Friday, March 20, 2015

GUDALUR (adhinathar) - கூடலூர் (ஆதிநாதர்)


Shri ADHINATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்


Location:

lies on the Google map in the coordination of (12.38175, 79.55715) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  Goodalur
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கூடலூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:

Tindivanam → Vandavasi road → Goodalur -21 k.m.

Gingee → Vellimedupettai → Goodalur - 33 k.m.

Vandavasi → Tindivanam road → Goodalur -  17 k.m.

Villupuram → Tindivanam → Vandavasi road → Goodalur -  60 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை கூடலூர் =21 கி.மீ.

செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை  கூடலூர் = 33கி.மீ.

வந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 17கி.மீ.


விழுப்புரம் திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 60 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





கூடலூர் கிராமம் திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் வந்தவாசி சாலையில் உள்ளது. அதன் பழைய குந்துநாதர் கோவிலுக்கு செல்லும் வழியிலிருந்து பிரதான சாலையில் அரை கி.மீ. பயணம் செய்தால் மேற்புறம் ஸ்ரீஆதிநாதருக்காக தனியாக கட்டப்பட்ட நூதன ஜிநாலயம் ஒன்று உள்ளது.

கூடலூரில் ஸ்ரீசந்தானகீர்த்தி என்ற நாமத்துடன் வாழ்ந்து கொல்லாபுரம் சென்று துறவு மேற்கொண்டு, ஸ்ரீலஷ்மி சேன பட்டாரக பட்டாச்சாரியார் புனித பீடத்தில் அமர்ந்திருக்கும் ஸ்வாமிஜி அவர்களால் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜிநாலயம் ஆகும்.  கொல்லாபுரத்தின் (கோலாப்பூர், கர்நாடகா மாநிலம்) மடத்தில் உள்ள ஸ்ரீஆதிநாதரின் 28 அடி உயர சிலையை போன்றே 12 அடி உயரத்தில் கரும் பளிங்குக் கல்லால் செதுக்கப்பட்டுவழவழப்பான, நின்ற நிலையிலான சிலை ஒன்று உயரமான மேடையில் நிறுவப்பட்டுள்ளது.  அருகில் சென்று வணங்க படிக்கட்டுகளும், சுற்றி வருவதற்கு ஏற்றவாறு திருச்சுற்றும் அமைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி கட்டிடம் எழுப்பப் பட்டு இரும்புக் கதவுகள் போடப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. அக் கருவறைக்கு  மேலே ஆறு பட்டை கூம்பு (ப்ரிஸம்) வடிவில் விமானம் அமைக்கப்பட்டு உச்சியில் பத்ம கலசத்துடன் காட்சி யளிக்கிறது..........

Between Tindivanam and Vandavasi at about 22 kms adjacent to the main road a New Jinalaya is there. It was constructed like north Indian temple structure and be dedicated to Shri Adhinatha Jinar.


It was built, in last century AD, in the middle of an estate, by Shri Lakshmisena Battarack Swamiji, Kolapur, Karnataka state who was the native Jain of Gudaloor, called by Shri Santhanakeerthi. The twelve feet tall black marble stone absolute carving idol is resembles like Kolapur Mutt Shri Adinathar statue of twenty eight feet height. ......




அவ்வாலயம் நடுவிலும் அதனைச் சுற்றிலும் திறந்த வெளியாக,  ரம்மியமாக அமைந்துள்ளது. மேலும் ஆலயம் விரிவாக்கம் செய்யவும் தங்கும் இடம் கட்டவும்  ஏதுவாக அவ்விடம் அமைந்துள்ளது. அருகிலுள்ள தெள்ளாறு உபாத்தியாயர் தினமும் பூஜை செய்து வருகிறார். அவ்வழியே செல்பவர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்து வந்தால் சிறப்புடன் நீண்ட காலம் காக்கப்படும்.
   **************

There are few stair steps to reach the Sanctum of Jinalaya. The open Garbhagriha was secured by iron gates. It has open corridor and stair case to reach the head of the idol for anointing. The sanctum is crowned by six faced prism like viman and padma kalash at the top.

Daily pooja and other offerings are made by nearby Thellar priest. It situate the centre of the estate which is convenient for future expansions like other shirnes and choultry at the venue. Our visit to the Jinalaya while passing that way will be made to flourish.



No comments:

Post a Comment