Monday, November 7, 2022

தொண்டூர் மலை..பஞ்சனார்படி --- Thondur hill Panchanar padi.

 

பஞ்சனார்படி -  Panchanar padi





Panchanar padi

Jain sthal, Tamilnadu


08-8-2022


#Panchanar Padi – Thondur Athittanam

Tamil Nadu


#Coordination of   (12.350455, 79.469661)





• Twenty two Thondur village lies about 22 kms towards north and near to Vedal, the first Jain Women Universiy cave centre.

• Very ancient stone incription found belongs to BC 1 or before.

• Three Jain sadhus cave beds - Samanar padukkai - of south headed north direction –are found in the Northern side of the Panchanar padi hill section of thondur hill range.

 

• A stone inscription also engraved on the north slope of the bed boulder.

• Another Five Jain Sadhus cave beds - samanar padukkai - also found in the eastern side of East west transverse.

• A Shri 1008 Parswa Jinar bas-relief also encraved facing east direction.

• The stone inscription have the message of ‘Aramosi of Aakasanoor village to made the stone beds to obey the order of Jain Sadhu Sengasiban’.

• The same name of the saint also present in the trichy inscription and Pugalur inscription too.





• Near by Agalur may be interpreted as Aakasanoor while the engravement period.

• So we confirmed, Before the BC 1 Jain families habitation were florished here. Now few Jains are living near Thondur village having a beautiful Jain Temple.

By the by the site is very nice mountain landcape. Easy to reach the sthal by paved roads 300 meters having stairs to raise upto 40 feet height.




இவ்வூர் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான எல்லையில் அமைந்துள்ளது.


செஞ்சி-திண்டிவனம் சாலையிலுள்ள நாட்டார்மங்கலம் நிறுத்தத்திலிருந்து வடக்கே 10 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 34 கி.மீ. தொலைவிலும், விழுப்புரம் மாவட்டத் தலைமையகத்திலிருந்து வடக்கு நோக்கி 51 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

 

பாண்டிய நாட்டிலும் பின்னர் தொண்டை நாட்டிலும் சமணம் பரவியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சுற்றி அவலூர்ப்பேட்டை, ஆனத்தூர், ஊரணித்தாங்கல், சே. புதூர், தளவானூர், திருநாதர்குன்று, தொண்டூர், பறையன்பட்டு, மேல்கூடலூர், நெகனூர்பட்டி ஆகிய ஊர்களை ஒட்டி அமைந்துள்ள குன்றுகளில் சமணத் துறவிகள் வாழ்ந்ததற்குச் சான்றாகப் பல இயற்கைக் குகைத்தளங்களையும், இவர்கள் தங்குவதற்காக வெட்டப்பட்ட கற்படுக்கைகளையும் காணலாம். 

திருக்கோவிலூரைச் சுற்றி ஜம்பை, சந்தைப்பேட்டை, மேல்கூடலூர் ஆகிய ஊர்களுக்கு அருகேயுள்ள மலைக் குன்றுகளிலும் சமணர்களின் குகைத்தளங்களையும் கற்படுக்கைகளையும் காணலாம். அகலூர், ஆலகிராமம், எய்யில், கண்ணாலம், கல்லக்குளத்தூர், கள்ளப்புலியூர், கீழ்வைலாமூர், கோழியனூர், மேல் சித்தாமூர் சமண மடம், திருநறுங்குன்றம், தையனூர், நெடுமொழியனூர், பெருமந்தூர், பேரணி, விழுக்கம், வீடூர், ஆகிய ஊர்களில் பழமை வாய்ந்த சமணக் கோவில்கள் உள்ளன.

 







தொண்டூர் கிராமம்


இயற்கை எழில் கொஞ்சும் இத்தொண்டூர் கிராமத்தில் மலை அடிவாரத்தில் 400 ஆண்டு பழமையான ஒரு சமணர்க்கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி சில சமணக் குடும்பங்கள் தற்போதும் வாழ்ந்து வருகின்றார்கள்.

மலைக்குன்று பகுதியில் சமண முனிவர்கள் தங்கி அறப்பள்ளிகள் நடத்திய வரலாற்று சான்றுகள் ஏராளமாக உள்ளன. கிராமத்தின் அருகே ஏரியை அடுத்து ஓலக்கூர் பசுமலை எதிரில் அமைந்துள்ள பஞ்சனாப்பாடி/ பஞ்சனார்படி………….  

