tattvartha sutra - chapter 9




     தத்வார்த்த சூத்திரம்: - அத்தியாயம் # 9
 


கடவுள் வாழ்த்து


மோக்ஷ மார்கஸ்ய நேதாரம் பேதாரம் கர்ம பூப்ப்ருதாம்
ஞாதாரம் விஸ்வ தத்த்வானாம் வந்தே தத்குண லப்த்தயே

த்ரைகால்யம் த்ரவ்ய ஷட்கம் நவபத ஸ்ஹிதம் ஜீவ ஷட்காய லேஸ்யா:
பஞ்சான்யே சாஸ்திகாயா வ்ரத ஸ்மிதி கதி ஞான சாரித்ர பேதா:

இத்யேதன் மோக்ஷ மூலம் த்ரிபுவன மஹிதை:ப்ரோக்தம் அர்ஹத் பிரீஷை:
ப்ரத்யேதி ஸ்ருத்ததாதி ஸ்ப்ரூஷதி ச மதிமான் ய: ஸ வை சுத்தத்ருஷ்டி:

ஸித்தே ஜ்யப்பஸித்தே சவ்விஹராஹணா ஃபலம் பத்தே
வந்தித்தா அரஹந்தே வோச்சம் ஆராஹணா கமஸோ

உஜ்ஜோவணம் உஜ்ஜவணம் ணிவ்வஹணம் ஸாஹணம் ச ணிச்சரணம்
தம்ஸணணாண சரித்தம் தவாணம் ஆராஹணா ஃபணியா

----------------

முன்  எட்டு அதிகாரம் வரை ஜீவ, அஜீவ, ஆஸ்ரவ பதார்த்தமும்,

 வினைக்கட்டிற்கான காரணங்கள் வரை வழங்கப்பட்டது.


தற்போது வினை செறிப்பு மற்றும் உதிர்ப்பு பற்றிய விளக்கம் சொல்லப்படுகிறது.



ஆஸ்ரவநிரோத: ஸம்வர: - (சூ#1) = (302)


आस्रवनिरोधः संवरः


Asravanirodhah sanvarah



ஆஸ்ரவ – வினை வருவதை; நிரோத: - தடுப்பது;  ஸம்வர - செறிப்பு

The obstruction of influx is stoppage (sanvara)  



உயிரில் வினைத்துகள்கள் வந்து கலவாமல் தடை செய்வதே சம்வரை/ செறிப்பு ஆகும்.

ராக துவேஷ அதாவது விருப்பு, வெறுப்பு பாவனையால் கார்மண வர்கணை எட்டு கர்மங்களாக வருகின்றன. அதனை தடுத்தல் தான் சம்வரை.

இவை இரண்டு வகை; பாவ (உணர்வு) சம்வரை மற்றும் திரவிய (பொருள்) சம்வரை.

பாவ சம்வரை (psychic stoppage): வினை வருவதற்கு காரணமான எண்ணங்களை தடுப்பது/ நிறுத்தி விடுவது.

திரவிய சம்வரை (material stoppage): அந்த எண்ணங்களின் வழியே நிகழும் செயல்களால் வரும் புற்கல வடிவமான வினை வருகையைத் தடுப்பது.
----------
செறிப்பிற்கு பிறகு சேர்த்து வைத்திருக்கும் குற்றங்கள் மற்றும் அவற்றிற்கான காரணங்கள் பரிசோதனை செய்யப்படும் போது முக்தி- லாபம் கிட்டுகிறது.

அந்த மாசுக்கள், அதற்கான காரணங்கள் எவை என்பது பற்றிய பொதுவான விளக்கங்கள் குணத்தாங்கள் வரிசையாக அளிக்கப்பட்டிடுக்கிறது.

மித்யாத்துவம் நான்காவது குணத்தானத்தில் தடுத்து நிறுத்தப் படுகிறது.
அவிரதம் (விரதமின்மை) 5,6 வது குணத்தானத்தில் தடுத்து நிறுத்தப் படுகிறது.
பிரமாதம் ஏழாவது குணத்தானத்திலும்,  கஷாய ஈடுபாடுகள் 8,9,10 லும், யோகம் (ஆதிர்வுகள்) 14 வது குணத்தானத்திலும் சம்வரை ஆகிறது.

(விரிவான விளக்கத்தை அத்தியாயம் 10, சூத்திரம் 2ல் காணலாம்.)

-------------------
ஆகவே அனைத்து உயிர்களும் இவற்றை முழுவதுமாக அறிந்து கொண்டு செறிப்பிற்கான வழிகளைக் கடைபிடித்தால் ஒழுக வேண்டும் என்பது இவ்வத்தியாயத்தின் நோக்கம் ஆகும்.

---------
விருப்பு, வெறுப்பு எண்ணங்கள் இல்லாமல் நம்மை பண்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.

--------

அதற்கான காரணங்களை அடுத்து காண்போம்….

---------------------  


ஸம்வரத்திற்கான காரணங்கள்



குப்திஸமிதி தர்மனுப்ரேக்ஷாபரிஷஹஜய  சாரித்ரை:  - (சூ#2) = (303)


स गुप्ति समिति धर्मानुप्रेक्षापरीषहजयचारित्रैः


Sa gupti-samiti-dharmanupreksha-parishahajaya-charitraih


குப்தி – குப்தி; ஸமிதி – ஸமிதி; தர்ம – தர்மம்; அனுப்ரேக்ஷா – அனுப்ரேஷைகள்; பரிஷஹஜய – துன்பங்களை சகித்துக் கொள்ளுதல்;  சாரித்ரை – ஆகியவைகள்.

Stoppage is effected by control, carefulness, virtue, meditation about self etc., conquest over afflictions by endurance and conduct.  



குப்தி (control,குத்தி): பிறவிச் சுழற்சிக்கு காரணமான செயல்களில் தீயனவற்றைத் தடுத்து ஆன்மாவைக் காப்பாற்றுவது.
அவை மனம், மொழி, செயல் ஆகியவற்றின் அடக்கம் என்பது.

சமிதி (carefulness): உயிர்களுக்கு துன்பம் ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் செயல்படுவது.
வந்து, போகும் போது, பேசும் போது; உணவு  எடுக்கும் போது; பொருட்களை கையாளும் போது; மல, ஜலம் கழிக்கும் போது கவனமாக இருத்தல்.

தசதர்மம் (virtue): பிறவி  துக்கத்திலிருந்து விடுவித்து, ஆன்மாவிற்கு அனந்த சுகத்தை  தருகிறதோ அவை.

அனுப்ரேஷா (contemplation):  பன்னிறு தூய சிந்தனைகள். உடல் இயல்பு, பிறவி சுழற்சி முதலியவை குறித்து அடிக்கடி சிந்தித்தல்.

பரிஜக ஜெயம் (conquest by endurance): பசி, தாகம் முதலியவைகளால் ஏற்படும் துன்பத்தை பொறுமையுடன் சகித்துக் கொண்டு, ஈட்டிய வினைகளை உதிர்க்க முயற்சி  செய்வது.

சாரித்ரம் (conduct) : வினை ஊற்றுக்கு காரணமாக அக, புற செயல்களை ஆன்ம முன்னேற்றத்திற்காக நெறிப்படுத்துவது.

---------------
அதாவது வினைகளின் செறிப்பு (சம்வரை) குப்தி, சமிதி போன்றவற்றால் அடைய முடியுமே தவிர வேறு வழிகளான;

புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு பயணம் செய்வது, தீர்த்தங்களில் முழுக்கு போடுவது, தலையை மொட்டை அடிப்பது, தேவதைகளை வணங்குவது முதலானவைகளால் பயன் இல்லை.
----------------
அடுத்து சம்வரை, நிர்ஜரைக் காண காரணங்களை…..


 -----------------


சம்வரை, நிர்ஜரை காரணங்கள்




தபஸா நிர்ஜரா ஸ  - சூ#3 = (304)


तपसा निर्जरा च


Tapasa nirjara cha


தபஸா – தவத்தினால்; நிர்ஜரா – நிர்ஜரையும்; ஸ – சம்வரை யும் ஏற்படுகின்றன.

Penance (austerity) results in stoppage and dissociation.  


தவம் செய்வதினால் கர்மங்களை களைவதற்கும், வருவதை தடுக்கவும் கூட காரணமாகிறது.

உழவர்கள் தானியங்கள் பயிரிடுவதினால் அவற்றுடன் புல்,பூண்டு முதலியனவும் முளைத்து வருவது போல தவங்கள் கர்மங்களைக் கெடுப்பதற்கும், மேலும் புண்ணிய கருமங்கள் வந்து சேருவதற்கும் காரணமாக அமைகிறது.
அதனால் தேவேந்திர பதவியை அடையவும்  காரணமாகிறது.

தவம் செய்யும் போது சஞ்சலமின்றி இருப்பின் கர்மங்கள் கழியும், அன்றி சஞ்சலம் ஏற்படின் புண்ணியம் வந்து சேரும்.
-----------

அடுத்து குப்தியின் இலக்கணம் காண்போம்….
--------------- 


குப்தியின் இலக்கணம்


ஸம்யக்யோகநிக்ரஹோ குப்தி: - சூ#4 = (305)


सम्यग्योग निग्रहो गुप्तिः


Samyagyoganigraho guptih


ஸம்யக்யோகநிக்ரஹோ – நல்ல முறையில் மன, வசன, காய த்தின் வழியாக எண்ணம், சொல், செயல்களை: குப்தி: - குப்தி  என்பர்.

Stopping activity of the mind, speach and body without desire for material gains or fame is called control of mind, speach and body.


நல் வழியில் மனவடக்கம், மொழி அடக்கம், செயலடக்கம்  செய்வது  குப்தியாகும்.

அதாவது மனம் வழி தோன்றும் எண்ணங்கள் , வாய்வழி பேசும் மொழிகள், உடல் வழி செய்யப்படும் செயலகள் ஆகிய வற்றினை அடக்கி விழிப்புடன் செயல் படும் போது தீய எண்ணங்கள், பேச்சுக்கள், செயல்கள் நன்கு தடை படுகின்றன.

எவை எவை தடுக்கப்படுகின்றனவோ அவற்றால் வினை ஊற்று ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.
-------------

அடுத்து  ஸமிதியின்  வகை…..

--------------- 


ஸமிதியின் வகைகள்




ஈர்யாபாஷைஷணாதாநநிக்ஷேபோத்ஸர்க்கா: ஸமிதய: - சூ#5 = (306)


ईर्याभाषैषणा दान निक्षेपोत्सर्गा समितयः


Iryabhashaishanadananikshepotsargah samitayah



ஈர்யா- நடத்தல்; பாஷை – பேசுதல்; ஏஷணா – ஆகாரம் கொள்ளுதல்; ஆதாநநிக்ஷேப – எடுத்தல்; உத்ஸர்க்கா- மல, ஜலம் கழித்தல் இவை; ஸமிதய: - சமிதியாகும்.

Iryasamity (to inspect ground in front while walking), Bhashasamity (to speak words which are beneficial, moderate, lovable, undoubtful, not to cause passions, not in conflict with the religion), Aishnasamity (to have pure food without any defects/short comings), Adan-Nikshepansamity (to carefully place, lite or handle everything) and Utsargasamity (to discharge stool, urin etc. at a lifeless place) are fivefold regulation of activities.  


ஸம்யக் என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதாவது கவனமுடன் நடத்தல், கவனமுடன் பேசுதல், கவனமுடன் ஆகாரம் உட்கொள்ளுதல்; கவனமுடன் பொருட்களை கையாளுதல்; கவனமுடன் மல, ஜலம், எச்சில் கழித்தல் என்பதாகும்.

ஐந்து சமிதிகளுடன் கவனமுடன் செயல் படுவோர்க்கு அடக்கமின்மையால் வரும்  வினை  ஊற்றுக்கள் தடுக்கப் படுகின்றது.
----------

தர்மத்தின்  லக்ஷணங்கள் அடுத்து காண்போம்….

----------------- 


பத்து தர்மங்கள்




உத்தமக்ஷமாமார்தவார்ஜவசெளசசத்யஸம்யமதபஸ்த்யாகாகிஞ்சன்யப்ரம்ஹசர்யாணி தர்ம:  - சூ#6 = (307)


उत्तमक्षमामार्दवार्जवसत्य शौचसंयम तपस्त्यागा किञ्चन्य ब्रह्मचर्याणि धर्मः


Uttamakshama-mardavarjava-satya-shaucha-sanyama-tapastyagakinchanya-brahmacharyani dharmah



உத்தமக்ஷமாஉத்தம பொறுமை(க்ஷமை); மார்தவஉத்தம பணிவு(மார்தவம்); ஆர்ஜவஉத்தம நேர்மை (அர்ஜவம்); செளசஉத்தம தூய்மை (செளசம்); சத்யஉத்தம வாய்மை(சத்தியம்); ஸம்யமஉத்தம அடக்கம்(சம்யமம்); தபஸ்உத்தம தவம்; த்யாகஉத்தம தியாகம்; ஆகிஞ்சன்யஉத்தம எனதென எண்ணாமை (ஆகிஞ்சன்யம்); ப்ரம்ஹசர்யாணிஉத்தம காமமின்மை (பிரமஹசர்யம்);  தர்ம: - இவை பத்தும் தர்மமாகும்


Supreme forbearance, modesty, straightforwardness, purity, truthfulness, self-restraint, austerity, renunciation, non-attach-ment and celibacy constitute virtue or duty.  


உததம என்பதை அனைத்திற்கும் முன் சொல்லாக கொள்ள வேண்டும். புகழ், பணம் முதலிய எண்ணம் இல்லாமல் மோக்ஷ பாவனையுடன், அதாவது  கர்ம நிர்ஜரை பாவனையோடு இருத்தல்  ‘உத்தமம்என்பது.

உத்தம  க்ஷமை: (super forbearance) கோபம் கொள்ளாது மன்னித்தல். பிறர் அவமரியாதை, கேலி செய்தாலும், வசை பாடினாலும் பொறுத்துக் கொள்ளுதல்.

உத்தம மார்தவம்: (supreme modesty) உயர் குலம், ஜாதி, பதவி இருந்தாலும் அவை கொண்டு கர்வம் கொள்ளாது இருத்தல்.

உத்தம் ஆர்ஜவம்: (supreme straight forwardness) யோகங்களில் சொல், செயல், சிந்தனையில் கபடமின்றி நேர்மையாய் இருத்தல்.

உத்தம செளசம்: (supreme purity) பேராசை/உலோபத்திலிருந்து விலகி ஆன்மாவை தூய்மையாக வைத்தல்.

உத்தம் சத்தியம்: (supreme truthfulness) எப்போதும் பொய் பேசாமல் , இனிமையான பிடித்த வார்த்தைகளையே பேசுதல்.

உத்தம சம்யமம்: (supreme self-restraint) ஐம்புலன்களையும், மனத்தையும் அடக்குதல், சிறந்த நெறியில் இருத்தல், உயிரினங்களுக்கு ஏற்படும் இன்னல் களை போக்குதல்.

உத்தம தவம்: (supreme austerity) வினைகள் உதிர்ப்பிற்கு தேவையான விரதம், உபவாசம் ஏற்றல். இவை அகத்தவம், புறத்தவம் என இருவகைப்படும்.

