Monday, September 15, 2014

UPPUVELUR - உப்புவேலூர்


Shri ADHINATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 
Map for Jain pilgrimage centres:   Click  Uppuvelur
(Tamil nadu & Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  உப்புவேலூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

(முழுவதும் குறிக்கபடாத )ROUTE:

Tindivanam →  Pondy road  →  Kodipakkam →  Uppuvelur =     23 k.m.

Villupuram →   mailam  →  Kodipakkam →  Uppuvelur   =   54 k.m.

Gingee →   mailam  →  Kodipakkam →  Uppuvelur   =  53 k.m.

Vandavasi  → Tindivanam →  Pondy road  →  Kodipakkam →  Uppuvelur   =  64 k.m.செல்வழி:

திண்டிவனம் → பாண்டி சாலை  → கோடிப்பாக்கம் → உப்புவேலூர்     =  18 கி.மீ.

விழுப்புரம் → மைலம்  → கோடிப்பாக்கம் → உப்புவேலூர்   =  54 கி.மீ.

செஞ்சி → மைலம்  → கோடிப்பாக்கம் → உப்புவேலூர்  =  53கி.மீ.

வந்தவாசி →  திண்டிவனம் → பாண்டி சாலை  → கோடிப்பாக்கம் → உப்புவேலூர் =  64 கி.மீ.
 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


சமணர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் கிராமங்களில் ஒன்று உப்புவேலூர் கிராமம். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திண்டிவனத்திலிருந்து தென்கிழக்கில் 23 கி.மீ.ல் உள்ள  உப்புவேலூரில் கி.பி. 15ம் நூற்றாண்டிலிருந்து சமணக் குடும்பங்கள் வாழ்ந்திருந்ததாக தெரிய வருகிறது. ஸ்ரீஆதிநாதருக்கென ஜிநாலயமும் உள்ளது. வீரசேனாச்சாரியார் என்ற சமண பெரியார் வாழ்ந்துள்ளார். அவர் கர்நாடகம் சரவணபெலகொலாவில் தங்கியிருந்து சமண சாஸ்திரங்களை கற்றுத் திரும்பி வந்து,  மேல் சித்தாமூரில் கி.பி. 16ம் நூற்றாண்டில் ஜின காஞ்சி மடத்தை நிறுவியுள்ளார். பலருக்கும் சமணமத தீட்சையை வழங்கியவர் ஆவார்.  சமய வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார்.
அப்பெருமையை கொண்டிருக்கும் அவ்வூரில் அழகிய ஜிநாலயம் தற்போதும் நல்ல பராமரிப்போடு உள்ளது. பலமுறை சீரமைப்பு பணி நிகழ்ந்துள்ளமையால் அதன் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைந்து காணப்படுகிறது.  கிழக்கு திசைநோக்கிய ராஜகோபுர வாயிலுடன் மதிற்சுவர் திருச்சுற்றுக்கு  நடுவில் நீள் சதுரமாக அமைந்துள்ள ஆலயமாகும்.   அதன் பின்பகுதியை  கருவறையாகவும், அடுத்து அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபமாக கொளல் வேண்டும். திருச்சுற்றில் துவஜமரம், தர்மசக்கர கம்பம், பலிபீடம், மனத்தூய்மைக் கம்பம்(ஸ்ரீபிரம்ம தேவர் சிலையுடன்) தொகுப்பாக அமைந்துள்ளது.
கருவறையில்  மிகவும் தொன்மையான ஸ்ரீஆதிநாதரின் கற்சிலை (600 ஆண்டுகளுக்கு மேல்), மிகவும் பழமையான ஸ்ரீகூஷ்மாண்டினி தேவி கற்சிலை, பிரம்மதேவர் சிலை, ஸ்ரீக்ஷேத்ரபாலகர் கற்சிலைகளுடன்,  தற்போது ஸ்ரீபத்மாவதி கற்சிலையும் தனி சன்னதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலய திருச்சுற்றில் வடபகுதியில் ஸ்ரீஜ்வாலாமாலினி சன்னதி  உள்ளது. மேலும் பல உலோகப்படிமங்கள் ஆலயத்தை அலங்கரிக்கின்றன.


தின பூஜையும், நந்தீஸ்வர தீப பூஜைகளும், விசேஷ கால பூஜைகளும் மற்றும் அக்ஷய திரிதியை அன்று ஸ்ரீஆதிநாதரின் சிலைக்கு ஆலய வடகிழக்கு மூலையில் மதில் சுவரின் மேல் அமைக்கப் பட்டிருக்கும் பாண்டுக சிலை மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்து திருவீதியுலாவும்,  மற்றும் காணும் பொங்கல், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் அம்மன் திருவீதியுலாவும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

ஆலயத்திற்கு தென்கிழக்கு திசையில் அழகிய வனத்தில் ஸ்ரீபாகுபலி பகவான் திருவுருவம்,  சரவணபெலகோலாவில் உள்ளது போல் 18 அடி உயர மேடையில் 18  அடி  உயர கற்சிலை நின்ற நிலையில்  அண்மையில் அமைத்துள்ளனர்.  இருமருங்கிலும் அழகிய படிக்கட்டுகளுடன் மேற் சென்று மஸ்தகாபிஷேகம் செய்யும் வண்ணம் செவ்வனே கட்டப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அச்சிலை நிறுவிய அன்று பகவானுக்கு அபிஷேகம் நடந்து வருகிறது.


The moderate population of jain villages Uppuvelur is one amoung them. It is 23 kms from Tindivanam , in Villupuram district. Evidences are proved; at the time of  15th century Jains were lived in the village. A great scholar Holi. Veerasenacharior was lived in 16th century. He travelled to Shrevenabelagola , Karnataka for getting the Higher  education for worshiping , pooja methods and conducting rituals (Jain sastras) in Jain religion. After attained the proficiency he returned to home town. Then he founded the Jina kanchi mutt at Melsithamur. He offered the religious initiations to people around the area. He was dedicate  to empower the Jains and jainism.
A beautiful jinalaya was built in the glorious village.  Well maintained one. But frequent repairs and renovatins the evidences of antiquity  were disguised. East facing towered gateway with enclosed compound wall corridor, a rectangular divine block was built. On the back portion is sanctum , a platform embraces with Shri Adhinathar statue (more than 600 years old), next portion taken as arthamandap; having old thirthangar sculpture,  alloy metal idols of God, Yakshas, Yashis, models of Nantheeswar temples, Meru, Sruthaskandam ; then in the north wall Shri Kooshmandini, Shri Brahmadevar, Shri Padmavathi, Shri shetrabalagar shrines were present, then mugamandap portion was bifurgated . Out side Shri Jwalamaline shrine  in the northern corridor. In front of that block Thuvajasthamp (pillar), Altar, Dharmachakra sthamp, Manasthamp were arranged tightly.  
Daily pooja, Special rituals, Nandeeswara pooja, Navarathiri festival and all jains important festivals were conducted regularly. On Akshya thirithiyai  festival , Shri Adinathar was anointed in the north-eastern pavilion(called Pandugasilai) at the top of fortified wall.  On third day of Thai month, Audi Friday (of every year) Goddess festivals with street procession were conducted regularly.

Apart from the temple, on the south-eastern side,  a magnificient Statue of Bhagan Bahubali of 18 feet height and mounted on 18 feet structure with staircase was built in recent years. A masthaka abishegam was conduct every annual day of the statue erection.  A Garden is maintained around the structure.   
No comments:

Post a Comment