OMNISCIENCE - முழுதுணர் ஞானம்
Agamic and Logical Analysis Of Omniscience
According to Jainism, Keval Gyan (Omniscience) is the highest level of knowledge that can be attained by a soul. It is the absolute knowledge. Nothing remains to be known after attaining Keval Gyan. A Keval Gyani can comprehend and visualize everything in the universe in all times - past, present and future. This knowledge transcends all barriers of time, space, matter and energy. A keval gyani will attain liberation after the life span ends.
One who was more interested in the mathematics and physics of this phenomenon. Although most of ancient Jain Literature is lost, some Jain monks of this era, some eminent philosophers have tried and presented a logical explanation.
We first start with the agamic meaning of keval - alone and independent. As per Jainism, matter has infinite states or 'paryayas'. Imagine the soul of the kevali radiating energies of different types constantly at an infinite rate. And not only this , a Kevali can comprehend the vast information encoded in the sub-atomic particles and energies present in the universe at an infinite rate. This is how the past , the present and the future of all that exists in universe becomes evident.
The speed of light limits our perception. The sun we see is actually the sun approximately 8 minutes ago - the time it takes for light from sun to reach earth. A kevali has the capability of deploying his 'sookshma-pudgals' (massless micro particles) to capture an event at infinite speed. This is how a kevali knows everything in zero time. This is also how a Kevali can be at more than one place at the same time.
Since keval gyanis can convert moving time frames to a static frame they are always in present. Past and future merge for them. And because of this collapse of time, everything in past , present or future is 'just happening' for them.
According to Einstein's theory of relativity, the speed of light is constant or absolute. The equation E=mc2 restricts the maximum speed attained by a particle having negligible mass to speed of light. Any event in universe can be described in terms of space and time. For a kevali, the condition of singularity holds and time = 0 (past=present=future) always , so all events in space are known to them.
Time travel is theoretically possible and moving at a speed greater than that of light is one of the ways in which the same can be achieved. Other ways include use of cosmic strings or blackholes, and travelling through a wormhole.
சமணத்தைப் பொறுத்த வரையில் கேவலஞானம் என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் அறிவின் உச்சநிலை ஆற்றலாகும். உலகை முற்றும் உணர்ந்த ஞானமாதலால் அதன் பின் அறிந்து கொள்ள பிரபஞ்சத்தில் ஏதுமில்லை. முக்காலத்திலும் (கடந்த, நிகழ், எதிர்) இந்த பிரபஞ்சத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் கண்டு, புரிந்து கொள்ளும் அறிவுத்திறனுயுடையது. காலம், பிரதேசம், பருப்பொருள் மற்றும் ஆற்றல் அனைத்தையும் கடந்து செல்லும் வல்லமை யுடையது.
ஆகமத்தின் படி கேவல் என்றால் சுயாதீனமான தனித்துவம். சமணத்தின் படி பொருட்கள் அனைத்தும் முடிவில்லா மாறுதல்களை(has infinite states or 'paryayas') உடையன. ஒரு கேவலிஆத்மா பல்வேறு வகையான ஆற்றலை முடிவற்ற விகிதத்தில் (at an infinite rate) வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. மேலும் சிறிய பரமாணுக்களில் பொதிந்திருக்கும் முழு தகவல்களையும் மற்றும் பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்திலுள்ள ஆற்றல்களையும் புரிந்து கொள்ளும் அறிவுடையது. அதனால் முக்காலத்தையும் உணரும் சக்தி அதனிடத்தில் இருக்கிறது.
கேவல ஞானியர்கள் நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தை, நிலையான காலமாக மாற்ற முடிந்தவர்கள். அதனால் கடந்த காலமும், எதிர்காலமும் நிகழ்காலத்துடன் இணைந்து விடும். அதனால் முக்கால நடப்புகளையும், தற்போதைய நிகழ்வுகளாக உணர்வார்கள்.
சார்புக் கோட்பாடு, அல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன் வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும். E = mc2 என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார். ஒளியின் நிறை (m= negligible mass) மிகவும் குறைவானதால் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. “c” ஒளியின் வேகமாக கணக்கிடப்பட்டது.
பிரபஞ்சத்தில் எந்த ஒரு நிகழ்வும், வெளி மற்றும் காலத்தின் (space and time) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதற்கு வெளிநேரம் (space- time) என்று பெயர்.
வெளி(space) முப்பரிமாண எண் x (பெருக்கல்) காலம் time.)
கேவலஞானிகளைப் பொறுத்த மட்டில் time = 0 , உணரும் கால அளவு பூஜ்ஜியம் ஆகும்.
