PANCHAKALYAN - பஞ்சகல்யாணம்
Panch Kalyanak a brief introduction.
Panch Kalyanak Pratistha is the process of transforming the
statue of Stone into God (Bhagwan).
Panch mean -five and Kalyanak mean -for the betterment of
all living beings.
Five auspicious events of the life of Bhagwan will be acted
upon a statue during five-day event.
Your presence at this event will make you feel a part of the
life course of Bhagwan.
During such an occasion the thought process (parinam)
becomes so pure that it creates a permanent change in the life of some people
towards spiritual fulfillment, peace and prosperity. Acharya Pujyapad Swami
called this celebration to be a catalyst for Right perception (Samayak-darshan).
பஞ்ச கல்யாண நிகழ்வுகளின்
சுருக்கம்:
பஞ்ச கல்யாண
பிரதிஷ்டை என்பது கற்சிலைக்கு கடவுள் தன்மையை செறியூட்டும் சமண நிகழ்வுமுறையாகும்.
அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக இந்த ஐஞ்சிறப்பு விழா நடைபெறுகிறது.
பகவான் வாழ்க்கையில் நடந்த ஐந்து சுப நிகழ்வுகளை
அவ்விழாவில் பறைசாட்டுதலே பஞ்சகல்யாண விழாவின் நோக்கமாகும்.
அவ்விழா நாட்களில்
கலந்து கொள்ளும் அனைவருக்கும் பகவானுடன் இருந்து அவ்வைபோகத்தை அனுபவித்து ஆன்மீக உணர்வு
ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
அச்சமயத்தில்
கலந்து கொண்ட பலருக்கும் தூய சிந்தனை
செயல்முறை (பரிநாமம்) தோன்றி அவர்களது வாழ்நாளில் ஆன்மீக நிறைவும், அமைதியும், வாழ்வில்
சுபிக்ஷமும் ஏற்பட செய்யும். அதனையே ஆச்சார்ய பூஜ்ய பாதர் பகவானின் ஐஞ்சிறப்பு
விழா நற்காட்சி தோன்ற கிரியாவூக்கியாக அமையும் என்று கூறுகிறார்.
############
Five auspicious events are:
Garbha-Kalyanak or Inception ceremony:
· Six months
before the inception & during the nine months of pregnancy Indra Kuber
showers precious jewels in the city.
· Saudharm
Indra assembles his cabinet & celebrates the joyous day.
· Eight young
girls celebrate the day with the mother with music & dances.
· Garbha
Kalyanak Pooja is done during the day.
· Mother
witnesses 16 dreams this night.
· In the
evening King’s (father) cabinet assembles, the king explains the meaning of all
her dreams.
· 56 young
girls present the mother with the gifts through joyous dances.
ஐந்து சுப
நிகழ்வுகள்;
ஜைன
நெறிக்கிரியைகளில் பஞ்சகல்யாணம் என்பதற்கு நாம் வழிபடும் ஜிநர்களின்,
அர்ஹந்தர்களின் தோற்றத்திலிருந்து முக்தி யடையும் வரை நடைபெறும் புனிதச் செயல்களுக்கு பெயராகும்.
ஜீவாத்மா எப்படி
புனிததன்மை பெற்று பரமாத்மா/ பகவான் ஆத்மா நிலையினை அடைய என்னென்ன செயல்கள்
நடைபெறுகின்றனவோ அவைகளுக்கு கல்யாணம்/கல்யாணகம் என்றழைப்பர்.
கடினமான கல்
சிற்பியின் கைவண்ணத்தால் பகவான் உருவத்தை பெறுகிறது. பிரதிஷ்டாச்சாரியார் துணை
கொண்டு புனிதம் பெற்று வணங்கும் தெய்வமாகிறது ஐம்பெறும் சிறப்பு விழா நிறைவுறும்
போது.
பக்தர்கள் அதனை
துதிக்கின்றனர், பூஜிக்கின்றனர், அர்ச்சிக்கின்றனர், ஆடிப்பாடி மகிழ்கின்றனர்;
தீர்த்தங்கரர் நிலையை பெற்றதும்.
முதலாவதாக
1. கர்ப்ப
கல்யாணம்:
இந்திரலோக குபேரன்
அப்புனித கரு உருவாகும் ஆறு மாதத்திற்கு முன்பும், உருவாகி ஒன்பது மாதத்திலும்
அவ்விடத்தே பொன், மணி, நவரத்தினங்களை மழையாக பொழியச் செய்கிறான்.
செளதர்மேந்திரன்
தன் இந்திரசபையை கூட்டி பகவான் பிறப்பதை அறிவித்து கொண்டாடுகிறான்.
அந்நாளில் தேவமாதாவுடன்
கன்னியர் எண்மர் இசையும், நடனமுமாக கொண்டாடுகின்றனர்.
கர்ப்ப கல்யாண
பூஜை அன்றைய தினம் நடந்தேறுகிறது.
அன்றிரவு ஜினமாதா
பதினாறு கனவுகளை காணுகிறாள்.
