தீபாவளி எனும் பண்டிகை:
Festival of light.
💐 தீபாவளி இந்தியாவின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். மேலும் உலகளாவிய ஒரு
பண்டிகையாகவும் உள்ளது. அனைவராலும் பிரியமுடம் கொண்டாடப்படும் சிறப்பான ஒரு
பண்டிகையாகும். பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், குதூகலம் தான் அதன்
இலக்கணம்.
👕 வெவ்வேறு கருத்தும், நம்பிக்கையும் கொண்ட மக்களையும் ஒன்றிணைத்து சுவையோடும், வேடிக்கையாகவும்
கொண்டாடும் விழாவாக உள்ளது.
👚 தீபத்திருநாள்/தீபஒளித் திருநாள் என்றும் வழக்கத்திலுள்ளது. வடதுருவப்
பகுதியில் இலையுதிர்காலத்திலும்; தென் துருவப்பகுதியில் வசந்த காலத்திலும் வரும்
பண்டிகையாகும். (இது போன்று நான்கு பருவ காலங்களுக்கும் புத்திணர்ச்சி யூட்ட
ஒவ்வொரு பண்டிகையும் உள்ளது.)
🍭 இந்தியா மட்டுமில்லாது பியூஜி, கயானா, பாகிஸ்தான், மலேசியா, மொரீசியஸ், மியான்மர், நேபாள், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில்
இந்திய வமிசாவளியினரால், அரசு விடுமுறையுடன், கொண்டாடப்பட்டு
வருகிறது.
🍭 ஐந்து தினங்கள் வரை கொண்டாடும் இப்பண்டிகையின் நோக்கம் அறியாமை இருளைப்
போக்கவும், தீயதை நீக்கி நல்லதை ஏற்கவும், வாழ்வில் நம்பிக்கையூட்டவும், ஆன்மீக ஒளி தீபத்தை ஏற்றும்
முகமாக கொண்டாடப்படுகிறது.
🍧 ஏறக்குறைய அக்டோபர் மாத மத்தி யிலிருந்து, நவம்பர் மத்தி வரை உள்ள
நாட்களில் ஒரு நாள் (கார்த்திகா சதுர்த்தசி/அமாவசையில் முக்கிய) தீபாவளி திருநாள்
கொண்டாடப்பட்டு வருகிறது.
🎈 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும்
பண்டிகையே தீபாவளி ஆகும். மனிதர்களின் மனதில் இருளாக உள்ள அகங்காரம், பொறாமை, தலைக்கனம்
போன்றவற்றை அகற்ற ஞான ஒளியாக வருகிறது.
🎀 தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
தீபத்தில், பரமான்ம ஒளியில், (நெருப்பின் வழியே) ஜீவான்மா வாசம் செய்ய அருள்
பெறுவதான ஐதீகத்தோடு கொண்டாடுகின்றனர்.
🌒 *பல பிரிவினர்களும் தீபாவளி பண்டிகையன்று கடைப்பிடிக்கும் அம்சங்களில்
பொதுவானவை:*
💐 தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணை
தேய்த்து புனித நீராடுகின்றனர். சிலர் அதற்கு முன் இல்லத்தின் மூத்த உறுப்பினர்
ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர்.
நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்.
👕 பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். அன்று ஒவ்வொரு
இல்லத்திலும் மங்கள இசைகள் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து
ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி
வாழ்த்து பெறுவர். அவரவருக்குரிய ஆலயம் செல்வதும் வழக்கமாகும். (செரிமானத்திற்கு
உகந்த தீபாவளி இலேகியம் எடுத்துக் கொள்வதும் மரபு.)
👚 வாழ்த்துச் செய்திகள் பல தபால் மற்றும் பிற ஊடகங்களின் வாயிலாக அனுப்பி
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.
🌷 தீபாவளி பண்டிகை இல்லாத இனத்தவர்களுக்கும்:
கொண்டாட முடியாத; பணியில் உள்ள ராணுவ வீரர்களுக்கும், துக்கம்
அனுஷ்டிப்பவர்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கும், மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்கும், சிறைச்சாலையில்
உள்ளவர்களுக்கும், அனாதை குழந்தைகள் மற்றும் வயோதியகர் இல்லங்களுக்கும் சென்று
புத்தாடையும், இனிப்பும் வழங்கி அவர்களையும்
மகிழ்விப்பதும் சிலரது நல்லொழுக்கமாகும்.
🍭 அன்று சிலர் வியாபாரத்திற்கான புத்தாண்டு துவங்குவதால் புதுக் கணக்கு
தொடங்குவது வழக்கமாகும்.
