Shri JWALAMALINI JAIN TEMPLE - ஸ்ரீ ஜ்வாலாமாலினி ஜினாலயம்
Map for Jain pilgrimage centres: Click Goodalur
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:
Tindivanam → Vandavasi road → Goodalur -21 k.m.
Gingee → Vellimedupettai → Goodalur - 33 k.m.
Vandavasi → Tindivanam road → Goodalur - 17 k.m.
Villupuram → Tindivanam → Vandavasi road → Goodalur - 60 k.m.
செல்வழி:.
திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை →கூடலூர் =21 கி.மீ.
செஞ்சி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 33கி.மீ.
வந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 17கி.மீ.
விழுப்புரம் →திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 60 கி.மீ.
தரிசிக்கு மன்பர் தன் மேல்
திருவளர் கடாக்ஷம் வைத்தின்ப சுகம் நீ தந்து
ஜெயமுழுது மாள வருள்வாய்
பொங்குமதி வொளிபோல வெங்கு நிறைசெல்வி நீ
புண் யரக்ஷகி காரணி
பூரணி புராதணி புகழு மஷ்டாயுதம்
பொருதஸ்த புவனவிஜயி
மங்கள செளந்தரி மகிடமிசை நடன
சம்வர்த்தினி ஜோதிவிமலி
வாமனுக் கிணையிலாதது போலுனக்கு நிகர்
மறு தெய்வம் வேறு முளதோ
தங்கநவரத்னமணி சோடசாபரணமுந்
தனதியல் பராசக்தியே
(ஸ்தலத்தின் பெயர்) நகர் தன்னில் வளர்
ஜ்வாலாமாலினி தேவி
தரவேணு முந்தனருளே.
கூடலூர் கிராமம்
திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ.
தொலைவில் வந்தவாசி சாலையில் உள்ளது. அதன் பழைய குந்துநாதர் கோவிலுக்கு செல்லும்
வழியிலிருந்து பிரதான சாலையில் அரை கி.மீ. பயணம் செய்தால் மேற்புறம் ஸ்ரீஆதிநாதர் தனியாலயத்திற்கு
அடுத்தார்போல் அமைந்துள்ள சிறிய ஆலயம் ஒன்று அழகாக எளிமையாக தென்படும். அவ்வாலயம் ஸ்ரீசந்திரப்பிரப
ஜினரின் சாசன யக்ஷியான ஸ்ரீஜ்வாலாமாலினிக் கென்று தனியாலயமாக அமைக்கப்பட்டதாகும். அதனை கூடலூரில் வாழ்ந்த ஸ்ரீவிருஷபநாதர் என்ற பக்தரின்
அர்ப்பணிப்பாகும். ஸ்ரீஅம்மன் உபாசகரான அந்த பக்தரின் கனவில் வந்து கூறியதை ஆணையாக
ஏற்று, ஸ்ரீஅம்மனுக்கு தனது நிலத்தின் ஒரு பகுதியில் 2011 ம் ஆண்டு ஆவணி முப்பத்தொன்றாம்
நாள் பூமி பூஜை செய்து தனது சொந்த பொருளாதாரத்தில்
ஆரம்பித்து, நெருங்கிய சில நண்பர்களின் துணையோடு இந்த நூதன ஜிநாலயத்தை உருவாக்கி; மேல்சித்தாமூர்
ஜின கஞ்சி ஸ்ரீலஷ்மி சேன ஸ்வாமிஜி மற்றும் அரஹந்தகிரி ஸ்ரீதவளகீர்த்தி ஸ்வாமிஜி ஆகிய
இருவரின் வழிகாட்டுதலோடு பிரதிஷ்டை செய்துள்ளார். தற்போது அந்த உபாசகர் இல்லையானாலும்
அவரது துணைவியார் அவ்வாலயத்தை பராமரித்து வருகிறார். ..........
Between
Tindivanam and Vandavasi at about 22 kms, western side of the main road and adjacent
Shri Adinathar Jinalaya, Shri Jwalamalini separate temple is there. That was
constructed by Shri Virushabanathar, nearby Jain, Jwalamalini devotee, and
dedicated to the Goddess. One day on his dream the Yakshi appeared and told to
establish a shrine separately. According to the goddess order, he initiates the
construction in the year 2011 and conducted the Prathista festival with the
guidance of Shri Lakshmisena Swamiji, Jina Kanchi and Shri Dhavalakeerthi
Swamiji, Kshetra Arahanthagiri. Now he is no more but his wife only run the
temple smoothly.
கருவறையில் ஸ்ரீஜ்வாலாமாலினி தேவியின் சிற்ப அம்சங்கள் முழுவதும் அடங்கிய கருங்கற் சிலையை நிறுவி, சிரசின் மேல்புரம் ஸ்ரீசந்திரப்பிரப ஜிநனரின் உலோகச் சிலையையும் அமர்த்தியுள்ளார். அதற்கு மேல் ஏக தள விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் திசையில் ஸ்ரீஜ்வாலாமாலினி உருவமும், தெற்கில் ஸ்ரீதர்மதேவி, மேற்கில் ஸ்ரீசரஸ்வதி மற்றும் வடக்கில் ஸ்ரீபத்மாவதி போன்ற யக்ஷிகளின் உருவ சுதைச் சிலைகள் அமைக்கப்பட்டு உச்சியில் பத்ம கலசத்துடன் அழகாக காட்சியளிக்கிறது. அச்சிற்றாலயத்திற்கு முன்னர் வழிபாட்டிற்காக ஒரு நீண்ட கூரையும் அமைத்துள்ளார்கள்.
ஸ்ரீஅம்பாளுக்கு தினமும் பூஜையும் மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் விசேஷ பூஜைகளும் செவ்வனே நடந்து வருகிறது. அவ்வழியே செல்பவர்கள் சற்று நேரம் நின்று அவ்வாலயத்தை தரிசித்து செல்லலாம்.
Shri Jwalamalini stone plate carving with all features referred in the agamum is established on the sanctum plinth. On its overhead Shri Chandrprabha Jinar metal idol also seated accordingly. The sanctum is crowned by singly stage beautiful viman with Shri Jwalamalini mortar idol in eastern side, Shri Kooshmandini in the south, shri Jinavani in the west, Shri Padmavathy in the north direction. A shed is also provided for prayer in front of the shrine.
Daily pooja and special poojas on festival days conducted in the temple regularly.
One should visit the temple while travelling on the way.
No comments:
Post a Comment