tattvartha sutra Chapter 8


தத்வார்த்த சூத்திரம்: - அத்தியாயம் # 8



கடவுள் வாழ்த்து


மோக்ஷ மார்கஸ்ய நேதாரம் பேதாரம் கர்ம பூப்ப்ருதாம்
ஞாதாரம் விஸ்வ தத்த்வானாம் வந்தே தத்குண லப்த்தயே

த்ரைகால்யம் த்ரவ்ய ஷட்கம் நவபத ஸ்ஹிதம் ஜீவ ஷட்காய லேஸ்யா:
பஞ்சான்யே சாஸ்திகாயா வ்ரத ஸ்மிதி கதி ஞான சாரித்ர பேதா:

இத்யேதன் மோக்ஷ மூலம் த்ரிபுவன மஹிதை:ப்ரோக்தம் அர்ஹத் பிரீஷை:
ப்ரத்யேதி ஸ்ருத்ததாதி ஸ்ப்ரூஷதி ச மதிமான் ய: ஸ வை சுத்தத்ருஷ்டி:

ஸித்தே ஜ்யப்பஸித்தே சவ்விஹராஹணா ஃபலம் பத்தே
வந்தித்தா அரஹந்தே வோச்சம் ஆராஹணா கமஸோ

உஜ்ஜோவணம் உஜ்ஜவணம் ணிவ்வஹணம் ஸாஹணம் ச ணிச்சரணம்
தம்ஸணணாண சரித்தம் தவாணம் ஆராஹணா ஃபணியா

----------------

முன்  ஏழு அதிகாரம் வரை ஜீவ, அஜீவ, ஆஸ்ரவ பதார்த்தம் வரை வழங்கப்பட்டது.

தற்போது வினைக்கட்டிற்கான காரணங்கள் சொல்லப்படுகிறது.


பந்த காரணம்



மித்யதர்சனாவிரதிப்ரமாதகஷாயயோகா பந்தஹேதவ: – (சூ#1) =  (276)


मिथ्यादर्शनाविरतिप्रमादकषाययोगा बन्धहेतवः


Mithyadarshanavirati-pramada-kashaya-yoga bandhahetavah



மித்யதர்சனம்தீக்காட்சி/ பொய் நம்பிக்கை; அவிரதிவிரதமின்னை; ப்ரமாதம்நற்செயல்களில் விழிப்பின்மை; கஷாயம்துவர்ப்புகள் உள்ளமை; யோகாசெயல்பாடு;  பந்தஹேதவ: - வினைக்கட்டிற்கான காரணங்கள்.

Wrong belief, attachment, negligence, passions and activities are the causes of bondage.  



மித்யா தரிசனம்: பொருள் இயல்புக்கு எதிரான நம்பிக்கை.

அவை இயல்பாகவே வந்த பொய் நம்பிக்கையானது நைஸர்கிகம் என்றும்,
பிறர் உபதேசத்தால் வந்த மித்யாத்வம் பரோபதேச பூர்வக  மித்யா தரிசனம் என்றும் பிரிவுடையது. இது கிரியாவாதி, அக்கிரியாவதி, அஞ்ஞானி மற்றும் வைநயிகம் என நான்கு பிரிவுகளாக கூறப்படுகிறது.


பாஷண்ட சமயங்களாக இந்நான்கு பிரிவுகளிலும் மொத்தம் 363 பிரிவுகளாக முற்காலத்தில் இருந்துள்ளது.

மேலும்

ஏகாந்தம்ஒரு பொருளின் பல குணங்களை விடுத்து ஒரு குணத்தை மற்றுமே ஏற்றுக் கொள்வது. எல்லா உலகமும் பரப்பிரம்ம வடிவமாகவே இருக்கிறது. எல்லா பொருட்களும் நிலையில்லாதவையாகவோ/ நிலையானவையாகவோ நம்புவது, பேசுவது ஏகாந்த மித்யாத்வம்.

விபரீத மித்யாத்வம்பொருளுக்கு எதிராக நம்பிக்கை கொள்வது. ஆடை அணிந்தவரை நிர்கந்தர் எனவும்; கேவலி பகவான் கவளம் அளவிற்கு ஆகாரம் ஏற்பார் எனவும் நம்பிக்கை கொள்வது.

சம்சய மித்யா: - பொருளின் இயல்பில் சந்தேகம் கொள்ளுதல். மும்மணியான நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவை முக்திக்கு வழிகாட்டுவனவா இல்லையா என ஐயம் கொள்ளுதல்.

வைனயிக மித்யா தரிசனம்: - பூஜைக்கு உரியவரை விடுத்து எல்லா தெய்வங்களையும் வணங்குவது. எல்லா தேவ, தேவியரும், கடவுள்களும் ஒன்றுதான் என நம்புவது.

அஞ்ஞான மித்யா தரிசனம்: - நன்மை எது, தீமை எது என ஆராயாது, அறியாமையில் அனைத்தையும் நம்புவது.

--------------------

அவிரதி – மண் உடலி, நீர், நெருப்பு, காற்று, தாவர, இயங்குடலி ஆகிய ஆறு வகை உயிரினங்கள் கருணையோடு இல்லாதிருத்தல்;
ஐம்புலங்கள், மனம் ஆகிய ஆறின் மீது கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதும் ஆக மொத்தம் பன்னிரண்டு விரதங்களை நோற்காதவர்;
------------
பிரமாதம் – ஐந்து சமிதி, மூன்று குப்தி, எட்டு சுத்தி, பத்து தர்மம் முதலியவற்றை கடைபிடிப்பதில் உறுதியில்லாமல் இருத்தல், அசட்டையுடன் இருத்தல் போன்றதாகும் இது 15 வகையாகும்.

கதை பேசுதல் – போஜனம், பெண், ராஜ்யம், தேசம் என நான்கு (ஸ்திரி, ராஜ கதை, பக்திக் கதை, தேச கதை)

ஐம்பொறி சம்பந்தமானவை -   மெய், வாய், கண்,  மூக்கு,  செவி.

கஷாய சம்பந்தம் – குரோதம், மான, லோபம், மாயை

ஸ்நேக – மோக உணர்வோடு மென்மையான பொருட்களை தொடுவது

தூக்கம் – உறங்குவதில் அதிக நாட்டம்.
இந்த பதினைந்து பிரமாதங்கள் எண்பது வகையாக விஸ்தரிக்கப்படுகிறது.

இந்திரியங்கள் 5 x கதை 4 x கஷாயம் x 4 அன்பு 1 x நித்திரை 1 ஆக மடங்கில் 80 ஆகிறது.
---------------
யோகம் – மன, வசன, காயம் இவற்றின் செயல்களால் ஆன்மாவில் உண்டாகும் அதிர்வுகளுக்கு யோகம் என்று பெயர். இவை 15 ஆகும்.

மனம் - சத்தியமான; சத்தியமற்ற; சத்தியமும், சத்தியமின்மையும் கலந்த; சத்தியமல்லாத, பொய்யுமில்லாத என மனதில்  நான்கு வகைகள்.

அதே போல் வசனம் இவற்றிலும் நான்கு வகை மித்யாத்தங்கள்

உடல் – ஒளதாரிகம், ஒளதாரிக மிஸ்ரம், வைக்ரீயகம், வைக்ரீயக மிஸ்ரம், ஆஹாரகம், ஆஹாரக மிஸ்ரம் மற்றும் கார்மணம்.

---------------
தைஜச சரீரம் எப்பொழுதும் கார்மண சரீரத்துடன் தான் இருக்கும். அதனால் தனியாக யோகம் இல்லை.

தைஜச வர்கணைகள் கார்மண வர்கணைகள் போன்று ஆன்மாவின் எல்லா யோகங்களாலும் ஈர்க்கப்படுகின்றன.
---------------------
இவ்வாறு ஐந்து விதமான காரணங்களால் கர்மங்கள் பந்தமாகின்றன.

--------------
குறிப்பு: முதல் மூன்று குணஸ்தானங்களில் மேற்கூறிய ஐந்து விதமான காரணங்களால் கர்மங்கள் பந்தமாகின்றன.

5, 6 குணஸ்தானத்தில் மித்யா தர்சனம், அவிரதம் இன்றி மீதியுள்ளவைகளால் பந்தம்….

7,8,9,10 இவற்றில் மித்யா தரிசனம், அவிரதம், பிரமாதம் நீங்கலாக மீதியுள்ளவை இருக்கும்.

11,12,13 குணஸ்தானங்களில் யோகம் மட்டுமே பந்தத்திற்கான காரணமாகிறது.

பதினான்காவது குணஸ்தானத்தில் மேற்கூறிய எவையுமே காரணங்களாக இருக்காது.

(பிரத்யய என்று கூறுவர். ஆசாச்சார்ய  குந்த குந்தரின் ஸமய சார ப்ரபரிதம் என்னும்  நூலிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.)
------------

அடுத்து பந்த  லக்ஷணம் பற்றி……

------------------



கர்ம லக்ஷணம்


ஸகஷாயத்வாஜ்ஜீவ: கர்மணோ யோக்யாந் புத்கலாநாதத்தே ஸ பந்த:  -  (சூ#2) = (277)


सकषायत्वाज्जीवः कर्मणोयोग्यान् पुद्गनानादत्ते स बन्धः


Sakashayatvajjivah karmano yogyanpudgalanadatte sa bandhah


கஷாயத்வாஜ – நான்கு வகையான துவர்ப்பசைகளுடன் கூடும்போது; ஜீவ: - உயிர்;  கர்மண – செயலுக்கு; யோக்யாந் – தகுந்த;  புத்கலாநா  - வினை வர்கணைகளாகிய புற்கல பரமாணுக்களை; ஆதத்தே – ஏற்கிறது; ஸ – அதுவே; பந்த: - பந்தமாகும்.


Owing to wrong belief, passions etc. the self attracts subtle matter pervading the same space points occupied by the self, capable of turning into karmic matter, which is called influx. When such karmic matter is combined by interpenetration with the space points of the self, it is called bondage.


உலகம் முழுவதும் வினைத்திரள்கள் புற்கல திரவியமாக பரவிக் கிடக்கிறது. ஆன்மா  உள்ள இடத்திலும் இவ்வர்கணைகள் நிரம்பிக் கிடக்கின்றன.

ஆன்மனில் கஷாயங்கள் இருக்கும் போது இவ்வர்கணைகள்  பிணைத்துக் கொள்கின்றன. அந்நிகழ்வைவே பந்தம்  எனப்படுகிறது.
-------------
ஈரமான பாத்திரத்தில் தூசு  ஒட்டிக்கொள்வது போன்றதே, உயிரில் வினை அணுக்கள் சேர்தலாகிய நிகழ்வும் எனக் கருதலாம்.
----------------
கருமங்களுக்கான காரணம் ஜீவன் கஷாயங்களுடன் கூடியிருக்கிற காரணத்தால் அது கருமத் தகுதியுடைய புற்கலங்களை ஏற்கிறது. அதுவே பந்தம் எனப்படுகிறது.

அதாவது கருமத்தின் நிமித்தத்தினால் ஜீவனில் அசுத்த தன்மை வந்தடைகிறது. இந்த அசுத்த தன்மை காரணமாக கருமங்களில் பந்தம் ஏற்படுகிறது.
-------------

பந்தம் ஒன்றா, பலவா அடுத்து காண்போம்……

-------------------------------- 


பந்தத்தின் வகைகள்



ப்ரக்ருதிஸ்தித்யனுபவப்ரதேசாஸ்தத்விதய:  -  (சூ#3) = (278)


प्रकृतिस्थित्यनुभवप्रदेशास्तद्विधयः


Prakrti-sthityanubhava-pradeshastadvidhayah



ப்ரக்ருதி – இயல்பு; ஸ்திதி – நிலைத்தல்; அனுபவ- பயனாற்றல்; ப்ரதேச – இடம்; தத்விதய: - என நான்கு வகையாகும்.


Bondage is of four kinds according to the nature or species of karma, duration of karma, fruition of karma, and the quantity of space-points of karma.


ப்ரக்ருதி :  ஒவ்வொரு வினைக்கும் அதன் செயல்பாடு, அதாவது  எதனால் இத்தகு நிகழ்வுகள் அல்லது அனுபவங்களுக்கு எது காரணமாக உள்ளதோ அது  பிரக்ருதி எனப்படும். கர்மங்களின் இயல்பான குணம்/சுபாவம் ப்ரக்ருதி. 

கரும்பின் இயல்பு இனிப்பு, வேம்பின் இயல்பு கசப்பு  என்பது போன்றது (ஸுபாவம்).

ஞானத்தை , பொருள் பற்றி அறியும் ஆற்றலை,  மறைப்பது ஞானாவரணீயம்;
உண்மைத்தத்வங்களில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவது தர்சனாவரணீய கருமம் (காட்சி மறைப்பு வினை);
விரதம் தரிக்க ஒட்டாமல் செய்வது சாரித்த மோகனீயம்;
உயிர் வாழும் காலத்தினை நிர்ணயிப்பது ஆயுள்வினை;
கதியை உயிர்களுக்கு நிர்ணயிப்பது நாம கருமம்;
உயர், தாழ்ந்த குலத்தை நிர்ணயிப்பது கோத்ர கருமம்;
தானம், லாபம், போகம்  இவற்றுக்கு தடையாக இருப்பது அந்தராய கருமம்.
அது போல் அதனதன் சுபாவம் என்பது ப்ரக்ருதியாகும்.
---------------
ஸ்திதி பந்தம்:  ஆன்மாவுடன் வினைத் தொடர்பு வைத்துள்ள காலம்  ஆகும். வினைகள் தனது  இயல்பான  குணத்துடன் மாறாமல், பந்தித்து கொண்டிருக்கும் கால அளவு.
--------------
அநுபாக பந்தம்: ஜீவனுடைய பிரதேசங்களில் இருக்கும் வினைகளின் ஆற்றல் ஏற்றத்தாழ்வுடன் (ஸுகதுக்க ஆற்றல்) அனுபாக பந்தம். ஆடு, பசு போன்றவற்றின் பாலின் சுவை ஒவ்வொன்றிலும்  ஏற்றத்தாழ்வுடன்  இருத்தல்.
--------
பிரதேச பந்தம்: வினைத்துகள்கள் ஆன்மாவில் பந்தமாகும் அளவைக் குறிப்பது. ஆகாயப் பிரதேசங்களின் அளவின் மூலமாக வினைத்துகள்களை கணக்கிடுதல் பிரதேச அளவை ஆகும். அதாவது ஞானாவரணீயம் முதலான புத்கல திரள்களாக மாற்றமடையும் பரமாணுக்களின் அளவைக் கணக்கிடுதல்  பிரதேச பந்தம்.
---------
யோகம் மற்றும் கஷாயத்தினால் ஏற்படுகிறது பந்தம்.

யோகத்தின் நிமித்தத்தினால் பிரக்ருதி பந்தத்துடன் பிரதேச பந்தமும் ஏற்படுகிறது. கஷாயத்தினால் ஸ்திதி பந்தம் மற்றும் அனுபாக பந்தமும் ஏற்படுகிறது.
-------------
அதாவது எங்கு யோகமும், கஷாயமும் இல்லையோ அங்கு பந்தம்  என்ற வினைக்கட்டு ஏற்படுவதில்லை.
----------

அடுத்து பிரக்ருதி பந்தத்தின் பிரிவுகளை…..

---------------- 


கர்மங்களின் வகைகள்



ஆத்யோ ஞான தர்சனாவரண வேதநீய மோஹநீயாயுர் நாமகோத்ராந்தராயா: - (சூ#4) = (279)


आद्यो ज्ञान दर्शनावरणवेदनीय मोहनीयायुर्नामगोत्रान्तरायाः


Adyo gyanadarshanavarana-vedaniyamohaniya-yurnama-gotrantarayah



ஆத்யோ – முதலாவதாகிய பிரக்ருதி:  ஞான தர்சனாவரண வேதநீய மோஹநீயாயுர் நாமகோத்ராந்தராயா: - ஞானாவரணம், தர்சனாவர்ணம், வேதநீயம், மோஹநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்ரம் மற்றும் அந்தராயம் என்பன.


The nature of karmas is of eight kinds i.e. knowledge-obscuring, perception-obscuring, feeling-producing, deluding, life-determining, name-determining (physique- making) status-determining and obstructive karmas.  


பிரக்ருதி பந்தம் எட்டு பிரிவுகள் உள்ளன.

எது மறைக்கிறதோ அல்லது  எதனால் மறைக்கப் படுகிறதோ அதற்கு ஆவரணம் (மறைப்பு) எனப்படும்.

எந்த கர்ம உதயத்தால் ஞானத்திற்கு பாதகம் வருமோ அது ஞானாவரணம் ஆகும்.

எந்த கர்ம உதயத்தால் தர்சன குணத்திற்கு பாதகம் வருமோ  அது தர்சனாவரணம்.

எதன் உதயத்தால் சுக, துக்கம் நுகரப்படுகிறதோ; அதற்கான காரணங்கள் எதுவோ அவை மோகனீயம் கர்மம் (நுகர்ச்சி வினை).

வேறு பொருட்களின்  மீது மோகம் வருகிறதோ மோகனீய  கர்மம் என்றும்,

எந்த கர்ம உதயத்தால் ஜீவன் ஒரு உடலில் தங்கி இருக்கிறதோ, பிறந்து இறக்க காரணமாக அமைகிறதோ, அது ஆயுட் கருமம்.

எந்த வினையின்  உதயத்தால் சரீர அமைப்பு ஏற்படுகிறதோ அது நாம வினை.
அதுபோல் உயிர உயர்ந்த தாழந்த குலத்தில் பிறக்க காரணமாக உள்ளது கோத்ர கரும்ம் எனப்படுகிறது.

தானம் கொடுப்பதற்கும், தானம் பெறுவதற்கும் எந்த வினை உதயம் காரணமாக உள்ளதோ அது அந்தராயம் எனப்படுகிறது.
------------
ஞான, தர்சன, மோகனீயம், அந்தராயம் இந்நான்கும் காதி  வினைகள் ஆகும்.
வேதனீயம், ஆயுள், நாம, கோத்ரம்  இந்நான்கும் அகாதி கருமங்கள் ஆகும்.
----------------
ஒரு ஆண்மாவின் எண்ணங்களால் கிரகிக்கப்பட்ட புற்கல பரமாணுக்கள்  எண் வினைகளாகவும் மற்றும் அனேக உட்பிரிவுகளாகவும் மாறி ஆன்மாவில் பந்தமாகின்றன.
---------

அடுத்து அதன் உட்பிரிவுகள் எத்தனை என்பதைக் காண்போம்…..

---------------- 

எட்டு வினைகளின் உட்பிரிவுகள்



பஞ்சநவத்வயஷ்டா விம்சதி சதுர் த்விசத்வாரிம்சத்த்வி பஞ்சபேதா யதாக்ரமம் – (சூ#5) = (280)


पञ्चनवद्व्यष्टाविंशति चतुर्द्विचत्वारिंशद्द्विपञ्च भेदा यथाक्रमम्


Pancha-nava-dvyastavinshati-chaturdvichatvarinshaddvi-pancha-bheda yathakramam


யதாக்ரமம் -  முறையே; பஞ்ச – ஐந்து; நவ – ஒன்பது; த்வி – இரண்டு; யஷ்டா விம்சதி – இருபத்தெட்டு; சதுர் – நான்கு;  த்வி – இரண்டு; சத் – வாரிம்சத் – நாற்பத்திரண்டு; த்வி – இரண்டு; பஞ்ச – ஐந்து; பேதா – பிரிவுகளாக.

The subdivisions of these eight kind of bondage are five, nine, two, twenty-eight, four, forty-two, two and five kinds respectively.  


எட்டு வினைகள் உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது அவை முறையே:

ஐந்து பிரிவுகளையுடைய  அறிவு மறைப்பு

ஒன்பது பிரிவுகளையுடைய  காட்சி மறைப்பு

இரண்டு பிரிவுகளையுடைய  வேதனீய மறைப்பு

28 பிரிவுகளியுடைய மோகனீயம்; 4 பிரிவுகளையுடைய ஆயுள்; 42 பிரிவுகளான நாமம்; இரண்டு பிரிவுகளான கோத்திரம் மற்றும் 5 பிரிவுகளான அந்தராயம் போன்றவை.
--------------

அடுத்து ஐந்து பிரவுகளையுடைய அறிவு மறைப்பை காண்போம்.


-------------------------


அறிவு மறைப்பு வினை பந்தத்தின் வகைகள்




மதிஸ்ருதாவதிமன: பர்யய கேவலானாம்  -  (சூ#6) = (281)


मतिश्रुतावधिमनः पर्ययकेवलानाम्


Mati-srutavadhi-manahparyaya-kevalanam




மதி – மதி அறிவு மறைப்பு; ஸ்ருத – சுருத அறிவு மறைப்பு; அவதி – அவதி அறிவு மறைப்பு; மன: பர்யய – மனபரிய அறிவு மறைப்பு;  கேவலானாம் – கேவலஞான மறைப்பு ஆகியவை.


Karmas which obscure sensory knowledge, scriptural knowledge, clairvoyance, telepathy and omniscience are the five kinds of knowledge-obscuring karmas.   



ஞானாவரண கர்ம பந்தத்தின்  ஐந்து வகைகளாவன

புலன் அறிவு மறைக்கும் கர்மம்; சாஸ்திர ஞானத்தை மறைக்கும் கர்மம்;  அவதி ஞானத்தை மறைக்கும் கர்மம்; மனப்பர்யய ஞானத்தை மறைக்கும் கர்மம்; முழுதுணர்ஞானத்தை மறைக்கும் கர்மம் என ஐந்தாகும்.
----------
அடிப்படையில் அறிவு ஒன்றுதான். மறைப்பு ஏற்படும் சிறப்புத்தன்மை நோக்கில் ஐவகையான மறைப்புகள் பெறப்பட்டது.

