Showing posts with label JABALPUR DT. Show all posts
Showing posts with label JABALPUR DT. Show all posts

Thursday, January 4, 2018

ATISHAYA KSHETRA KUNDALGIRI (KONIJI) - அதிசய க்ஷேத்திரம், குண்டல் கிரி (கோனிஜி)



SHRI DIGAMBAR JAIN ATISHAYA KSHETRA KUNDALGIRI (KONIJI), PATAN

ஸ்ரீ திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்திரம், குண்டல் கிரி (கோனிஜி),  பேட்டன்.






SHRI DIGAMBAR JAIN ATISHAYA KSHETRA KUNDALGIRI (KONIJI), PATAN

Shri Digambar Jain Atishaya Kshetra Kundalgiri (Koniji), Patan
Is Atishaya Kshetra (Place of Miracles)


Address :

Shri Digambar Jain Atishaya Kshetra Kundalgiri (Koniji)
Gram – Koni Kalan,
Taluka – Patan,
District – Jabalpur (M.P.)
Pin – 483113
Phone 07621-294895, 205895, 220405, 220459, 220488, 220588 and 220680

 

It lies in the coordination of (23.32813, 79.66872) in the Google Map.



Facilities :

4 Dharmashalas well equipped with all the facilities are available here. The food and beds are also available.

Reservation Facility,

Residence Reservation is available

Kshetra Office, Phone 07621 – 220405,
Chief Secretary’s Residence, Phone 07621 – 220459,
Advertisement Secretary’s Residence, Phone 07621 – 220588, 220488, 205188


Means of approach :

Road: – The buses are available for all the places for the Bus Stand situated at distance of 1 km from the Kshetra.
Buses & Taxis are available from Jabalpur, Damoh & Patan to Kshetra.
Train: – After reaching to Jabalpur or Damoh Railway Station one gets buses & taxis for Koniji Kshetra.

Airport: – Dumna Airport Jabalpur – 40 km

Temple Kind of & Timings :

Digambar : – from 6 in the morning to 10 in the night.












About Koniji :
Shri Kundalgiri (Koniji) Atishaya Kshetra is situated near Hiran River in the valleys of Bhander-Kemor mountain range, the Vindhyachal mountain range in Jabalpur District of M.P. This Kshetra is about 1000 years ancient and is present in midst of natural surroundings. The effect of Kalchuri Periodic Art of 10th-11th century is clearly visible in the art of temple and the idols present here. The temples of this Kshetra have restored the historicity & art in its usual form and they deliver the message of self-development to all living beings.

The ruins and fragments of Jain temples available here are so much in quantity that it is difficult to find out the exact number of temples which existed here in past. According to one report the 13 Jinalayas & temples do existed here in the year 1934 but up to 1944 only 9 Jinalayas & temples were left.

ஸ்ரீ திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்திரம், குண்டல் கிரி (கோனிஜி), பாட்டன்.

ஜபல்பூர் மாவட்டத்தில் விந்திய கிரி மலைத்தொடரின் தொகுதியில் ஒன்றான பந்தர் கிமூர் மலையின் பள்ளத்தாக்கிலும், ஹிரன் நதிக்கரையிலும் அமைந்துள்ள ஒரு அழகிய ஜினாலயம்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட மிகப் புராதன இச்சின்னம் அழகிய கண்கவர் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.

10-11 நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளதை காலச்சூரி காலத்திய கலை அம்சங்கள் எடுத்தியம்புகின்றன. இந்த க்ஷேத்ரத்தின் ஆலயங்கள் சமண வரலாற்றையும், கலையையும் பறைசாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஜீவராசிகளின் விடுதலைக்கான சுய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது.

அந்தக் கிராமத்தில் பல ஜினாலயங்களின் இடிபாடுகளும், எச்சங்களைக் காணும் போதும் ஜைனம் இப்பகுதியில் தழைத்திருந்ததை , பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பதிலிருந்து உணரலாம். 1934 வரை இந்த ஸ்தலத்தில் 13 ஜினாலயங்கள் இருந்ததை வரலாறு குறிப்பிடுகிறது. இருப்பினும் 1944 ல் இப்பகுதிய்ல் 9 ஜினாலயங்களே இருந்தது என்பதாக தெரிகிறது.














The 10 temples are constructed here in one compound only and 11th temple exists on one hill in north direction of the Kshetra.

Atishaya: – The carvings of ‘Nandishwar Dveep’ & ‘Sahastrakoot Chaityalaya’ are quite artistic and miraculous.  No other Jinalaya is made in this artistic style at any other place. It was few years ago only that Gods of heaven used to come at this Kshetra on ‘Ashtanhika Festival’ and use to offer their prayers on this occasion. The shower of saffron also occurs here on this occasion and the whole environment get filled with fragrance of saffron.