🍧 தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவை, விலங்குகளின் நலன்
கருதி அதிகம் வாழும் பகுதிகளில் மக்கள் அவ்வழக்கத்தை தடை செய்து பட்டாசு இல்லா
திருநாளாகக் கொண்டாடியும் வருகின்றனர். (சரணாலயங்களுக்கருகில் வாழ்பவர்கள்)
🎈 அதிகாலையிலும், மாலை, இரவிலும் வரிசையாக தீபங்கள், சரவிளக்குகள் போன்றவற்றால்
ஆலயங்களையும், இல்லங்களையும் அலங்கரித்து இருளைப் போக்குவது முக்கிய சடங்காகும்.
🎀 இது போன்று விழாவினை மெருகூட்டும் படியான வேறு சில பழக்கங்களும் அந்தந்த
பகுதிக்கேற்ற வகையில் அனுசரிக்கப் படுகின்றன.
*அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளியாக இருப்பினும் அதற்கான
காரணங்கள் ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் வேறுபடுகின்றன.*
(ஒவ்வொரு மத தீபாவளிக்கான காரண கதைகளைக் கண்டால், நம் மதத்தின் உயர்வான
நோக்கத்தையும், தொன்மையையும் புரிந்து கொள்ளலாம்.)
🌒 இந்து மதத்தில் தீபாவளி:
🔻 காரணக்கதை # 1.
💐 விஷ்ணு வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தபோது, இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு
அசுரன். அப்போது. பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே
தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை
நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை கொன்ற போது, அவன் தான் இறக்கும்
தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி
மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது. (தமிழ் மாநிலங்களில், ஆந்திரா, கர்நாடகா. ஆனால் கேரளாவில் இல்லை)
🔻 காரணக்கதை # 2.
👕 இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும்
முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி
திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி
மகிழ்ந்தனர். இந்நாளே அயோத்திக் கருகில் உள்ள உ.பி. போன்ற மாநிலங்களில் தீபாவளியாக
கொண்டாடப் படுகிறது.
🔻 காரணக்கதை # 3.
👚 ருங்கி என்ற முனிவர், ஒரு சிவ பக்தர், எப்பொழுது கைலாயம் வந்தாலும் சிவனும் பார்வதியும்
ஒன்றாக இருந்தாலும் அவர் வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபடுவார்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி அவர் சக்தி இழந்து போக என சாபமிட்டார். இதையறிந்த
சிவன் பார்வதிதேவிக்கு தன் உடலின் இட பாகத்தை கொடுத்து, சக்தி இல்லையேல் சிவம்
இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று அவருக்கு கூறினார். இவ்வாறு சிவனும்
சக்தியும் இணைந்து உருவான வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கபட்டது.
🍭 ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகெளரி விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில்
ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார். இந்துக்களில் சிலர் இந்நாளை தீபம்
ஏற்றிக் கொண்டாடுகின்றனர்.
🔻 காரணக்கதை # 4.
🍧 வஜஸ்ரவாஸ் என்ற செல்வந்தன், அவனுக்கு நச்சிகேதன் என்ற 16 வயது மகன் இருந்தான். அவன்
மிகப் பெரிய யாகத்தைச் செய்து, ஆகம விதிப்படி
எல்லா செல்வங்களையும் தானம் கொடுக்கும் போது வயதான உபயோகமற்ற பசுக்களையே கொடுப்பதைக்
கண்டு மகன் வேதனையுற்றான்.
🎈 அவன் தந்தையிடம் , “தந்தையே! ஏன் நீங்கள் உங்கள் உடமைகளை
எல்லாவற்றையும் தானம் செய்யவில்லை? என்று திரும்பத்
திரும்ப அதே கேள்வியைக் கேட்கவும் கோபம் கொண்டு
‘ஆம்.உன்னை யமனுக்குத் தானமாகக்
கொடுக்கப் போகிறேன்’ என்று ஆத்திரத்தில், எதையும் உணராமல் கூறினான்.
🎀 ஆனால் நச்சிகேதனோ தந்தை சொன்ன சொல்லை நிலைநிறுத்த எமன் இருப்பிடம் சென்றான். மூன்று நாட்கள் உணவு, நீர், தூக்கம் இன்றி
வேண்டியதால், பெருமையை உணர்ந்த யமன் மூன்று வரம் தருவதாகக் கூறினான்.
👔 முதல் வரம் தந்தை நலமாக இருக்கவேண்டும், இரண்டாவது; துக்கம்,துயரம், முதுமை , இறப்பு என்னும்
துன்பத்தில் உழலும் மக்கள் எப்படி சுவர்க்கம் அடைய முடியும். எமனும் மகிழ்ந்து, எப்படி எந்த
யாகத்தைச் செய்தால் ஸ்வர்க்கம் அடையமுடியும் என்ற ரகசியத்தையும் சொன்னான்.