உத்தம தியாகம்: (supreme renunciation) பிரதிஉபகாரம் காணாது தன்னிடம் உள்ள ஞானம், கல்வி முதலியவற்றை தானம் செய்தல்.

உத்தம ஆகிஞ்சன்யம்: (supreme non-attachment) உடல் முதலியவற்றை இவை எனது என்ற எண்ணம் கொள்ளாது இருத்தல்.

உத்தம பிரம்ஹசரியம்: (supreme celibacy): சிற்றின்ப நுகர்சியின் நினைவில் இல்லாது/ கொள்ளாது ஆன்மாவில் லயித்து இருத்தல்.

----------

வினை செறிப்பு ஏற்படுவதற்கு குப்தி அவசியமாகும். குப்தியை முழுவதுமாக கடைபிடிக்க முடியாத நிலையில் சமிதியை கடைபிடித்தல் சுலபம். சமிதியை கடைபிடிக்க பத்து  தர்மங்கள்  மிகவும் உதவி புரிகிறது.

இதனால் கஷாயம் மூலம் வரும்  வினைகள் தடுக்கப்படுகிறது.

-----------

அடுத்து பன்னிரண்டு  சிந்தனைகளை…..

--------------------- 


பன்னிரு சிந்தனைகள்




அநித்யாசரணஸம்ஸாரைகத்வாந்யத்வாசுச்யாஸ்ரவஸம்வரநிர்ஜராலோகபோதிதுர்லபதர்ம  ஸ்வாக்யாதத்வாநுசிந்தனமனுப்ரேக்ஷா: - சூ#7 = (308)



अनित्याशरण संसारैकत्वान्यत्वाशुच्यास्रवसंवर निर्जरा लोकबोधि दुर्लभ धर्मस्वाख्यातत्त्वानुचिन्तनमनुप्रेक्षाः


Anityasharana-sansarai-katvanyatvashuchyashrava-sainwara-nirjara-loka-bodhidurlabha-dharma-svakhya-tattvanucintanamanupreksah


அநித்யநிலையில்லாமை; அசரணஅடைக்கலம் இன்மை; ஸம்ஸாரநாற்கதியில்; ஏகத்வதனிமை; அந்யத்வஉறவின்மை; அசுசிதூய்மையின்மை; ஆஸ்ரவவினையூற்று; ஸம்வர- வினை செறிப்பு; நிர்ஜராவினை உதிர்த்தல்; லோகஉலகம்; போதிதுர்லபம்மும்மணி அடைதலில் அன்மை; தர்மஸ்வாக்யாதத்வ அருகரின் அஸிம்சைக் கொள்கை தத்துவம் இவற்றினை; அநுசிந்தனஇடையறாது சிந்தித்தல்; அனுப்ரேக்ஷா: - பாவனைகளாகும்.


Reflection is meditating on transitoriness, helplessness, trans-migration, loneliness, distinctness, impurity, influx, stoppage, dissocia-tion, the universe, rarity of enlighten-ment and the truth proclaimed by religion.  


ப்ரேக்ஷைமீண்டும், மீண்டும் சிந்தித்தல், தொடர் சிந்தனை.

அநித்யாநு பிரேக்ஷை: பிறவி வாழ்வில் உள்ள எல்லா பொருட்களும் மின்னல், நீர்க்குமிழி, வானவில் முதலானவைகளுக்கு சமமானவை என்று சிந்தித்தல். உயிருக்கு ஞான, காட்சி உபயோகம் தவிர மற்றெல்லாம் நிலையில்லாதவை என்று  சிந்திப்பது.


அசரணாநுப்ரேக்ஷை: பசியோடுள்ள சிங்கத்தின் வாயில் சிக்கிய மானை காப்பாற்ற யாரும் இல்லாதது போல, மரணத்தில் அகப்பட்ட ஜீவனை யாரும் காப்பாற்ற இயலாது. அதலால் நற்காரியங்களை செய்து மரணவாயிலிருந்து நீங்க வேண்டும் என்று அடிக்கடி சிந்தித்தல்.
அதனால் அறம் தவிர ஆன்மப் புகலிடம் வேறேதும் இல்லை என்று முடிவுக்கு வருகிறது. அருகர் அருளிய வழியில் பயணிக்க தொடங்குகிறது.

ஸம்ஸாரநுப்ரேக்ஷை: நரக முதலிய நான்கு கதிகளில், உயிர்கள் லட்சோப லட்சம் யோனிக்களில், குலங்களில் பல  உறவுகளில் பிறந்து கோடிக்கனக்கான துன்பங்களை அனுபவித்து உண்டாகும்  துக்கத்தை  அடிக்கடி  ஆலோசித்தல்.
அதனால் பிறவித்தளையிலிருந்து விடுபடும் முயற்சிகளை மேற்கொள்கிறது.

ஏகத்வானுப்ரேக்ஷை: அடுத்தடுத்து  ஏற்படும் இறப்பு, பிறப்பு, வியாதி, முதுமை களிலிருந்து உண்டாகும் கடுமையான துன்பத்தை வேறு உறவோ, நட்போ திர்க்க முடியாது, யான் ஒருவனே அனுபவிக்க வேண்டும் என்று தியானித்தல்.
இதனால் பற்றின்மை ஏற்பட்டு வீடுபேறு பயணத்தில் ஈடுபடும்.

அந்யாத்வாநுப்ரேக்ஷை: உடல் வேறு, உயிர் வேறு என்று பிரித்து பார்த்து  சிந்திப்பது. மனைவி மக்களுக்கும் தொடர்பு இல்லை என்றும், ஆத்மா வேறு, உடல், மனைவி மக்கள் வேறு என்று அடிக்கடி சிந்தித்தல். உடலோ பொறியால் ஆனது, நானோ பொறியற்றவன். உடல் அறிவற்றது. நானோ அறிவுணர்வுடையவன், உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாது என்று அடிக்கடி சிந்திப்பதால் ஆழ்ந்த பற்றின்மையை ஏற்படுத்தி முக்தி பேரானந்தத்தை தேடுவதற்கு வித்திடுகிறது.

அசுத்வானுப்ரேக்ஷை: உடல் அசுத்த கொள்கலன். இரத்தத்தினாலும், விந்துவினால் கருப்பை போன்ற கழிவறையில் உருவானது, அருவருக்கத்தக்க மலம், ஜலம், தோலில் ஏற்படும் வியர்வை போன்ற துர்நாற்றத்தால்  உருவானது இவ்வுடல் என்ற சிந்தித்தல்.
நறுமணமுள்ள பொடிகள், மலர்கள், புகையினாலோ உடல் அழுக்குகள் விடுபடுவதில்லை.
இவ்வாறு சிந்திப்பதால் உடல்மீது அருவருப்பு  கொண்டு பிறவிக்கடலிலிருந்து வெளிவர முயற்சி ஏற்படும்.

ஆஸ்ரவானுப்ரேக்ஷை: வினையூற்று  இம்மையிலும், மறுபிறப்புக்கும்  காரணமாகியும் அங்கும் துன்பத்தையே தருகிறது. மேலும்  பொறிகள்கஷாயங்கள், விரதமின்மை போன்றவை வினையூற்றுக்கான காரணங்கள். இவை இம்சை, பந்தம், அவமதிப்பு, மிகுந்த வருத்தம் போன்றவற்றையே ஏற்படுத்துகின்றன. நாற்கதிகளில் சுழலும் பலவகையான பிறப்புகளையே தருகின்றன என்று சிந்தித்தல்.
அச்சிந்தனை  வினை ஊற்றினால் வரும் தீமைகளிலிருந்து ஆன்ம நலன்களுக்கு ஊறு ஏற்படுத்தாவண்ணம் பாதுகாக்கிறது.

ஸம்வரானுப்ரேக்ஷை: கடல் மீது  செல்லும் படகின் ஓட்டை அடைக்கப்படாவிடின் நீர் உட்புகுந்து, பயணம் செய்பவர்களை நீரில் மூழ்கடித்து விடுமோ அதுபோல் செறிப்பின் பயன்மீது கவனம் கொள்ளாவிடில் வினை ஊற்று அதிகரித்து விடும் என்று சிந்தித்தல்.
அச்சிந்தனையினால் புதிய வினைகள் வருவதை தடுக்க தொடர்ந்து முயற்சி செய்ய தூண்டும்.

நிர்ஜரானுப்ரேக்ஷை: இரு வகை நிர்ஜரைகள் உள்ளன. கர்மங்கள் தம் தம் பயனை கொடுத்து பின்னர் விலகுவது சவிபாக வினையுதிர்த்தல், அதனால் எப்பயனும் இல்லை. ஆனால் வினைகள் துன்பங்களை தரும் முன்பே அவற்றை நீக்குவது அவிபாக நிர்ஜரை; அதனால் நன்மையுண்டாகும் என்று தொடர்ந்து சிந்தித்தல்.
இவ்வாறு சிந்திப்பவர் அவரது வினைகளை உதிர்க்க தூண்டப்படுகிறார்.

லோகானுப்ரேக்ஷை: உலக அமைப்பை பற்றி, அலோகாகாஸம், லோகாகாஸம் பற்றி  எப்போதும் சிந்தித்தல். அதுவே உண்மை யறிவை தருகிறது.

போதிதுர்லபானுப்ரேக்ஷை: ஒரு நிகோத உடலில் அனந்த் உயிர்கள் உள்ளன. உலகெங்கும் எந்த இடைவெளியும் இன்றி ஒரு பொறி உயிர்கள் அடர்த்தியாக பரவியுள்ளன. எவ்வாறு சமுத்திர மணலிலிருந்து தொலைத்த இரத்தினத்தை தேடி  திரும்ப பெறுவது போல் ஒரு பொறியிலிருந்து , திரஸ உயிர் ஒன்று முதல் ஐந்தறிவு உயிர் வரை பிறப்பது அரிதானது. அதிலும்  மனமுள்ள மனிதனாக பிறப்பது அதனிலும்  அரிதானது.
அம்மனிதபிறவியினை சரிவர பயன் படுத்தாது இருப்பது, எரிந்து போன ஒரு மரத்தை மீண்டும் பெறுவது போன்றதாகும். அவ்வாறு மனிதனாய் பிறந்தாலும் நல்ல குடும்பம், குலம், நன்னெறி நொக்கிய பொறிகள், நோயின்மை அகிய வற்றுடன் பிறப்பது மிகமிக அரிதாகும்.
அவையனைத்து பெற்றிருந்தும் அறத்தின் மீது  நம்பிக்கை கொள்ளாது  இருத்தல் கண்ணிருந்து குருடனாக  இருப்பதற்கொப்பதாகும்உலக இன்பங்களில் மூழ்கியிருத்தல் சாம்பலுக்காக சந்தனத்தை எரிப்பது போன்றதாகும். அவற்றை துறந்தாலும் அறத்தை, அறம் வளர்த்தல் மற்றும் புண்ணிய மரணம் போன்றவை கிடைப்பது மிக அரிது என்று சிந்தித்தலாகும்.
அவ்வாறு தொடர்ந்து சிந்திப்பவர் ஞானத்தை பெற முயற்சி செய்வர்.

தர்மஸ்வாக்யாதத்வானுப்ரேக்ஷை: ஜிந பகவான் அருளிய அஹிம்சை தர்மமே ஜீவன்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது, இதனை கடைபிடிக்காவிடில் துன்பமே  நேரும் என்ற சிந்தனை செய்தல்.
கொல்லாமையே உயர்ந்த தருமம், அதற்கு அடிப்படை பொறுமையே, பணிவே அதன்  வேர், பிரம்ஹசர்யமே அதனை காக்கிறது, பற்றின்மையே அதனை சார்ந்திருக்கிறது. இதனை உணராதவர்களே பல பிறவிக்கு காரணமாகிறார்கள் என்ற தொடர்ந்து சிந்தித்தல்.
அதனால் அறச்சிந்தனை மேலும், மேலும் வளர எப்போதும் முயற்சி  செய்து கொண்டிருப்பர்.
---------
எவரொருவர் பன்னிரண்டு சிந்தனைகளை நல்ல விதமாக கடைபிடித்து ஒழுகிறாரோ அவர் பரீஷஹங்களை வெல்லுவதில் உற்சாகத்துடன் செயல்படுகிறார்.
----------
அடுத்து பரிஷகங்கள் எவை என்று……

---------------- 


பரிஷஹங்கள்




மார்காச்யவநநிர்ஜரார்த்தம் பரிஷோடவ்யா: பரீஷஹா: - சூ#8 = (309)


मार्गाच्यवननिर्जरार्थ परिषोढव्याः परीषहाः


Margachyavana-nirjarartham parisodhavyah parisahah


மார்காச்யவந – சம்வரையிலிருந்தும், முக்திப்பதையிலிருந்தும்  விலகாமல் இருப்பதற்கு; நிர்ஜரார்த்த – வினைகள் உதிர்ப்புக்கும்; பரிஷோடவ்யா: - இடர்கள்; பரீஷஹா: - பொறுத்துக் கொள்ளுதல்.


The afflictions or hardships (22 types) are to be endured so as not to swerve from the path of stoppage of karmas and for the sake of dissociation of karmas.


வினைகள்  வருவதைத் தடுப்பதற்கும்; முக்திப் பாதையில் விலகாமல் இருப்பதற்கும்; வினைகளை உதிர்ப்பதற்கும் (பரிஷஹங்கள்) தொந்தரவுகள் பொறுத்துக் கொள்ளப் படவேண்டியவைகள் ஆகும். 

பசி, தாகம் போன்ற இடர்களைப் பொறுத்துக் கொள்கிறாரோ அவர்கள் ஜிநர் அருளிய முக்திப்பாதையில் வழுவாமல் இடர்களைப் பொறுத்துக் கொண்டு வினை வரும் வழியினை தடுத்தும், வினை உதிர்ப்புக்கான வழிகளை நழுவாமல் கடைபிடிக்கின்றர். பின் விடுதலை பெறுகின்றனர்.
-------

பரிஷஹங்களின் எண்ணிக்கையை  அடுத்து…..