சூரியனை மேகம் மறைப்பது போன்றது ஞான மறைப்பு;  மேகத்தின் அடர்த்தியைப் பொருத்து சூரிய ஒளி பூமியில் படுவதின் அளவு மாறுபடுகிறது.

கேவலஞானாவரண கருமம்(முழுதுணர் அறிவு மறைப்பு) மறைப்பதால் குறைவான அறிவே வெளிப்படுகிறது. அக்கருமத்தின் தீவர-மந்த தன்மையைப் பொருத்து மற்ற நான்கு அறிவு மறைப்பும் ஏற்படுகிறது. முழுவதுமாக கருமம், மேகத்தைப் போன்று, விலகும் போது முழு அறிவும் வெளிப்படுகிறது.

ஆகவே ஒவ்வொரு ஆன்மாவும் முழுதுணர்ஞானத்துடன் இருந்தாலும் ஞானாவரண கருமத்தின் மறைப்பினால் அறிவு ஐந்து நிலையில் மங்கி காணப்படுகிறது.
--------------
அடுத்து காட்சி மறைப்பு பற்றி…..


----------------------- 


தர்ஸனாவரணத்தின் ஒன்பது பிரிவுகள்




சக்ஷுரசக்ஷுரவதி கேவலாநாம் நித்ராநித்ராநித்ராப்ரசலா ப்ரசலாப்ரசலாஸ்த்யாநக்ருத்தயஸ்ச – (சூ#7) = (282)



चक्षुरचक्षुर वधिकेवलानां निद्रा निद्रा निद्रापचला प्रचलास्त्यनगृद्धयश्च



Chakshurachakshuravadhikevalanam nidra-nidranidra-prachala-rachala-prachala-styanagrddhayashcha



சக்ஷு – கண் காட்சி மறைப்பு: அசக்ஷு – பிற பொறிகள் காட்சி மறைப்பு; அவதி – அவதி காட்டி மறைப்பு; கேவலாநாம் – கேவலக் காட்சி மறைப்பு;  நித்ரா – உறக்கம்; நித்ராநித்ரா – ஆழ்ந்த உறக்கம்; ப்ரசலா – அரை உறக்கம்; ப்ரசலாப்ரசலா – மயக்க நிலை உறக்கம்; ஸ்த்யாநக்ருதி – தூக்கத்தில் நடத்தல், உளருதல் போன்ற செயல் உறக்கம்;

The four karmas that cover ocular perception, non-ocular intution, clairvoyant perception and perfect perception, and sleep, deep sleep, drowsiness (sleep in sitting posture), heavy drowsiness (intense sleep in sitting posture) and somnambulism (committing  deeds in sleep and not remembering) are the nine subtypes of perception-covering karmas.  


காட்சி மறைப்பு வினை உதயத்தால் பொருளைப்பார்த்தலை தடைசெய்தல், ஒரு பொறி, இரண்டு, மூன்று பொறி வரை உள்ள உயிர்களுக்கு கண்களே அமைவதில்லை. ஐம்பொறி உயிர்களுக்கு பார்வை குறைபாடு  தோன்றுகிறது.

பிற பொறிகளால், மனதால் அறியும் ஆற்றலை மறைக்கும் வினை அசக்ஷு தரசனாவரணம்.

பொறிகள் மற்றும் மனதின் துணையில்லாமல் உயிர்பொருட்களை உணர்தலை மறைப்பது அவதி காட்சி மறைப்பு வினை.

உலக பொருட்கள் அனைத்தையும் பொதுவாக, சிறப்பாக உணர்தலை மறைக்கு வினை கேவல காட்சி மறைப்பு வினை.

துக்கம், சோகம், களைப்பு இவற்றை களையும் பொருட்டு வரும் உறக்கத்தை ஏற்படுத்தி தடுக்கும் வினை நித்ரா வினை.

ஆழ்ந்த உறக்கத்திற்கு காரணமான கருமம் நித்ரா-நித்ரா வினை.

சோம்பல், அரைத்தூக்கம் அதில் பிறர் பேசுவதை கேட்டல், அந்த அல்ப நித்திரைக்கு காரணமான வினை ப்ரசலா வினை.

உட்காந்து கொண்டே உறங்குதல், உடல் நடுங்குதலுக்கு காரணமான் கருமம் பிரசலா பிரசலா வினை.

தூக்கத்தில்  நடத்தல், பிதற்றுதல் முதலியவற்றிற்கு காரணமாக வினை ஸ்த்யாநக்ருதி வினை.

--------
பிறவி உயிர்களுக்கு நான்கு காட்சி மறைப்பு வினைகள், ஐந்து உறக்கங்கள் முதலியன காட்சி உணர்விற்கு தடை செய்வதால் காட்சி மறைப்பு வினைகளாக மொத்தம் ஒன்பது உட்பிரிவுகளாகும்.

-----------------

அடுத்து வேதநீயத்தின் பிரிவுகள்…..

---------------------- 


வேதநீயத்தின் பிரிவுகள்




ஸதஸத்வேத்யே  -  (சூ#8) = (283)


सदसद्वेद्ये


Sadasadvedye



ஸதஸத்வேத்யே – சாதா வேதனீயம், அசாத  வேதனீயம் என  இரண்டு பிரிவுகள்.

The two karmas which cause pleasant feeling and unpleasant feeling respectively are the two subtypes of feeling-producing karmas. 


கர்ம உதயத்தினால் இந்திரியங்களுக்கு சுகம் தரும் விஷயம், சுக அனுபவம் கிடைக்குமோ அதற்கு சாதா வேதனீய கருமம் எனப்படும்.

கர்ம உதயத்தினால் இந்திரியங்களுக்கு துக்கம், அசுபம் தரும் விஷயம்/ துக்க் அனுபவம் கிடைக்குமோ அதற்கு அசாதா வேதனீய கருமம்  எனப்படும்.
--------------
அடுத்து மோகனீய வினையின் உட்பிரிவுகள்…..

 ---------------- 


மோகனீய வினையின் உட்பிரிவுகள்



தர்சனசாரித்ரமோஹநீயாகஷாயஷாயவேதனீயாக்யா ஸ்த்ரித்விநவஷோடஸ பேதா:  ஸம்யக்த்வ மித்யாத்வ ததுபயாந்யகஷாய- கஷாயெள ஹாஸ்யரத்யரதிஸோக பயஜு குப்ஸா ஸ்திரீபுந்நபும்ஸகவேதா அநந்தானுபந்த்யாப்ரத்யாக்யான ப்ரத்யாக்யான ஸ்ஞ்ஜ்வலனவிகல்பாஸ்சைகஸ: க்ரோதமாந மாயாலோபா: - (சூ#9) = (284)


दर्शनचारित्रमोहनीया कषाय कषाय बेदनीयाख्या स्त्रिद्विनवषोडशभेदाः सम्यक्त्व मिथ्यात्वतदुभयान्य कषायकषायौ हास्य रत्यरतिशोक भय जुगुप्सास्त्रीपुन्नपुंसक बेदा अनन्तानुबन्ध्य प्रत्याख्यान प्रत्याख्यान संज्वलन विकल्पाश्चैकशः क्रोधमान माया लोभाः


Darshana-charitramohaniyakashaya-kashaya-vedaniyakhyastri-dvi-Nava-shodashabhedah samyaktva-mithyatva-tadubhayanyakashaya-kashayau hasya-ratyarati-shoka-bhaya-jugupsa-stripunna-pumsakaveda anantanubandhya-pratyakhyana-pratyakhyana-sanjvalana- vikalpashchaikashah krodha-mana-maya-lobhah


தர்சனசாரித்ரமோஹநீயா – காட்சி மயக்கம், ஒழுக்க மயக்கம்;  அகஷாய கஷாய வேதனீயாக்யா – அகஷாய, கஷாய மோகனீயம் ஆகிய இவை முறையே; த்ரி த்வி நவ ஷோடஸ பேதா: - மூன்று, இரண்டு, ஒன்பது, பதினாறு பிரிவுகளாகும்;   ஸம்யக்த்வ மித்யாத்வ ததுபயாந் – மெய்ம்மை, பொய்மை மற்றும் மெய்ம்மைப் பொய்மை என; அகஷாய கஷாயெள – அகஷாய, கஷாய வேதனீயம் என இரு பிரிவுகளும்;  ஹாஸ்ய ரத்யரதி ஸோக பய ஜுகுப்ஸா ஸ்திரீபுந்நபும்ஸக வேதா – அகஷாய வேதநீயத்தில் சிரிப்பு, ரதி, அரதி, சோகம், அச்சம், அருவருப்பு, பெண்வேதம், ஆண் வேதம், அலிவேதம் என ஒன்பது பிரிவுகளாக உள்ளது; அநந்தானுபந்த்ய ப்ரத்யாக்யான ப்ரத்யாக்யான ஸ்ஞ்ஜ்வலனவிகல்பா ஸ்சைகஸ:  – அனந்தானுபந்தி அப்ரத்யாக்யாணம், ப்ரத்யாக்யாணம், சஞ்ஜ்வலனம் ஆகிய நான்கிலும்;  க்ரோத மாந மாயா லோபா: - வெகுளி, மானம், மாயை, உலோபம் என்று நான்கிலும் ஒவ்வொன்றிலும் நான்காக மொத்தம் பதினாறு கஷாய மோகனீய வினையின் பிரிவுகளாகும்.



The deluding karmas are of twenty-eight kinds. These are the three subtypes of faith-deluding karmas – wrong belief, right belief and mixed belief, and twenty five subtypes of conduct-deluding karmas which cause and which are caused by the passions (sixteen types – each of the four passions i.e. anger, pride, deceit fulness and greed is divided into four classes i.e. very intense, intense, mediocre and weak) and the quasi-passions (nine types – laughter, liking for certain objects, dislike for other objects, grief or sorrow, fear, disgust, hankering after men, hankering after women and hankering after both men and women).  


மயக்க வினையான மோகனீய கருமம் பொதுவாக தர்சன, காட்சி மயக்கு வினை  அதாவது  தத்துவ ருசி பெறுவதில் எது தடையாக உள்ளதோ அது மற்றும் சாரித்ர, ஒழுக்க மயக்கு வினை, ஆன்ம இயல்பில் ஒழுகுவதை எது பாதிக்கிறதோ அது, என இருபிரிவுகளாகும்.

முதல் பிரிவில் மூன்று உட்பிரிவுகளான;

மித்யாத்வம் – ஜினருடைய வார்த்தைகளை நம்பாத அதாவது நற்காட்சிக்கு எதிரான வினையாகும். அது நசிந்த பின்னர்தான் ஸம்யக்த்வம் தோன்றும்.

சம்யக்த்வம் – இப்ப்ரகிருதி ஸம்யக்த்தினை அடியோடு கெடுக்குந்தன்மையின்றி சலனம், தோஷம் போன்ற தூஷணைகளை உண்டாக்குவதற்குக் காரணமாகிறது.

