Chaturmas - மழைக்காலத் தங்கல்


Chaturmasya  -  மழைக்காலத் தங்கல்



மழைக்காலத் தங்கலின் ஆன்மீகமும்அமைதியும்.















சாதுர்மாசம் என்பது நான்கு மாத காலம் போதனை வழியே மெய்யறிவு பெற பகவான் மகாவீரரால் வழங்கப்பட்ட சமண மத ஒழுக்கமாகும். சமணம் அஹிம்சை நெறியின் மகத்துவத்தை எங்கும் பரப்பிடும் காலமாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் அனைத்து சமணர்களால் கொண்டாடப்படுகிறது.

ஆஷாட மாத (ஓரளவு சமமான ஆடி மாதம்) பெளர்ணமியிலிருந்து (கார்த்திகை) கார்த்திக் மாத பெளர்ணமி வரை சாதுர்மாஸ் முடிவடைகிறது. நந்தீஸ்வர ஆஷ்டாணிகத்தையும் சேர்த்துக் கொள்வர். அந்த பருவத்தில் அடிக்கடி மழை பொழிவதால்வர்ஷா வாஸ்என்றும் அழைக்கப்படுகிறது.








துறவிகள் ஒரே இடத்தில் தங்கி, தர்மங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள்.  ஆனாலும் மழைக்காலம் முடிந்து பின் கிளம்புவார்கள்.

மேலும் துறவிகள்; பத்து வித குணங்களைத் தீவிரமாக ஒரே இடத்தில்  தங்கியிருந்து கடைபிடிக்கும் இந்த (மழைக்கால) பருவத்தில் இல்லறத்தார்கள் அவருடன் இருந்து அந்த குணங்களை பெற வாய்பளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

முற்காலத்தில் அதிகமாக தெருக்கள், சாலைகள் கிடையாதுஅதனால் மழைக்காலத்தில் சுற்றுபுறம் முழுவதுமாக தாவரங்களாலும், விலங்கினங்களாலும் சூழப்பட்டிருக்கும்.

சமணமுனிகளின் கூற்றுபடி தாவரங்களுக்கும் உயிருள்ளது என அறியப்படுகிறது. அஹிம்சை நெறி சமணத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால், உயிரினங்களுக்கு எத்தீங்கும் நேராது முனிவர்கள் மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கிறார்கள். அனைவரது நலம் கருதியும், தாவரம், விலங்கினங்களை பாதுகாக்கும் பொருட்டும்; மேலும் முனிவர்கள் வழிபாடும் தியானமும் செய்ய ஏதுவாக ஓரிடத்தில் தங்கி விடுகின்றனர். அப்பருவத்தில் உள்ளார்ந்த உயிராற்றலை விழிப்படைய வேண்டி ஆன்மீய சாதனையில் தங்களை ஈடுபடுத்துகின்றனர்.

எனவே மழைக்கால தங்கல் என்பது ஒருவரின் ஆன்ம முன்நேற்றத்திற்கான பருவமாக கருதப்படுகிறது. அதேசமயத்தில் அஹிம்சை நெறியும் கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் சாலைவசதிகள் பெருகிய இக்காலத்திலும் சாதுர்மாஸம் ஆன்ம சாதனையாக தவமியற்ற அனுகூலமான பருவமாக கொள்ளப்படுகிறது.

-------
வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும்.

யல பருவ மழைக்காலம் முடிந்தவுடன் மஹா பருவம் துவங்குவதால் அதிக ஜீவராசிகள் உயிர் பெறுகின்றன.

ராமாயணத்தில் வால்மீகி ராமன் வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு முடிசூட்ட கிஷ்கிந்தைக்கு செல்லுமாறு கூறும் போது, மழைக்காலம் ஆதலால் தான் இக்குகையில் தங்கி மாரிக்காலம் முடிந்த பின் என் பயணத்தை தொடர்வேன் என்று கூறுவதாக கதை வருகிறது.
தன்  மனைவி சீதையை  தேடிச் செல்லும் போது வழியில் பயணத்தை நிறுத்தி மஹா பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தொடர்வதாக ராமாயணம் தெரிவிக்கிறது.


அச்சாதுர்மாஸ்ய விரதம் பிராமணர்களாலும் அனுசரிக்க படுகிறது. சிலர் ஆஷாட ஏகாதசி முதல் கார்த்திகை ஏகாதசி வரை அவ்விரதகாலமாக சொல்கிறார்கள். அக்காலத்தில் ஆதிசேஷனின் மடியில் ஓய்வெடுப்பதால் விஷ்ணுவின் இரவு காலமாக கருதுகிறார்கள். ஆனால் அவர்களின் வேத முறைப்படி ஒரு பட்சம் என்பது ஒரு மாதமாக கருதப்படுகிறது. அதனால் தற்போதைய நாட்காட்டியின் படி மொத்தம் இரண்டு மாதங்களே யாகும்.


அச்சமயத்தில் ச்ரவண சோமவார விரதம், கோகுலாஷ்டமி விரதம், ….. போன்ற விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். அம்மத சன்யாசிகளும் அஹிம்சை கருதி உயிர்வதை தடுக்கவும், பாதுகாக்கவும் இவ்விரதத்தை தியானத்துடன் மேற்கொள்கின்றனர்.

பெளத்த மதத்திலும் சாதுர்மாஸ் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பிம்பிசார மன்னனின் நந்தவனத்தில், ராஜகிரியில் தங்கி போதனை  செய்த காலமாக அந்த  நான்கு மாதமும் சொல்லப்படுகிறது. அம்மாதத்தில் பல ஜீவன்கள் தோன்றுவதால் வதைக்கு உட்படாமல் அஹிம்சை காக்கவே இப்பருவ விரதம் ஏற்கின்றனர்.

வ்விரு மதத்தினருக்கும் ஆன்மீக வழியில் அமைதியை தேடும் காலமாக உள்ளது.

தற்காலத்திலும் மழைக்காலம் ஆரம்பிக்கு முன்னர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்கிறது. ஏனென்றால் அக்காலத்தில்,

சளி, தும்மல், காய்ச்சல், டெங்கு, மலேரியா, மஞ்சள் காய்ச்சல், எலிக்காய்ச்சல், டைபாய்டு, பூஞ்சை தொற்றுநோய், வயிற்றுப்போக்கு, கண்வலி போன்ற வியாதிகள்;

கொசு, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை யினால் ஏற்படுகின்றன. அதனால் அரசு பல தீவிர நடவடிக்கைகளை  எடுக்கின்றன.

-----------------
மழையின் காரணமாக வியாதிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாவதால் அரோக்கியத்திற்கான  வழியில் கவனமுடன் செயல்படவேண்டும். சூரியகதிர்கள் குறைவான மழைக்காலத்தில் எதிர்மறை சக்திகள் வலுப்பெறுவதால் அச்சயத்தில் தமோ குணம் அதிகமாகும். அத்தமோ குணம் நமக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதற்கு எதிரான சாத்வ பண்பினை கூட்டுவதற்கான தேவைகள் ஏற்படுகிறது. மேலும் தக்ஷிணாயனம்,  புண்ணிய காலமாக அமையாமல், சாத்வீகத்திற்கு எதிரானதாக அமைந்து விடவும் வாய்ப்புள்ளது.

இளம் பருவத்தினர்கள் அதன் முக்கியத்வத்தை உணர்ந்து அதன் படி நடக்க வேண்டும். அவ்வமயம் உணவேற்பதில் கவனம் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை பாதையை கடைபிடிக்க வேண்டும்.

அதனால், அக்காலத்திலேயே மழைக்கால தீங்கிற்கு தீர்வாகவும், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்க  பகவான் மஹாவீரர் சொன்ன நல்லொழுக்கத்தினை உடலாலும், மனதாலும் ஏற்று ஒழுகவேண்டும். அச்சமயத்தில் இறை வழிபாடும், மதச்சடங்குகளையும் பின்பற்ற வேண்டும். தவறான நடத்தையிலிருந்து விலகி புண்ணிய வினையை ஈட்ட சரியையும், தானங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அந்நாட்களில் வழமையாய் உள்ள விரத,  நியமங்களுடன்  அப்பருவ விதிகளையும் சமணர்கள் ஏற்று நடக்கின்றனர்.

தவமும், தியானமும் முனிவர்களால் அப்பருவத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த நான்கு மாதங்களில் முனிவர்கள் பயணங்களை விடுத்து ஓரிடத்தில் தங்கி அனைவரது நன்மை கருதி தியானத்தை அமர்கின்றனர்.

ஒரு போழ்து உணவேற்கும் விரத மேன்மையை சிராவகர்கள் ஏற்கின்றனர்.

சமண இல்லறதார்கள் முனிவர்களை வரவேற்று மத சித்தாந்தங்களையும்,  கருத்துக்களையும் கேட்டறிகின்றனர்.








மேலும் அப்பருவம் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்பதும், வழங்குவதற்கான காலமாக கருதப்படுகிறது.


அக்கால இடைவெளியில் தசலாட்சண நோன்பின் காலமும் வருவது சிறப்பை கூட்டுவதாக உள்ளது. அக்கொண்டாட்டங்கள் பத்து தர்மங்களை, பன்னிரு சிந்தனைகளை முழுவதுமாக புரிந்து கொள்ள உதவும் பருவமாகவும் உள்ளது. கடைசியாக ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.


மழைக்காலத்தங்கல் உடலிற்கும், மனதிற்கும் ஆன்மீகத்தின் வழியே ஆரோக்கியத்தையும், அமைதியையும் தருகிறது.


1 comment:

  1. Nice and good info about "Stay for Four Month"

    ReplyDelete