Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Map for Jain pilgrimage centres: Click Vangaram
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : வங்காரம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
ROUTE:
Tindivanam → Vandavasi road → Vangaram = 38 k.m.
Gingee → Vellimedupettai →Vandavasi road → Vangaram = 46 k.m.
Vandavasi →Chetpet road →Vangaram = 8 k.m.
Villupuram → Tindivanam → Chetpet road → Vangaram = 83 k.m.
Chetpet → Vandavasi road → vangaram turn → Vangaram = 25 k.m.
செல்வழி:.
திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → வங்காரம் = 38கி.மீ.
செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை → வங்காரம் = 46 கி.மீ.
வந்தவாசி → சேத்பட் சாலை → வங்காரம் = 8 கி.மீ.
விழுப்புரம் →திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → வங்காரம் = 83 கி.மீ.
சேத்பட் →வந்தவாசி சாலை → வங்காரம் திருப்பம் → வங்காரம் = 25 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Vangaram, a hamlet 8 kms from Vandavasi in the Chetpet road, travel and get a diversion at 4 kms distance. Jain families in the village, living since 15th century AD, totally renovate the ancient temple. However, the 15th century Moolnayak was left in the sanctum. Frequent repairs conceal the evidences of antiquity.
A brittle stone made Shri Adhinathar is in the womb-chamber, a artha mandap houses alloy idols of Important jain devathas and stone made 24 thirthankars, Navadevatha, Shri Brahmadevar shrine at the left side and Shri Kooshmandini at the right side of the pavilion.
East facing entrance Arch has an ancient statue of Shri Mahaveerar, taken from the near village Avanawadi. In the south-east a closed pavilion with door, north the Nagagraha shrine and Shri Padmavathy matha shrine of newly built. At the center of the corridor Thwajasthamp, altar, Manasthamp erected firmly.
Daily pooja, Nandheeswara dheep pooja, Navarathiri and other special day Poojas conducted regularly. Ugathi day and 15th day of August, functions are celebrate annually.
It is the birthplace of well-known person, Thiruvarapavalar Shri J. Appandairajan, a writer of Jain literature and poems.
வந்தவாசியிலிருந்து சேத்பட் சாலையில் தென்புறம் திரும்பி சென்றால் 8 கி.மீ. தூரத்தில் வங்காரம் என்ற சிறிய கிராமம் வரும். கி.பி. 15ம் நூற்றாண்டுக்கு முன்னரே சமணர்கள் இவ்வூரில் வாழந்துள்ளனர். அப்போது கட்டப்பட்ட ஜிநாலயம் காலச் சுழலால் அழிந்து விட்டது. அவ்வாலயத்தில் இருந்த மூலவர் மட்டும் தற்போதுள்ள சீரமைக்கப்பட்ட ஜிநாலயத்தில் நிறுவி வணங்கப்பட்டு வருகிறார். ஆனால் சீரமைப்பு பணி தொடர்ந்து நடந்து வந்ததால் தொன்மைக்கான ஆதாரங்கள் அனைத்தும் அழிந்து காணப்படுகின்றது.
ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளது. அதன் நுழைவு வாயிலின் மேல் புறம் அழகிய மாடம் அமைக்கப் பட்டு அதனுள் மிகவும் பழமை வாய்ந்த அரஹந்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. அதனை மஹாவீரர் எனவும் அக்கற்சிலை அருகிலுள்ள ஆவணபுரம் என்ற ஊரிலிருந்து கொணரப்பட்டதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மதிற்சுவருடன் அமைந்துள்ள ஆலயத்தின் தென்கிழக்கில் பழமையான மண்டபம் ஒரு அறையாக மாற்றப்பட்டுள்ளது. வடபுறம் நவக்கிரக சன்னதியும், ஸ்ரீபத்மாவதி தேவியின் நூதன சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.
துவஜ மரம், பலிபீடம் மற்றும் மனத்தூய்மைக் கம்பத்துடன் ஆலய வேதிப்பகுதி தொடங்குகிறது. மகாமண்டபமும், அடுத்து அர்த்த மண்டபமும், அதனுள் இடது புறம் ஸ்ரீபிரம்ம தேவர் சன்னதியும், வலது புறம் ஸ்ரீதர்மதேவி சன்னதியும் உள்ளது. மேலும் கற்சிலைகளால் ஆன 24 தீர்த்தங்கரர்கள், நவதேவதா போன்றவை அழகாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கின்றன. உலோகத்தினால் ஆன பல சிலைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வளமைபோல் கருவறையில் உயரமான ஸ்ரீஆதிநாத பெருமான் எட்டு சிறப்பு அம்சங்களுடன் பலகை கல்லினால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை, மார்கழி முக்குடை மற்றும் விசேஷ பூஜைகள். வளமைபோல் நடந்து வருகின்றது. அக்ஷய திரிதியை மற்றும் ஆகஸ்டு மாதம் 15ம் நாள் ஸ்ரீபார்ஸ்வநாதரின் உற்சவமும் சிறப்பாக ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
மேலும் தமிழகத்தில் திருவறப்பாவலர் என அனைவராலும் அழைக்கப்படுபவரும், பல சமண நூல்களை வெளியிட்டு வருபவருமான வங்கை சிங்கம் திரு. J. அப்பாண்டைராசன் அவர்கள் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment