நவகிரஹ தீர்த்தங்கரர்கள் மற்றும் ஜப, பிரத்யேக, சாந்தி மந்திரங்கள்


நவகிரஹ தீர்த்தங்கரர்கள்

மற்றும் ஜப, பிரத்யேக, சாந்தி மந்திரங்கள்









நவகிரஹ லோக ஜினாலயங்களில் விற்றிருக்கும் பகவானை 108 நாமாவளியால் துதிக்கும் ஸ்தோத்தரங்கள்


--------------------------------- 

இயற்கை ஜினாலயங்கள்


நந்தீஸ்வர தீபத்தில் உள்ள ஜினாலயங்கள் நாம் அறிந்ததே. அதேபோல்…

வியந்தர தேவர்கள் வாழும் உலகில் உள்ள விமானங்களில் எண்வகை வியந்தர தேவர்களால்  வணங்கப்படுவனவாயும், மூவுலகிலும் உள்ள தேவர்களின் கண்களையும், உள்ளங்களையும் கவரக் கூடிய அழகை உடையனவாயும், மூவுலகிலும் உள்ள உயிர்களுக்கும் இறைவரான ஜினேந்திரர்களுடைய  இயற்கை ஜிநாலயங்கள் எண்ணிலடங்காதனவாம்.

அவ்வண்ணமே ஜோதிஷ்கர் உலகிலுள்ள விமானங்களில் அமைந்துள்ளனவாய் , பொன்னொளி வீசும் மேனியராகிய தேவர்களால் , தலை தாழ்த்தி வணங்கப்படுகின்றனவாய் விளங்கும் ஜினாலயங்களும் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டனவேயாம்.


       இவைகளின்றி சௌதர்ம கல்பம்,ஈசான கற்பம் தொடங்கி நவக்கிரைவேயகம்,நவாணுதிசை, பஞ்சாணுத்தரம்  ஈறாகவுள்ள அகமிந்திரர் வாழும் உலகங்களிலுள்ள இயற்கை ஜிநாலயங்களின் எண்ணிக்கை (84,97,023) எண்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து இருபத்து மூன்று என அறிஞர்கள் கூறியுள்ளனர்.


-----------

சூரிய, சந்திர, நட்சத்திரங்க தாரகைகள், கிரகங்கள் போன்ற வற்றை ஜோதிஷ்க தேவர்கள் என்கிறோம். இவர்களுடைய விமானங்கள் மேருமலையை சுற்றி வந்தவண்ணம் உள்ளன. இவர்களது சுற்றுப்பாதையே இரவு, பகல், நாள், மாதம் என பலவகை காலங்களாக வகுக்கப்பட்டுள்ளன.


இவர்களது விமானங்களில் அமைந்து அக்கிருத்திம எனும் இயற்கை ஜினாலயங்கள் உள்ளன. நமது பூமிக்கு அருகில்  உள்ளதான ஒன்பது கிரஹங்களில் உள்ள ரத்தின மயமான ஜின பிம்பங்களைக் கொண்ட பொன்மயமான ஜிநாயங்கள் உள்ளன. அவற்றில் ஜினர்களான பத்மப்ரபர், சந்திரப்ரபர் முதலான ஒன்பது ஜினாலயங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. 


இக்கிரஹங்களின் தன்மை, வலிமை மிக்க வீச்சு இவற்றை ஆராய்ந்து ஜோதிடம், ஆருடம் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக துல்லியமாக எடுத்தியம்பி வருகின்றன. அவற்றில் ஜினேந்திரமாலை எனும் பழம் பெரும் நூலும் தற்காலத்திலும் புழக்கத்தில் உள்ளது.


அந்த கிரக விமானங்களில் வணங்கப்படும் ஜினர்களை வழிபடுவதால் நமக்கு அக்கிரஹங்களினால் வரும் தீமைகள் குறைந்து நன்மைகள் ஏற்படுவதாக தொன்று தொட்டு வணங்கி வருகின்றனர்.


அவ்வகையில் நவக்கிரஹ தீர்த்தங்கரர்களுக்கான 108 நாமாவளியும், நவக்கிரஹ மந்திரங்களையும் காண்போம். நவக்கிரஹ சாந்தி செய்ய மிகவும் உபயோகமானதாகவும் அமைந்துள்ளது.





கிளிக் செய்யவும். 
Click for…




























No comments:

Post a Comment