தியானம், பயிற்சி, விடுதலை




தியானம், பயிற்சி, விடுதலை….






ஒரு தியான சாதகன் சொல்கிறார். நான் பதிநான்கு ஆண்டுகள் தியானம் செய்கிறேன். இதுவரை எந்த ஒரு அற்புதத்தையும்; அதாவது மூன்றாம் கண் திறக்கப்படுதல், வானத்தில் எந்தக் கருவியும் இன்றி பறத்தல்; சக்தி நிலை உயர்வு போன்ற நிகழ்வினையும் சந்திக்கவில்லை. அவைகள் எப்போது எனக்கு கிடைக்கும்.


குருநாதர் ஏன் அப்படி கிடைக்க வேண்டும், எதற்காக அதை விரும்புகிறாய் என்றார்.

குருவிடன் கேள்வி கேட்டால், எதிர் கேள்வி கேட்கிறாரே? என்று தோன்றும்.

----------------------------------------------- 

நம்மிடையே உலவிவரும் விவேகானந்தரின் வாழ்வில் நடைந்த ஒரு சம்பவத்தை காண்போம்.

ராமகிருஷ்ணர் தமது இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவர் சீடரான விவேகானந்தரை அழைத்து – நான் இப்பூதவுடலை நீக்கி அமைதி பிரதேசத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டேன்.


எனது ஆயுள் முழுமையும் ஆன்ம முன்னேற்ற சாதனைகளில் ஈடுபட்டதை நீ அறிவாய்.  பல உன்னத அனுபவங்களை, அறிவை, சித்திகளை வரப்பெற்றவன் என்பதும் உனக்குத் தெரியும். வரப்பெற்ற சித்திகள் அனைத்தையும் உனக்கு அளித்துச் செல்ல விரும்புகிறேன் என்றார்.


ஒரு நொடிகூட சிந்திக்காமல் அப்படியா அவைகள் அனைத்தும் நான் சத்தியத்தை அடைய உதவிடுமா குருவரரே? என பணிவுடன் வினவினார் விவேகானந்தர்.


ஒருபோதுமில்லை, அதேசமயம் இவ்வுலக வாழ்வில் பலவற்றை பெற உதவிடும் என்றார்


யோசிக்காமல் உடனே விவேகானந்தார் ’அப்படியானால் குருநாதரே அவற்றில் ஒன்று கூட எனக்கு தேவையில்லை. நான் சத்தியத்தை நோக்கிய பயணத்தில் தான் உள்ளேன், மற்றவை என் இலட்சியத்திலில்லை.என்றார்.


அக்கணமே பரமஹம்சரும் உனக்கான ஆன்மப் பயிற்சிகள் அனைத்தும் என்றோ என்னிடத்தில் முடிந்து விட்டன. அவையே உன் சத்தியப்பயணத்திற்கு வழிவகுக்கும். நீ இங்கிருந்து செல்லலாம் என்றார்.

இக்கதை  வினாவிற்கு தீர்வை யளிக்க கூடியது.


இந்தக் கதையிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் உண்மையான பயன்பாட்டை பல சாதகர்களும் மறந்து விடுகின்றனர். தியானப்பயிற்சியின் துவக்கத்திலிருந்தே ஆனந்தத்தில் தோய்ந்து சத்தியத்துடன் ஐக்கியப்படுதலே இலட்சியமாக இருக்க வேண்டும். அதில் உறுதியுடன் பயிற்சியில் ஈடுபட துவக்க வேண்டும்.


துவக்கத்தில் பலரும் உடல் சார்ந்த, உலகியல் சார்ந்த பயன்பாட்டைக் கருதியே, உடல் ஆரோக்கியம், மன அமைதி, சில அற்புத சக்திகளை பெறுவதென்ற இலக்கோடு பயிற்சியில் இறங்குவர். அவ்வாறு பல பயிற்சி நிலையங்கள் விளம்பரம் செய்கின்றன.


அவை அனைத்தும் தியானத்தின் வழிப்பயணத்தில் நாம் சந்திப்பவையே. பல ரித்திகளும் நம்மை கவரும் படி கிடைப்பவையே அவ்வேளையில் அந்நிலைப்பாட்டில் நின்று விட கூடாது என்பதிலும் உறுதியுடன் இருக்க வேண்டும்.


