Wednesday, September 10, 2014

veedur - வீடூர்


Shri Adinathar Jain Temple -  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்Map for Jain pilgrimage centres:   Click  Veedur
(Tamil nadu & Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : வீடூரை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாத )ROUTE:Tindivanam →  Veedur dam →   Veedur  =    24 k.m.

Villupuram →  Veedur dam →   Veedur  =    28 k.m.

Gingee →  Deevanur →  kutteripattu  →  Veedur dam →  Veedur =   40 k.m.

Vandavasi  →  Vellimedupettai →  Deevanur →  kutteripattu   →  Veedur =  60 k.m.

செல்வழி:திண்டிவனம் → வீடூர் அணை →  வீடூர் =  24 கி.மீ.

விழுப்புரம் → வீடூர் அணை →  வீடூர் = 28 கி.மீ.

செஞ்சி → தீவனூர் →  கூட்டேரிபட்டு → வீடூர் அணை →  வீடூர் = 40 கி.மீ.

வந்தவாசி →  வெள்ளிமேடுபேட்டை →   கூட்டேரிபட்டு →  வீடூர்=  60 கி.மீ.

 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!An ancient temple situated (3 k.m.s ) near Veedur dam which is adjacent to Tinidivanam – Villupuram Highways. Though it was built in the tenth century there is no inscription stones or other evidences found because of frequent renovation process takes place. It looks like traditional Dravidian style Jain temples comprises of Entry tower, Manasthamp, Altar, Maha mandap, Artha mandap and sanctum and sanctorum. It looks beautifully and neat; of recent renovation.

Left of main entrance a Mandap called Bakthamara Mandap with Lord Rishabh and saint Manadungacharior; then the Navagraha thirthangars of 9 statues with inscriptions.  Apart from the right side, in the corridor a separate shrine room of  shri Shreyamsanathar and shri Parswanathar idols with vimanam is there. Next a five shrines structure with shri Saraswathi, shri Brahmadevar, shri Jwalamalini, shri Padmavathy and Navagrahas statues. Opposite to that shri Kshetrabalagar lies in separate room.

Inside the Mahamandap, Arthamandap Shri Adhinathar granite statue fascinated as main deity.  On either side entry to the sanctum and sanctorum Marble statues of shri Komuga yakshan and shri Chakreshwari yakshi were facinated. Other metal statues of  Lords/demi-gods, Yaksha, Yakhis and  patterns of Non-built temples of Nandeeswaram, Mahameru, Sruthaskandam metal alloy structures were preserved. A stone curved 24 thirthankars is also there.

 Poojas twice daily, Nandeeswara pooja once in four month, Navrathiri pooja are conducted regularly. Annul festivals of urchav were conducted also. 

கி.பி. 10 ம் நூற்றாண்டில் உருவான இந்த ஜிநாலயம் திண்டிவனம் -  விழுப்புரம் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடூர் அணைக்கு முன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பலமுறை புதுப்பிக்கப்பட்டதால் அதன் தொன்மை பற்றிய விவரங்கள் அழிந்து காணப்படுகிறது.  இந்த ஜிநாலயம் கருவறை, உள்ளாலை, சிகரம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், மனத்தூய்மைக் கம்பம், பலிபீடம், ராஜகோபுரம், அரணுடன் கூடிய திருச்சுற்று ஆகியன கொண்ட திராவிட பாரம்பரிய கட்டக்கலையுடன் விளங்குகிறது. சமீபத்தில் புணருதாரணம் செய்யப்பட்டதால் அழகிய வண்ணங்களுடன் காட்சி தருகிறது. வடகிழக்கில் பக்தாமர மண்டபம் ரிஷபதேவர், மானதுங்காச்சாரியார் உருவச்சிலைகளுடன் பக்தாமர ஸ்லோகங்களும், மற்றும் நவக்கிரக தீர்த்தங்கரர்கள் உருவச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சுற்று வடபகுதியில் ஸ்ரீஸ்ரேயாம்சநாதர் மற்றும் பார்ஸ்வநாதர் சிலைகள் அடங்கிய தனிக் கோவில் ஒன்றும் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீஜ்வாலாமாலினி, ஸ்ரீபத்மாவதி மற்றும் நவக்கரக சிலைகள் அடங்கிய சன்னதிகளும் எதிரில் ஸ்ரீக்ஷேத்ரபாலகர் சன்னதியும் அடங்கியுள்ளது.

மூலவர் ஆதிநாதர் கருவறையில் அமர்ந்துள்ளார். தீர்த்தங்கரர்கள், உள்ளாலை வாயிலில் அழகிய கோமுக யக்ஷன், சக்ரேஸ்வரி யக்ஷி பளிங்கு கல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. யக்ஷ, யக்ஷி, நந்தீஸ்வர தீபம், மஹாமேரு போன்று பல உலோகச் சிலைகளும் மற்றும் கல்லால் அமைந்த 24 தீர்த்தங்கரர் சிலையும் கொண்ட இவ்வாலயம் தினமும் இருவேளை பூஜைகள்,விசேஷ தினங்களில் பிரத்யேக பூஜைகள் நடந்து வருகிறது. மற்றும் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட சமண இல்லறத்தார்கள் வாழ்ந்து வருகின்றனர்
2 comments:

  1. Thanks uncle. Its very helpful to know the strength of our community in previous years. All the best for your good work and do well

    ReplyDelete
  2. jainam jayayu sarvada..............

    ReplyDelete