சம்யக்த மித்யாத்வம் – நற்காட்சியின் தன்மையும், தீக்காட்சியின் தன்மையும் ஒன்றாக சேர்ந்திருக்க காரணமானது.

சாரித்ர மோகனீய பிரிவில் உட்பிரிவுகள்:

ஹாஸ்யம் – சிரித்தல், பரிஹாசம் செய்தல்  போன்ற செயலுக்கு காரணமாக அமைவது.

ரதி – ஒரு பொருளை அனுபவிக்க விருப்பமும், ஆர்வமும் ஏற்பட காரணமாக உள்ளது.

அரதி – ஒரு பொருளின் மீது அன்பின்மை, நாட்டமின்மை, சலிப்பு ஏற்படுவதற்கான வினை.

சோகம் – பொருள் நஷ்டத்தினால் ஏற்படும் உணர்விற்கான வினை.

பயம் – அச்ச உணர்வு ஏற்படுவதற்கான கருமம்.

ஜுகுப்சை – தன் குற்றத்தை மறைப்பது, பிறர் குற்றத்தை வெளியிடுதல், அருவருப்படைதல், இகழ்ச்சி செய்தல் போன்ற உணர்விற்கான கருமம்.

ஸ்திரி வேதம் – பெண் தன்மை உணர்வு ஏற்படுதல்;  ஆணுடன் உறவு கொள்ள எண்ணம் ஏற்படவும் காரணமான வினை.

புருஷ வேதம் – ஆண் தன்மை உண்டாவதற்கும்,  பெண்ணுடன் உறவு கொள்ள எண்ணம் ஏற்படக் காரணமான கருமம்.

நபும்ஸக வேதம் – அலித்தன்மைக்கும், ஆண் பெண் இருபாலரிடமும் உறவு கொள்ள தூண்டும் வினை.

கஷாய நான்கான குரோத, மான, மாயா, லோப வேதனீயத்தில் அனுந்தானுபந்தி, அப்ரத்யாக்யானா,  பிரத்யாக்யானா, ஸஞ்ஜ்வலனம் ஆகிய நான்கும் ஒவ்வொரு கஷாயத்தின் பிரிவுகளுடன் மடங்கில் பதினாறு பிரிவுகளாகிறாது.

எந்த கஷாயம் அனந்த பிறவிகளுக்கும் தொடர்ந்து வருகிறதோ அது அனந்தானுபந்தி குரோதம், மானம், மாயை, லோபம் எனப்படுகிறது.
எந்த  கஷாயம் தேச விரத சாரித்திரத்தினை கடை பிடிக்க விடாமல் செய்கிறதோ அதனை அப்ரத்யாக்யான வரண குரோத, மானம், மாயை , லோபம் எனப்படுகிறது.

அதே போல்  எந்த கஷாயம் சகல சாரித்திரங்களுக்கும் கெடுதல் செய்து வெளிப்படுத்த முடியாமல் செய்கிறதோ அதனை ப்ரத்யாக்யான வரண குரோத, மானம், மாயை, லோபம் எனப்படுகிறது.

ஒருமுக சிந்தனையில் அதாவது மனம், மொழி, உடல் கட்டுப்பாட்டுடன் எந்த கஷாயம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ மற்றும் குற்றமற்ற,  உயர்ந்த சாரித்திரத்தினை வெளிப்படுத்த வொட்டாமல்  செய்கிறதோ அவற்றை ஸஞ்ஜ்வலன குரோத, மான, மாயா, லோபம் எனப்படுகிறது.
----------------

அடுத்து ஆயுள் வினைகளின்  உட்பிரிவுகள் பற்றி…..

----------------- 


ஆயுள் வினையின்  உட்பிரிவுகள்



நாரகதைர்யக்யோனமானுஷதைவானி – (சூ#10) = (285)


नारकतैर्यग्योनमानुदैवानि


Naraka-tairyagyona-manusha-daivani


நாரக – நரக ஆயுள்; தைர்யக் யோன – (திர்யக்) விலங்கு அயுள்; மானுஷ – மனித ஆயுள்; தைவானி – தேவ அயுள் என நான்கு வகைப்படும்.


The life-karmas determine the quantum of life in the states of existence as infernal beings, plants animals, immobile beings, human beings and celestial beings.  



ஏதேனும் ஒரு உடலில் வரையறுத்த காலம் வரை உயிரைத்தங்கச் செய்யும் வினையை ஆயுள் வினை என்பர்.

அது நான்கு வகையாகும்:

நரக கதியில் இருப்பதற்கு நரகாயுள் எனவும்;  விலங்கு கதியை உடையவர்களுக்கு விலங்காயுள் எனவும்; மனித இனத்தில் பிறந்து இருப்பதற்கு மனிதாயுள் எனவும்; தேவகதியில் இருப்பதற்கு தேவாயுள் என நான்கு வகையாகும்.

-----------

அடுத்து நாம வினையின் உட்பிரிவுகள் பற்றி….

-------------------- 


நாம வினையின் உட்பிரிவுகள்




கதிஜாதிசரீராங்கோபாங்க நிர்மாண பந்தன ஸங்காத ஸம்ஸ்தான ஸ்மஹநந ஸ்பர்ச ரஸ கந்த வர்ணாநு பூர்வ்யாகுருலகூபகாத பரகாதாதபோத்யோதோச் ஸ்வாஸ விஹாயோகதய: ப்ரத்யேகசரீர த்ரஸ ஸுபக ஸுஸ்வரசுப சூக்ஷ்ம பர்யாப்தி  ஸ்திராதேயயசகீர்த்தி ஸேதராணி தீர்த்தகரத்வம் . – (சூ#11) = (286)



गतिजातिशरीराङ्गोपाङ्गनिर्माण बन्धसंघात संस्थानसंहनन स्पर्श रस गन्ध वर्णनुपूर्व्यागुरुलघूपघातपरघातातपोद्योतोच्छवास निहायोगतयः प्रत्येकशरोत्रस सुभगसुस्वरशुभसूक्ष्मपर्याप्ति स्थिरादेय यशः कीर्तिसेतराणितीर्थकरत्वं च



Gati-jati-sharirangopanga-nirmana-bandhana-sanghata-sansthana-sanhanana-sparsha-rasa-gandha-varnanupurvyagurulaghupaghata-paraghatata-podyotochchhvasa-vihayogatayah pratyekasharira-trasa-subhaga-susvara-shubha-sukshma-paryapti-sthiradeya-yashahkirti-setarani tirthankaratvam cha




கதி ஜாதி சரீரம் அங்கோபாங்கம் நிர்மாண பந்தன ஸங்காத ஸம்ஸ்தான ஸ்மஹநந ஸ்பர்ச ரஸ கந்த வர்ணாநு பூர்வ்ய அகுருல உபகாத பரகாத ஆதப உத்யோத உச்ஸ்வாஸ விஹாயோ கதய:  - கதி, ஜாதி, உடல், உடலுறுப்புகள், உடலமைபு, உடல்கட்டு, உறுப்புகளுக்கிடையே இடைவெளியில்லாமை, உடல் தோற்றம்எலும்புகளின் அமைப்பு, தொடு உணர்வு, கலைஉணர்வுமணம் உணர்தல்நிறம் அறிதல்அனுபூர்வி, எடை அளவு, தற்கொலை  எண்ணம், அடுத்தவரின் உடலுறுப்புகளால் துயரடைதல்உடல் சூடுஒளியுடைய உடல்மூச்சு விடுதல், பயணம் (நடத்தலும், பறத்தலும்);   
 ப்ரத்யேகசரீர த்ரஸ ஸுபக ஸுஸ்வரசுப சூக்ஷ்ம பர்யாப்தி  ஸ்திராதேயயசகீர்த்திஉயர் உடல்  அமைப்பு, இயங்குயிர், விருப்பு, இனிய குரல், அழகுடைமை, மிகச்சிறிய உடல், உடல் முழுமையுடைமை, நிலைப்புத்தன்மை, பளபளப்பு, புகழுடைமை  இவை பத்தும்;

 ஸேதராணி - இழிவுடைமை, தாவரங்கள், வெறுப்பு, இனிமையற்ற குரல், அழகின்மை, மிகப்பெரிய உடல், குறைவுடைய உடல் (ஊனம்), நிலையின்மை, கவர்ச்சியின்மை, இழிவுடமை;

தீர்த்தகரத்வம் தீர்த்தங்கர பூண்ணியம் ஒன்றும் சேர்த்து 42 பிரிவுகள் கொண்டது.



The name (physique-making) karmas comprise the state of existence, the class, the body, the chief and secondary parts, formation, binding (union), molecular interfusion, structure, joint, touch, taste, odour, colour, movement after death, neither heavy body falls down nor light body flies away, self-annihilation, annihilation by others, emitting warm splendour, emitting cool lustre, respiration, gait, individual body, mobile being, amiability, a melodious voice, beauty of form, minute body, complete development of the organs, firmness, lustrous body, glory and renown, and the opposites of these (commencing from individual body), and Tirthankaratva.


முக்கியமான நாற்பத்திரண்டு பிரிவுகளிலும் உட்பிரிவுகள் சேர்த்து காணும் போது 93 உடபிரிவுகள் உள்ளன.

--------------

எந்தக் கரும உதயத்தால் ஆன்மா வேறு கதிக்குச் செல்கிறதோ அது கதி நாம வினையாகும். அதில் நரக, விலங்கு, மனுஷ்ய, தேவ கதி என நான்கு  உட்பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு கதியிலும் ஏதாவது ஒரு இனத்தில் பிறக்கச் செய்ய காரணமாக இருப்பது ஜாதி நாம  வினையாகும். அதில் ஐந்து பிரிவுகள்.

ஒரு பொறி ஜாதி நாம வினை, அதுபோல் இரு பொறி, மூன்று பொறி, நான்கு பொறி, ஐந்து பொறி ஜாதி நாம வினை என உடபிரிவுகள்  உள்ளன.


எந்த வினை உதயத்தால் கதி, இனம் அதற்கேற்ற சரீர அமைப்பு ஏற்படுகிறதோ அதற்கு காரணமான வினை சரீர நாம வினை எனப்படும்.
அதில் ஐந்து வகைகள் உள்ளன.

ஒளதாரிக சரீர நாம வினைஇது மனித, விலங்கு கதிக்கு மட்டுமே அமைவது.
வைக்ரீயிக சரீர நாம வினைஇது பல உருவங்களை எடுக்கக் கூடிய உடல் அமைப்புக்கான  நாம வினை
ஆகாரக சரீர நாம வினைமுனிவர்களுக்கே தோன்றும் நுண்ணிய உடலமைப்புக்கான நாம வினை.
தேஜஸ சரீர நாம வினைஒளிர்உடல், உடல் வனப்பு அமைப்புக்கான நாம வினை.
கார்மண சரீர நாம வினைபுற்கல பரமாணுக்கள் ஒன்றாக சேர்ந்து உருவாகும் அமைப்புக்கான நாம வினையாகும்.

