Thursday, June 26, 2014

KALLAPULIYUR - கள்ளபுலியூர்


Sri PARSWANATHAR JINALAYA  - ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம் 
FRONT VIEW  -  முகப்பு தோற்றம் Location map:-

Kallapuliyur lies on the map in the coordination of (12.38351, 79.44514) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click    KALLAPULIYUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Route:

Tindivanam  → Gingee → Sellapratti/Pennagar → Kallapuliyur- = 41 k.m.

Gingee → Sellapratti/Pennagar  → Kallapuliyur – 16.5 k.m.

Vandavasi  → Desur  → Manjapattu  →; Kallapuliyur -  30.5 k.m

Chetpet → Devanur → Gangapuram → Kallapuliyur- 20 k.m.செல்வழி:

திண்டிவனம் →செஞ்சி →செல்லபிராட்டி/ பென்னகர் ரோடு  →   கள்ளப்பூலியூர்  - 41 கி.மீ..

செஞ்சி →செல்லபிராட்டி/ பென்னகர் ரோடு கள்ளப்பூலியூர் – 16.5 கி.மீ..

வந்தவாசி →தேசூர் →மஞ்சப்பட்டு →கள்ளப்பூலியூர் – 30.5 கி.மீ.


சேத்பட் →தேவனூர் →கங்காபுரம் → கள்ளப்பூலியூர் -20 கி.மீ.shri PARSHWANATHAR  -  ஸ்ரீ பார்ஸ்வநாதர் 


 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

CORRIDOR VIEW   -   திருச்சுற்று தோற்றம் 
East facing entrance,  though the Jinalayam is renovated  the old pillars are recall the Vijayanagara kings period. Standing posture of  Shri Parswanathar is under the umbrella of five headed copra is most beautiful . Sri Dharmatevi with  Tirthankara statue in the head ; while looking at the AD 15 - 16 th century seems. 

Many metal statues, sri Patmavati shrine and Navagraha of planets were  in the temple. There is a Holy mast ie manastampam is laid. Daily twice pooja are performed .

In the year 1975 ascetic shri 108 Muni Nirmal sagarji visited the village. At the time Native shri. Surendra jain taking the initiation for ascetism is an important event of the village.


============

கிழக்கு நோக்கிய இந்த ஜிநாலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும் பழைய தூண்கள் விஜயநகர அரசர்கள் காலத்தை நினைவுறுத்துகின்றன. ஸ்ரீபார்ஸ்வநாதர் கட்காசன நிலையில் மிக அழகாக ஐந்து தலைநாகம் கால்பகுதி வரை தொட்டுக்கொண்டிருக்க காட்சி தருகிறார்.  ஸ்ரீதர்மதேவி தலையில் தீர்த்தங்கரர் உருவச்சிலையுடன் இருப்பதைப் பார்க்கும் போது 1516 ம் நூற்றாண்டை சேர்ந்தது போல் தோன்றுகிறது.
பல உலோகச் சிலைகளும், ஸ்ரீபத்மாவதி சன்னதியும் , நவக்கிரக மேடையும் கொண்ட இவ்வாலயத்தில் பலிபீடமும். மானஸ்தம்பமும் உள்ளன. தின பூஜையும் வழிபாடும் நடைபெறும் இவ்வாலயத்தில் தை, மாசி திங்களில் திருவிழா எடுக்கின்றனர்.

இவ்வூருக்கு 1975ம் ஆண்டு பூஜ்ய ஸ்ரீ 108 நிர்மல் சாகர் அடிகளார் விஜயம் செய்தபோது ஸ்ரீசுரேந்திரஜெயின் என்பவர் சுல்லக் தீட்சை பெற்று சுல்லக் சன்மதி சாகர் என்ற பெயர் பெற்ற ஸ்தலம் ஆகும்.

TEMPLE IDOLS  --  ஆலய சிலைகள் One more temple in the village


No comments:

Post a Comment