உணர்வையுடையது. அதனுடன் கூடவே இரக்கமும், கருணையும் அவனிடம் வந்தடையும்.

அன்பு என்பது பிறர் தேவையை அறிந்து அதனை பூர்த்தி செய்யும் பக்குவம். அதாவது பிறரின் தேவையை பூர்த்திசெய்யும் பக்குவப்பட்ட அறிவுதான் அன்பு ஆகும். பக்குவப்பட்ட அறிவே அன்பு எனும் உணர்வாக திகழ்கிறது. அந்த அறிவே இரக்கம் எனும் குணமாக, கருணை என்னும் செயலாக பிறர் தேவைகளை அறிந்து அதற்கு தேவையான, சரியான முயற்சிகளை எடுக்கிறது. அதனால் அவ்வறிவே அன்பு, இரக்கம். கருணை என மூன்றாக மிளிர்கிறது.

அன்பு, இரக்கம், கருணையும் சேர்ந்ததே மனிதப்பண்பாகும். ஆனால் என்றும் அவற்றில் வழுவாது நிற்கும் மனிதனே மாமனிதன், மஹான் ஆகிறான்.

அதேசமயம் மனிதப்பண்பிலிருந்து கீழிறங்கச் செய்வது உயிரின் திரிபு நிலை (கஷாயங்கள்) எழுச்சி, அதாவது மனதின் தோன்றும் எழுச்சியாகும். அதற்குக் காரணம் அவனிடம் ஏற்படும் அதிகாரப்பற்றும், பொருட்பற்றுமே. அவையே நான் மற்றும் எனது எனும் ஆணவம், ஈகோ என்பதாகும்.

அந்த தான், தனது எனும் உணர்வே மன எழுச்சிக்கு காரணமாகி நிற்கிறது. அவ்வெழுச்சிக்கு சில மனவேறுபாடுகளாய் எண்ணங்களை தோற்று வித்துக் கொண்டிருக்கிறது. அவை எண்ணத்தை வேகத்துடனும், அழுத்தத்துடனும் இயங்கச் செய்து விடுகிறது. அதுவே ஆசை எனும் உணர்வாகி நம் இயல்பான அன்பின் பரிமாணத்தை அழிக்கத் தொடங்குகிறது. அதுவே ஹிம்சைக்கு வித்திடுகிறது. அதனால் ஹிம்சை அற்ற வழியில் புருஷார்த்தத்தை துவக்க அஹிம்சை அறத்தை நமக்கு அளிக்கிறது சமணம். அஹிம்சையே அன்பின் பரிமாணத்திற்கான அறிவை மீண்டும் நிறுவுகிறது.

அவ்வாறான நிலை குழந்தைப்பருவத்தில் ஆளுமை உருவாகும் போதே துவங்கத் தொடங்குகிறது. அப்போதே பெரியோர்களும், ஆன்மீகர்களும் மடைமாற்றத்தை துவக்க வேண்டும். அவ்வாறான நிலை கிட்டவில்லை எனில்…

மன எழுச்சி எனும் ஆசையின் அழுத்தம் கூடக் கூட பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் போன்ற தீய பண்புகளாய், தீப்பிழம்பாய் பலரின் வயோதீகத்திற்கு முன்பு வரை மேலும் மேலும் எரியத் தொடங்குகிறது.

அந்த ஆசையினால் வந்த குணங்களை சீரமைத்தால் ஒழிய மனிதன் இயற்பண்புகளை மீட்டெடுப்பது கடினம். அதனை இளமைக்காலத்திலிருந்தே மனிதன் மானுட (அர்த்தமுள்ள பிரதான) லட்சியமாய் ஏற்று பயிற்சி செய்யத்தொடங்கினாலன்றி வெற்றி கொள்வது அரிதாகிவிடும்.

மாறாக விடலைப்பருவத்தில் தோன்றிய காம, போக உணர்ச்சிகளை வளர்ச்சி யடைய விட்டு விட்டால். வாலிப காலத்தில் மிகவும் விஸ்வரூபம் எடுத்து அது கட்டுக்குள் அடங்குவதற்குள் சிலருக்கு ஆயுள் முடிந்து விடலாம் அல்லது முதுமையை எட்டி விடுவர். அதன் பின்னர் அதற்கான பிரயத்தனம் அவ்வளவு எளிதானதல்ல. அதே சமயம் ஆயுள் முடியும் வேளையில் நாம் விட்ட மனிதப்பண்பினை, தெய்வத்தன்மையினை நம்மால் மீட்டெடுக்க முயலவில்லை என்ற சுயஇரக்கம், சுயபச்சாதாபம் கண்டிப்பாக மனதளவில் ஆட்கொண்டுவிடும். அதுவே கீழான பிறவிகளுக்கும் வித்திட்டுவிடும்.

முதுமையில் அந்த ஆன்மீக முயற்சிக்கான எண்ணம் தோன்றினாலும் முழுமை பெறவியலாத தோல்வியே நம்மை மறுபிறவிக்கான குற்றவாளி கூண்டில் நிறுத்தி விடும். அதுவே பெருந்துன்பத்தை நம் மனதிற்குள் திணித்து நம்மை வாட்டி விடும் என்பதையே முனிவர் நமக்கு எச்சரிக்கிறார்.