மறுநாள் அரசன்
சபையை கூட்டி அக்கனவுகளுக்கான விளக்கங்களை அனைவருக்கும் தெரிவிக்கிறான்.
அதனை கேட்ட ஐம்பத்தாறு கன்னியர்கள் ஆட்ட பாட்டத்துடன்
ஜினமாதாவிற்கு பல பரிசில்களை அளித்து மகிழ்விக்கின்றனர்.
*****************
தேவருலகத்தில் சர்வார்த்த சித்தி என்ற இடத்தில் சுகங்களை அனுபவித்து ஆயுள்
முடிந்த ஒரு பவ்ய ஜீவன் மண்ணுலகில் வந்து தீர்த்தங்கரராக அவதரிப்பதை, தனது
அவதிஞானத்தால் ஆறு மாதங்களுக்கு முன்னரே அறிந்த தேவேந்திரன்;
அஹிம்சை வழியில் நல்லாட்சி நடத்தும் அரச தம்பதியர் வாழும் அந்த நாட்டில் பல
மாதங்களாக காலை, மதியம், மாலை, இரவு என
நான்கு வேளையிலும் ஸ்வர்ண, ரத்தினங்கள் (மூன்றரை கோடி) மழையாக இந்திர குபேரன்
பொழிந்து வருகிறான் என்றால் அத் தீர்த்தங்கரர்களின் பவ்யத்தை, பெற்ற புண்ணியத்தால்
நாட்டுக்கே கிடைக்கும் நன்மையை என்ன வென்று சொல்வது. (நம்மில்; நல்லார் ஒருவர்
உளரேல், நீர் மழைதான் பெய்யும்)
அந்நகருக்கு ஜிநேந்திர புரி எனப் பெயரிடுகிறான் அத் தேவரசன். அப்போதிருந்தே
அந்நகரை கல்பவாசி தேவர்கள் அலங்கரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
ஜிநராக வரும்
புனித ஆன்மா ஜினமாதாவின் கர்ப்பத்தை வந்தடைந்ததை மீண்டும் அவதிஞானத்தால் அறிந்த
இந்திரன் மற்ற தேவர்கள் குழாமோடு அரண்மனை முற்றத்தில் அனந்தமாக ஆடிப்பாடி நிரம்பி
வழிகின்றனர்.
தேவகன்னியர் எண்மர் ஸ்ரீஹ்ரீ, த்ருதி, கீர்த்தி, புத்தி, லக்ஷ்மி, சாந்தி,
புஷ்டி தேவரசர் கட்டளைப்படி ஜினமாதாவின் தாதியர்களாக வந்து, நீராட்டி
அலங்கரித்தல், தைரியமூட்டல், துதிபாடுதல், நற்புத்தியை வளர்க்க செய்வது, செல்வத்தை
அளிப்பது, அமைதியான சூழலை உண்டாக்குதல், சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக
வைத்திருத்தல் போன்ற சேவைகளை புரிந்து வருகின்றனர்.
மேலும் வளரும் அப்புனித கருவை அவ்வப்போது பரிசோதனையும் செய்கின்றனர். ஆடல் பாடல்களால்
மாதாவை சந்தோஷம் செய்வதோடு மட்டுமின்றி அறம் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டு,
ஜினமாதாவை பதில் கூறச்செய்கின்றனர்.
மகிழ்வாக கழியும் இச்சூழலில் ஒருநாள் இரவு மாதா சுகமான பஞ்சனையில் தூக்கத்தில்
இருந்த போது, பகவான் பிறக்கப் போகும் நற்செய்தியை உணரும் வகையில் பதின்ஆறு கனவுகளை
காண்கிறாள்.
Mother's 16
Dreams
1. A White Elephant
2. A White Bull
3. A Lion
4. Goddess Lakshmi with two Elephants at
her side showering flowers
5. A Pair of Garland
6. The Full Moon lighting the Universe
with silvery beams
7. The Radiant Sun
8. A pair of Jumping Fish
9. A pair of Golden Pitcher
10. A Lake full of Lotus Flowers
11. Ocean in turmoil
12. A gold throne
13. Calastial Viman
14. A Palace Of Dharmendra
15. A heap of Rubies and Diamonds
16. Bunning Smokeless Fire
காலையில் விழித்தெழுந்த ஜினமாதா அற்புதமான கனவை எண்ணி மகிழ்கிறாள், காலை கடன்களை முடித்து தன் கணவனை கண்டு, அற்புதக் கனவுகளை ஒவ்வொன்றாக கூற, அரசனும் தனது அவதிஞானத்தின் மூலமாக பலன்களை கூறுகிறார்.
1. ஐராவத யானை (இந்திரனுடையது) யைக் கண்டேன் - உத்தமமான மகன் பிறப்பான், தீர்த்தங்கரராக ஆவான்.
2. வெண்மை நிற எருது - உலகிலேயே உயர்ந்தவனாவான்.
