Shri PARSWANATHAR JAIN TEMPLE - ஸ்ரீ பார்ஸ்வ ஜினர் ஆலயம்
Map for Jain pilgrimage centres: Click AGARAKORAKOTTAI
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : அகரகொரகோட்டை கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
ROUTE:
Tindivanam → Vandavasi road → Thellar → Agarakorakottai = 26 k.m.
Gingee → Pennagar road → vedal → Kunnagampundi → Agarakorakottai = 28 k.m.
Vandavasi → Tindivanam road →Agarakorakottai = 14 k.m.
Villupuram → Tindivanam → Vandavasi road → Agarakorakottai = 66 k.m.
Chetpet → Mazhaiyur → Desur turn → Desur (Thellar road)→Agarakorakottai = 29 k.m.
செல்வழி:.
திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → தெள்ளாறு →அகரகொரகோட்டை = 26கி.மீ.
செஞ்சி → பென்னகர் → வெடால் →அகரகொரகோட்டை = 28 கி.மீ.
வந்தவாசி → திண்டிவனம் சாலை → →அகரகொரகோட்டை = 14 கி.மீ.
விழுப்புரம் →திண்டிவனம் → தெள்ளாறு →அகரகொரகோட்டை = 66 கி.மீ.
சேத்பட் →வந்தவாசி சாலை → தேசூர் → தெள்ளாறு சாலை →அகரகொரகோட்டை = 29 கி.மீ.
சேத்பட் →வந்தவாசி சாலை → தேசூர் → தெள்ளாறு சாலை →அகரகொரகோட்டை = 29 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி
கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன
மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா
புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை
உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர
யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர
பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண
சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண
பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய
மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
வந்தவாசியிலிருந்து திண்டிவனம் சாலையில் பயணித்து, தெள்ளாறு‡தேசூர் சாலையில் திரும்பிச் சென்றால்
14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அகரக்கொரக்கோட்டை கிராமம். பல நூற்றாண்டுகளாக சமணக்
குடும்பங்கள் வாழ்ந்திருந்தாலும் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீபார்ஸ்வ ஜினரது ஆலயம்
ஒன்றுள்ளது.
மிகவும் அழகாகவும் பராமரிக்க எளிதாகவும் தற்காலத்திற்கேற்ற வகையில்
கீழ்திசை நோக்கிய வண்ணம் அமைத்துள்ளனர். திராவிட பாரம்பரிய முறையில் அமைந்துள்ளது.
ஸ்ரீபார்ஸ்வநாதர் கற்சிலையுடன் கருவறையும், அதன் மேல் ஒருதள சிகரம், கலசத்துடன் காணப்படுகின்றது.
முன்னர் முக மண்டபம் அழகாக அமைந்துள்ளது. கருவறையில் அனைத்து உலோகத்தினால் ஆன வழிபாட்டுக்கு
உகந்த தேவதா சிலைகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
அந்த வேதிக் கட்டமைப்புக்கு முன்னர் அழகிய சிறிய பலிபீடம் வட்ட தாங்கியுடன்
அமைத்துள்ளனர். திறந்த திருச்சுற்றில் அழகிய நந்தவனம் நன்கு பராமரிப்புடன் காணப்படுகிறது. அதனைச் சுற்றி மதிற்சுவருடன் கூடிய நுழைவு வாயிலும்,
(அதன் மேல் அஹிம்சை, தர்ம சக்கர சின்னங்களுடன்) , தென்கிழக்கு மூலையில் தெற்கு முகமாக
அமைக்கப்பட்டுள்ளது.
நித்ய பூஜை, விசேஷ பூஜை மற்றும் நந்தீஸ்வர பூஜை போன்று அனைத்து
வழிபாட்டு முறைகளும் செவ்வனே நடந்து வருகின்றது.
மேலும் பொன்னூர் குந்தகுந்தர் மையத்தில் தொண்டு புரிந்து வந்த சிந்தாமணிச் செல்வர்,
அமரர் திரு.ஜெ.பானுராசனார் அவர்களும், அவரது
தமையனார், புராணச் செம்மல் என அனைவராலும் போற்றப்பட்டு
வரும் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களும், தற்போதைய சமண பேரவைத் தலைவர் திரு. அ.பு. அறவாழி அவர்களும், பிறந்த ஊர் என்பது குறிப்பிடத் தக்கது.
Agarakorakottai village is located 14 kms from Vandavasi in Thellar-desur road. A Jinalaya was built in the last century, though the native jains are living so long years here.
Beautiful, compact and Dravidian art designed temple has Sanctum, crowned upon a Shikara and Kalash. Mugamandapa is constucted proportionately for conducting rituals and prayer. An altar is fixed on a round stand. A open corridor and a garden is surrounded by compound wall and an Opening at southeast corner. The, south facing, entrance arch has Ahimsa symbol icons.
Daily pooja, Nandheeswara pooja and Special Poojas are conducted regularly.
Beloved Pulavar Late Shri. J. Banurasanar, Editor of Arugan thathuvam, Purana Semmal Prof. J. Srichandran and present Samana Peravai President Shri ah.pu. Aravazhi were born; is noteworthy of the village.
No comments:
Post a Comment