மேலும் மனிதப்பருவமோ குழந்தை, பாலினம் முதிர்ச்சியின் தொடக்க காலம், விடலைப்பருவம், குமரகாலம், வயோதீகம் என பெரும்பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைப்பருவத்தில் ஆளுமை நிர்ணயிக்கப்படுகிறது. பாலின பருவத்தில் காம உணர்ச்சிக்கான அகச்சுரப்பிகள் சுரக்கத்தொடங்கி பல மாற்றங்களை உடலிலும், உள்ளத்திலும் ஏற்படுத்துகிறது. விடலைப்பருவம் எதிர்ப்பாலினத்தை கவரும் அளவினை வரையறை செய்வதிலேயே விழையும் பருவமாக விஞ்சி நிற்கிறது. அடுத்து குமரகாலம் எனும் பிரதான மனிதப்பருவம் தொடங்குகிறது…

--------------------------------------

உளவியல் ரீதியாக குமரகாலம் எனும் வாலிபப் பருவத்தில்

செயல்திறன் வளர்ச்சியில் பல்வேறு அம்சங்கள் ஏற்படுகின்றன. குமரப்பருவம் என்பது வளர்ச்சி காணும் பருவம் ஆகும். உடல் அமைப்புகள் உள்ளேயும், வெளியேயும் வேகமாக வளர்ச்சியடைந்து முன்னேற்றம் காணப்படும். எலும்பு, சதை மற்றும் நரம்பு வளர்ச்சியல் தீவிர முன்னேற்றம் காணப்படும். வளர்ச்சியின் உச்சநிலை அடையும் பருவம். அதைப்போல் நினைவாற்றலிலும் சிறப்பாக உற்று நோக்கலிலும் காரணங்களைக் கண்டறிதலும், அறிவாற்றலிலும் வளர்ச்சியின் உச்சநிலை காணப்படும்.

நுண்ணறிவு அதிக அளவில் இப்பருவத்தில் வளர்ச்சி அடைகிறது. இப்பருவத்தில் உற்று நோக்கல், நுண்ணறிவு, கற்பனை, ஆய்வுத்திறன் போன்ற ஆற்றல்கள் மிகுந்து காணப்படுகின்றது. மேலும் கற்பனைத் திறன், நினைவாற்றல், கவனம், ஒப்பிடுதல், வேற்றுமைப்படுத்துதல், பொதுமைப்படுத்துதல், பிரச்சனைக்குத் தீர்வு காணல், முடிவெடுத்தல் போன்ற ஆற்றல்கள் உச்சத்தில் காணப்படுகின்றன. மனித இனத்தின் வளர்ச்சி மாற்றத்தில் குழந்தை பருவத்தில் அடுத்தபடியாக குமரப்பருவம் முக்கியத்துவம் பெறுகிறது. உணர்ச்சி மற்றும் மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் இருப்பர். (சில நேரங்களில் சிரிப்பதும், கண்ணீர் விடுவதும் இவர்களது இயல்பாகும்.) இவர்களின் உணர்ச்சிகள் நிலையற்றவை அதனால் அக்காலத்தில் அதிக கவனத்துடன் ஆன்ம நலனுடன் செயல்பட வேண்டியுள்ளது.

சமூகவளர்ச்சியில்; இவர்கள் குழுவினரின் கட்டுப்பாட்டின் கீழ், மற்றவர்களின் உணர்ச்சிகளை அறிந்து கொள்கின்றனர். இருந்தாலும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள முயல்பவர்கள்.

ஒழுக்க வளர்ச்சிப் பொருத்த மட்டில், வாலிபர்கள் ஒரு முன்மாதிரியான சமுதாயத்தை ஏற்படுத்த நினைப்பர். இவர்கள் இறை, சொர்க்கம், வாழ்க்கையின் முக்கியத்துவம், சிறப்பான முக்கியத்துவம் போன்றவற்றைப் பேசுவர். இவர்கள் சமூகத் தொண்டு, மனிதநேயம் உதவும் ஆற்றல் போன்றவற்றில் விருப்பம் கொள்வர்.

-----------------------------------------

அவ் வாலிபபருவமே ஒரு மனிதனின் பிரதானம். அந்த வாலிபப்பருவமே எந்த ஒரு லட்சிய முன்னேற்றத்தையும் முனைப்போடு செயல்பட துணை செய்கிறது. அந்த சமயத்தில் மனித லட்சியத்தில் அர்த்தமுடன் செயல்படுவதையே புருஷார்த்த சித்திக்கு உதவிடும் என்று சமணம் வழிகாட்டுகிறது. அதேசமயம் அதனை விடுத்து பொருள் சார்ந்த, உலகியல் சார்ந்த லட்சியத்தில் ஈடுபட ஆசையெனும் எழுச்சித்தீயே வற்புறுத்தி அழைத்துக் கொண்டே இருக்கும். அதன் வழியே வரும் ஆறு குணங்களும் நம்மை படுகுழியில் தள்ள தருணத்தை பார்த்து காத்துக் கிடக்கின்றன.

அதிலிருந்து மீளாமல், அவ்வெழுச்சி உணர்வை, எண்ண வேகத்தை, அழுத்தத்தை சட்டை செய்யாது புருஷார்த்தத்தில் முனைப்புடன் இறங்கினால் ஆன்ம முன்னேற்றத்தில் உச்சப் படிநிலைகளை கடந்து பல பிறவிகளை அறுத்து முக்திப்பாதையில் நெடுந்தொலைவுக்கு அழைத்துச் சென்று அதுவே நம்மை கரை சேர்க்கும் என்பதே நிதர்சனம்.

அதனை விடுத்து வயோதீகத்தில் அதே புருஷார்த்தத்தில் ஈடுபடும் போது உடல் ரீதியாக, உளம் ரீதியாக எந்த ஒரு முன்னேற்றத்தையும் பெரிதாக பெறமுடியாமல் ஆன்மீக முன்னேற்றத்தை காட்டும் போலித் தோற்றத்தை காட்டுவதால் முழுப்பயனும் கிட்டுவதில்லை என்பதே ஆச்சார்ய ஸ்ரீ இந்த நூற்பாவில் குறிப்பால் உணர்த்தியுள்ளார் என்றே கொள்ளவேண்டும்.





 

இஷ்டார்தோத்யதனாசிதம் பவஸுகக்ஷாராம்பஸி பிரஸ்புரன் 

நாநாமான ஸது: கவாடவ சிகாசந்தீ பிராப்யந்தரே | 
ம்ருத்யூத்பத்தி ஜராதரங்கசபலே, ஸம்ஸார கோரார்ணவே 
மோஹக்ராஹ விதா ரிதாஸ்யவிவராத் தூரே சரா: துர்லபா: | 87 ||
It is difficult to find men, who keep at a distance from the wide gaping mouth of the alligator of delusion in vast ocean of Samsara, full of salt water of worldly enjoyments (incapable of quenching the thirst), produced by desired objects. (The) heart (of Samsara) is inflamed by various kinds of excruciating metal sufferings which are burning like the flame of the sub-marine fire (Barawa-nala) and is disturbed by the waves of birth, old age, and death.
பிறவிப்பெருங்கடலில் மாயை எனும் முதலை வாயிலிருந்து தப்பிபிழைத்த மனிதர்களைக் காண்பது கடினம். விரும்பி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களால் உலக இன்பங்களைத்துய்க்க உதவும் உப்பு நீர் நிரம்பியுள்ள இக்கடல் எவருடைய தாகத்தையும் தணிக்க இயலாது. மனித இதயம் பலவகை உலகத் துன்பத்தின் வெப்பத்தினால் வருத்திக்கொள்வது இச்சாகரத்திற்கடியில் ஓடும் வெப்ப நீரோட்டத்தால் இந்நீர் சுடேறுவது போன்றது. மேலும் பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு எனும் பேரலைகளால் அமைதியின்றி எப்போதும் அலைக்கழிக்கிறது இக்கடல்.

இந்நூற்பாவில் உருவக அணியாய் இவ்வுலகத்துன்பம் பெருங்கடல் போன்று பெருமளவுத் துயரத்தை தரவல்லது என்கிறார் ஆச்சார்யர். இவர் Oceanography எனும் கடலியல் பற்றிய அறிவியலும் நன்கு அறிந்துள்ளார் என்பதை நாம் அவர் உருவகத்திலிருந்து நன்கறியலாம். (முகமதி – உவமை; மதிமுகம் – உருவகம்) இவ்வுலக மாயை எனும் முதலையின் வாயிலிருந்து தப்பிய மனிதர்கள் இப்பிறவி யெனும் கடலில் வீழ்ந்த மனிதரில் எவருளர் என்கிறார். பழுதை பாம்பென்று நினைப்பது மாயை; vice versa மாயை என்றாலே ஏமாற்றம்தான். பிரமைதான். பிரமை என்றால் இல்லாததை இருப்பது போல நினைத்துக் கொள்ளும் தன்மை. எது இல்லையோ அது இருக்கின்றது போன்ற நினைவில் இருப்பதுதான் பிரமை. இப்படி வாழ்க்கை முழுவதும் ஏமாற்றத்திலேயே கழித்து விடலாமா? நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? அதுதான் மாயை.

மாயை மிகவும் சக்தி வாய்ந்தது. திரைப்படங்களில் வருபவர்கள் வாழ்க்கையில் உண்மையாக இருப்பவர்களை விட நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் அதுவே மாயை எனும் முதலையாகும்.

அவனது குணவானாக நடிக்கிறான். ஆனால் உண்மைக்குணவானாக ஏற்கிறது நம் மனம். குணத்தில் மட்டுமல்ல தோற்றத்தில், நடிப்பில், அலங்காரத்தில், கவர்ச்சியில், ஆச்சரியப்பட வைப்பதில், சாகசத்தில் என அனைத்துமே ஒருவர் செய்யாமல் கூட்டுமுயற்சியில் காட்சி அமைத்தாலும் அது உண்மை என நம்பவைக்கும் அத்திரையுலகம் ஒரு மாயை. அந்த திரையுலக மாயையிலிருந்து விடுபட பலகாலம் ஆகும் மனிதனிடம் இப்பொருள்சார்ந்த உலகமே ஒரு மாயை என்று ஞானியர் கூறினால் ஏற்பவர் யாருளர். ஆனால் உலகனைத்தும் மாயத்தோற்றதுடன் தான் புலன்களால் நுகரப்படுகிறது.

மாயை எனும் முதலையின் வாயில் அகப்படாமல் தாண்டிப் போக வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு அவனுள்ளே சிறிதேனும் ஆர்வம், முறையான நோக்கம், ஒரு தீவிரம் வேண்டும். அது தான் ஞானம். அது இல்லாமல் அந்த மாயை என்கிற முதலையின் எல்லையை அவன் தாண்ட முடியாது. அதிலேயே வாழ்க்கை முடிந்து போய்விடும்.

ஞானம் என்பது இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் நமக்கு வீண்தான். மாயையிலேயே வாழ்க்கை நடந்து முடிந்து போகும். அதாவது துன்பத்திலேயே நம் வாழ்க்கை கடந்து விடும்.

அடுத்த க்ஷணம் இறக்கப் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது வரைக்கும் நடந்ததெல்லாமே திருப்பி பாருங்கள். எல்லாமே மாயை என்று அப்போதுதான் தெரியும். அனைத்துமே நம் உணர்வை விட்டு அகன்றிருக்கும்.

ஒருநாள் ஒரு பெண்மணிக்கு தூக்கத்தில் கனவு வந்தது. அந்தக் கனவில் ஆஜானுபாகுவான ஆள் ஒருவன் அப்படியே அந்த அம்மாவைத் தீவிரமாகப் பார்த்தவாறே நெருங்கி… நெருங்கி… வந்து விட்டான். அந்தப் பெண்மணி நடுங்கும் குரலில், "என்னை என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டாள். அதற்கு அவன் "இது உன் கனவுதானே, நீதானே தீர்மானிக்க வேண்டும்?" என்றானாம்.

எல்லாமே நாம் உருவாக்கிய கனவு, அப்படி இருக்கும் போது துன்பத்திற்கு யார் காரணம் என்று இப்பிரபஞ்சத்திடம் கேட்டால் எப்படி யிருக்கும். அப்படித்தான் அந்த பெண்மணியும் கனவில் வந்தவனிடம் கேட்டாள். அதுபோல் கனவான இவ்வுலக வாழ்வில் ஞானத்துடன் வாழ்ந்து ஆன்மமுன்னேற்றம் அடைவதா! இல்லை மாயையில் உழன்று துன்பக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதா என்பதை கனவு காண்பவனே முடிவு செய்ய வேண்டும்.

எனவே மாயை என்பது நாம் உருவாக்கிக் கொள்வது. நாம் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மாயை என்பது என் உருவாக்கம் என்பது புரிந்து விட்டால் அதற்குப் பெயர் ஞானம். அது புரியாமல் அதுவே உண்மை என்று நினைத்தால் அது அஞ்ஞானம் அல்லது மாயை. இந்த பிரபஞ்சம் எனும் பிறவிப் பெருங்கடலில் அஞ்ஞானம் என்னும் அலிகேட்டர் முதலை (இரண்டு மீட்டர் நீள) வாயைப்பிளந்தபடி நம்மை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் முனிவர் பெருமான். (முதலைக்கு ஆறடிநீள மேல் தாடையை பிளக்கும் உடலமைப்புள்ளதை கண்டு அவ்வாறே உருவகப்படுத்தியுள்ளார்).

இவ்வுலகிலுள்ள இயற்கையான பொருட்களை கையாண்டு இன்பத்தை பெற எண்ணாமல், விரும்பியபடி உற்பத்தி செய்யும் பொருட்களால் இன்ப உணர்வை பெற உழைப்பதால் பலன் எக்காலமும் சொற்பமே கிட்டும் என்கிறார்.

தானே விளையும் பொருளை உண்டாலும் உடல் வளமுடன், நலமுடனும் வாழத்தான் முடியும். ஆனால் விரும்பிய சுவைக்கான பொருளை விளையச் செய்து உற்பத்திக்காக உழைக்கின்ற நேரத்தில், அதன் சுவையை ருசிக்கும் தருணம் சொற்பமே என தெரிந்தபின்னும் நம் வாழ்க்கை வீணடிக்கிறோம். இது அந்த காமத்தின் உந்துதலேயாகும். அந்த சுவையின் ஆசையைக் குறைத்து வாழ்நாளின் பெரும்பங்கை புருஷார்த்தத்திற்கு பயன்படுத்து என்கிறார்.

அதேபோன்று மோகத்தினால் பிற புலன்களின் வேட்கைக்கான உழைப்பில் நம் ஆயுளின் பெரும்பகுதி வீணாகக் கழிகிறது என்கிறார். மோகம் என்பது நம் தகுதிக்கு மீறிய பொருள் மீது கொண்டுள்ள ஆசையாகும்.