👗 மூன்றாவது வரமாக ’இறப்புக்குப் பின் மனிதருக்கு நிகழ்வது என்ன’ என்ற மரண
ரகஸ்யத்தைச் சொல்லுமாறு கேட்டான். எமனுக்கு நச்சிகேதனை மிகவும் பிடித்திருந்ததால், மனமகிழ்ந்து “மனிதன் ஆத்மாவை உணர்ந்தால் மரணமின்மை” என்ற ரகசியத்தை உபதேசித்தான்.
🚀 அது கடோபநிஷத்தின் மூலக்கருத்தாகும். அவனுக்கு வரமளித்த தினத்தை நினைவு கூறும்
முகமாக சில பிரிவினர் கொண்டாடுகின்றனர்.
இந்து மதத்தில் தீபாவளி:
🔻 காரணக்கதை # 5.
தன்வந்திரி; (திரையோதசி)
💐 இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும்; நல்ல உடல்நலத்திற்காக
வழிபடப்படும் கடவுள் ஒன்றாகும். (தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை.)
(தேவர்கள் அசுரர்களுடன் போராடி வலிமை இழந்தவர்களானார்கள். படைக்கும் கடவுள்
பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான
இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல்
கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள்
கூறுகின்றன. இவர் வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப்
பெற்றார்கள்.)
👕 தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள்
என்றும் குறிப்பிடுகிறது.
👚 நாரக சதுர்த்தியும்; மூன்றாம் நாள் தீபாவளியாகவும் வட இந்தியாவிலும், மேற்கு
இந்திய பகுதியிலும், வங்கள தேசத்திலும் கொண்டாடப்படுகிறது.
காரணக்கதை # 6.
🍭 இந்து தெய்வமான காளி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். ஆற்றலே
வடிவான காளியைச் சரணடைந்தால், அவள் நம் பாவங்களையெல்லாம் பொசுக்கி, நாம் நம் லட்சியத்தை அடையச் செய்கிறாள். இதை சியாம பூஜை என்றும் மகாநிச பூஜை
என்றும் அழைப்பர்.
🎈 இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய மேற்கு வங்கம், ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று (அமாவாசை தினத்தில்)
இப்பண்டிகை தீபம் ஏற்றி கொண்டாடுகின்றனர்.
மகாநிச பூஜை என்பது பீகாரிலும் நேபாளத்தின் மிதிலா பகுதியில் வாழும் மைதிலி
மொழி பேசும் மக்களால் செய்யப்படுவது ஆகும்.
*---------------*
சீக்கியர்களின் தீபாவளி:
காரணக்கதை # 1.
🎀 சீக்கிர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது
குருவான குரு கோவிந்த சீக்கியசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அரசர்
ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில்
அடைத்தார்.
👔 அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின்
ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை
"பந்தி சோர்ரா" என்று 6-வது
குருவான ஹர்கோபிந்த் சிங் 1619-ஆம் ஆண்டு சிறையிலிருந்த வெளிவந்ததை நினைவு கூறும்
விதமாகவும்;
காரணக்கதை # 2.
👗 1577-இல் இதே தினத்தில் தங்கக்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையும்
ஒருமித்து தீபாவளி பண்டிகையாக சீக்கியர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்
என்றும் சொல்லப்படுகிறது.
(அம்ரித்ஸர் வீதிகள் எங்கும் தீபாவளி இனிப்பு பதார்த்தங்களை விற்கும் கடைகள்
வியாபித்து இருக்கும். எல்லாவற்றையும்விட தீபாவளி அன்று மாலை அம்ரித்ஸர்
தங்கக்கோயில் ஆயிரக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதும், அதன் பிம்பம் நீரில்
காணப்படும் காட்சியும் கண்களுக்கு விருந்து படைக்கூடியவை..)
*---------------*
*புத்தமதத்தில் தீபாவளி:*
காரணக்கதை # 1.
👗 நேபாளத்தில் நேவர் இன மக்கள் புத்த மதத்தில் வஜ்ராயனா மரபை தழுவியுள்ளனர்.
அவர்கள் லக்ஷ்மி பூஜையாக, திபாவளியை திஹார் என்ற பெயரில், அதே நாளில் கொண்டாடி மகிழ்கின்றனர். (மாகாயான புத்தமதம் பல வகை தேவதைகளை வணங்குவதை
அனுமதிக்கிறது.)
காரணக்கதை # 2.
