ஆச்சார்ய ஸ்ரீ நிர்மல் சாகர் முனி மகராஜ்
ஆச்சார்ய நிர்மல்
சாகர முனி மகராஜ் அவர்கள் உத்திரப் பிரதேசத்தை சார்ந்த பைசியாபாத் அருகிலுள்ள பஹாதிபூர்
என்ற கிராமத்தில் 1946 ல் , தந்தை ஸ்ரீ சேத் பிகாரிலால், தாய் கோமாவதி என்பவருக்கு
மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் பிறந்துள்ளார்கள். அவரது இயற்பெயர் ஸ்ரீ ரமேஷ் சந்திரா
வாகும்.
கிர்நாரில் ஆச்சார்ய
ஸ்ரீ சீமந்தசாகர் மகராஜிடம் சுல்லக் தீக்ஷை 1945 வைகாசி மாதம் ஏற்றுள்ளார்.
பின் 1967ம்
ஆண்டு ஆக்ராவில் ஆடிமாதம் சுக்ல பஞ்சமி தினத்தில் ஆச்சார்ய ஸ்ரீ விமல் சாகர் மகராஜிடம் முனி தீக்ஷை ஏற்றுள்ளார். (அதனால் இவ்வாண்டு அவருக்கு
50 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கும். )
பின்னர் 13
April 1973 ல் ஆச்சார்ய பதம் எட்டியுள்ளார்கள்.
தற்போது ஊர்ஜயந்தகிரி
(கிர்நார்) மலை யடிவார்த்தில் ஆசிரம் அமைத்து தங்கியுள்ளார்கள்.
ஆச்சார்ய ஸ்ரீ
நிர்மல் சாகர் ஜி மகராஜ் 1975 ல் தமிழகம் விஜயம்
செய்தார்கள் அப்போது சமண சமயம் பற்றி தமிழ் நாட்டிற்கே விரிவாக தெரியவந்தது. ஒரு நிர்வாண
முனிவர் தமிழகம் வருவது நீண்ட காலத்திற்கு பின் அதுவே யாகும். அதனால் அனைத்து ஊடகங்களும்
அவர் வருகையை விரிவான செய்திகளுடன் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு
முன் வந்த ஸ்ரீ துளசி ஆச்சார்யருக்கு (வஸ்திரம் தரித்தவர்) பின் தமிழகம் கண்ட ஒரு சமணத்துறவி இவர் என்று தான்
கூறவேண்டும்.
தமிழகம் வந்த போது 1975
அவருடன் (September,
1975) தீபங்குடிக்கு அருகிலுள்ள கொரடாச்சேரி என்னும் கிராமத்திலிருந்து கழுகு மலை வரை
சென்று வர வாய்ப்பு கிட்டியது. (இடையில் இரண்டு நாட்கள் விடுப்பு) அவருடைய போதனைகளை தினமும் கேட்டறியும் அரிய வாய்ப்பு கிட்டியது. சமணர்கள்
பெரும்பாலோருக்கு சமணத்தின் பால் பற்று ஏற்படுத்தியவர் அவர் என்றால் மிகையாகாது. ஹிந்தியில்
உரையாடினாலும் தமிழுக்கும் ஹிந்திக்கும் பொதுவான வார்த்தைகளின் சொல்லாட்சியுடன் உரையாடுவார்கள்.
“தும்சே லாகீலகன்…….” என்ற பாடலை வெகுநாட்கள் தமிழர்கள் பாடிக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் விட்டு
ஒரு நாள் ஒரு வேளை உணவருந்துவார்கள். ஆனால்
தினமும் 20 கி.மீ வரை (12+8) நடைப் பயணத்தை மேற்கொள்வார்கள்.
(உடன் வந்திருந்த
இரு நிர்வாணத்தார்களும் தினமும் ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்வார்கள்.)
இரவு வெற்றுத்தரையில்
படுத்து உறங்குவார்கள். சில நேரங்களில் நமக்கு உடல் நலக்குறைவுக்கு மருந்துகள் சிபாரிசு
செய்வார்கள்.
உடன் வந்த நபரின் தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என புதுக்கோட்டையில் தந்தி வந்து கிளம்பினார்.
அவர் விடை பெற வணங்கிய போது உமது தாயாரின் வயிற்றில் கோளாறு, சீக்கிரம் நலமாகி விடுவார்கள். முடிந்தால் கழுகு மலையில் சந்திப்போம் என்று கூறி
வழி அனுப்பினார்கள். அவர் கழுகு மலைக்கு மீண்டும் வந்த போது அக்கூற்று உண்மை என்பது
தெரிய வந்தது. அந்நிகழ்வு ……. புதிராகவே அப்போது தெரிந்தது.
அதன் பிறகு அவரை
1996 ம் ஆண்டு ஊர்ஜயந்தகிரியில் சந்தித்த போது
தமிழகத்தை நன்கு நினைவு கூர்ந்தார்கள். மன்னார்குடி, தஞ்சாவூர், மதுரை போன்ற ஊர்களின் பெயரையும், இட்லி, தோசை, வடா என்று எங்களை இங்கு வந்தபோது நகைச்சுவையாக பரிகாசம் செய்வார்கள்.
அதனையும் நினைவு கூர்ந்தார்கள்.
பின்னர் ஸ்ரீ
நேமிநாதர் பாத தரிசனம் அன்று சமணர்களுக்காக
இல்லை என்றிருந்தாலும், தொலைபேசியில் முக்யஸ்தர்களை தொடர்பு கொண்டு தரிசிக்க வழி வகை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முனி தீக்ஷை
ஏற்று ஐம்பாதாவது அண்டை தழுவிய
ஆச்சார்ய ஸ்ரீ
நிர்மல் சாகர் மகராஜுக்கு
நமோஸ்து, நமோஸ்து,
நமோஸ்து
Acharya Sri Nirmalsagar Munimagaraj kku namosthu namosthu
ReplyDelete