Tuesday, March 17, 2015

THIYAGADURGAM - தியாகதுர்க்கம்

Shri ARUGAR CAVERN TEMPLE  -  ஸ்ரீஅருகர் குகைக் கோவில்





Location:

lies on the Google map in the coordination of (11.73716, 79.07443) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click for THIYAGADURGAM
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  THIYAGADURGAM கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Ulundurpet →  Kallakurichi road → Thiyagadurgam   = 108 kms.

Vandavasi → Tindivanam → Ulundurpet →  Kallakurichi road → Thiyagadurgam   = 139 kms.

Tiruvannamalai  → Tirukovilur →  Kallakurichi road → Thiyagadurgam  = 62 kms.

Tiruchy  → Chennai highway → Asanur → Elavasanur → Kallakurichi road → Thiyagadurgam  = 138 kms.

Thanjavur → Kumbakonam → Ulundurpet →  Kallakurichi road → Thiyagadurgam   = 150 kms.


செல்வழி:-

திண்டிவனம் → உளுந்தூர்பேட்டை → கள்ளக்குறிச்சி → தியாகதுர்க்கம் = 108 கி.மீ.

வந்தவாசி  → திண்டிவனம் → உளுந்தூர்பேட்டை → கள்ளக்குறிச்சி → தியாகதுர்க்கம் = 141 கி.மீ.

திருச்சி → சென்னை சாலை → அசனூர்→ எளவனாசூர் → தியாகதுர்க்கம்  = 138 கி.மீ.

திருவண்ணாமலை  → திருக்கோவிலூர் → உளுந்தூர்பேட்டை சாலை → கள்ளக்குறிச்சி → தியாகதுர்க்கம் = 62 கி.மீ.

தஞ்சாவூர் → கும்பகோணம் → உளுந்தூர்பேட்டை சாலை → கள்ளக்குறிச்சி → தியாகதுர்க்கம் = 150 கி.மீ.






யேமீசம் ப்ரதிகால பவ்ய ஜநதா
திருஷ்ட்வா மரேந்த்ரைர் முதா
கல்யாணே வ்ர­பாதயோ ஜினவரான்
சம்பூஜிதா ஸ்தாநிஹ
த்ரைலோக்யாதிபதி ந்யஜா ம்யதிசயோ
மேதான் சதுர்விமசதிம்
சாந்த்யர்த்தம் ஜகதாம் சராசரகுரும்
திர்த்தங்கரான் சாம்ப்ரதம்.
----

   நிலவுல கெழுந்த  நீதியினை அளித்த  
  அலகில் பெருங்குணத்து ஆதிஇடபன்  
  விஜயவீரன் அஜித பட்டாரகன்  
  அம்பவழ மேனிச் சம்பவநாதன்  
  அரத்தகு சேவடி அபிநந்தநனும்  
  உரைத்தகு மேனி உத்தமசரீரன்  
  தொலையா வாய்மைச் சுமதி பட்டாரகன்  
  பரம மூர்த்தி பத்மபிரபனும்  
  ஏர்பெறு காட்சி சுபாரீசநாதன்  
  சந்திரவீறொளி சந்திரபிரபன்  
  புரையறு தவத்துப் புஷ்பதந்தன்  
  சிங்கம்ஏந்து அணைச் சீதளநாதன்  
  திருமறு மார்பிற் திகழ் சிரேயாம்சன்  
  மலர்மிசை நடந்த வாசுபூஜ்சியன்  
  மேமல் மேனி விமலபட்டாரகன்  
  அருள்நெறி யளித்த அனந்த சித்தன்  
  தருமலை உடைய தருமபட்டாரகன்  
  தவநெறி யளித்த சாந்திபட்டாரகன்  
  கொந்தார்மலர்மழை குந்து பட்டாரகன்  
  அந்தர வினையின் அரபட்டாரகன்  
  தொல்லை வினை கெடுத்த மல்லிபட்டாரகன்  
  முகடுபெற  வுயர்ந்த முனிசுவிரதர்  
  அரிட்ட நெறியின் நமிபட்டாரகர்  
  அஷ்டவினை கெடுத்த அரிட்ட நேமி  
  பட்ட வினைபகல் பாரிஸநாதன்  
  சித்தர்கள் ஏத்தும் ஸ்ரீவர்த்தமானன்  
  என்றிவர் இருபத்து நால்வரையும்  
  நாளும் நாளும் நலம் புகழ்ந்தேத்த  
  மீளா உலகம் வேண்டுதற் பொருட்டே!!  



தியாகதுர்க்கம் என்னும் பஞ்சாயத்து நகரம் கள்ளக்குறிச்சிக்கு அருகில், உளுந்தூர்பேட்டையிலிருந்து 23 கி.மீ . தூரத்தில் அமைந்துள்ளது. அவ்வூரின் நடுவே உள்ள சிறிய மலைத் தொடருக்கு அப்பெயர் உள்ளது. அதிக உயரம் இல்லையானாலும் நிறைய பாறைகளைக் கொண்டுள்ளது. அதன்  நடுவே உள்ள பெரிய பாறையின் கீழ் உள்ள குகையில் 5ம் நூற்றாண்டிலிருந்து சமண துறவிகள் வாழந்துள்ளனர். அதன் பின்னர் அக்குகையில் இரண்டு கற்பலகைகளில் ஜினரின் வடிவமும், தர்மதேவியின் வடிவமும் செதுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனால் அவ்வூரில் பல சமண இல்லறத்தார்கள் வாழந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. ஆனால் தற்போது ஒரு சமணர் கூட இல்லை. இருப்பினும் அச்சிலைகள் பழமையுடன் உருவம் மாற்றப்படாமல் அதன் கீழ் வாழும் இந்துக்களால் வழிபாடு தினமும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்குகைக் கோவிலுக்கு செல்ல கைப்பிடிச் சுவற்றுடன் அகலமான படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அருள்மிகு மாமலை அம்மன்  கோவில் என்ற பெயரில் (ஸ்ரீசாமிநாத குருக்கள் உதவியுடன்) அனைவராலும் துர்க்கையைப் போன்று வணங்கப்படுகிறது.  மேலும் கீழ் பகுதியில் ஸ்ரீபிள்ளையார், ஸ்ரீஐயப்பன் போன்ற தெய்வங்களுக்கான சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள தீர்த்தங்கரர் சிலை நீண்ட முக்கோண வடிவில் சிங்காதனம், இருபுறமும் கோட்டுறுவில் சாமரம், தலைக்கு பின்புறம் பிரபை ஜ்வாலைகளுடன் (சற்று வித்தியாசமாக), முக்குடையுடன் செதுக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பைக் காணும் போது பல்லவர் காலத்தில் உள்ள கலைப்பாணியை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் எந்த லாஞ்சனமும் பொறிக்கப்பட வில்லை. அதனால் 6, 7ம் நூற்றாண்டைச் சார்ந்திருக்க வாய்ப்புள்ளது. 

Thiyagadurgam a panchayat town near to Kallakurichi  and 23 Kms from Ulundurpet in Villupuram district. At the centre of the town a small range of mountain called as Thiyadurgam range. Moreover it is in small range but it has more rocks.  At the moderate height and beneath of a huge rock a natural cavern with canopied by another rock. Before 7th Century AD Jain saints had been living there.  In the 9th Century AD a Thirthangar idol and shri Kooshmandini idol were installed by the living Jains during the period. Now no jains are there. But the hindus in the town, worshipping the idols without making any changes on its original carvings. Daily poojas and offerings are made with help of Hindu priest (Mr.Saminatha kurukkal). Broad and paved foot steps with hand walls are constructed to reach the cavern temple with the donations offered by the local devotees. They called as Mamalai Amman temple, which has two shrines on the way to reach, one is Shri Vinayagar and Shri Ayyappan is another.

The no lanchan Jinar statue was carved on a stretched triangular shape granite stone. It got singathana at the bottom with lotus podium, two whisks deep-drawings, Prabha with burns and tri-umbrella above the head. The design belongs to 6-7th century AD fashion because no ornamental designs on it.



ஸ்ரீதர்மதேவி அம்மன் சிலை மூன்று வளைவுகளுடன் நின்ற நிலையில் கற்பலகையில் வடிக்கப்பட்டுள்ளது. அழகிய உருவம் கொண்ட அம்மன் அதிக ஆபரணங்கள் இன்றி கிரீடம், காது குண்டலங்கள், கழுத்து ஆபரணம், வளை, தண்டையுடன் எளிமையாக காணப்படுவதால் இச்சிலையும் அதே காலத்தில் வடிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அச்சிலையின்  பின்புறம் கமுகமரமும், அருகே இரண்டு குழந்தைகளும் மேலும் பணிப்பெண் ஒருத்தியும் செதுக்கப்பட்டுள்ளது. அதனால் தர்மதேவி என அடையாளம் காணலாம். மேலும் அன்னத்தை பெறுவதைப்போன்ற ஒரு  ஆண் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. அதனால் பலரும் அன்னப்பூரணி என்றும் அழைக்கின்றனர். அவ்வடிவம்  மிகவும்  தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது 

பலரும் வந்து தினமும் வழிபாடு செய்வதால் அக்குகைக்கு சுவர்கள் எழுப்பி உள்ளே சுவர் ஓடுகள் ஒட்டப்பட்டு, வெளியே பாதுகாப்பு கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வெளியே இரண்டு வாயிற் தேவதைகளின் தற்காலத்தைய சுதை சிற்பங்கள் அழகுடன் அமைக்கப்பட்டு காட்சி தருகிறது.

அனைத்து சமணர்களும் அவசியம் சென்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்துக்களால் வழிபாடு செய்யப்படும் அச் சமண சின்னங்களை தரிசித்து வரவேண்டுகிறேன்.

தொடர்புக்கு: ஸ்ரீசாமினாத குருக்கள் - +91 75026 71301




Another Shri Kooshmandini having three bends on its standing posture. A simple crown, ear studs, close neck ornament, bangles and thandai were carved. It also influences the same period  design. Apart from two girl children, one servant maid and arecanut tree on the back witnessed as Shri Dharmadevi. Additionally a male figure with food vessel also engraved on it. So they calling as Annapoorani matha. (The male figure carving is missing afterwards.)

Inside the cavern glazed tiles are paved on the walls and floorings. It secured tightly by tow iron  grill gates. Either side of the entry two demi-goddess statue are exhibits in standing posture. Regular poojas are conducted with help of the devotees in the surroundings.

Every Jains must visit the place for worshipping the legend jain idols with out alterations.

Contact no. Mr.Saminatha kurukkal - +91 75026 71301.








No comments:

Post a Comment