-------------- 

பரிஷஹங்களின் எண்ணிக்கை



க்ஷுத்பிபாஸா சீதோஷ்ண தம்ச மசக நாக்ந்யாரதி ஸ்த்ரீ சர்யா நிஷத்யா சய்யாக்ரோசவத யாசநாலாபரோகத்ருண ஸ்பர்ஸ மல சத்காரபுரஸ்கார ப்ரஜ்ஞாஜ்ஞானாதர்சநாநி  - சூ#9 = (310)


क्षुत्पिपासाशीतोष्णदंशमशकनाग्न्यारतिस्त्री चर्यानिषद्याशय्या क्रोध वधयाचनालाभ रोग तृणस्पर्श मल सत्कार पुरस्कार प्रज्ञानां दर्शनानि


Kshutpipasa-shitoshna-danshamashaka-nagnyarati-stri-charya-ishadya-shayyakrosha-vadha-yachana-(a)labha-roga-trnasparsha-mala-satkara-puraskara-pragyagyanadarshanani



க்ஷுத்பசி; பிபாஸாதாகம்; சீதகுளிர்; உஷ்ணவெப்பம்; தம்சமசகபூச்சிக் கடிநாக்ந்யஆடையின்மை; அரதிவெறுப்புஸ்த்ரீபெண்ணினிடம் மயக்கம்; சர்யாடையில் ஏற்படும் துன்பம்; நிஷத்யாஉடல் அசைவற்ற தியானம்; சய்யாபடுக்கையின்மை; ஆக்ரோசினத்திற்கான சூழல்; வதவதைக்கு உட்படுதல்; யாசநாயாசிக்காமை; அலாபலாபமின்றி; ரோகநோய்; த்ருணஸ்பர்ஸபுல், முள் குத்துதல்; மலஅழுக்கு;  சத்காரபுரஸ்கார மரியாதைஅவமரியாதை; ப்ரஜ்ஞாஅறிவு; அஜ்ஞானா- அறிவின்மை; அதர்சநாநிநம்பிக்கையின்மை ஆகிய இரபத்திரண்டு பரிஷஹ ஜெயம் ஆகும்


Hunger, thirst, cold, heat, insect-bites, nakedness, absence of pleasures, women, pain arising from roaming, discomfort of postures, uncomfortable couch, scolding, injury, begging, lack of gain, illness, pain inflicted by blades of grass, dirt, reverence and honour (good as well as bad reception), arrogance of learning, despair or uneasiness arising from ignorance and lack of faith are the twenty-two afflictions or hardships.


க்ஷுதா பரிஷஹஜயம்:  பசியினால் உண்டாகும் துன்பத்தை பொறுத்துக் கொள்ளல்

பிபாஸா பரிஷஹஜயம்:   நீர் வேட்கையினால் உண்டாகும் கஷ்டத்தை பொறுத்துக் கொள்வது.

சீத பரிஷஹஜயம்: பறவைகள் போல் ஆடையின்றி இருந்து குளிரினால் தாக்கப் பட்டாலும் பொறுத்துக் கொள்ளுதல்

உஷ்ண பரிஷஹஜயம்: துறவறத்தில் காடுகளில் தவம்  செய்யும் போது வெப்பத்தினால் ஏற்படும் துன்பங்களை, வேதனைகளை சகித்துக் கொள்ளல்.

தம்சமசக பரிஷஹஜயம்: முக்தி யடையவேண்டும் என்ற நோக்கத்துடன், ஈக்கள், தெள்ளுப்பூச்சி, கொசு, முட்டைப்பூச்சி, புழு, எறும்பு, தேள் போன்ற பூச்சுக் கடியினால் வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்ளல்.

நாக்ந்ய பரிஷஹஜயம்:  ஆடையில்லாமல் குழந்தையை போல் நிர்வாணத்தை தழுவினாலும் வெட்கம் கொள்ளாமல் இருத்தல். மேலும் ஆடையின்றி  இருப்பதால் பொருள் வேண்டி யாசித்தல், பாதுகாத்தல், ஊறு விளைவித்தல் போன்ற பாபச் செயல்களை செய்யாது இருத்தல்.

அரதி பரிஷஹஜயம்: தனிமையில் ஜபம், தவம், தியானம் போன்ற வற்றை செய்யும் போது சங்கீதம், நடனம், வாத்திய இசை முதலானவையை விருப்பம் கொள்ளாமல் ஸம்யமத்தின் மீதே விருப்பமாக இருத்தல்.
 

ஸ்த்ரீ பரிஷஹஜயம்: அடைய விருப்பம் கொண்டு பெண்கள் காதல் கொண்டு கண்ஜாடை, அங்கபாவம் செய்து மனத்தை மயக்க முயற்சி செய்தாலும் அதில் மயங்காது இருத்தல்.


சர்யா பரிஷஹஜயம்: ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் போது முள், கல் தாக்கினாலும் துக்க மடையாமல், யானை, குதிரை, தேர் போன்ற வாகன்ங்களை விட்டு விட்டேனே என்று மனதில் கஷ்டப்படாமல், உண்டான வலியை பொறுத்துக் கொள்ளுதல்.

நிஷத்யா தியானம் முடிவடையும் வரை தான் நியமம் செய்து கொண்ட ஆசனத்தை விட்டு விலகாமல் இருப்பது; உடலுக்கு உபத்திரம் உண்டானாலும் அதனை பொறுத்துக் கொள்ளல்.

சய்யா பரிஷஹஜயம்:  பாய், துணி போன்ற படுக்கையின்றி தரையின் மீது உறங்கும் போது ஏற்படும்  உறுத்தல்களை பொறுத்துக் கொள்வது.

ஆக்ரோ பரிஷஹஜயம்:  நீதி,நேர்மையற்றவர்கள், அயோக்கியர்கள் கடுஞ்சொல்லால் வைதாலும், ஆபாசமாக இகழ்ந்தாலும், மனவருத்தம் கொள்ளாது இருத்தல்.

வத பரிஷஹஜயம்:  தீயவர்கள் வாள்,கத்தி போன்ற ஆயுதங்கள்,  தடி, மண், கல் போன்றவற்றால் தாக்கினாலும், சித்ரவதையை பொறுத்துக் கொள்ளல்.

யாசநா பரிஷஹஜயம்:  கடும்  தவத்தினால் உடல வற்றி, இரத்த குழாய்கள் மட்டுமே உள்ள தேகமாக இருந்தும், உயிர் போகும் தருவாயிலும் ஆகாரம் வேண்டி குரல் கொடுக்காமல் இருத்தல்.

அலாப பரிஷஹஜயம்:  உண்வுப் பொருள் கிடைக்காமல்  போனால் கிடைக்க வில்லையே என்று கஷ்டப்படாமல் பொறுத்துக் கொள்ளல்.

ரோக பரிஷஹஜயம்: உடலுக்கு ஏற்பில்லாத உணவை உண்பதால், பானத்தை அருந்துவதால் மூட்டு வாதம், உடல் வலி போன்ற வற்றால் பாதிக்கப் பட்டாலும், அதனை சரி செய்ய வைத்தியம் தெரிந்தாலும், உடல் பற்றின்மையால் நிவாரணம் செய்யாமல் பொறுத்துக் கொள்வது.

த்ருணஸ்பர்ஸ பரிஷஹஜயம்: காய்ந்த புல், கூர்மையான கல், முள், கூழாங்கற்கள், கண்ணாடித்துண்டு போன்றவைகள் நடந்து செல்லும் போது பாதத்தில் குத்தினாலும் , ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ளுதல்.

மல பரிஷஹஜயம்: நீருடலிக்கும் இம்சை  தரக்கூடாது  என்பதால் சாகும் வரை குளிக்காமல் இருப்பதால், வியர்வை போன்றவற்றில் படியும் தூசு, மண் போன்ற வற்றை பொருட்படுத்தாது, அதனால் உடலை சொறிவதும்  இல்லை. தோல் நோய்கள் வந்தாலும்  பொறுத்துக் கொள்ளல்.
 
சத்காரபுரஸ்கார பரிஷஹஜயம்: கெளரவத்திலும், அவமானத்திலும் சம்மான மனதினையுடையவராக இருத்தல். புகழ்பவரிடத்தும் விருப்பமும், இகழ்பவரித்து வெறுப்பும் கொள்ளாதிருத்தல், தன்னை அழைத்து யாரும் கெளரவம்  செய்ய வில்லை என்று மனதாலும்  நினைத்து  துன்பப்படாமல் இருத்தல்.

ப்ரஜ்ஞா பரிஷஹஜயம்: யான் எல்லோரைக்காட்டிலும் விரத அனுஷ்டானங்களை மேற்கொள்பவன், எல்லோரும் எனக்கு  கீழானவர்களே  என்று அகங்காரம் கொள்ளாது,  கர்வமடையாது  இருத்தல், அறிவுச் செருக்கை வெற்றி கொளல்.

அஜ்ஞானா பரிஷஹஜயம்: பகுத்தறிவு இல்லாதவன், முட்டாள் அஞ்ஞானி என்று ஏளனம் செய்தாலும் பொறுத்துக் கொள்ளுதல், கடுந்தவம் புரிந்தாலும்  உயர்ந்த ஞானம் பெறவில்லையே என வருத்தமுறாது இருத்தல்.

தர்சநாநி பரிஷஹஜயம்: உயர்ந்த பற்றின்மை, உள்ளத்தூய்மை, ஜடப்பொருள் பற்றி உண்மையான அறிவு,  அரஹந்தர் வணங்குதல் போன்றவை இருந்தாலும் உயர் ஞானம் அடைய வில்லையே என்றும்.
நீண்ட நாள்  உபவாசம் போன்றவை செய்து அற்புத ஆற்றல் எதும் கிட்டவில்லை. எனவே இவ்வழி பொருளற்றதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் புலப்படுகிறது. துறவறம் ஏற்றது வீண். இவ்வாறெல்லாம் சிந்தாக்காமல் உண்மையான நம்பிக்கையில் இருப்பது.

ஆகிய இருபத்திரண்டும் பரிஷஹ ஜெயம் ஆகும்
-----------

எந்த வினை உதயத்தினால் பரிஷகங்கல் ஏற்படுகின்றது…

-------------------- 



ஸுஷ்மஸாம்பராய சத்மஸ்த வீதராகயோஸ்சதுர்தச – சூ#10


सूक्ष्मसांपरायछद्मस्थवीतरागयोश्चतुर्दश


Sukshmasamparaya-chhadmastha-vitaraga-yoshchaturdasha


ஸுஷ்மஸாம்பராய – பத்தாவது குணஸ்தானம்; சத்மஸ்த வீதராக – பதினோராவது, பன்னிரண்டாவது குணஸ்தானம்; யோஸ்சதுர்தச – பதினான்கு வகை பரிஷகங்கள் உண்டாகும்.


There are fourteen stages of transmigratory soul. Fourteen afflictions occur in the case of the saints in the tenth and twelth stages. These are hunger, thirst, cold, heat, insect bite, pain arising from roaming, uncomfortable couch, injury, lack of gain, illness, pain inflicted by blades of grass, dirt, arrogance of learning and despair or uneasiness arising from ignorance.  


பசி, தாகம், குளிர், உஷ்ணம், பூச்சுக்கடி, நடத்தல், வசதியில்லாத படுக்கை, சித்ரவதை, லாபமின்மை, வியாதி, குத்துததால் வரும் வலி, அழுக்கு, அறிவுச் செருக்கு மற்றும் அஞ்ஞானம் ஆகிய பதினான்கு பரிஷகங்களும் 10, 11, 12 குணஸ்தான நிலையில் உண்டாகலாம்.
மற்ற எட்டும் மூன்று நிலைகளில் ஏற்பட வாய்ப்பில்லை.

இத்தனை துன்பங்களும் ஏற்பட வேண்டும் என்ற நியதி இல்லை.

பன்னிரண்டாவது குணத்தான  வீதராக சத்மஸ்த முனிகளுக்கு மோகனீய வினை இல்லை. அதன் உதயத்தால் வரும் எட்டு வகை துன்பங்கள் உண்டாகாது.
----------
அடுத்து அரஹந்த பகவானுக்கு உண்டாகும் பரிஷஹங்கள் பற்றி….

------------------------




ஏகாதச ஜினே – சூ#11 = (312)


एकादश जिने


Ekadasha jine


ஏகாதச – பதினொன்று; ஜின – பதிமூன்றாம் குண்ஸ்தான சயோக கேவலி ஜிநபகவானுக்கு.


From the point of pleasant feeling producing karmas eleven affictions with the exception of lack of gain, arrogance of learning and despair or uneasiness arising from ignorance described in the previous sutra, occur to the Omniscient Jina. However, in the absence of deluding karmas, these afflictions are ineffective as far as Omniscient Jina is concerned.  


பதிமூன்றாவது குணஸ்தானத்தில் உள்ள ஜினருக்கு பதினோறு துன்பங்கள் உண்டாகலாம்.

ஜின பகவானுக்கு வேதனீய கருமம் உண்டு. அதனால் உண்டாகும் பரிஷஹகம் உண்டென்று கூறுவர்.  ஆயினும் பகவானுக்கு மோஹனீய கர்மம் இல்லாமலிருந்ததால் பசி முதலான வேதனைகள் உண்டாவதில்லை. வேதனீய கர்மம் இருப்பதினால் பதினோரு பரிஷகங்களும் இருக்கும் என்று உபசாரத்தினால் கூறப்படும்.
-------------

22 வகையான துன்பங்களும் எவருக்கு ஏற்படும்…..

----------------- 



பாதரஸாம்பராயே ஸர்வே  - சூ# 12 = (313)


बादरसांपराये सर्वे


Badarasamparaye sarve


பாதரஸாம்பராயே – ஸ்தூல கஷாயம் உள்ள முனி நிலையில்; ஸர்வே  - எல்லா கஷாயங்களும் இருக்கும்.


All the affictions arise in the case of the ascetic with gross passions in sixth to nineth stage.  


வெளிப்படையாக, அதிக அளவு கஷாயங்கள் உள்ள ஆறு முதல் ஒன்பதாவது  குணஸ்தானம் வரை உள்ளவர்களுக்கு எல்லா பரீஷஹங்களும் உண்டு.

இந்த குணஸ்தானங்களில் கஷாயங்கள் உதயமாவதால் எல்லா பரீஷஹங்களும் ஏற்படுகின்றன. ஏனெனில்  இதில் தர்சன மோகனீய வினை உதயம் இல்லை.
சம்யக்வ மோகனீய வினை உதயம் ஏழாம் குணஸ்தானம் வரையிலே தான் தோன்றுகின்றன.

ஐந்தாம் குணஸ்தானம் வரை யுள்ள ஸ்ராவகர்களுக்கு பரீஷஹ ஜெயம் இல்லை.
--------------
எந்த வினை உதயத்தினால் என்ன பரீஷகம் என்று அடுத்து…….


-----------------------

ஜ்ஞானாவரணே ப்ரஜ்ஞாஜ்ஞாநே  - சூ# 13 = (314)


ज्ञानवरणे प्रज्ञाज्ञाने


Gyanavarane pragyagyane


ஜ்ஞானாவரணே – அறிவு மறைப்பு வினை உதயத்தால்;  ப்ரஜ்ஞாஜ்ஞாநே – பிரஜ்ஞா, அஞ்ஞான பரீஷஹங்கள்தோன்று கின்றன.


Arrogance of learning and ignorance are caused by knowledge-covering karmas.  


மதி மற்றும்  சுருதி ஞானாவரண கருமம் இருப்பதால் அஞ்ஞான பரீஷகம் தொடர்ந்து இருக்கிறது.

இவ்வினைகள் க்ஷயோபசமம் ஆவதால் பரீஷஹம் உண்டாகிறது. மற்ற மூன்று அவதி, மன பர்யய, கேவல ஞானாவரணியங்களின் காரணமாக அறிவு செருக்கு  உண்டாகிறது. அதனால் பிரக்ஞாபரீஷஹம் ஞானாவரண கரும உதயத்தால் தோன்றுகிறது.
-------------

மற்ற பரீஷகங்களின் வினைகள் பற்றி…. 