 --------------------
எந்த வினை உதயத்தால் அங்கம், உபஅங்கம் உண்டாகிறதோ அதற்கு அங்கோபாங்க நாம வினை என்று பெயர். இதில் மூன்றுளது:

பரு உடலில் உண்டாகும் உறுப்புகள், துணை உறுப்புகள் அமைய ஒளதாரிக  சரீர நாமவினையாகும்.
பல உருவங்களை எடுக்கக் கூடிய உறுப்புகள், துணை உறுப்புகள் அமைய வைக்ரீயிக சரீர நாம வினை.
முனிவர்களுக்கு தோன்றும் ஆஹாரக உறுப்புகள், துணை உறுப்புகளுக்கு காரணமானது ஆஹாரக சரீர  நாம வினை யாகும்.

எந்த வினை உதயத்தால் சரீர உறுப்புகள் தகுந்த அளவில், உரிய இடத்தில் அமையுமோ அதற்கு நிர்மாண நாம வினை எனப்படும். இது இருவகை:

அந்த அந்த ஜாதி நாம கர்ம உதயத்தால் கண் முதலானவை எந்த எந்த இடத்தில் உருவாகவேண்டுமோ அதற்கு காரணமானது ஸ்தான நிர்மாண வினை எனப்படும்.
அந்த அந்த ஜாதி நாம கர்ம உதயத்தால் கண் முதலானவை உரிய அளவில் அந்த அந்த இடத்தில் உருவாகவேண்டுமோ அதற்கு காரணமானது பிரமாண நிர்மாண வினை எனப்படும்.

எந்த சரீர கர்ம வினை உதயத்தால் வந்த புத்கலங்கள் ஒன்றோடு ஒன்று பந்தனமாக, சேர்ந்து பிணைப்போடு அமைய காரணமானதோ அது பந்தன நாம வினையாகும். இதில் ஐந்து வகை.

எந்த வினையின் உதயத்தால்  ஒளதாரிக உடல் செங்கல், சுண்ணாம்பு  கட்டுமானம் போல் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு சிறுசிறு இடைவெளியுடன்  உள்ளதோ அது ஒளதாரிக பந்தன நாம வினையாகும்.
அதே போல் வைக்ரியிக பந்த நாமவினை, ஆஹாரக பந்தன நாம வினை, தைஜச பந்தன நாமவினை, கார்மண பந்தன  நாமவினை என ஐந்து  உட்பிரிவுகளாகும்.

எந்த வினை உதயத்தால்  உடலில்  துளையில்லாது பிரதேசங்கள் கூடியிருக்குமோ அதற்கு சங்காத நாம வினை எனப்பெயர். இதுவும் ஐந்து வகை.

ஒளதாரிக, வைக்ரீயிக, ஆஹாரக, தைஜச, கார்மண சங்காத நாமவினை என ஐந்து உட்பிரிவுகள் உள்ளன.



எந்த வினை உதயத்தால் ஐந்து உடல்களின் உருவம் அமைகிறதோ அதற்கு ஸம்ஸ்தான நாம வினை எனப்பெயர். இது ஆறு வகைப்படும்.

உடலின் உருவம் நாபிக்கு மேலும், கீழும் சமமாக உண்டாவதற்கு காரணமான  கருமம் ஸமசதுர ஸம்ஸ்தான நாம கருமம்.
ஆலமரம் போல மேலே அகன்றும் கிழே குறுகியும் இருக்கும் உருவத்திற்கு காரணமாக கருமம் ந்யக்ரோத பரிமண்டல ஸம்ஸ்தான நாம கருமம்.
பாம்பு புற்று போல் மேல் சிறுத்தும் கீழ் பெருத்தும் இருக்கும் உருவத்திற்கு காரணமாக கருமம் ஸ்வாதி ஸம்ஸ்தான நாம கருமம்.
முதுகு கூன் விழுவதற்கு காரணமாக இருக்கும் கருமம் குப்ஜ ஸம்ஸ்தான நாம கருமம்.
உடம்பு குள்ளமாக இருப்பதற்கு காரணமாக கருமம் வாமண ஸம்ஸ்தான நாம கருமம்.
எட்டு அங்கங்களும் அதாவது கால்கள் பெரியதாகவும், கைகள் குட்டையாகவும், உடல் பெரிதாக, தலை சிறியதாக பார்ப்பதற்கு இழிவான உருவம் இருப்பதற்கு காரணமாக கருமம் ஹுண்டக ஸம்ஸ்தான நாம கருமம்.

எலும்புகள் ஒன்றாக இணைந்து இருப்பதற்கு காரணமாக கருமம் ஸம்ஹநன நாம கருமம். இதில் ஆறு வகை.

வஜ்ரம் போன்ற, பந்து கிண்ண மூட்டு போன்று பிணைத்திருத்தலுக்கு காரணமான கருமம் வஜ்ரஷபநாரா ஸம்ஹநன நாம கருமம்.
பந்துக் கிண்ணமூட்டில் பந்து இல்லாமல் கிண்ணம் போன்ற அமைப்பு இருப்பதற்கான கருமம் வஜ்ரகாராச ஸம்ஹநன நாம கருமம்.
வஜ்ரம் போன்று எலும்பில்லாமல் கீழ் பூட்டு மாத்திரம் உள்ள அமைப்பிற்கான கருமம் நாரஸ ஸம்ஹநன நாம கருமம்.
எலும்புகளின் இடையில் கீல் போன்று இருக்கும் அமைப்பிற்கான கருமம் அர்த்த நாரஸ ஸம்ஹநன நாம கருமம்.
கீல் இல்லாமல் எலும்புகள் சேர்ந்திருக்கும் அமைப்பிற்கான கருமம் கீலக ஸம்ஹநன நாம கருமம்.
எலும்புகள் உள்ளே தொட்டுக் கொண்டிருக்கும் மேலே நரம்பு மாமிசம் போன்றவற்றால் சேர்ந்திருக்கும் அமைப்பிற்கு காரணமானது அஸம்ப்ராப்தாஸ்ரூபாடிகா ஸம்ஹநன நாம கருமம்.

எந்த கரும உதயத்தால் தொடு உணர்ச்சி உண்டாகிறதோ அதற்கு ஸ்பர்ச நாம கருமம் எனப்படும். இது எட்டு உட்பிரிவுகள் கொண்டது.

ஈச்சமரத்தின் சொரசொரப்பும், கல்லைப் போன்ற கெட்டியான உடல் உண்டாவற்கு காரணமாக உள்ளது கர்கஸநாம கர்மம்.
பஞ்சைப் போன்ற மிருதுவான் உடலமைப்பிற்கு காரணமானது மிருது நாம கர்மம்
உடல் இரும்பைப்போல அமைவதற்கு காரணமானது குரு நாம கர்மம்
உடல் எடை இல்லாமல் அமைவதற்கு காரணமானது லகு நாம கர்மம்
எண்ணைக் குடம் போல வழவழப்பான உடலமைப்பிற்கு காரணமானது ஸ்நிக்த நாம கர்மம்
உலர்ந்த கட்டையைப்போன்ற உடலமைப்பிற்கு காரணமானது ருக்ஷ நாம கர்மம்
குளிர்ச்சியாக உடலமைப்பிற்கு காரணமானது சீத நாம கர்மம்
சூடான உடலமைப்பிற்கு காரணமானது உஷ்ண நாம கர்மம்

உடலில் சுவை உண்டாவதற்கு காரணமாக கர்மம் ரஸ நாம கர்மம். இது ஐந்து வகை.

கசப்பு சுவை உண்டாவதற்கு காரணமான கர்மம் திக்த ரஸ நாம கர்மம்.
உறைப்பு சுவை உண்டாவதற்கு காரணமான கர்மம் கடு ரஸ நாம கர்மம்
துவர்ப்பு சுவை உண்டாவதற்கு காரணமான கர்மம் கஷாய ரஸ நாம கர்மம்
புளிப்பு சுவை உண்டாவதற்கு காரணமான கர்மம் ஆம்ல ரஸ நாம கர்மம்
இனிப்பு சுவை உண்டாவதற்கு காரணமான கர்மம் மதுர ரஸ நாம கர்மம். 


எந்த வினை உதயத்தால் உடலில் மணம்  ஏற்படுகிறதோ அதுகந்த நாம வினைஎனப்படும். அது இரு வகை.

நறுமணம் ஏற்படுத்துவது சுகந்த நாமவினைதுர்நாற்றம் ஏற்படுவது துர்கந்த நாமவினை யாகும்.

உடலில் நிற வேறுபாடுகள் ஏற்படுகிறதோ அதற்கு வர்ண நாம வினை என்பர். இது ஐந்து வகை.

வெள்ளை நிறம் ஏற்பட சுக்ல நாம வினை, கறுப்பு நிறம் ஏற்பட கிருஷ்ண நாம வினை, நீல நாம வினை நீலா நிறத்திற்கும், ரக்த நாம வினை சிகப்புக்கும், ஹரித் நாம வினை பச்சைக்கும் காரணமாகிறது.

உயிர் ஓர் உடலைவிட்டு பிரிந்து (மரணம் நேரிட்ட போது) வேறு பிறப்பெடுக்கச் செல்லும் போது(விக்ரஹகதியில்) அவ்வுயிர் முன்பு தான் பெற்றிருந்த உடலின் உருவத்தோடு இருக்கும். மறுபிறவி எடுக்கும் வரையிலான இடைப்பட்ட நேரத்தில் பழைய உருவிலேயே இருக்கும். மறுபிறவியில் புதிய உடலில்  சேர்ந்து விடும். இதனை ஆனுபூர்வி நாம வினை எனப்பெயர். இது நான்கு வகை.

நரக கதிக்குச் செல்லும் மனித உயிரானது அதனை சென்றடையும் வரை அதே உருவில் இருக்கச் செய்ய காரணமானது நரக்கதிப்ராயோக்யாநு பூர்வ வினை யாகும்.
அதே போல் விலங்குயிர் பயணத்திற்கு காரணமானது திர்யக்கதி ப்ராயோக்யாநு பூர்வ வினை யாகும்.
மனிதஉயிர் பயணத்திற்கு காரணமானது மனுஷ்யகதி ப்ராயோக்யாநு பூர்வ வினை யாகும்.

தேவகதி பயணத்திற்கு காரணமானது தேவகதி ப்ராயோக்யாநு பூர்வ வினை யாகும்.


எந்தக் கரும உதயத்தால் நம்முடைய உடம்பு  இரும்புக்  குண்டு போல பளுவாகி கீழே கீழே போகாமலும், பஞ்சு  போல இலேசாகி மேலே, மேலே போகாமலும் இருக்க காரணமானது அகுருலகு நாம வினை.


