Saturday, September 27, 2014

PONNUR - பொன்னூர்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 




Location  lies on the map in the coordination of (12.47093, 79.54247) put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  Ponnur
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பொன்னூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi road → Ponnur = 36 k.m.

Gingee → Vellimedupettai Vandavasi road → Ponnur = 48 k.m.

Vandavasi → Tindivanam road Ponnur = 8 k.m.

Villupuram → Tindivanam → Vandavasi road → Ponnur = 75 k.m.

Chetpet  → Vandavasi road → vangaram turn → Ponnur  = 28 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை பொன்னூர்   = 33கி.மீ.

செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை  பொன்னூர்  = 45 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  சாலை   → பொன்னூர்  = 7கி.மீ.

விழுப்புரம் திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → பொன்னூர்  = 72 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை வங்காரம் திருப்பம்  → பொன்னூர்  =  28 கி.மீ.








 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!







வந்தவாசி திண்டிவனம் சாலையில் 4 கி.மீ. பயணித்து  மேற்திசையில்  4 கி.மீ. சென்றால்  பொன்னூர் கிராமம் அடையலாம். ஸ்வர்ணபுரம் என்றழைக்கப்பட்ட இக்கிராமத்தில் கி.பி. 7 ம் நூற்றாண்டிலிருந்தே சமணர்கள் வாழ்ந்துள்ளனர். சமண பள்ளி ஒன்றும் இருந்திருக்கிறது. அவை அழிந்து போன பின், தற்போதுள்ள ஜிநாலயம் கி.பி. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கனக கிரி என்ற குன்றின் மீது அமைந்துள்ள ஆலயத்தின் மூலவரான ஸ்ரீஆதிநாதரை கனகமலை ஆழ்வார் என போற்றி பாடி யுள்ளனர்.
 
வட ஆர்க்காட்டில் அமைந்துள்ள சரித்திரப்புகழ் பெற்ற ஆலயத்தில் இதுவும் ஒன்றாகும். முனிவர் குந்த குந்தாச்சாரியார் வாழ்ந்த ஊராகும். அவரே ஏலாச்சாரியார் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். அவர் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அவர் ஜைன அறம் தழைக்க உதவியவர். பொன்னூர் ஆலயத்தில் இருந்த ஸ்ரீபார்ஸ்வநாதர் மற்றும் ஸ்ரீஜ்வாலாமாலினியை வழிபாடு செய்தவர். அவர் ஓவ்வொரு ஞாயிறன்றும் வடமேற்கில் 5 கி.மீ. தொலைவிலுள்ள பொன்னூர் மலை என்ற நீலகிரி மலைக்கு எடுத்து சென்று அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். அம்மலையை ஸ்ரீஜ்வாலாமாலினி அம்மன் உறைவிடமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வழிபாடுகளையும், பூஜை சடங்குகளையும் தொகுத்து அவர் சீடர் ஜ்வாலாமாலினி கல்பம் என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அப்படிமங்கள் இரண்டும் 17ம் நூற்றாண்டில் செய்துள்ளதாக கல்வெட்டு உள்ளது.

குன்றின் மீது ஏறிச்செல்ல வடபுறம் நுழைவாயில் அமைத்துள்ளனர். கீர்த்தி கம்பத்தின் வரவேற்புடன் அழகிய படிகளில் ஏறிச்சென்றால் சரியான அளவில் அமைக்கப்பட்ட கீழ்திசையை நோக்கிய அழகிய ஜிநாலயத்தை காணலாம். ஆலயத்தை சுற்றி விசாலமான திருச்சுற்று அதில் பலிபீடம், மனத்தூய்மைக் கம்பத்துடன் உள்ளே செல்ல மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தூண்கள் 13 ம் நூற்றாண்டைச் சார்ந்த கலையம்சத்துடன் அமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  அதன் தென்புறத்தில் ஸ்ரீஜ்வாலாமாலினி சன்னதி அமைத்துள்ளனர். அதில் ஸ்ரீஜினவாணி உலோகத் திருவுருவமும் வைத்துள்ளனர். அவை சென்ற நூற்றாண்டில் சீரமைக்கப்பட்ட போது நிறுவப் பட்டுள்ளது. அடுத்து அரத்தமண்டபம்; வட்ட தூண்களின் அமைப்பைக் காணும் போது 12ம் நூற்றாண்டின் கலையம்சத்தை ஒத்துள்ளதாக தெரிகிறது.   அதில் பல உலோக படிமங்கள், சமண மதத்தில் முக்கியமாக வணங்கும்  அனைத்து தேவதா வடிவங்களும், மேடையில் வைக்கப் பட்டுள்ளன. அந்தராளம் எண்ணும் பகுதியும் கொண்டுள்ளது. அதில் நித்ய பூஜைக்கான தெய்வங்கள் வைக்கப் பட்டுள்ளன. ஆலயக் கருவறையில் ஸ்ரீ ஆதிநாதரின் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதன் மீது ஏக தள விமானத்தில் தீர்த்தங்கரர்கள் சுதை வடிவங்கள் அமைத்து வட்டமான கூம்பு வடிவ சிகரமும், அதில் கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய திருச்சுற்றின் மேற்கில் ஸ்ரீகுந்தகுந்தர் சன்னதி தனியாக அமைக்கப் பட்டுள்ளது. வடபுறம் நவக்கிரக மேடையும், கலச மண்டபமும் கட்டியுள்ளனர்.

அவ்வூரில் நவராத்திரி போன்ற பண்டிகை நாட்களில் வழிபாடு செய்ய தனியான ஆலயம் ஒன்றும் அமைத்துள்ளனர். அங்கு கருவறையில்  ஸ்ரீஜினவாணி மற்றும் ஸ்ரீ பத்மாவதி உலோகச் சிலைகள் அழகிய விமானத்தில் வைக்கப் பட்டுள்ளது.
நித்ய பூஜை, விசேஷ பூஜைகள், நந்தீஸ்வர பூஜை போன்றவை செவ்வனே நடைபெறுகின்றது. மேலும் யுகாதி ஸ்ரீபார்ஸ்வநாதர் திருவீதி யுலா, குளத்தங்கரை பூஜை, காணும் பொங்கல் யக்ஷன், யக்ஷி திருவிழா போன்ற தனி விழாக்களும் நடைபெறுகிறது.





Ponnur: An ancient and historical Jain pilgrimage place near Vandavasi town; 4 kms from Tindivanam salai and take diversion at 4 kms in the west direction.

Since 7th Century AD jains were settled and a Samanapalli is also there. The present temple is built in 12th Century AD. His holiness Helachariyar alias KundKundar has been lived in the village. He worshipped the present Moolnayak statue, Shri Adhinathar. He had deep Bakthi with the Yakshi Shri Jawalamalini devi and offered a way of worshipping rituals through a Agamam “Jwalamalini Kalp” ( Mantras; which is a collection of his pray methods).

The village is also call as Swarnapuram and the hill, where the temple built, call as Ganagagiri. So the Moonayak mentioned as “Ganagamalai aazhwar” in the poems.  
On a small hill, the beautiful temple built in well formulate layout. North facing entrance has few steps to reach. At the bottom, a Keerthisthamp invites the devotees. The east-facing temple, surrounded by fortified wall corridor. Shri Adhinathar, 12th century statue, is in the sanctum. then Anthralam had daily pooja idols; the Artha mandap houses the  metal idols of Jain important God, Goddess and ritual models. The round shaped pillars shows as 12th century fashion. the Mahamandap has a square pillars shows as 13th century style of art. Shri Jawalamalini shrine also built in south.

An altar and Manasthamp pillar erected in the corridor. On the west a separate shrine with Shri Kundkundar, Navagraha stand and Kalash mandap (pavilion) are there.
Another one is also in the village near the historical temple. Shri Jinavani and Shri Padmavathy matha idols was established inside for whorship.


All poojas like daily, quarterly and annual cycle are conducted regularly. Especially Yugathi festival, Kanum pongal and Navarathri festivals are celebrated. 


No comments:

Post a Comment