--------------- 


தர்சனமோஹாந்தராயயோரதர்சனா லாபெள – சூ#14 = (315)


दर्शनमोहान्तराययोरदर्शनालाभौ


Darshana-mohantarayayora-darshanalabhau



தர்சனமோஹாந்தராயயோ – தர்சன  கோஹனீயம் மற்றும் அந்தராய கர்ம உதயத்தால்; அதர்சனா லாபெள – முறையே அதர்சனம் மற்றும் அலாப பரீஷகம் வரும்.


Lack of faith and lack of gain are caused by faith-deluding and obstructive karmas. 
 

அதர்சன பரீஷஹம் (misbelief) – கடுந்தவம் புரிந்தும், ஞானம், ரித்தி ஆகிய சிறப்புகளைப் பெற முடியவில்லையே என எண்ணுதல்.

அலாபெள பரீஷஹம் (lack of gain) – ஆகாரம் கிடைக்காத போழ்தில் துக்கப்படுதல்.

இரண்டும் முறையே தர்சன மோகனீய வினை மற்றும் அந்தராய வினை உதயத்திற்கு வரும்போது ஏற்படுகின்றன.

--------------------
தர்சன மோகனீயம் – காட்சி மயக்கம்- சம்யக்தவ மோகனீயம் இருக்கும் போது சல, மல, அகாட் குற்றங்கள் தோன்றுகின்றன.

சல – சம்யக்த்வம் இருந்தும் கூட ஆப்தன், ஆகமம் மற்றும் பொருள்களின் (பதார்த்தம்) விஷயங்களில் விகல்பங்கள் தோன்றுவது. அதாவது இதுவா, அதுவா, எது சரி என்று நிர்ணயம் செய்வதில் சலனம் கொண்டிருத்தல்.

மலம் – ஐயம் முதலிய குற்றங்களினால் நற்காட்சி மலினப்படுவது.

அகாட் – ஒருவர் மற்றொருவருக்கு கர்த்தாவாக  ஆகமுடியாது என்பதை அறிந்திருந்தும், விருப்பத்தின் காரணமாக அச்சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் இருத்தல். நிலையில்லாது இருத்தல். ஆன்மீக அறிவு கூட உலகியல் நன்மைக்கு பயனளிக்கும் என்று நம்பி இருத்தல்.

இக்குற்றங்களை கருத்தில் கொண்டுதான் அதர்சன பரீஷஹம் கூறப்பட்டுள்ளது.
-------------
அடுத்து இரண்டாவது மோகனீய வினை  எத்தனை பரீஷஹகங்களை ஏற்படுத்துகிறது…


--------------



சாரித்ரமோஹே நாக்ன்யாரதி ஸ்திரீ நிஷத்யா க்ரோச யாசநாஸத்கார புரஸ்காரா: - சூ#15 = (316)


चारित्रमोह नाग्यानरतिस्त्रि निषद्याक्रोशयाननासत्कार पुरस्काराः


Charitramohe nagnyarati-stri-nishadyakrosha-yachana-satkara-puraskarah



சாரித்ரமோஹே – சாரித்ர மோகனீய வினை உதயத்தால்; நாக்ன்ய – நிர்வாணம்; அரதி – ஆர்வமின்மை; ஸ்திரீ – பெண்; நிஷத்யா – அமர்ந்திருக்கும் நிலை; ஆக்ரோச – அவமானச் செயல்கள்;  யாசநா – யாசகம்; ஸத்கார – பயபக்தி; புரஸ்காரா: - கெளரவம், மரியாதை ஆகியவற்றால் பரீஷஹங்கள்.


The affiction of naked-ness, absence of pleasures, women, discomfort of postures, scolding, begging and reverence and honour are caused by conduct-deluding karmas.


சாரித்ர மோகனீய வினையினால் நிர்வாணம், நாட்டமின்மை, பெண், நிஷத்யா (அமர்ந்த நிலை), அவமானம் உண்டாக்கும் செயல், யாசகம் பெறுதல், பயபக்தி/ மரியாதை/கெளரவம் போன்ற ஏழு பரீஷஹங்கள் ஏற்படுகின்றன. 

-----------
எஞ்சியுள்ள மற்ற பரீஷஹங்களுக்கு காரணமானவை எவை…..


--------------



வேதநீயே சேஷா: - சூ#16 = (317)


वेदनीये शेषाः


Vedaniye sheshah


வேதநீயே – வேதனீய வினை உதயத்தால்; சேஷா: - எஞ்சியுள்ள பரீஷஹங்கள்.


The other afflictions are caused by feeling producing karmas.


வேதனீய ஸத்பாவத்தால் உடலில் உணவு குறைவது, நீர் குறைவது, பருவ காலங்களில் குளிர்/வெப்பம் ஏற்படுவது, பூச்சிக் கடிப்பது; முள் குத்துதல்; பிறரால் தாக்கப்படுவது; ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது; வியாதி ஏற்படுவது; துருபினால் அவதி; வியர்வை/ அழுக்கு சேர்தல் போன்ற துன்பங்கள் வேதனீய வினை உதயத்தால் ஏற்படுகின்றன.

-----------
பகவானுக்கு வேதனீய கருமம் இருந்தாலும், மோகனீய கருமம் இல்லாததால் அதனால் வரும் பரீஷஹங்கள் இல்லை.
----------
எத்தனை பரீஷஹங்கள் ஒரு ஆன்மாவில் ஒரே நேரத்தில் உண்டாகும்…..

---------------- 

 ஏகாதயோ பாஜ்யா யுகபதேகஸ்மிந்நைகோநவிம்சதே: -  சூ#17 = (318)


  एकादयो भाज्या युगपदेकस्मिन्नै कोनविंशतेः


 Ekathye paajyaa yugapathegasmindnaikonavimsathe:



ஏகாதய – ஒன்றுமுதல்; பாஜ்யா – இருக்கமுடியும்; யுகபத் – ஒன்றாக; ஏகஸ்மிந் – ஒரு ஜீவனிடத்தில்; ஏகோநவிம்சதே: - பத்தொன்பது பரீஷகம் வரை.

A maximum of nineteen afflictions can occur simultaneously since one out of cold and heat and one out of pain arising from roaming, discomfort of postures and uncomfortable couch can occur at a time.


பரீஷகங்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக ஒன்று முதல் பத்தொன்பது வரை எத்தனை வேண்டுமானாலும் உண்டாகலாம்.

------------ 
படுத்தல், நடத்தல், அமர்தல் இவற்றில் ஒன்று தான் ஒரே நேரத்தில் இருக்க முடியும். உஷணம், குளிரும் அது போலவே. இவற்றில் 1+1 = 2; மீதம் 17 பரீஷஹங்களுடன் சேர்த்து மொத்தம் 19 ஒரு நேரத்தில் இருக்க முடியும்.

சுருதஞானத்தால் அதிக ஞானம் இருக்கலாம். அதனால் பிரஜ்ஞா பரீஷகமும்,
அவதிஞானம் இல்லாவிடில் அஞ்ஞான பரீஷகமும் ஒரே நேரத்தில் இருக்க முடியும்

----------------- 

வினை  செறிப்புக்குக் காரணமான ஒழுக்கங்களைப்பற்றி…..

----------------

ஸாமாயிகச்சேதோபஸ்தாபநாபரிஹாரவிசுத்தி ஸுக்ஷ்மஸாம்பராயயதாக்யாதமிதிசாரித்ரம் – சூ#18 = (319)


सामायिकच्छेदोपस्थापना परिहार विशुद्धिसूक्ष्म सांपराय थाख्यातमितिचारित्रम्


Samayikachchhedopasthapana-pariharavishuddhi-sukshma-Samparaya-yathakhyatamiti charitram



ஸாமாயிக -  சாமாயிகம்; சேதோபஸ்தாப – அஹிம்சை விரதத்தில் ஏற்பட்ட குறையினை நிவர்த்தி செய்து மீண்டும் ஒழுக்க நிலைக்கு திரும்புதல்; பரிஹாரவிசுத்தி – இம்சை விலகும் ஒழுக்கம்;  ஸுக்ஷ்மஸாம்பராயம் – நுட்பமான  லோபம்; யதாக்யாதம் – குற்றமற்ற ஒழுக்கம்; இதிசாரித்ரம் – இவை சாரித்திர  ஒழுக்கமாகும்.


Equanimity, reinitiation in case of failure to keep the vow by taking to the vow again after penance, purity of non-injury, slight passion for greed and subsidence or dissociation of deluding karmas are the five kinds of conduct.  


சாமாயிகம் – நல் தியானம்.  சாதுக்கள் மேற்கொள்ளும் சாமாயிகம் அவர்களின் அன்றாட  கடமையாகும். அத்தகைய தியானம் அவரவர் நிலைக்கு ஏற்ப, அதிகாலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளில் மேற்கொள்ளப்படும்.

இதில் மூன்று நிலைகள் உள்ளன குறைந்த அளவு (48 நிமிடங்கள்), மத்திம கால அளவு (96 நிமிடங்கள்), உத்தம கால அளவு (144 நிமிடங்கள்) என்பவை யாகும். இத்தியானம் நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ மேற்கொள்ளப்படும்.

சேதோபஸ்தாபம்:  இதில் ஏதும் குறை  ஏற்படின் கழுவாய் செய்து மீண்டும் பழைய ஒழுக்க நிலைக்கு கொண்டு வருதல்.

பரிஹார விசுத்தி: எந்த ஒழுக்கம் உயிருக்கு துன்பம் செய்யாத தன்மையுடன் இருக்கிறதோ அது பரிஹார  விசுத்தி யாகும்.
ஸுக்ஷ்ம சாம்பராய சாரித்ரம்: மற்ற எல்லாக் கஷாயமும் நீங்க லோப கஷாயம் மட்டும் ஒரளவு நிற்கும் நிலையுள்ள ஒழுக்கம்.

அதாக்யாத சாரித்ரம்: மோகனீய வினை முழுதளவு கேடு  நிலையோ, கேடு-தணிவு நிலையோ ஏற்படும் போது ஆன்மா தூய்மையான நிலையில் இருப்பது.

இவை ஐந்தும் ஒழுக்க வகைகளாகும்.
----------

அடுத்து தவமும் நிர்ஜரைக்கான புறத்தவம், அகத்தவத்தில் புறத்தவம் பற்றி காண்போம்….
-------------------- 



புறத்தவம் பற்றி.





அனசனாவமெளதர்ய வ்ருத்தி பரிஸங்க்யான ரஸபரித்யாக விவிக்த சய்யாஸன காயக்லேசா பாஹ்யம் தப: - சூ#19 = (320)


अनशानावमोदर्यवृत्तिपरिसंख्यानरसपरित्यागविविक्तसय्यासनकायक्लेशा बाह्य तपः


Anashanavamaudarya-vrttiparisankhyana-rasaparityaga-viviktashayyasana-kayaklesha bahyam tapah



அனசன – உணவு தியாகம்; அவமெளதர்ய – குறைந்த அளவே உண்ணுவது;  வ்ருத்தி பரிஸங்க்யான – உணவு எடுக்கும் முன் சில நியமங்களை  ஏற்பது; ரஸபரித்யாக – உணவில் ஏதேனும் ஒன்றிரண்டை தியாகம் செய்வது; விவிக்த சய்யாஸன – தனி இடத்தை தேடுவது; காயக்லேசா – உடல் சுகம் தியாகம் செய்தல்; பாஹ்யம் தப: - புறத்தவங்களாகும்.


The external austerities are fasting, reduced diet, special restrictions while accepting food from a household, giving up stimulating and delicious dishes, lonely habitation and mortification of the body.


அனசன தவம்: சாதனை முதலிய நோக்கமின்றி புலனடக்கம், ஒழுக்கம் மற்றும் தியானம் பெருகுவதற்கு, விருப்பங்களை அழிப்பதற்கு, ஆகம ஞானம் வளர்ச்சி யடைவதற்கு, நால்வகை உணவுகளான உண்பன, தின்பன, நக்குவன,  பருகுபவன வற்றை தியாகம் செய்தல்.


அவமெளதர்ய தவம்: புலனடக்கத்தில் விழிப்புடன் இருக்க, சோம்பலின்றி தியானம், ஸ்வாத்யாயம்  முதலியன செய்வதற்கு, ஆசையினை விலக்குவற்கும் வயறு நிரம்ப உண்ணாமல் குறைந்த அளவே உண்ணுதல்.


விருத்தி பர்ஸங்க்யான தவம்: உணவு ஏற்பதில் விதி-நியமம் ஏற்பது. ஆகாரத்தின் மீது நாட்டமில்லாமல் இத்தனை  முறை,  இத்தனை வீட்டில், இந்த தெருவுக்குள் உணவு கிடைத்தால் ஏற்பேன் என உறுதி ஏற்பது.


ரசபரித்யாக தவம்: நெய், பால், தயிர்,  உப்பு, எண்ணெய் இவற்றை முழுமையாகவே, சிலவற்றையோ தியாகம் செய்வது. இந்திரியங்களை அடக்கவும், தூக்கத்தை வெல்லவும், சுவாத்யாயம் சிறப்பாக செய்யவும் இத்தியாகத்தை ஏற்பது.


விவிக்த சய்யாசனம்: தனியான, யாரும் இல்லாத, பாதகம் ஏற்படாத இடத்தில் தனது பிரம்மச்சர்யம், தியானம், ஞான வளர்ச்சி முதலியன  இடையூறு ஏற்படாமல் இருக்க பாய், படுக்கையின்றி தரையில்  உறங்குதல்.


காயக்லேச தவம்: உடலின் மீதுள்ள  பற்றினை நீக்கி, வினையுதிர்ப்பிற்காக மரத்தின் கீழ் வெய்யில், மழை, குளிர் முதலிய துன்பங்களை சகித்துக் கொண்டு ஆசனத்தோடு தபம் செய்தல்.


இவையாறும் பாஹ்ய தபமாகும்.
---------------------

அடுத்து அகத்தவம் பற்றி …..

........................ 


அகத்தவம் / அந்தரங்க தபஸ்



ப்ராயஸ்சித்தவிநயவையாவ்ருத்யஸ்வாத்யாய வ்யுத்ஸர்க  த்யாநாந்யுத்தரம் – சூ#20 = (321)


प्रायश्चिविनय वैया वृत्त्यस्वाध्याय व्युत्सर्गध्यानान्युत्तरम्


Prayashchitta-vinaya-vaiyavrttya-svadhyaya-vyutsarga-dhyananyuttaram



ப்ராயஸ்சித்த – பரிகாரம் தேடுதல்; விநய – பணிவு காட்டுதல்; வையாவ்ருத்யம் – சேவை புரிதல்; ஸ்வாத்யாய – அறநூல் வாசிப்பது; வ்யுத்ஸர்க – அக,புற பற்றுக்களை  விடுதல்;  த்யாநாந் – மனதை ஒருநிலைப்படுத்தல்; உத்தரம் – அகத்தவமாகும்.


Expiation, reverence, service to ascetic, study, renunciation and meditation are the internal austerities.  


பிராயசித்தம்; - கஷாயங்களின் உந்துதலால், விழிப்பின்மையின்றி செய்த குற்றங்களை நீக்குதல்/ கழுவாய் ஏற்றல்.

விநய தவம்: ரத்னத்திரயம் மற்றும் அதனையுடையவரிடம் பணிவு காட்டுதல்.

