Godliness - அருள்







அருள் என்றால்.....

எப்படி ஈட்டுவது...?


அருள் என்ற சொல்லுக்கு நேரடியான விளக்கம்
‘இறைத்தன்மை’ என்று பொருள். ie Godliness.


அருள் நிரம்பிய வாழ்க்கை இருப்பின்
வாழ்வில் இனிமையும் மேன்மையும் சேரும்.
இது ஞானியர் வாக்கு.


படித்து, உழைத்து பொருளை ஈட்டி விட்டோம்.
அருளை ஈட்டுவதற்கு… ?
ஞானம் தேவை….


அந்த ஞானத்தை  பல நூல்களையும், அறவுரைகளையும் தேடினாலும் கிட்டவில்லை.
காரணம் வழியில் வரும் ஐயங்களை நீக்க
ஆளின்றி செயல்பாட்டில் தவக்கம்.


அப்படியென்றால் வழிகாட்ட சரியான குரு தேவை..
சரி குருவின் காலடியில் அமர்ந்து இருக்கிறோம்.


அருள் எனின் இறைத்தன்மை…


இறைத்தன்மை என்ற சொல்லில்
இறை மற்றும் தன்மை என்ற
இரு சொல் இருப்பதை காண்கிறோம்.


பொருள் தன்மை என்றால் …
லட்டு இனிப்பானது என்பதில்  
அதன் தோற்றம் மற்றும் தன்மை இனிப்பு இரண்டுமுளது.


இனிப்புத்தன்மை என்று கூறுகிறோம்.
sweet என்பது பொருள்.
ness என்பது தன்மை.(!)

இறைத்தன்மை என்றால்
இறைவன் என்ற வடிவம் இருக்க வேண்டும்,
அப்போதுதானே தன்மை வரும்..
என்ற ஐயமும் ஏற்படும்.


ஆனால் வள்ளுவர் இறைவன் பொருள் சேர்
இறைவன் என்பது பொருள்,
மற்றும் அந்த பொருளுக்கு என்ன அர்த்தம்...?


உதாரணமாக வாழைப்பழம் என்பது வெறும் தோற்றத்தினால் மட்டும் ஏற்பட்டதில்லை.
ஏனெனில், அதன் சுவையைத் தான் வாழைப்பழம் என்று உணர முடியும்.


எப்போது என்றால் அதை சுவைத்துப் பார்க்கும்போது மட்டுமே உறுதி செய்ய முடியும்.


ஏனெனில், மெழுகால் செய்யப்பட்ட வாழைப்பழத்திற்கு அதன் வடிவமும் உண்டு,
இரசாயனத்தை பயன்படுத்தி வாசனையும் உண்டாக்க முடியும்.


ஆனால் சுவையை  உண்மையான பழத்தால் மட்டுமே கொடுக்க முடியும்.


பொருள் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு.
வடிவம், (object) மற்றும் உட்பொருள் (meaning).


அப்போ இறைவன் என்ற சொல்லுக்கு தோற்றம் இருக்கிறதா...? இல்லையா...?
பழத்திற்கு தோற்றம் உண்டு தானே..!


ஆனால் பழம் தோற்றமா....? தன்மையா...??
தன்மைக்கு தோற்றம் இருக்குமா...? இருக்காதா...??


ஒரு மலர் மலர்ந்தால் மலரா...?
இல்லை அதன் வாசனை வெளிப்பட்டால் தான் மலரா...??


வாசனை வந்தால் தானே நாம் மலாராக ஏற்றுக் கொள்வோம்.
வாசனை இல்லையேல் அது காகிதமாகி விடுமே.


மலருக்கு தோற்றம் உண்டு, ஆனால் வாசனைக்கு தோற்றம் இல்லை தானே..!
ஆனால் வாசனை எனும் தன்மையின்றி அது மலரில்லை….


அப்போது இறைவன் என்ற சொல்லுக்கு தன்மை என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாமா…


மலர் என்றால் வாசனை என்ற தன்மை,
பழம் என்றால் சுவை என்ற தன்மை,
சூரியன் என்று சொன்னால் வெளிச்சமும், வெப்பமும் என்ற தன்மை,


இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு சொல் அதன் புறத் தோற்றத்தை குறிப்பது அல்ல, மாறாக, அதன் அகத் தன்மையை, குணத்தையே குறிப்பது.


அப்போது இறைவன் என்ற சொல்லும் குணத்தை / தன்மையைத் தான் குறிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.


நாம் கோவிலில் காணும் இறைவனிடம் தன்மையை காண்கிறோமா....?
இல்லையே தோற்றத்தை தானே காண்கிறோம்.


அப்போ அது இறைவனா...?
இது நாத்திகம் வாதமல்ல.
உண்மையான ஆத்திகத்தை நோக்கிய பயணம்.


இறைவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் தன்மை.
அந்த தன்மையை உணர்ந்தவர்களுக்கு இருள் சேர் இரு வினையும் சேரா
துன்பம் தரக்கூடிய நல்வினையும், தீவினையும் சேராது.


வள்ளுவர் இறைவனை உணர வேண்டுமென்று சொல்லவில்லை,
மாறாக இறைத் தன்மையை உணர்ந்தவர்களுக்கு இரு வினையின் வழியே வரும் துன்பம் இல்லை என்று கூறுகிறார்.


இறைவனை தோற்றத்தில் மட்டும் காணாமல் அதன் தன்மையையும் உணர்வது தான் ஆன்மீகம்.


இறைத்தன்மை வெளிப்பட்டு, வளர்ந்து,
முழுமையடைகிறதோ அவரே இறைவன்;
அவனே வணங்கத்தக்கவன்;
ஆலயத்தில் உறைபவன்.


எனவே…


இறைத் தன்மையை உணர்வது ஆன்மிகம்
ஆன்மீகத்தில் நிறைந்திருப்பது அருள்
அருளில் அடக்கமுற்று இருப்பது ஆனந்தம்
அருளும் ஆனந்தமும் அகத்திலே மலரட்டும்
பின் தளைகள் விலகி விடுதலை கிட்டும்.


இதுவே உண்மைத் தத்துவம்
நம் இறைத் தத்துவம்.




No comments:

Post a Comment