The 7th temple of this Kshetra in which Sahastrakoot Jinalaya exists, is famous as Sanctum Temple (Garbha Mandir). Even after the presence of 2 ventilators & 2 gates in this temple one feels cool in summers & warm in winters.


பெரும்பாலானவை 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் தாக்குதலில் அழிந்திருப்பதாக தெரிகிறது.

தற்போது பத்து ஜினாலயங்கள் ஒரே மதிற்சுவருக்குள் இருப்பதைக் காணலாம். 11 வது அருகிலுள்ள மலை உச்சியில் இருப்பதைக் காணலாம்.
(ஆனால் இருளுடன் குளிரும் சேர்த்ததால் எறிச் செல்ல முடியவில்லை.)
அதனால் அதன் விபரம் தெரியவில்லை.


அதிசய க்ஷேத்ரம்:

இங்குள்ள நந்தீஸ்வரதீப  பிரதிமையும், சகஸ்ர கூட சிற்பமும் கலை நுணுக்கத்துடனும், அற்புதமான் வடிவமும் கொண்டதனால் வெறெந்த ஆலயத்திற்கும் இல்லாத சிறப்பைக் கொண்டது.

சில காலத்திற்கு முன்பு வரை, அதன் அமைப்பில் மயங்கி நந்தீஸ்வர ஆஷ்டானிக பருவத்தில் தேவ, தேவியர்கள் இங்கு வந்து ஆடிப்பாடி தரிசனம் செய்த அதிசயத்தை பெற்றது. அவ்வமயம் குங்குமப்பூ மழை பொழிந்ததாகவும், இப்பிரதேசமே அதன் நறுமணத்தில் திளைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இச்க்ஷேத்ரத்தில் எழாவது சிற்றாலயமாகவுள்ள சகஸ்ரகூட சைத்யாலயம், இவ்வாலத்தின் கர்ப்பகிருஹமாக கருதப்படுகிறது. இந்த அறையில் இரு சாளரங்கள் இருப்பினும், இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இதனால் இவ்வறை வேனிற் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாகவும் இருப்பதை உணரலாம்.












Main Temple & Idol :

In this Kshetra 10 spired temples were constructed together in single compound only & most of the idols belonging 10th-11th century are installed in these temples.

The 8th temple is the main temple in which the 4 feet high Padmasan miraculous idol of principal deity Bhagwan Parshvanath surmounted with seven serpent hoods is installed. The idol is made of white stone. Due to the effectively of idol the mind of devotee gets filled with great peace & indescribable joy. This idol is also called as ‘Vighnahar Parshvanath’. 

Other Temples :

The magnificent Trimurti temple was constructed here because of inspiration of Acharya Vidya Sagar Ji. The 7 feet high pleasant Khadgasan idols of Bhagwan Adinath, Bhagwan Bharat & Bhagwan Bahubali are installed in this temple. The temple of such type is first in M.P. This is second numbered temple of this Kshetra. In the first temple the idol of Bhagwan Mahaveer Swami; in third temple the idol of Bhagwan Bahubali; in fourth temple the idol of Bhagwan Shantinath & Chandraprabhu; in fifth temple the idol of Bhagwan Adinath; in sixth temple the idol of Bhagwan Parshvanath & in ninth temple the Chaubeesee carvings on stone slab is installed. 11th temple is situated on hill in north direction of this Kshetra.


 இந்த ஸ்தலத்தில் 10 நீள்வட்ட கோள வடிவ விமான ஜினாலயங்கள் அனைத்தும் ஒரே சுற்றுசுவருக்குள் கட்டப்படுள்ளது. பெரும்பாலான பிரதிமைகள் 10-11 நூற்றாண்டைச் சார்ந்தவை.

எட்டாவது சன்னதியில் ஏழு தலை நாக படத்துடன் அமர்ந்துள்ள 4 அடி உயர வெள்ளைச் சலவைக் கல்லால் செய்யப்பட்டு பத்மாசன கோலத்திலுள்ள பார்ஸ்வநாதரின் கிருபையினால் பல பக்தர்கள் மன அமைதி பெற்றும், மட்டில்லா மகிழ்ச்சி அடைந்ததினால் விக்னாஹர பார்ஸ்வநாத் என்று அழைக்கின்றனர்.

மிக அற்புதமாக அமைப்பைக் கொண்டுள்ள திரிமூர்த்தி ஆலயம், ஆச்சார்ய ஸ்ரீவித்யாசாகர் ஜி அவர்கள் வழிகாட்டுதலில் கட்டப்பட்டவை. அதில் 7 அடி யுயர பகவான ஆதிநாதர் கட்காசன சிலையும், பரத, பாகுபலியரின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இரண்டாவது இலக்க ஆலயமான இதுவே மத்திய பிரதேசத்தில் முன்னோடியான அமைப்பாகும்.

முதலில் பகவான் மஹாவீரரும், மூன்றாவதில் பகவான் பாகுபலியும், நான்காவது சிற்றலயத்தில் பகவான் சாந்திநாதர் மற்றும் சந்திரப்ரபுவும், ஐந்தாவதில் பகவான் ஆதினாதரும், ஆறாவதில் பகவான் பார்ஸ்வநாதரும், ஏழாவதில் நந்தீஸ்வர தீபமும், எட்டாவதில் சகஸ்ரகூடமும், ஒன்பதாவதில் 24 தீர்த்தங்கர பிரதிமையும், 








$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Madiya ji foothill Jinalayas - மடியாஜி அடிவார ஜினாலயங்கள்.

Shri  Mahavir Jinalaya
ஸ்ரீ மஹாவீரர் ஜினாலயம்.




SHRI PARSHVANATH DIGAMBER JAIN MANDIR PISANHARI

MADIYA, JABALPUR, M.P.


1008 Shri Parshvanath Digamber Jain Mandir Pisanhari Marhiyaa


Is Atishaya Kshetra (Place of Miracles)



It lies in the coordination of (23.151806, 79.885639) in the google map.


Distance from chenni central to Madiya is 1400 KM


காலையில் மடியாஜி மலக்கோவில்களை பார்வையிட்டோம்.


பார்ஸ்வநாதர், 24 தீர்த்தங்கரர், பாகுபலி நாதர், சாந்திநாதர் சன்னதிகள் தனித்தனி ஆலய விமானங்களுடன் ஏற்ற இறக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன.

செல்லும் வழியில் அழகிய கைப்பிடி வேலைப்பாடுகளுடன், 7" உயர படிகள் ஏறியிறங்க வசதியாக இருந்தது.

1008 சித்த வடிவங்கள் புடைப்புச் சிற்பமாக சிறிய பாறையை இருபுறங்களிலும் செதுக்கப்பட்ட குகை ஜினாலயத்தில், க்ஷேத்ரபாலகர் நிறுவப்பட்டுள்ளது விசேஷமாக தென்பட்டது.


Morning we got dharshan on the hill Jinalayas. Pishanhari Shri Parswanathar shrine, 24 theerthangar individual vimans, Shri Bhagawan Bhagubali , 25 feet granite statue, Shri Santhinathar shrine are built adjacently.

The parapet wooded arrangement were ease to, while claiming the hill. Standard 7 inch height are make convenient for raise and down.

One boulder is itched by 1008 Siddha parameshti emposed figures. At the bottom a cave had Some Jinar carvings and Shetrabalagar identity is seems to be special for the place.

******************************



அதன் பிறகு அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹாவீரர் ஜினாலய தரிசனம் கிட்டியது.


மலை இறக்கத்தில் ஸ்ரீ மஹாவீரர் ஆலயம் : நெடிய 35 அடி யுயர மானஸ்தம்பத்துடன் காட்சியளிக்கிறது.


மூலவரான ஸ்ரீ மஹாவீரர் 4 அடியுயர வெண்பளிங்குக்கல், முழு உருவச்சிலையாக காட்சி யளிக்கிறார். மேலும் அக்கருவறை வேதிகையில் பல ஜினர் உருவங்கள் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் கொற்றக் குடையுடன் கூடிய பீடத்துடனும், பளபள என பித்தளை பிரதிமைகளாக வைக்கப்பட்டுள்ளன.


பல சிராவகர்கள் மஹாவீரருக்கு அர்க்கியம் கொடுத்துக் கொண்டும், 1008 திருநாமம் படித்துக் கொண்டுமாக அமர்ந்துள்ளனர் அக்காலைவேளையில்.











At foothill Shri Mahavir Mandir was built and had a Manasthamb of 35 feet high.

A white marble stone absolute sculpture of Shri Mahavir is established on the plinth. Also metal idol of Jinars were seated on the same platform having base and single silver umbrella on the top.


Some shravak, Shravaki were doing the rituals of Argya and 108 spiritual qualities of Jinar.

*****************



Nandeeswara dweep Jinalaya
நந்தீஸ்வர தீப ஜினாலயம்.