3. சிங்கம் - எல்லையற்ற பலம் வாய்ந்தவன்
4. இரு யானைகள் (கஜ) லட்சுமிக்கு அபிஷெகம் செய்தல் - சுமேரு மலையில் அமர்த்தி அபிஷேகம் செய்வர்.
5. இரண்டு மலர்மாலைகள் - நல்லறத்தை பரப்புபவனாக இருப்பான்
6. முழநிலவு - மோகம் என்னும் இருளைப் போக்க கூடியவன்
7. உதயமாகிய சூரியன் - முழு ஞான ஒளியை பெறுவான்
8. இரண்டு மீன்கள் - பாக்கியசாலியாக திகழ்வான்
9. பொன்னிறமான இரண்டு பூர்ணகும்பம் - அனேக நிதிகளுக்கு அதிபதியாவான்
10. தாமரை மலர்கள் உள்ள குளம் - அழகும், ஆழ்ந்த சிந்தனையுடையவனாய் இருப்பான்
11. சமுத்திரம் - தீர்க்கதரிசியாக இருப்பான்
12. ரத்தினங்களுடைய சிங்காதனம் - மூவுலக சாம்ராஜ்ஜியத்தை பெற்று இருப்பான்
13. மணிகளுடைய தேவ விமானம் - சுவர்க்கத்திலிருந்து இறங்கிய ஆன்மா கர்ப்பத்தில் இருக்கும்
14. நாகலோக பவனம் (அரண்மனை) - மதி, சுருதி, அவதி ஞானங்களை உடையவனாய் பிறப்பான்.
15. ஐந்து நிற ரத்தினக் குவியல் - எல்லா உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பான்
பாடலில் ஒருங்கே காணலாம்.
யானையைக் கண்டதால்
நன்மகன் பிறப்பான்
காளையைக் கண்டதால்
கைதொழப் படுவான்
அரியினைக் கண்டதால்
அன்ந்த வீரியன்
திருமகள் களிற்றால்
திருமுழுக்காட்டலால்
பெருமலை மீதே
பெட் புறவைத்து
பேரமரர்கள் அவனைப்
பிறந்த நீராட்டுவார்
மாலைகள் இரண்டினை
மாண்பெழக் கண்டதால்
காலம் முழுதும் கவினறம் ஓம்புவான்
மதியினைக் கண்டதால் மக்கள்
அனைவரின் மனங்களைக் கவர்வான்
உதயசூரியன் உத்பவித்ததால்
உன்னத மேனியின் ஒளியைக் காட்டும்
இரண்டு மீன்கள் தோன்றலால்
இணையிலா இன்பம் எய்துவான் அவனே
பூர்ண கும்பம் பொருந்தியே தோன்ற
பூரணமாய் அவன் நிதிகளுக்கதிபன்
தாமரைத் தடாகம்
அவன் தகவினைக் காட்டும்
கடலின் தோற்றம் கனவில் உற்றதால்
கைதொழவந்த கேவலஞானியே
சிம்மாசனம் அவன் சீருடை அரசச்
சிறப்பினைக் காட்டும்
சொர்க்க விமானம் சொகுசுடன் வந்தால்
சொர்க்கத்தினின்றும் வந்து தோன்றுவான்
நாக பவனம் நனியெதிர்பட்டதால்
அவதிஞானம் அமைவுறப் பெறுவான்
ரத்தினக் குவியல் ராசியைப் பார்த்ததால்
அன்ந்த நற்குணங்கள் அமைவுறப் பெறுவான்
நீள்நாக்குடை நெருப்பினைப் பார்த்தால்
நெடுந்தீவினைகளை நீறுபடுத்துவான்
சம்ஸயம் மனத்தே சற்றும் வேண்டாம்
சர்வார்த்த சித்தியில் சார்ந்துள தேவன்
இந்த வுலகம் இன்புற்று உய்ய விருஷப
தேவனெனப் பெயரோடு குமாரனாய் வருவான்
வாழிய நின்சீர் வாழிய வையகம்!
(புலவர் தோ. ஜம்புகுமாரன், அவர்கள்)
பூஜா விதிகள்: (மேலோட்டமான குறிப்புகள்)
கர்ப்ப கல்யாணத்திற்கு முன்னதாக கொடியேற்றத்திற்குப் பிறகு இந்திர ப்ரதிட்டை நடைபெறும்.
அதன் பின் யாக மண்டல பூஜா விதானமும்
அன்றே கர்ப்ப கல்யாணக பூஜா விதானமும் நடத்துவர்.
முதல் நாள் நவக்கிரக சாந்தி விதானத்தை இவற்றினூடே நடத்துவர்.
(புலவர் தோ. ஜம்புகுமாரன், அவர்கள், வழிகாட்டுதல்)
(திகம்பர
இணையங்களில் உள்ள ஆங்கில கட்டுரைகளிலிருந்தும், திரு. சிம்மச்சந்திர சாஸ்திரி
அவர்களின் நூலிலிருந்தும், மன்னார்குடியில் நடைபெற்ற பஞ்சகல்யாணங்களை கண்ணுற்ற
அனுபவங்களைக் கொண்டும்;
நிகழ்வு முறைகள் மாறலாம், அடிப்படை நோக்கம் மாறாமல் எழுதியுள்ளேன். உ-ம், ஸ்வேதாம்பர்கள் 14 கனவுகள் என இணையத்தில் தந்துள்ளனர்.)
நிகழ்வு முறைகள் மாறலாம், அடிப்படை நோக்கம் மாறாமல் எழுதியுள்ளேன். உ-ம், ஸ்வேதாம்பர்கள் 14 கனவுகள் என இணையத்தில் தந்துள்ளனர்.)
-------------------
Janma Kalyanak: Birth ceremony
· Saudharm
Indra celebrates the birth by making three circles of celebration hall.
· The Birth is
celebrated with songs & dances.
· Sachi
Indrani brings the child from the mother & enjoys the presence of child
Bhagwan with dances.
· Saudharm
Indra wants to have the child desperately, once Sachi Indrani gives him the
child, he enjoys the aura with his thousand eyes & still remains
unsatisfied.
· Saudharm
Indra takes the newborn Bhagwan to Mount Meru on Aravat elephant in a large
procession.
· At Mount
Meru the Bhagwan’s Abhishek is done with 1008 Kalash
· Janma
Kalyanak Pooja is done during the day.
· Saudharm
Indra celebrates the joyous occasion with Taandav dance to honor Tirthankar’s
birth.
· In the
evening everyone enjoys the opportunity of swinging the child God in a
magnificent swing created by heavenly Gods.
· Child God’s
birth is celebrated for the spiritual fulfillment, as this is His last birth.
2. ஜன்ம கல்யாணம்:
ஜினபாலகன்
பிறக்கும் போது இயற்கையின் சூழ்நிலை அழகாகவும் மனதைக் கவரக்கூடியதாகவும் இருந்தது.
அனைத்து
திசைகளும் நிர்மலமாகவும், ஆகாயம் தூய்மையாகவும் காணப்படுகிறது. அவை பகவான் குணங்களைக் காட்டுகிறது.
பிறந்த உடனே
பவணலோகத்தில் சங்குநாதமும், வியந்திர லோகத்தில் பேரிகையும், ஜோதிர் லோகத்தில்
சிங்க கர்ஜனையும், கல்பவாசி சுவர்க்கத்தில் மணி ஒலியும் தானாகவே இயக்கப் படுகிறது.
செளதர்மேந்திரன்
இருக்கை அசைகிறது. தலை தானாகவே குணிகிறது. இச்சகுனத்தை வைத்தே ஜினபாலகர் பிறந்துள்ளதை
அவதிஞானத்தால் அறிகிறான்.
உடனே அவன்
கட்டளைப்படி யானை, குதிரை, தேர், கந்தர்வர் படை வீரர்கள், எருது, நடன மங்கையர்கள் ஆகிய ஏழு சேனைகள்
அந்நகரை நோக்கி புறப்பட்டன.
எல்லா
இடங்களிலும் உள்ள மக்களிடமும், ஆன்ந்தமும், களிப்பும் ஏற்பட்டன. பின்னர் அமைதியும், சாந்தியும் நிலவியது.
செளதர்மேந்திரன் பகவான் பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக முன்று வட்டவடிவ விழாக்கூடத்தை அமைக்கிறான்.
பிறந்த நாளன்று தேவ இசையும், நடனத்துடன் அங்கே கொண்டாட படுகிறது.
தேவஅரசியான சஸிமஹாதேவி ஜினமாதாவிடமிருந்து ஜினபாலகனை கொண்டு வந்து நடனமாடி மகிழ்கிறாள்.
தேவேந்திரனும் தன்னிடம் ஜினபாலகனை தரவேண்டுகிறான். தனக்கு கிடைத்ததும் தனது ஆயிரம் கண்களில் மகிழ்ச்சி ஒளி பொங்க அரவணைத்தும் திருப்தி யடையாமல் காண்கிறான்.
செளதர்மேந்திரன் தனது ஐராவத யானைமீதமர்ந்து மடிமீது ஜினபாலகனை வைத்து, ஈசான இந்திரன்
வெண்குடை பிடிக்க; சனத்குமார இந்திரன், மாஹந்திர இந்திரனும் சாமரை வீச ;
அனைத்து தேவர்களுடன் மேரு மலை நோக்கி ஊர்வலமாக செல்கிறான்.
வெண்மையாகவும்,
நிர்மலமாகவும், பொலிவான பாண்டுக சிலையில் அமரச் செய்து,
அங்கே பகவானுக்கு தேவேந்திரன்
மற்றும் தேவர்களால் கலசம் கொண்டு பாற்கடல் நீரால் அபிஷேகம் செய்விக்கப் படுகிறது.
பிறகு இந்திராணி வாசனைப் பொடியை ஜினபாலகன் மீது பூசி, ஆடை அணிகலன்களால்
அலங்கரிக்கிறாள்.
ஜன்மாபிஷேகம்
முடிந்த பின் ஜினபாலகன் கால் கட்டை விரலில் உள்ள சின்னத்தைக் கண்டு அதனையே அந்த
தீர்த்தங்கரர் சின்னமாக (லாஞ்சனம்) அறிவிக்கிறான்.
செளதர்மேந்திரன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஜினபாலகனை சுமந்து தாண்டவ மாடுகிறான்.
அன்று மாலை ஜினபாலகனை அற்புதமாக செய்யப்பட்ட ஊஞ்சலில் இட்டு இங்குமங்குமாக ஆட்டப்படுவதை சுவர்க்கத்திலுள்ள தேவர்கள் கண்டு களிக்கிறார்கள்.
பின்னர் இந்திரன் சுவர்க்கத்திலிருந்து மண்ணுலகிற்கு கொண்டு வந்து அந்நிகழ்வுகளை
தாய், தந்தையரிடம் கூறி ஒப்படைக்கிறான். அவர்களும், நகர மக்களும் கூடி பிறந்த நாளைக் சிறப்பாக
கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஜினபாலகனின் ஜன்ம தினம் ஆன்மீக நிறைவை தருவதற்காக கொண்டாடப்படுகிறது, ஏனெனில் அதுவே அவரது கடைசி ஜன்ம ஜனனம் ஆகும்.
ஜன்ம கல்யாண பூஜை அன்றைய தினம் நடைபெறுகிறது.
பூஜா விதிகள்: (மேலோட்டமான குறிப்புகள்)
மறுநாள் ஜன்ம
கல்யாணகப் பெருவிழா அன்று ஜன்ம
கல்யாணக பூஜா
விதானமும், பூஜைகளும் நடைபெறும்.
பார்ஸ்வநாதர் தாலாட்டு - click here.
பார்ஸ்வநாதர் தாலாட்டு - click here.
--------------
Diksha Kalyanak: Renunciation ceremony
· In the
King’s assembly the young prince declares his intention of renouncing the
worldly life and the parents accept this decision with joy.
· Lokantik
angles praise the renunciation thoughts of the prince.
· Procession
of the prince to jungle.
· Discussion
between Indras & Kings as to who has the right to carry the Palaki (coach).
· Process of
Aahardaan (first meal after Diksha).
· Diksha
Kalyanak Pooja is performing ம்
the day.
· Behind the
closed doors special processes are done to the statue.
தீட்சாக் கல்யாணம்:
மனிதன் இறைநிலையை
அடைவதற்கு வழிவகுப்பது இந்த தீட்சையாகும்.
முயற்சியினால் வெளி உடம்மைக் கழுவிச் சுத்தம் செய்வது போல, உள்ளிருக்கும் சூக்கும உடம்பில் உள்ள தீய அழுக்குகளை, சில கிரியைகளினால் போக்க முடியும்.
ஞானமாகிய நற்பேற்றை
அளித்து,
மலங்களை அழிப்பதனால்
இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.
தீட்சை = தீ
(ஒளி) + அட்சை. (அட்சம் என்றால் கண்). ஊனக்கண் ஒளியை தவிர்த்து ஞானக்கண் ஒளியை ஏற்பது.
இந்த கல்யாணகம்
ஜிநர் உலகப்பற்றுகளை விலக்கி துறவு வாழ்க்கையை ஏற்பதை குறிக்கும்.
இல்லற வாழ்வில் ஜிநர் இருந்த போழ்திலும் ஆன்மீக ஞானம்
மேலோங்கி, இவ்வரச வாழ்வும், அடம்பரமும்,
அதிகாரமும், அரண்மனையும் நிலையானது அல்ல. அழகும், அலங்காரமும் விரும்பும்
இவ்வுடம்பு அழியக் கூடியதே. “நான்” என்பது இதனை இயக்கும் ஆன்மா தான். புறத்தோற்றத்தில் காணப்படும் அத்துனைப் பொருட்களும்
ஆன்மாவுக்கு சம்பந்தப்பட்டது அல்ல.
ஆனந்தம் என்பது
உடலால், மனதால் கிடைக்கும் சந்தோஷமோ, மகிழ்ச்சியோ இல்லை: அனந்த சுகம் ஆன்மாவுடையது;
அனந்த வீரியம் கொண்டது,ஞானம், தரிசனம் மட்டுமே இதன் குணம்; என உணர்ந்து இவ்வுலக
வாழ்வில் விரக்தி ஏற்பட்டு துறவு நெறியை அவர் மனம் நாடுகிறது.
துறவு ஏற்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன் இவர் விரக்தியை அறிந்த வானுலகரசர்
தேவர்களுடன் வந்து, அம்முடிவு எடுக்க நினைத்தமைக்கு வாழ்த்தி செல்கின்றனர்.