பெரும்பாலான சாதகர்கள் தியானத்தின் பயன்பாட்டை மறந்துவிடுவர், அதாவது சத்தியத்தை உணரவே பெறுவதே தன் நோக்கம் என்பதை.

எதற்காக தியானம், ஏன் பயிற்சி செய்யவேண்டும் என்பதை தெரியாமல் துவங்க முற்படுவர்.

தியானம் ஏன் செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாமலே, எப்படிச் செய்யவேண்டும் என்பதை கற்பார்கள்.
மேலும் சக்ரத்தை தூண்டுவது, குண்டலி சக்தியை மேன்மையுறச்செய்வது, முக்காலத்தையும் உணர்வது மற்றும் மெய்ஞ்ஞானம் போன்ற புதிய அனுபவத்தை பெறவதிற்காக அல்ல.

இவ்வுலகத்தில் கற்றதை விலக்கி சத்தியத்தை தெரிந்துகொள்ளவதே தியானத்தின் பயன்பாடு.

தனித்துவமான, ஏகாந்தத்தை உணரவே தியானமுறை முற்காலத்தில் தோன்றுவிக்கப்பட்டது. சத்தியமே விடுதலையை அளிக்கக் கூடியது.



உலகத்தைப் பற்றி நாம் கொண்டுள்ள கற்பனைகளையும், அபிப்ராயங்களையும் நீக்குவது;    அதாவது நான், (எனக்கு)  ஆண்/பெண்;   கணவன்/மனைவி; தந்தை/தாய்;    அமெரிக்கன்/ இந்தியன்;   மனிதன்/மிருகம்;   இன்பம்/ துன்பம்; தெளிவு/குழப்பம்   போன்றவற்றை மனதிலிருந்து விலக்குவதே.  


நான் என்ற அடையாளத்தில் புதைந்துள்ள விலாசங்கள் விலகும் போதுதான் இயற்கையின் உண்மைத்தன்மையை உணரலாம்.  


உயிரினமாய் வாழ்பனவாய் இல்லாமல் உயிராய் வாழ்வதை உணரலாம். 


இவ்வனுபவமே பிரபஞ்ச உயிர்கள் அத்துனைக்கும் பொருந்தும்.


உயிராய் வாழ்கிறேன் என்ற அனுபத்தை உணர்ந்தால் உலகிலுள்ள அனைத்துயிரினங்களும் உயிராய், தனக்குச் சமமாய் தோன்றும்.


பிரபஞ்சம் அனைத்தும் நானே என விளங்கும்.
அதுவே ஒருமை நிலை.

இவ்வுணர்வே தன்னை உணர்தல்.
அதுவே தியானத்தின் முழுப்பயன்பாட்டு நிலை, உச்சநிலை.


அந்நிலையே விழிப்புணர்வு, தன்னுணர்வு, சமாதி, சுயச்சார்பு, விடுதலைப் பேறு.


மற்ற அனைத்து செயல்முறையும், அதற்கான பாதையை/கருவியைப் பொருத்து அமையும்.


அதனால் தியானம் பற்றிய கவலையோ, சித்தியைப் பற்றிய சிந்தனையோ தேவையில்லை.

நானே பாக்கியவான் எப்போது இவ்விலாச மெனும் தற்குறிப்பு மாயவலையில் சிக்காமல் இலக்கில்லா தியானத்தை தொடர்ந்தேனோ கண்டிப்பாய் எனக்கு சத்தியம் கிட்டும் என்ற இலட்சிய உறுதியுடன் துவக்கி தொடரவேண்டும்.


இலக்கில்லா தியானம், பூஜ்யத்தை நோக்கி, சூன்யத்தை நோக்கி தியானிப்பதே சமண மதத்தின் தியானமாகும்.


அதுவே விடுதலை மார்க்கத்திற்கான துரித செயல்முறை.


இடையில் வரும் சித்தி, ரித்தி சிறையில் சிக்க மாட்டேன் எனும் உறுதியுடன் துவங்குவதே சமணத்  தியானப் பயிற்சி.


உடன் துவங்குங்கள்
பயன் பெறுங்கள்.


பத்மராஜ் ராமசாமி.

2 comments: