Gowthamswamy - கெளதம்ஸ்வாமி
ஸ்ரீமகாவீரரின்
கணதரர்; அவரைப்
பற்றி ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு கதை உள்ளது. அவற்றில் ஒன்று.
கி.பி.
607 ம் ஆண்டு குர்கான் பிரதேசத்திற்கு அருகில் *கோபர்கான்* என்ற கிராமத்தில்
விஷ்ணுபூதி என்னும் ஒர் அந்தணர் இருந்தார். அவருக்கு *இந்திரபூதி (அழகிய உயரமான
உருவமுடையதான)*; அக்னிபூதி மற்றும் வாயுபூதி என்ற மூன்று
குமாரர்கள் இருந்தனர்.
வேதம்
படித்து யாகம் செய்வதில் பண்டிதர்களாக சிறந்து விளங்கினர். மகத நாடு முழுவதும் *பெரிய பண்டிதர்கள்* என
பிரசித்தி பெற்றிருந்தனர். ஒவ்வோருவருக்கும் 500 சீடர்கள் இருந்தனர்.
அபபா
(apapa) என்ற நகரத்தில் *சோமில்* என்ற ஒரு பிராமணன் பெரிய
யாகம் ஒன்றை தனது இல்லத்தில் செய்தார். *நான்காயிரம் பிராமணர்கள்* கலந்து கொண்டு
சிறப்பித்ததில் 11 பிரசித்தி பெற்ற பண்டிதர்களும் இருந்தனர்.
அவர்களுக்கு
நடுவே இந்திரபூதி பிரகாசமாக இருந்தார். வேதங்கள், யாகங்கள்
மீதும் அசையா நம்பிக்கை வைத்திருந்த அந்த சோமில், மிகவும்
மகிழ்ச்சியுடன் அந்த மதச்சடங்கை நடத்திக் கொண்டிருந்தார். அந்த சடங்கில் *பலி
யிடுவதற்காக ஆடுகள், குட்டிகள், மாலையுடன்
திலகமிட்டு* நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்நிகழ்வை அந்நகர மக்கள் அனைவரும் ஏதோ
புதுமை நடக்கப் போவதாக எண்ணி கிளர்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அவ்வமயத்தில்
அந்த யாககுண்டத்தை நோக்கி வானில் உள்ள *தேவர்கள் இறங்கி வந்து கொண்டிருப்பதை*
சோமில் கண்டு வியந்தான். அந்த யாகத்தில் ஆகுதியாக பலியிடும் ஊனைப் பெற வந்து
கொண்டிருப்பதாகவும், தனது இந்த சடங்கு சரித்திரத்தில் இடம்
பெற போவதாகவும் எண்ணி பேருவுவகை எய்தினான்.
ஆனால் வந்த வானவர்கள் அனைவரும் *அவ்விடத்தில்
இறங்காமல்*...
எங்கு சென்றனர்?
In the village of Gobargaon, a Brahmin couple called Vasubhuti and Prithvi Gautam (family name) had a son named Indrabhuti. He was tall and handsome. He had two younger brothers named Agnibhuti and Vayubhuti. All three were well versed in the Vedas and other rituals at an early age. They were very popular and great scholars in the state of Magadh. Each one of them had 500 disciples.
Once in the city of Apapa, a Brahmin named Somil was conducting a Yagna (sacrificial ceremony) at his home. There were over four thousand Brahmins present at the occasion, and there were eleven popular scholars among them.
Indrabhuti stood out as a bright star. Somil was a staunch supporter of the Brahmin philosophy and was very happy during the ceremony. The whole town was excited by this event in which they were going to sacrifice the sheep and the goats. Suddenly, Somil noticed many celestial beings coming down towards his sacrificial site. He thought that this would make his offering ceremony the most popular in the history. He told the people, "Look at the sky, even the angels are coming to bless us." The whole town was eagerly looking at the sky.
To their surprise, the celestial beings did not stop at their site, instead they went further down.