🚀 மியான்மர்(பர்மா) நாட்டில் உள்ள புத்தமதத்தினரும் திபாவளிக்கு முன் வரும்
பெளர்ணமியில் ஒன்றும், பின் வரும் பெளர்ணமியில் ஒன்றாக தீபத்திருநாளாக கொண்டாடி
மகிழ்கின்றனர்.
🎁 டஸாவுங்டைன் அல்லது விளக்குப் பண்டிகை என்றழைக்கப்படும் இந்த விழா மியான்மரில்
(பழைய பர்மா) கொண்டாடப்படுகிறது. பர்மிய காலண்டரின் எட்டாவது மாதமான டஸாவுங்மான்
மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. (கார்த்திகை
தீபத்துடன் வரும்)
🌞 மழைக்காலத்தின் நிறைவை,
பர்மாவில்
கதினா பருவக் காலத்தின் நிறைவை இந்தப் பண்டிகை குறிக்கிறது.
*சமணத்தில் தீபாவளி:*
(பிற சமயத்தினர் கண்ணோட்டம்)
அதற்குரிய காரணங்களை நாம் அனைவரும் அறிவோம்.
ஆதலால் நாளிதழ், மாத சஞ்சிகைகளில் வந்த
கட்டுரைகளின் தொகுப்பைக் காண்போம்.
💐 மகாவீரர் அக்கால மக்களிடத்தில் இருந்த *கண்மூடித்தனமான நம்பிக்கையும், மூடப்பழக்கத்தையும்
வெளியேற்றி விஞ்ஞான மனோபாவத்தை* வளர்ச்சியடையச் செய்தார். அவர் போதனைகள் பாலின சமத்துவத்தோடு, உலகளாவிய சமூக, பொருளாதார மற்றும்
அரசியல் சமன்பாட்டை வலிமை பெறச்செய்தன;
👕 மேலும் அனைத்து *உயிரினங்களின் முக்கியத்வத்தையும், ஜீவகாருண்யத்தை*
வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் *வாழ்க்கை நெறிகளை வகுத்து* அனைவரும் மேனிலை அடைய
வழிகாட்டினார்.
👚 சமண தர்மத்தில் தீபாவளி பண்டிகை, மனித இனத்திற்கு தீர்த்தங்கரர் மகாவீரர் அளித்த
அறக்கொடையை வெளிப்படுத்தும் முகமாகவும், அவர் அடைந்த விடுதலைபேற்றை நினைவு கூறும் வகையிலும்
கொண்டாடப்படுகிறது.
🍭 மகாவீரர் *பற்றின்மை* கொள்கையை வளரச் செய்து பல்லுயிர்களையும் மனிதனின் பேராசையிலிருந்து
காப்பாற்றினார். மேலும் *பன்முக வாதமான அனேகாந்தவாதா, பலகோண சிந்தனை, கருணை உணர்வு, அஹிம்சைக் கொள்கை*
போன்ற நற்குண காரணிகள் சமணத்தின் வாழ்க்கைத் தத்துவங்களாயின.
🎈 சமணம்: தேவர்களை கடவுளாக துதிப்பதை மறுத்து,
மனிதரில் மேனிலை பண்பை எய்தியவர்களான,
அரஹந்தர் – முழுதுணர்ஞானம் பெற்றவர், பிறவிப் பிணியறுக்க வழிகாட்டியவர்;
சித்தர் – வீடுபேறு எனும் முக்தியை அடைந்த பரமான்மா;
ஆசார்யர்கள் – அரஹந்தர் போதனைகளை ஆகமங்களாக்கியவர்கள்;
உபாத்தியாயர் – அதனை போதிக்கும் ஆசிரியர்கள்;
மற்றும் சர்வசாதுக்கள் – முற்றும் துறந்த முனிபுங்கவர்கள்
ஆகிய இந்த ஐங்குரவர்களை வணங்கச் செய்தது சமணத்தின் நமோகார மந்திரமான
பஞ்சமந்திரம். வீடுபேறு நிலைக்கான படிநிலையில் உள்ளவர்கள் ஆவர். (times of India)
🎀 தனிக்கடவுள் வழிபாட்டை ஆதரிக்கவில்லை. ஒவ்வொருவரும் தனது முயற்சியால் மட்டுமே, துன்பங்களை நீங்கிய
விடுதலையாகிய வீடுபேற்றை அடைய முடியுமே ஒழிய, எந்தக் கடவுளின் துணையாலும்
அல்ல என்பதை வலியுறுத்துகிறது சமணம்.
