Thursday, August 14, 2014

ANUMANTHAKUDI - அனுமந்தகுடி

 Shri PARSWANATHAR JAIN TEMPLE  --   ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம் 



Location map: click here

Map for Jain pilgrimage centres:   Click    ANUMANTHAKUDI on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Route:

Chennai → Trichy →Pudukottai → Karaikudi  Devakottai  Anumanthakudi = 425 kms.

Puduchery → Cuddalore → Kumbakonam →  Mannargudi  Adirampatinam  Anumanthakudi = 301 kms.

Trichy → Pudukottai → Karaikudi  Devakottai  Anumanthakudi  = 115 kms.

Madurai → Thirupattur → Sivaganga → Devakottai  Anumanthakudi = 105 kms.


செல் வழி :  


சென்னை  →  திருச்சி   → புதுக்கோட்டை    →  தேவக்கோட்டை   →  அனுமந்தகுடி     =  305 கி.மீ. 

புதுச்சேரி → கடலூர் → கும்பகோணம் → மன்னார்குடி → அதிராம்பட்டினம்    வட்டானம்     அனுமந்தகுடி     =  301 கி.மீ. 

திருச்சி → → புதுக்கோட்டை    →  தேவக்கோட்டை   →  அனுமந்தகுடி     =  11 5 கி.மீ.

மதுரை →திருபத்தூர்  → சிவகங்கை   →  தேவக்கோட்டை   →  அனுமந்தகுடி     =  105 கி.மீ. 



Shri MAZHAVANATHAR  --  ஸ்ரீ மழவநாதர் 

 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



Anumanthakudi situated 6 k.m.s from Deavakottai in the Kannangudi Road. Fully renovated of this temple was governed by Ramanad Sethu princes in early years. References are cited in the Mckinsey codex reports ie two temples are in the location. A stone inscription of 1533 A.D. convey that Shri Mazhavanathar (Shri Parswanathar) Jain temple was there.

Olden days Anumanthakudi called as Adimathikudi . on those days the Jinalaya laid on the bank of ViriSuzhi alias Virisilai river. Then only shifted to there. It was constructed by Sathaiya Kurukkal,  the father of care takers of now.   In the past the ruler of this area offered the temple land and subsidy to a merchant for his awesome event. The above incidents were mentioned in the poems of “Adimathikudi Ayyanar pillaithamizh”.

The Brahmadevar of demi-god of this temple got Thrisul and plunger  weapon on its hand is differ from regular.  The shrine room was in front of sanctum sanctorum is also a remarkable.

All habitants of the village ie Hindus, Muslims are unit  for improving  the temple.
Shri Parshwanathar is Main deity. Shri Dharmadevi statues and Shri Jwalamalini foot prints are shrines of this Jinalayam.


ராமனாதபுரம் சேது சமஸ்தானத்தினர் அறங்காவலராக இருந்த இவ்வாலயம் தேவக்கோட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் கண்ணங்குடி செல்லும் சாலையில் உள்ளது. தற்போது முற்றிலுமாக புதிக்கப் பட்டுள்ள இவ்வாலயம் மெக்கன்ஸி சுவடித் தொகுப்பில் இடிந்த கோவில் ஒன்றும், வழிபாட்டில் ஒன்றும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீமழவநாதர்  (ஸ்ரீபார்ஸ்வநாதர்) ஜிநாலயம் அருகிலுள்ள விரிசிலை ஆற்றங்கரையில் இருந்துள்ளதாக 1533 ம் ஆண்டின் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. 

அனுமந்தகுடி என்று வழங்கும் இவ்வூர் முன்னர் அடிமதிக்குடி என்றும், விரிசிலை என்ற ஆறு விரிசுழி என்றும் வழங்கப் பட்டுள்ளது. அவ்வாற்றங்கரையில் இருந்த இந்த ஜிநாலயம் தற்போதுள்ள இடத்தில் சாத்தையாகுருக்கள் என்பவரால் அமைக்கப்பட்டதாகும்.  முற்காலத்தில் இவ்விடத்திற்கு வந்த ஒரு  வணிகன் செய்து காட்டிய அதிசயத்தினால்  மனம் மகிழ்ந்த அவ்வூர் அரசன் பசு ஒன்றினை இவ்விடத்தில் அவிழ்த்து விட அது சுற்றி வந்த பகுதி யையும், அதன் குளம்புகளின் எண்ணிக்கைக்கு சமமான கழஞ்சு பொன்னையும் வழங்கியதாக அடிமதிக்குடி அய்யனார் பிள்ளை தமிழ் என்ற நூலில் 49ம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இங்குள்ள சாத்தையன் (பிரம்மதேவர்) வேறுபட்ட ஆயுதங்களுடன் நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளார். திரிசூலம் மற்றும் உலக்கை ஆயுதம் சாத்தப்படுகின்றன. தற்போது இவ்வாலயத்தை ஸ்ரீசாத்தையா குருக்களின் குமாரர்கள் பராமரித்து வருகின்றனர்.

சோழமண்டலத்தில் உள்ள இவ்வாலயத்தின் அருகில் உள்ள இந்துக்களும், முகம்மதியர்களும் ஆதரவு காட்டி  வழிபட்டு வருவது சிறப்பானதாகும்.

 ஸ்ரீபார்ஸ்வநாதரை மூலவராக கொண்டுள்ள இவ்வாலயத்தில் ஸ்ரீதர்மதேவி உருவமும், ஸ்ரீஜ்வாலாமாலினி பாதங்கள் அடங்கிய தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்னர் ஸ்ரீபிரம்மதேவர் அமர்ந்து அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்.


2 comments: