Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்
Location: with latitude, longitude of (12.46515, 79.56363)
click for map put on the search box the above figure.
while travelling open navigator on the smart phone find your location and destination as (12.46515, 79.56363)
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
while travelling open navigator on the smart phone find your location and destination as (12.46515, 79.56363)
ROUTE:
Tindivanam → Vandavasi road → Elangadu = 33 k.m.
Gingee → Vellimedupettai →Vandavasi road → Elangadu = 45 k.m.
Vandavasi → Tindivanam road →Elangadu = 7 k.m.
Villupuram → Tindivanam → Vandavasi road → Elangadu = 72 k.m.
செல்வழி:.
திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை →இளங்காடு = 33கி.மீ.
செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை → இளங்காடு = 45கி.மீ.
வந்தவாசி → திண்டிவனம் சாலை → இளங்காடு = 7கி.மீ.
விழுப்புரம் →திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → இளங்காடு = 72 கி.மீ.
(A moolavar going to be installed near future)
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 4 கி.மீ. திருப்பத்திலிருந்து
மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் இளங்காடு. கி.பி. 15 ம் நூற்றாண்டிற்கு
முன்பிருந்தே சமணக் குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது வடக்கு நோக்கி ஒர்
ஜிநாலயம் இருந்துள்ளது. அது சிதிலமடைந்து போனபின் அதிலுள்ள மண்டபம் ஒன்றை உள்ளடக்கி தற்போதைய ஜிநாலயம் தெற்கு நோக்கி அமைக்கப்
பட்டுள்ளது. மேலும் சென்னை திருமயிலை ஜிநாலயம் பேரழிவை நோக்கியிருந்தமையால், அங்கிருந்து
ஸ்ரீநேமிநாதர், ஸ்ரீதர்மதேவி ஆகிய இரண்டு உலோக பிம்பங்கள், ஸ்ரீஜினசேனாச்சாரியார் அவர்களால்
தருவிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இதிலிருந்து அவ்வாலயத்தின் தொன்மையை தெரிந்து
கொள்ளலாம்.
தற்போது சீரமைப்பு பணி விரைவாக நடந்து வருகிறது. ஆகவே மூலவர்
அகற்றப் பட்டு புதியதாக மாற்றி யமைக்க உள்ளனர்.
மேல் கோபுரம் இல்லாத நுழைவாயில் (மொட்டைக் கோபுரம்) மதிற்சுவருடன்
அமைந்துள்ள திருச்சுற்று ஜிநாலயம். மேலும்
தேர்நிறுத்தும் கொட்டடி ஒன்று வெளிப்புற கதவுகளுடன் உள்ளது. அதற்கடுத்தாற் போல புதிய
மூன்று சன்னதிகள் தற்போது கட்டியுள்ளனர். திருச்சுற்றின் தென்கிழக்கில் பழைய ஆலய மண்டபத்தில் நவக்கிரக மேடை உள்ளது. மேலும்
அகற்றப்பட்ட கற்சிலைகள் அனைத்தும் மேடையில் வைத்துள்ளனர். அதில் ஸ்ரீஆதிநாதரின் பழமையான
மேல்புறம் யாளியுடன் வித்தியாசமாக அமைக்கப் பட்டுள்ள கற்சிலையும், ஸ்ரீதர்மதேவி மற்றும்
நான்முகம் எண்கரங்களுடன் யானைவாகனத்தில் பிரம்மதேவர் ( சிலர் பிரம்ம யக்ஷன் ஸ்ரீசீதளநாதரின்
சாசன தேவர் எனவும் கூறுகின்றனர். ஆனால் வாகனம் முரண்படுகிறது), 24 தீர்த்தங்கரர்கள்,
ஸ்ருதஸ்கந்தம், நந்தீஸ்வர தீப மாதிரி அமைப்பு போன்ற அழகிய கற்சிலைகளும் வைக்கப் பட்டுள்ளன.
திருச்சுற்றில்
பலிபீடமும், மனத்தூய்மைக் கம்பமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் அடியில் தேவ அரசர் தேவேந்திரன், பூர்ண கும்பம், தர்மசக்கரம், ஸ்வஸ்திகம் புதுமையாக வடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மகாமண்டபமும், அர்த்த
மண்டபமும், கருவறையும் உள்ளது. அனைத்து உலோக சிலைகளும் அம்மண்டபத்தில் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன. ஸ்ரீமகாவீரரின் சலவைக்கல் சிலை நித்ய பூஜை அபிஷேகத்திற்காக அமர்த்தப்பட்டுள்ளது.
விரைவில் பஞ்ச கல்யாணத்தை எதிர் நோக்கி யுள்ளது இளங்காடு ஜிநாலயம்.
Elangadu a
village situated 2 kms west from the Vanadavasi to Tindivanam road at a
diversion of 4 kms. Several jain families has been lived here before 15th
century A.D.. Since a Jinalyam of North facing was built. But after getting
demolition a new one was built at the same place with South facing entry,
attach the old Mandap on the southern side.
Beautiful Shri
Neminathar and Shri Dharmadevi alloy idols were brought from the Mylapore, Chennai
which met a disaster during the period. His holiness Jinasenacharior establish
the statues in the Elangadu temple in 15th century AD. This was the clear
evidence of antiquity.
Lord
Adhinathar is main deity of the Jinalaya. The native Jains has been undertake the
renovation work. So the Sanctum idol was removed which would be replaced by a new one.
Next to the sanctum a arthamandap and Mahamandap were built.
Inside that shri Mahaveerar marble made idol is placed for daily rituals and
important alloy idols of Thirthankars, Yakshas, Yakshis, Sruthaskandam,
Nandheeswara dheebam are arranged on a platform.
Outside of the block, the open corridor is surrounded
by huge wall. It consists of altar, a tall manastham were erected. At the bottom of the manastham pillar King of Devlok Indira, kumbakalash, Dharmachakra and Swasthik are engraved unusally. Next to the
main entrance three shrines (vacant now) were built. on the southeast the old
temple Mandap was annexed. Inside that pavilion navagraha idols platform and old statues of
stone made, ie Shri Adhinathar, four heads and Eight handed Shri Brahmadevar (seated on a elephant), Shri Dharmadevi, 24 Thirthankars, Sruthaskandam,
Nandeeswara dheebam model were placed.
The
Jinalayam is going to celebrate the Panchakalyan festival in the near future.
No comments:
Post a Comment