ஆனால் வந்த வானவர்கள் அனைவரும் *அவ்விடத்தில் இறங்காமல்* மேலும் பறந்து சென்று
அருகிலுள்ள வனத்தின் நடுவே இறங்குவது தெரிந்தது. அதனைக் கண்ணுற்ற சோமில் பிராமணன்
அகந்தை அற்று கூனி குறுகி நின்றான். *அந்த வானவர்கள் மெகசேனா என்ற அந்த வனத்தில் உள்ள ஸ்ரீமகாவீரரை தரிசிக்க* சென்றிருப்பதை கேள்வியுற்றான்.
இந்திரபூதியின்
கர்வத்திலும் காயம் பட்டதால் சீற்றமாக காணப்பட்டான். “யார் அந்த மகாவீரன்; செம்மையான தேவபாஷையை உபயோகிக்க தெரியாமல்
பேச்சுமொழியான அர்த்தமகதியில் உரையாடுபவன்,
அவனுக்கா இந்த சிறப்பு” என சினம் கொள்ள தொடங்கினான். சடங்கிற் சிறந்த
வேத விற்பன்னர்களையும்,
அக்கானகத்தே விஜயம் செய்த மாகாவீரர் வென்று விட்டாரே என சிந்திக்கலானான்.
மேலும்
மிருகபலியை எதிர்க்கும் அவரது கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள துவங்கினால், பிராமணர்களின் வாழ்வில் இருள் சூழ்ந்து விடும் என்று அஞ்சி அவரை வாதம்
செய்து வெற்றி கொள்ளும் முடிவுடன், அவர் இருப்பிடமான கானகத்தை
அடைந்தான்.
‘வாருங்கள் இந்திரபூதி’ என; இதுவரை சந்தித்திராத தன்னை, அவர் அழைத்ததில் எழுந்த
வியப்பை வெளிப்படுத்தாமல். ‘நான் மிகவும் பிரசித்தி பெற்றவன், என்னை அறியாதவர்
யார் உளர்; ஆகவே நான் என் மனதில் என்ன நினைக்கிறேனோ அதனை தெரிவிக்கட்டும் அப்புறம்
பார்க்கலாம்’ என தன்னை தேற்றிக்கொண்டான்.
அந்த
வேதவிற்பன்னனின் *மனதில் தோன்றிய ஐயமான ‘ஆத்மா உளதா’ என்ற வினாவை;
முழுதுணர்ஞானியான, கேவல ஞானி ஸ்ரீமகாவீரர் தனது அறிவால் உணர்ந்து ‘ஆத்மா உளது’ என அவனிடம்
பகர்ந்தார்*. அக்கணமே தனது அகந்தை முழுவதும் அழிந்து அவரது பேராற்றலை கண்டு வியந்து அவரை
வணங்கினான்.
மேலும் ஆன்மீக
தத்துவங்களில் தோன்றிய பல ஐயங்களுஜக்கு விளக்கம் கிடைக்கவே அகமகழ்ந்து அச்சீலருடன்
தங்கிட முடிவு செய்தான். ஐம்பது வயதான இந்திரபூதியை அவரது பிரதான சீடனாக ஏற்றுக்
கொண்டார். *கெளதம பரம்பரையில் பிறந்து வந்ததனால் இந்திரபூதியை, மகாவீரர் கெளதம்ஸ்வாமி* என்றே
அழைக்கலானார்.
இதற்கிடையே
சோமிலும் தனது பரிவாரங்களுடன் இந்திரபூதி தனது வாதத்தில் வென்றிருப்பான் என எண்ணி
அக் கானகத்திற்கு வந்தான். ஆனால் அவர் கெளதம்ஸ்வாமியாக, பிரதான சீடனானதைக் கண்டு
அதிர்ச்சியுற்றனர். அவர்களில் சிலர் *ஸ்ரீமகாவீரரிடம் மேலும் சில வினாக்களை தொடுத்தனர்.
அவர்களுக்கும் தகுந்த விளக்கம் கிடைக்கவே, அவரின் அறிவை எண்ணி வியந்து தங்களது
குருவாக ஏற்றுக் கொண்டு* அங்கேயே தங்கி விட்டனர்.
சோமில் தனது அந்த
வேள்வியை ரத்து செய்து விட்டு, பலியாக வந்த அத்துனை ஜீவன்களையும் விடுவித்ததோடல்லாமல்,
இனி *இது போல் உயிர்வதை செய்வதில்லை* எனவும் உறுதி பூண்டான்.
அதன் பிறகு ஒரு முறை....
To their surprise, the celestial beings did not stop at their site, instead they went further down. Somil's ego melted away as he learned that the celestial beings paid homage to Lord Mahävir, who had come to near by Mahasen Forest. Indrabhuti was outraged by this incident and his ego was bruised. He started thinking to himself, "Who is this Mahävir who does not even use affluent Sanskrit, but speaks the common public language of Ardha Magadhi." Everyone in the ceremony was overpowered by the mere presence of Lord Mahävir. Indrabhuti once again thought, "Mahävir opposes animal sacrifices, and if he succeeds then we Brahmins will loose our livelihood. I will debate with him." He left to challenge him.
Mahävir welcomed Indrabhuti by calling him by his name even though they had never met before. Indrabhuti was surprised, but then he said to himself, "Who does not know me? I am not surprised he knew my name. I wonder if he knows what I am thinking." Omniscient Mahävira knew what was going through Indrabhuti's mind. Indrabhuti, even though a great scholar, had a doubt about the existence of Atma (soul) and was thinking to himself, "Can Mahävir tell that I doubt the existence of the soul?" The next moment Mahävir said, "Indrabhuti, Atma (soul - consciousness) is there and you should not question it." Indrabhuti was shocked and began to think very highly of Mahävir. Then, they had a philosophical discussion, and Indrabhuti changed his beliefs and he became Mahävir's first and chief disciple. Indrabhuti was fifty years old at the time, and from then on he was called Gautamswämi, beause he came from Gautam family.
3.
ஒருமுறை கெளதம்ஸ்வாமி பிச்சை பெற்று திரும்பும் போது, பலரும்
அவரைக்கடந்து எதிர்திசையில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை வினவும் போது *அனந்த
ஸ்ராவகர் தான் ஏற்ற விரதங்கள் மற்றும் தவ வாழ்வினால் அவதிஞானத்தை பெற்றுள்ளார்.
ஆகவே அவரை தரிசனம் செய்யவே சென்று கொண்டிருகிறோம்* என கூறி சென்றனர்.
அனந்த ஸ்ராவகர் ஸ்ரீமகாவீரரைப் பின்
பற்றுபவர்; அதனால் கெளதம் ஸ்வாமி, அவரைக் காண, அவர் இல்லம் நோக்கிச் சென்றார்.
தனது ஆன்மீகக் குருவைக் கண்டதும் அவர் பரவசம் அடைந்து, *விரத்ததினால் பலவீனம்
அடைந்த உடலானாலும் எழுந்து வணங்கினார்.* அவரது உடல்நிலைப் பற்றி விசாரித்தார்.
தங்களது கிருபையினால் நான் நலமுடன் இருக்கிறேன். பின்னர் ஸ்வாமியிடம் *‘வணக்கத்திற்குரிய
ஆசானே எனக்கு அவதிஞானம் கிடைத்த மகிமையினால் மேலுலகமான பதினான்கு தேவருலத்தையும்,
கீழேயுள்ள எழு நரகலோகத்தையும் காணும் பாக்கியம் கிட்டியது’* என கூறி மகிழ்ந்தார்.
