Thursday, September 25, 2014

THELLAR - தெள்ளாறு


Shri MAHAVEERAR JAIN TEMPLE  -  ஸ்ரீ மஹாவீரர் ஜிநாலயம் 







Location  lies on the map in the coordination of (12.39902, 79.54668)  put the latitude, Longitude on the search box 

Map for Jain pilgrimage centres:   Click  Thellar
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : தெள்ளாறு கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

(முழுவதும் குறிக்கபடாத )




ROUTE:

Tindivanam → Vandavasi road → Thellar  = 24 k.m.

Gingee → Vellimedupettai Vandavasi road → Thellar = 40 k.m.

Vandavasi → Tindivanam road Thellar = 15 k.m.

Villupuram → Tindivanam → Vandavasi road → Thellar = 64 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை  தெள்ளார்  =24 கி.மீ.

செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை  தெள்ளார்  = 26 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  சாலை   → தெள்ளார்  = 15கி.மீ.

விழுப்புரம் திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → தெள்ளார்  = 64 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





Thellar, a small town lies between Tindivanam- Vandavasi road. East facing Jinalyam no crowned entrance with fortified wall surrounding, was built. Recently it was fully renovated and get a beautiful look. Though the Jain families migrated to the place, the strcture influenced as 200 years old. Due to frequent repair and renovation work the identity of antiquity was disguised.

In the circuitous corridor, in southeast a (vahana) shed, (a garden) and on northeast the nagagraha statues were constructed. A flagmast, altar are in the corridor. Inside the sanctum Shri Mahaveerar stone idol, encraved with eight features and Sruthaskandam on the backside, embraces a platform. Arthamandap and Mugamandap both clubbed as one block. At the centre Jinabalar alloy idol for daily pooja; then leftside old moolavar idol was placed with metal idol devas and Shri Brahmadevar statue on a platform, rightside some god, goddess alloy idols were arranged. Near to the gate Shri Padmavathy shrine was contructed.

Daily pooja, Nandheeswara pooja and Special poojas and rituals conducted regularly. On the anniversary of Panchakalyan day Shri Mahaveerar street cart festival was celebrated every year.  





திண்டிவனம்  வந்தவாசி சாலையில் அமைந்துள்ள சிற்றூர் தெள்ளாறு.  முக்கிய சாலைக்கு சற்று உள்புறம் கிழக்கு நோக்கிய நுழைவு வாயிலுடன் சில ஆண்டுகளுக்கு முன் முழுவதுமாக சீரமைக்கப் பட்ட அழகிய வண்ணத்தில் அமைந்துள்ளது. அவ்வூர் சமண இல்லறத்தினர் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் குடியமர்ந்திருந்தாலும், இவ்வாலயம் சுமார் 200 ஆண்டுகளைக் கடந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. புணரமைப்பு பணி முழுவதுமாக நடந்துள்ளதால் அதன் தொன்மையை அரிதியிட்டு குறிப்பிட முடியாத வண்ணம் உள்ளது.

ஆலயத்தை சுற்றிலும் நல்ல மதிற்சுவருடன் உள்ள திருச்சுற்றில் ஆரம்பத்தில் வாகனக் கொட்டடியும், நந்தவனமும்,  வடகிழக்கில் நவக்கிரகங்கள் சன்னதியும் அமைத்துள்ளனர். துவஜமரமும், பலிபீடமும் உள்ளன. நடுவே உள்ள கட்டமைப்பில்; கருவறையும் அதில் ஸ்ரீமகாவீரர் கற்சிலை எட்டு அம்சங்களுடன் முன்புறமும், ஸ்ருதஸ்கந்த வடிவம் பின்புறமும் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது; அடுத்து அர்த்தமண்டபமும், முக மண்டபமும் ஒரே செவ்வகமாக கட்டப்பட்டு, அதில் இடது புறம் பழைய மூலவர் சிலையும், உலோகச் சிலைகளும், ஸ்ரீபிரம்மதேவர் கற்சிலையும் மேடையில் அமைக்கப் பட்டுள்ளது. வலது புறம் உலோக சிலைகள் மேடையை அலங்கரிக்கின்றன. நடுவில் உள்ள மேடையில் ஜின பாலகர் நித்திய அபிஷேக பூஜைகளுக்காக மேடையில் அமர்ந்துள்ளார். அதன் இறுதியில் ஸ்ரீபத்மாவதி தேவி சன்னதியில் அழகான வடிவத்துடன் அமர்ந்துள்ளார்.


தினபூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் விசேஷ பூஜைகள் வளமைபோல் நடைபெறுகிறது. மேலும் பஞ்ச கல்யாண ஆண்டு நிறைவு நாளன்று ஸ்ரீமகாவீரரின் திருவீதி யுலாவும் வளமைபோல் நடைபெற்று வருகிறது.





2 comments:

  1. Samyak Dharshan. Your photos tell all the details of the temple. One can visit the temple virtually by seeing your photos. Thank you.

    ReplyDelete