வையாவ்ருத்யம்: உடம்பு அல்லது யோக்ய பொருள்களின்  அவசியத்திற்கு ஏற்றார் போல் மோக்ஷ மார்க்கியர்களுக்கு சேவை செய்தல்.

ஸ்வாத்யாயம்: தீர்த்தங்கரர் / நல்ல ஆச்சாரியர் பரம்பரையில் அந்த சாஸ்திரங்களை படித்தல், சிந்தித்தல், எழுதுதல் ஆகியவை.

வியுத்சர்க்கம்: மோஹ, ராகத்தை, யான் எனது போன்றவற்றை தியாகம் செய்தல்.

தியானம்: கெட்ட சிந்தனை இல்லாமல் நல்ல தரும, சுக்ல தியானத்தோடு ஒரு முனைப்பாக இருத்தல்.

இவையாறும் அகத்தவமாகும்.
------------------

அதன் உட்பிரிவுகளைக் காண்போம்…..

----------------- 


அகத்தவத்தின் உட்பிரிவுகள்



நவசதுர்தசபஞ்சத்விபேதா யாதக்ரமம் ப்ராக்த்யானாத் – சூ#21 = (322)


नवचतुर्दश पञ्चद्विभेदा यथाक्रमं प्रागध्यानात्


Navachaturdashapanchadvibheda yathakramam pragdhyanat



நவசதுர்தசபஞ்சத்விபேதா – 9,4,10,5,2 பிரிவுகள்; யாதக்ரமம் – முறையே; ப்ராக் – முன்பு சொன்ன (ஐந்து தவங்கள்) த்யானாத் – தியானத்திற்கு.

These are of nine, four ten, five and two kinds of expiation, reverence, service, study and renunciation respectively.  


தியானத்திற்கு முன்பு உள்ள அகத்தவங்கள் முறையே

பிராயச்சித்தம் ஒன்பது, விநயம் நான்கு, வையாவிருத்யம் பத்து வகைகள், சுவாத்யாயம் ஐந்து, வியுத்சர்க்கம் இரண்டு பிரிவுகளுடன் உள்ளன.

-----------
அகத்தவத்தின் பிரிவுகளின் தன்மைகளைப் பற்றி காண்போம்….


--------------------- 


ப்ராயச்சித்த பிரிவுகள்



ஆலோசனப்ரதிக்ரமணததுபயவிவேகவ்யுத்ஸர்கதபச்சேதபரிஹாரோபஸ்தாபனா: - சூ#22 = (323)


आलोचनप्रतिक्रमणतदुभय विवेक व्युतसर्गत पश्छेदपरिहारोपस्थापनाः


Alochana-pratikramanatadubhaya-viveka-vyutsarga-tapashchheda-pariharopasthapanah



ஆலோசன – குற்றங்களை ஒத்துக் கொள்ளுதல்; ப்ரதிக்ரமண – குற்றத்தை தானே உணர்ந்தல், நீக்குதல்; ததுபய – இருவழியிலும் குற்றங்களை நீக்குதல்; விவேக – குற்றத்திற்கு கழுவாயாக ஆகாரம், நீரை விடுதல்; வ்யுத்ஸர்க – உடற்பற்றை நீக்குதல்; தப – உபவாசம்; ச்சேத – குறிப்பிட்ட காலம் வரை தீக்கையை கைவிட ஆணை வழங்குதல்; பரிஹார – குறிப்பிட்ட காலம் வரை சங்கத்தை  விட்டு நீக்கி வைத்தல்; உபஸ்தாபனா – பழைய விரதம் நீக்கி புதிய தீக்கை கொடுத்தல்


Confession, repentance, combination of confession and repentence, discretion, giving up attachment to the body, penance, suspension, expulsion and reinitia-tion are the nine types of expiation.  


பிராயசித்த தபத்தின் ஒன்பது பிரிவுகள்;


ஆலோசன பிராயசித்தம்:  விழிப்பின்னையால்(பிரமாதத்தால்) ஏற்பட்ட  குற்றங்கள் பத்து வகைகளையும் குருவிடம் உண்மையைக் கூறி கழுவாய் கோருவது.


ப்ரதிக்ரமண:  செய்த  குற்றத்தை தானே உணர்ந்து இனி ஏற்படாமல் இருக்க சிந்தித்தல்.


ததுபய: மேற்சொன்ன இரண்டையும் செய்து, அப்படி செய்யும் போது குற்றங்கள் கவனமாக சோதிக்கப்படுதல்.


விவேக:  குற்றத்திற்கு கழுவாயாக விருப்பமான ஆகாரம், நீரை குறிப்பிட்ட காலம் வரை விடுதல்;


வ்யுத்ஸர்க: உடல்  வருத்தம்  பாராது நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ தபம் மேற் கொள்ளல்.


தப: அனசனம், அவமெளதர்யம், ரசபரித்யாகம் முதலியவற்றைக் குரு சொல்லுதல்  போன்று பிராயச்சித்தம் செய்வது.


சேத: ஒரு நாள், ஒரு பக்ஷம், ஒரு மாதம் தீக்ஷையை விட வேண்டும் எனச் சொல்லி காலத்தை குறைப்பது.


பரிஹார: பெரிய குற்றம் செய்தாய் என குறிப்பிட்ட காலம் வரை சங்கத்தை  விட்டு நீக்கி வைத்தல். பிராயச்சித்தத்திற்காக அவ்வாறு செய்வது.


உபஸ்தாபனா: மகா தோஷம் செய்து விட்டால் பழைய விரதம் நீக்கி புதிய தீக்கை கொடுத்தல்.


இவை அனைத்தும் பிராயச்சித்த பிரிவுகளாகும்.

---------------

வினயத்தின் பிரிவுகளை அடுத்து…..

------------------- 


வினய பிரிவுகள்




ஞானதர்சனசாரித்ரோபசாரா: - சூ#23 = (324)



ज्ञानदर्शन चारित्रोपचाराः


Gyanadarshana-charitropacharah



ஞான – முக்திக்கான ஞானம் பெற; தர்சன – நற்காட்சி பெற; சாரித்ர – நல்லொழுக்கத்திற்கு; உபசாரா – அறவோர்களிடம் – பணிவு காட்டல்.


Reverence to knowledge, faith, conduct and the custom of homage are the four kinds of reverence.  



நல்ஞானம், நல்நம்பிக்கை, நல்லொழுக்கம் மற்றும் இம்மூன்றினையும்; அவற்றை அடைய பெற்றிருக்கும் அறவோர்களிடம் பணிவு காட்டல் ஆகிய நான்கும் விநய தவத்தின் பிரிவுகளாகும்.

ஞான நூல்களைப் படிப்பது, ஞானியரிடமிருந்து ஞானத்தை பெறுவது, அதனை  செயல் படுத்துவது, பயின்றதை சிந்திப்பது போன்றவை ஞான வினயம் ஆகும்.

நற்காட்சியில் ஐயம் போன்ற குற்றங்களின்றி உண்மையான தத்துவங்களின் மீது பணிவு காட்டுவது தர்சன வினயம்.

சம்யக்திருஷ்யின் நல்லொழுக்கத்தை சிந்தித்து, அதன்  படி ஒழுகுதல் சாரித்ர வினயம் ஆகும்.

ஆசாரியர் போன்ற ஞானியர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதும், வணக்கம் செய்வதும், அவர் இல்லாத போது அவரது  குணங்களை மனம், மொழி, மெய்யால் சுத்தியுடன் புகழ்வது, பாடுவது போன்றவை உபசார விநயம் ஆகும்.
-------------

வையாவிருத்யத்தின் பிரிவுகளைக் காண்போம்…..

---------------------- 


வையாவிருத்யத்தின் பிரிவுகள்




ஆச்சார்யோஉபாத்யாயதபஸ்விசைக்ஷக்லாநகண- குலஸங்கஸாதுமனோஜ்ஞாநாம் – சூ#24 = (325)


आचार्योपाध्याय तपस्विशैक्ष ग्लानगण कुल संघ साधु मनोज्ञानाम्


Acharyopadhyaya-tapasvi-shaiksha-glana-gana-kula-sangha-sadhu-manogyanam



ஆச்சார்ய – ஆசாரியர்; உபாத்யாய – உபாத்யாயர்; தபஸ்வி – தவம் புரிபவர்; சைக்ஷய – சீடர்; க்லாந – நலம் குன்றிய முனிவர்; கண- வயோதிக முனிவர்கள்;  குல – சீட பரம்பரை; ஸங்க – நான்கு வகை முனிகள் கூட்டம்; ஸாது – நீண்ட நாள் துறவி; மனோஜ்ஞாநாம் – மக்களிடையே பிரபலமான முனிவர் ஆகிய பத்தும் வையாவிருத்யத்தின்  வகைகள்.


Respectful service to the Head (acharya), the preceptor, the ascetic, the disciple, the ailing ascetic, the congregation of aged saints, the congregation of disciples of a common teacher, the congregation of the four orders (of ascetic, nuns, laymen and laywomen), the long-standing ascetic and the ascetic of high reputation are the ten kinds of service.  


ஆசாரத்தோடு கூடி விரதம்,  தீக்ஷை, பிராயச்சித்தம் தருபவர் ஆசாரியர், அந்த பரமேஷ்டிக்கு சேவை செய்ய வேண்டும்.

மோக்ஷத்திற்கான சாஸ்திரம் படிக்கவும், ஞானம் பெறவும் யாரிடம் முடிகிறதோ அந்த உபாத்யாய பரமேஷ்டிக்கு சேவை செய்ய வேண்டும்.

நீண்ட நாள் உபவாசம், பெரிய மாச உபவாசம் போன்ற பெரிய உபவாசம் செய்கிற முனிவர் தபஸ்வி யாகிறார், அவருக்கும் சேவை செய்ய வேண்டும்.

ஆகம சீலங்களை  கற்றறிந்த சைக்ஷயருக்கு சேவை செய்தல் வேண்டும்.

நோயினால் பீடிக்கப்பட்டு உபாதையுடன் இருக்கும் கிலாநருக்கு  சேவை செய்திட  வேண்டும்.

வயது முதிர்ந்த முனிவர்கள் கணம் என்று அழைக்கபடுகிறார். அந்த கணங்களுக்கு சேவை செய்தல் வேண்டும்.

தீக்ஷை கொடுக்கும் ஆச்சாரிய சீடர்கள் குழுவிற்கு குலம் என்பர். அவர்களுக்கும் சேவை செய்தல் வேண்டும்.

ரிஷி, யதி, முனி, அனாகார முனிவர்கள் சேர்ந்தது சங்கம் அகும். அச்சங்கத்திற்கும் சேவை செய்ய வேண்டும்.

தீக்ஷ பெற்று நிறைய ஆண்டுகள் ஆன ஸாது வுக்கு சேவை செய்திடல் வேண்டும்.

உலகம் போற்றும் பிரபலர், மக்களை ஈர்க்கும் தன்மையுடைய முனிவர்கள் மனோஜ்ஞர் எனப்படுவர். அவர்களுக்கும் சேவை செய்தல் வேண்டும்.

ஆக இந்த பத்து வகையினருக்கும் வையாவிருத்யம் செய்தல் அவசியம்.

------------
அடுத்து சுவாத்யாயத்தின் பிரிவுகளைக் காண்போம்….


---------------- 



வாசனாப்ரச்சனானுப்ரேக்ஷாம் நாயதர்மோபதேசா: - சூ#25 = (326)


वाचनापृच्छानानुप्रेक्षाऽऽम्नायधर्मोपदेशाः


Vachana-prchchhananuprekshamnaya-dharmopadeshah


வாசனா – வாசனா; ப்ரச்சனா – ப்ரச்சனா; அனுப்ரேக்ஷ, ஆம்நாய மற்றும் தர்மோபதேசா: - தர்மோபதேசம் இவ்வைந்தும் சுவாத்யாய தவத்தின் பிரிவுகள்.


Teaching, questioning, reflection, recitation and preaching are the five types of study.  


வாசனா: ஆகமங்களையும், அதன் பொருளகளை அறிதலும், பிறருக்கு கற்பித்தலும் வாசனா ஆகும்.

பிரச்சனா: அறிந்த ஆகமத்தில் ஐயம் போக்கவும், உறுதிபடுத்திக் கொள்ள வினா எழுப்பி நிவர்த்தி செய்தலும்.

அநுபிரேக்ஷை : அவ்வாறு அறிந்த வற்றை அவ்வப்போது சிந்தித்தல்.

ஆம்நாய: அறிந்த வற்றை உச்சரிப்பதும், மனனம் செய்வதும் ஆகும்.

தர்மோபதேசம்: அறவுரை ஆற்றுவது தர்மோபதேசம்.

------------
வியுத்சர்க்கம் பற்றி அடுத்து அறிவோம்..

---------------------------


பாஹ்யாப்யந்தரோபத்யோ:  -  சூ#26 = (327)


बाह्याभ्यन्तरोपध्योः


Bahyabhyantaropadhyoh


பாஹ்யாபதி – புறப்பற்று விடுதல்; அப்யந்தரோபதி – அகப்பற்று விடுதல் ஆகிய  (இரண்டும் வியுத்சர்கத்தின் பிரிவுகள்) 


Giving up external and internal attachments are two types of renunications.  


வியுத்சர்கம் – பற்று அறுத்தல், தியாகம் செய்தல், துறத்தல்.

ஆன்மப் பண்பிற்கு தொடர்பில்லாத மனைவி, மக்கள், தான்யம் முதலான வற்றை தியாகம் செய்வது பாஹய உபதி யாகும்.

ஆன்மனுடன் தொடர்புடைய சினம் முதலிய கஷாயங்களையும், அகங்காரம்,  மமகாரம் போன்ற வற்றை தியாகம் செய்வது அப்யந்தர் உபதி யாகும்.
---------
காயோத்ஸர்கம்: உடல் மீதுள்ள மோகத்தை குறிப்பிட்ட காலம் அல்லது ஆயுள் முழுவதும் விடுதல் ஆகும்.
----------
அடுத்து தியானத்தின் இலக்கணம் பற்றி……


---------------------------


உத்தமஸம்ஹநநஸ்யைகாக்ரசிந்தோநிரோதா த்யானமாந்தர் முஹூர்த்தாத்  -  சூ#27 = (328)


उत्तमसंहननस्यैकाग्रचिन्तानिरोधो ध्यानमान्तर्मुहूर्तात्


Uttama-sanhananasyaikagra-chintanirodho dhyana-mantarmuhurtat


உத்தமஸம்ஹநநஸ்யை – சிறந்த உடற்கட்டு உள்ளவர்க்கு; ஏகாக்ரசிந்தோநிரோதா – சிந்தனையை ஒருநிலைப்படுத்துவது;  த்யான – தியானம்; அந்தர் முஹூர்த்தாத் – ஒரு அந்தர் முஹூர்த்தம்.


Concentration of thought on one particular object is medi-tation. In the case of a person with the best physical structure or constitution it extends up to one muhurta.  


ஒரு பொருள் மீது சிந்தயை ஒருமுகப்படுத்தி பயிற்சி செய்வது தியானம் ஆகும்.