*‘ஸ்ராவகர்களுக்கு கிடைக்கும் அவதிஞானத்தால்
அவ்வளவு தொலைவு வரை காண இயலாது; நீ கூறுவது கற்பனையாக இருந்தால் அதற்கு
பிராயச்சித்த விரதங்கள் ஏற்க வேண்டி வரும்’* என கூறினார். அதனைக் கேட்டு
அதிர்ச்சியுற்ற அனந்தஸ்ராவகர் ‘ உண்மையுரைப்பினும் அவ்வாறு தண்டனை கிடைக்குமா’ என
வினவினார். அவ்வாறில்லை என பதிலளித்து விட்டு தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய
மகாவீரரை காண திரும்பினார்.
கெளதம் ஸ்வாமி ஸ்ரீமகாவீரரிடம் இது பற்றி
கேட்க; *‘ஆம் அவர் கூறுவது முற்றலும் உண்மை; ஆனால் மிக்க ஞானமுடைய தாங்கள் எப்படி
தவறு செய்தீர்கள்’* என பதிலுரைத்தார். அதன் காரணமாக தாங்கள் தான் பிராயச்சித்தம்
தேடவேண்டும் என மேலும் கூறினார். *இவ்வாறு எந்த சீடர் தவறிழைத்தாலும் சுட்டிக்
காட்டத்தவறாத சத்தியவான் ஸ்ரீமகாவீரர் ஆவார்*.
*உடன் கெளதம் ஸ்வாமி தான் கொண்டுவந்த
பிச்சையை வைத்து விட்டு உடன் அனந்தஸ்ராவகர் இல்லம் நோக்கிச் சென்று தன் தவறுக்கு
அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அச் சீடரும் தனது குருவின் பண்பை எண்ணி பெருமிதம் கொண்டார்.*
_ பிறகு ...._
One time, Gautamswämi was going back after the gochari (getting food or alms), and he noticed many people going in another direction. He asked them what was going on. They said, "We are going to see Anand shravak. He has been performing austerities and has attained a special knowledge (Avadhignan)." Anand shravak was Mahävir's follower, so Gautamswämi decided to go and visit him. When Anand saw Gautamswämi coming to his house, he was very happy that his guru (spiritual teacher) was coming.
However, even though he was very weak due to his austerities, he got up and welcomed Gautamswämi. Gautamswämi inquired about his condition. Anand replied, "With your blessings, I am fine." After some time, Anand told Gautamswämi with respect, "Reverend teacher, I have attained Avadhijnan because of which I can see as high as fourteenth heaven and as low as the seventh hell." Gautamswämi thought, " A shravak can attain Avadhijnan, but not to this extent." Aloud he told Anand, "You should do prayshchit (atonement) for your imagination." Anand was puzzled. He knew what he could see, but his teacher told him to atone for telling that. So, he politely asked Gautamswämi, "Does one have to atone for telling the truth?" Gautamswämi replied, "No," and then left the place thinking, "I will reconfirm this with Lord Mahävir."
Gautamswämi returned to Lord Mahävir, who was sitting with his other disciples, and asked about Anand. Mahävir said, "Gautam, Anand was telling the truth. How could a person like you with so much knowledge make such a mistake? You should atone for your mistake." Mahävir believed in the truth, and he would never cover up the mistake of his disciple just to make their group look good. Gautamswämi put his alms aside, and immediately went to Anand's house to ask for forgiveness for his doubt. Anand was proud of his humble teacher, who did not mind admitting his own fault to his followers.
4.
மற்றுமொரு தருணத்தில் நகரத்திற்கு சென்று *பிச்சையாக பாயசம் பெற்று
திரும்பிக் கொண்டிருந்தார்*. அப்பொழுது 1500 துறவிகளை கண்டார். அவர்கள் அனைவரும்
பசியுடன் இருப்பதை உணர்ந்து *அனைவருக்கும் கொண்டு வந்த பாயசத்தை அளிக்க
முடிவுசெய்தார். அவர்கள் அனைவரும் ஒரு சிறிய பிச்சைப் பாத்திரத்தில் உள்ள உணவை
எப்படி நம் அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பார் என வியப்புடன் இருந்தனர். ஆனால்
கெளதம் ஸ்வாமியோ அவர்கள் அனைவரையும் அமரச் செய்து ஒவ்வொருவராக உணவளிக்க
ஆரம்பித்தார்.*
அப்பாத்திரத்தில் தனது கட்டை விரலை உள் செலுத்தியதும் *அவரது
அக்ஷின்மஹானசி சக்தியால் அள்ள அள்ள குறையா வண்ணம் பெருகிக் கொண்டே வந்தது.* அதனை
பார்த்து பரவசத்துடன் உணவருந்திய அத்துனை துறவிகளும் அவரது குருவான ஸ்ரீமகாவீர ஸ்வாமியிடம் தீக்ஷை ஏற்றனர்.