👔 சமணத்தின் காலச்சக்கரத்தில், இவயுகத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் அஸி – தற்காப்புக்கான
ஆயுதம்; மஸி – எழுத்துக்கலை ; கிருஷி – விவசாயம் என்ற முக்கொள்கை வழியே கலை, கலாச்சாரம், கல்வி, விவசாயம், வாணிபம், பாதுகாப்பு
போன்றவற்றை கற்பித்தார். திருமண வாழ்வையும், அதன் ஒழுக்கத்தையும், இலட்சியத்தையும்
போதித்தார். அவர் இரு மகள்களான பிராமி, சுந்தரி யும் எழுத்தையும், எண்ணையும், கலைகளையும்
கற்பித்தனர்.(Times)
👗 ஆச்சாரியர் ஜினஸேனாச்சாரியார் தமது
ஹரிவம்ச புராணத்தில்; பகவான் மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த நாளன்று, பாவபுரி முழுவதும்
அம்மன்னர் ஆணையினால்; தீபாளிகா – தீபங்களை வரிசையாக ஏற்றி இருளைப்போக்க இப்பண்டிகை
ஏற்றப்பட்டதாக குறிப்பிடுகிறார். (Times of India)
👗 மனிதகுலம் உலகைப் புரிந்து கொண்டு ஈடேறும் வண்ணம் மகாவீரரின் உயர்வான
பங்களிப்பான தவ வாழ்க்கைக்கும், தியாகத்திற்கும் அஞ்சலி செய்யும் வண்ணம் பண்டிகையின்
மூன்று நாட்களுக்கும் உபவாசம்
இருப்பவர்கள் பலர் உள்ளனர். அந்நாட்களில் அவர் வீடுபேற்றிற்கு முன் செய்த
போதனைகளாக உத்தரதியான் சூத்திரத்திலுள்ள ஸ்லோகங்களை; சாமாயிகமாகவும், பிரார்த்தனையாகவும்
பாடி துதிப்பர்.
🚀 அனைத்து கொண்டாட்டமும் எளிமை, சிக்கனம், சமத்துவம், சமாதானம், அமைதி, தொண்டு, பரோபகாரம மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை
குறிப்பதாக உள்ளது. வளி மண்டலத்தை மாசு படுத்துவதாலும், இரைச்சலை உருவாக்குவதாலும்
பட்டாசு, மத்தாப்புகள் தவிர்க்கப் படுகின்றன. ஜினாலயங்கள் அழகிய விளக்குகளால்
அலங்கரிக்கப்படுவதும், இனிப்புகள் வழங்கப்படுவதும் அறியாமையை போக்கும் ஞான
தீபங்களாக சொல்லப்படுகிறது. உலகெங்கிருந்தும் பல பக்தர்கள் பாவாபுரிக்கு வந்து
வணங்கி பிரார்த்தனை செய்கின்றனர்.(times)
🌞 சமண ஆண்டு மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த அஸ்வினி மாதம் கடைசி நாள் முடிந்து , கிருத்திகா
ஆரம்பிக்கும் நாளான பிரதமையன்று துவங்குவதால், வியாபாரிகள் புதுக்கணக்கு
துவங்குவார்கள்.
🍡 மேலும் தீபாவளியன்று மகாவீரரின் பரிநிர்வாணத்தன்று அவருடைய பிரதான சீடர்
கெளதம் ஸ்வாமி, தீவிர தியானத்தால் காதி கர்மங்கள் அனைத்தையும் அழித்து விட்டு கேவலஞானம்
பெற்றதினால் மிகவும் விசேஷமான தினமாகும்.
🍢 ஆகவே பிறவித்துன்பங்களின் காரணிகள் அழிந்து மோட்சம் கிடைக்க ஏதுவாக அமையும்
என்பதால், தீபாவளி அன்று பிரார்த்தனைகளும், தியானங்களும் முழு ஈடுபாட்டுடன் செய்வர்.
🔹 தீபாவளி மகாவீரர் மோட்சம் அடைந்தும், சமணப் புத்தாண்டு துவங்குவதாலும்; ஒருவருக்கொருவர்
வாழ்த்து தெரிவித்து மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.
🍁 Times of India, Times, Hindustan herald, Hindu, Indian express, தினமணி, தினமலர் போன்ற
நாளிதழ் மற்றும் பல மாத சஞ்சிகைகள் வெளியிட்ட பொதுவான கருத்துக்களை கண்டோம்.
⚓ அனைத்து ஊடகங்களும்; மகாவீரரின் பரிநிர்வாண கல்யாண தினமே அனைத்து சமணர்களுக்கும்
தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என குறிப்பிடுகின்றன.
சமணர்கள் தீபாவளி:
💐 (நாம் அனைவரும்
அறிவோம் இருப்பினும் நமது நூல்கள், சஞ்சிகைகள், பல்வேறு இணையதளங்களில் உள்ளதை....)
