Wednesday, September 10, 2014

PERANI - பேரணி


Shri PARSWANATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம் 




Location  lies on the map in the coordination of (12.1, 79.54999) put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  Perani
(Tamil nadu & Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பெரணியை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

(முழுவதும் குறிக்கபடாத )



ROUTE:

Tindivanam →  kutteripattu  →   Perani  =     23 k.m.

Villupuram →  Veedur dam →  Perani    =   27 k.m.

Gingee →  Keezh mampattu →  Keezh vailamur  →  Perani    =  34 k.m.

Vandavasi  →  Vellimedupettai →  Deevanur →  kutteripattu   → Perani    =  58 k.m.



செல்வழி:

திண்டிவனம் → கூட்டேரிபட்டு →  பேரணி =  23 கி.மீ.

விழுப்புரம் → வீடூர் அணை → பேரணி =  27  கி.மீ.

செஞ்சி → கீழ்மாம்பட்டு →  கீழ்வயலாமூர் → பேரணி  =  34 கி.மீ.

வந்தவாசி →  வெள்ளிமேடுபேட்டை →   கூட்டேரிபட்டு →  பேரணி =  58 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Good old small temple belongs to chola reign. Structure of the jain temple is between 9th – 13th century style.

Though the sanctum and sanctorum, arthamandap, altar were facing eastern side, the main entrance is in the southern side of the corridor compound. Shri Parswanathar is main deity with a single stage viman and the Devi Kooshmandini shrine room is in the north of arthamandapam with viman. A footsteps of three pair of shri Nirmal sagar and his two followers were built in the corridor.

 The proposed Shri Padmavathy shrine, Navagrahas room and shri Kshetrabalagar viman are under construction. Renovation work is going on.

Daily pooja ; Nantheeswara pooja , Navarathiri festivals are celebrated every year. At the month of May . Special Vidhan poojas, Shri parswanathar deity procession are conducted annually.
Population of Jain families in the village is diminishing now a days to single digit.


The degeneration of the jain temples in the past is due to decreasing population of the village jain families. Frequent visits to these village jain temples by all the jains in south india can preserve the old monuments. At least an annual visit can prevent the deterioration. 




மிகவும் பழமையான தோற்றத்தில் உள்ள இவ்வாலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கின்றது. சற்று சிறிய ஆலயம்; அமைந்துள்ள விதத்தை காணும் போது 700 ஆண்டுகளைக் கடந்துள்ள தோற்றத்தை பெற்றுள்ளது. ஏனெனில் கி.பி. 9 திலிருந்து கி.பி. 13 வரை சோழர் ஆட்சிக்காலத்தில் அப்பகுதியில் கட்டப்பட்ட ஜிநாலயங்களை  ஒத்துள்ளது.

 தென்புறம் நுழை வாயிலும் மூலவர் கருவறை, அர்த்தமண்டபம், பலிபீடத்துடன் கிழக்கு நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய திருச்சுற்றில் 108 ஸ்ரீநிர்மல் சாகர் மற்றும் சீடர்கள் இருவரின் பாதங்கள் வைக்கப் பட்டுள்ளன. தற்போது ஸ்ரீபத்மாவதி சன்னதியும், நவக்கிரகங்கள் சன்னதியும், க்ஷேத்ர பாலகர் விமானமும் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஆலய சீரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. அர்த்த மண்டத்தின் உள்ளே ஸ்ரீகூஷ்மாண்டினி சன்னதி உள்ளது.

மூலவராக ஸ்ரீபாரஸ்வநாதர் வீற்றிருக்கின்றார். தினமும் இருவேளை பூஜையும், நந்தீஸ்வர ஆஷ்டானிக பூஜையும் வளமைபோல் நடைபெறுகிறது.  மற்றும் மே மாதம் ஸ்ரீபார்ஸ்வநாதர் திருவீதியுலாவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இவ்வூரில் ஈரிலக்க எண்ணில் வாழ்ந்திருந்த சமண குடும்பங்கள் தற்போது ஓரிலக்க எண்ணை நோக்கி சரிந்து வருகிறது.

இப்பகுதியில் பல  ஜிநாலயங்கள் அவ்வூரில் வாழ்ந்த சமணக் குடும்பங்கள் அருகி வந்தமையால் போற்றி பாதுகாக்க படாமல் காலச்சூழலுக்கு இரையாகி அழிந்துள்ளன.  அந்நிலை இது போன்ற சிற்றூர்களுக்கு ஏற்படாமல் இருக்கும் வண்ணம், தென்இந்திய சமணக் குடும்பத்தினர்கள் ஆண்டுக் கொரு முறை மாறிமாறி வந்து பூஜைகளும் விழாக்களும் எடுப்பதோடு இதுபோன்ற நினைவுச் சின்னங்களை அழியாமல் பாதுகாக்க சில சீரமைப்புகளையும் செய்தால், அந்நிலை மீண்டும் வராமல் தடுக்கலாம்.

ஆகவே கோவிலைப் பாதுகாக்கும் முகமாக தென்இந்திய சமண குடும்பத்தினர்கள் ஆண்டுக் கொருமுறையாவது இதுபோன்ற ஊர்களுக்கு சென்று வருவது சாலச் சிறந்தது ஆகும்.




No comments:

Post a Comment