சிறந்த உடற்கட்டமைப்பு, அதாவது வஜ்ரவ்ருஷப நாராசம், வஜ்ர நாராசம் மற்றும் நாராசம் ஆகிய (உத்தம ஸம்ஹனனம்) மூன்று உடலமைப்புக்கு ஒரு அந்தர்  முஹூர்த்தம் (48 நிமிடங்கள்) வரை அது நீடிக்கும். அவர்களுக்கே தியானம் அமையும்.

முதல் வகைக்கு தொடர்ந்து ஒரு அந்தர் முஹூர்த்தம் ஆன்ம தியானம்  செய்து வந்தால் கேவலஞானம் உண்டாகும்.

மற்று இரண்டு வகை உடலமைப்பு உள்ளவர்களுக்கு ஒரு  அந்தர் முஹுர்த்தம் தரும தியானம் செய்ய  முடியும்.
-----------
ஒரு பொருளைப் பற்றி சிந்தனை  செய்தல் தியானம்.
---------
எது ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தப்படுகிறதோ,  வரையறைக்கு உட்படுத்தப்படுகிறதோ  அது கட்டுப்படுத்தல் ஆகும்.
--------------
அதாவது சஞ்சலமின்றி நெகிழ்வின்றி நிலையாக பிரகாசிக்கும் ஞானமே தியானம் ஆகும்.
-------------
தியானத்தின் பிரிவுகளை அடுத்து காண்போம்…

 ---------------- 

தியானத்தின் வகைகள்



ஆர்த்தரெளத்ரதர்ம்ய சுக்லாநி  - சூ#28 = (329)


आर्तरौद्रधर्म्यशुक्लानि


Arta-raudra-dharmya-shuklani


ஆர்த்த – வேதனை; ரெளத்ர – கொடுமை; தர்ம்ய – நல்ல;  சுக்லாநி- தூய


The painful (sorrowful), the cruel, the virtuous (righteous) and the pure are the four types of meditation.  


ஆர்த்த தியானம்: துக்கம் பற்றிய சிந்தனை, வேதனை.

ரெளத்ர தியானம்: கொடூரத்தில் ஆசை,  கெட்ட பரிணாமம், அதைப்பற்றிய சிந்தனை.

தரும தியானம்: அறம் சம்பந்தப்பட்ட செயல்களை சிந்தித்தல், அதாவது நல்லொழுக்கமுள்ள அல்லது நேர்மையான என்பது பொருள்.

சுக்ல  தியானம்: தூய்மையான  குணங்களுடன்  இருப்பது. ஆத்ம  சிந்தனையுடன் இருத்தல்.
-------
பிரசஸ்த, அப்ரஸ்த என  பிரிவுகளாகவும் சொல்லப்படுகிறது.

பிரசஸ்த - நல்ல அல்லது புண்ணியத்திற்கான தியானமாக தரும, சுக்ல தியானங்களையும்.
அபிரசஸ்த - தீய  அல்லது பாப தியானமாக ஆர்த்த,  ரெளத்ர தியானங்களையும் சுட்டுகிறது.
-----------

முக்திக்கு காரணமான தியானங்கள்  எவை….

------------------ 


மோட்சத்திற்குரிய  தியானம்





பரே மோக்ஷஹேதூசூ#29 = (330)


परे मोक्षहेतू


Pare mokshahetu


பரேமுன்னர் குறிப்பிட்டதில் கடைசி இரண்டு; மோக்ஷஹேதூமுக்திக்கு காரணமாகும்.

The last two (the virtuous and the pure) are the causes of liberation.  


அதாவது தர்ம தியானமும், சுக்ல தியானமும் விடுதலைப் பேறடைய காரணமாகிறது.

இவ்வாறு கருதுவதால் ஆர்த்த, ரெளத்ர தியானங்கள் மறுபிறவிக்கு, பிறவி சுழற்சிக்கு காரணமாகின்றன.

-----------
ஆர்த்த தியானத்தின் வகைகளைக் காண்போம்….



---------------------------

ஆர்த்த தியானத்தின் பிரிவுகள்



ஆர்த்தமமனோஜ்ஞஸ்ய ஸம்ப்ரயோகே தத்விப்ரயோகாய ஸ்ம்ருதி ஸமன்வாஹார: - சூ#30 = (331)


आर्तममनोज्ञस्य साप्रयोगे तद्विप्रयोगाय स्मृतिसमन्वाहारः


Artamamanogyasya samprayoge tadviprayogaya smrti-samanvaharah



ஆர்த்தஆர்த்த தியானம் (என்பது) அமனோஜ்ஞஸ்ய விரும்பாத பொருள்; ஸம்ப்ரயோகே சேரும் போது; தத்விப்ரயோகாயஅது  விலகும் பொருட்டு; ஸ்ம்ருதி ஸமன்வாஹார: - திரும்ப திரும்ப கவலையோடு  சிந்தனை செய்வது (அனிஷ்ட ஸம்யோகஜம்)


Upon receipt of a harmful object, thinking again and again for its removal is the first kind of sorrowful meditation.  


விரும்பாத, விருப்பமில்லாத பொருட்கள்அதாவது விஷம், முள், விரோதிகள், ஆயுதங்கள் ஆகிய, இவற்றால் துன்பம் வருவதால், இவை விலக வேண்டும் என்று அடிக்கடி சிந்திக்கிறார். அதுவே அனிஷ்ட ஸம்யோகஜம் என்னும் முதல் ஆர்த்த தியானம் ஆகும்.
----------
இது யாருக்கு உண்டாகும் என காண்போம்


---------------------------



விபரீதம் மனோஜ்ஞஸ்யசூ#31 =  (332)



विपरीतं मनोज्ञस्य



Viparitam manogyasya


விபரீதம்எப்போது வரும் என்ற சிந்தனை;  மனோஜ்ஞஸ்யவிரும்பும் பொருள் விலகும் போது ( இஷ்ட வியோகஜம்)


Upon loss of a favourable object, thinking again and again for its repossession is the second kind of sorrowful meditation.  


இரண்டாவது வகை  ஆர்த்த தியானம்;

இஷ்ட வியோகஜம் : தனக்கு விருப்பமான பொருள் தன்னை விட்டு பிரிந்து போகுமாயின், அது எப்பொழுது திரும்ப கிடைக்கும் என்று அடிக்கடி சிந்தித்தல்.

-----------
அடுத்து மூன்றாவதான….


---------------------------

வேதநாயச்சசூ#32 = (333)


वेदनायाश्च


Vedanayashcha


வேதநாயச்சஎப்போது நமது துன்பம் விலகும் என்ற சிந்தனை.


In the case of suffering from pain thinking continuously for its removal is the third type of sorrowful meditation.  


வாதம், பித்தம், கபம் போன்ற நோயினால் அவதியுறும் போது அதிலிருந்து எப்போது மீள்வோம் என மீண்டும் மீண்டும் சிந்தனை செய்தல் வேதனாஜன்ய என்னும் மூன்றாவது வகை ஆர்த்த தியானமாகும்.

---------
அடுத்து நான்காவதான…..


---------------------------


நிதானம் சூ#33 = (334)


निदानं च


Nidanam cha


நிதானம் எதிர்காலத்திற்குரிய நலத்தைப் சிந்தித்துக் கொண்டு இருத்தல்.


Thinking about fulfilment of the wishes for enjoyment is the fourth sorrowful meditation.  



தற்போது கிடைக்காத அதாவது போகங்கள், போகப் பொருட்கள் எதிர்காலத்தில், அடுத்த பிறவியில் கிடைத்து இன்புற வேண்டி எப்போதும் சிந்தித்திருத்தல் நிதானஜன்யம் எனப்படும். இது நான்காவது வகை ஆர்த்த தியானமாகும்.
-------------
இவைகள் யாருக்கு உண்டாகும் என்பதை……


---------------------------


ததவிரததேசவிரதப்ரமத்தஸம்யதானாம்சூ#34 = (335)


तदविरतदेशविरतप्रमत्तसंयतानाम्


Tadaviratadeshavirata-pramatta-sanyatanam



ததமேற்கூறிய ஆர்த்த தியானம்; அவிரதஒன்று முதல் நான்காம் குணத்தானம் வரையிலுள்ளவர்களுக்கும்; தேசவிரதஐந்தாம் குணத்தானத்திலுள்ளவர்களுக்கும்; ப்ரமத்த ஸம்யதானாம்ஆறாம் குணத்தானத்திலுள்ள முனிவர்களுக்கும் ஏற்படும்.


These sorrowful meditations occur in the case of laymen with and without small vows and non-vigilant ascetics.  


அவிரதி  என்னும் நான்கு குணஸ்தானம் வரை  உள்ள ஜீவன்களுக்கும், தேசவிரதி என்னும் ஐந்தம் குணஸ்தான ஜீவன்களுக்கும், பதினைந்து வகை கவனக்குறைவால் குற்றத்துடன் செயல்களைச் செய்பவன் பிரமத்த சம்யதனான ஆறாவது குணத்தானத்திலுள்ள முனிவர்களுக்கும் நான்கு வகை ஆர்த்த தியானங்கள் ஏற்படும்.

--------------

அடுத்த தியான வகைகளைக் காண்போம்….



---------------------------


ஹிம்ஸான்ருதஸ்தேயவிஷயஸம்ரக்ஷணேப்யோரெளத்ரமவிரத்தேசவிரதயோ: - சூ#35 = (336)


हिंसानृतस्तेय विषय संरक्षणेभ्यो रोद्रमविरतदेशविरतयोः


Hinsanrta-steya-vishaya-sanrakshanebhyo raudramavirata-deshaviratayoh


ஹிம்ஸான்ருதஸ்தேயவிஷயஸம்ரக்ஷணேப்யஇம்சை, பொய், திருடு, பொருட் பற்று இவற்றால்; ரெளத்ரம்ரெளத்ர தியானம்; விரத்தேசவிரதயோ: - ஒன்று முதல் நான்கு வரையுள்ள குணஸ்தான அவிரதி மற்றும் ஐந்தாம் குணஸ்தான தேசவிரதி களுக்கு.


Cruel meditation relating to injury, untruth, stealing and safeguarding of possessions occurs in the case of laymen with and without partial vows.


அவிரதி, தேசவிரதி இம்சை, பொய் கூறுதல், திருடுவதில், பற்று வைப்பதில் ஆனந்தம் அடைதல். சினிமா, டி.வி.யில் இம்சைகளை கண்டு ஆனந்தம்  அடைதல், கிரிக்கெட் பந்தயத்தில் யார் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணுதல், இது போன்று ஒரு பக்கம் ராகம் மறுபக்கம் துவேஷம் போன்ற சிந்தனையில் இருப்பது.
-----------------
விவசாயம்  செய்தல்நிலத்தை சுத்தம்  செய்து, விதைத்து, விளைந்ததும் அறுவடை செய்தல் போன்றவைகளில் சங்கல்ப இம்சை இல்லை. அது ஹிம்சானந்த ரெளத்ர தியானத்தில் வருவதில்லை.
------------
ஆனால் தேசவிரதிக்கு கொலை, கொள்ளை போன்ற எண்ணங்களினால் தூண்டப்பட்டு எப்போதாவது ரெளத்ர  தியானம் ஏற்படலாம். ஆனால் தேசவிரதியின் நற்காட்சியின் பயனாக துர்கதிகளுக்கு (நரகம்) காரணமாவதில்லை.
------------------

அடுத்து தர்ம தியானத்தின்  பிரிவுகள் பற்றி….

--------------- 

ஆஜ்ஞாபாயவிபாக ஸம்ஸ்தான விசயாய  தர்ம்யம்  – சூ#36 = (337)

आज्ञापायविपाकसंस्थानविचयाय धर्म्यम्

Agyapaya-vipaka-sansthana-vichayaya dharmyam



ஆஜ்ஞாஆஜ்ஞா; அபாயஅபாயம்; விபாகவிபாகம்; ஸம்ஸ்தானஸம்ஸ்தானம்விசயாயஎண்ணுதலால்தர்ம்யம்தர்மதியானம்.

The virtous meditation are of four types – concentration on realities (tattva) through pramana and naya, ways and means to help living beings to take the right belief, knowledge and conduct, fruition of karmas and the reasons thereof, and state of universe.  


ஆகமத்தினையும், அறத்தையும் இது வாலறிவன் கூறியது. அவர் உண்மையல்லாததை கூற மாட்டார் என நம்பிக்கை வைத்து அதனையே சிந்திப்பது ஆஜ்ஞா விசயம். அதாவது தத்துவங்களை கடைபிடிக்க உதவுகிறது இத்தர்ம  தியானம்.

சுலபமாக தருமம் அதனை விலக்கி மித்யாதிருஷ்டிகள் தருமத்தின் தீங்கை அறியாது ஏற்று துக்கப்படுகின்றனர். அப்படி சிந்தனை செய்யும் சம்சாரி ஜீவ நிலையை சிந்தனை செய்தல். அதிலிருந்து எப்படி விலகும் என்று சிந்தித்தல் அபாய விசயம். இது பிறவி, உடல் மற்றும் போகங்களிலிருந்து விரக்தி ஏற்படச் செய்கிறது.

அறிவு மறைப்பு முதலிய வினைகளுடன் திரவிய, க்ஷேத்திர, கால, பவ மற்றும் பாவ நிமித்தங்களின் பலன்களை சிந்திப்பது விபாகவிசய தர்ம தியானம்.
இதனால் வினைகளின் பலன் மற்றும் அவற்றின் காரணங்களின் சூக்கும தன்மை அறிந்து உறுதி கொள்ள செய்கிறது.

மேலும் உலக அமைப்பு எப்படியுள்ளது, அதில் உள்ள திரவியங்களின் இயல்பு பற்றி சிந்தனை செய்வது சம்ஸ்தான  விசய தர்மதியானம்.
இது உலக அமைப்பு நிலையினை உறுதி செய்து கொள்ள வகை செய்கிறது.
------------
இந்த நான்கு வகை தர்மதியானம் அஸம்யாத ஸம்யக்திருஷ்டி, தேச விரதி மற்றும் முனிவர்களுக்கு உரியதாகும்.
அதாவது நான்கு முதல ஏழாவது குணஸ்தானம் வரை உள்ளவர்களுக்கு தரும தியானம் பொருந்தும் (ஸ்ரேணியை அடையும் வரை)
அதற்கு பின் உள்ள ஸ்தானகளில் சுக்ல தியானம் உண்டாகும்.
-----------
அடுத்து சுக்ல தியானம் பற்றி….


---------------------------


சுக்லே சாத்யே பூர்வவித: - சூ#37 = (338)


शुक्ले चाद्ये पूर्वविदः


Shukle chadye purvavidah


சுக்லேசுக்ல தியானகளும்; மேலும்; ஆத்யே  - முதல் இரண்டு; பூர்வவிதபூர்வாகமங்களை அறிந்த சுருதகேவலிகளுக்கு.


The first two types of pure meditation are attained by the saints well-versed in the purvas, the Shrutkevali.  


சுக்ல தியானத்தில் நான்கு பிரிவுகள்;

பிருதக்த்வ விதர்க வீசாரம், ஏகத்வ விதர்க வீசாரம், ஸூக்ஷ்ம் க்ரியா ப்ரதிபாதி, விபுபரதக்ரியா நிவர்தி என்பன.