முனி சங்கத்திலுள்ள பல சாதுக்கள் கேவலஞானம் அடைந்த பின்னரும் கெளதம்
ஸ்வாமிக்கு கிட்டவில்லை. அதுவே விசனமாகி அவரை கவலையுற செய்தது. ஒரு நாள்
ஸ்ரீமகாவீரரிடம் *‘ஐயனே என்னுடன் வந்த
பதினொரு முனிவர்களும் (பிரதான சீடர்கள் - கணதரர்கள்) முழுதுணர்ஞானம் அடைந்து
விட்டனர்; எனக்கு மட்டும் ஏன் கிட்டவில்லை’* என வினவினார். அதற்கு விடையளிக்கும்
முகமாக ஸ்ரீமகாவிரரும் ‘ *கெளதம் நீ என்மீது வைத்திருக்கும் பந்தமே (பற்று) உனக்கு
தடையாக உள்ளது. அதனை விட்டு விலகாத வரை அந்த ஞானத்தை பெற முடியாது. விலக
முயற்சித்தால் உறுதியாக கிட்டும்’* என பதிலளித்தார்.
சற்று நேரம் கழித்து ஆறுதல் அடைந்து *‘அவ்வாறு தான் நிகழவேண்டும் என்பது விதி போலும். உலகில் யாரும் நித்யமாக வாழ்வதில்லை, எவ்வுறவும் நிரந்தரமும் இல்லை, அப்படியிருக்க நான் ஏன் எனது குருநாதரிடம் பற்று வைத்தேன், அது எனது அறியாமையே. நாமும் ஒர்நாள் இவ்வுலகை விட்டு நீங்கவேண்டியதே நியதி’* என மனதை தேற்றிய வண்ணம், நாம் அவர்மீது பந்தம் வைத்தது தவறு என்பதை உணர்த்தவே பிரியும் வேளை வரும் போது நம்மை வெளியே அனுப்பிவிட்டார், என்பதை உணர்ந்தார். *உலக பந்தத்திலிருந்து விடுபடும் பாவனை வரவர காதி கர்மங்கள் அனைத்து நீங்கி அவருடைய எண்பதாவது வயதில் கேவலஞானம் கிட்டியது.*
அதன் பின்னர் பன்னிருராண்டு காலம் ஸ்ரீமகாவீரரின் சிந்தனைகளை போதித்து சமண தர்மத்தை உலகில் தழைக்கச் செய்த பின் *தொன்னூற்று இரண்டாவது அகவையில் (in 515 B. C.) மோக்ஷ பதவி எய்தினார்.*
முற்றும்.
On another occasion, Gautamswämi went to town for the alms. He was returning with the kheer (a
sweet made from rice and milk) in a patra (bowl) when he saw fifteen hundred
hermits. Gautamswämi felt that they were
hungry and offered them the kheer. They began to wonder how Gautamswämi would feed all of them. Gautamswämi requested all of the
hermits to sit down, and then he served everyone with the kheer with the help
of Aksheenmahanasi (nondiminishing) Labdhi
(special power). While serving the kheer, he kept his thumb in the kheer. To
everyone's surprise they were all well served from the small patra (bowl). The
hermits were all so impressed by Gautamswämi, that all fifteen
hundred decided to take diksha (renunciation) from Lord Mahavir.
******************
Enjoyed reading. Great work.
ReplyDeleteEnjoyed reading. Great work.
ReplyDelete