Sunday, November 6, 2022

vedal Jain cave school - வெடால் சமணப்பள்ளி


VEDAL

# 07-07-2022 Sunday


Vedal – An Exclusive woman Samanarpalli (Jain University) having 400 women Lecturers (Ariyankanai, Mathajis) 600 students were stayed at the site during medieval period.

Vedal was called as Vidal alias Madevi Aarandhimangalam situated

Vedal, near pudheri Tamil Nadu 604501. In the coordination of (12.379131, 79.469542)

 







It is mention the cavern as VidalPalli ie the then name of that locon.

This is an ancient Jain Women Universiy in the Medieval Period (885 AD) headed by Kanaga Veera Kurathi, Ariyika (Jain Female saint) disciple and student of Gunakeerthi Pattarar of Main sangh head, followed by 500 students. There was a conflict between another Section of 400 Ariyikas during that period. But was supported and guarded by the habitant of the then period.

 

Nearby Seeyamangalam jain covern and Panchanarpadi Jain covern of Thondur hill rich heritage centres lies near to the place.

 

No Sign board or detail display were noticed around the site. One of Vedal youth Mr.Santhosh helping to find the heritage and guide us while searching long time. Convey my heartful thanks to him through the media.



வேடல் பெண்கள் நிறைந்த சமணப்பள்ளி…

 

முற்காலத்தில் கல்வி சில வகுப்பினருக்கே அளிக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் சமணர்கள், பெளத்தர் வாழ்வியலை மேற்கொண்ட துறவியர் அனைத்து வகுப்பினருக்கும் கல்வியை அளித்து வந்தது என்பது வரலாறு கூறும் உண்மை.

 

சமண, பௌத்த மதங்கள் கல்வியை கற்றுத்தர ஆரம்பித்ததைப் பார்த்தே மற்ற மதங்களும் கல்வியைப் போதிக்கும் பணியை பின்னர் மேற்கொள்ள ஆரம்பித்தன.

 

அப்படியே கல்வி அளித்தாலும் ஆண்களுக்கே கல்வி முக்கியத்துவம் அளித்து வந்த பாலுயர்வு தாழ்வினையும் நீக்கி இருபாலருக்குமான சமச்சீர் கல்வியை துவக்கிய பெருமை சமணப் பள்ளியான வேடல் எனும் வெடால் என்ற பெண் சர்வகலாசாலையாய் அக்காலத்தில் விளங்கிய ஆண்டார் மடம் என்ற இந்த வெடால் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.





பள்ளி என்ற தமிழ் பெயர் கல்விக்கூடங்களுக்கு அளித்ததது இந்த சமணப்பள்ளிகளே என்றால் மிகையாகாது.  அவ்வாறான வகுப்புபேதமில்லாத பாடம் நடத்தப்ப்ட்ட இடங்கள் குகைகளாக இருந்தன. அங்கு இரவில் ஆசிரியர்களான சமணத்துறவியர் படுத்துறங்குவதும், பகலில் பிள்ளைகளுக்கு பாடமும், மருத்துவமும் செய்து வந்தனர் என்பதையும் முற்காலக் கல்வெட்டுகளே சான்றுகளை வழங்கிகின்றன.

 

அக்குகைக் கல்விக்கூடங்கள் இரவில் பள்ளி கொள்ளும் இடமாகவும், பகலில் கல்வியும் அளித்ததாதால் அதனை சமணப் பள்ளிகள் என்றே கல்வெட்டுகள் உரைக்கின்றன.

அதையே முஸ்லீம் தொழுகையும், பாடமும் நடக்கும் கூடங்களும் அந்த சமணர் அளித்த பள்ளி என்ற தமிழ்பெயரையே சூட்டி இப்போதும் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 






தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி மாநகரில் உள்ள மலைக்கோட்டைசிரா என்ற சமண முனிவர் வாழ்ந்த பள்ளிதான்அவருடைய பெயராலேயே திருச்சிராப்பள்ளி என்று அந்த ஊர் அழைக்கப்படுகிறதுஅதேபோல தென் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமணக் குன்றான கழுகு மலையில் பயிற்றுவித்த சமண ஆசிரியர்கள் பற்றியும்பயின்ற மாணவர்கள் பற்றியும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

 அனைவருக்கும் கல்வி

வந்தவாசி அருகேயுள்ள விடால் எனும் ஊரில் (தற்போது வேடல் எனப்படும் பகுதியில் உள்ள குன்றில் ஆண்டார் மடம்இருந்த சமணப் பள்ளியில் பெண் துறவிகளும் பெண் குழந்தைகளுக்கு கல்வி போதித்துள்ளனர்.

இப்படி மலைக்குன்றுகளில் செயல்பட்டுவந்த சமணப் பள்ளிகள்பிற்காலத்தில் சமண மதம் செல்வாக்கு இழந்ததால் மறைந்து போயினஅதேநேரம் ஓரளவுக்குப் பரவலான கல்வியை அளிக்கும் பணியைத் திண்ணைப் பள்ளிகள் பிற்காலத்தில் மேற்கொண்டன.

வீட்டுப் பள்ளிகள்

திண்ணைப் பள்ளிகளுக்கு தினசரி நேர வரையறை கிடையாதுஆண்டின் எந்தக் காலத்திலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்ஆண் மாணவர்களே இந்தப் பள்ளிகளில் படித்தார்கள்.


--------------------------



வேடல் பெண் பள்ளி (CE. 781)

 (விடால்தென்னாற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய சமண குகைப்பள்ளிஇது பெண்களுக்கான கல்விநிலையமாக இருந்துள்ளது. (விளாப்பாக்கம் பெண் பள்ளி அருகே உள்ள இன்னொரு சமணப் பெண்பள்ளி)

 

வந்தவாசியிலிருந்து ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தென்மேற்கில் தென்னார்க்காடு மாவட்டத்தின் வட எல்லையை ஒட்டியமைந்துள்ள சிற்றூர் வேடல் ஆகும்இவ்வூரை அடுத்துள்ள மலையில் இரண்டு குகைகள் உள்ளனஇவை CE. 8-ஆம் நூற்றாண்டில் சமணப் பள்ளியாய்த் திகழ்ந்திருக்கின்றன.

 

 

குகைகள்

இக்குகையின் வாயில் போல பிற்காலத்தில் எழுப்பப்பட்ட இரண்டு மண்டபங்களும் காணப்படுகின்றன முகப்புத்தூண்களுடன் காணப்படுகின்ற்ன. இங்கு மருந்துக் குழியும் காணப்படுகிறது. அதனால் ஓளஷத தானம் எனும் மருத்துவச் சேவையும் சமணத்துறவியர் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 இவற்றை 'ஆண்டார் மடம்’ என அழைப்பது வழக்கமாகும்இங்குள்ள குகைகளில் கற்படுக்கைகளோ அல்லது சமண சமயச் சிற்பங்களோ உருவாக்கப்படவில்லை.

 

 

கல்வெட்டுகள்

குகைக்கு எதிர்புறத்திலுள்ள பாறையொன்றில் பல்லவசோழ மன்னர்களது சாசனங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்பிற்காலத்தில் ஏற்பட்ட அரிமானத்தினால் இவற்றின் பெரும்பகுதி அழிந்துள்ளது. அதனால்  இத்தலத்தின் முழுமையான வரலாற்றினை அறியமுடியாமற் உள்ளது.

 

இரண்டாம் நந்திவர்ம பல்லவனது ஆட்சியின் போது (CE.781) இங்குள்ள குகைப்பாழி விடால் பள்ளி என அழைக்கப்பட்டிருக்கிறதுகாலப்போக்கில் வேடல் என மாற்றம் பெற்றிருக்கிறது.

 

1908ஆம் ஆண்டு இந்திய கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டதிலிருந்து தெரிவது யாதெனின்.

 

"ஸ்வஸ்திஸ்ரீ கோவிராச கேசரிபர்மர்க்கு யாண்டு பதினாலாவது சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆரந்திமங்கல முடைய குணகீர்த்தி படாரர் வழி மாணாக்கியார் கனகவீரக்குரத்தியாரையும் மவர்வழி மாணாக்கியாரையும் தாபாஸிகள் நானூற்றுவர்க்கும் கொள்ளாதமையில் இக்கோயிற் பிள்ளைகள் ஐந்நூற்றுவர்க்கு வழிஇலாரும் காத்தூட்டு வோமானோம் எங்களுடைய ஸ்வரஷைஇது இரஷிப் பார் அடிநிலைஎங்கள் தலைமேலென மாதேவி ஆரந்தி மங்கலமுடைய கனகவீரக் குறத்தியார்த் தங்க..ர் மகளா தனமையில்... முக்கியருமிது காப்பார் அவர்கள் ஸ்வரஷை இதனை இரஷிப்பாரடி நிலை என் தலை மேலென...டறுங் காழாறும் முதலாகிய மாதேவி ஆராந்தி மங்கலமுடைய கனகவீரக் குரத்தியார் தங்கள் மகளாராதினமையில் இது வெல்லாந் தங்கள் காவில் இதனை தீங்கு நினைத்தாற் கங்கையிடைக் குமரியிடை எழுநூற்றுக் காதமும் செய்த பாவங் கொள்வார்காவலனுக்கு பிழைத்தாராவார்என்பது இக்கல்வெட்டு எழுத்துகள் நமக்கு தெரிவிக்கும் செய்திகள்.

 

"கனகவீரக் குறத்தி வழி வந்த ஐநூறு மாணவருக்கும்இப்பள்ளியுடன் தொடர்பு கொண்ட நானூறு பெண் துறவியருக்கும் இந்த குகைப்பள்ளி போதிய இடவசதி உடையதாக இல்லாமல் இருந்துள்ளது.

அவர்களுக்கு உணவளிக்கிற இடவசதி இல்லாமல் இருந்ததால்விடால் ஊர்மக்கள் அவர்களுக்கு உணவளித்துக் காப்பதற்கு முன்வந்தனர் என்பது இக்கல்வெட்டு மூலம் நமக்கு தெரியவருகிறது.

 

பெண் சர்வகலா சாலை

இங்கு பெண் துறவியருக்கெனத் தனியாக குகைப்பள்ளி இருந்திருக்கிறதுஇதனைச் சோழ மன்னனாகிய முதலாவது ஆதித்தனது ஆட்சியின் போது (CE 885) பொறிக்கப்பட்டுள்ள சாசனம் தெரிவிக்கிறது.

இந்தப் பிரத்யேகப் பெண் பள்ளியின் உருவாக்கம்,  நிர்வாகம்நடைபெற்ற விதம் போன்றவை பற்றிய செய்திகள் எவையும் தெளிவாக கிடைக்கவில்லை.

 

 மாறாக CE885-  ஆம் ஆண்டில் இங்கிருந்த கனக வீரகுரத்தியாரும்அவரைப் பின்பற்றிய 500 மாணாக்கியருக்கும்மற்றொரு பிரிவினராகிய 400 பெண் துறவியருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் பிணக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.

அச்சமயத்தில் மாதேவி ஆரந்தி மங்கலமாகிய விடாலைச் சார்ந்த மக்கள் குணகீர்த்தி பட்டாரர் என்னும் துறவியரின் மாணவியாக வீளங்கிய அந்த கனக வீரகுரத்தியையும்அவரது மாணாக்கியரையும் பாதுகாத்து உணவளிக்க வழிவகை செய்திருக்கின்றனர்இந்த கனகவீரகுரத்தி எனவும் அறிய வருகிறது.

 

வேடலிலுள்ள பெண் பள்ளியில் பெண் துறவியரிடையே என்ன காரணத்தினால் பிணக்கு ஏற்பட்டதென்றும்அது எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டதென்றும் அறிவதற்கில்லைஇங்கு பெண் துறவியருக்கென பொ.யு. 8-ஆம் நூற்றாண்டிலேயே பள்ளி இருந்தது உறுதியாகிறதுஇப்பள்ளியின் நிர்வாகத்தினை மிக்கவாறும் கனகவீரகுரத்தியார் கண்காணித்து வந்திருக்க வேண்டும்இதனுடன் 400 பெண் துறவியரும், 500 மாணாக்கியரும் தொடர்புடையவராகத் திகழ்ந்திருப்பதை நோக்கும் போதுஇது மிகப்பெரிய சமயக்கல்வி அமைப்பாகத் திகழ்ந்திருக்க வேண்டும் ஆனால் இந்த பெரும் பள்ளியின் முழுமையான வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை.

 

கனகவீரகுரத்தியாரின் குருவாகிய குணகீர்த்தி வேடல் ஊரைச் சார்ந்தவர் என்பதனைத் தவிர அவரைப் பற்றி செய்திகள் ஏதும் இல்லைபண்டைக் காலத்தில் இத்தலத்திற்கு விடால் என்றும் மாதேவி ஆரந்தி மங்கலம் என்றும் இரு பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இச்செய்திகள்  இங்குள்ள வேறொரு சாசனமும் குறிப்பிடுகிறது.

 

தொண்டை மண்டலத்தில் வேடலிலும்விளாப்பாக்கத்திலும் பெண் பள்ளிகள் இருந்திருக்கின்றனதிருப்பான் மலையின் ஒரு பகுதியாகிய விளாப்பாக்கத்தில் அரிஷ்டநேமி பட்டாரரின் மாணாக்கியாகிய பட்டினிக்குரத்திகள் கிணறு ஒன்று வெட்ட ஏற்பாடு செய்து அதனையும்அதனுடன் கூடிய நிலத்தினையும் பெண் பள்ளிக்கு வழங்கியிருக்கிறார்கள்.

 

ஆர்யாங்கனைகள் எனவும் குரத்தியர் எனவும் அழைக்கப்பட்டு வந்த பெண் துறவியரும் அருகன் அருள் நெறிபோற்றியும்சமயக் கருத்துகளைப் போதித்தும் பெருந்தொண்டாற்றியிருக்கின்றனர் என்பதனை இச் செய்திகள் காட்டுகின்றன (.ஏகாம்பரநாதன் அவர்களின் தொண்டை நாட்டுச் சமணத்தலங்கள் நூலிலிருந்து… கிடைக்கப்பட்ட செய்திகள்)



VIDEOS -  காணொளிகள்


No comments:

Post a Comment