அதில் முதல் இரண்டு சுக்ல தியானகள் பூர்வ ஆகமங்கள் அறிந்த சுருதகேவலிக்கு உண்டாகும்.
அஷ்ட பிரவசன மாத்ருகா, 5 சமிதி 3 குப்தி, ஞானம் உடைய முனிக்கும் சுக்ல தியானம் ஆகலாம்.
----------
14 பூர்வமும்  அறிந்தவர் என்றால் 12 அங்கமும் ஆகமத்தில் அறிந்தவர் என்று பொருள். அவரே சிறந்த சுருத கேவலி எனப்படுகிறார்.
----------
ஆச்சாரிய குந்த குந்தர் கூறிய கதையைக் காணலாம்.

சிவபூதி என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர்துஷ்மாத் பின்னம், துஷ்மாத் பின்னம்அதாவது பருப்பு வேறு, அதன் தோல் வேறு என்பதை அறிந்தார்

ஒரு நாள் ஆகார சரியையின் போது ஒரு பெண்மணி உளுந்து புடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவள் பருப்பு வேறாக அதன்  தோலாடை வேறாக பிரித்துக் கொண்டிருந்தாள். அப்போது முனிவர் தம் ஆசாரியர் உயிர் வேறு, உடல் வேறு என்பதற்கு இதனை உதாரணமாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.

பின்னர் தியானம் செய்யும் போது இந்த பேதத்தினை எண்ணியபோது பேத விஞ்ஞானம்/வைராக்கியம் ஆகி சுக்ல தியானம் அடைந்து கேவலஞானத்தினைப் பெற்றார்.

இதிலிருந்து சுக்ல தியானம் அடைந்த முனிவர் பூர்வம்  அறிந்தவராகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

சிவபூதி முனிவர் சுக்ல தியானம் தொடங்கும் போது அவர்  பீஜரித்தி வழியாக பூர்வம் அறிந்தவர் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------
மற்ற சுக்ல தியானம் பற்றி அறிவோம்



---------------------------

பரே கேவலினசூ#38 = (339)


परे केवलिनः


Pare kevalinah


பரேகடைசி  இரண்டு; கேவலினகேவலிபகவானுக்கு  ஆகும்.


The last two types of pure meditation arise in the omniscients.  


கடைசி இரண்டு வகை சுக்ல தியானங்களும்சூக்ஷமக்ரியா ப்ரதிபாதி, வியுபரதக்ரியா இவைகள் அறிவு மறைப்பு வினையை முற்றிலுமாக அழித்து விட்ட ஸயோகி கேவலிகளுக்கும்அயோகி  கேவலிகளுக்கும் உண்டாகும்.
------------
இனி சுக்ல தியானத்தின் பிரிவுகள் வரிசையாக காண்போம்


---------------------------

ப்ருதக்த்வைகத்வவிதர்க்கஸூக்ஷ்மக்ரியாப்ரதிபாதிவ் யுபரதக்ரியாநி வர்த்தீநிசூ#39 = (340)


पृथक्त्वैकत्ववितर्कसूक्ष्म क्रियाप्रतिपा दिव्युपरत क्रियानिवर्तीनि


Prthaktvaikatvavitarka-sukshma-kriya-pratipati-vyuparatakriyanivartini


ப்ருதக்த்வப்ருதக்த்வ விதர்க்கம்; ஏகத்வஏகத்வ விதர்க்கம்; ஸூக்ஷ்மக்ரியாப்ரதிபாதிசூக்ஷ்மக் கிரியாப்ரதி பாதி; வ்யுபரதக்ரியாநிவர்த்தீநி
-     வ்யுபரதர்கிரியா நிவர்த்தி என்பன.


The four types of pure concentration are that of many substances through the activity of mind, speach and body, that of one substance through the activity of mind, speach and body, that of subtle activity and that of complete destruction of activity.  


ப்ருதக்த்வ விதர்க்கம்; ஏகத்வ விதர்க்கம்; சூக்ஷ்மக் கிரியா ப்ரதிபாதி; வியுபரதர்கிரியா நிவர்த்தி  என நாங்கு வகை சுக்ல தியானமாகும்.
---------
அதற்கான சாதனம் என்ன


---------------------------


திரயேகயோக்காய்யோகாயோகாநாம்சூ#40 = (341)


त्र्येक योग काययोगा योगानाम्


Tryekayogakayayogayoganam


திரயேக மூன்று யோகங்கள் உடையவர்; யோகஒருயோக முடைய கேவலிகள்; காய்யோகாஉடல் யோகம் மட்டும் உடையவர்; யோகாநாம்யோகமில்லாத கேவலிகள், அயோக கேவலிகள்.


These four types of pure concentrations are achieved by those having all the three activities (the mind, the speach and the body), one activity, body activity and no activity respectively.  


யோகம் என்பது மன, வசன, காய ஆகிய செயல்பாட்டினால் ஆன்மாவில் ஏற்படும்  சலனம் எனப்படுகிறது.

ப்ரதக்தவ விதர்கம்: மூன்று யோகங்களும் உள்ள ஜீவன்களுக்கும்அதாவது எட்டாம் குணஸ்தானம்  தொடங்கி  உபசமஸ்ரேணியில்  பதினொன்றாம் குணஸ்தானம் வரையிலும், பன்னிரண்டாம் குணஸ்தானம்  தொடக்க நிலையில் உள்ள முனிவர்களுக்கு உண்டாகும்.

ஏகத்வ விதர்கம்: ஏதாவது ஒரு யோகம் மட்டும் உள்ள ஜீவனுக்கும், பன்னிரண்டாம் நிலை முனிவர்களுக்கும்;

சூக்ஷ்ம கிரியா பிரிதிபாதி: காய் யோகம் உள்ள ஜீவன்களுக்கும், அதாவது பதிமூன்றாம் குணஸ்தானத்தில்  உள்ள முனிவர்களுக்கும்;

வியுபரதகிரியா நிவர்தி: யோகமற்ற அதாவது பதிநான்காம் குணஸ்தான ஜீவன்களுக்கும் ஏற்படும்.
----------
அடுத்து முதல் இரண்டு சுக்ல தியான  சிறப்பு பற்றி….


---------------------------

ஏகாஸ்ரயே ஸவிதர்கவீசாரே பூர்வேசூ#41 = (342)


एकाश्रयेसवितर्कवीचारे पूर्वे


Ekashraye savitarkavichare purve



ஏகாஸ்ரயேஒருவரையே சார்ந்து; ஸவிதர்க வீசாரேவிதர்க்கம் மற்றும் வீசாரத்தோடு கூடியதுபூர்வேமுதல் இரண்டு சுக்ல  தியானங்கள்;


The first two types are based on one substratum and are associated with scriptural knowle-dge and shifting.  


முதல் இரண்டு சுக்ல  தியானங்களும் பூர்வ ஆகமத்தை அறிந்த ஞானி ஆன்மாக்களாகிய சுருத கேவலிகளுக்கு ஏற்படும்.
சுருதத்தில் தர்க்கம் மற்றும் பொருள் பற்றிய குணம், பர்யாயம் பற்றி மாறி, மாறி சிந்தித்தலே இரு தியானங்கள் ஆகும்.
--------------
அடுத்து மேலும் அதற்கான விளக்கத்தை காண்போம்


---------------------------

அவிசாரம் த்விதீயம்சூ#42 = (343)


अवीचार द्वितीयम्


Avicharam dvitiyam


அவிசாரம் மாறுகை இல்லாதது; த்விதீயம்இரண்டாவது சுக்ல தியானம்.


The second type is free from shifting. 


அர்த்த, வியஞ்சன, யோகத்தில் மாற்றம் இராது. இந்த இரண்டாவது சுக்ல தியானத்தில் முதல் போன்று வீச்சாரம்  இல்லை.

முதல் சுக்ல தியானத்தில் விதர்க்கத்தையும், வீசாரத்தையும்(associated with scripture and shifting) உடையது.
இரண்டாவது தியானம் விதர்க்கத்தை மட்டும்  உடையது.
------------
விதர்கம், வீசாரம் இரண்டிலும் என்ன வித்தியாசம்  உள்ளது….

-----------------  

விதர்க: ஸ்ருதம்சூ#43 = (344)


वितर्कः श्रुतम्


Vitarkah shrutam


விதர்க ஸ்ருதம்ஸ்ருத ஞானத்திற்கு விதர்க்கம் எனப்பெயர்.


Vitarka is scriptural knowledge through reasoning.  


சுருத, ஆகம ஞானத்தை விதர்க்கம் என்பர்.
------------
அடுத்து  வீசாரம் என்றால்….

-------------

வீசாரோSர்தவ்யஞ்ஜநயோகஸங்க்ராந்தி: - சூ#44 = (345)


वीचारोऽर्थव्यञ्जन योग संक्रान्तिः


Vicharo(a)rthavyanjanayoga-samkrantih


வீசாரோவீசாரம்; அர்த்தபொருள்; வ்யஞ்ஜநவசனம், மொழி; யோக- யோகம்; ஸங்க்ராந்திமாற்றம்.


Vichara is shifting with regard to objects, words and activities.  


அர்த்தம்தியானப் பொருள்/ அதன் பர்யாயம். தியானத்திற்கு செய்வதற்கு தகுந்த திரவியம்/ அதன் மாறுகை.

பொருளை விட்டு பர்யாயம், பர்யாயத்தை விட்டு பொருள் என்று மாறி தியானம் செய்தல் அர்த்த ஸங்க்ராந்தி.

வியஞ்ஜனம்வசனம்.
எந்த மொழியால் தியானிக்கப்படுகிறதோ அந்த வசனத்தை விட்டு விட்டு வேறு வசனத்தால் தியானிப்பது வியஞ்ஜன ஸங்க்ராந்தி.

யோகம்மன, வசன, காய யோகங்கள்.
மன யோகத்தை விட்டு வசன யோகம், அதனை விட்டு காய யோகம் இப்படி யோகத்தில் மாற்றம் செய்வது யோக ஸங்க்ராந்தி ஆகும்.

இது போன்ற பரிமாற்றங்களை வீசாரம் என்பர்.
-------------
அடுத்து நிர்ஜரையின் சிறப்பு பற்றி….

-----------------


ஸம்யக்திருஷ்டி ஸ்ராவக விரதாநந்த வியோஜக தர்சன மோஹ க்ஷபகோபசம கோபசாந்தமோஹ க்ஷபக்க்ஷீண மோஹஜினா: க்ரமசோSஸங்க்யேயகுண  நிர்ஜரா: - சூ#45 =   (346)


सम्यग्दृष्टि श्रावक विरतानन्त वियोजक दर्शन मोहक्षप कोपशमकोपशान्तमोहक्षपकक्षीणमोहजिनाः क्रमशोऽसंख्येय गुणनिर्जराः


Samyagdrshti-shravaka-viratananta-viyojaka-darshanamoha-kshapakopashama-kopashantamoha-kshapaka-kshinamohajinah kramasho (a)sankhyeyagunanirjarah



ஸம்யக்திருஷ்டிநற்காட்சியுள்ளவர்ஸ்ராவகஇல்லறத்தார் அதாவது அணுவிரதி;  விரதமகாவிரதி முனி; அநந்த வியோஜகஅனந்தானுபந்தி கஷாயங்களை அப்ரத்யாக்யான  கஷாயமாக மாற்றுபவர்;  தர்சன மோஹதர்சன மோகவினையை;  க்ஷபககெடுப்பவர்; உபசமசாரித்ர மோகனீய வினையை  அடக்குபவர்;  உபசாந்தமோஹ மோகவினையை தணிவு நிலைக்கு கொண்டுவருபவர்;  க்ஷபகவினையை அறவே கெடுக்கும் ஏணி வரிசையில் ஏறுபவர்; க்ஷீண மோஹசாரித்ர  மோகத்தை கெடுத்தவர்; ஜினா:-அருக பரமேட்டி; க்ரமசோSஸங்க்யேயகுண  நிர்ஜரா: - முறையே ஒருவரைக் காட்டிலும் ஒருவருக்கு எண்ணிலடங்கா  மடங்கு வினைகள் நிர்ஜரை ஆகின்றன.


The dissociation of karmas increases innumerable-fold from stage to stage in the ten stages of the right believer, the householder with partial vows, the ascetic with great vows, the separator of the passion leading to infinite births, the destroyer of faith-deluding karmas, the suppressor of conduct-deluding karmas, the saint with quiescent passions, the destroyer of delusion, the saint with destroyed delusion and the spiritual victor (Jina).  



கர்மங்கள் தாமாக பலனைக் கொடுத்து விட்டு கழிதல் போக, தம் முயற்சியில் கர்மங்களை கழித்தல் (அவிபாக நிர்ஜரை) கிழ் குறிப்பிடும் நிலைகளில், முன் நிலையை விட  அடுத்த நிலையில் மிக அதிகமாக கர்மங்கள் கழிகின்றன.

ஸம்யக்திருஷ்டிஉறுதியான நம்பிக்கையுடன் தேவ சாஸ்திர குருவிடம் அசையா நம்பிக்கை உடையவர். (நான்கிலிருந்து  - பத்தாம் குணஸ்தானம் வரை உள்ளவர்கள்) உள்ளே மோஹம் இல்லாமல் வெளியே தோற்றம் இருக்கும்.
இவருக்கு எண்ணிலடங்கா மடங்கு கர்ம  நிர்ஜரை யாகிறது.

தேசவிரதி; சிராவகர் விரதம் ஏற்ற இல்லறத்தார். முன்னதை விட இவருக்கு அதிக நிர்ஜரை யாகும்.

மாஹாவிரதி: முனிகள்.  6,7 குணஸ்தானத்தில் உள்ளவர்கள், பிரமத்த அப்ரமத்த நிலைகளாகும். பிரத்யாக்யான கஷாயங்கள் நான்கும் கேடு-தணிவு ஆகும்.

அனந்த வியோஜக: அனந்தானுபந்தியை முற்றுமாக அழிக்க அப்ரத்யாக்யான முதலான கஷாய பிரக்ருதிகளாக மாற்றுபவருக்கு முன்னதை விட அதிக நிர்ஜரையாகும்.

தர்சன மோஹக்ஷபக: அடுத்து மூன்று விதமான தர்சன மோஹத்தை (மித்யாத்வம், சம்யக்த்வம், சம்யக்த்வ பிரகிருதியை) கெடுப்பவருக்கு எண்ணிலடங்கா கருமங்கள் நிர்ஜரை ஆகிறது.

உபஸமம்:  8,9,10 ம் நிலையிலுள்ள முனிவருக்கு சாரித்ர மோகனீயம் முழுமையாக அடங்கியிருக்க முயற்சி செய்து கொண்டே இருப்பதால் மேலும் எண்ணிலடங்கா கருமங்கள் நிர்ஜரை ஆகிறது.

உபஸாந்த மோஹம்: பதினோராவது குணஸ்தான முனிவர் நிலையில் சாரித்ர மோகனீய வினையை முழுவதுமாக அழிகிறது.