அவ்விரக்தியை மேலும் வளர்ப்பதற்கு பிரம்ம என்னும்
ஐந்தாவது சுவர்க்கத்தவர்களும், எட்டு
லெளகாந்திக தேவர்களும் பக்தி கொண்டு வந்து திருவடியை வணங்கி, உலக உயிர்கள் மோட்ச
உலகையடைய நிச்சய பாதையைக் காட்டுங்கள்
என்று கூறி அமரலோகம் சென்றனர்.
அவர் தீட்சை ஏற்கும் நாளை முன்னரே வந்து தேவர்கள்
தெரிவிக்கின்றனர். மேலும் பாற்கடல் நீரைக்கொண்டு, மோட்ச லெட்சுமியை மணக்க உள்ள,
அவ்வீதராகியை புனித நீராட்டுகின்றனர்.
அதன் பின்னர் அவருக்கு அபிஷேகம் கிடையாது.
அவருடன் பலருக்கும் அத்தூய எண்ணம் ஏற்பட்டது. தனது
மக்களுக்கு ஆறுதல் கூறி அகத்திலும் புறத்திலும் நிர்வாணத்தை ஏற்க முடிவெடுத்ததும்,
தேவர்கள் பல்லக்கில் அமரச் செய்து தீக்ஷா வனம் சென்றனர்.
அங்கு ஒரு பாறைமீது அமர்ந்து நம: ஸித்தேப்ய என்று
மந்திரத்தை சொல்லிய வண்ணம், ஐந்தே பிடியில் தலை, தாடை, வாயின் மேற்புறம் உள்ள
முடிகளை அகற்றுகிறார்.
அவர் பிடுங்கிய முடிகளும், அவர் இருந்த இடமும் தூய்மை
பெறுகிறது. தீக்ஷை பெற்ற அன்றே அவருக்கு மனப்பர்யாய ஞானம் ஏற்படுகிறது.
அதன் பிறகு ஆன்மத் தூய்மை பெறும் சாதனைகளான குப்தி, சமிதி,
தச தர்மம், அனுபிரேக்ஷை, பரிஷகஜெயம், சாரித்திரம் ஆகிய தியான சித்திக்கான :
ஏற்ற இடம், பொருள், காலம், எண்ணம் ஆகியவைகளை
தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
ஆறு மாதங்கள் கழிந்ததும், நல் புண்ணிய கிரமப்படி ஆஹாரம் கொடுக்கும் உத்தம
ஸ்ராவகர் வீட்டில் தான் ஜிநர் அகாரம் ஏற்பர்.
அவ்வமயம் அவ்விடத்தில் ஐம்மாரிகளான: ரத்தின மணி மழையும்,
மந்தசுகந்த சீதள வாயு வீசும், மணமுள்ள மலர்மழையும், ஜய ஜய என்கிற ஒலியும்,
தேவர்களின் துந்துபி ஒலியும் ஏற்படுகின்றன.
ஆகாரதானம் அளிப்பவர் அந்தப் பிறவியிலோ, அடுத்த மூன்று
பிறவியிலோ வீடுபேறடைவர்.
அத்தீர்த்தங்கர முனிவர்கள் தீக்ஷை ஏற்றபின் , மெளன விரத்தைக் கைக்கொண்டு தீவர ஆன்ம சாதனைகளை
செய்து முதலில் மோகனீய கர்மத்தை வெல்கின்றனர். மற்ற மூன்று காதி கர்மங்களையும் வென்ற பிறகே
கேவலஞானம் உண்டாகிறது.
------
மேற்கூறிய நிகழ்வுகளுடன்,
அன்றைய
தினம், தீட்சா கல்யாண பூஜாவிதானமும், பூஜைகளும் நடக்கிறது
-----------------
Keval Gyan Kalyanak: Omniscience celebration
Click for The AGAMIC and LOGIC Expalanations of KEVAL GYAN
Click for The AGAMIC and LOGIC Expalanations of KEVAL GYAN
· Celebration
of Keval Gyan by all, with music & dances.
· CLICK for Creation of Samosaran by heavenly Indra.
· Divya- Dhawni (sermons) and questions by
Gandhar’s.
· Keval Gyan
Kalyanak Pooja.
· Behind the
close doors Keval Gyan process is done to all the statues and at this point the
doors are opened because after achieving Keval Gyan the statues are now
transformed in to Gods.
தீக்ஷை ஏற்றவுடன்
மனப்பர்யாய ஞானம் கிட்டுகிறது.
கானகத்தில் பல
வருடங்கள் இருந்து, வெயில், மழை, குளிர்
போன்ற வெப்ப மாறுபாடுகளையும்; விலங்குகள்,
விஷ ஜந்துக்கள் போன்றவற்றால் ஏற்படும் துன்பங்களையும்; பசி, தாகம் போன்ற
பிணிகளையும் பொருட்படுத்தாது கடுந்தவம் புரிகிறார்.
அக்கடும் பயிற்சி
யினால் காம, வெகுளி, மயக்கம் என்ற மன உறுத்தல்களை நீக்கி, உச்சக் கட்டமாகிய சுக்ல
தியானத்தில் தோய்ந்து இருக்கிறார்.
ஆன்மத் தூய்மை
பெறுவதற்கு ஞானாவரணம், தர்சனாவரணம், மோகனீயம், அந்தராயம் போன்ற காதி
கர்மங்களைபோக்கியதால் கேவல ஞானம் என்னும் வாலறிவு ஏற்படுகிறது.
அவ்வான்மா
மூன்றுலங்களையும் பார்க்கவும், அறியவுமான சக்தியைப் பெறுகிறது. சம்சார சுழற்சியிலிருந்து முற்றிலுமாக நீங்கி
விடுகிறது.
அவரது கேவல ஞான
ஒளி மூவுலகிலும் பரவுகிறது. எத்திசைகளும்
தூயதாகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது.
இந்திரனும்,
பகவானுக்கு கேவல ஞானம் பெற்றதை உணர்ந்து, அகமகிழ்ந்து மற்ற தேவர்களை அழைத்துக்
கொண்டு அந்நகருக்கு வந்திறங்குகிறான்.
அவரின்
தீர்த்தங்கர நாம கர்மத்தின் காரணமாக இந்திரன் குபேரனை அழைத்து சமவசரணம் என்னும் அறங்கூறும் மண்டபத்தை உருவாக்க
கட்டளையிடுகிறான்.
(அதன் விபரங்களை
தனியே காண்போம்.)
பகவானுக்கு எண் வித பிராதிஹார்யங்கள் என்ற ப சிறப்பு பண்புகள் அமைகின்றன.
1. அசோக மரம் – எந்த மரத்தின் கீழே முழுதுணர்ஞானம்
பெற்றனரோ.
2. முக்குடை - மூன்றடுக்கு ரத்தினம் பதித்த குடை, முவுலகிலும் சிறந்தவருக்கே உரியது.
3. இரத்தின சிம்மானம் - கந்தகுடி மத்தியில் குபேரனால் அமைக்கப் பட்டது.
4. 64 சாமரைகள் - இருபுறமும் 64 தேவர்களால் வீசப்படுவது.
5. அமர ஒலி - அனைத்து திசைகளிலும்
எதிரொலிக்கும் படி தேவர்களின் ஜெயகோஷம்.
6. பிரபாமண்டலம் - கண்ணாடியை போன்று இதனைக் காண்பவரின் ஏழு பிறவிகளை (கடந்த மூன்று, தற்போதைய, எதிர்கால மூன்று) உணர்வர்.
7. மலர்மழை - 12 *யோசனை தூரம் வரை வானத்திலிருந்து மணமுள்ள மலர்கள்,
மழை போன்று அவர் எதிரே பொழிந்து கொண்டிருக்கும்.
8. திவ்யதொனி – 18 பெரிய மொழிகளையும்,
700 சிறிய மொழிகளையும் உள்ளடக்கியது.
திவ்ய தொனி - விபரங்கள் பெற கிளிக்
திவ்ய தொனி - விபரங்கள் பெற கிளிக்
அவர் அர்ஹந்த நிலையை எய்தியதால் பத்து வித அதிசயங்களை அடைகிறார்.
1. பகவான் இருக்கும் ஸ்தலத்தை சுற்றி 100
* யோசனை பரப்பளவிற்கு சுபிட்சமாக இருக்கும்
2. தரையில் பாதம் பாவாமல் இருத்தல்
3. விஜயம் செய்யும் இடத்தில் இம்சை
நிகழாதிருத்தல்.
4. ஆகாரம் உட்கொள்ளாதிருத்தல்
5. பகவானுக்கு உபசர்க்கம்
ஏற்படாதிருத்தல்
6. அவரைச் சுற்றியுள்ளவர் காட்சிக்கு உடலின்
முன்பகுதியே தெரிதல் (360 டிகிரி)
7. நிழல் தோன்றா உடலமைப்பை பெறுதல்
8. இமையா கண்கள்
9. அனைத்து கலை, வித்தைகளுக்கும் தலைமைப் பண்பு அமைதல்
10. கேசமும், நகமும் வளராதிருத்தல்.
----------------
மேலும் ஆகாயம் பூமியில் மாசு படுதலின்றி தூய்மையாகவும், உயிர்கள் அனைத்தும் நேசமுடனும், நோய், பிணிகள் ஏற்படாமலும், தானியங்கள், காய், கனிகள் நல்ல விளைச்சலுடனும்,
நீர் நிலைகள் தூய நீரால் நிரம்பியும், எங்கும் நறுமணம் கமழும் வண்ணம் அப்பிரதேசம்
உள்ளது.
மேலும் பசி, தாகம், பயம்,சினம், பற்று, மோகம்,கவலை, மூப்பு, நோய், மரணம்,
வியர்வை, துயரம்,ஆணவம்,ரதி, பிறப்பு, அரதி இவை போன்ற குற்றங்களும் இருப்பதில்லை.
* ( ஒரு யோசனை (yojana) , சம்ஸ்கிரத அளவு = 1.6; 3-5;
10.6-13.2; kms என பலவிதமாக அளவு பேதங்களை முற்காலந்தொட்டே பல கணிதவியலார்
தருகின்றனர்.)