என்று அழைக்கப்படும் இம்மலைக்குன்றில் இயற்கையான சமணர் குகைத் தளம் காணப்படுகிறது. மூன்று அடுக்கு தளங்களாக வரலாற்றுச் சின்னம் உள்ளது. குகைத்தளத்திற்குச் செல்வதற்காக பாறையில் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. சமண முனிவர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் இங்கு காணக்கிடைக்கின்றன.

2300 ஆண்டுகள் தொன்மையான கல்வெட்டு உள்ள ஒரு சமணத் தடயம் ஆகும்.






இங்குள்ள குகைத்தளத்தில் வழவழப்பான மூன்று கற்படுக்கைகள் தலையணைகளுடன் காணப்படுகின்றன. இவை சமண துறவிகள் தங்குவதற்காக பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

கீழ் தளத்தில் சமண முனிவர்களின் மூன்று கற்படுக்கைகள் மற்றும் மலைக்குன்றின் பாறையில் ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் புடைப்புச் சிற்பமும் கம்பீரமாக காட்சி யளிக்கிறது.


இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


அங்கிருந்து தென்பகுதிக்குச் சென்றால் மேலும் சமண முனிவர்களின் ஐந்து கற்படுக்கைகள் காணப்படுகின்றன. அங்கிருந்து படிக்கட்டின் வழியாக சென்றால் மேலும் இரண்டு படுக்கைகள் தென்படுகின்றன.




இயற்கை எழில் கொஞ்சும் இம்மலையில் வெயிலின் காய்ச்சலும் மழையின் தாக்கமும் தெரியாமல் எக்காலத்திலும் நல்ல காற்றோட்டத்துடனும் காணப்படுகிறது. மலைக்குன்றிற்கு கீழ் பகுதியிலிருந்து மேலே வரும் பாதையில் கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு கல்வெட்டும் காணப்படுகின்றது. இதுவே தமிழகத்தின் மிகத்தொன்மையான பிராமி கல்வெட்டாகும்.





இதில் இளங்காயிபன் ஏவ அகழூரறம் மோசி செய்த அதிட்டானம் என்ற குறிப்பு உள்ளது. தொண்டூர் அருகே உள்ள அகலூரில் வாழ்ந்த அறம் மோசி என்பவர் இளங்காயிபன் என்பவரின் கட்டளையை ஏற்று சமணத்துறவிகளுக்கு கற்படுக்கைகள் செய்தததை இந்த கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர்.


மிகத்தொன்மையான 2300 ஆண்டுகளைக் கடந்த இந்த கல்வெட்டு மற்றும் சமணப்படுக்கைகளை பாதுகாக்க மாநில, மத்திய அரசின் தொல்லியல் பாதுகாப்பினர் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. மிகவும் அரிய இதுபோன்ற தமிழ் பிராமி எழுத்துக்களே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கித்தந்திருக்கும் என்றால் மிகையாகாது.


இங்குள்ள கல்வெட்டுகள் விரைவில் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தொல்லியல் சின்னமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.


இக்கல்வெட்டு குறித்து தமிழ் வளர்ச்சி துறையினர் அறிவிப்பு பலகையை நிறுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அடிக்கடி பள்ளிக் கல்லூரி மாணவர்களை இங்கு அழைத்து வந்து தமிழின் தொன்மையைப் பற்றி வகுப்புகள் எடுத்தால் தமிழின்  தொன்மையும், மரபும் பாதுகாக்கப்படும். அங்குள்ள மக்களுக்கு அவ்வமயம் விழுப்புணர்வு கூட்டத்தையும்  நடத்துவது சாலச் சிறந்தது.



மேலும் செஞ்சி, திண்டிவனம் பஸ் நிலையத்தில் வரைபட அறிவிப்பு பலகையும், தொண்டூர் பஸ் நிறுத்தத்திலிருந்து செல்ல திசை காட்டி பலகைகளையும் அமைத்தால் சின்னத்தை தேடிவரும் ஆர்வலர்களுக்கு ஸ்தலத்தை அடைய வசதியாக இருக்கும்.


VIDEOS  -  காணொளிகள்


2 comments:

  1. இதுவரை நான் அறிந்திராத இடம். நேரில் சென்ற உணர்வு.

    ReplyDelete