Wednesday, March 18, 2015

VAZHUTHALANGUNAM - வழுதலங்குணம்


VAZHUTHALANKUNAM ROCK RELIEF JAIN TEMPLE    
வழுதலங்குணம் பாறை சிற்ப ஜிநாலயம்





Location:'

lies on the Google map in the coordination of (12.28587, 79.20936) ie put the latitude, Longitude. Put on your Navigator destination search box



Map for Jain pilgrimage centres:   Click for Vazhuthalangunam
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  வழுதலங்குணம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

For chennaities take right diversion at Kilpennathur travel nearly 4 km towards avalurpet Road, then take left to Vazhuthalamkunam Jain heritage. Reached the spot after 2 km journey.
This is more better than Sirunathur- nariyamangalam – Vazhuthalangunam road.

For Thiruvannamalai Jains, take diversion left at Somasipadi on the Chennai Road. Then travel towards Vazhuthalankunam heritage. 


ROUTE:-

Tindivanam → Gingee → Pennathur → Vazhuthangunam = 55 kms.

chetpet → Avalurpet → Vazhuthangunam = 29 kms.

Arni → chetpet → Avalurpet → Vazhuthangunam = 55 kms.

Villupuram → Gingee → Pennathur → Vazhuthangunam = 67 kms.

Tiruvannamalai  → Somasipadi → Vazhuthangunam= 18 kms. 


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி  → பெண்ணாத்தூர் → வழுதலங்குணம் = 55 கி.மீ.

சேத்பட் → அவலூர்பேட்டை →  வழுதலங்குணம் = 29 கி.மீ.

ஆரணி →  சேத்பட்  → அவலூர்பேட்டை →  வழுதலங்குணம் = 55 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி → பெண்ணாத்தூர் → வழுதலங்குணம் = 67 கி.மீ.

திருவண்ணாமலை  → சோமசிபாடி →  வழுதலங்குணம் = 18 கி.மீ.







யேமீசம் ப்ரதிகால பவ்ய ஜநதா
திருஷ்ட்வா மரேந்த்ரைர் முதா
கல்யாணே வ்ர­பாதயோ ஜினவரான்
சம்பூஜிதா ஸ்தாநிஹ
த்ரைலோக்யாதிபதி ந்யஜா ம்யதிசயோ
மேதான் சதுர்விமசதிம்
சாந்த்யர்த்தம் ஜகதாம் சராசரகுரும்
திர்த்தங்கரான் சாம்ப்ரதம்.
----

   நிலவுல கெழுந்த  நீதியினை அளித்த  
  அலகில் பெருங்குணத்து ஆதிஇடபன்  
  விஜயவீரன் அஜித பட்டாரகன்  
  அம்பவழ மேனிச் சம்பவநாதன்  
  அரத்தகு சேவடி அபிநந்தநனும்  
  உரைத்தகு மேனி உத்தமசரீரன்  
  தொலையா வாய்மைச் சுமதி பட்டாரகன்  
  பரம மூர்த்தி பத்மபிரபனும்  
  ஏர்பெறு காட்சி சுபாரீசநாதன்  
  சந்திரவீறொளி சந்திரபிரபன்  
  புரையறு தவத்துப் புஷ்பதந்தன்  
  சிங்கம்ஏந்து அணைச் சீதளநாதன்  
  திருமறு மார்பிற் திகழ் சிரேயாம்சன்  
  மலர்மிசை நடந்த வாசுபூஜ்சியன்  
  மேமல் மேனி விமலபட்டாரகன்  
  அருள்நெறி யளித்த அனந்த சித்தன்  
  தருமலை உடைய தருமபட்டாரகன்  
  தவநெறி யளித்த சாந்திபட்டாரகன்  
  கொந்தார்மலர்மழை குந்து பட்டாரகன்  
  அந்தர வினையின் அரபட்டாரகன்  
  தொல்லை வினை கெடுத்த மல்லிபட்டாரகன்  
  முகடுபெற  வுயர்ந்த முனிசுவிரதர்  
  அரிட்ட நெறியின் நமிபட்டாரகர்  
  அஷ்டவினை கெடுத்த அரிட்ட நேமி  
  பட்ட வினைபகல் பாரிஸநாதன்  
  சித்தர்கள் ஏத்தும் ஸ்ரீவர்த்தமானன்  
  என்றிவர் இருபத்து நால்வரையும்  
  நாளும் நாளும் நலம் புகழ்ந்தேத்த  
  மீளா உலகம் வேண்டுதற் பொருட்டே!!  


திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி சாலையில் சோமாஸ்பாடி வழியாக வடதிசையில் சென்றால் 22 கி.மீ. தொலைவில் வழதலங்குணம் என்னும் பாறைச் சிற்பக் கோவில் அமைந்துள்ளது. அவ்வூரின் கோடியில் அமைந்துள்ள அம்மலையினை வழதலங்குண மலை/ பஞ்சபாண்டவர் மலை/மட்டப்பாறை  என்றும் அழைக்கின்றனர். அம்மலையில் தென்பகுதியில் இயற்கையாக அமைந்த குகையில் வெவ்வேறு அளவில் பல சமணத் துறவியர் படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு நடுவே நீண்ட சதுர வடிவில் ஒரு மேடையும் உள்ளது. அதில் குருவானவர் அமர்ந்து உபதேசம் செய்ய அமைக்கப்பட்டது போல் தோன்றுகிறது. அக்குகையும் ஆண்டிமலை போலவே 89ம் நூற்றாண்டில் ஏற்பட்டவையாகத்தான் இருக்க வாய்ப்புள்ளது.   அதனால் அதற்கு முன்னரே இப்பகுதியில் சமணம் தழைத்து இருந்திருப்பது திண்ணமே.  அக்குகைகளில் வாழந்திருந்த துறவியர்கள் மக்களிடம் சமண தத்துவங்களை உபதேசம் செய்ததோடு மருத்துவ சிகிச்சையும் செய்து வந்துள்ளனர். ...........

Vazhuthalangunam is situated 22 kms from Tiruvannamalai town towards Gingee road and a north turn at Somasipadi village to reach. A hillock is at one corner of that village called as Vazhuthalangunam hill/ Panchapandavar hill / Mattaparai by the locals. It is an historical importance place of Jain heritage. It has Jain munis cavern and bas relief. On the southern side of the hillock a natural cavern at the middle height and consists of several beds of various length and a rectangular platform at the center. The prime saint of the muni sangh might be use as preaching dias. That location also belongs to the same age of Andimalai cavern ie 8-9th Century AD. The saint sangh not only preached the jainism but also treated the people from diseases.  ....





குகைக்கு வெளியே அதன் மையப்பகுதியின் நெற்றியில் அழகிய ஜினரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவரது தோள்கள் அகன்றும் மார்பு விரிந்தநிலையிலும், அமைதியான முகத்துடன் காட்சியளிக்கும் அவர் சிங்காதனத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்தது போல் செதுக்கப்பட்டுள்ளது. சிங்காதனத்திற்கு பின்பகுதி நன்கு புடைப்பாக அலங்காரத்துடனும், அதன் இருபுறமும் சாமரத்துடன் தேவர்களின் உருவமும் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைக்கு பின்பகுதியில் உள்ள பிரபை தீச்சுவாலைகளுடன் செதுக்கப்பட்டு, மேற்புறம் முக்குடையும், பிண்டி மரம் மூன்று தொகுதிகளாக தெரியும் வண்ணம் வடித்துள்ளார்கள். அதனைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் 9ம் நூற்றாண்டுக்கு முன்னர் உள்ள சிற்பக் கலை என குறிப்பிடுகின்றனர். ......



On the fore-head of the canopied rock a bas-relief of a Jinar was encraved beautifully. It has broad shoulder, wider chest, gracious face, throne, two whisk Devars on either side, tri-umbrella over the head and three branches of peepal tree are carved marvelously. All features influence the 9th Century AD art.  ....



அச்சிலைக்கு கீழே ஒரு கல்வெட்டும் உள்ளது. அதில் அதனை பாதுகாத்த செய்தியை வெட்டியுள்ளனர். இச் சாசனம் மருது  பிரசுறை தேவரது சிற்பத்தை சுண்ணாம்புக் காரை பூசிக் காத்ததாக வும், அவ்வூரின் பெயர் அக்காலத்தில் மெந்தாரையூர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனை ஸ்ரீஆதிநாதரின் உருவமாக கூறுகின்றனர்.


அக்குகையை அடைய தரைப்பகுதியிலிருந்து நல்ல படிகள் கைப்பிடிகளுடன் அமைக்கப்பட்டதால் மேற் செல்ல வசதியாக உள்ளது. ஆனால் அருகில் வீடுகள்  ஏதும் இல்லை. அவ்வப்போது அருகில் உள்ள கிராம சமணர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். இருப்பினும் இது போன்ற நினைவு சின்னங்களுக்கு தொலைதூரத்தில் உள்ளவர்களும் ஆண்டிற்கு ஒருமுறையாவது சென்று தரிசித்து வந்தால் தான் அப்பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும்.

                                   -----------


At the bottom of the relief an inscription was itch deeply. It conveys that the place was referred as Menthaaraiyur and the relief named as Maruthu Pirai devar was masked by lime mortar to protect from erosion. Moreover the Jinar relief is referred as Shri adhinathar by our fore-fathers.

The surrounding village Jains constructed foot steps to reach the cavern by getting donations from the devotees. And also they conduct poojas for the rock temple occasionally.

Our frequent visit to the holy Jain monuments will safeguard the treasure.



No comments:

Post a Comment