ஆசையின் வழி வந்த ஒரு பொருளின் மீது கொண்ட அளவற்ற பற்றுதலினால் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதுவே ஒருவனை பல தீயசெயல்களிலும் ஈடுபடத் தூண்டுகின்றது. அது மோக உணர்வினால் வரும் கெடுமதியாகும். மோகம் ,தாபம், விரகம், போகம், காமம் எல்லாமே அடிப்படையில் ஆசைக்கு பிறந்த உணர்வுகளே.

அந்த உணர்வுகளால் கிடைக்கும் சொற்பநேர இன்பம் எழுச்சிபெற்ற உணர்வான ஆசையின் முழுதாகத்தை எப்போதும் தணிப்பதில்லை. மீண்டும் மீண்டும் அவ்வாசையைப் பூர்த்தி செய்வதிலேயே கடலின் உப்பு நீரைப்பருகுவது போன்று தாகம் தீராமல் திண்டாடுகிறோம் என்கிறார் ஆச்சார்யர்.

அதேபோல் புலனின்பத்திற்கான உழைப்பின் வெப்பத்தினால் உடல் சூடேறுவது பெருங்கடலின் அடியில் ஓடும் வெப்ப நீரோட்டம் சூடேற்றுவது போன்று இப்பிரபஞ்சத்தின் துன்பம் நம்மை வாட்டுகிறது என்று உருவகப்படுத்துகிறார்.

-----------------------------------

பெருங்கடல் நீரோட்டம் (ocean current)…. Just for our awareness…

கடலில் சக்திவாய்ந்த நீரோட்டங்கள் உள்ளது. இந்த நீரோட்டங்கள் உலகின் எல்லா கடல்களையும் இணைக்கிறது. ஒரு இடத்தில் உற்பத்தியாகும் ஊட்டச்சத்து உலகின் பல்வேறு கடல் பகுதிகளுக்கு நீரோட்டத்தினால் பங்கிடப்பட்டு பல்வேறு உயிரினங்களுக்கு பயன்படுகிறது. கடலில் உள்ள வெப்ப நீர் குளிர் நீர் இருக்கும் இடத்திற்கும், குளிர் நீர் வெப்ப நீர் இருக்கும் இடத்திற்கும் பங்கிடப்படுகிறது.

கடலில் உள்ள இந்த வெப்ப பரிமாற்றம், நிலத்தில் உள்ள உயிரினங்களையும் பாதிக்கிறது. உலகின் எல்லா உயிரினங்களும் இந்த நீரோட்டங்களை நம்பி வாழ்கிறது. நீரோட்டம் பாதிக்கபட்டால் உலகின் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படும். உலகின் தட்பவெட்ப நிலையை நிர்ணயிப்பதில் கடல் நீரோட்டம் ஒரு முக்கிய பங்கு வைக்கிறது.

பூமியில் 5 முறை, ஏறக்குறைய எல்லா உயிரினங்களும் அழியும் அளவுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. அதில் ஓன்று 25 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இது தென்துருவத்திற்கு கடல் நீர் வரமுடியாமல் மாற்றியது. இது கடல் நீரோட்டத்தை சுமார் 1000 வருடத்திற்கு நிறுத்தியது. சுமார் 1000 வருடத்திற்கு பின்தான் வட துருவத்தில் வேறு வழியாக நீரோட்டம் துவங்கியது.

இந்த கடல் நீரோட்டம் நின்றதால், ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் கடலடியில் பரிமாறப்படவில்லை. இது கடலில் உள்ள பெரும்பான்மையான விலங்குகளை அழித்தது. கடல் முழுவதும் அழுகிய சடலங்கள் மிதந்தது. இது பல நோய்களை கொண்டு வந்தது. கடலில் சேரும் ஆறு, மற்றும் கடலருகே உள்ள நிலம் மூலமாக, தொற்றுநோய் உலகின் பெரும்பான்மையான விலங்குகளை அளித்தது. இந்த பேரழிவில் இருந்து சில உயிரினங்கள் தான் தப்பித்தது. நம் மூத்தோர் உட்பட, இன்று வாழும் எல்லா விலங்குகளின் மூதாதையர்களும், அந்த பேரழிவில் இருந்து தப்பித்தவர்கள் தான். (இன்று மனிதர்களின் செயல்பாட்டினால், பூமியின் துருவங்கள் சூடாகிக்கொண்டு வருகிறது. அதிக வெப்பம் ஏற்பட்டாலும், கடல் நீரோட்டங்கள் பாதிக்கப்படலாம்.)

-----------------------------------

மனிதன் மாயையில் வீழ்ந்து, மோகம், தாபம், விரகம், காம, போகத்தில் ஆழ்ந்து துன்பக்கடலில் வாழும் முதலையில் வாயில் சிக்கி, வெப்பநீரோட்டத்தினால் துயரடைந்தது மட்டுமல்லாது; பிறவிப் பெருங்கடலில் பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு எனும் பேரலைகளால் அமைதியின்றி அலைக்கழிக்கப்படுகிறான் என்பதை நாம் உணர்ந்து நல்வழியில் செல்ல மும்மணிகளை கடைபிடிக்க வழியுறுத்துகிறார். அதுவே கடலை நம்பி வாழும் நம்மையும் விலங்குகளையும் காப்பாற்றும் என்பதை இந்தப்பாடலின் வழியே தெரிவிக்கிறார் ஆச்சார்யர் குணபத்ர ஸ்வாமி அவர்கள்.









அவ்யுச்சின்னை: ஸுகப்ரிகரைர் லாலிதா லோலரம்யை: 

ச்யாமாங்கீனாம் நயனகம லைரர்சிதா யெளவனாந்தம் | 
தன்யோஅசி த்வம் யதி தனுரியம் லப்தபோதேர்ம்ருகீபி, 
ர்தக்தாரண்யே ஸ்தலகமிலிநீசங் கயாலோக்யதே தே || 88 ||

If this body of thine which has, in the full bloom of thy youth, been nourished by a continuous series of enjoyments, and adored by beautiful women with lotus eyes charming in their agility, is an acquisition of discrimination (subjected to such austerities in the forest) that the she-deer takes thee for a land-lotus in a burnt down wood, then all praise be to thee.
இல்லறசுகத்தில் இடையறா இன்பம் துய்க்கும் வாலிபமும், தாமரைக்கண்களை யுடைய யுவதிகளைக் கவரும் யெளவனமும் உடைய சரீரத்தை உடையவராக இருப்பினும் அக்குமரகாலத்தில் ஞானம் பெற்றதால் வணக்கத்திற்குரியதான த்ரேகம் தபத்தினால் சாம்பலாகிப் போய்விடுகிறது. நீ தவவாழ்வில் ஒழுகுவதால் தீபிடித்த காட்டில் தாமரைக்குளத்தை நாடிய மான்களைப்போல, பிறரால் போற்றுதலுக்குரியவராய் (பக்தியுடன்) காணப்படுகிறாய்.

பலர் முற்பிறவியில் ஈட்டிய (சாரித்ர மோகனீய) கர்ம உதயத்தினால் இல்லற வாழ்வில் நாட்டம் கொண்டு, பற்றுக்களை நாடி பல துன்பங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கின்றனர். அவ்வாறின்றி சிலரோ அவ்வினை தணிவு நிலையில்(உபசமம்) பெண்(ஆண்) உறவில் நாட்டம் கொள்ளாது இல்லற சுகவுணர்வை விலக்கி துறவறநெறியை ஏற்று தவவாழ்க்கையை ஏற்கின்றனர். எவ்வாறெனில் வனத்தில் உலர்ந்த மரங்கள் எரியும் வெப்பத்திலிருந்து தப்பித்து குளிர்ந்த தாமரைத்தடாகத்தை சென்றடைந்த மானைப்போல துறவை ஏற்கின்றனர். அவர்கள் பாராட்டிற்குரியவர்களாகி போற்றப்படுகிறார்கள், வணங்கப்படுகிறார்கள்.

உலகிலுள்ள பொருட்களின் இயல்பே அறமெனப்படுவது. அதன் பண்பை உணர்ந்தால் அறவழியில் நாம் செல்வோம் என்கிறது சமணம்.

அதனால் ஒழுக்கத்தில் நாம் பொருளைப்பற்றியும் அதன் பண்பைப்பற்றியும் அறிந்து, புரிந்து நடக்க முயற்சி செய்தால், அது அறவழியாய் அமையும். அப்போது அப்பொருள் வழி இன்பமும் நமக்கு சரியான அளவில் கிடைப்பது உறுதி. இவ்வின்பம் இம்மையிலும் எப்போதும் நீடித்து; மறுமைக்கும் துணை புரிவதோடு அறவழி செல்லும் உணர்வைத்தூண்டி சில பிறவியிலேயே வீடுபேற்றிற்கான வழியை அளிக்கும் என்பதே சமணம் தரும் வாழ்வியல் வழிகாட்டுமுறை.

அந்த அறம், பொருள், இன்பம் என்ற நெறியில் நாம் பிறழாமல் நடந்தால், ஒழுகினால் வீடு என்பது நிச்சயம். அதற்கு வழிசெய்யும் மானுட லட்சியமே புருஷார்த்தமாக கருதப்படுகிறது. அப்புருஷார்த்தத்தில் வாழ முயற்சி செய்பவனே சமணன், நன் முயற்சியாளனாக கருதப்படுகிறான்.

அதற்கான வாழ்வியலை பகவான் மகாவீரர் இருவழி நெறியாக அளித்துள்ளார். ஒன்று இல்லறநெறி மற்றொன்று துறவறநெறி. இல்லறத்தில் அறத்தை வளர்க்கும் வழிமுறையை சிராவகாச்சாரம் அளிக்கிறது. துறவறத்திற்கான நெறியும் முனியாச்சாரமாக அளிக்கப்பட்டுள்ளது.

இவ்விரண்டில் எதை தேர்வு செய்தாலும் போற்றுதலுக்குரியதே, அதனை துல்லியமாக ஒழுகும் உறுதியான முயற்சியில். ஆனால் இல்லற நெறி இருவரின் கூட்டுறவில் அறம் வளர்ப்பது, துறவறம் தனிமனிதனாக அறவழிச்செல்லல் நடைபெறுகிறது. இல்லறத்தில் இல்லறத்துணை நன்றாக அமைந்தால் நல்லறமாக போற்றப்படுகிறது. இல்லையேல் அதுவே பல பிறவிகளுக்கும் வித்திடுகிறது.

அதே சமயம் துறவறநெறி தனிமனித முயற்சியாய் அமைந்ததால் அதில் முயற்சியாளன் முனைப்போடு செயல்படும் போது ஆன்ம முன்னேற்றம் சீக்கிரமே கிட்டுகிறது. அதனால் அவன் போற்றுதற்குரிய மனிதனாக, தெய்வப்பண்பை எய்திய கடவுளாக மதிக்கப்படுவது உறுதி.

ஆனால் இல்லறத்தை ஆளும் இல்லாள் அல்லது மனைபதி சரியாக அமைந்த கூட்டுறவாய் மாறும் முயற்சியும் துவக்கத்தில் கூடுதலான அணுகுமுறையாய் தேவைப்படுகிறது. அதில் பிசகல் ஏற்படும்போது இல்லறம் பொய்த்துப்போகிறது. அப்போழ்து போற்றுதற்குரியதா வாய்ப்பை இழந்து விடுகிறது.

அதனால் தனிமனித நெறியான துறவறநெறியே நன்முயற்சியில், புருஷார்தத்தில் ஈடுபட்டு போற்றுதற்குரியதாய் அமைந்து விடும் சாத்தியக்கூறு அதிகம். அதே சமயம் இல்லறம் எனும் இருவரின் கூட்டுறவு அறவழி முயற்சியில் பாதகங்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாவதால் இல்லறநெறி போற்றுதலிருந்து விலகியே நிற்க வேண்டியுள்ள சூழல்.

அதனால் இல்லறநெறியாளர்கள் துவக்கத்திலிருந்தே சிராவரின் ஆச்சாரங்களை கவனமுடன் செயல்பட்டால் அதுவே பேரின்பத்திற்கும் வழிவகுக்கும். அவ்வாறான மேலாண்மைக்கான சரியான வழிகாட்டும் பெரியோர்கள் வீட்டில் அமையவேண்டும். அதன் வழியில் சிறியோர்களும் நடக்கவேண்டும் என்ற நிலைப்பாடும் விஞ்சியே நிற்கிறது.

அதேசமயம் யதி சங்கங்களில் அதற்கான மேலாண்மையை ஆச்சார்யர்கள் ஏற்று அத்தனிமனிதர்களை சரியான வழியில் செல்ல துணைபுரிகிறார்கள். (இவ்வேளையில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் பலர் ஒன்று சேர்ந்த கூட்டுக்குடும்பமாக இல்லறநெறியைப்போன்றே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது பொதுவாக அறநெறி ஒன்றே உறவின் முறையே அதனை பிரித்தாள்கிறது.)

அதனால் இருவறமும் சிறப்பான நிலைப்பாட்டில் அமைக்கப்பட்டாலும் , துறவற நெறியே அதிகம் பொய்த்துப் போகாமல் போற்றுதற்குரியதாக விஞ்சி நிற்பதால் இந்நூற்பாவில் இளமையிலேயே துறவறநெறியை ஏற்று நடப்பாயே யானால் போற்றுதர்குரிய மனிதனாக வளர்ந்து வீடுபேற்றிற்கும் வழிவகை செய்யலாம் என்று அறிவுறுத்துகிறார் ஆச்சார்யஸ்ரீ அவர்கள்.

(இல்லறமே உலகியலில் நல்லறம், அது எதனால் பொய்த்துப்போகிறது என்பதை இல்லறத்தார்களே முடிவு செய்தல் வேண்டும். அதற்குரிய நல்லம்சங்களுக்கு ஊறு செய்யும் நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பிறிதொரு சமயம் தெரிந்து கொள்வோம். அதனால் நாம் துறவற நெறியாளரைப்போற்றி வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதே நிதர்சனம். வெளிவற ஒவ்வொரு இல்லறத்தாரும் துவக்கத்திலிருந்தே அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் சாத்தியமே…)








பால்யே வேத்ஸி ந கிம்சிதப்யபரிபூர்ணாங்கோ ஹிதம் வாஹிதம், 

காமாந்த: கலு காமினீத்ருமகனே ப்ராம்யன் வனே யெளவனே | மத்யேவிருத்தத்ருஷார்ஜிதும் வஸு பசு: க்ளிஸ்னாஸி கிருஷ்யாதிபி- வார்த்திக்யே அர்தம்த: க்வ ஜன்ம பலி தே தர்மோ பவேன்னிர்மல: || 89 ||