மஹாவீரர் ஜினாலயத்திற்கு பின்புறம் நந்தீஸ்வர த்வீப ஜினாலயம்; நீள் அரைகோள வடிவ கூரையின் அடியில், 15 அடியுயர தளத்தில், 60 அடிவிட்ட கூடத்தில், பிரம்மாண்ட நந்தீஸ்வர த்வீப மாதிரி வடிவம் கூம்பு வடிவ கோபுர கலசத்துடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

10 அடி யுயர  பஞ்சமேருக்களை சுற்றி 4.5 அடியுயர குன்று விமானத்தில் ஜின பிரதிமைகள் நிறுவப்பட்டு, திசைக்கு 13 என்றளவில் நாற் திசையிலும் மொத்தம் 52 ஜினாலயங்களும்  2.5 அடியுயர  வட்ட வடிவ மேடையில் வண்ணங்கள் பளிச்சிட அமைக்கப்பட்டுள்ளன.

அங்கும் தங்குமிட வசதி உள்ளது.























On the back of Shri Mahaveer Jinalaya, Nandheeswar dweep model Jinaya is constructed in a grand manner. A cicular shape 15 feet height structure, having 60 feet diameter of Eliptical Domb with conical shape Viman and kalash on the peak. Total structure is nearly 30 feet high.

Ten feet high Panch Meru is install at the centre of the circular shape platform. 4.5 feet Small shrine of Jinars of thirteen is also installed on four directions of Pancha Meru. All are look colourful while we are circumambulate the total identities.


A Dharmasala also at foothill Jinalayas.


-###########################




ஸ்ரீ வர்ணீ திகம்பர் ஜைன் குருகுல வித்யாலயா, ஜபல்பூர்;  மடியா ஜி ஜினாலயத்திற்கு எதிரில் உள்ளது. ஒரு இரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தோம்.


அக்குருகுலத்தில் ஒரு அறையில் ஸ்ரீ சாந்திநாதர் மற்றும் சில ஜினர் உலோக பிரதிமைகள் பளபள வென்று ஜொலிக்கும் வகையில் படிப்படியா வேதிகையில்  அமர்த்தப்பட்டுள்ளது. 














 Shri Varni Digamber jain Gurugul Vidhyalay, Jabalpur. We are stayed at the School over snight. A small mandir is inside the Gurukul building. Nice Stay for one night.

Shri Santhinathar and some other Jinar metal idols are placed on a tiered plinth. All idols are gilitering while worshiping.

############################# 




Athinath Digamber mandir

ஸ்ரீ ஆதிநாதர் திகம்பர் ஜினாலயம்


A Athinath Digamber mandir also built at about 500 meters from the Madiyaji hill. It was under the supervision of Param Pujya Acharya shri 108 Arjavasaga muni Maharaj.

In the  ground floor Shri Adhinath while marble stone, absolute carved statue in the Padmasana posture is installed on the Plinth. On the back of the while stone Pratima a grand colourful decoration is also attracted devotees. Many Jinars metal idols were also seated adjacent to the main pratima. All are having base tiny platform and top silver Umbrella are shining in attractive manner.

On the first floor Shri Munishuvirath Bhagavan of while marble absolute sculptured idol is installed on the 3.5 feet platform. On the back of the while stone Pratima a grand colourful decoration is also attracted devotees. Many Jinars metal idols were also seated adjacent to the main pratima. All are having base tiny platform and top silver Umbrella are shining in attractive manner same as the top floor.

Though it look Small, more spirituality lies in the temple.














அக்குன்றுக்கு 500 மீ. தொலைவில்; பரம்பூஜ்ய ஆச்சார்ய ஸ்ரீ 108 ஆர்ஜவசாகர் முனி மகராஜ் வழிகாட்டுதலில் கட்டப்பட்ட ஜினாலயம் ஒன்றும் உள்ளது.

ஸ்ரீ ஆதிநாதர் சன்னதி : அழகிய கண்ணாடி வேலைப்பாடுள்ள மேடையுடன் கூடிய விமானத்தில்  அமர்த்தப்பட்டுள்ளார். பின்புறம் உள்ள பலகையில் வண்ண வடிவங்கள் கண்ணை கவரும் படி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் பல உலோக ஜினப்பிரதிமைகள் மேடை, கொற்றக்குடையுடன் பளிச்சென துலக்கப்பட்டு அமர்த்தப்பட்டுள்ளன.

மேற்தளத்தில் அழகிய கண்ணாடி வேலைப்பாடுடைய மேடை மற்றும் விமானத் திற்குள் ஸ்ரீ முனுசூ விரதர் சன்னதியும் உள்ளது. இங்கும் அதேபோல், பின்புறம் உள்ள பலகையில் வண்ண வடிவங்கள் கண்ணை கவரும் படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல உலோகப ஜினப்பிரதிமைகள் மேடை, கொற்றக்குடையுடன் பளிச்சென துலக்கப்பட்டு அமர்த்தப்பட்டுள்ளன.

சிறியதானாலும் அழகு மிளிரும் வண்ணம் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பாகும்.




*************************************