தானே தன்னுடைய உறுப்புகளால் தமக்கு அழிவை ஏற்படுத்திக் கொள்ளவதற்குக் காரணமானது உபகாத நாமவினை யாகும். (தற்கொலை முயற்சிக்கு காரணமானது)

தன் உடல் உறுப்புகளால் பிறருக்கு துன்பம் விளைவிப்பது, பிறர் உடல் உறுப்புகளால் தனக்கு இடையூறுகளை  உண்டாக்குவதற்கு காரணமானது பரகாத நாமவினை.

எந்த கரும வினை உதயத்தால் உடம்பில் உஷணம், வெளிச்சத்தோடு கூடிய உஷணம் உண்டாகிறதோ அது ஆதாப நாம கருமம் ஆகும். (சூரியனுக்கு இருப்பது போல)

எந்த கரும வினை உதயத்தால் உடம்பில் குளிர்ச்சி, வெளிச்சத்தோடு கூடிய குளிர்ச்சி உண்டாகிறதோ அது உத்யோத நாம கருமம் ஆகும். (சந்திரனுக்கு இருப்பது போல)

எந்த கரும வினையினால் மூச்சு விட முடிகிறதோ அது உத்சுவாஸ நாம கர்மம்.

எதன் உதயத்தால் ஆகாயத்தில் செல்வதற்கும், பூமியில் நடப்பதற்கும் ஏற்ற ஆற்றல் ஏற்படுகிறதோ அதற்குவிஹாயோ கதி நாமவினைஎனப்  பெயர். இது இரண்டு வகை.
அழகாக நடப்பது, பறப்பது (அன்னப்பறவையானை) அழகாகச் செல்வது போன்றவற்றிற்கு காரணம் பிரசஸ்த விஹாயோகதி நாம கர்மம்.
கழுதைஒட்டகம் போன்று அழகின்றி செல்வதற்கு காரணம் அபிரசஸ்த விஹாயோகதி நாம கர்மம்.

எந்த கர்ம உதயத்தால் ஒரு  உடம்புக்கு ஒரு ஆன்மா உரிமையுடையதாக இருக்கின்றனவோ அது ப்ரத்யேக  சரீர நாம  வினை யாகும்.
எந்த கர்ம உதயத்தால் ஒரு  உடம்புக்கு பல ஆன்மாக்கள் உரிமையுடையதாக இருக்கின்றனவோ அது சாதாரண  சரீர நாம  வினை யாகும்.
(புளிய மரம் போன்றவற்றில் வனஸ்பதி காயிக உயிர் ஒன்றே இருக்கும். ஆனால் வாழை, முருங்கை போன்றவற்றில் அதன்  உயிருடன் பல  வனஸ்பதி உடல் பெற்ற உயிர்கள் கூடவே  அதனுடன் இருக்கும். அந்த மரம் அழியும் போது அதனுடன் அத்தனை  உயிர்களும் இறந்து விடும்.)

எந்த வினை  உதயத்தால்  இரண்டு பொறி உயிரினகளில் ஜீவன் பிறக்கிறதோ அதுதிரஸ  நாம வினைஎன்று பெயர்.

எந்த வினை  உதயத்தால்  ஒரு பொறி உயிரினகளில் ஜீவன் பிறக்கிறதோ அதுஸ்தாவர  நாம வினைஎன்று பெயர்.

எந்த வினை  உதயத்தால்  அறிமுகமில்லாதவருக்கும், உயிரினத்திற்கும் தன் மீது அன்பு உண்டாவதற்கு காரணமான வினைசுபக நாம வினையாகும். வசீகரமான தோற்றத்திற்கும் இவ்வினையே காரணமாகும்.

எந்த வினை  உதயத்தால்  நல்ல உருவம், அழகு இருந்தாலும் தன் மீது  வெறுப்பு ஏற்படுகிறதோ அதற்குதுர்பக நாம வினைஎனப்படும்.

எந்த வினை  உதயத்தால்  மனதைக்  கவரும் இனிமையான குரல்  அமைகிறதோ அதுஸுஸ்வர நாம  வினைஎனப்படும்.

எந்த வினை  உதயத்தால்   இனிமையற்ற குரல் அமைகிறதோ அதுதுஸ்வர நாம வினை யாகும்.

எந்த வினை  உதயத்தால்  அழகான தலை  போன்ற உடல் உறுப்புகள் தோன்ற காரணமாக உள்ளதோ அதுசுபநாம கர்மம்எனப்படும்.

எந்த வினை  உதயத்தால்  விகாரமான உடல் உறுப்புகள் தோன்ற காரணமாக உள்ளதோ அதுஅசுபநாம கர்மம்எனப்படும்.

எந்த வினை  உதயத்தால்  பிறருக்கு பாதகம் தராத உடம்பு கிடைக்கிறதோ அதுஸூக்ஷம சரீர நாம கர்மம்எனப்படும்.

எந்த வினை  உதயத்தால்  பிறருக்கு பாதகம் தரும் உடம்பு கிடைக்கிறதோ அதுபாதர சரீர நாம கர்மம்எனப்படும்.

எந்த வினை  உதயத்தால்  தனக்கு  தேவையான ஆற்றல் வளர்ச்சி அடையும் நிலை (பர்யாப்தி) பூர்த்தியாகுமோ அதற்கு பர்யாப்தி நாம கர்மம்எனப்படும். இதில் ஆறு வகை உண்டு.

நோகர்ம வினைகளை ஏற்றுக்கொண்டு புதிய  உடலுக்கு காரணமாகும் ரஸ பாகமாக மாற்றக்கூடிய ஆற்றலுக்கு (புறகல  பரமாணுக்களை பெறுவதற்கு) காரணமான வினைஆஹார பர்யாப்தி நாம  வினை’  யாகும்.

ஆகாரத்தின்  மூலம் உடல் வளர்ச்சி பெற காரணமானதுசரீர பர்யாப்தி நாம கர்மம்’;
அது, உறுப்புகள், முழுமை பெற உதவும் கருமம்இந்திரிய பர்யாப்தி நாம  கர்மம்ஆகும்.
மூச்சு,இரத்த ஓட்டம்  சரியாக அமைவதற்கு காரணமாக அமைவதுசுவாசோச்சுவாச பர்யாப்தி நாம கருமம்’;
பேசும் திறன் வளர்ச்சியடைய காரணமானதுபாஷா பர்யாப்தி நாம கர்மம்எனப்படும்.
பகுத்தறியும் ஆற்றலை கொண்ட மன முழுமை பெற காரணமானதுமனப் பர்யாப்தி நாம வினையாகும்.

எந்த வினையின் காரணமாக மேற்கூறிய ஆறு வளர்ச்சியும் முழுமை  அடையாமல் போகிறதோ  அதுஅபர்யாப்தி நாம வினையாகும். (பிறந்து ஒரு அந்தர் முகூர்த்தத்திலேயே இறந்து விடுதல்)

எந்த வினையின் உதயத்தால் நம்முடைய உடம்புக்குள் உள்ள ஏழு தாதுக்களும், ஏழு உபதாதுக்களும் தம் தம் இடத்தில் நிலையாக உள்ளதோ அதற்குஸ்திர நாம கர்மம்எனப்படும்.
எந்த வினையின் உதயத்தால் நம்முடைய உடம்புக்குள் உள்ள ஏழு தாதுக்களும், ஏழு உபதாதுக்களும் தம் தம் இடத்தில் நிலையாக அமையாமல் போகிறதோ அதற்குஅஸ்திர நாம கர்மம்எனப்படும்.


எந்த வினையின் உதயத்தால் உடல் பிரகாசமாக அமைகிறதோ அது ‘ஆதேய நாம வினை’ யாகும்.


எந்த வினையின் உதயத்தால் பிரகாசமான உடல் இல்லாமல் அமைகிறதோ அது ‘அநாதேய நாம வினை’ யாகும்.


எந்த வினை உதயத்தால்  உயிருக்கு உலகில் நல்ல பேரும், புகழும், குணங்களும் கிடைக்கிறதோ அதற்கு காரணமானது ‘யசஸ்கீர்த்தி நாம  கருமம்’ ஆகும்.


எந்த வினை உதயத்தால்  உயிருக்கு உலகில் தீய குணங்களும், பழி பாவங்களும் பரவுகிறதோ அதற்கு காரணமானது ‘அயசஸ்கீர்த்தி நாம  கருமம்’ ஆகும்.


 மாட்சிமை பொருந்திய அரஹந்த நிலையினை அடையக் காரணமான வினைக்கு ‘தீர்த்தங்கர நாம வினை’ எனப்படும். அதனால்  பிற ஆன்மாக்களுக்கு தருமம், மும்மணி, மோக்ஷ மார்க்கம் காட்ட முடியும். மேலும் சமவசரண மன்றம்  அமையும், பஞ்ச கல்யாணங்கள் வைபவங்கள் கிடைக்கும்.  கடைசியாக மோக்ஷமும் கிட்டும்.
-----------

அடுத்து  கோதர நாம வினையின் பிரிவுகள் பற்றி…

------------- 


கோதர நாம வினையின் பிரிவுகள்




உச்சைர்நீசைஸ்ச -  (சூ#12) = (287)


उच्चैनींचैश्च


Uchchairnichaishcha



உச்சை – உயர்ந்த கோத்திரம்; நீசைஸ்ச – தாழ்ந்த கோத்திரம் என இரண்டு பேதமாகும்.


The status determining karmas comprise of the high and the low.



எந்த குலத்தில் பிறக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கோத்ர வினை இரு வகைப்படும்.

எந்த வினை உதயத்தால்  ஒரு உயிர் உலகம் போற்றும் உயர் குலத்தில் பிறக்கிறதோ  அதற்கு ‘உச்சைர் கோத்திர வினை’ எனப்படும்.

எந்த வினை உதயத்தால்  உலகம் நிந்திக்கும் குலத்தில் ஒரு உயிர் பிறக்க காரணமாக அமைகிறதோ அது ‘நீசைர் கோத்திர  வினை’ யாகும்.

--------
கோத்திரத்தினுடைய தொடர்பு உடல்/ ரத்தம் சம்பந்தப்பட்டதாக கொள்ளாமல் நன்னடத்தை பழக்க வழக்கங்களையே கொண்டதாகும்.

தேவகதியில்  உச்ச  கோத்தரமும், மனிதனில் உச்ச, நீச கோத்திரங்களும், விலங்கு, நரக  கதியில்  நீச  கோத்திரம் மட்டுமே உள்ளது.
--------

அடுத்து அந்தராய வினையின் பிரிவுகளைப் பார்ப்போம்…. 

---------------- 


அந்தராய வினையின் பிரிவுகள்



தானலாப போகோப்போக வீர்யாணாம்  -  (சூ#13) = (288)


दानलाभोगोपभोगवीर्याणाम्


Dana-labha-bhogopabhoga-viryanam


தான – தானம்; லாப – லாபம்; போக – போகப் பொருள்கள்; உபபோக – உப்போகப் பொருள்; வீர்யாணாம் – ஆற்றல் இவை ஐந்து அந்தராய  கரும பிரிவுகள்.


The obstructive karmas are of five kinds, obstrucing the charity, gain, enjoyment of consumable things, enjoyment of non-consumable things and potency.


எந்த வினை உதயத்தால் தானம் செய்ய விரும்பினாலும் அதைச் செய்ய முடியவில்லையோ அதற்கு தானாந்த்ராய கர்மம்எனப்படும்.

எந்த வினை உதயத்தால் தொழில்  செய்தாலும் லாபம் கிடைக்க வொட்டாமல் செய்கிறதோ அதற்கு லாபாந்த்ராய கர்மம்எனப்படும்.

உணவு, தாம்பூலம் உண்பதில் தடையும், வாசனை பொருட்களை உபயோகிப்பதில் தடை ஏற்படக் காரணமான வினை ‘போகாந்தராய கர்மம்’ எனப்படும்.

வீடு, துணிமனி, தட்டு  முட்டு பொருட்களை அனுபவிப்பதில் தடை ஏற்படுகிறதோ அதற்கு காரணமான  வினை உபபோகாந்தராய கருமம்’ எனப்படும்.

எந்த வினை உதயத்தால் உடலில் உள்ள ஆற்றலை தடை செய்கிறதோ அதற்கு  காரணமான வினை ‘வீர்யாந்தராய கர்மம்’ எனப்படும்.
----------

அடுத்து ஸ்திதி  பந்தம் பற்றிக் காண்போம்…

----------------- 


ஸ்திதி பந்தம்



ஆதிதஸ்திஸ்ருணாமந்தாரயஸ்ய த்ரிம்ஸத்ஸாகரோபமகோடீகோட்ய: பராஸ்திதி:  - (சூ#14)  = (289)



आदितस्तिसृणामन्रायस्य च त्रिंशत्सागरोपमकोटी कोटयः परा स्थितः


Aditastisrnamantarayasya cha trinshat-sagaropama-kotikotyah para sthitih



ஆதித: - முதலில்  உள்ள; திஸ்ருணாம் - மூன்று கர்மங்களான ஞானாவராணம், தர்சனாவராணம், வேதனீயம் ; மற்றும்; அந்தாரயஸ்யஅந்தராய கர்மம்பராஸ்திதி: - உயர்ந்த அளவு பந்தித்திருக்கும்; விலகாமல் இருக்கக்கூடும்; த்ரிம்ஸத்ஸாகரோபமகோடீகோட்ய: - முப்பது கோடாகோடி கடற்காலம்.


The maximum duration of the knowledge obscuring, perception obscuring, feeling producing and obstructive karmas is thirty sagara kotikoti.


முதல மூன்று வினையாகிய ஞானமறைப்பு, காட்சி மறைப்பு, சுக துக்கங்களை நல்கும் வினை மற்றும் தடுப்பு வினையாகிய நான்கு வினைகளும்,

உயர் அளவான (உத்கிருஷ்ட) முப்பது கோடாகோடு கடற்காலம் ஆன்மனுடன் பிணைந்து விலகாமல் இருக்கும்.
---------------
மனம் முழுவளர்ச்சியடைந்த, தீக்காட்சியுடைய ஐம்பொறியுள்ள உயிரினங்களுக்கு  இந்த உச்ச அளவு காலத்திற்கு இந்த நான்கு வினைக்கட்டு பிணைந்து இருக்கிறது.
-------------

அடுத்து மோகனீய வினையின் உச்ச அளவு காலத்தை  பார்ப்போம்…..


--------------- 


மயக்கு வினையின் உச்ச  அளவு



ஸப்ததிர்மோஹநீயஸ்ய – (சூ#15) = (290)

सप्ततिरमोहनीयस्य

Saptatirmohaniyasya


ஸப்ததிர் – எழுபது கோடாகோடி கடற்காலம்; மோஹநீயஸ்ய – மோகனீய, மயக்கு வினையின் உச்ச பிணைப்புக் காலம்.

Seventy sagara koti-koti is the maximumduration of the deluding karma.



மோகனீய (மயக்கு) வினையின் உச்ச பந்த காலம் எழுபது கோடா கோடி கடற்காலமாகும். 

------------------------- 
கோத்ர வினையின் உச்ச பிணைப்பு காலம்.....

-----------------


கோத்ர வினையின் உச்ச பிணைப்பு காலம்


விம்சதிர்நாமகோத்ரயோ: - (சூ#16) = (291)


विंशतिर्नामगोत्रयोः


Vinshatirnama-gotrayoh



விம்சதிர் – இருபது கோடா கோடி கடற்காலம்; நாமகோத்ரயோ: - நாம, கோத்ர வினைகளின் அதிக அளவு.


Twenty sagara kotikoti is the maximum duration of the name-karma and the status-determining karma.


நாம வினை, கோத்ர  வினை இவைகளின் பிணப்பின் உச்ச காலம் இருபது கோடாகோடி கடற்காலம் ஆகும்.
------------
மனம் முழுவளர்ச்சியடைந்த, தீக்காட்சியுடைய ஐம்பொறியுள்ள உயிரினங்களுக்கு  இந்த உச்ச அளவு காலத்திற்கு இந்த நான்கு வினைக்கட்டு பிணைந்து இருக்கிறது.
----------------
அடுத்து ஆயுள் வினை பிணைப்புக் காலம் பற்றி….


---------------- 


ஆயுள் வினை பிணைப்புக் காலம்



த்ரயஸ்த்ரிம்சத்ஸாகரோபமான்யாயுஷ: - (சூ#17) = (292)

त्रयस्त्रिशत्सागरोपमाण्यायुषः

Trayastrinshatsagaropamanyayushah


த்ரயஸ்த்ரிம்சத் ஸாகரோபமானி – முப்பத்து மூன்று கடற்காலம்; ஆயுஷ – ஆயுள் வினையின் உச்ச கால அளவு.

Thirty-three sagaras is the maximum duration of life karma.


ஆயுள் வினையின் அதிக கால அளவு முப்பத்து மூன்று கடற்காலமாகும்.

முழுவளர்ச்சியடைந்த மனமுடைய தீக்காட்சியுள்ள ஐம்பொறிகளையுடைய ஜீவனுக்கு  உண்டாகிறது.
-----
அடுத்து வேதனீய கருமத்த்தின் குறைந்த கால அளவு பந்தம் பற்றி….


---------------- 


வேதநீய கருமத்தின் குறைந்த கால அளவு




அபரா த்வாதஸ முஹுர்த்தா வேதநீயஸ்ய – (சூ#18) = (293)


अपरा द्वादश मुहूर्त्ता वेदनीयस्य


Apara dvadashamuhurta vedaniyasya


அபரா – குறைந்த காலம்; த்வாதஸ முஹுர்த்தா – பன்னிரண்டு முஹுர்த்த காலம்; வேதநீயஸ்ய – வேதநீய கருமத்தின்

The minimum duration of the feeling-producing karma is twelve muhurtas (one muhurtas is equal to 48 mintues).


இன்ப துன்பங்களுக்கு காரணமான வேதனீய கருமத்தின் ஒரு ஜீவனில் நிலைத்திருக்கும் காலம் பன்னிரண்டு முஹுர்த்தமாகும்.

------------
அடுத்து நாம, கோத்ர வினைகளின் குறைந்த  கால அளவு  எவ்வளவு என்பதை….


--------------- 


நாம, கோத்ர வினைகளின் குறைந்த  கால அளவு 




நாமகோத்ரயோரஷ்டெள  - (சூ#19) = (294)


नामगौत्रयोरष्टौ


Namagotrayorashtau


நாமகோத்ரயோ – நாம, கோதர வினையின் குறைந்த பட்ச அளவு; அரஷ்டெள – எட்டு முகூர்த்த காலமாகும்.

The minimum duration of the name-karma and the status-determining karmas is eight muhurtas.



நாம், கோத்ர வினைகளின் குறைந்த பட்ச பிணப்பு காலம் எட்டு முகூர்த்தமாகும்.

-----------

அடுத்து மற்ற ஐந்து வினைகளின்……
------------- 


எஞ்சியுள்ள ஐந்து வினைகளின் குறைந்த கால அளவு




சேஷாணாமந்தர் முஹூர்த்தா – (சூ#20) = (295)


शेषाणामन्तर्मुहर्ताः


Sheshanamantarmuhurta


அசேஷாணா -  மீதமுள்ள ஐந்து வினையின் (ஜகன்ய காலம்) ; அந்தர் முஹூர்த்தா – ஒரு அந்தர் முகூர்த்தம்.


The minimum duration of the rest is one antarmuhurta (one antarmuhurta is almost anything less than one muhurta).


எஞ்சியுள்ள ஐந்து வினைகளான அறிவு மறைப்பு, காட்சி மறைப்பு, மோகனீயம், ஆயுள், அந்தராயம் ஆகியவற்றின் குறைந்த பிணைப்புக் காலம் ஒரு அந்தர் முஹுர்த்தம் ஆகும்.
--------------

அடுத்து வினைகளின் முதிர்ச்சி பற்றி……

----------------- 


அனுபவ பந்தம்.




விபாகோSனுபவ:  -  (சூ#21) = (296)


विपाकोऽनुभवः


Vipako(a)nubhavah



விபாக – கர்மத்தின் பலன், வினைகள் முதிர்ச்சி அடைவதால் உண்டாகும் உண்டாகும்  இன்ப துன்பங்களை பிரதிபலிப்பது;   அனுபவ: - அனுபவம், அனுபாக பந்தம்.


Fruition is the ripening or maturing of karmas.


விபாக என்ற சொல்  கர்மங்களின் விளைவு அல்லது  கருமங்களின் பலனை அனுபவம் பண்ணுவது அகும்.

வினை  ஊற்று ஜீவனுடைய தீவிர, மந்த/ நடுத்தர பரிணாமங்களால் ஏற்படுகிறது.  வேறுவகையில் திரவிய,  க்ஷேத்ர, கால, பவ, பாவத்தின் ஏற்றத்தாழ்வுகளால் கரும விபாக நிலை பலவாகிறது. (விபாகம்)
------------
ஓர் உயிர் தான் ஈட்டிய வினைகளுக்கு  ஏற்ப நன்மை, தீமை, இன்பம், துன்பம் முதலான பயன்களைப் பெறுகின்றது.
----------
நல்ல எண்ணத்தினால்  சுபகர்மங்களின் அனுபாகம்  அதிகமாகும். கெட்ட கர்மங்களின் அனுபாகம்  குறையும்.
அதேபோல் கெட்ட எண்ணத்தினால் அசுபகர்மங்களின் அனுபாகம் அதிகமாகும். நல்ல கர்மங்களின் அனுபாகம் குறையும்.
-----------------

அடுத்து இதன் தொடர்ச்சி....

-----------------


ஸ யதாநாம  -  (சூ#22) = (297)


स यथानाम


Sa yathanama




ஸ -  அந்த அனுபாகம்: யதாநாம  -  பெயருக்கு ஏற்ற வாறு ஏற்படுகிறது.

The nature of fruition is according to the names of the karmas.


அறிவு மறைப்பு வினை ஞானமில்லாமலும், காட்சி மறைப்பு வினை  அறிதல் ஆற்றலையும் தடுக்கிறது; சாரித்ர மோகனீயம் கருமம் ஒழுக்கத்தை தடை செய்கிறது, தர்ஸன மோகனீயம் ஸம்யக்த்வத்தை தடை செய்கிறது.  அது போல வினைகளின்  அனுபாகம் அந்தந்த வினைகளின் பெயருக்கு ஏற்ப ஏற்படுகிறது.

-----------
அடுத்து கர்மம் கழிந்தால் என்னவாகும்……

---------------

கருமம் விலகினால் என்னவாகும்



ததஸ்ச நிர்ஜரா  - (சூ#23) = (298)


ततश्च निर्जरा


Tatashcha nirjara


ததஸ்ச -  பலனைக் கொடுத்த  பிறகு ; நிர்ஜரா  - (கருமங்கள்) நீங்கி விடுகின்றன.

After fruition (enjoyment), the karmas fall off or disappear. This is called savipak nirjara. The karmas can also be made to rise and disassociate from the soul through penance and this is called avipak nirjara.


வினைகள் உயிருக்கு இன்ப துன்பங்களை கொடுத்த பிறகு உதிர்ந்து விடுகின்றன.

கட்டுண்ட சுப, அசுப வினைகள் பலனைத் தரும் காலம் வந்த போது  பலனைத்தந்து விலகுவது ‘சவிபாக நிர்ஜரைஎனப்படுகிறது. மரத்திலே பழம் பழுத்து விழுதல் போன்றது.

கட்டுண்ட வினைகள் உதயமாவதற்கு முன்பே தவம், தியானம் போன்றவற்றால் உதயத்திற்கு  கொண்டுவந்து  விலக்குவது அவிபாக நிர்ஜரை  எனப்படுகிறது. மரத்திலிருந்து பழத்தை பறித்து பழுக்க வைப்பது போன்றாது.

இவ்வாறாக இரண்டு வகைப்படும்.


--------------------- 

அடுத்து பிரதேச பந்தம் பற்றி…...

-------------------------- 


பிரதேச பந்தம் (இடக்கட்டு)



நாமப்ரத்யயா ஸர்வதோ யோகவிசேஷாத்ஸூக்ஷ்மைக்ஷேத்ராவகாஹஸ்திதா:  ஸர்வாத்மப்ரதேசேஷ்வநந்தாநந்தாப்ரதேசா:  - (சூ#24) = (299)


नामप्रत्ययाः सर्वतो योग विशेषात्सूक्ष्मैकक्षेत्रावगाह स्थिताः सर्वात्म प्रदेशोष्वनन्तान्त प्रदेशाः


Namapratyayah sarvato yogavisheshatsukshmaikakshe-travagahasthitah sarvatmapradesheshvanantananta-pradeshah


நாமப்ரத்யயா – ஞானவரணம் முதலான கர்மங்களுக்குக் காரணமான; ஸர்வதோ – எல்லா பவங்களிலும்;  யோகவிசேஷாத் – மன, வசன, காய யோக விசேஷத்தால்; ஸூக்ஷ்மைக்ஷேத்ராவகாஹஸ்திதா: - சூக்ஷ்ம்மாகவும்  ஓரிடத்தனவாகவும் நின்று;   ஸர்வாத்மப்ரதேசேஷ் – ஆன்மாவின் எல்லா பிரதேசங்களிலும்; அநந்தாநந்தாப்ரதேசா: - அனந்தானந்த காரமணவர்கனை பரமாணுக்கள் கர்ம பிரதேசமாவது (பிரதேச பந்தமாகும்)

The karmic molecules of infinite times infinite space-points always pervade in a subtle form the entire space-points of every soul in every birth. And these are absorbed by the soul because of its activity.


வினை வடிவமாக ஈர்க்கப்பட்டிருக்கின்ற புற்கல பரமாணுக்கள், அறிவு மறைப்பு முதலான எட்டு அல்லது  ஏழு விதங்களாக மாறுகை அடைகின்றன.

ஈர்ப்பானது நான்கு கதிகளிலும் இருந்து கொண்டே இருக்கின்றது.

இவ்வாறு ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணம் மன, வசன, காயம் என்னும் யோகத்தினால் ஆகும்.

யோகங்கள் சூட்சுமமாக ஏற்படுகின்றன. எந்த  இடத்தில் ஆன்மன் இருக்கிறதோ அந்த இடத்திற்கு கார்மண வர்கணையின் பரமாணுக்களே ஈர்க்கப்படுகின்றன.

அவ்வாறு ஈர்க்கப்பட்டு ஆன்ம பிரதேசத்தில் முழுவதும் பரவிக்கிடக்கும் அவற்றின் எண்ணிக்கை அனந்தானந்தமாகும்.

அந்த இடக்கட்டே பிரதேச பந்தம் எனப்படுகிறது.
------------

அடுத்து புண்ணிய கருமங்கள் பற்றி….

-------------------------


புண்ய பிரக்ருதிகள்



ஸத்வேத்யசுபாயுர்நாமகோத்ராணி புண்யம் – (சூ#25) = (300)


सद्वेद्यशुभायुर्नामगोत्राणि पुण्यम्


Sadvedya-subhayurnama-gotrani punyam



ஸத்வேத்ய – சாதா வேதநீயம்; சுபாயுர் – சுப ஆயுள்; நாம- சுப நாமம்; கோத்ராணி – சுப கோத்ரம்;  புண்யம் – புண்ய பிரக்ருதிகள்.


The good variety of feeling-producing karmas and the auspicious life, name and status-determining karmas constitute merit (punya).


காதி கருமத்தில் எல்லா பிரக்ருதிகளும் பாப பிரக்ருதிகள் ஆகும். அகாதி கருமத்தில் தான்  கொஞ்சம் புண்ய  பிரக்ருதிகள், கொஞ்சம் பாப பிரக்ருதிகள் என்று சொல்லப்படுகிறது.

வேதனீயத்தில் சாதா வேதனீயம் (இன்ப  நுகர்ச்சி);
ஆயுளில் சுப ஆயுள் (நற்கதி வாழ்க்கை, விலங்கு, மனுஷ்ய, தேவ ஆயுள்)
நாம கருமத்தில் சுப நாமகருமம் (நல்ல உடலமைப்பு) (மனுஷ்ய, தேவ, பஞ்சேந்திரிய ஜாதி முதலியன)
கோத்திரத்தில் உயர்ந்த நிலை போன்றவை புண்ய பிரக்ருதிகளாகும்.

------------
அவை 42 வகைகளாகும்.

திர்யக்காயுஷ்யம்; மனுஷ்யாயுஷ்யம்; தேவாயுஷ்யம்; மனுஷ்ய கதி;
தேவ கதி; பஞ்சேந்திரிய ஜாதி; ஒளதாரிக சரீரம்; வைக்ரீக சரீரம்;
ஆஹாரஹ  சரீரம்; தைஜஸ சரீரம்; கார்மண சரீரம்;  ஒளதாரிக அங்கோபாங்கம்;
வைக்ரீக அங்கோபாங்கம்; ஆஹாரக அங்கோபாங்கம்; ஸமசதுரஸ்ர ஸம்ஸ்தானம்; வஜ்ரவ்ருஷப நாராச ஸமனனம்;
ஸ்பர்ஸம்; ரஸம்; வர்ணம்; கந்தம்;
மனுஷ்யகத்யானுபூர்வி; தேவகத்யானுபூர்வி; அகுருலகு; பரகாத;
உச்ச்வாஸ; ஆதய; உத்யோத; பிரஸ்த விஹாயோகதி;
த்ரஸ; பாதர; பர்யாப்தி; ப்ரத்யேக சரீரம்; ஸ்திர;
சுப; ஸுபக; ஸுஸ்வர; ஆதேய; யஸஸ்கீர்த்தி;
நிர்மாணம்; திர்த்தங்கர நாமம்; உச்சைர்கோத்ரம்; ஸாதாவேதனீயம்.

--------------
எந்த பரிணாமங்களில் எவற்றில் அதிக அனுபாகம் (பயன் தரும் ஆற்றல்) பிரக்ருதிகளில் கிடைக்கிறதோ அவை புண்ய பிரக்ருதிகள் ஆகும்.
---------

அடுத்து பாப பிரக்ருதிகள் பற்றி…..
---------- 


பாப பிரக்ருதிகள்



அதோSந்யத்பாபம் – (சூ#26) = (301)


अतोऽन्यत्पापम्


Ato(a)nyatpapam


அதபுண்ய பிரக்ருதிகள்; அந்யத்மற்ற பிரக்ருதிகள் எல்லாம்பாபம்பாப பிரக்ருதிகள் ஆகும்.

The remaining varieties of karma constitute demerit.


முன் சூத்திரத்தில் கூறப்பட்ட புண்ய பரக்ருதிகள் தவிர மற்றவை எல்லாம் பாப பிரக்ருதிகள்(வினைகள்) ஆகும்.

அவை எண்பத்திரண்டாக உள்ளன.

அறிவு மறைப்பு – 5;
காட்சி மறைப்பு – 9
மயக்கு வினை (மோகனீயம்) – 26
அந்தராயம் (இடை தடுப்பு) – 5
நரக  கதி – 1
விலங்கு கதி – 1
ஜாதி நாம வினை – 4
ஸம்ஸ்தாநம் – 5
ஸமஹநநம் – 5
அப்ரசஸ்த வர்ணம் -1
கந்தம் – 1
ரஸம் – 1
ஸ்பர்சம் – 1
நரக கத்யானுபூர்வி – 1
திர்யக் கத்யாநுபூர்வி - 1
உபகாதம் – 1
விஹாயோ கதி – 1
ஸ்தாவரம் – 1
சூட்சும – 1
அபர்யாப்தி – 1
ஸாதாரண சரீரம் – 1
அசுப – 1
துர்பகம் – 1
அஸ்திர – 1
துஸ்ஸ்வர – 1
அநாதேய – 1
அயசஸ்கீர்த்தி – 1
அசாதா வேதனீயம் – 1
நரகாயுள் – 1
நீஸ கோத்திரம் – 1

ஆக இந்த 82 ம் பாப பிரக்ருதிகள் ஆகும்.

இத்துடன் எட்டாவது அத்தியாயம் முற்றும்.

----------------
மங்களாஷ்டகம்:

கோடி சதம் த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
 அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம் ஸவ்வம்
பணமாமி பக்தி ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா

அக்ஷரமாத்ரபத ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே

தஸாத்த்யாயே பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:

ததத்வார்த்த ஸுத்ர கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்

ஜம் ஸக்கயி தம் கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ பாவயி அஜராமரம் ட்டாணம்

தவயரணம் வயதரணம் ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்

அந்தே ஸமாஹிமரணம் சஉவிஹ துக்கம் ணிவாரேஇ

--------------------------

No comments:

Post a Comment