சாதாரணமாக சூரியன் உதயமானதை நாம் எட்டு நிமிடங்கள் கழித்துதான் கண்டுணர்கிறோம். ஏனெனில் ஓளியின் வேகம் மூன்று லட்சம் கி.மீ.(186000 மைல்கள்) என்ற வரையறைக்கு உட்பட்டுள்ளது. ஆதவனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை கடக்க சுமாராக 8 நிமிடங்கள் ஆகிறது என்பது விஞ்ஞானிகள் நிரூபித்துள்ள உண்மை. அதனால் உண்மையான சூர்யோதய நேரம் பூமியைப் பொருத்த மட்டில் கடந்த காலமாகும் .
ஒரு கேவலி சூட்சும புத்கலத்தினை பயன்படுத்தி (deploying his mass-less micro particles) சூரியன் உதயமாகும் பிரபஞ்ச நேரத்தையே உணரமுடியும். அவரைப் பொருத்த மட்டில் உதயநேரம் பூஜ்ஜியம் ஆகும். இப்பிரஞ்சப் பொருட்களின் நிகழ்வுகள் அனைத்தையும் நிகழ்வுறும் நேரத்திலேயே (zero time) தனது வரம்பில்லா சக்தியினால் உணர்ந்து கொள்ள முடியும். பயணிக்கும் நேரமே கிடையாது. அதே போல் கருவியின் துணையில்லாமல் நுண்ணிய அணுக்களையும், அவற்றுள் பொதிந்துள்ள பதிவுகளையும் புரிந்து கொள்ள முடியும்.
ஓளி வேகத்தைவிட கூடுதலாக பயணிக்கும் சாத்தியம் அதைவிட நிறை குறைவான பருப்பொருளால் முடியும் என்பது கோட்பாடளவில் சாத்தியம். பிற வழிகளில் ஒரு பரவெளி அனுமான இணைப்பின் (through a wormhole) வழியாக பேரண்ட இழைகள் (cosmic strings) அல்லது கருப்பு துளைகளை(black hole) பயன்படுத்தி பயணிக்க முடியும்.
Milky Way , Andromeda, Black eye போன்ற கேலக்ஸிகள்(galaxies) பல இந்த பிரபஞ்சத்தில் உள்ளன. தினமும் பல நடசத்திரங்கள் கூட்டமாக அழிகின்றன, கருந்துளைகள் தோன்றுகின்றன, big bang என்னும் பெருவெடிப்புகள் நிகழ்கிறது; இதன் தாக்கங்கள், விளைவுகள் அனைத்தையும் அமர்ந்த இடத்திலேயே உடன் உணரக்கூடிய பேரறிவு கொண்டவர்கள் கேவலஞானம் பெற்ற ஆன்மாக்கள்.
அதனால் அவர் முக்காலம் என்ற வலையில் சிக்கவில்லை. பிரபஞ்சத்தின் ஒரே நிகழ்காலவாசி கேவலி தான். அவரால் மட்டுமே அனைத்து நிகழ்வுகளையும் அக்கணமே தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள, உணர்ந்து கொள்ள முடியும்.
முக்காலத்தின் அச்சமும், உடல், மனதால் ஏற்படும் ஆசைகளை நிறைவேற்றும் தேவையும் இல்லை. ஏழு கர்மங்களும் நீங்கி ஆயுள் கர்மம் கழியும் வரையில் அனைவருக்கும் நல்வழிகாட்டி, இப்பூத உடலை விடுத்து, விடுதலை பெற்று, அமைதி பிரதேசம் நோக்கி செல்கின்றது அத்தூய ஆன்மா.
தற்கால அறிவியலார் இயற்கையை ஆராய்ந்து கண்ட உண்மைகளை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் சமணர்கள் எந்த சோதனை கூடமும் இல்லாமல் நுணுக்கமான விஷயங்களைக் கண்டு ஆராய்ந்து உலகிற்கு வழங்கியுள்ளனர்.
அத்துனை ஆற்றல்களும் அனைத்து ஜீவராசிகளின் ஆன்மாக்களுக்கும் உண்டு, ஓர் நாள் ஒவ்வொன்றும் விதிவழியே பல பிறவிகளை எடுத்தோ (சவிபாகமாக); அன்றி ஜிநர்கள் வாழ்வு முறையை ஏற்று, அவர் போதித்த அறிவுரையின் வழியே (அவிபாகமாக) நடந்து அம் முழுதுணர் ஞானத்தை பெற்று மோடசம் பெறுவர் என சமணம் பகர்கிறது.
ஆனால் சமண சித்தாந்தங்கள் அனைத்தையும் அறிவியலார் நிரூபித்த பின்னர் தான் முழுவதுமாக ஏற்றுக் கொள்வார்கள் எனில் அந்நாள் வெகு தூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment