தத்வார்த்த சூத்திரம்:
அத்தியாயம் # 10
கடவுள் வாழ்த்து
மோக்ஷ மார்கஸ்ய
நேதாரம் பேதாரம் கர்ம பூப்ப்ருதாம்
ஞாதாரம் விஸ்வ
தத்த்வானாம் வந்தே தத்குண லப்த்தயே
த்ரைகால்யம்
த்ரவ்ய ஷட்கம் நவபத ஸ்ஹிதம் ஜீவ ஷட்காய லேஸ்யா:
பஞ்சான்யே
சாஸ்திகாயா வ்ரத ஸ்மிதி கதி ஞான சாரித்ர பேதா:
இத்யேதன் மோக்ஷ
மூலம் த்ரிபுவன மஹிதை:ப்ரோக்தம் அர்ஹத் பிரீஷை:
ப்ரத்யேதி
ஸ்ருத்ததாதி ஸ்ப்ரூஷதி ச மதிமான் ய: ஸ வை சுத்தத்ருஷ்டி:
ஸித்தே
ஜ்யப்பஸித்தே சவ்விஹராஹணா ஃபலம் பத்தே
வந்தித்தா
அரஹந்தே வோச்சம் ஆராஹணா கமஸோ
உஜ்ஜோவணம்
உஜ்ஜவணம் ணிவ்வஹணம் ஸாஹணம் ச ணிச்சரணம்
தம்ஸணணாண
சரித்தம் தவாணம் ஆராஹணா ஃபணியா
----------------
முன் ஒன்பது அதிகாரம் வரை ஜீவ, அஜீவ, ஆஸ்ரவ, சம்வரை, நிர்ஜரை
பதார்த்தமும், வினைக்கட்டிற்கான காரணங்கள், முனிவர்களின்
நிலைகள், குணஸ்தானங்கள் வரை வழங்கப்பட்டது.
பத்தாம் அத்தியாயத்தில்
முக்தி தத்துவம் வழங்கபடுகிறது.
--------------------
மோஹக்ஷயாஜ்ஜானதர்சனாவரணாந்தராயக்ஷயாச்ச கேவலம் – சூ#1 = (349)
मोहक्षयाज्ज्ञान दर्शनावरणान्तरायक्षयाच्च केवलम्
Mohakshayajgyana darshana-varanantarayakshayachcha kevalam
மோஹக்ஷயாத்
– மோகனீய வினை கெடுவதாலும்; ஜ்ஜானதர்சனாவரணாந்தராயக்ஷயாச்ச
– ஞானாவரணம், தர்சனாவரணம், அந்தராயம் ஆகிய மூன்றும் கெடுவதாலும்; கேவலம்
– கேவல ஞானம் உண்டாகும்.
Omniscience (perfect knowledge) is attained on the
destruction of deluding karmas, and on the destruction of knowledge and
perception-covering karmas and obstructive karmas.
மயக்கு வினை கேடு அடைவதாலும் அழிவதாலும் மற்றும் அறிவு மறைப்பு வினை, காட்சி மறைப்பு வினை, முட்டு வினை அழிவதாலும் கேவலஞானம் அடையப் பெறுகிறது.
முதலில் பத்தாவது குணஸ்தானத்தில் மோகனீய வினை (மயக்கு வினை) முறையாக அழித்த முனிவர் துவர்பசையினின்றும் நீங்கியவராய் க்ஷீண கஷாயி எனப்படுகிறார். பின்னர் அந்தர் முகூர்த்த காலம் வரையில் க்ஷீண கஷாயமென்னும் பன்னிரண்டாம் குணஸ்தான நிலையை அடைந்த ஜீவன்(முனிவர்), ஞானா, தர்சனா வரணம், அந்தராயம் ஆகிய வினைகளை ஒரே நேரத்தில் அழித்து கேவல ஞானம் என்னும் வாலறிவைப் பெறுகிறது. இப்படி அழிவதற்கு காரணவடிவம், ஹேமரூப, என பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
------------
மோகனீயம்
28, ஞானாவரணம் 5, தர்சஸனா வரணம் 9, அந்தராயம் 5 ஆயுள் 3, நாம்ம் 13
ஆகிய இவைகள் கெடுவதால் கேவலஞானம் உண்டாகும். அதாவது
இந்த 63 பிரக்ருதிகள் கெட்டபின் வாலறிவு உண்டாகிறது.
--------------
எந்த காரணங்கள் முக்திக்கு காரணமாக அமைகிறது…
--------------
மோக்ஷத்தின் காரணம்
பந்தஹேத்வபாவநிர்ஜராப்யாம்க்ருத்ஸ்னகர்ம விப்ரமோக்ஷோ மோக்ஷ: - சூ#2 = (350)
बन्धहेत्व भावनिर्जराभ्यां कृत्स्न कर्मविप्रमोक्षो मोक्षः
Bandhahetvabhava-nirjarabhyam krtsna-karma-vipramoksho
பந்தஹேத்வபாவ நிர்ஜராப்யாம்
– பந்த காரணம் அபாவம்( இல்லாமை) மற்றும், நிர்ஜரையால்,
க்ருத்ஸ்ன கர்ம விப்ர மோக்ஷ – எல்லா கர்மங்களும் முழுவதும் நாசமாவதால், விடுபடுவதால்; மோக்ஷ
– விடுதலைப்பேறு
கிடைக்கும்.
Owing to the absence of the cause of bondage and with the
functioning of the dissociation of karmas, the annihilation of all karmas leads
to liberation.
பந்தத்திற்கு காரணமான பொய்க்காட்சி முதலியவற்றால் வரும் வினைகள் இல்லாமை;
நிர்ஜரையால் வினைகளை முழுவதுமாக கழித்ததாலும் முக்தி கிட்டுகிறது.
----------
கருமங்கள் படிப்படியாக கழியும் போது ஆன்மா மேலும், மேலும் உன்னத நிலைக்கு உயருகின்றது. அத்தகைய உன்னத நிலையை குணஸ்தானங்கள் பதினான்கு நிலைகளாக கூறப்பட்டு இருக்கிறது.
ஆன்மாவின் பாவங்கள் நான்கு வகைப்படும். அவை:
உதயம் : கர்மங்கள் பலனைத் தருதல் (operation)
உபஸமம்: கருமங்கள் தணிவு நிலை (subsidence)
க்ஷயம்: கருமங்கள் உதிரும் நிலை (destruction)
க்ஷயோபஸமம்:
கெடும் நிலையும் தணிவு நிலையும்.
(destruction cum subsidence)
மோஹனீய கருமத்துடன் ஆன்மாவில் ஏற்படுத்தும் பரிணாமங்களே/ பண்புகளே குணஸ்தானமாகும்.
அவை பதினான்கு பிரிவுகளாக கூறப்படுகிறது.
1. மித்யாத்வம்: மித்யாத்வ தர்ஸன மோஹனீய வினை உதயத்தால் ஆன்மாவில் மந்த நிலை. ஆன்மவிடுதலைக்கான மார்க்கத்தில் மனம் செல்லாமல் இருக்கும். இதிலிருந்து
ஒரு ஜீவன் முன்னேறுகிறது என்றால் நேராக நான்காவது குணஸ்தானத்திற்குத் தான் சென்றடையும்.
2. ஸாஸாதனம்:
நான்காவது குணஸ்தானத்தில் உள்ள ஒரு ஜீவன் தீவிர கஷாயங்களில் ஒன்று உதயத்திற்கு வருவதால் ஆன்மா பழைய நிலையான மித்யாத்வ நிலைக்கு வந்து விடும். அந்த கீழிறக்கம் தான் ஸாஸாதனமாகும்.
இந்த குணஸ்தானத்தில் பரிணாமிக பாவம் உள்ளது. ஆனால் மோகனீய கரும நோக்கில் ஒளதாயிக பாவம் உண்டு. கஷாய உதயத்தால் நற்காட்சி கெட்டு விட்டது. ஆனால் மித்யாத்வம் உதயமில்லை. எனவே நற்காட்சி நோக்கிலும், மித்யாத்வ நோக்கிலும் உதயமில்லாத பரிணாமம் உள்ளது என்பதை அறியவேண்டும்.
3. மிஸ்ரம்: ஆன்மாவுக்கு ஏற்பட்ட ஸம்யக்த்வம் மாசுபடுவதால் உதயத்திற்கு வருகிறது. ஸம்யக் மித்யத்வம்
அதாவது சம்யக்வதும், மித்யாத்வமும் கலந்த கலவை மிஸ்ரம் ஆகும்.
4. அவிரத ஸம்யக்தவம்:
தீவிர கஷாயம் நான்கும், தர்சன மோகனீய கருமத்தில் மூன்று ஆக ஏழு பிரக்ருதிகள் உபசமம், க்ஷயம், க்ஷயோசமம், தவிர அப்ரத்யாக்யானா வரண கஷாயங்கள் நான்கின் உதயத்தால் ஜீவனுக்கு விரதமற்ற நற்காட்சி நிலை, அவிரத ஸம்யத்வ குணஸ்தான நிலை உண்டாகிறது.
இந்நிலையில் மோக்ஷமார்க்கத்தின் மீது நம்பிக்கை இருக்கும், ஆனால் நல்லொழுக்க விரதங்களை கடைபிடிக்காது.
இதில் உபஸம,
க்ஷாயிக, க்ஷயோபஸம ஸம்யக்வம் என்ற மூன்று வகை உண்டு.
5 தேச விரதன்: இல்லறத்தில் இருந்து கொண்டு விரதங்களை ஏற்றல்.
6. பிரமத்த விரதன்: ஆசாபாசங்களைத்துறந்து முனிதர்மத்தை கைக்கொள்ளல். ஆனால் உடற்பற்று விடுவதில்லை.
7. அப்பிரமத்த விரதன்: ஆறாவது நிலையில் ஏற்பட்ட விழிப்பின்மை/ சோமபல் மறைந்து ஆத்மாவை தர்ம தியானத்தில் ஈடுபடுத்துதல்.
இந்நிலையிலிருந்து மேன்மையடைய இரண்டு வழிகள் உள்ளன.
அ. உபஸமஸ்ரேணி,
சாரித்ர மோகனீயகருமம் தணிவு ஏற்படுவதால்
ஏற்படுவது.
ஏற்படுவது.
ஆ. க்ஷபகஸ்ரேணி,
சாரித்த மோகனீயம் க்ஷயம், கெடுவதால் உண்டாவது.
8. அபூர்வ கரணன்: முனிவருக்கு இதுவரை இல்லாத பாவம் உண்டாதல். அதுவே சுக்ல தியானத்தின்
முதற்படி, அதாவது நல் ஆன்ம சிந்தனை.
9. அனிவ்ருத்திகரணன:
முன்னைவிட உயர்வான பரிணாமத்தூய்மை வந்து சேர்தல்.
சுக்ல தியானத்தில் ஆழ்ந்த நிலை, கர்மங்களை அக்னி போன்று அழிக்க கூடியது. அந்தர் முஹூர்த்த நேரமே இருக்கும். சமயம் தோறும் பரிணாம் மாறி வரும்.
10. சுக்ஷம ஸாம்பராயம்: இது முதல் சுக்ல தியான நிலையே. இதில் சூக்ஷ்ம ஸஜ்ஞ்வலன லோப கஷாயம் தவிர மற்ற அனைத்தும் நீங்கிய நிலை.
11. உபஸாந்த மோஹம்:
சாரித்ர மோகனீய கர்மங்கள் எல்லாமும் நீங்கியிருக்கும். குளத்து நீர் தெளிவடைந்திருப்பது போல ஆன்ம விளக்கம் சுத்தமாயிருக்கும்.
12. க்ஷீணமோகம:
க்ஷீண கஷாயம்: சாரித்ர மோகனீயம் முற்றிலும் அகன்று, இரண்டாவது நிலை சுக்ல தியானம் ஆரம்பிக்கும். பத்திலிருந்து நேராக இதற்கு வருவது சாத்தியமே.
13. ஸயோகி கேவலி: மோகனீய வினை முன்பே விலகி விட்டதால் ஞான, தர்ஸன வரணம், அந்தராயம் அகியவை இந்நிலையில் விலகுகின்றன. கேவலஞானம் உதயம் ஆவதால் அருகப் பரமேஷ்டி ஆவார். காய உடல் இருப்பதால் காயயோகம் மட்டும் உண்டு. எல்லா உயிர்களுக்கும் தர்மோபதேசம் செய்யும் தகுதி கிடைக்கிறது.
14. அயோகி கேவலி. எஞ்சிய ஒரு கருமமும் கழிந்து விட அந்த ஜீவன் அ,இ,உ,ர்ரு, ல என்ற ஐந்து எழுத்துக்கலை உச்சரிக்கும் மிகச்சிறிய காலத்தில் உடலை விட்டு மேல் நோக்கிச் சென்று சித்த க்ஷேத்திரத்தை அடையும்.
----------
அடுத்து திரவிய கரும அழிவினால் முக்தியா, அல்லது பாவ கர்மங்களும் இல்லாது செய்தால் முக்தி கிடைக்கிறதா என…..
------------------
பாவகர்மம் கெடுதல்
ஒளபஸமிகாதி பவ்யத்வானாம் ச – சூ#3 = (351)
औपशमिकादिभव्यत्वानां च
Aupashamikadi-bhavyatvanam cha
ஒளபஸமிகாதி பவ்யத்வானாம்
– ஒளபசமிகம் முதலான பாவங்களும், பவ்யத்வ பாவமும் இல்லாமல் ஆகின்றன; ச – மற்றும்.