👕 ஜைன தர்மத்தில்
பகவான் மகாவீரர் என்ற மகோன்னத மனிதர் பெற்ற ஆன்மீக சாதனையின் மகிமையை கொண்டாடும்
விழாவாக உள்ளது. தீபாவளி மகாவீரர் மோட்சம் என்னும் வீடுபேற்றை அடைந்த நாளை
நினைவுகூறும் பண்டிகையாகும்.
👚 கி.மு 527 ம் ஆண்டு
கிருத்திகா மாதம் சதுர்த்தசி நாளன்று, சுவாதி நட்சத்திரத்தில்; இருநாட்கள் உபவாசத்துடன் சமவசரணம் என்னும் அற
மண்டபத்தில் அமர்ந்து தர்ம உபதேசம் செய்யும் போழ்து, (பின் நாளில் இறுதி உபதேசம்
உத்ரதியான் சூத்ரா, விபக் சூத்ரா என்ற புனித நூலாயிற்று) நடு இரவில் தனது அனைத்துக் கருமங்களையும், அயுள் கர்மமும்
நிறைவை எட்டியதும், பூத உடலை விடுத்து, நிர்வாணம் என்னும் தூய ஆன்ம நிலையை எய்தினார்.
🍭 ஒளி பொருந்திய அவர்
ஆத்மா சித்த நிலையை அடைந்ததும், உலகமே இருளில் ஆழ்ந்தது. தேவர்கள் ரத்தினக் கற்களாலும், மனிதர்கள் தீபங்களால் ஏற்றி; அப்பேரின்ப நிலை எய்திய, அனைவரும் வினைக்
கட்டிலிருந்து மீள உபாயம் சொன்ன மீட்பரை, இருளை அகற்றி தரிசிக்க ஆயத்தமாகினர்.
🎈 அந்நிகழ்வை நினைவு
கூறும் முகமாக மக்கள் அனைவரும் ஒன்றாக தீபங்கள் ஏற்றி விழாவாக கொண்டாடுகின்றனர். மேலும் அவருடைய பிரதான சீடரான கெளதம் ஸ்வாமியும்
தீவர தவத்தால் அன்றே கேவலஞானம் அடைந்தார் என்ற நிகழ்வைக் குறித்தும், ஜைன ஆண்டின் (Vira-Nirvana-Samvat)
முதல்
நாளாக அன்றைய தினம் அமைந்ததால், புத்தாண்டு துவக்க நாளாக ஒருங்கிணைக்கப்பட்டு
கொண்டாடப்படுகிறது.
🎀 கி.பி. 783 ல், ஆச்சாரியர் ஜினஸேனாச்சாரியார் தமது ஹரிவம்ச புராணத்தில்; பகவான் மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த நாள், தீபாளிகா – தீபங்களை வரிசையாக
ஏற்றி இருளைப்போக்க இப்பண்டிகை ஏற்றப்பட்டதாக குறிப்பிடுகிறார்.
👔 அந்நாளன்று, தேவர்கள் ஒளிவீசும்
கற்களாலும், அந்நகர மன்னர், மக்கள் அனைவரும் வரிசையாக தீபங்கள் ஏற்றி ஜினரை
தரிசித்ததாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
👗 கி.பி. 7-8 ம் நூற்றாண்டின்
மத்தியில் ஆச்சார்ய குணபத்ரர் இயற்றிய உத்திர புராணத்தில் இந்நிகழ்வை
குறிப்பிட்டுள்ளார்.
👗 ஆச்சார்யர்
பத்ரபாகு இயற்றிய கல்பசூத்ரா என்ற நூலில் இந்நிகழ்வை 16 கண அரசர்களும் (காந்தாரத்திலிருந்து – அங்க நாடுவரை), காசியிலிருந்து
கோசல நாடுவரையுள்ள அரசர்கள் (குடியரசு போன்றவை) 9 மல்லர் தலைவர்களும், 6 லிச்சாவி(நேபாள்)
இன அரசுகளும் ஒன்று கூடி இந்த ஏற்பாட்டை கொண்டு வநத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “ஞான ஒளி சென்றதை, தீபஒளி ஏற்றி சரி
செய்வோம்” எனவும் கூறுகிறது.
🚀 தீபாவளி சடங்குகள்; பகவான் மகாவீரரின் தீவிர தியாகத்திற்கு காணிக்கை
அளிக்கும் விதமாக அனைத்து பிரிவினரும்
உபவாசம் இருப்பர். துதிப்பாடல்கள் பாடியும், மந்திரங்கள் ஜெயிப்பதுமாக
தங்களது பக்தியை வெளிப்படுத்துவர். கடைசி போதனைகளின் (உத்திரதியான்) வரிகளை
ஒதிக்கொண்டிருப்பதுமாக அந்நாளைக் கழிப்பர்.
