Thursday, September 25, 2014

GOODALUR - கூடலூர்



Shri GUNDHUNATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ குந்துநாதர் ஜினாலயம் 





Map for Jain pilgrimage centres:   Click
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

on the clicked in the coordination of (12.38175, 79.55715). ie put the latitude, Longitude on the search box


ROUTE:

Tindivanam → Vandavasi road → Goodalur -21 k.m.

Gingee → Vellimedupettai → Goodalur - 33 k.m.

Vandavasi → Tindivanam road → Goodalur -  17 k.m.

Villupuram → Tindivanam → Vandavasi road → Goodalur -  60 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை கூடலூர் =21 கி.மீ.

செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை  கூடலூர் = 33கி.மீ.

வந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 17கி.மீ.

விழுப்புரம் திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 60 கி.மீ.




 

 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ குந்துநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அஸ்தினாபுர நகரத்து உக்ர வம்சத்து சூரசேன மஹாராஜாவிற்கும், ஸ்ரீகாந்த மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 35 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 95 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், மேஷ (ஆடு) லாஞ்சனத்தை உடையவரும், கந்தர்வ யக்ஷ்ன், ஜயா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 35 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் வைசாக சுக்ல ப்ரதிபன்னத்தில் 96 கோடி 32 லட்சத்து 96 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஞானதர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீகுந்துநாத  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


 
 
 
 

Goodalur; a hamlet lies between Vandavasi and Tindivanam. Though Jain families were migrated to that village, they built a Jinalayam since 300 years. There is no identities for the antiquity of the temple.

North facing temple invites with a pillar named Keerthi-sthamp on the side of the entrance not crowned with compound walls. Beginning of the corridor an office room headed by a Pandugasilai mandap, Sri Padmavathy shrine, kalash mandap supported by 16 pillars on the northwest. An altar and manasthamp pillar were in front of the main block. Elegant Mugamandap decorated by designed pillars, two remarkable scultures of Emperor Bharath and Bhagavan Bahubali the sons of Lord Rishabh. In the Arthamandap daily pooja Shri Kunthunathar idol madeup of marble and alloy made Thirthankars, Yakshas, Yakshis, Nandheeswara deepa temples model, Maha meru model were exhibited. In the sanctum Shri Kunthunathar with eight glorious features was exhibited. The room was crowned with two stage viman displayed with lime mortar idols of Thirthangars, yaksha, yakshis on four directions.

The village jain inhabitants preserve the treasure well and conducting daily pooja, special pooja and celebrating all the Jain festivals.

On the main road near to the temple, a new temple with huge statue of 12 feet height and Shri Nanthidevar yaksha, Shri Chakraswari yakshi were exhibits beneath. It was built by Shri Swamyji of Kolapur mutt, who was the native jain of the village.

 
 
 
 
 

வந்தவாசிக்கும் திண்டிவனத்திற்கும் இடையே அமைந்துள்ள கிராமம் கூடலூர். 500 ஆண்டுகளுக்கு முன் சமண குடும்பத்தினர் குடியமர்ந்திருந்தாலும் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஜிநாலயம் ஒன்று உள்ளது. அதற்கு முன் இருந்ததற்கான சான்றுகள் அவ்வாலயத்தில் ஏதும் இல்லை. அடிக்கடி புணருதாரணம் செய்யப்பட்டதால் தொன்மைக்கான சான்றுகள் அழிந்து போனதற்கான சாத்தியங்கள் உள்ளது. 

கீர்த்தி ஸ்தம்ப வரவேற்புடன், வடதிசை நோக்கிய நுçழவு வாயில் மதிற்சுவருடன் கூடிய  ஜிநாலயமாகும். திருச்சுற்றின் ஆரம்பத்தில் அலுவலக அறை அதன் மேல் பாண்டுக சிலை மண்டபம், வடமேற்கில் ஸ்ரீபத்மாவதி சன்னதி, 16 கால் கலச மண்டபத்துடன் சுற்று முடிவடைகிறது. பலீ பீட, மனத்தூய்மைக் கம்பத்துடன் மையப்பகுதி அமைந்துள்ளது. 

முதலில் முக மண்டபம் ஸ்ரீபரதர்(இவ்வாலயத்தின் சிறப்பு), பகவான் பாகுபலி ஆகியோர் திருமேனிகளைக் கொண்ட தூண்களுடன் அழகாக உள்ளது. அதன் உள்ளே அர்த்த மண்டபத்தில் நித்திய அபிஷேக ஸ்ரீகுந்துநாதர் சலவைக்கல் படிமமும், தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷிகள், நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம், மகா மேரு போன்ற உலோக சிலைகள் மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து உள்ளாலையைக் கடந்து கருவறையில் ஸ்ரீகுந்துநாதர் மேடையில் எட்டு சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மேல் இரண்டு தள விமானத்தில் தீர்த்தங்கரர்கள் , யக்ஷ,யக்ஷிகளின் சுண்ணாம்பு சுதை வடிவங்கள் அழகாக அமைக்கப்பட்டு சிகரத்துடன் காட்சி தருகிறது.

நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை, விசேஷ பூஜை களுடன் அனைத்து சமண பண்டிகைகளும் கொண்டாடப் படுகிறது. அருகில் உள்ள சமண இல்லறத்தினர் நன்றாக பாதுகாத்து வருகின்றனர்.

ஆலயத்திற்கு சற்று தள்ளி பிரதான சாலையில் ஸ்ரீஆதிநாதருக்கான ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அதில் 12 அடி உயர ஆதிநாதர் சிலையும், கீழே ஸ்ரீநந்திதேவர் , ஸ்ரீசக்ரேஸ்வரி சிலையும் அழகாக அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாலயம் கோலாப்பூர் மடாதிபதி அவர்களால் அமைக்கப்பட்டது. அவர் கூடலூரைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.


 
 
 


No comments:

Post a Comment