Emancipation is attained on the destruction of psychic
factors also like quietism and potentiality.
பரிணாமிக பாவங்களுள் ( இயல்பு உணர்வு) பவ்வியத்வமும் மற்றும் ஒளபஸமிக பாவங்களும் இல்லாது போவதால் முக்தி கிடைக்கிறது.
----------
அதன் சிறப்பை அடுத்து காண்போம்…
------------
அபாவங்கள்
அன்யத்ர கேவலஸம்யக்த்வ ஜ்ஞானதர்சனஸித்தத்வேப்ய
– சூ#4 = (352)
अन्यत्र केवल सम्यक्त्वज्ञान दर्शन सिद्धत्वेभ्यः
Anyatra-kevalasamyaktva-gyana-darshana-siddhatvebhyah
அன்யத்ர- தவிர வேறுபாவங்கள் இல்லை; கேவலஸம்யக்த்வ ஜ்ஞான தர்சன ஸித்தத்வேப்ய
– கேவல சம்யத்வம், கேவல் ஞானம், கேவல தரிசனம், ஸித்தத்வ பாவம் .
Upon liberation infinite faith, infinite knowledge, infinite
perception and infinite perfection are not destroyed.
கேவல சம்யத்வம், கேவல ஞானம், கேவல
தர்சனம், ஸித்தத்வ பாவம் ஆகியவற்றினை தவிர வேறு பாவங்கள் இல்லை.
----------
முக்தி நிலையில் ஆத்மாவின் பாவங்கள் மூன்றும் கீழ்கண்டபடி இருக்கும்.
ஜீவத்வ பாவம்(உயிர்ப்பு ) இருக்கும்.
க்ஷாயிக பாவங்கள் அதாவது கேவல ஞான, கேவல தர்சன, அனந்த வீர்யம், அனந்த சுகம் முதலியன இருக்கும்.
ஒளபஸமிகம்,
க்ஷயோபஸமிகம், ஒளதயிகம் என்னும் பாவங்கள் இருக்காது/ அபாவம்.
-----------
சித்தர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்றிருந்த உடல் உருவம் இருக்கிறது.
முக்த ஜீவனுக்கு பரந்து விரிதல் மற்றும் சுருங்கும் தன்மைக்கான காரணம் இல்லாமையினால்,
அது விரிவதோ, சுருங்குவதோ இல்லை.
அதனால் உயிர் மேலே, கீழே மற்றும் பக்கவாட்டில் நகர்வதும் இல்லாமல் போய்விடும். அதனால் முக்தியடைந்த இடத்திலேயே நிலைத்திருக்க முடியும்.
ஆனால் அவ்வறில்லாததற்கான காரணத்தை காண்போம்.…
------------
உயிர் மேல்நோக்கி எழுதல்
ததனந்திர மூர்த்வம் கச்சத்யா லோகாந்தாத் – சூ#5 = (353)
तदनन्तरमूर्ध्वं गच्छत्यालोगन्तात्
Tadanantaramurdhvam gachchhatyalokantat
ததனந்திர –
கருமங்கள் நீங்கிய பிறகு; ஊர்த்வம்
– உயிரே; கச்சத்
– முக்த ஜீவன் போகிறது; அலோகாந்தாத் –லோக முடிவு வரை
Immediately upon complete destruction of all karmas the soul
darts up to the end of the universe.
வினைகள் நீங்கிய பிறகு உலக முடிவு வரை உயரே முக்த ஜீவன் செல்லுகிறது.
புற்கலம், ஜீவன் தர்மாஸ்திகாயம் எது வரையுள்ளதோ அது வரை செல்ல முடியும். அதற்கு மேல், அலோகாசத்திற்கு செல்ல முடியாது. ஏனெனில் அங்கு தர்மாஸ்திகாயம் இல்லை.
தர்மாஸ்திகாயம் உபகாரம் செய்கிறது.
சுத்த ஆன்மா ஸித்த பரமேஷ்டியிடம் உபதான சக்தி யிருந்தும் தர்மாஸ்திகாய நிமித்தம் இல்லை. அதனால் உலகத்திற்கு மேலே செல்ல முடியவில்லை.
அதனால் லோகத்தின் முடிவு வரை சென்று உறைகிறது.
------------
அதனை நிச்சயிப்பது எவ்வாறு….
-----------
அதற்கான காரணங்கள்
பூர்வப்ரயோகாதஸங்கத்வாத் பந்தச்சேதாத்ததாகதி பரிணாமாச்ச – சூ#6 = (354)
पूर्व प्रयोगादसंगत्वाद्बन्धच्छेदात्तथागतिपरिणामाच्च
Purvaprayogadasangatvad-bandhachchhedattathagati-parinamachcha
பூர்வப்ரயோகாத
– முன் பிரயோகத்தால்; அஸங்கத்வாத் – சங்கம் இல்லாமையால்; பந்தச்சேதாத்
– பந்தம் விடுவதால்; ததாகதி பரிணாமாச்ச – அவ்வாறு இயல்புடையதால், ஜீவன் மேலே போகிறது.
As the soul is previously impelled, as it is free from ties
or attachment, as the bondage has been snapped and, as it is of the nature of
darting upwards, the liberated soul moves upwards.
பூர்வ பிரயோகம், முன்னர் பலமுறை சித்த பகவானை தியானம் செய்கிறார், (முக்திக்கு)
மேலே போக வேண்டும் என்று முயற்சி செய்ததாலும்; காற்றாடி/ பலூனின் கயிறு தொடர்பற்று போனால் மேலே பறப்பது போல, அதாவது வினைத்தொடர்பு அற்றுப் போனதால்; மேல் நோக்கிச் செல்லும் தன்மை உடையதாலும் ஆன்மா மேல் நோக்கிச் செல்கிறது.
--------------
மேலும் விளக்கம் பெற….
------------
உலக உச்சியில் நிற்கிறது.
ஆவித்தகுலால சக்ரவத்வ்யபகதலேபாலா புவதேரண்டபீஜவதக்னிசிகாவச்ச
– சூ#7 = (355)
आविद्धकुलाल चक्रबद्व्यपगतलेपालांबुवदेरण्डबीजादग्निशिखाबच्च
Aviddhakulalachakravad-vyapagatalepalabu-vaderanda-bijavadagni-shikhavachcha
ஆவித்தகுலால சக்ரவத் – குயவன் சுற்றி விட்ட சக்கரம் போல; வ்யபகதலேபாலா புவத் – பூசிய மண் விலகிய சுரைக்குடுவை போல; எரண்டபீஜவத – ஆமணக்கு விதை போல; ச – மற்றும்; அக்னிசிகாவத் – நெருப்பு ஜ்வாலை எரிவது போல முக்தி ஜீவன் மேலே செல்கிறது.
Like the potter’s wheel once rotated, keeps rotating, like
gourd with the mud sinks, but comes up once mud is removed, like castor seed
goes upwards on the flower, like flame goes upwards, the same way upon
liberation from the karmas, the soul goes upwards.
குயவன் தன் கையாலும், கம்பாலும் சுற்றி விட்ட பிறகும் கூட சக்கரம் சுழல்கிறது.
அதற்கு பின்னும் சுற்றுவதற்கு காரணம் முன் செய்த முயற்சியாகும்.
அதுபோல ஜீவனும் முக்திக்காக பலமுறை முயற்சி செய்திருக்கிறது.
அதனால் வினகளிலிருந்து விடுபட்ட ஜீவன், பற்றுதலின்றி இருக்கின்ற காரணத்தாலும் தூண்டுதலின்றி மேல் செல்கிறது.
உதாரணமாக மண்பூசிய குடுவை நீரில் அமிழ்ந்ததும் கொஞ்சம், கொஞ்சமாக மண் கரைந்து நீருக்கு மேல் வருவதைப்போல. வினை முழுவதும் கரைய ஜீவன் மேல் நோக்கி செல்கிறது.
ஆன்மாவின் வினைக்கட்டிலிருந்து விடுபட்டவுடன்,
ஆமணக்கு காய் முற்றி விதை வெடித்து வெளியேறுவதைப் போல மேல் நோக்கிச் செல்கிறது.
நெருப்பின் ஜ்வாலை காற்றினால் இங்கும் அங்கும் அலைகிறது. காற்று நின்றவுடன் தன் இயல்பினால் ஜ்வாலை மேல் நோக்கி எரிகிறது. அது போலவும் ஆன்மா வினை நீங்கி இயல்பாக மேல் நோக்கி செல்கிறது.
நாற்கதியில் சுழன்று வந்த ஜீவன் வினைகள் வெளியேறியதும் தன் இயல்பின் படி மேல் நோக்கியே விரைந்து செல்கிறது.
------------
அது மேல் நோக்கி சென்றால் உலகத்திற்கு அப்பால் செல்வதில்லை ஏன்……
----------
சித்த க்ஷேத்ர எல்லை
தர்மாஸ்திகாயாபாவாத்
– சூ#8 = (356)
धर्मास्तिकाया भावात्
Dharmastikayabhavat
தர்மாஸ்திகாயா
– தர்மாஸ்திகாயம்; பாவாத் - அதனால் நின்று விடுகிறது.
The soul is not able to go beyond the universe, since there
is no medium of motion.
தர்மத்திரவியம் எது வரையுள்ளதோ அது வரைதான் ஜீவன், புற்கலம் செல்ல முடியும். அது லோகாகாசம் என்றழைக்கப்படும் பிரதேசமாகும்.
அதனால் அதற்கப்பாலுள்ள அலோகாகாஸம் என்னும் பிரதேசத்தில் தர்மாஸ்திகாயம் இல்லை. அதனால் லோகாகாசத்தின் விளிம்பில் ஜீவன் தங்கிவிடுகிறது.
-------------
அடுத்த சித்தாத்மாக்களின் பிரிவுகள் பற்றி…..
--------------
சித்தாத்மாக்களின் வகைகள்
க்ஷேத்ரகாலகதிலிங்கதீர்த்தசாரித்ரப்ரத்யேக புத்தபோதிதஜ்ஞானாவகாஹனாந்தரஸங்க்யால்பஹுத்வத:
ஸாத்யா: - சூ#9 = (357)
क्षेत्र कालगतिंलिग तीर्थ चारित्र प्रत्येकबुद्धबोधित
ज्ञानावगाहनान्तरसंख्याल्पबहुत्वतः साध्याः
Kshetra-kala-gati-linga-tirtha-charitra-pratyeka-buddha-bodhitagyanavagahanantara-sankhyalpa-bahutvatah
sadhyah
க்ஷேத்ர – இடம்; கால – காலம்; கதி – கதி; லிங்க – லிங்கம்; தீர்த்த –
தீர்த்தம்; சாரித்ர- ஒழுக்கம்; ப்ரத்யேக புத்த – தன் அறிவால்; போதித
– பிறர் உபதேசத்தால்;
ஜ்ஞான – ஞானம்; அவகாஹன – உடல்வாகு;
அந்தர – இடைவெளி; ஸங்க்யா – எண்ணிக்கை;
அல்பஹுத்வத – அதிகமும் குறைவும்; ஆக பதிமூன்று வழிகளில்; ஸாத்யா – முக்த ஜீவன்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்.
The emancipated souls can be differentiated with reference
to the region, time, state, sign, type of Arhant, conduct, self-enlighten-ment,
enlightened by others, knowle- dge, stature, interval, number and numerical
comparison.
க்ஷேத்ரம்:
நிகழ்வு நோக்கில் காணும் போது முக்தி நிகழும் இடத்திலிருந்து அல்லது தன் ஆன்மபிரதேசத்திலிருந்தில் அல்லது தானுள்ள ஆகாச பிரதேசத்தில் சித்தி அடைகிறது.
முக்தி அடைந்த நேரத்தில் நோக்கில், ஜன்ம நோக்கில் ஐந்து பரதம், ஐந்து ஐராவதம், ஐந்து விதேஹம் என பதினைந்து கர்ம பூமியில் ஸித்தி அடைகிறது. அபஹரண நோக்கில் இரண்டரைத்தீவில் எங்கிருந்து வேண்டுமானாலும் மோக்ஷம் அடையலாம்.
காலம்: நிகழ்கால நோக்கில் பார்க்கும் போது எந்தச் சமயத்தில் ஒருவர் சித்தி அடைகிறாரோ அந்தச் சமயம் அவர் காலம். கடந்த கால நோக்கில் பார்க்கும் போது பொதுவாக உத்ஸர்ப்பிணி அவஸ்ர்ப்பிணியில் தோன்றிய உயிர்கள் அந்த அந்த காலத்தில் ஸித்த நிலையை அடைகின்றன.
சிறப்பாக காணும் போது அவஸர்ப்பிணி மூன்றாம் காலமான ஸுஷமதுஷ்ஷமா அந்திமத்தில்,
நான்காம் காலத்தில் ஸித்த நிலை அடைகின்றனர். ஐந்தாம் காலம் தோன்றிய உயிர் அந்தக் காலத்திலேயே ஸித்தி அடைவதில்லை. மற்ற காலங்களில் ஸித்தி ஏற்படுவதில்லை. அபகரணம், உபஸர்க்கம் நோக்கில் காணும் போது எந்தக் காலத்திலும், எந்த சமயத்திலும் ஸித்தி ஆகமுடியும்.
கதி: மனித கதியிலிருந்து விடுதலை அடைகின்றனர். பரம்பரையில் காணும் போது பிற கதியிலிருந்து மனித கதிக்கு வந்து மோட்சம் அடையலாம்.
லிங்கம்: வேதமில்லா பாவத்தில், பாவ லிங்க மூன்று பேதத்திலும் அதாவது புருஷ, ஸ்திரீ, நபும்ஸக வேதத்திலும் ஸித்தி ஆகலாம். திரவிய லிங்கத்தில் புருஷ வேதத்தில் மோக்ஷம் அல்லது நிர்க்ரந்த லிங்கத்தில் ஸித்தி ஆகிறது.
மனிதனாக இருந்த ஜீவன் ஒன்பதாவது குணஸ்தான வரை திரவிய லிங்கியாகவோ, பாவ லிங்கியாகவோ இருக்கலாம். பத்தாவது குணஸ்தானத்தில் பாவங்கள் இல்லாத்தால் புருஷ லிங்கியாக இருத்தல் வேண்டும்.
தீர்த்தம்:
சிலர் தீர்த்தங்கரர் பதவி பெற்ற பின் முக்தி அடைகின்றனர். சிலர் அவரது காலத்திலும் மற்றும் சிலர் தீர்த்தங்கரர் முக்தியடைந்த பின் தர்ம ப்ரவர்தன காலத்திலும் மோட்சம் அடைகின்றனர்.
சாரித்ரம்:
நாம மில்லாத ஒழுக்கத்தினால் சித்தி கிடைக்கிறது அல்லது ஒன்று, நான்கு,
ஐந்து விதமான சாரித்ரத்தினால் சித்தி கிடைக்கிறது. அதாவது அனைத்து சித்த ஜீவங்களும் யதாக்யாத சாரித்ரத்தின் மூலம் தான் முக்தி யடைகின்றனர்.
பிரத்யேக புத்த : தன் சக்தி அளவு நிமித்தத்தால் தோன்றிய அறிவு, வைராக்யமடைந்து தீட்சை ஏற்று சித்தி அடைகின்றனர்.
போதித புத்த: பிறர் உபதேசம் கேட்டு வைராக்யமடைந்து தீட்சை ஏற்று சித்தி அடைகின்றனர்.
ஞானம்: கேவல ஞானம் முன்பு எந்த ஞானம் இருந்ததோ அதன் காரணமாயும் சிலர் சித்தி அடைவர். அதாவது பரம்பரையில் இரண்டு, மூன்று, நான்கு (மனப்பர்யய)
ஞான்ங்களால் மோக்ஷம் அடைகின்றனர்.
அவகாஹனம்: ஜிவனுடைய உச்ச பட்ச உயரம் 525 வில், குறைந்த பட்சம் 3.5 முழம் மற்றும் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையிலும் ஏதேனும் ஒன்றில் மோக்ஷம் அடைகின்றனர்.
அந்தரம்: ஒரு அன்மாவிற்குப் பின் மற்றொரு ஆன்மா சித்த பதவியை ஒரு சமய இடைவெளிக்கு பிறகோ அல்லது அதிக பட்சம் ஆறுமாத கால இடைவெளியிலோ மோட்சம் அடையும்.
ஸங்க்யா: ஒரு சமயத்தில் ஒன்று முதல் 108 ஜீவன்கள் வரை சித்தியடையும்.
அல்ப பஹூத்வம்: இடம் முதலிய நோக்கில் முக்தியடையும் ஜிவன்கள் எண்ணிக்கையில் கூடுதலும்,
குறைதலும் உள்ளது. அதுவே அல்ப பஹூத்வம் எனப்படும்.
கடந்த கால நய நோக்கில் க்ஷேத்திரத்தில் சித்தி அடையும் ஜீவன்களில் ஜன்ம சித்தர் மற்றும் ஸம்கரண சித்தர் என இருவகையாக உள்ளனர்.
இதில் ஸம்கரண மிகக் குறைவாகவும், ஜன்ம சித்தர் எண்ணிடங்காதவையாகவும் உள்ளனர்.
கருமபூமி, போகபூமி, சமுத்திரம், தீபம், மேல் உலகம், கீழுலகம் மற்றும் நடுவுலகம் இவற்றிலிருந்து முக்தியடையும் சித்தர்கள் மேலுலக சித்தர்களைக் காட்டிலும் கீழுலக சித்தர்கள் எண்ணிலடங்காதவர்கள்.
இவை பொது நோக்கில் கூறப்பட்டவையாகும்.