In thy boyhood, when thy body is immature, thou dost not know anything whatsoever as to thy benefit or harm: in thy youth, blinded by sex-passion, thous, ramblest in a forest, dense with trees in the form of women; in thy middle age, thou sufferest because of thy great greed; like a loaded beast, by agriculture, etc., pursued to earn (money), and in thy old age, thou art as if half-dead. Which, then, (is the age) when life should bear fruit in pure Dharma.
சிறுவயதில், உங்கள் உடல் முதிர்ச்சியடையாதபோது, உங்களது நன்மை அல்லது தீங்கு குறித்து எதையும் அறிய மாட்டீர்கள். உங்கள் இளமை பருவத்தில், பாலியல் ஆர்வத்தால் கண்மூடித்தனமாக, பெண்(ஆண்)களின் தோற்றத்தை கண்டு மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் சுற்றித்திரிவது போல் அலைகிறாய். நடுத்தர வயதிலோ, பொருள்தேடும் பேராசையால் விவசாயம், தொழில் போன்றவற்றில் சம்பாதிக்கும் (பணம்) முயற்சியை மேற்கொண்டு பொதிசுமக்கும் மிருகத்தைப் போல துன்பப்படுகிறாய். மேலும் உன் வயதான காலத்தில், அதாவது பாதி இறந்தவன் போலான நிலையில் காலம் கழிக்கிறாய். அப்படியானால், தூய்மையான தர்மத்தில், அறத்துடன் வாழ்ந்து பலன் பெறவேண்டிய பருவம் எது. (நீயே சிந்தித்துக்கொள்)

குழந்தைப்பருவத்தில் ஆளுமை நிர்ணயிக்கப்படுகிறது. பாலின பருவத்தில் காம உணர்ச்சிக்கான அகச்சுரப்பிகள் சுரக்கத்தொடங்கி பல மாற்றங்களை உடலிலும், உள்ளத்திலும் ஏற்படுத்துகிறது. விடலைப்பருவம் எதிர்ப்பாலினத்தை கவரும் அளவினை வரையறை செய்வதிலேயே விழையும் பருவமாக விஞ்சி நிற்கிறது. வாலிபப்பருவமே வாழ்க்கையில் எதை லட்சியமாக கொண்டுள்ளதோ அதில் பெருமுயற்சியுடன் அலைந்து திரிந்து வெற்றி கொள்ள விழைகிறது. முதுமை வந்து விட்டால் கிடைத்த வெற்றிகளை அனுபவிக்க எண்ணும் போது அவை இப்பருவத்தில் ஏற்க இயலாது ஒதுங்கிச் செல்வதை கண்டவுடன் மனம் வேதும்பி தவறு இழைத்துவிட்டோமோ என கழிவிரக்கம் கொள்கிறது. இதில் எப்பருவத்தில் ஆன்ம முன்னேற்றத்தை ஏற்பது என்ற நினைவு அந்திம காலத்தில் எஞ்சி நிற்கிறது என்று இடித்துரைக்கிறார் ஆச்சார்யஸ்ரீ.

சாதாரணமாக ஒரு மனிதனின் வாழ்நாளில் அறத்தின் வழியில் செல்ல உதவியாய் இருப்பது சாத்வீக குணமே. அதுவே நற்பண்பிற்கான, நல்லொழுக்க இயல்பிற்கான குணமாகும். அதுவே அறம் சிறக்க, ஆன்மமுன்னேற்றத்திற்கான குணநலபேறாகும்.

மனதை சத்துவ குணத்திற்கு உயர்த்தி அதில் நிலை பெற வேண்டும். அதுவே அறவழியாகும். மனமாற்றம் என்பதும் குணமாற்றம் என்பதும் ஒன்றுதான்.

--------------------------------------

ஜைன சமய அறவழியில் நடக்க எந்த வழிப்பயிற்சியினையும் ஒப்பிட்டு தொடரலாம். அதனை பயிற்சிக்காக பயன்படுத்துவது அக்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்ப்பட்டு வருவது மரபில் உள்ள செயலே. பொதுவான சாங்கிய வழி குணவகையை ஒத்தே நம் வாழ்வுமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. அதனால் அக்குண வழிமுறையை தெரிந்து கொள்வது ஆன்ம முன்னேற்றத்தை எளிதில் அறிந்து கொள்ள துணைபுரியும் என்பதால் சுருக்கமாக விளக்க முற்படுகிறேன்.

பொதுவாக இந்த பிரபஞ்சம் ஒரு மாயை என்பதாக் கண்டோம். இல்லாததை இருக்கும் தோற்றமாக உணரவைப்பது மாயையாகும். அதிலிருந்து ஞானத்தை முழுவதுமாக புரிந்து கொள்ளும் வரை அதன் வழியிலே பயணித்துதானே வாழவேண்டும்.

கானல் நீர் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதில் நீர் இல்லை. அதைக் குடித்து நாம் தாக சாந்தி செய்து கொள்ள முடியாது. கானல் நீர் உண்மையான நீர் இல்லை என்று அறிந்தவர்களுக்கும்கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்கிறது. அதனை உபயோகிக்க முயலாமல் மாறĮ