Friday, January 7, 2022

Vilangadupakkam - விளாங்காடுபாக்கம்.



Shri Mahaveerasamy Jain temple 
ஸ்ரீமாகாவீரஸ்வாமி ஜிநாலயம்
 திகம்பர ஜினாலயம்.




இன்று விளாங்காடுபாக்கம், சென்னை ஜினாலயத்திற்கு சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.  அழகிய சிறிய ஆலயம், சரியான அளவில் சமணஆலய அம்சங்கள் அனைத்தும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.






மூலவர் ; பழமையான கற்சிலையில் எண் சிறப்புகளுடன் ஸ்ரீமாகாவீரர் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் அமைப்பில் மூன்று சிங்கங்கள் முன்புறம் தெரிவதால் ஒன்றை லாஞ்சனமாக கருதியுள்ளனர். ஆனால் சிங்காதனத்தின் முன்புறத் தோற்றத்தில் மூன்று கால்களே தோன்றும். அதனால் அரஹந்த பரமஷ்யாக காட்டியளிக்கிறது. அவ்வகையில் நோக்குங்கால் 600 ஆண்டுகளைக் கடந்திருக்கும் சிலைவடிவமெனக் கொள்ளலாம்.







அடுத்து ஒரு அரஹந்தர் சிலை (லாஞ்சன குறியின்றி) முனிவரவர் கைவண்ணத்தால் உருவாகிய அடையாளங்களுடன் காண்கிறது. முன்பகுதியும், கழுத்து பின்பகுதி முதுகு போன்றவை திருத்தம் செய்யாமல் இருந்தால் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன் தவமியற்றும் புனிதர்களால் வடிக்கப்பட்ட சிலையாக கொள்ளலாம்.



மூலவருக்கு தின தீப ஆரதி வழங்குபவர்,  ஜினாலய நிர்மாண  பரம்பரை சார்ந்த திரு. T. ஸ்ரீதர், (sir) அறங்காவலர் கமிட்டி.
-----------


2 comments:

  1. அறிந்திராத தலம் பற்றி அறிந்தேன். நன்றி.

    ReplyDelete