லவண சமுத்திரத்தில் உள்ளவர்களைக் காட்டுலும் மிகக் குறைவான எண்ணிக்கையில் சித்தி அடைகின்றனர். சங்க்யாத மடங்கு காலோதக சமுத்திரத்திலிருந்தும், அதைக் காட்டிலும் ஜம்புத்தீபத்திலிருந்தும், அதைவிட புஷ்கரார்த்த தீவில் அதிகமானவர்கள் சித்தி அடைகின்றனர்.
---------
இவற்றில் சித்தர்களுக்குள் பிரிவுகள் உள்ளதே யொழிய ஆன்ம குண அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லை.
----------------
இத்துடன் பத்தாவது அத்தியாயமும், நூலும் முடிவு பெற்றது.
----------------
மங்களாஷ்டகம்:
கோடி சதம் த்வாதஸம்
சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச
ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம்
ஸவ்வம்
பணமாமி பக்தி
ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா
அக்ஷரமாத்ரபத
ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம
க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே
தஸாத்த்யாயே
பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:
ததத்வார்த்த ஸுத்ர
கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர
ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்
ஜம் ஸக்கயி தம் கீரயி
ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ
பாவயி அஜராமரம் ட்டாணம்
தவயரணம் வயதரணம்
ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்
அந்தே ஸமாஹிமரணம்
சஉவிஹ துக்கம் ணிவாரேஇ
---------------
ஜின பகவான் அருளிய ஒப்புயர்வற்றதும்,
நிலைபேறானதுமான அறங்களின் முடிவான உண்மைத் தத்துவத்தின் சாரமாக கிருதபிச்சாச்சார்ய ஸ்ரீ உமாஸ்வாமி அவர்களால் அருளப்பட்டு பல ஞானியரால் விளக்கவுரையுடன்
அமைந்துள்ளது. இதனை பல சான்றோர்
பெருமக்கள் நூலாக வெளீயிட்டுள்ளார்கள் அவற்றில் சில நூல்களின் துணை கொண்டு தினமும்
தங்கள் முன் வைத்தேன்.
உயரிய தேவ வைபவங்களையும், இறுதியாக முக்திப் பேரின்பத்தையும் நாடும்
போற்றுதற்குரியவர்களால் இந்த நூல் இடையறாது
பயிலத்தக்க பெருமையும், தகுதியும் படைத்தது.
உண்மைத் தத்துவத்தை- மெய்பொருளின் தன்மையை, யாவராலும் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கவாறு
அமைந்துள்ள நூலாகும்.
தத்வார்த்த சூத்திரம் அனைத்து பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
சமணப் பொதுமறை யாகும்.
இந்நூல் ஆன்மீகக் கருத்துக்கள் அடங்கியிருந்தாலும்; பேரண்டமும்
அதற்கப்பாலும் உள்ள வெட்ட வெளியையும், அவைகளின் பண்புகளையும், அதில் வாழும் உயிர்களின்
குணங்களையும் தெளிவாக உணர்ந்த ஒரு அறிவியல்
பேரறிஞரின் ஆக்கமாகவும் என்னால் உணரமுடிந்தது.
இதனை வழங்க பேருதவியாய் இருந்த நூல்கள்
தத்வார்த்த சூத்திரம் (மோக்ஷ சாஸ்திரம்) – புஜ்ய குருவரர் ஸ்ரீ
ஆர்ஜவஸாகர் முனிவரின் விளக்க சொற்பொழிவு உரை.
சருவார்த்த சித்தி – இந்தி மூலம் பண்டிதர் திரு. பூல்சந்திர சாஸ்திரியார், ஜெய்ப்பூர், தமிழாக்கம்
க.வி. அஜிததாஸ் M.A, M.Com., அம்பத்தூர் அவர்கள்.
தத்வார்த்த சூத்திரம் -
திரு J.L. ஜைனி அவர்களின் நூலைத் தழுவி தமிழ் விளக்கம் தந்தவர் திரு. D. சுரேந்திரநாத் ஜைன், திருநின்றவூர், சென்னை-24
அவர்கள்.
தமிழில் தத்வார்த்த சூத்திரம் (குறட்பாவுடன்) – தமிழில் சல்லேகனா
விரதி, வங்கை ஜெ. அப்பாண்டைராசன் M.A.,
B.Lit., பம்மல் சென்னை.
Reality – English translation of Srimat Pujyapadacharya’s
SARVARTHASIDDI - By Prof. S.A. Jain. avl.
Tattvartha sutra –
Translation with Commentary by Manu Doshi. avl
Tattvartha sutra – originally edited by (late) J.L. Jaine M.A. Bar-at-Law,
Judge, High court, Indore.
நன்றி.
-------
No comments:
Post a Comment