Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்
Map for Jain pilgrimage centres: Click on VIZHUKKAM
(Tamil nadu & Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : விழுக்கம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாத )
ROUTE:
Tindivanam → Gingee road → Vizhukkam = 14 k.m.
Villupuram → kutteripattu → v.pettai road → Vizhukkam = 44 k.m.
Gingee → Tindivanam road → Vizhukkam = 16 k.m.
Vandavasi → v.pettai → mailam road → Deevanur → Vizhukkam = 36 k.m.
செல்வழி:
திண்டிவனம் → செஞ்சி சாலை → விழுக்கம் = 14 கி.மீ.
விழுப்புரம் → கூட்டெரிபட்டு → வெ . பேட்டை சாலை → தீவனூர் → விழுக்கம் = 44 கி.மீ.
செஞ்சி → திண்டிவனம் சாலை → விழுக்கம் = 16 கி.மீ.
வந்தவாசி → வெ . பேட்டை → மைலம் சாலை → தீவனூர்→ விழுக்கம் = 36 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும்,
மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள்
உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி
யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும்
14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண
சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப
தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து!
நமோஸ்து! நமோஸ்து!
திண்டிவனத்திற்கும் செஞ்சிக்கும் நடுவே வடதிசையில் சிறிது தொலைவில்
அமைந்துள்ள கிராமம் விழுக்கம். அவ்விடத்தில் கி.பி.
16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்ட ஜிநாலயம் ஒன்று உள்ளது.
ராஜகோபுர நுழைவாயில் மதிற்சுவருடன் அமைந்துள்ள திருச்சுற்றுடன்
அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது. நடுவில் கருவறை, அதனுள் ஸ்ரீஆதிநாதர் அஷ்டமகா
சிறப்புகளுடன் அழகிய சிகரத்துடன் அமர்ந்துள்ளார். அதனை அடுத்து அர்த்த மண்டபம்
அதில் ஸ்ரீபார்ஸ்வநாதர் கற்சிலையும் உலோகப்படிமங்கள் அனைத்தும் அடங்கிய இடமாகும்.
அதற்கு முன் சற்று உயரமாக மேற்கூரையுடன் முகமண்டபமும், அதில் ஸ்ரீகூஷ்மாண்டினி
சன்னதியும் உள்ளன. அதன் வெளிப்புற சுவற்றின் தேவகோட்டங்களில் ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீவிமலநாதர், ஸ்ரீமகாவீரர்
சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
அந்த கட்டமைப்புக்கு முன்னர் திருச்சுற்றில் மனத்தூய்மைக்
கம்பமும், பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவாயிலுக்கு இடது புறம் மகாமண்டபம் உள்ளது. தென்மேற்கு மூலையில் 24
தீர்த்தங்கரர்கள் பாதங்கள், அடுத்து நவக்கிரக தீர்த்தங்கரர்கள் சன்னதி, நவக்கிரக கற்சிலைகளின்
மேடையும், அடுத்து பல லட்சங்கள் செலவில்
அமைக்கப் பட்டுள்ள தங்கத்தேர் இருப்பிடமும், அதன் பின் ஸ்ரீபத்மாவதி மாதா
சன்னதியும் அமைந்துள்ளன. அதன் பிறகு தேவகோட்டத்தில் ஸ்ரீக்ஷேத்ரபாலகர் சன்னதியும் பாங்குற
அமைத்துள்ளனர்.
அவ்வாலயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரு. அஜித் பிரசாத், நல்லாசிரியர் விருது பெற்றவர், விழுக்கம் சார்ந்த சமணர், அவர்களது பெருமுயற்சியால் அழகிய தங்கத்தேர் ஒன்று ஆலயத்திற்காக அர்ப்பணிக்கப்
பட்டது, விழுக்கம் ஆலய சரித்திரத்தில் குறிப்பிடப்பட
வேண்டிய நாளாகும்.
ஆலயத்தில் தின பூஜை, நந்தீஸ்வர பூஜை, நவராத்திரி விழா, ஆடி வெள்ளி,
மற்றும் அட்சய திரிதியை, யுகாதி, காணும் பொங்கல் போன்ற நாட்களில் தீர்த்தங்கரர்
திருவீதியுலாவும், பக்தர்கள் காணிக்கை வழங்கி விரும்பும் தினங்களில்
தங்கத்தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அவ்வாலயத்திற்கு வடக்கே சற்று தூரத்தில் குளக்கரையில்
முனிவரர்.குணசாகரர் திருவடிகள், பீடம் ஒன்றில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வடிக்கப் பட்டுள்ளது. அதன் அருகே மண்டபம்
ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. யுகாதி தினத்தன்று அருகே உள்ள கிராமத்தினர் , அவருடைய
பாதங்களுக்கு பால் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேம் செய்து, ஆலய உலோகத்திருமேனி
களை தருவித்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
In the middle of Tindivanam
and Gingee connecting road, on the northside of the road, Vizhukkam village is situated.
A beautiful Jain temple was built in 16th century influenced the
Dravidian temple architect. In the sanctum Lord Adhinathar as main deity.
Rectangled fortified
walls of corridor with entrance, crowned
by tower. Shri Adhinathar in the sanctum and sanctorum had a shikara and kalash.
Annexture with a artha mandapam consists of Shri parswanathar statue; alloy idols of Thirthankars, Yakshas, Yakshis,
Nandheeswar deep model , Meru and etc.. terraced
Muga mandap with Shri Kooshmandini shrine.
Around the structure, Shri Adhinathar ,
Shri Vimalanathar, Shri Mahaveerar statues resided in Devakottam of outer wall.
In front , an altar,
Manasthamp were erected. On the northwest a big pavilion; southwest the twenty
four thirthankars foot-steps were arranged, then Navagraha thirthankars
chamber, next the shelter of Golden chariot, Shri Padmavathy shrine and Shri Shetrabalagar
shrine were built.
Few years back Mr. J.
Ajithprasad, Best teacher awardee, native of the village(taking more effort),
devoted a beautiful Golden chariot and it is a notable occasion in the history
of the temple.
Daily pooja,
Nandeeswara deepa poojas, Navarathiri festival conducted regularly. Apart from that
Akshaya tirthiyai, Yugathi festival, kanum pongal festivals were celebrated
annually.
Few meters from the
north side of the temple granite footsteps of Shri Muni. Gunasagar is fixed. A
mandap also built near the place. On Yuhathi day abhishek (anointed) and
aradhana has conducted by near villagers.
No comments:
Post a Comment