🍡 விழாஅனுசரிப்பில்
தனித்தன்மை: ஜைனர்கள் பற்றின்மைக்கும், எளிமைக்கும்
முக்கியத்வம் அளிப்பதால்; ஆரவாரம், வானவேடிக்கை, ஓசையுடன் இல்லாமல் அமைதியான, அஹிம்சை முறையில்
கொண்டாடுவது போன்றவை. அனைத்து இல்லறத்தார்களும் அன்று தவநெறி வாழ்வை கைகொள்வது
ஆன்ம முன்னேற்றம் அளிக்கும் என ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன.
🔻 பகவான் மகாவீரர் கி.மு. 527 ல் வீடுபேறு நிலையை எய்தினார் என்ற இந்திய
சரித்திரத்தை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அன்றைய தினத்திலிருந்து சமண மக்கள்
தீபாவளி கொண்டாடி வருவதை தொன்மையான நூல்களும் குறிப்பிடுவதைக் கண்டோம்.
🔹 இந்தியா முழுவதும் சமணம் பரவி இருந்தது. பெளத்தம் வந்த பின் கலிங்கத்துப்
போரின் (கி.மு.3ம் நூற்றாண்டு) அழிவைக் கண்ட அசோகர் புத்த மதத்திற்கு
மாறினார் என்று சரித்திரம் கூறுகிறது. அப்பகுதி மக்களும் அன்று தீபாவளியாதலால்; அனைவரும், அசோகர் பெளத்தம்
தழுவிய நாளை மதமாற்றத்துடன் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
🔻 சீக்கியர்கள் தீபாவளி; ஜஹாங்கீர் உடல்நிலை குன்றியதற்கு (6-வது) குரு ஹர்கோபிந்த்
சிங்கின் சாபம் என எண்ணியதால்; 1619-ஆம் ஆண்டு சிறையிலிருந்து குரு விடுவிக்கப்பட்டார். அந்த நாள்
தீபாவளியானதால், பிற மதத்தினருடன் இணைந்து கொண்டாட ஆரம்பித்தனர்.
(அமிர்தசரஸ் பொற்கோவிலும் அதே நாளில் கட்ட
துவங்கியது குறிப்பிடத்தக்கது.)
🔹 இந்து மதத்தின் தீபாவளி கொண்டாட்டம் துவங்கியநாளின் தொன்மை எந்த ஒரு சரித்திர சான்றும்
இல்லை. பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பத்ம புராணம் 4 CE லிருந்து 15 CE வரை {common era, the
4th century (per the Julian calendar and Anno Domini/Common era) was that
century which lasted from 301 to 400.}
🔻 பாரத தேசம் முழுவதும் சமண இனத்தவர், ஒரு மாமனிதரின் பெருமுயற்சியால் கிட்டிய
மேனிலைக்காக கொண்டாடி வரும் அதே நாளில்;
🔹 இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பகுதியில் வெவ்வேரு காரணங்களுக்காக அதே
நாளில் கொண்டாடுவதையும்;
🔻 சமணத்திற்கு பின் தோன்றிய புத்தமதத்தினர் அதே நாளில் இரு காரணங்களுக்காக
கொண்டாடுவதையும்;
🔹 சீக்கியர்களும் சில காரணங்களுக்காக அதே நாளில் கொண்டாடுவதையும்;
🔻 ஆராயும் போது சமணர்களின் பண்டிகையே பின்நாளில் மத மாற்றத்தினால் பல
காரணங்களாக மாற்றப்பட்டு, அதே நாளில் தொடர்ந்து கொண்டாடி வருவது தெளிவுறும்.
🔻 ஆகவே அனைவரும் *மகாவீரர் பரிநிர்வாண நாளை தீபாவளியாக கொண்டாடி மகிழ்ந்தவர்களே.
பின்னர் மதமாற்றத்தினால் அந்நாளுக்கு வேறு காரணத்தை கற்பித்து கொண்டாடி வருவது
நிதர்சனமே.
*_மேலும்;_*
🔻 அக்காரணங்களில் குறிப்பிடப்பட்ட கதாநாயகர்கள் ராமன், கிருஷ்ணன், தன்வந்திரி
(தசாவதாரத்தில் சேராத அவதாரம்), அர்த்தநாரிஸ்வரர் போன்ற தேவர்கள் கடவுளர்களாக
சித்தரிக்கப் படுகின்றனர்.
🔻 *கடவுள் நிலையை ஆன்மா தழுவியபின் மீண்டும் பூமியில் பிறப்பதில்லை* என்பது ஆன்மீக உண்மை. (யோக சாஸ்திரம்
கூறுகிறது)
🔹 ஆன்மா என்பது ஏதாவதொரு உடலில் பரவி இருக்கும் அல்லது சமாதி நிலையடையும்
(பிறவா நிலை) என்கிறது. யதார்த்த நிலை அப்படியிருக்க:
🔻 ஒரே ஆன்மா தேவருலத்திலும், பூமியிலும் அவதாரம் என்ற பெயரில் இங்கொரு உடலிலும்
இருப்பது எவ்வாறு சாத்தியம் போன்ற தர்க்க வினாக்களுக்கு பதில் கிடைப்பதில்லை.
🔹 கடவுள் நிலையை எய்திய ஆன்மா பூமியில் அவதாரம் எடுத்து அனைவரையும் காப்பாற்றியதாக
சொல்வது எவ்வகையிலும் பொருந்தாக் கதையாகும்.
🔻 ஆனால் அவதார புருஷர்கள் தேவர்களில் ஒரு பிரிவினரான அசுரர்களை அழிக்க பூமிக்கு வந்ததாக
சொல்லியும்,
_(ராமன் – ராவணனை அழித்து அயோத்தி திரும்பிய நாள்; வராக அவதாரத்தில்
நரகாசுரனுக்கு அவசரகதியில் வழங்கிய வரத்தின் கொடுமையை, கிருஷ்ண அவதாரத்தில் தவற்றை
சரிசெய்ய அழித்ததை,) _
🔻 அதன் நினைவாக, மனிதர்கள் ஏன் விழாவாக கொண்டாட வேண்டும் என்பதும்
கேள்விக்குறியாகவே உள்ளது.
🔹 இப்பூவுலகில் கொடிய மனிதனாக அதே காலத்தில் வாழ்ந்த துரியன் போன்றவர்களை வதம் செய்ததை
ஏன் விழாவாக கொண்டாட படவில்லை என்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
🔹 மனித உலகத்தில் யாகம் போன்ற மத சடங்கின் போது வந்து செல்லும் தேவர்கள், அரக்கர்கள்; சர்ச்சைக்கும், சண்டைக்கும், அவர்கள் வாழும்
உலகத்தை விட்டு, ஏன் பூமியில் முடிவு ஏடுக்க நேரிட்டது என்பதும் கேள்வியாகவே
உள்ளது (அங்கு போர்க்களங்கள் இல்லை போலும்).
🔻 அமானுஷ்யர்கள் செய்த பல அற்புதங்களுக்கு மதிப்பளிப்பதினால் என்ன பயன். வெறும்
ஆச்சர்யமே மிஞ்சும்.
🔹 முயற்சி எடுத்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டால் தம்மைவிட உயர்வைக் கொள்வர்
என்ற சிறுமதியோரின் சில ஏற்பாடுகளே இவைகள் எனின் மிகையாகாது.
🔻 சமணர்களின் தீபாவளி; காலத்தால் முற்பட்டது, ஆராய்ச்சியிலும், தருக்கத்திலும்
வெல்லும் ஆற்றல் படைத்தது.
🔹 *ஒரு மாமனிதன் தன் முயற்சியால் பல இடர்கள், தடைகளைக் கடந்து தவ
வாழ்வின் வழியே மேனிலையடைந்ததை குறிப்பது.*
🔻 மகாவீரரின் கொள்கைகள்; மனித சமுதாயத்தின் மேன்மைக்கு வழி வகுக்கக்கூடியது. அன்பு, கருணை, இரக்கம் போன்ற
நற்குணங்களை மக்கள் மனதில் நிலைநிறுத்தி சமூக ஒற்றுமைக்கும், பூசல்,பிணக்குகளை அகற்றி, சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும்
தோற்று விக்கும் காரணிகளாய் அமைந்துள்ளவை.
🔻 கடவுளை நம்பி பிறவிகளில் சுழலாமல், கடவுள் நிலை அடைய வழிகாட்டிய; விஞ்ஞானத்தின் முன்னோடி, தீர்க்கதரிசி, முழுதுணர்ஞானி, முயற்சி ஒன்றே
வாழ்வின் மேன்மைக்கு வழிவகுக்கும் என வாழ்ந்து காட்டிய,
🔻 பகவான் மகாவீரரின் வீடுபேறு நாள் மட்டுமே பொருத்தமாக அமையும் என்பதே சரியாகும்.
வாழ்க மகாவீரர் சிந்தனை
வளர்க சமணம்.
really super and the different religion celebrate the festival and debatable points to understand the points and reader can come to the conclusion finally super
ReplyDelete