கேவலஞான கல்யாணகத்தன்று கேவல ஞான பூஜாவிதானமும், இதர பூஜைகளும்.
Moksh Kalyanak: Celebration of liberation
· Declaration
of Moksh & celebrations with loud musical instruments & dances.
· Evaporation
of physical body in presence of heavenly Indra Agnikumar.
· Nirvan
Kalyanak Pooja.
· Shanti Pooja
Yagya
மோட்ச கல்யாணம்:
பகவான் அனைத்து
வினைகளையும் போக்கிய பிறகு, ஆயுள் கர்மமும்
நீங்கிய பின், பரம ஒளதாரிக தேகத்தை
விட்டு ஆத்மா சித்தபதவியைப் பெற்று முக்தி அடைவதற்குதான் மோக்ஷம் என்று கூறுவர்.
இந்திரன் மோக்ஷ
கல்யாண விதியை நடத்துகிறான். மனிதர்களும்,
தேவர்களும் ஆன்மநலம் பெறும்
விழாவாக கொண்டாடுகின்றனர்.
தேவர்கள்
பவித்திரமான சிறந்த மேன்மையை அடைந்த பகவானுடைய புனித உடலை நேர்த்தியான,
மதிப்புமிக்க பல்லக்கில் வைத்துக் கொண்டு அதைச் சுத்தமான இடத்திற்குக் கொண்டு
சென்று பாறை மீது வைக்கின்றனர்.
தேவர்கள்
வெகுவிரைவாக தேவதரு, சிவப்பு சந்தனம், காலாகரு போன்ற நறுமணமுள்ள மரச்சுள்ளிகளை
அடுக்கிவைத்து நெய் சொறிந்து , அதன் மீது
முக்தி பெற்ற பகவானுடைய சரீரத்தை வைத்து அக்னீந்திரன் தனது முகுடத்திலிருந்து
கிளம்பிய சுடரினால் சிதைக்கு தீ மூட்டினான்.
தேவேந்திரனும், தேவர்களும் பகவான் உடல் எரிந்தவுடன் உண்டான
பஸ்பத்தை, தாமும் அதுபோல் ஆகவேண்டும் என நினைத்து, தலைமீதும், புஜங்கள், கழுத்து,
மார்பிலும் தடவிக் கொள்கின்றனர்.
முக்தி நிலைதான்
மிகச் சிறந்த நிலை; அனைத்து வினைகளும் நீங்கி, ஆன்மா தனது முழு குணங்களையும்
பெறுகிறது. அதன் கடையிலா ஞானம், கடையிலா சுகம், கடையிலா சக்தி ஆகியவை புறத்திலேயே
வெளிப்படுகிறது.
மோக்ஷ கல்யாணத்தை
அனைத்து மக்களும் விரும்புகின்றனர். மோக்ஷம் தான் வாழ்க்கையின் முக்கிய
குறிக்கோள்.
----------------
ஐந்தாம்நாள் பரிநிர்வாண கல்யாண பூஜா விதானமும் நடைபெறும்.
இதனுடன் கர்மதகன பூஜாவிதானமும், நடத்திய பிறகு கிரியாகலாபத்தில் வரும் பரிநிர்வாணபக்தியைத் தவறாது படித்து முடிப்பர்.
சாந்தி பாடல்.
--------
பூமியில் வாழும்
அனைத்து ஜீவராசிகளும் இந்த பஞ்ச கல்யாணத்திற்கு தகுதியானதே.
அனைத்து
ஆன்மாக்களும் கடையிலா காட்சி, கடையிலா ஞானம், கடையிலா சுகம், கடையிலா சக்தி
கொண்டதே என்பதனை, அவைகள் உணருவதற்காகவே
தீர்த்தங்கரர்கள் பஞ்ச கல்யாணகம் தேவர்களால் நடத்தப் பட்டது.
அவ்வழியே நாமும்
புதிய ஜிநாலயங்கள் நிறுவினாலோ, பழைய ஜிநாலங்கள் பன்னிரண்டு ஆண்டுக் கொருமுறை
புதிப்பிக்கப் பட்டும் இந்த கிரியா
விதிகள் நடத்தப் படுகின்றன.
அதனை வெகு
சிறப்பாக விழா எடுத்தும், கடைசி வரை பார்த்து பரவசத்தில் மூழ்கிய பவ்ய ஜீவன்கள்
கண்டிப்பாக பல பிறவிகளை இழக்கும் என்பது நிதர்சனமே.
முற்றும்.
ஆக்குவ தேதெனி லறத்தை யாக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தேதெனில் ஞான நோக்குக
காக்குவ தேதெனில் விரதங் காக்கவே.
ஜெய் ஜிநேந்திரா!
--------------
Click for The AGAMIC and LOGIC Expalanations of KEVAL GYAN
Click for The AGAMIC and LOGIC Expalanations of KEVAL GYAN
No comments:
Post a Comment