க்ஷபக : இந் நிலையில் உள்ளவர்களுக்கு எல்லா சாரித்திர மோகனீய குறைப்பதற்கான காரணங்கள்  இருப்பதால்  தூய்மைத்தன்மை அதிகரிப்பதால்  க்ஷபக ஸ்ரேணியில் ஏறிக்கொண்டே இருக்கும் போது க்ஷபகனாகி முன்னர் நிகழ்ந்த கரும  நிர்ஜரையைக் காட்டிலும் எண்ணிலடங்கா மடங்கு  கரும நிர்ஜரை செய்தவராகிறார்கள்.

க்ஷீணமோஹ: 12ம் குணஸ்தான நிலையில் உள்ள முனிவர்கள் சாரித்ர மோகனீய வினைகளைக் கழித்தவராவதால் மேலும் க்ஷீண கஷாயனாக மாறி முன்னர் நிகழ்ந்த நிர்ஜரையைக் காட்டிலும் கூடுதலான நிர்ஜரை ஏற்பட்டவராகிறார்.

ஜினர்: 13 வது குணஸ்தான் கேவலி- நான்கு காதிகர்மங்களை வெற்றி கொண்டவர். கேவலஞானம் பெற்றவர். 14 வது குணஸ்தானத்தில் நான்கு அகாதிகர்மங்களும் முழுவதுமாக அழிக்கப்படும். அதுவே அவ்வுயிர் ஜினபகவானாகிறது.

-----------
பத்து நிலைகளில் குணஸ்ரேணியில் வினைகள் உதிர்ப்பு ஏற்படுகிறது.
அதாவது எண்ணிலடங்கா மடங்கு அளவில், ஏணிப்படிகள் போல கருமங்களை உதிர்வது/உதிர்ப்பது குணஸ்ரேணி நிர்ஜரை எனப்படுகிறது.

இந்த குண ஸ்ரேணி நிர்ஜரை என்பது எப்போதும் ஏற்படுவதில்லை. உபசமம் மற்றும் க்ஷபணம் (கழித்தல் அல்லது வேரறுத்தல்) ஆகிய இரண்டுக்கும் காரணமாக இருக்கும் பரிணாமத் தூய்மையினாலேயே குணஸ்ரேணி அமைப்பு வந்து இங்கு வினைகள் உதிர்க்கப்படுகின்றன.
----------
அடுத்து நிர்க்ரந்தர்கள் வகைப் பற்றி….

-------------

நிர்க்ரந்தர் வகைகள்

புலாகபகுசகுசீல நிர்க்ருந்த ஸ்நாதகா நிர்க்ரந்தா: - சூ#46 = (347)


पुलाकबकुशकुशीलनिर्ग्रन्थस्नातकाः निर्गन्थाः


Pulaka-bakusha-kushila-nirgrantha-snataka nirgranthah


புலாகபுலாகர்; பகுசபகுசர்; குசீலகுசீலர்; நிர்க்ரந்தநிர்க்ரந்தர்; ஸ்நாதகாஸ்நாதகர்; நிர்க்ருந்தா: - சாதுக்கள் ஆவார்கள்.


Pulakah (observes primary vows, but lapses sometimes), Bakusha (observes primary vows perfectly, but cares adornment of the body and implements), Kushila (observes primary vows perfectly, but lapses in secondary vows or has controlled all passions except the gleaming ones), Nirgrantha (will attain omniscience within Antarmuhurta) and Snataka (Omniscient-Kevali) are the passionless saints.  



நிர்கிரந்தர்கள் ஐந்து வேடுபாடுகளுடன் உள்ளனர். இவை சாரித்த நோக்கில் சொல்லப்படுகின்றன.

புலாகர்: உத்தர குணங்களை பாவிக்கும் பாவனை இல்லாதவர். 28 மூல குணங்களில் எப்போதாவது குறையுடையவர். ஆடை, ஆபரணம் இல்லாத சாது.
குழைந்து போன அன்னம் போல விரத விசுத்தியில் தளர்ச்சியுடைய முனிவர்.

பகுசர்: இவர் மூல குணங்களைக் குறை பாடின்றி கடைபிடிக்கிற அதே சமயத்தில் தன்னுடைய உடலின் மீதும், பிச்சு, கமண்டலம் ஆகிய உபகரணங்கள் மீது பற்றுடனோ மற்றும் பரிவாரங்களுடனோ இருப்பவர்.

குசீலர்: எவருக்கு உபகரணம், உடல் மீது  விரக்தி இல்லாமலும் மூல குணத்தை முழுதளவு கடைபிடித்து, உத்தர குணத்தில் குறைபாடு உள்ளதோ அவர் பிரதி ஸேவநாகுசீலர் என்றும்.
ஸஞ்ஜ்வலன கஷாயங்களைத் தவிர மற்றேல்லா கஷாயங்களையும் வென்று இருக்கிறாரோ அவர் கஷாய குசீலர் என அழைக்கப்படுகிறார்.

நிர்க்ருந்தர்: மோகனீய கர்மத்தை வென்றவர். மற்ற ஏழு கர்மங்கள் உள்ளவர். ஆனால் தண்ணீரில் எழுதிய கோடு மாதிரி கர்மம் இருக்கும். 12ம் குணஸ்தானத்தில் யதாக்யாத சாரித்ரம் உள்ளவர். அந்தர் முஹுர்த்தத்தில் கேவல ஞானம், கேவல தர்ஸனம் அடைந்து அரஹந்தராகி விடுவார்.

ஸ்நாதகர்: நான்கு காதி கருமங்களைக் கெடுத்தவர். அனந்த சதுட்டயம்- அதாவது அனந்த ஞானம், அனந்த தர்ஸனம், அனந்த சுகம், அனந்த வீரியம்- பெற்று விட்டவர். உடம்போடு இருக்கிறார். சயோகி கேவலிகள் ஸ்நாதகர் ஆவார்.
-------------
மீண்டும் புலாகர் முதலான பிரிவுகளின் வேறுபாடுகளைக் …..

---------------


ஸம்யமஸ்ருத ப்ரதிஸேவநாதீர்தலிங்க லேஸ்யோபபாத ஸ்தாநவிகல்பத: ஸாத்யா: - சூ#47 = (348)


संयम श्रुतप्रतिसेवना तीर्थलिंगलेश्योपपादस्थान विकल्पतः साध्याः


Sanyama-shruta-pratisevana-tirtha-linga-leshyo-papada-thanavikalpatah sadhyah


ஸம்யமநல்லொழுக்கம்; ஸ்ருதசுருத ஞானம்ப்ரதிஸேவநாபிறருக்கு சேவை செய்தல்; தீர்ததீர்த்தங்கரர்களுக்கு இடைப்பட்ட காலம்; லிங்க நிர்க்ருந்தருக்கு தகுதியான அடையாளம்; லேஸ்யாகசாயத்துடன் கூடிய செயல்பாடுகள்; உபபாதபிறப்பு; ஸ்தாநஇருப்பிடம் இவற்றின்; விகல்பதவேறுபாடுகள்; ஸாத்யாநிர்க்ருந்தர்கள் அறியத்தக்கவர்கள்.


The saints are to be described (differentiated) on the basis of differences in self-restraint, scriptural knowledge, transgression, the period of Tirthankara, the sign, the thought colouration, birth and the place.


நல்லொழுக்க முதலான  எட்டுவகை அனுயோகங்களினால் வேறுபடுத்தப்படுகிறார்கள். நல்லொழுக்க வழியே நோக்கின் புலாகர், பகுசர், பிரதி சேவனா குசீலர் ஆகிய இவர்கள்  ஸாமாயிகம், சேதோஸ்தாபனா ஆகிய இரண்டு  சம்யமங்களில் இருப்பவர்கள்.
கஷாய குசீலர்கள் மேற்கூறிய இரண்டு ஸ்மயமங்களுடன் பரிஹார விசுத்தி மற்றும் சூக்ஷம் ஸம்பராய ஆகிய இரண்டு ஸம்யமங்களுடன் இருப்பவர்கள்.
நிர்க்ருந்தர் மற்றும் ஸ்நாதகர் யதாக்யாத சாரித்ரத்தில் மட்டும் உள்ளனர்.

சுருத ஞான நோக்கில் புலாகர், பகுசர், பிரதிசேவனா குசீலர் இவர்கள் அதிகபட்ச சுருத ஞானம் 10 பூர்வம் (11 அங்கம், 10 பூர்வம்) வரை முழுமையாக அறிந்திருப்பர்.
கஷாய குசீலர்நிர்க்ருந்தர் அதிக பட்ச சுருத ஞானம் 14 பூர்வம் வரை பெற்றிருப்பர்.
புலாகருக்கு குறைந்த பட்ச சுருத ஞானம் ஆசார வஸ்து பிரமாணம் இருக்கும். பகுசர், குசீலர், நிர்க்ருந்தர்களுக்கு குறைந்த சுருத ஞானம் அஷ்டப்ரவசன மாத்ருகா பிரமாணம் இருக்கும். அதாவது பஞ்ச சமிதி, மூன்று குப்தி வியாக்யானம் அறிந்திருப்பார்.
ஸ்நாதகர் கேவலஞானியாக  இருப்பார். அங்கு சுருத ஞானம் பற்றி கேள்வி இல்லை.

பிரதிஸேவனா நோக்கில், புலாகர் பிறர் வற்புறுத்தலால் பஞ்ச மூல குணம், இரவு உண்ணாமை இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு செய்பவராக இருப்பார்.
குசீலர் இருவகையினர். ஒன்று உபகரணம், உடல் மீது  விரக்தி இல்லாமலும் மூல குணத்தை முழுதளவு கடைபிடித்து, உத்தர குணத்தில் குறைபாடு உள்ளதோ அவர் பிரதி ஸேவநாகுசீலர் என்றும்.
ஸஞ்ஜ்வலன கஷாயங்களைத் தவிர மற்றேல்லா கஷாயங்களையும் வென்று இருக்கிறாரோ அவர் கஷாய குசீலர் என்றும் வகைப்படுகின்றனர்.
இவர்கள் உபகரணம், சரீரம் சுத்தமாக இருக்க வேண்டும் என பாவனை செய்யலாம்.
குசீலர் மூல குணத்தில் குறை செய்யாமல் உத்தர குணத்தில் குறை செய்பவர்.
கஷாய குசீலர், நிர்க்ரந்தர், ஸ்நாதகரிடம்  குறை வராது.

தீர்த்த நோக்கில் ஐந்து நிர்க்ரந்தர்களும் எல்லா தீர்த்தங்கர்ருடைய தீர்த்த காலத்தில் இருப்பர்.

லிங்க (அடையாளம்) நோக்கில் திரவிய லிங்கி, பாவ லிங்கி என இரு பிரிவினர். பாவ லிங்க நோக்கில் ஐந்து வகை முனிவர்களும் துவர்ப்பசைகளற்ற பாவலிங்கிகள் தான். திரவிய லிங்கம் என்பது உடல் உயரம், நிறம், பிச்சி, கமண்டலம் முதலிய உபகரணங்கள் அடிப்படையில் வேறுபாடுகள் காணலாம்.

லேச்யை நோக்கில் புலாலருக்கு பீத, பதம், சுக்ல, என்று மூன்று லேச்யைகள் இருக்கும். பகுசர், பிரதி ஸேவநா குசீலர்களுக்கு ஆறு லேச்யைகள் இருக்கும். கஷாய குசீலருக்கு கடைசி நான்கு லேச்யைகள் இருக்கும். குஸ்மராம்பராய  குசீலர் மற்றும் நிர்க்ரந்தர், ஸ்நாதகர்களுக்கு சுக்ல லேச்யை மட்டும் இருக்கும். அயோக கேவலியருக்கு லேச்யை இல்லை.

உபபாத  அபேஷையில் புலாகர் உத்க்ருஷ்ட்ததில் 18 கடல்கால ஸஹஸ்ரார (12ம்) (12ம்) சொர்க்கத்தில் பிறப்பர். பகுசர், பிரதிசேவனா குசீலர் அதிக பட்சம் 22 கடல் கால ஆரண-அச்யுத (16ம்)கல்பத்தில் பிறப்பர். கஷாய குசீலர், உபஸாந்த கஷாய நிர்க்ரந்தர் 33 கடற்கால ஸர்வார்த்த சித்தியில் பிறப்பர்.
புலாகர், பகுசர், பிரதி ஸேவனா குசீலர், கஷாய குசீலர்,  உபஸாந்த கஷாய நிர்க்ரந்தர் ஜகன்யத்தில்  2 கடற்கால செளதர்ம சொர்க்கத்தில் பிறப்பர். ஸ்தாதகர் மோக்ஷம் அடைகிறார்.

ஸ்தான நோக்கில் எண்ணிலடங்கா ஒழுக்க நிலைகள் கஷாய நிமித்தத்தால்  உள்ளன.
அவிபாக பரிச்சேதத்தில் அவை அனந்த மடங்கு இருக்கிறது. புலாகர், பகுசர், பிரதி ஸேவனா குசீலர், கஷாய குசீலர், நிர்க்ரந்தர் இவர்களுக்குப் பல வகையான ஸ்தானங்கள். ஸ்நாதகருக்கு மிக உயர்ந்த ஸ்தானம். பிறகு மோக்ஷம்,  ஸர்வார்த்த சித்தி  கோமட்டஸார நூலகளில் இதன் விஷயத்தை அறியலாம்.

---------------

இத்துடன் ஒன்பதாவது அத்தியாயம் முற்றும்.

----------------

மங்களாஷ்டகம்:


கோடி சதம் த்வாதஸம் சைவ கோட்யோ லக்ஷாண்யஷீதிஸ்த்ரயதிகாணி சைவ
பஞ்சாஸதஷ்டெள ச ஸஹஸ்ர ஸங்க்யாமேதத் ஸ்ருதம் பஞ்ச பதம் ணமாமி
 அரஹந்த ப்பாஸியத்தம் கணயர தேவேஹிம் கந்தியம் ஸவ்வம்
பணமாமி பக்தி ஜுத்தோ சுதணான மஹோவயம் ஸிரஸா

அக்ஷரமாத்ரபத ஸ்வரஹீனம் வயஞ்ஜன ஸந்தி விவர்ஜிதரேஃபம்
ஸாது பிரத்ர மம க்ஷமிதவ்யம் கோ ந விமுஹ்யதி ஸாஸ்த்ர ஸமுத்ரே

தஸாத்த்யாயே பரிச்சன்னே தத்த்வார்த்தே படிதே ஸதி ஃபலம் ஸ்யாதுபவாஸஸ்யப்பாஷிதம் முனிபுங்கவை:

ததத்வார்த்த ஸுத்ர கர்த்தாரம் க்ருத்த் பிச்சோபலக்ஷிதம்
வந்தே கணீந்த்ர ஸஞ்சாதமுமாஸ்வாமி முனீஸ்வரம்

ஜம் ஸக்கயி தம் கீரயி ஜம்ண ஸக்கயி தஹேவ ஸத்தஹணம்
ஸத்தஹணமாணோ ஜீவோ பாவயி அஜராமரம் ட்டாணம்

தவயரணம் வயதரணம் ஸஞ்சம சரணம் ச ஜீவதயாகரணம்
அந்தே ஸமாஹிமரணம் சஉவிஹ துக்கம் ணிவாரேஇ


 -----------------------------------------


2 comments: